எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -14

@38

Moderator
14


நீ சொன்னது வாஸ்தவம் தான்..பரம்பரை பணக்காரங்க.. இவருக்கு மத்திய அரசாங்க‌ வேலை எல்லாம் இருந்தும் எனக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை தான்.



கேசவ்க்கு எல்லாத்துலயுமே ஆசை அதிகம் ஆடம்பரமும் அதிகம் அரசாங்க வேலையில் இருக்கிறவங்க ஒரு மிடில் கிளாஸ் லைஃப் தான் வாழ முடியும் அது அவருக்கு புரியறதில்லை.


ரொம்ப நேர்மையானவர் யார்கிட்டயும் கை நீட்ட மாட்டாரு.. அதனால அவரோட ஆடம்பரத்துக்கு வருமானம் சுத்தமா பத்தல எத்தனை நாளைக்கு பெத்தவங்க அவங்களோட பணத்தை எடுத்துக் கொடுப்பாங்க ஒரு கட்டத்துக்கு அப்புறம் இவருக்கு கொடுக்கிறதை நிறுத்திட்டாங்க.



கேசவோட பொறந்தவங்க ஒரு தம்பியும் ஒரு தங்கச்சியும் இருக்காங்க இவருக்கு கொடுக்கிற மாதிரியே அவங்களும் எதிர்பார்க்கிறதுனால குடும்பத்துக்குள்ள அப்பப்போ சண்டை.



கேசவ் வாங்கி வைக்கிற கடனுக்கு அப்பப்போ நானும் கதிர் அண்ணா கிட்ட பணம் கேட்டேன் ஒரு கட்டத்தில் அண்ணனும் வெறுத்துப் போய் என்னோட பங்கு எல்லாத்தையும் பிரிச்சு அவர் கைல மொத்தமா கொடுத்துட்டாரு. அதையும் ஏதோ பிசினஸ் பண்றேன்னு அதுல போட்டு மொத்தமா விட்டுட்டாரு.


அவரோட முட்டாள்தனத்திற்கு என்னோட அதிர்ஷ்டம் காரணம்னு என் மேலேயே பழியை திருப்புகிறார்.


நன்பகத்தன்மையுடன் பார்த்தவன்.. இது பொதுவா உன் குடும்பத்துக்குள்ள நடக்குற விஷயம் உனக்கும் அவருக்கும் பர்சனலா என்ன பிரச்சனை? சிகரெட்டால சூடு போடுற அளவுக்கு அதைதான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் என்று விழி தட்டாமல் அவளை பார்த்து கேட்கவும்.



அது எதுக்கு கார்த்தி வேண்டாமே.


உன் பிரச்சனையை எதுக்காக என்கிட்ட சொல்லனும்னு தயங்கறியா..?இல்ல பிரச்சனையே என்னால் தான் என்கிறதால சொல்ல மாட்டேங்கறியா என சரியாக கோட்டைத்தொட்டான்.


லுக் சொர்ணா நீ என்னைக்கு கல்யாணம் பண்ணிப் போனியோ அன்னையிலிருந்து என் அம்மா வாயிலிருந்து வர்ற ஒரே வார்த்தை என்னால உன் வாழ்க்கை அழிஞ்சதுங்குறது தான்.


ஒரு தடவை சொன்னா கோவத்துல சொல்லறாங்கன்னு விடலாம் எப்பவுமே சொன்னா ஏதோ ஒன்னு இருக்குன்னு அர்த்தம் .


உன்னால் என் குடும்ப வாழ்க்கையும் அஃபெக்ட் ஆயிட்டு இருக்கு உன் பிரச்சனை தீர்ந்தா மட்டும்தான் நான் நிம்மதியா இருக்க முடியும்.


என்னோட லைஃப்பை பார்க்க முடியும் ..என் அம்மாவோட கோபம் போய் பாசமான பழைய அமாவா எனக்கு திரும்பி கிடைப்பாங்க ப்ளீஸ் வேற மனுஷனா நினைக்காம உன் அத்தை மகன்னு நினைத்து சொல்லு கண்டிப்பா ஏதாவது செய்வேன் நம்பு.


கார்த்தி இது யாராலயும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனை. என் தலையில் நானே மண் அள்ளி கொட்டிகிட்ட கதை.

