எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மரம் தூவும் மழை -15 இறுதி அத்தியாயம்

@38

Moderator
15

அவர்கள் நகர்ந்ததுமே உடனடியாக கார்த்திக்கு தகவல் தெரிவித்துவிட்டார் பெருமாள். எல்லாமே அவனின் திட்டம் தான்.

ஏற்கனவே சொர்ணாவிடம் கார்த்தி தெளிவாக கூறிவிட்டான் கணவன் ஊருக்கு அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்லி விடு.

எதுக்கு அப்படி சொல்லணும்..

சொன்னதை செய் மேலே பேசாத.
நான் சொன்னபடி செஞ்சா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு.

கிப்ட்டா என்னது..?

நான் சொன்னதை செஞ்சு முடி கிப்ட் உன்னை தேடி வரும் என்றபடி சென்று விட்டான்.

அவன் சென்ற சில நொடிகளிலே கணவன் அவள் இருப்பிடம் வந்தவன் ஃபங்ஷனுக்கு தானே வந்த முடிஞ்சு போச்சுல்ல வா ஊருக்கு போகலாம் என அழைத்தான்.

கார்த்திக்கிற்கு ஜோசியம் தெரியுமா என்ன என்று தான் ஆச்சரியம் கொண்டாள்.

இல்லங்க நான் வரல அத்தை வீட்டில் கொஞ்ச நாள் இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

கொஞ்ச நாள் இருக்கலாம்னு நினைக்கறியா இல்லை மொத்தமாவே இங்கே தங்கிடலாம்னு இருக்கறியா.

என்ன.. நீ போட்டு வைத்திருக்கிற திட்டம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கறியா..? என்று கோபம் கொண்டவன்.

அடுத்த நொடியை இங்கே‌ பார் லதா நான் உன்கிட்ட இதுவரைக்கும் நடந்தது எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்குறேன் தயவு செஞ்சு போலீஸ் ஸ்டேஷன் விவாகரத்து எல்லாம் வேண்டாம், இனி உன்னை நல்லவிதமா நடத்தறேன்.

இதுக்கப்புறம் உன்கிட்ட கடுமையா நடந்தா நீ போலீஸ் ஸ்டேஷன் போ..நானே உனக்கு விவாகரத்து தரேன்.இது நம்ம மகி மேல சத்தியம்.நான் திருந்தறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காமலே நீ எனக்கு தண்டனை கொடுப்பது நியாயம் கிடையாது.ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சியவன் ஒரு கட்டத்தில் அவள் காலிலேயே விழுந்து விட்டான் லதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை ஆனாலும் கார்த்தி சொன்னபடி செய்வோம் என முடிவெடுத்தவள் எதுவா இருந்தாலும் காலைல யோசிச்சு சொல்றேன் என்று முடித்துக் கொண்டாள்.

காலை வரை திக் திக் மனதுடன் அங்கேயே காத்துக் கிடந்தான் கேசவ்.

கார்த்தி..கார்த்தி எங்கயிருக்க என்று கத்திய படியே அறைக்குள் வர அங்கே கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே எதுக்கு இப்படி ஏலம் போட்டுட்டு வர்ற என்ன பிரச்சனை உனக்கு குரலில் முடிந்த அளவு கடுமையை ஏற்றி இருந்தான்.
சத்தம் கேட்டு சிலர் எட்டிப்பார்க்க கதவை தாள் போட்டவன்.மெதுவா பேசற பழக்கமே இல்லையா உனக்கு என்றான்.

அதையெல்லாம் காதில் வாங்காதவளாக உன் அப்பா ஏதேதோ லதாக்கா கணவர்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க.

அப்படியா..என ஆச்சர்யம் காட்டியவன் என்ன சொன்னாங்க..?

அது.. அதெல்லாம் சொல்ல முடியாதா..ஆமா உனக்கு தான் லதாவை பிடிக்காதே இப்போ என்ன புதுசா ரொம்ப ஓவரா அவங்ககிட்ட நடந்துக்கற.

எனக்கு லதாவை பிடிக்காதுன்னு உனக்கு யார் சொன்னது..என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி எனக்கொரு காதல் தோல்வி இருக்குன்னு சொல்லியிருக்கேன்ல அதோட நாயகி சொர்ணலதா தான்.

என்ன என அதிர்ந்தவள் அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்தின.

