எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -13

@38

Moderator
13

ஏய் சாந்தி இன்னும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்க..? இன்னும் எவ்வளவு நேரம் பண்ணுவீங்க சீக்கிரம் கிளம்புங்க ..நேரம் ஆகலையா.? சம்பந்தி வீட்டில் இருந்து ரெண்டு நேரம் போன் பண்ணியாச்சு என்று பெருமாள் ஹை பீச்சில் கத்திக் கொண்டிருக்க உள்ளிருந்த சாந்தியோ.


ஐயோ இந்த மனுஷன் ஆரம்பிச்சுட்டாரு இனி அவ்வளவுதான் ஏய் பிள்ளைங்களா சீக்கிரம் கிளம்புங்க ஒவ்வொருத்தரா வண்டிக்கு போங்க ஓடுங்க ஓடுங்க என்று விரட்டி விட்டவர்.


ஓரு பெண்ணை பிடித்து சீர் தட்டெல்லாம் சரியா இருக்கானு பார்த்து வண்டிக்கு கொடுத்து விடு இதெல்லாம் சொல்லித் தரணுமா உனக்கா தோண வேணாமா என உரிமையாக கடிந்து கொண்டார்.


அவரும் சரி சித்தி என்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர் தட்டை கொடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.


இந்த பக்கம் வேகமாக வர லதா அவளின் குழந்தைக்கு அப்பொழுதுதான் உடைமாற்றிக் கொண்டிருந்தாள்.


என்ன லதா எல்லாருக்கும் முன்னாடி நீ இல்ல கிளம்பனும் இப்படி உக்காந்துட்டு இருக்க குழந்தை இப்படி கொடு நான் பார்த்துக்கிறேன் என்றவர் போய் கார்த்தி பொண்டாட்டி கிளம்பிட்டாளானு பாரு என அனுப்பி வைத்தார்.


சற்று தயங்கிப்படியே அறையை லதா எட்டிப் பார்க்க கட்டிலில் மீது புடவை இருக்க அருகில் கீத்து அமர்ந்திருந்தாள் .

என்னாச்சு இன்னும் கிளம்பலையா என்று தலையை மட்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள் .


தான் பேச ஆசைப்படும் பெண், எப்பவும் தன்னை ஊதாசிப்படுத்திக் கொண்டிருந்த பெண், இப்பொழுது அவளாக தேடி வந்து தன்னிடம் பேச்சுக் கொடுக்கும் பொழுது அந்த மகிழ்ச்சியை கீத்துவால் எப்படி வெளிக்காட்டாமல் இருக்க முடியும்.


சந்தோஷத்தில் கண்கள் விரிய ஹேய் லதாக்கா நீங்க என்கிட்ட பேசறீங்களா என் ரூமுக்கு வந்திருக்கீங்களா என ஆச்சரியமாக கேட்டாள்.


ஏன் உனக்கு எனக்கும் ஏதாவது வாய்க்கால் வரப்பு தகராறு இருக்கா என்ன பேசிக்காம இருக்க..?


அப்படின்னா என்ன அக்கா..?


இது கிராமத்து பழமொளழி புரியலன்னா விடு.


அக்கா சாரி.


எதுக்கு சாரி.


கார்த்தி உங்களுக்கு பண்ணின கொடுமைக்கு ..அவரை மன்னித்து மறந்திருங்க அக்கா இதை கேட்டதிலிருந்து நான் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கேன்..


உளறாத என்றவள் சரி ஏன் கிளம்பாம இருக்க.


புடவை கட்டணும் அக்கா .


சீக்கிரம் கட்டிட்டு வெளியே வா அத்தை கத்திகிட்டு இருக்காங்க தேவையில்லாம அவங்க கிட்ட திட்டு வாங்காதே.


அக்கா..


இப்போ என்ன உளறப் போகிறாய் என்பது போல பார்த்தாள்.


எனக்கு புடவை கட்ட தெரியாது கட்டி விடுறீங்களா என்கவும். ஒரு சிநேக புன்னகை வந்து லதாவிடம் ஒட்டிக்கொண்டது.


