எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -12

@38

Moderator
12


தாயார் அழைத்து திருமண செய்தியை சொன்னதில் இருந்து கார்த்தியின் மனது அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது.


சிறுவயதில் இருந்து லதாவை பார்க்கிறான்.. எப்பொழுது அவள் வசம் ஆனானென்று அவனுக்கே தெரியவில்லை.


தவறான அர்த்தத்தில் இதுவரை தனிமையில் சந்தித்து கொண்டதில்லை..நேரடியாக காதலை சொன்னதில்லை ஆனாலும் அவனது காதல் ஜெயித்து விட்டது


தாய் அறியாத சூதா.. அதனால் தான் இவன் நினைத்ததை அவர் முடித்துவிட்டார்.


லதாவிற்காக பரிசளிக்க பல பொருட்களை தேடித்தேடி வாங்கினான்.

தங்கைக்கும் சில்தை வாங்கினான்.


தங்கையின் திருமணத்தில் சில நெருடல்கள் இருந்தாலும் தந்தையிடம் பேசிய பிறகு மறைந்து விட்டது.


அமுதாவிற்கு ஏற்ற ஜோடி கதிரவன் இல்லை என்பது அவனின் எண்ணம்..ஆனால் தங்கை ஏதோ பிரச்சனையில் மாட்டியிருப்பதாக கேள்வி படவும் துடித்து விட்டான்.


ஊர் செல்ல அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை..உடனே தந்தைக்கு அழைத்து பேசினான்.


டேய் நீ பயப்படுற அளவுக்கு இங்க ஓன்னும் இல்ல.. படிச்சி முடிச்சதும் பொறுமையா கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சேன் சூழ்நிலை ஓத்துவரல.. கதிரவனுக்கு அமுதாவை புடிச்சிருக்கு போல அதான் பேசி முடிச்சாச்சி.


ஏன்பா அவ ஆசைபட்ட பையனுக்கு பேசியிருக்கலாம்ல இன்னுமே அம்மு வாழ்க்கை நல்லாயிருக்கும்ல.


அப்பா அப்படி யோசிக்காம இருப்பேனா தம்பி.விசாரிச்சி பாத்தேன் திருப்தி இல்லைபா.. மத்தபடி எதும் இல்லயா..


உங்களை பத்தி எனக்கு தெரியாதா..? அப்புறம் சொர்ணாக்கு இதுல விருப்பம் தானே எனக்கேட்கவும் எதிர்முனையில் கனத்த மௌனம்.


ப்பா..ப்பா லைன்ல இருக்கீங்களா..?


ஹான் என்ன தம்பி கேட்ட..?


சொர்ணாக்கு இதுல விருப்பம் தானே..?

அவகிட்ட பேசவே முடியல.. அம்மாகிட்ட கூட சொல்லி பேச சொன்னேன் அவ பேசல அதான் தயக்கமாக இழுக்கவும்.


உன்னை கட்டிக்க யாருக்கு கசக்கும் நீ எதையும் யோசிக்காம கிளம்பி வா..


ப்பா உடனே வர முடியாது.. கல்யாணத்துக்கு முத நாள் தான் வருவேன்.


ஏன்பா..


மொத்தம் பத்துநாள் தான் லீவு அப்பா..இப்போவே எடுத்துட்டா.. அதான் என இழுக்கவும்.


வெடிச்சிரிப்பை சிரித்தவர் புரியுது புரியுது..நீ முதநாளே வா என்றவரிடம் முழுமையான சந்தோஷம் இல்லை.


திருமணத்திற்கு முதல் நாள் சந்தோஷமாக ஊர் திரும்பியவன் லதாவைத்தான் தேடினான்.


யாரும் அறிந்து கொள்ளாதவாறு வேலை செய்பவர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்க திருமணம் என்பதால் நேற்று தான் அவளது வீட்டிற்கு சென்றதாக கூறினர்.


யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பு லதாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் அவளிடம் தனது காதலை கூற வேண்டும் வாங்கி வைத்திருக்கும் பரிசு பொருட்களை காட்டி ஆச்சரியப்படுத்த வேண்டும் என நினைத்தவன் தான் வந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என அந்தப் பணியாளரிடம் கூறிவிட்டு அப்படியே பின்புறமாக லதாவை தேடி ஓடினான்.