என் காதலிக்கு என்னை கல்யாணம் செய்துக்கறதுல விருப்பம் இல்லை அதனால நிறுத்தினேன்.

அதான் இப்போ கல்யாணம் பண்ணனும் ஆசை பட்டதும் அதுக்கும் ஒத்துகிட்டியா..ச்சே என்ன மாதிரி பொம்பளை அவ.

கீத்து வார்த்தையை கவனமா பேசு.

அப்படிதான் பேசுவேன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு அவளை கல்யாணம் பண்ணிக்க நினைப்ப.

நீதானே மூச்சுக்கு மூன்னுரு தடவை டிவோர்ஸ் வேணும் டிவோர்ஸ் வேணும்னு கத்திட்டு இருந்த இப்ப கொடுக்கிறேன் வாங்கிக்கோ .. அப்புறம் நான் யாரை கல்யாணம் பண்ணினா உனக்கு என்ன.

அப்படியெல்லாம் உன்னை விட முடியாது கார்த்தி..என் அப்பாவை கொஞ்சம் நினைச்சிபாரு.

நீயே வேணாம்னு சொல்லறேன்..உன் அப்பாவை ஏதுக்கு தேவையில்லாம நினைக்கனும்.

கார்த்தி பேசாத அப்புறம் கோபம் வந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ..

பெருசா என்ன பண்ணிடுவ..

கத்துவ, என்னை அடிப்ப,ரூம்ல இருக்கிறதை யெல்லாம் போட்டு உடைப்ப.. எல்லாரும் இதை பார்த்தா உன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்குவதற்கு எனக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும் என்று பேசி முடிக்கும் முன்னே ஆவேசமாக அவனை கட்டி அணைத்து அவளது இதழில் அவள் இதழை பொருத்தினாள்.

அவளது வேகத்திற்கு ஈடுகொடுக்க முயன்று தோற்றுப்போய் அவளிடம் சரணாகதியானான்.

எவ்வளவு நேரம் இந்த யுத்தம் என்று தெரியாது ஆனால் முடித்து வைத்தது அவனே.அவள் சோர்ந்து துவளும் வேளையில் அவனாக தொடங்கி வைத்தான்.

அவன் போதும் என்று விடும் வேளையில் இவள் புதிய தேடலை தொடங்கியிருந்தாள்.ஒருவர் மாற்றி ஒருவர் மற்றொருவரிடம் தேடலைத்தொடங்க அங்கே அழகிய இல்லறம் நடந்தேறியது
அவர்களின் ஓராண்டு வாழ்க்கையை ஒரே நாளில் வாழ்ந்துவிட துடித்தனர்.

விடியா இரவாக இருக்கக்கூடாதா என இருவருமே ஏங்கித்தவிக்கும் கூடலாக இருந்தது.

தேடலை முடித்து ஆய்ந்து ஓய்ந்து இருவரும் விலகிய போது கீத்துவின் முகத்தை வெட்கம் வந்து பூசிக்கொண்டது.

ஓய் பொண்டாட்டி வெட்கப்படறியா என்ன..?எனக்கேட்கவும் மீண்டும் அவனது மார்பிலே தஞ்சம் கொண்டாள்.

பிறகு தான் நினைவு வந்தவளாக வீட்ல விருந்து இருக்கே நம்மளை தேட மாட்டாங்களா..?

இல்ல..அப்பா இருக்காங்க பாத்துப்பாங்க. யாரையும் நம்ம ரூம் பக்கம் கூட விட மாட்டாங்க என்று விஷம புன்னகையுடன் கூறினான்.

அப்பா என்றதும் அவளின் முகம் வாடிவிட்டது.

என்னாச்சு இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த என்று அவளின் முகத்தை தூக்கி பார்க்கவும்.

அங்க மாமா அந்த அண்ணா கிட்ட..என அதற்கு மேல் கூறாமல் நிறுத்தினாள்.

ஏன் நிறுத்திட்ட முழுசா சொல்லு என்றவன் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா கொஞ்சமாவது புருஷனை நம்புடி என கேலி போல் கூறினாலும் அதில் நிரம்பவே வருத்தம் இருந்தது.

உன்ன பத்தி இதுவரைக்கும் நீ எதுவுமே என்கிட்ட சொன்னதில்ல அப்படி இருக்கும் போது நான் எப்படி உன்னை நம்ப முடியும் லதா அக்கா தான் உன்னோட எக்ஸ் லவ்வர் என்கிற விஷயத்தையே இன்னைக்கு தான் சொல்லி இருக்க.

