எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாயனே 18 - கதை திரி

NNK-82

Moderator

மாயனே 18​

இன்பா பிரகாஷ் உடன் வந்திருந்த போலீஸ் படை அந்த கை விடப்பட்ட காலேஜ் முழுக்க தேடி கொண்டிருக்க பிரகாஷ் இன்பா மட்டும் அவளை கண்டு பிடித்து வந்தனர்.​

மகளின் நிலையை கண்டு அதிர்ந்த பிரகாஷ் தலையில் அடித்துக் கொண்டு அழ, சலனமே இல்லாமல் நின்றிருந்தான் இன்பா. சுற்றிலும் எவரும் இல்லை. முகத்தில் ரத்தம் தெரித்த நிலையில் மயங்கி கிடந்தவளை கண்டு அதிர்ந்தவன் மெல்ல அடி மேல் அடி அடி வைத்து அவள் அருகில் செல்ல சுற்றி வளைத்தனர் அனுராக்கும் அவன் ஆட்களும். நிலாவை கையில் ஏந்தியவனுக்கு அவளின் மயக்கத்தில் தான் இருக்கிறார் என்று தெரிந்தது. அப்படியே அவளை மரத்தில் சாய்த்து அமர்த்தி வைத்துவிட்டு நிமிர்ந்து நின்றான்.​

தன்னவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்டவன் தனக்கு எதிரில் இருந்த வெறி நாய்களை வேட்டையாட வேங்கையென உருமினான். என்ன பிரகாஷ் என்னை ஞாபகம் இருக்கா?? புருவம் தூக்கி அனுராக் கேட்க முறைத்து தள்ளினார் பிரகாஷ். அவர் பார்வையில் அத்தனை கொலை வெறி. என் மகள் மீது கை வைத்தாயடா.. என்ற கோபம்.. "என்ன பாக்குற அவ இன்னும் சாகல.. ஒரு அற தான் கொடுத்தேன். அதுக்கே மயங்கி விழுந்துகிட்டா" என்றிட மகளை கண்டு கலங்கினார் பிரகாஷ்.​

அனுராக் நிலாவை நெருங்கும்போது நிலா கைக்கு கிடைத்த கல்லை வைத்து அவன் தாடையிலே ஒன்று வைக்க வாயிலிருந்து கொப்பளித் குருதி அவள் முகத்தில் தெறிக்க கோபமான அனுராக் புறங்கையாலே ஒரு அறை கொடுக்க மயங்கி சரிந்தாள். அதே இடத்தில் அதன் பின் வந்த இன்பாகவும் பிரகாஷ் அவர்களை கண்டு அதிர்ந்து நிற்க அவர்களை சுற்றி வளைத்தனர் அனுராக்கும் அவன் ஆட்களும்.​

" எப்போ எப்போ இருந்தேன்டா. அந்த நாள் வந்திரிச்சு.. என் பிள்ளையை கொன்னது உன் மக.. உங்க ரெண்டு பேரையும் கொல்ல போறேன். இவனையும் கொல்ல போறேன்" என்ற இன்பாவை காட்டி கூறியவன் "என் புள்ள ஆசைப் பட்ட பொண்ணு கூட இவன் எப்படி வாழலாம்? அதுக்காக உன்னையும் கொல்ல போறேன்" என்றவனுக்கு தெரியாது தன்னால் இறந்து போனவரின் மகன் அவன் என்று.​

தனக்கு முன் நிற்கிறவன் தன்னை அழிக்க காத்திருக்கும் காலன் என்று அவனுக்கு தெரியாது. பொறுத்து பார்த்த இன்பா பிரகாஷிடம் நிலாவை பார்த்துக்கொள்ள சொல்லி கண்காட்டிவிட்டு பாய்ந்தான் அவர்கள் மீது. அனுராக்கும் அவன் நாட்களும் மொத்தம் ஆறு பேர் இருந்தனர் ஆறு பேரையும் தூக்கி போட்டு பந்தாடினான். எலும்பு ஒருபுறம் மடவென உடைய, மறுபுறம் ரத்தம் சத சதவென கொட்டியது.​

தாடை எலும்பு, மார்பு எலும்பு, விலா எலும்பு தொடை எலும்பு என முக்கியமான எலும்புகளை குறி வைத்து அடித்து உடைத்து நகர முடியாமல் செய்தான். என் நிலா மீது கை வைத்த என்று அனுராக்கை விரட்டி விரட்டி வேட்டையாடினான். உயிருக்கு பயந்து ஓடினான் அனுராக். பாய்ந்து அவன் முதுகில் உதைத்து தரையில் தள்ளி அவன் கழுத்தில் கால் வைத்து அழுத்தியவன் "நான் யார் தெரியுமா? நீ கொன்னியே பிரகாஷ் டிரைவர். அவரோட புள்ள டா நானு.என் கண்ணு முன்னாடி எங்க அப்பாவ கொன்னுட்டியேடா.." என்றவன் மார்பிலே எட்டி எட்டி உதைக்க ரத்த ரத்தமாய் வாந்தி எடுத்தான் அனுராக்.​