அங்கே சென்ற பொழுது அனைவருமே கல்யாண பரபரப்பில் இருக்க இவனைக் கண்டு கொள்ள ஆளில்லை.. நேராகவே லதாவின் அறை வாசலுக்கு சென்று விட்டான். உறவினர்கள் எல்லோரும் அவனது வீட்டில் குழுமி இருந்ததால் இங்கு அதிக அளவில் கூட்டம் இல்லை.


இருந்தவர்கள் அனைவருமே பணியாளர்கள் தான் அவர்களுக்கு பெரிதாக கார்த்தியை அடையாளம் தெரியவில்லை..


முதலில் கதவைத் தட்டியவன்..லதா திறக்கவில்லை என்றதும் தோள்பட்டை கொண்டு கதவின் மீது அழுத்தம் கொடுத்தான். அவனுக்கு

சற்று பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது யாரும் பார்த்தாலும் ஒன்றும் சொல்லப்போவதில்லை கேலி கிண்டல் செய்வார்களே தவிர பெரியதாக எதுவும் நடந்து விடப்போவதில்லை ஆனாலும் ஏதோ ஒன்று யாரும் பார்ப்பதற்கு முன்பு லதாவின் அறைக்குள் சென்று விட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் இப்படி செய்தது


கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கதவை திறக்க வேண்டியிருந்தது எதனால் கதவு இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என நினைத்தபடியே அறைக்குள் செல்ல கட்டில் மீது கையில் புடவையுடன் நின்று கொண்டிருந்த லதா இவனைக் கண்டதும் அதிர்ச்சியுடன் கா.. கார்த்..

அத்தான்..இல்ல வாங்க என ஏதேதோ சொல்லி உளற ஆரம்பித்தாள்.


யோசனையாக அவளைப் பார்த்தவன் திரும்பி கதவை பார்க்க அரைகுறையாக தாழ்ப்பாள் போட்டிருப்பது தெரிந்தது அது மட்டுமின்றி கட்டிலின் அருகே சிறியதாக மர நாற்காலி ஒன்று இருக்க அவளது பதட்டமும் வேர்த்து ஊத்திய முகமும் ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்தியது.மெதுவாக கதவை சாத்தியபடி..மெல்லிய குரலில்


என்னாச்சு ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க என்றபடி அவள் அருகில் செல்ல பதறிய படியே பின் சென்றாள்.. கையில் இருந்த புடவையை வேகமாக சுருட்டி கட்டிலுக்கு அடியில் வீசினாள்.


அறையை சுற்றி நோட்டமிட்டவனின் பார்வையில்

அறை மூலையில் கிடந்த டேபிளில் மீது வைத்திருந்த வெள்ளை தாள் கவனத்தில் பதிந்தது.


அவன் அருகில் சென்று எடுக்கும் முன் இவள் ஓடிச் சென்று எடுத்து தனது ஜாக்கெட்டுக்குள் வைத்து பத்திரப்படுத்தினாள் அவனுக்கு நன்றாகவே புரிந்து விட்டது லதா தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள்.


ஏய் முதல்ல அதை வெளிய எடுத்து குடு..அது என்ன லெட்டர் ..நீயே எடுக்கறியா இல்ல நான் எடுக்கட்டுமா என அருகில் செல்லவும் பயந்தவள் வேகமாக எடுத்து அவனது கையில் கொடுத்தாள்.வேர்த்துவிட்ட முகம்..ஈரப்பதத்தை இழந்த உதடுகள்.. ஏறி இறங்கும் தொண்டை என் பதட்டத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளையே பார்த்தபடி காகிதத்தை பிரித்து உதறியவன் அதில் இருக்கும் வாசகங்களை படிக்கவும் அதிர்ச்சியில் அவளை திரும்பிப் பார்த்தான்.


என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை காவல் துறையினர் யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்.என்னை மன்னித்து விடுங்கள் அத்தை..சொர்ணலதா.என்னது இது சொர்ணா அடியும் இல்லாம தலையும் இல்லாம தற்கொலை பண்ணிக்க போறேன்னு எழுதியிருக்க என்ன காரணம்..? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா கட்டாயப்படுத்தியா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.

எதுக்காக இப்படி ஒரு கடிதம் எதுக்காக இப்படி ஒரு முயற்சி..சொல்லு என உறுமினான்.


இல்ல அது சும்மா ..என்றபடி அவனது கையில் இருந்து கடிதத்தை பறிக்க போக கையை தூக்கி அவளுக்கு கிடைக்காதவாறு செய்தவன்.