ம்ம்..தப்பு தான் ஒத்துக்கறேன் என்றவன் இதுவரைக்கும் நீயும் நானும் மனசுவிட்டு என்னைக்குமே பேசிக்கல அது தான் நம்ம பிரச்சனைக்கு காரணம்.

லதாவை ஒருதலையாக காதலித்ததில் இருந்து திருமணத்திற்கு ஆசையாக ஓடி வந்தது முதல் திருமணம் நின்றது வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

பொறுமையாக கேட்டுக் கொண்டவள் அவளின் காதல் தோல்வியை பற்றியும் மெல்ல ஆரம்பித்தாள்.

அதை தடுத்த கார்த்தி கீத்து நீ என்னை பற்றி தெரிஞ்சுக்கணும்னு தான் என் பாஸ்ட் பத்தி சொன்னேனே தவிர எனக்கு உன்னோட பாஸ்ட் பத்தி தெரிஞ்சுக்கணும் எந்த ஒரு ஆர்வமும் இல்லை .

உனக்கு அது வலியை கொடுக்கும் என்றால் நீ சொல்லவே வேண்டாம் என்று கூறவும்.


இல்ல கார்த்தி இதை யார்கிட்டயாவது நான் பகிர்ந்துக்கிட்டால் மட்டும் தான் என்னால இயல்பா இருக்க முடியும் இல்லன்னா வாழ்க்கை முழுதும் உறுத்தலோட வாழனும்.


எல்லா பொண்ணுங்களை போல தான் நானும் டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ்.. நான் கொஞ்சம் ஸ்பெஷலான பிரின்ஸஸ்.

குழந்தையா இருக்கும்போதே அப்பா அம்மா தவறிவிட்டதால அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை எனக்காக நிறைய தியாகங்கள் செய்து என்னை வளர்த்தார்.

அதனால தானோ என்னவோ எனக்கு அப்பானா அவ்வளவு பிடிக்கும் அப்பாவை விட்டு எங்கேயுமே நகர மாட்டேன் அதே மாதிரியான பாசம் அதே மாதிரியான அக்கறை உள்ள ஒருத்தனை என் காலேஜ் டைம்ல மீட் பண்ணினேன்.

ஏதோ ஒன்னு சம்திங் டிபரென்ட் அவன்கிட்ட இருந்தது. பேசும் போது பழகும் போது என் அப்பாவை‌ ஞாபகப்படுத்தும் அதான் என்னை அறியாமலே நான் காதல் விழுந்துட்டேன்.

அவனும் வெல் செட்டில் பேமிலி நானும் வெல் செட்டில் சைல்டு..எங்க காதலுக்கு பெருசா எதிர்ப்பு இருக்காதுன்னு தைரியமா நம்பினேன்.

படிப்பு முடிஞ்சது அவன் பிசினஸ் பாக்க போயிட்டான்,எனக்கு அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க.
எப்படி மாப்பிள்ளை பார்க்கணும்னு என்கிட்ட கேட்கவும் தான் நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு சொன்னேன் .

ஆனா அப்பா கோபப்படுவாங்க,ஏதாவது காயப்படுத்தற மாதிரி சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தா ரொம்ப கூலா சிரிச்சுக்கிட்டே அப்போ பையனை வந்து அப்பா கிட்ட பேச சொல்லும்மானு சொல்லிட்டாங்க .. யோசித்துப் பாரு கார்த்தி எவ்வளவு சந்தோஷத்தை அனுபவிச்சிருப்பேன்னு.

அதே சந்தோஷத்தோட அவனை பாக்க போனேன்.. ஆனா அவன் கல்யாணத்தை பத்தி துளி கூட யோசிக்கலை. அதே சமயம் உன்னை விட்டுக் கொடுக்கவும் மனசு வரல கொஞ்ச நாள் லிவிங் டு கெதர் லைப்ல இருக்கலாம் அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்னு சொன்னான்.

என் மனசு அப்படியே உடைஞ்சு போச்சு அது போல முறையற்ற வாழ்க்கை என்னைக்குமே எனக்கு செட் ஆகாது, என் அப்பாக்கு தெரிஞ்சா உயிரே விட்டுடுவாரு அதனால உறுதியா நான் மறுத்தேன்.