ஆனாலும் எப்படியாவது அவனிடமிருந்து தப்பி செல்ல அனுராக் ஓட அவனை விரட்டி வந்த இன்பா ஒரு இடத்தில் பிரேக் அடித்தது போல் நின்றான். அதிர்ச்சி அவன் விழிகள் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றி வளைத்து நின்றனர் பிரகாஷ் போலீஸ் படையின்ஞ்ம் டெல்லி போலீஸ் படையும். அனுராக் தப்பி சென்ற பொழுது அவனை தேடத் துவங்கியவர்கள் இறுதியாக அவன் இருப்பிடத்தை கண்டு தேடி வந்து விட்டனர்.​

சரண்டர் ஆகிடு அனுராக்.. உன்னால தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கை கொடுக்க இனி தன்னால் இங்கிருந்து தப்பி ஓட முடியாது என்று உணர்ந்தவன் இன்பாவையும் பிரகாஷையும் கொலை செய்ய அவர்கள் மீது பாய, பாய்ந்து வந்தது டெல்லி போலீசாரின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள். சல்லடையாகியது அவன் உடலை. பட படவென பொழிந்த தோட்டாக்கலால் சல்லடையாக்கப்பட்டு உயிரற்ற உடலாய் தரையில் விழுந்தான் அனுராக். அவன் குருதி காய்ந்துபோன பூமியில் பட்ட உறுஞ்சி கொண்டது பூமி.​

நிமிர்ந்து அவன் போலீசை பார்க்க நாங்கள் சீக்கிரமே வந்து இருக்கணும் என்றனர். அதற்குள் நிலாவையும் மயக்கம் தெளிய வைத்து பிரகாஷ் அவளை அழைத்து வந்தார். இறந்து கிடந்ததவனை பார்த்து நிம்மதி அடைந்தவர்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர். நிலாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் இன்பா நடந்தது அனைவருக்கும் தெரிய நீண்ட வருடங்களுக்கு பிறகு "அம்மா" என்று அழைத்தான்.​

தன் தந்தையை கொன்று தன் தாயை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் வதம் செய்யப்பட்ட பிறகு தாயுடன் மனம் நிறைந்து பேசிய மகனை அணைத்து கொண்டு உச்சி நுகர்ந்தார் பானுமதி இந்த நாளுக்காக தானே அவரும் காத்திருந்தார்.​

எபிலாக்…​

ஐந்து வருடங்களுக்குப் பிறகு நிறைமதியின் ஐந்தாவது பிறந்தநாள் அன்று. ஊரையே கூட்டி இருந்தான் இன்பா.. செல்வி அவன் கணவன் குழந்தைகளுடன் வந்திருந்தாள். தன் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து இருந்தான். பிரகாஷ் நிலா அவர்களும் தங்கள் நண்பர்கள், உடன் வேலை புரிபவர்கள் என அனைவரையும் அழைத்திருக்க பிறந்தநாள் விழா கலை கட்டியது. பிறந்தநாள் பாடல் பாடி கேக் வெட்டப்பட்டது. விருந்து ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது டிஜேவின் பாடல் ஆட்டம் என மறுபுறம் கலகலத்து கொண்டிருந்தனர். சுற்றி சுற்றி வந்து விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்தான் இன்பா..​

ஆனால் நிலாவின் விழிகள் இரண்டும் பூவை சுற்றும் கருவண்டாக அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. ஐந்து வருடங்கள் ஆகிப்போனது. ஆனாலும் இன்னும் கட்டுக்குழையாமல் கருப்பழகனாக இருக்கும் தன்னவனை ரசிக்க ரசிக்க அவளுக்கு திகட்டவே இல்லை. தினமும் ரசிக்கிறாள். நிமிடமும் ரசிக்கிறாள். ஒவ்வொரு நொடியும் ரசிக்கிறாள் அவனை. அவனும் அப்படித்தான். ஆனாலும் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று ஒதுங்கி வருகிறான்.​

கூடலுக்கு பஞ்சம் இல்லாத போதும் குழந்தை வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான் இன்பா. காரணம் முதல் பிரசவத்தில் அவள் துடித்த துடிப்பை கண்களால் கண்டதினால். எத்தனையோ முறை கெஞ்சி விட்டாள் நிலா ஒரு குழந்தையை நமக்கு போதும். இன்னொரு முறை உன்னை அழவைத்து கதற வச்சு பார்த்த நான் விரும்பல என்று விடாப்பிடியாக மறுத்து விட்டான். ஆனால் இன்னொரு குழந்தையின் ஆசை அவள் மனதை வாட்டி எடுக்க இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று பிறந்தநாள் விழா முடிந்து தன் அறைக்கு சென்றாள்​

பானுமதியுடன் நிறைமதி உறங்கிக் கொண்டிருக்க, அவர்களை பார்த்துவிட்டு சத்தம் வராமல் கதவை அடைத்து விட்டு தன்னரைக்கு வந்தாள். படுகையில் சாய்ந்து அமர்ந்திருந்தா இன்பாவை பார்த்த படி கதவை அடைத்து தாழிட்டு அவனுக்கு முன் சென்று நின்றாள். இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு நின்ற தன் மனைவியை பார்த்தவன் "மேடம்க்கு என்ன வேணும்??"கிண்டலாக கேட்க,​