எது சும்மா நான் வரும்போது புடவையை வைத்து என்னமோ பண்ணிட்டு இருந்தியே அது சும்மாவா அஞ்சு நிமிஷம் நான் லேட்டா வந்திருந்தா எல்லாம் முடிந்திருக்கும் உனக்கு என்ன நீ சுலபமா போயிருப்ப உனை வளர்த்தின என் அம்மாவும் அப்பாவும் அல்லவா ஸ்டேஷனுக்கும் வீட்டிற்கும் மாறி மாறி நடப்பாங்க .

யாரும் காரணம் இல்லைன்னு எழுதி வச்சிட்டா மட்டும் விட்டுடுவாங்க..? என்று அதட்டினான்.


இப்போ நீ என்ன காரணம்னு சொல்ல போறியா இல்ல என் அம்மாவை வர சொல்லட்டுமா என மொபைலை கையில் எடுக்க ஓடி சென்று கார்த்தியின் காலில் விழுந்தவள்.. ப்ளீஸ் கார்த்தி யார்கிட்டயும் சொல்லாத ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு என்றபடி கெஞ்சினான்.


காலை நகர்த்திக் கொண்டவன் முதல்ல உன் அண்ணன் காரன் எங்க மச்சான்.. கதிர் மச்சான் என கத்தினான்.


எம்பி அவனது வாயைப் பொத்தியவள் ப்ளீஸ் நான் சொல்லிடறேன் யாரையும் கூப்பிடாத என்றவள் அவனின் முகம் இயல்பாவதை உணர்ந்து கையை விளக்கிக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தாள்.


எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல கார்த்தி இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தறதுன்னு தெரியவில்லை அதனால் தான் என்று கூறவும் அதிர்ச்சி அடைந்தவன் ஏன் பிடிக்கல..என்னை பிடிக்கலையா , அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்ட?


அத்தையோட கட்டாயத்துக்காக..


பைத்தியம். எத்தனை முறை உன்கிட்ட பேசனும்னு அம்மா மூலமா ஃபோன் குடுத்து விட்டேன்..சரி விடு நீ ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே அதுக்காக உயிர் விடுவியா அந்த அளவுக்கு இரக்கம் இல்லாதவன்னு நினைச்சிட்டியா என்னை கலங்கினான்.


என்னை எதுவுமே கேட்காத கார்த்திக் என்னால எதற்குமே விளக்கம் கொடுக்க முடியாது ஆனால் இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கக்கூடாது.


அதான் ஏன்..? இந்த கல்யாணம் பிடிக்கலையா..? இல்ல என்கூட ஆகற கல்யாணம் பிடிக்கலையா எதா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு.. உன் அத்தை பையன்னு நினைச்சுட்டு சொல்ல வேணாம், ஓன்னா விளையாடியிருக்கோம் ஓன்னா டிராவல் பண்ணிருக்கோம்..உரிமையா சண்டை போட்டிருக்கோம் அது நிஜம்னா என்கிட்ட பகிர்ந்துக்கோ அப்போ தான் என்னால தீர்வு சொல்ல முடியும்.


மொட்டையா கல்யாணம் வேணாம்னு சொன்னா எதை காரணம் காட்டி நிறுத்துவது.. உன் விருப்பம் இல்லாம கட்டாயத்தாலி கட்டுப்போவதில்லை இது சத்தியம் அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.. இனியும் நீ என்கிட்ட காரணம் சொல்லலன்னா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.


உன்னோட விருப்பம் சொல்லுறதும் சொல்லாமல் இருப்பதும்.. ஆனா இனிமே தற்கொலை மாதிரியான முட்டாள்தனம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடு நான் இங்கிருந்து கிளம்பி போயிடறேன் நான் வந்தது யாருக்கும் தெரியாது..போகப்போறதும் உன்னைத் தவிர யாருக்கும் தெரியப்போவதில்லை.


ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கோ இதுல நீயும் நானும் மட்டும் சம்பந்தப்படல கதிரவன் அமுதா ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க நீ தற்கொலை பண்ணிக்கிட்டாலும் சரி நான் சொல்லிக்காம ஊருக்கு கிளம்பி போயிட்டாலும் சரி அவங்களோட கல்யாணம் பாதிக்கும் அதில் உனக்கு சம்மதமா இதைத்தான் எதிர்பாக்குறியா என்று கேட்கவும் மெதுவாக வாய்த்திறந்தாள்.கார்த்தி நான் ஸ்கூல் டேஸ்ல இருந்து என் மாமா பையனை லவ் பண்ணிட்டு இருந்தேன் அவன் சொல்லித்தான் பாளையங்கோட்டைல சேர்ந்தேன்..அந்த காலேஜ்ல அவன் சீனியர் என்று சொல்லவும்.அவன் எப்படி உன்னை..? அவன் கண்ணில் நீ படக்கூடாதுன்னு தானே என் அம்மா உன்ன என்று தலையில் கை வைத்தவன் சரி மேல சொல்லு என்றான்.


வீட்டுக்கு தெரிஞ்சுதால அவசர அவசரமா அமுதாவை அண்ணனுக்கும் என்னை உனக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க என்று சொல்லவும்.


பெரியவங்க எப்பவும் சரியாகத்தான் பண்ணுவாங்க ஒருத்தனை காதலிச்சிட்டு எப்படி நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு இந்த மாதிரி முட்டாள்தனமான முடிவு எடுத்தியா பைத்தியம் என்னை புரிஞ்சுகிட்டு அவ்வளவுதானா என்று ஆசுவாசமடைந்தவன்.இதுதான் காரணம் என்றால் நீ தற்கொலைக்கு எல்லாம் போயிருக்கவே வேண்டாம் காதல் எல்லாருக்கும் வர்றது தான் ஒருவேளை அவனை உன்னால மறக்க முடியலன்னா சொல்லு அம்மா அப்பா கிட்ட பேசி நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அப்படி இல்லையா தைரியமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ உனக்கா எப்போ மனசு மாறுதோ அப்போ நாம கணவன் மனைவியா சேர்ந்து வாழலாம் அதுவரைக்கும் ஒரே வீட்ல நல்ல நண்பர்களா வாழலாம் என்று சொல்லவும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் உயிர் பெற்றது.முடியாது கார்த்தி உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. என்றவள் தர்ஷன் வந்து சென்றதை கூறினாள்.


உணர்சியற்று அவளை பார்த்தவன் அதுக்காக பயப்படுறியா ஒரு பிளாக் மெயில்லருக்காக உன் வாழ்க்கை தொலைச்சுக்க போறியா..?என்ன ஆனாலும் சரி இவ்வளவு தூரம் வந்துருச்சு தைரியமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ அப்புறமா அவன் அப்படி என்னத்த கொண்டு வந்து காட்டறான்னு நானும் பாக்குறேன் என்று சொல்லவும்.


பிரச்சனை அது இல்ல கார்த்தி உனக்கு புரியுதா இல்லையா அந்த போட்டோஸ் எல்லாம் உன் அப்பா பார்த்துட்டாங்க இன்னும் வேற போட்டோஸ் பார்த்திருக்காங்க .


எப்படி கார்த்தி மாமா முகத்தில் நான் முழிப்பேன் எப்படி உன்னோடு நான் சேர்ந்து அந்த வீட்டுக்குள்ள வர முடியும் சொல்லு கார்த்தி என்று கேட்கவும்.அவளது கோணத்திலிருந்து யோசிக்க ஆரம்பித்தான்..பிறகு அவளை சமாதானப்படுத்தும் விதமாக..ஹேய் சொர்ணா ‌உனக்கு அப்பா பத்தி தெரியல..இதையெல்லாம் அவர் மைண்ட்ல கூட வச்சுக்க மாட்டாரு எப்படி அமுதாவை பார்த்தாரோ அதே மாதிரி தான் உன்னையும் பார்க்கிறாரு.


இப்படி யோசிச்சு பாரேன் அமுதாவோட போட்டோஸ்ஸை யாராவது இந்த மாதிரி கொண்டு வந்து காமிச்சா அப்பா அமுதாவை வெறுக்கவா போறாரு..? இல்ல அமுதா தான் இந்த மாதிரி முட்டாள்தனமா வேலை செய்வாளா..?இல்லை தான..?அப்புறம் எதுக்கு நீ இப்படி பயந்து சாகற?.


ஐயோ கார்த்தி உனக்கு புரியுதா இல்லையா அமுதா அவர் பெத்த பொண்ணு நா அவரோட மச்சான் பொண்ணு புரிஞ்சுக்கோடா ..என்னால் இனிமே உன் அப்பாவை நேருக்கு நேரா பார்க்க முடியாது.