ஆனா அவன் ஓகே அப்படின்னா லெட்ஸ் பிரேக் அப்னு ஒற்றை வாக்கியத்துல சில வருஷ காதலை முறிச்சிகிட்டான்.

ஆனா அவனை பிரிஞ்ச பிறகுதான் அவனை நான் ரொம்ப மிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.. வாழ்க்கையில் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு கூட நினைச்சேன் .அவன் கேட்டது போல அவனோட வாழ்ந்திருந்தா தான் என்னன்னு கூட யோசிக்கிற அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தேன்.

மறுபடியும் அவனை சந்திக்க முயற்சி பண்ணிட்டு இருக்கும் போது தான் அவன் வேறொரு பொண்ணோட ரிலேஷன்ல இருக்கற விஷயம் எனக்கு தெரிஞ்சது முழுசா உடைந்து போயிட்டேன்.

அது எப்படி கார்த்தி மூனு வருஷம் லவ் பண்ணினான்.. ஒரு நாள் அவனோட படுக்கைக்கு போக மறத்ததுமே அடுத்த நிமிஷம் வேற ஒரு பொண்ணை மாத்திக்க முடிஞ்சுது.


என்னால ஏத்துக்குவே முடியல பைத்தியம் பிடிக்கறது போல இருந்தது..தூங்கல ,சாப்பிடல அழுதுகிட்டே இருக்கணும் போல தோணுச்சு ஒரு கட்டத்தில் எதுக்கு வாழனும் யாருக்காக வாழனும்ங்கற மாதிரி தோண ஆரம்பச்சது..

அந்த சமயத்துல ஷாப்பிங் மால்ல அவனை ஒரு பொண்ணோட பார்க்கவும் இனி வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லனு நினைச்சி பழம் கட் பண்ணற கத்தி எடுத்து கையை கிழிச்சு கிட்டேன்..அதை பாத்து அப்பாவுக்கு அட்டாக் வந்து
அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே என்று கண்ணீருடன் கூறி முடித்தாள்.

பொறுமையாக கேட்டுக் கொண்டவன் அவள் கண்களை துடைத்து விட்டு ..கீத்து அவன் உன் மேல வச்சிருந்தது லவ்வே இல்லை ஜஸ்ட் லஸ்ட் ..அது மட்டுமே உன்கிட்ட இருந்து எதிர்பார்த்திருக்கான்..

அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டேன்னு தெரிஞ்சதுமே எங்க அது கிடைக்குமோ அங்க அவன் போயிட்டான்.

அவனுக்காக நீ கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமே வேணாம் இனிமே எந்த நேரத்திலும் அவனை பத்தி நீ நினைக்க கூடாது புரியுதா இப்போ தூங்கு என மார்பில் கிடந்தவளை தட்டிக்கொடுத்து உறங்க வைத்தான்.

அவனுக்கும் நெடு நாளைக்குப் பிறகு மிக நல்ல உறக்கம் நிறைவான உறக்கம்.

அவனுடைய ஆயுள் இன்றோடு அப்படியே அவளுடன் முடிந்து விட்டாலும் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருப்பான் அந்த அளவிற்கு நிறைவான ஒரு வாழ்க்கையை அவளுடன் வாழ்ந்துவிட்டான்.

மறுநாள் அனைவருக்கும் அழகான பகலாக விடிந்திருந்தது.

கீர்த்தி நெடுநாளைக்குப் பிறகு மாத்திரை இல்லாமல் அயர்த்து உறங்கிக் கொண்டிருக்க அவளை கண்சிமிட்டாமல் பார்த்து ரசித்தவன் நெற்றியில் முத்தமிட்டுபடி எழுந்தான் .

குளித்து முடித்து நேராகச் சென்றது லதாவை காணத்தான் ஊருக்கு செல்வதற்காக பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தவளிடம் ஒரு நிமிஷம் இப்படி வெளியே வா என அழைக்கவும் என்ன கார்த்திக் என்று வந்தாள்.

எங்க கிளம்பிட்ட..?

ஊருக்கு கார்த்தி அவர் கிட்ட நல்ல மாற்றம் ரொம்ப தேங்க்ஸ் என்று சந்தோஷமாக கூறினாள்.

இல்ல நீ இன்னைக்கு போக கூடாது இன்னும் நாலு நாள் இங்கே தான் இருப்பேன்னு உன் கணவரை பிடித்து வை இந்த நான்கு நாட்களும் அவர் உன் பின்னாடி சுத்தறதை என்னோட அம்மா பாக்கணும் அப்போ தான் அவங்க நிம்மதியா இருப்பாங்க.