தெரியாதா..? நம்பற மாதிரி இல்லையே இப்போதான் யூடியூப் இருக்கே கத்து குடுக்க.


ஆனா நான் லதா அக்கா கிட்ட தான் கத்துக்கணும்னு இவ்வளவு நாள் கத்துக்கல என்று சிரித்த முகமாய் சொல்லவும்.. அந்தப் புன்னகை லதாவையும் ஒட்டிக்கொண்டது நல்லா பேசுற கார்த்தி பாவம்தான் என்று கூறியபடியே அவளுக்கு புடவை கட்டி விட்டாள்.


மனைவி இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள் என்று பார்க்க வந்த கார்த்தி லதாவும் கீத்துவோம் சிரித்தபடியே புடவை கட்டிக் கொண்டிருக்கும் அழகை பார்த்துவிட்டு வந்த வழி தெரியாமல் அப்படியே திரும்பிச் சென்றான்.


அவன் மனம் எங்கிலும் மகிழ்ச்சியால் நிரம்பிக் கிடந்தது ஏனென்று காரணம் தெரியவில்லை அது கீத்துவின் புன்னகையா இல்லை லதா இயல்பாக அவளுடன் பழகுவதா என்று தெரியவில்லை.


பத்து நிமிடத்திலேயே லதா கீர்த்தனாவை தேவதை போல அலங்கரித்து விட்டாள்.


சாந்தி கூட மருமகளின் அழகை கண்டு பிரமித்து விட்டார்.


என் கண்ணே பட்டிடும் போல இருக்கே என் மருமகளுக்கு.. இம்புட்டு அழகா வந்து இருக்க என்று படி கண்மை எடுத்து அவளுக்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்.


அனைவரும் அவளின் அழகை பாராட்டினாலும் தன்னவன் பாராட்டினால் தானே அந்த அழகிற்கு பெருமை கண்களால் கணவனை தேடினாள்.


அவனுமே தூரத்தில் இருந்து அவளின் அழகைத்தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.


கண்கள் இரண்டுமே பின்னிக்கொண்டது கண்களாலேயே எப்படி என்று கேட்டாள்.


நன்றாக இருக்கிறது என்பது போல ஜாடை செய்தவனுக்கு பறக்கும் முத்தத்தை பரிசளித்தாள்.


பதறியபடி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உதை வாங்கப் போற ஒழுக்கா ஓடிப்போ என்பது போல் சிரித்தபடி ஜடை செய்துவிட்டு நகர்ந்தான்.


அனைவருமே வாகனத்தில் ஏறிவிட லதாவின் குழந்தையோடு கடைசியாக வாகனத்தில் ஏறிய சாந்தி கீர்த்தனா கீழே நிற்பதை பார்த்து விட்டு ஏன் வண்டியில் ஏறலை என்று கேட்டார்.


நான் அவரோட வர்றேன் அத்தை என்று உள்ளிறங்கிய குரலில் சொல்லவும்.


அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தான் அங்க முன்னாடி நின்னு எல்லாம் செய்யணும் நீயே கடைசியா வந்தா எப்படி..? ஆம்பளைக்கே மெதுவா வருவாங்க நீ முதல்ல என்னோட வந்து வண்டியில் ஏறு என்றவர் அவளையும் மினி பஸ்ஸில் ஏற்றிக்கொண்டார்.


கீர்த்தனாவிற்கு அப்படி ஒரு சந்தோஷம் தன்னை முன்னிறுத்தி ஒரு விழா நடக்கப் போகிறது.. சினேகமாய் மாமியாரை பார்த்து புன்னகை செய்தபடி அவரருகில் அமர்ந்து கொண்டாள்.


இந்தா இது லதா குழந்தை நீ சித்தி முறை அவளுக்கு..மககிட்ட பேச்சி குடு நான் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கிறேன் என்று நகர்ந்துவிட குழந்தையுடன் ஐக்கியமாகிவிட்டாள் கீர்த்தனா.