நீ காரை எடு பங்ஷன் லேட் ஆகிட்டு இருக்கு அத்தை தேடுவாங்க என பேச்சை கத்தறித்து விட முனைந்தாள்.


எதுவுமே பேசாமல் அமைதியாக அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவளாக கார்த்தி அந்த கல்யாணத்தை நீ நிறுத்தின ஆனா நிறுத்த சொன்னது நான் என்பது என் கணவருக்கு தெரியாது என்கிட்ட ஏதோ குறை அதான் நீ கல்யாணத்தை நிறுத்திட்டேனு அவர் நம்புறாரு கூடவே வளர்ந்தவன் அப்படி உன்கிட்ட என்ன பார்த்து வேணாம்னு ஒதுக்கி விட்டான்னு வார்த்தைகளால் தினம் தினம் என்னை வதைக்கிறார்.



ரொம்ப அதிகமா பேசறப்போ மனசு பொறுக்காமல் நானும் ஏதாவது பேசிடுவேன் அந்த சமயத்துல கை நீட்டிடுவாரு சில சமயம் என்னால அவரோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது..அந்த சமயத்திலேயும் உன்னை தான் இழுப்பாரு..அந்த மாதிரி நேரத்துல வெச்சது தான் இந்த சூடு..

புரியுதா என வெளிப்படையாக கூற கூச்சப்பட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.


கண்களில் நீருடன் அவளையே பார்த்தான்..எப்படி வளர்த்த பெண்..இப்படி ஏச்சும் அடியும் வாங்கவா கல்யாணம் செய்து வைத்தோம்.



ஏன் சொர்ணா இவ்ளோ சித்திரவதை அனுபவிச்சிட்டு இன்னும் ஏன் அந்த வீட்ல அவரோட இருக்க.. வந்திருக்கலாமே நம்ம வீட்டுக்கு..உனக்கு நாங்க எல்லாம் இருக்கிறோமே .அடைக்கலம் கொடுக்க மாட்டோம்னு பயந்துட்டியா.

உன் படிப்புக்கு ஏத்தது போல ஒரு வேலை பார்த்துக் கொண்டு உன் வாழ்க்கையை வாழ முடியாதா இதை கூறும் பொழுது எவ்வளவு முயன்றும் அவனது குரலின் கரகரப்பை தடுக்க முடியவில்லை.


எந்த முகத்தை வச்சிகிட்டு வர முடியும் சொல்லு தவறான ஒருத்தனை தேர்ந்தெடுத்தேன்.. உன் முதுகுக்கு பின்னாடி ஒளிச்சிகிட்டு என் கல்யாணத்தை நிறுத்தி இருக்கேன். இப்போ திருமண வாழ்க்கையும் சரி இல்லனு வந்தா இந்த சமூகம் என்னை பத்தி என்ன நினைக்கும்.. எனக்கு ஒரு பெண் இருக்கா ..அவர் என்கிட்ட எப்படி வேணாலும் நடந்திருக்கலாம்..ஆனா மகிக்கு சிறந்த அப்பா.. கணவரா நிறைய இடத்துல அவர் தோத்து போய் இருக்கலாம் ஆனா ஒரு அப்பாவா என்னைக்குமே அவர் தோத்து போகல எனக்கு அந்த ஒரு கேரக்டர் போதும் அதை வைத்து என் மீதி வாழ்க்கையை வாழ்ந்திடுவேன்.


பெருமூச்சை விட்டவன் இவளது வாழ்க்கைக்கு எப்படி தீர்வு காண்பது என யோசித்தவன் மொபைல் போனை எடுத்து அமுதாவின் கணவன் ஈஸ்வருக்கு அழைப்பு நீ சொர்ணாவை பிக்கப் செய்ய வேண்டாம் அப்படியே திரும்பிப்போ என்று கூறிவிட்டு வைத்தான்.


கார்த்தி ஏன் அப்படி சொல்ற உன் பின்னாடி போனா பல பிரச்சினை வரும் ஏற்கனவே என் கணவர்…



ஷ்ஷ்‌.எதுவும் பேசாதே என உதட்டின் மீது விரல் வைத்தபடி தலையாட்டினான்.


கப்பென்று வாய் மூடிக்கொண்டாள்.


உன் மொபைல் குடு .


என்கிட்ட மொபைல் இல்ல .


நம்பாத பாவனையில் இல்லையே உன்கிட்ட இருக்கனுமே.