என்னை பாக்கும்போது ஏதாவது ஒரு சமயத்துல போட்டோஸ் நியாபகம் வந்துட்டா. நான் செத்து போயிடுவேன்.. உன்னோடு சேர்ந்து போகும் போதோ,இல்ல சேர்ந்து இருக்கும் போதோ இதே மாதிரி அந்த பையன் கூடவும் இருந்தாளேன்னு நினைச்சுட்டா அதுக்கப்புறம் நான் வாழவே மாட்டேன்.

ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக்கிட்டு உன் கூட என்னால வாழ முடியாது கார்த்தி என்னதான் நான் உன் மேல அதிக அன்பு காமிச்சாலும் அந்த வீட்டுக்கு நல்ல மருமகளா நடந்துக்கிட்டாலும் அவர் மனசுல இருக்கற நெருடலை என்னால போக்க முடியாது.


என்னைக்காவது அவர் வாய் தவறி அத்தை கிட்ட விஷயத்தை சொல்லிட்டா அதுக்கப்புறம் மொத்தமாக என்னை வெறுத்துடுவாங்க அந்த வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு அத்தை வெறுத்துட்டா நான் எங்க போவேன் நான் உன்னை கல்யாணம் பண்ணாம போயிட்டா மாமாக்கு அந்த போட்டோ எல்லாம் ஒரு விஷயம் கிடையாது.


உன்னால நிறுத்த முடியலனா சொல்லிடு நானே என் உயிர விட்டிடறேன்.உன்னோடது அதிக கற்பனை சொர்ணா நீ யார்கிட்டேயும் கெட்ட பெயர் வாங்க கூடாது அதான.. நீ எடுக்கிற முடிவால உன் அண்ணன் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை உன் அத்தை மாமா கவலைப்பட்டாலும் கவலை இல்லை அப்படித்தானே..


அப்படித்தான் கார்த்திக் என ஆங்காரமாக கத்தியவள் எனக்கு என் சுயநலம் மட்டும்தான் முக்கியம் யாரைப் பற்றியும் அக்கறை இல்லை எதை பத்தியும் கவலை இல்லை. எனக்கு கடைசி வரைக்கும் அத்தையோட பாசம் முழுசா கிடைக்கணும் உன் அப்பாவை குற்ற உணர்ச்சியோட நேருக்கு நேரா பார்க்க கூடாது இந்த ரெண்டும் நடக்கணும்னா உன்னோடான இந்த கல்யாணம் நிக்கணும் .நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா மாமாவை பார்க்கும் போதெல்லாம் என் குற்ற உணர்ச்சி என்னை கொத்தி திங்கும்.. அவர் வெளிக்காட்டிக்கிட்டாலும் சரி காட்டிக்காம போனாலும் சரி ரெண்டுமே என்னை மனசளவில் பாதிக்கும் கண்டிப்பா என்னால உன் கூட ஒரு நிறைவான வாழ்க்கையை வாழவே முடியாது.ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நீ நிறுத்திடு.. என்னால கல்யாணத்தை நிறுத்த முடியாது என் உயிரை வேணா நிறுத்திக்க முடியும் நான் உயிரோடு இருக்கிறதும் இல்லாம போறதும் உன் கையில தான் இருக்கு.இப்போ நீ என்னை காப்பாத்திடலாம் ஆனால் நாளைக்கு காலைல மணமேடைக்கு வரும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன் அப்போ உன்னால காப்பாத்த முடியாது போய் தைரியமா எல்லாருக்கும் சொல்லு ..சொர்ணா தற்கொலைக்கு முயற்சி பண்ணறான்னு..ஏன்னு காரணம் கேட்டா என் அப்பா அவளோட தப்பான போட்டோஸ் எல்லாம் பாத்துட்டாங்க அந்த அவமானம் தாங்காமல் சாக துணிச்சிட்டான்னு.. என்று அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.

திக்பிரமை பிடித்தபடி சற்று நேரம் அங்கேயே நின்றான் .


பிறகு மற்றவர்கள் கண்ணில் படாதவாறு வெளியேறினான்.


வீட்டுக்கு செல்லும் வழியெங்கிலும் ஒரே யோசனை தான் அவனுக்கு..சொர்ண் கூறியதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது ஆனால் பிடிவாதமாக தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கதறுபவளை எப்படி மணமேடை வரை கூட்டி வர முடியும்.