சீர் பாத்திரங்கள் சரி பார்த்தர் முதலில் கிளம்ப வேண்டிய வண்டியில் இருப்பவர்கள் என அனைவரையும் சரிபார்த்தவர் டிரைவர் வண்டி எடுங்க என்று சத்தம் கொடுத்தார்.


கீர்த்தனா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு லதாகா இன்னும் ஏறல என்றாள்.


அவ புருஷன் வந்துட்டு இருக்காராம் அவரோட வருவா நாம முன்னாடி போலாம் நமக்கு அங்க நிறைய வேலை இருக்கு என்று புன்னகையுடனே கூறினார் அவருக்குமே கீர்த்தனா லதாவின் மேல் அக்கறை காட்டவும் அவளை பிடித்து போய்விட்டது.எல்லா வண்டியும் கிளம்பி ஆயிற்று வீட்டுக்குள் வேறு யாராவது இருக்கிறார்களா என கடைசியாக ஒரு முறை சுற்றி வந்தவனுக்கு மனதெல்லாம் நிறைவாக இருந்தது.


கீர்த்தனை இயல்பாக தாயாரிடமும் ஒட்டிக்கொண்டாள் இதைத்தானே அவனின் மனம் இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இனிமேல் மெது மெதுவாக மாறத் தொடங்கி விடுவாள்.. விசேஷம் முடிஞ்ச உடனே கிளம்பி விடக்கூடாது.


உறவினர்கள் கூட்டம் கலைந்த பிறகு

மேலும் ஒரு வாரம் தங்க வேண்டும் அப்பொழுதுதான் மேலும் தாயாருடன் ஒட்டிக்கொள்வாள் என்று நினைத்தான் கதவை பூட்டிவிட்டு கடைசியாக அவனது காரை எடுக்க கேட்டோரமாக கைகளை பிசைந்தபடி லதா நின்று கொண்டிருந்தாள்.


விசேஷத்திற்கு தயாராகி நின்று கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது பட்டுப்புடவை நகைகள் தலை நிறைய பூ என மிக பாந்தமாக தெரிந்தாள்.


இதுதானே அவளின்பால் அவனை ஈர்த்தது ஈசியாக அவளைக் கடந்து செல்ல முடியவில்லை வீட்டில் யாரும் இல்லை தனியாக வேற நிற்கிறாள் என்ன செய்வது என யோசித்தவன் காரை திறந்து அவள் அருகே சென்றான்.


ஏன் சொர்ணா நீ போகலையா அம்மு வளைகாப்பிற்கு.


பேச சற்று தயங்கியவள் அது மகி அப்பா வந்துட்டு இருக்கிறதா காலையில போன் பண்ணி சொன்னாங்க அவரோட சேர்ந்து போகலாம்னு நானும் அத்தை கிட்ட சொல்லிட்டேன் இப்போ என்னன்னா அப்படியே அமுதா வீட்டுக்கு போறதா சொல்லிட்டாரு என்ன பண்றதுன்னு தெரியல சொல்லும் போதே கண்களில் நீர் தேங்கியது.


பொறுப்பில்லாதவன் என மனதிற்குள் திட்டியவன் நம்ம வண்டி ஏதாவது பக்கத்தில் இருக்கான்னு பார்த்து வர சொல்றேன் என்று ஒவ்வொரு வண்டிக்கும் போன் செய்ய எல்லோருமே அமுதாவின் வீட்டிற்கு சென்று விட்டது.


இது கிராமம் அவ்வளவு சுலபமாக நகரத்தில் இருப்பது போல வாடகை வாகனங்கள் கிடைக்காது ஊரிலேயே பாதி பேருக்கு மேல் அமுதாவின் விசேஷத்திற்காக சென்று விட்டனர் அப்படியே இருந்தாலும் கூட அவர்களை நம்பி அனுப்பி வைக்கவும் முடியாது என்ன செய்வது..


கதிர் மச்சானுக்கு கூப்பிட்டு பாத்தியா..?