"எனக்கு இன்னொரு குழந்தை வேணும்" என்று கேட்டாள்.​

அவள் சிரித்தான். அவன் சிரிப்பில் கடுப்பானவள் "சிரிக்காதீங்க எனக்கு இன்னொரு குழந்தை வேணும்" என்று கேட்க அதற்கும் சிரித்தான். கோபத்தில் அவள் விழி உருட்டி மிரட்ட அதற்கும் சிரித்தவன் இரு கரம் விரித்து நீட்ட விழி விரிந்து பார்த்தால் நிலா. இன்னொரு குழந்தை பெத்துக்கலாமா தலையை சாய்த்து கேட்க, அதற்கு மேல் அவளுக்கு வேறு என்ன வேண்டும்.​

ஓடி வந்து தன் மாயனின் மார்புக்குள் ஒட்டி கொண்டாள். நெற்றி முத்தத்தில் தொடங்கியவன் இதழ் முத்தத்தில் தன் உணர்வு கொடுத்தவன் அவளுக்கு ஆடையாகி போக அவளும் அவனை அணைத்துக் கொள்ள ஈருடல் ஓர் உயிராக பின்னிப் பிணைந்த அழகியதொரு கூடல் அங்கு நடைபெற்று முடிந்தது.​

நிலாவின் மார்பில் தலையேற்றி படுத்திருந்தா இன்பாவின் கேசம் கோதிய நிலா "எனக்கு உங்கள மாதிரியே கருப்பா குட்டி பையன் வேணும்" என்று கேட்க நிமிர்ந்து பார்த்தான் அவளை. எதுவும் சொல்லாமல் சிறு புன்னகையுடன் தலையை அசைத்து விட்டு படுத்துக் கொண்டான் மாயன் மீண்டும் அவள் நெஞ்சில்.​

" ஏதாவது பேசேன்" என்று அவன் முடியை செல்லமாக பிடித்து ஆட்ட "எதுக்கு நீ என்ன மாயன்னு சொல்ற?" என்று கேட்டான் அவன்.​

என்ன?? என்று இழுத்தவள் தெரியல. ஆனா எனக்கு மாயன்னு தான் உன்னை கூப்பிட தோணுது என்றாள் அவன் மீசை முறுக்கி. சிறு புன்னகை சிந்திய இன்பா "என்ன எல்லாரும் இன்பான்னு தான் கூப்பிடுவாங்க. ஆனா என் அப்பா மட்டும்தான் என்னை பாண்டியன்னு கூப்பிடுவாரு.நீ குட்டி குழந்தையா இருக்கும்போது உன்கிட்ட பாண்டியன்னு சொல்லிக் கொடுப்பாரு. ஆனா நீ பாண்டியன்னு சொல்ல மாட்ட. இன்பான்னு தான் சொல்லுவ.." என்று கூற விழி விரிந்தாள் நிலா..​

" நிஜமாவா? " என்று கேட்க "ஆமாண்டி.. அதனால எனக்கு மாயன்னா ரொம்ப பிடிக்கும். அப்ப என்னோட ஸ்கூல் புக்ஸ் எல்லாம் இன்பா பாண்டியன் போட்டு பிராக்கெட்ல மாயன் தான் எழுதுவேன். நீ வச்ச பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவள் அவள் மூக்கு கிள்ளி விளையாட "ஐ லவ் யூ மாயா" என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் நிலா..​

தன் இரும்பு கரங்களால் அவள் இறுக்கி அணைத்தவன் "லவ் யூ டி பொண்டாட்டி" என நாகமாய் பின்னி பிணைந்து கொள்ள அடுத்த கூடல் அங்கு சத்தம் இல்லாமல் துவங்க நாமும் விடை பெறுவோம்.​

மடி சாயாதே மாயனே!! என்று விரட்டியவள் இன்று மார்பில் சாய்ந்து கொள்கிறேன் மாயனே என்று ஒட்டிக்கொண்டாள் அவனுடன் எல்லாம் காதல் செய்யும் மாயை.​

வட்டி காரன் தான்.. ஆனால் தன்னவன் கொடுமைக்காரன் இல்லை என்று உணர்ந்து தன்னவனை எந்த உருத்தளுமின்றி ஏற்று கொண்டவள் அவனுடன் இணைந்து இன்புற்று வாழ்வாள்.​

சுபம்🙏🏻🙏🏻

 
எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சது!!... இனி எல்லாம் நல்லதே நடக்கும்!!... மாயன், இன்பா பெயர் மாறியிருக்கு செக் பன்னிக்கோங்க!!.. சூப்பரா முடிச்சுட்டீங்க!!..
 

admin

Administrator
Staff member
நைஸ் ஸ்டோரி டா அங்க அங்க கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு முடிஞ்சா கரெக்ட் பண்ணுங்க மத்தபடி ரொம்ப அருமையாக கதை முடிச்சிட்டிங்க வாழ்த்துக்கள் டியர்..
 
Last edited:
Top