ஒருவேளை என்னுடைய மௌனம் அவளது உயிரை காவு வாங்கி விட்டால் வாழ்க்கை முழுவதும் நான் அல்லவா குற்ற உணர்ச்சியோடு திரிய வேண்டும்.


அவளே தெளிவாக கூறிவிட்டாள்..இப்பொழுது என்னை காப்பாற்றலாம் காலையில் என்ன செய்வாய் என்று .


திருமணத்திற்கு பிறகும் கூட இது போல ஒரு முடிவை எடுத்தால் மற்றவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என யோசித்தவன் தாயாரிடம் சென்று திருமணத்தை நிறுத்தும்படி கூறினான்.


அவர் கத்தி கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கடைசியில் காரணம் கேட்க .


எனக்கு அவளை பிடிக்கல என்று மனதை கல்லாக்கிக் கொண்டு கூறிவிட்டான் அவனுடைய காதல் சொல்லப்படாத காதல் தோல்வியில் சேர்ந்தது. மனது மிகவும் வலித்தது தான் நேசித்த ஒரு பெண் தன்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறுவது எத்தகைய கொடுஞ்செயல் அதை இறைவன் தனக்கு செய்து விட்டானே என்று படைத்த கடவுளை சபித்தான்.


சாந்தி எப்படி எல்லாமோ அவனிடம் வாதாடி பார்த்தாள் தங்கையை முன்னிறுத்தி பார்த்தார் கணவரை அழைத்து நியாயம் கேட்டார் எதற்குமே அவன் அசைந்து கொடுக்கவில்லை.கடைசியில் ஒரு மணி நேரத்தில் கதிரவனும் வரவழைக்கப்பட்டு அவனிடம் விஷயத்தை சொல்ல அவன் அந்த இடத்திலேயே அமுதாவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்து விட்டான்.கார்த்தி எதிர்பார்த்து தான் மனது மிகவும் வலித்தது.


கதிரவன் பணத்திற்காக தான் கார்த்தி மறுக்கிறானோ என நினைத்து அவனுடைய சொத்துக்களையும் சேர்த்து தங்கைக்கு தாரை வார்ப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.ஆனால் கார்த்தி கிண்டலாக அமுதாவுக்கு நாங்க கொடுக்கிறதுல பத்தில் ஒரு பங்கு கூட உங்க ரெண்டு பேரோட சொத்தையும் சேர்ந்தா கூட வராது என நக்கலாக கூறவும்.


சொத்துக்காக தான் திருமணத்தை மறுக்கிறான் என்று சாந்தியும் கதிரவனும் தவறாக புரிந்து கொண்டனர் அதையே வெளியிலும் பரப்பினர்.


சீக்கிரமா உன் தங்கச்சி கிட்ட போய் சொல்லு காலையில கல்யாணத்துக்காக அவசர அவசரமா மேக்கப் போட்டு காத்துட்டு இருக்க போறா என கேலி பேசவும் கதிரவன் முறைத்தபடியே அங்கிருந்து சென்றான்.

என்ன வரப் போகிறதோ என திக்திக் மனதோடு அமர்ந்திருந்த லதாவின் காதுக்கு விஷயம் மிக விரைவாக சென்று சேர்ந்தது.. மானசீகமாக கார்த்திக்கு நன்றி தெரிவித்தவள் அதன் பிறகு தான்நிம்மதியாக பெருமூச்சு விட்டாள்.பாவி பாவி நீ எல்லாம் நல்லா இருப்பியா பெத்த வயிறு பத்திட்டு வருதுடா இப்படி அநியாயமா ஒரே சமயத்துல ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுத்துட்டியேடா..பொம்பளைக பாவம் சும்மா விடாதேடா..விரட்டி விரட்டி அடிக்குமே..ஒரு தடவையாது எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கலாம்ல என்று சாந்தி ஆங்காரமாக மகனின் சட்டையை பிடித்து உலுக்க .


கையை நகர்த்தி விட்டவன் நான் எத்தனையோ முறை அவ கிட்ட பேசனும்னு சொன்னேன் நீங்க தான்

பேசவே விடலை என தாய் பக்கமே பழியை திருப்பி விட்டான்.


நான் தானடா கல்யாணத்தை முடிவு பண்ணினேன்..அப்போ நீ என்கிட்ட தானே சொல்லணும் அதை விட்டுட்டு அவ கிட்ட சொன்னா என்றவரிடம்.