அப்பவே கூப்பிட்டேன் அண்ணன் இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க பரவால்ல நீங்க போயிட்டு வாங்க நான் வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவளின் குரலில் அப்படி ஒரு ஏமாற்றம்.


சரி என்று அவளை விட்டுச் செல்லவும் முடியவில்லை வா என்று அழைத்துச் செல்லவும் முடியவில்லை இருதலைக்கொல்லியாக தவித்தவன் கார் அருகே சென்று மீண்டும் திரும்பிப் பார்த்தான்.


யாராவது வந்து தன்னை அழைத்துச் செல்ல மாட்டார்களா என்பது ரோட்டில் தான் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


கண்ணுக்கட்டிய தூரம் வரை ஒருவரையும் காணோம் இனி வாசலில் நின்று தவம் கிடப்பது வீண் என்று உணர்ந்தாளோ என்னவோ வீட்டுக்குள் செல்வதற்காக திரும்பினாள்.


அவளருகே காரை நிறுத்தியவன் ஆபத்துக்கு பாவம் இல்லன்னு சொல்லுவாங்க நீ விருப்பப்பட்டா தாராளமா என்னோட வரலாம் அம்மு வீட்டுக்கு தான் போறேன்.தகவலாக சொன்னான்.


சில வினாடி யோசித்தவள்..இல்ல நீங்க போங்க நான் வீட்டை பாத்துக்கறேன்.இயலாமை அதில் ஓலித்தது.ஏனோ அவளது ஏமாற்றத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


பின்னாடி உக்காந்துக்கோ.

கால் டேக்ஸில போறதா நினைச்சிக்கோ..அம்மு ஹஸ்பண்ட் ஈஸ்வரை வர சொல்லறேன் நாம பாதி தூரம் போகும்போது அவர் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குவாரு .

யாருக்கும் நீ என்னோட வந்தது தெரியாது.


சரியென தோண்றவும் ம்ம் என்று தலையசைத்தாள்.


அளுக்காக பின்பக்க கதவை திறக்க போக அவன் முன்பக்கம் அமர்ந்து கொண்டாள்.


அவளை ஆச்சரியமாக பார்த்தவன் வாகனத்தை இயக்கினான்.


சற்று நேரத்தில் பெருமாளிடம் இருந்து கார்த்திக்கு அழைப்பு வந்தது.


டேய் கார்த்தி சொர்ணா புருஷன் இங்க வந்து உட்கார்ந்து இருக்காரு அந்த பொண்ணு இவன் வருவான்னு அங்க காத்துகிட்டிருக்குன்னு உன் அம்மா கவலைப்படறா.. கொஞ்சம் என்னன்னு பாரேன்.


ஓகே பா நான் என்னன்னு பார்க்கறேன் என்றபடி காலை கட் செய்தான்.


மாமா எனக்காக உன்கிட்ட பேசினாரா..?


ஏன் சந்தேகமா இருக்கா உன் முன்னாடி தானே பேசினேன்.


அதான் ஆச்சரியமா இருக்கு.. அவர் பார்வையில் நான் ரொம்ப கீழான பொண்ணு தானே என் மேல எல்லாம் கூட அக்கறை எடுப்பாரா..?


பேசிட்டியா இன்னும் எத்தனை நாள் தான் ஆகும் உனக்கு.. என் அப்பாவை புரிஞ்சுக்க.. எரிச்சல் மண்டிக்கிடந்தது குரலில்.


பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்க..அப்பாவை, பார்க்கற,,பேசியிருக்க, பழகியிருக்க ஆனாலும் என் அப்பாவை புரிஞ்சுக்கலையே சொர்ணா.


கேள்வியாய் பார்த்தவளிடம்


உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. கல்யாணத்த நிறுத்துனது தான் நான் நிறுத்த சொன்னது நீ என்பதை என் அப்பா ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சிட்டாங்க..அப்போ கூட அவர் உன்னை கோவிச்சிக்கல.


இரண்டே நாளில் தந்தையிடம் இருந்து அழைப்பு எனவும் சற்று பயந்து விட்டான் கார்த்தி.