இருந்தது இப்போ இல்ல.


என்னாச்சு..


உடைச்சிட்டேன் .


ஏன்..?


****


எதா இருந்தாலும் வாயைத் திறந்து பேசு அப்போ தான் ஏதாவது பண்ண முடியும்.


தர்ஷன் கால் பண்ணி என்னை மிரட்டுறான்.


எவன் அவன் என கேட்டபடியே உன் மாமா பையன் அவனா..?


ம்ம்..


கடும் கோபம் முகத்தில் ஜொலித்தது ஏன் இவ்வளவு நாள் எங்க கிட்ட சொல்லல ஏற்கனவே நீ பிரச்சினையில் மாட்டினது பத்தாதா அப்பா இருந்ததால நீ அன்னைக்கு தப்பிச்ச..

அதையே உன் அண்ணன் கிட்ட காட்டியிருந்தா உன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்..என்று கர்ஜித்தவனிடம்.


ரொம்ப நாளா இல்ல ரெண்டு நாள் முன்னாடி தான் கூப்பிட்டான் வாட்ஸ் அப்ல ஏதோ போட்டோஸ் அனுப்பி இருந்தான் அது எதுவுமே நான் இல்லை இதையெல்லாம் என் வீட்டுக்காருக்கு அனுப்பிவிடுவேன்னு பிளாக்மெயில் பண்ணறான்..


ஊருக்கு வருவல்ல அப்போ என்னை நீ வந்து சந்திக்கணும்னு இன்னைக்கு ராத்திரி வரை கெடு குடுத்திருக்கான்.. நான் ஊருக்கு வருவது அவனுக்கு எப்படி தெரியும் என் நம்பர் அவனுக்கு எப்படி கிடைத்தது? எதுவுமே எனக்கு தெரியாது என்ன பண்றதுன்னு ஒண்ணுமே தெரியல கார்த்தி பயத்துல போனை உடைச்சுட்டேன் இப்போ கணவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா வேற வினையே வேண்டாம்.பயத்தில் முகம் வெளிறியது.


இப்போவாவது வாயை திறந்து சொன்னியே அது வரைக்கும் சந்தோஷம்…என்றவன் யோசித்தபடியே இதை யார்கிட்டயும் சொல்லாத.. நான் பாத்துக்கறேன். கண்டிப்பா வேற யார் மூலமாவது உன்கிட்ட பேச முயற்சி பண்ணுவான் உன் கணவர் கிட்ட கூட பேச முயற்சி பண்ணலாம்.. நீ பயப்படாத தைரியமாக பேஸ் பண்ணு.

நான் இருக்கேன் உனக்கு என தைரியம் கொடுத்தான்.


வளைகாப்பு வீட்டில் அனைவருமே அவரவர் வேலையை செய்து கொண்டிருக்க லதாவின் கணவரும் கார்த்தியின் மனைவியும் மட்டும் இருவரையும் தேடியபடி வாசலில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டிருந்தனர்.


இருவரும் சேர்ந்து வருவது தெரியாது என்னாச்சு வரேன்னு சொன்னாங்க இன்னும் வரல எங்கே போயிருப்பாங்க ஃபங்சனுக்கு வேற டைம் ஆயிட்டு இருக்கு அவர் வந்தா தானே ஸ்டார்ட் பண்ணுவாங்க என்ற கவலை அவளுக்கு.


ஏனென்றால் சாந்தி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அவளை தான் கேட்டு நச்சிக் கொண்டிருக்கிறார் உன் புருஷன் எங்க..? போன் பண்ணுனியா இல்லையா..? எங்க இருக்கான்னு கேளு.. எப்போ வருவான்னு கேளு.. அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை.


கேசவ் மனதிற்குள் கதிரவன் இங்க வந்துட்டான் குடும்பத்தில் இருக்கிற ஒட்டு மொத்த டிக்கெட்டும் இங்க தான் இருக்கு இவ மட்டும் எங்க போய் தொலைஞ்சா ..குழந்தை வேற அழறாளே..நான் ஒரு முட்டாள் போய் கூப்பிட்டுட்டு வந்திருக்கணும் பைத்தியக்காரி நடந்து வந்துட்டு இருக்கா போல ஒருவேளை அப்படித்தான் வருகிறாரகளோ என்று ஒரு பக்கம் மனம் அவளுக்காய் பரிதாப பட்டது.