அதுதான் மா நான் உங்க மேல வெச்சிருக்க மரியாதை உங்க கிட்ட நல்ல பேர் வாங்கணும்னு நினைச்சேன் அவ மூலமா கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைத்தேன் எல்லாம் சொதப்பி கடைசியில் என் வாய் மூலமாவே இந்த கல்யாணத்தை நிறுத்தனும் உங்க கிட்ட கெட்ட பேர் வாங்கணும்னு என் தலையில் எழுதி இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்.


ச்சே.. நீயும் ஒரு மனிதனா என்பது போல் அவனை பார்த்தவர் அங்கிருந்து நகர்ந்தார்.


இனி அடுத்த சமாளிக்க வேண்டியது அமுதாவை பல கனவுகளோடு காத்துக் கொண்டிருப்பாள் அவளை எப்படி எதிர்கொள்வது என தயங்கியபடியே அவளது அறைக்குள் செல்ல அவள் மிக சாதாரணமாக வா அண்ணா ஊர்ல இருந்து வந்ததுமே பெரிய வெடியை தூக்கி வீட்டுக்குள்ள போட்டுட்ட போல என்று கிண்டலுடனே கேட்டாள்.சாரி அம்மு.

நான் எதையும் வேணும்மின்னு..


கை உயர்த்தி தடுத்தவள் எதுக்கு அண்ணா சாரி உண்மையை சொல்லப்போனால் நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் எனக்கு கதிரவன் அத்தானை கல்யாணம் பண்ணிக்க துளி கூட விருப்பமில்லை,நீ எப்படியோ அப்படித்தான் அவங்களும்.


அம்மாக்காக தான் ஒத்துக்கிட்டேன் உனக்கும் லதாவை ரொம்ப பிடிக்கும்ல..


அதான் ஏன் என்னால உன்னோட கல்யாணம் கெட்டு போகணும்னு நினைச்சேன்.


லதாவும் என்னை போல தான் காதலிச்சாளே தவிர மத்தபடி எந்த தப்பு தண்டாவும் பண்ற பொண்ணு கிடையாது,ரொம்ப நல்ல பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாறிடுவான்னு நினைச்சேன்.

நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் ஆனா இப்போ ன நீ என்ன காப்பாத்திட்ட, ஆரம்பத்திலேயே உனக்கு இந்த கல்யாணம் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது..சரி விடுன்னா என்ற பிறகு தான்.

அவனுக்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.


அதன் பிறகு தந்தையை தேடிச் செல்ல அவர் எதுவுமே பேசவில்லை நெடு நேரம் மௌனமாக நின்றவர் நீ போன வாரம் பேசும்போது கூட இது பத்தி சொல்லலையே என்றார் .


பிறகு சரி விடு இந்த ஒரு வாரத்தில் என்ன வேணாலும் நடந்திருக்கலாம் ஆனா ஒன்னு பா அந்த புள்ளைய பத்தி ஏதாவது தப்பா கேள்விப்பட்டேன் அதனாலதான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லறேன்னு மட்டும் சொல்லிடாத..அப்பா மனசு உடைஞ்சிடும் அவ உன் அம்மா வளர்ப்பு என்னைக்கும் தவறா போகமாட்டா..என்றவர் கார்த்தியிடம் இருந்து எந்த பதிலும் வராததை கண்டவர் .


திரும்பி பார்த்துவிட்டு என்ன ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடியாவது சொல்லி இருக்கலாம் இந்த ஏற்பாடெல்லாம் பண்ணாம விட்டிருப்பேன் நாளைக்கு சொந்த பந்தம் எல்லாரையும் பாக்கணும் பேசணும் சரி அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காம ஊர் போய் சேரு கொஞ்ச நாளைக்கு இந்த அப்பாவை வந்து பார்க்க வேண்டாம், பேசவும் வேண்டாம் என கூறிவிட்டு நகர்ந்தார்.


நீ என்ன பண்ணி வச்சிருக்க பாத்தியா சொர்ணா..என் அப்பா உன்னை எந்தளவு நம்புறாரு நீ என்னன்னா என் அப்பாவேயே சந்தேகப்பட்டு கல்யாணத்தை நிறுத்திட்ட முட்டாள் பொம்பள டி நீ ..கண்டிப்பா இதுக்கு பின்னாடி வருத்தப்படுவ அன்னைக்கு உன்கிட்ட பேசிக்கிறேன்.
 
Top