அவர்தானே தெளிவாக சொல்லி அனுப்பினார் கொஞ்ச நாளைக்கு அப்பா கூட பேசாத ஊருக்கும் வராதுன்னு இப்போ அவரே கூப்பிடுறார்னா ஐயோ கடவுளே நான் பண்ணி வச்ச வேலையில வேற ஏதாவது அசம்பாவிதம்..?


சொல்லுங்கப்பா குரலில் ஏகத்திற்கும் பயம் இருந்தது இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது.


இந்த அப்பாவை மன்னிச்சுடு ஐயா அவரின் குரல் ஈனஸ்வரத்தில் முனங்கியது.


ப்பா என்னாச்சிபாபா..?


பெத்த புள்ளைய புரிஞ்சுக்காத பாவியாயிட்டேனே ஐயா என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்போ தான் இந்த அப்பாவால நிம்மதியா ஒரு வாய் தண்ணி குடிக்க முடியும் .


என்ன ஆச்சுப்பா முதல்ல அதை சொல்லுங்க.நீ ஊர்ல இருந்து சீக்கிரமா வந்ததாகவும்,சொர்ணாவை விசாரிச்சதையும்.. இப்போ தான் பா நம்ம வேலையால் சொல்றான்.


நம்ம ஐயா மேல தப்பு இருக்காது கொஞ்சம் தீர விசாரிங்க அய்யான்னு ஒரு வேலைக்காரன் உன்னை நம்புற அளவுக்கு ஒரு அப்பன் நான் நம்ப தவறி விட்டேனேன்னு மனசு பதறுது.


விட்டுடுங்கப்பா அதை பத்தி பேசி ஏன் நம்ம மனதை நாம் காயப்படுத்திக்கணும்


காரணம் அப்பாக்கு சொல்ல மாட்டியா..?


சொன்னா உங்க மனசு காயப்படும் பா வேணாம் விட்டிடலாம்.


இதை விடவும் என்னப்பா காயப்பட இருக்கு சொல்லு அதையும் கேட்போம்.


சொர்ணா வீட்டில் நடந்ததை முற்றிலும் கூறினான்.


கடவுளே என நெஞ்சில் கை வைத்துக் கொண்டவர் நம்ம சொர்ணாக்கு ஏன் பா இப்படி தோணுச்சு.


நான் அதை எதையுமே நம்பலையேப்பா அவ தப்பான பொண்ணுன்னு நினைச்சிருந்தா எப்படி நான் உனக்கு பேசி முடிப்பேன் ஏன் அவளுக்கு அது தோணல.


அந்தப் பையன் காமிச்ச போட்டோ எல்லாமே பொய்யின்னு தெரியாத அளவிற்கா நான் முட்டாள் அவன் காமிச்ச உடனே போட்டோவெல்லாம் புடுங்கி எரிச்சதோட இல்லாம அவன் கையை காலை ஒடச்சி தான அனுப்பினேன் அப்போ கூட வா அந்த பொண்ணுக்கு என் மேல நம்பிக்கை வரல.


இத்தனை வருஷம் வளர்த்தி என்ன பிரயோஜனம் போனை வைக்கறேன் கார்த்தி என பேசமுடியாமல் வேதனையுடன் வைத்து விட்டார்.


அதன் பிறகு சொர்ணாவிடம் பேசுவதையே தவிர்த்து விட்டார் அவருக்கு கோபம் எல்லாம் இல்லை. சிறு வருத்தம் மட்டும் தான்.


நாம் தூக்கி வளர்த்த பெண் நம்மை தவறாக புரிந்து கொண்டதே.. எப்படி இதுபோலெல்லாம் அந்த பெண்ணால் நினைத்துப் பார்க்க முடிந்தது வீட்டுப் பெண்களை நம்ப முடியாத அளவிற்கா நாம் கீழே இறங்கி போய் விட்டோம் என அவ்வப்போது நினைத்து கவலைப்பட்டுக் கொள்கிறார்.


அப்படின்னா மாமா என தொண்டை கமர கேட்ட லதாவிடம் துளி கூட அந்த போட்டோவை நம்பல.