சற்று நேரத்தில் கார்த்தியின் கார் உள்ளே வர கணவன் மனைவி போல் இருவரும் காரில் இருந்து இறங்கினர்.


கீத்துவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது என்றால் கேசவ்வின் முகம் சிறுத்தது.


ஜோடி பொருத்தம் அவ்வளவு பாந்தமாக அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் பிறந்ததைப் போல இருந்தது. தன்னை ஒரு முறை குனித்து பார்க்க சற்று தொப்பை தள்ளிய வயிறும் முன் பக்க வழுக்கையுடன் அவளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதது போல் தோன்றியது.


எரிச்சலுடன் எழுந்தவுடன் அவள் அருகில் சென்று.. ஏய் அறிவு கெட்டவளே எங்கடி போய் சுத்திட்டு வர்ற குழந்தை எவ்வளவு நேரமா உன்ன தேடிட்டு இருக்கா இந்தா குழந்தையை பிடி என்று குழந்தைக்கு அவளின் கையில் திணிக்க.


குழந்தை இப்படி குடு சொர்ணா என்றபடி அவள் கையில் இருந்து மகி பாப்பாவை கார்த்தி வாங்கிக் கொண்டான்.


ஏய் என் குழந்தையை நீ ஏன் வாங்கற இப்படி என்கிட்ட குடு.


என்ன அண்ணா உங்க பிரச்சனை.என்றவன் சொர்ணா வா நாம போகலாம்.அவனுடன் நகர்ந்தவளை ஏய் நில்லு எதுக்கு அவனோட போற..



சொர்ணா அவர்கிட்ட சொல்லு எதுவா இருந்தாலும் இன்னைக்கு நைட் என்னோட அப்பா கிட்ட‌ பேசிக்க சொல்லு இப்போ வா என அவளை உரசியபடியே நடந்தான்.


கார்த்தி ஏன் இப்படி வித்தியாசமா பிகேவ் பண்ணற கொஞ்சம் தள்ளி நட எனக்கு ஒரு மாதிரி இருக்கு எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க அங்க பாரு உன் வைஃப் பல்லை கடிச்சுகிட்டு நம்மளை பாத்துட்டு இருக்கா.. என் புருஷன் விட்டா இப்பவே வந்து என்னை வெட்டி போட்டுருவாரு என பற்களை கடித்த படி கோபமாக பேசினாள்.


ஷ்ஷ்.. உன்கிட்ட நான் என்ன சொன்னேன் நீ வாயை திறக்க கூடாது இங்க இருந்து போற வரைக்கும் நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்காக மட்டும் தான் காட இட்..


இன்னைக்கு ஃபுல்லா என்னை சகிச்சுக்கோ அதுதான் நீ கல்யாணத்தை நிறுத்தியதற்கான பனிஷ்மென்ட்.

என்று அன்று முழுவதுமே அவளை விட்டு சற்று கூட நகரவில்லை சாந்திக்கும் பெருமாளுக்குமே கூட என்ன ஆச்சு இந்த பையனுக்கு என்று கவலையாக பார்க்க ஆரம்பித்தனர்.


சொர்ணா கணவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபத்தில் அய்யனாரை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தான்.


இந்த பிரச்சனைகளுக்கு நடுவே அமுதாவின் கணவன் ஈஸ்வரை அழைத்து தர்ஷனை பற்றிய விவரங்களை சேகரிக்க கூறினான்.


ஈஸ்வருக்கு தெரிந்த நண்பர்கள் கார்த்திக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக தர்ஷன் எங்கிருந்தாலும் தூக்கும் படி கட்டளையிட்டான்.


இரண்டு மணி நேரத்திலே அதுவும் நடந்தது அவனிடம் இருக்கும் போட்டோக்கள் பென்டிரைவ் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து முற்றிலும் அழித்தவர்கள் அவனை நன்றாக வெளுத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் பெண்களை தவறாக சித்தரிக்கிறான் என்று கம்பளைண்ட் செய்து உள்ளே வைத்தனர் . இனி அவன் எந்த பெண்களிடமும் வாலாட்டவாறு பார்த்துக் கொள்கிறோம் என காவல்துறை நண்பர்களும் உறுதி கூறினர்.