அவனையுமே உன் காதலன் என்ற கண்ணோட்டத்துல பாக்கல.. எவனோ தெருப்பொறுக்கி குடும்பத்துல குழப்பம் பண்றதுக்காக வந்திருக்கு உண்மையிலேயே அந்த போட்டோல இருக்கிறது நீ தானா அப்படி இருந்தா எப்படி அவன்கிட்ட இருந்து அதையெல்லாம் வாங்குவது அந்த ஆராய்ச்சியில் தான் பார்த்திருக்கிறார்.


இதையும் அப்பா தான் இன்னோரு சமயத்துல என்கிட்ட சொன்னாரு உண்மையிலேயே அவர் நம்பி இருந்தா அவனோட கை காலை எதுக்காக உடைக்கணும் உன் கையை காலையல்லவா வந்து உடைத்து இருக்கணும் என்று கோபமாக பேசியபடி ரோட்டை பார்த்தான்.


சிறு விம்மலுடன் மூக்கை உறிஞ்சினாள்.. சாரி கார்த்தி..மாமாவை புரிஞ்சிக்காம எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்.

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை காப்பாத்தி விட்டுட்டீங்க இப்போ வரைக்கும் கெட்ட பெயரோட நீ இருக்க ரொம்ப நல்லவ மாதிரி நான் சுத்திட்டு இருக்கேன் மீண்டும் கண்ணை கசக்கினாள்.


திரும்பி பார்த்து விட்டு டிஸ்யூ எடுத்து அவள் கையில் திணித்தவன்.


அதை விடு நீயும் நானும் இப்போ வேற வேற வாழ்க்கையில இருக்கோம்.. அந்த வாழ்க்கையை பத்தி மட்டும் தான் கவலைப்படணுமே தவிர நடந்து முடிந்ததை பற்றி கவலைப்பட கூடாது.

என்றவன் யோசனையாக அவளைப் பார்த்துக் கொண்டு நீ சந்தோஷமா தானே இருக்க..?


ஏன் கார்த்தி அப்படி கேக்குற.. வெயிட் போட்டு இருக்கேன் ஒரு பெண் குழந்தை..நான் ரொம்ப நல்லா இருக்கேன் பார்த்தா தெரியலையா..


இல்லை என்பது போல தலையசைத்தவன் .

அது என்ன தோள்பட்டைக்கு கீழே புதுசா ஒரு தழும்பு என்று ரோட்டை பார்த்தபடியே கேட்டான்.


உடனே அந்த இடத்தில் கை வைத்து பார்த்துவிட்டு பிளவுஸை இழுத்து விட்டவள் நகையை அதன் மீது எடுத்து விட்டாள்.


அது என அவள் ஆரம்பிக்கும் முன்னே..


சமைக்கும்போது எண்ணை தெறிச்சிடுச்சுன்னு என் அம்மாகிட்ட சொன்ன அதே பொய்யை என்கிட்டயும் சொல்லாத எண்ணை தெறிக்கற காயத்துக்கும் சிகரெட்டால சூடு போடுறதுக்கும் வித்தியாசம் எனக்கு நல்லாவே தெரியும் என்று காரை நிறுத்தியவன் அவளின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தபடி உன் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்துகிட்டு இருக்கு.


என்னதான் பிரச்சனை உங்களுக்குள்ள..வெல் செட்டில்டு பேமிலி..நல்ல ஜாப் அப்படி இருந்தும் உனக்கேன் இவ்வளவு சித்திரவதை.

அப்படியெல்லாம் இல்லன்னு சொல்லி மழுப்பாதே நான் தள்ளி இருந்தாலும் உன்ன கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.


அம்மு மேல எப்படி அக்கறை காமிக்கிறேனோ அதே மாதிரிதான் உன் வாழ்க்கை மேலயும் எனக்கு அக்கறை இருக்கு உண்மையை சொல்லு என்று கேட்கவும் தயங்கிப்படியே பேசத் தொடங்கினாள்.
 
Top