சொர்ணாவின் வாழ்க்கையில் இருந்த ஒரு தடைக்கல் நகர்ந்தது இரண்டாவது அவள் கணவனின் பொறாமையை தூண்டி விட்டிருக்கிறான் ..தன்னுடைய மனைவியின் அருகில் அவன் எப்படி நிற்பது சென்று தோன்றிவிட அந்தப் பக்கம் கார்த்தி நின்றால் இந்த பக்கம் அவள் கணவன் நின்றான்.


கார்த்தியின் மனதிற்குள் சிரிப்பு வந்தாலும் கூட வேறு வழியில்லை கசப்பு மருந்தை உட்கொண்டால்தான் சிலருக்கு பிடித்திருக்கும் நோய் தீரும்.


விசேஷம் நல்லபடியாக முடிந்து அமுதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் பின்னோடு அவளது கணவனும் ஓடி வந்து விட்டான் .


எல்லோரும் கேலி கிண்டல் செய்தாலும் அதை பொருட்படுத்திக் கொள்ளவே இல்லை மனைவியின் அருகில் இருந்து அவனது தேவைகளை எல்லாம் பார்த்து பார்த்து செய்தான்.


இதை யார் கவனித்தார்களோ இல்லையோ கீத்து நன்றாகவே கவனித்துக் கொண்டிருந்தாள்.


அந்தப் பக்கம் அமுதாவின் வாழ்க்கையை பார்த்து கார்த்தி தங்கை விஷயத்தில் அநியாயம் செய்யவில்லை.


லதாவிற்கு தான் என்று நினைத்தபடி திரும்பினாள் லதாவை ஒட்டியபடி கார்த்தி நின்று கொண்டிருந்தான் எரிச்சல் வந்தது எதுக்கு காலையில் இருந்து அவள் பின்னாடியே சுத்திட்டு இருக்காரு அக்கா என்ற மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விட்டது.


இதை இப்படியே விட்டால் ஆகும் காரியமில்லை என்று உணர்ந்தவள் நேராக கணவன் இடத்தில் சென்று கார்த்தி இப்படி வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சிடுசிடுத்தாள்.


எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் வேலை இருக்கு.. என்ன வேலை என்றவள் லதாவை ஆக்ரோஷமாக முறைத்து விட்டு அவருக்கு தான் புத்தி இல்லனா உங்களுக்கும் புத்தி இல்லையா அக்கா‌‌ என்றாள்.



சுவாரசியமாக இருவரையும் பார்த்த சொர்ணா கார்த்தியின் அருகே என்ன நடக்குது..?


இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே மெயின்டன் பண்ணு ஒரே கல்லுல ரெண்டு பேரும் மாங்கா அடிக்கலாம் என்றான்.


புரியலை கார்த்தி ..


உனக்கு புரியாது அப்படியே இரு அவ என்ன பேசினாலும் ரியாக்ட் பண்ணாத என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்.



அதை பார்த்ததும் கீத்து மேலும் பொங்கி விட்டாள் ..இரு இப்பவே போய் மாமா கிட்ட என்ன சேதின்னு கேட்டுட்டு வர்றேன் என்று கோபமாக நகர்ந்தாள்.


அதே நேரத்தில் லதாவின் கணவனும் பெருமாளை தான் தேடி ஓடிக் கொண்டிருந்தான்.


கணவனை கம்ப்ளைன்ட் செய்ய மாமனாரிடத்தில் வேகமாக சென்றாலும் அவனை விட்டுக் கொடுக்க மனமில்லை அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை இருக்கு அப்படி எல்லாம் நம்ம புருஷனை வளைத்து போட மாட்டா.. அதான் நாளைக்கு ஊருக்கு போகப்போறாளே..


ஆனால் எப்படி தீடிர்னு இப்படி பேட்ஜ் அப் ஆனாங்க..கல்யாணம் வேணாம்னு நிறுத்தியவனோட இவ்வளவு க்ளோசா..? என் யோசிக்கப்படியே வந்தவள் பெருமாள் அருகில் கேசவ் நின்று பேசிக் கொண்டிருக்கவும் கேசவ் நகர்ந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என சற்று தள்ளி நின்று கொண்டாள்



சார் இங்க என்ன நடந்துட்டு இருக்கு என பெருமாளிடம் கேசவ் சண்டையிடுவது போல கேட்டார்.


என்ன கேள்வி தம்பி இன்னைக்கு நம்ம வீட்ல பங்க்ஷன் சொந்தபந்தம் எல்லாம் இருக்கு நைட்டு கறி விருந்து அதுக்கு மேற்பார்வை பாத்துட்டு இருக்கேன் என்று கூலாக கூறினார்.


நான் அதை கேக்கல உங்க பையன் என் மனைவி கிட்ட நடந்துக்கிற முறையை சொன்னேன் அவன் தான் அவளை வேணான்னு சொல்லிட்டான்ல இப்போ என்ன அடுத்தவன் பொண்டாட்டி மேல புதுசா அக்கறை பாசம் .


அதை நீ அவன் கிட்ட தானே கேட்கணும்.


பாருங்க சார் பெத்தவர் உங்ககிட்ட தான் நான் கேட்க முடியும் அவன் கிட்ட எல்லாம் கேட்க முடியாது.


அப்போ இப்படி வந்து உட்காருங்க சில விஷயங்களை நமாளே தெளிவா பேசிடுவோம் என்று கூறியவர் ஒரு நாற்காலியை போட்டு கேசவ்வை அமர வைத்துவிட்டு அவரும் எதிரில் அமர்ந்தார்.


முதல்ல நான் கேக்குறதுக்கு தெளிவா பதில் சொல்லுங்க அப்புறமா நீங்க கேக்குறதுக்கு பதில் சொல்றேன் என்று பெருமாள் பிடிகையுடன் ஆரம்பித்தார்.


என்ன சார் அது.


எப்பவுமே லதா மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறை எல்லாம் கிடையாதே.. அடிக்கிறதும் சூடு வைக்கிறதும் இதுதானே உங்களோட வழக்கம் இன்னைக்கு என்ன புதுசா என்று நக்கல் செய்தார்.


சார் அது எங்க குடும்ப விஷயம் மூணாவது மனுஷன் நீங்க தலையிட வேண்டாம்.


அப்போ போலீஸ் வந்து தலையிட்டா பரவால்லையா? நீங்க மத்திய அரசாங்கத்தில் வேலை செஞ்சிட்டு இருக்கீங்க பொண்டாட்டியை கொடுமை படுத்துறீங்கன்னு என் மருமக போயி கம்ப்ளைன்ட் பண்ணினா என்ன ஆகும்னு தெரியும் இல்ல உங்களுக்கு வேலையும் இருக்காது மரியாதையும் இருக்காது ஜாக்கிரதையா இருந்துக்கோங்க என்று மிரட்டியவர்.



இங்க பாருங்க சார் எங்க பொண்ணு வந்து எங்க கிட்ட சொல்லிடுச்சு உங்க கூட இனிமே வாழ முடியாதுன்னு என் பையனுக்கும் கல்யாண வாழ்க்கை அப்படி ஒன்னும் திருப்தியா அமையல அதான் ரெண்டு பேரையும் அத்து விட்டுட்டு அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம் உங்க சைடு இருந்து நீங்க விவாகரத்து கொடுக்குறீங்களோ இல்லையோ என் மருமக உடம்பை கொண்டு போய் ஒரு டாக்டர்கிட்ட காமிச்சி சர்டிபிகேட் வாங்கி அதை வைத்து அப்ளை பண்ணாலே போதும் ஈசியா விவாகரத்து கிடைத்துவிடும்.


என் பையனுக்கு விவாகரத்து கொடுக்க அந்த பொண்ணு தயாரா இருக்கு அதனால நீங்க ஒதுங்கி போய்க்கோங்க என்ன என அதிர்ச்சி அடைந்தவன் சார் இதெல்லாம் அநியாயம் சார் கண்டிப்பா இதுக்கு லதா ஒத்துக்க மாட்டா.



லதா தான்பா இதை சொல்லுச்சு நீ வேணும்னா லதா கிட்ட போய் பேசிக்கோ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.


அடுத்ததாக கேசவ் லதாவை தேடி ஓடினார் மாமனாரிடம் பேசுவதற்காக வந்த கீத்து இதை கேட்டதும் அப்படியே ஆடிப் போய்விட்டாள்.


நெஞ்சில் கை வைத்த படி என்ன நடக்குது இந்த வீட்டில் அடேய் கார்த்தி நீ எங்கடா இருக்க என்றபடி இவள் ஒரு பக்கம் ஓடினாள்.
 
Top