கார்த்தி அது வந்து.. அவரோட வேலை.. லீவு.. என்று இழுக்க பொண்டாட்டி பிள்ளைக்காக பத்து நாள் கூட லீவ் போடலாம் தப்பு இல்ல என்றபடி நடந்து விட்டான்.

அதன் பிறகு எங்கே பேசுவது கணவரிடம் இன்னும் நான்கு நாட்கள் இங்கே தான் இருக்கப் போகிறேன் என்று பீதியை கிளப்பி விட்டாள்.

அவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது ஏற்கனவே அவனது பிறந்த வீட்டில் அவனை யாரும் மதிப்பதில்லை ஊதாரி என்று பெயரெடுத்து விட்டான்.

இப்பொழுது மனைவியும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் அவன் எங்கே செல்வான்.

வேலை வேண்டுமானால் பெத்த வேலை அதற்கான மரியாதை வேண்டுமானால் அலுவலகத்தில் கிடைக்கும்.

அலுவலகத்தை தாண்டி வெளியே வந்து விட்டால் ஒரு மனிதனாக அவனை மதிக்க வேண்டுமே.. அதற்கு குழந்தை குடும்பம் என்று இருந்தால் தானே சாத்தியம் .


அதை கெடுத்துக் கொள்ள அவன் துளியும் விரும்பவில்லை அதனால் லதாவை அனுசரித்துப் போக முடிவு எடுத்தவன் அவளின் பின்னே சுற்ற ஆரம்பித்தான்.

சாந்திக்கு லதாவின் கணவரின் மாற்றம் மன நிறைவை கொடுத்தது அதனால் மகனின் மீது இருந்த கோபம் கூட மெதுவாக மாறத் தொடங்கியிருந்தது.


அந்தப் பக்கம் அமுதாவின் வாழ்க்கையும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த பக்கம் லதாவின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது .

முதல் முறையாக இரு பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன் என்ற பெயர் வீட்டிற்குள் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அந்த நிம்மதியே கார்த்திக்கிற்கு போதுமானதாக இருந்தது வெளி உலகம் என்ன சொன்னால் என்ன வீட்டிற்குள் இருக்கும் உறுப்பினர்கள் அவனை நம்பினால் போதும்.

மறுநாளே கீர்த்தனா அவளின் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் அனைத்தையும் தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தாள் பதறி அடித்து அவளிடம் வந்தவள் என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்கவும் இனிமே இதெல்லாம் எனக்கு தேவையில்லை என்று சிரித்தபடி கூறினாள்.

பைத்தியம் தாண்டி நீ மாத்திரை இல்லாம தூங்கவே மாட்ட எல்லாம் மாத்திரையையும் ஒட்டுக்கா போட்டு கொளுத்தினா இன்னைக்கு என்ன பண்ணுவ.

அதான் நீ இருக்கியே..

விளையாடாத..

யார் விளையாடறது நேத்து நான் எப்படி தூங்கினேனா என்று கேட்கவும்.


நேற்றைய நினைவு ஞாபகத்துக்கு வர வெட்கப் பட்டவன்..அடியேய்..

கண்ணடித்தவள் அந்த மெத்தட்ல தான் டெய்லி தூங்க வைக்கப் போற நானும் தூங்க போறேன் என்று விட்டு அவன் அருகி வந்து தோளின் மேல் சாய்ந்து கொண்டவள்.

டாக்டர் ஒவ்வொரு முறையும் எனக்கு மருந்து எழுதும் போது என்ன சொல்லுவாரு மருந்து மாத்திரை மட்டும் தான் நான் கொடுக்க முடியும் இதிலிருந்து போராடி வெளியே வர வேண்டியது நீதான்னு சொல்லுவார்ல அதான் இனிமே மருந்து மாத்திரை இல்லாம என் மனச்சிதைவு நோயோட நான் போராடி மீளப் போறேன்.

கண்டிப்பா உன்னால முடியும் இனிமே மருந்து மாத்திரை இல்லாம உன்னை தூங்க வைக்க வேண்டியது என்னோட வேலை என்னை கவனிச்சிக்க வேண்டியது உன்னோட வேலை என்று மூக்கோடு மூக்கு உரசி அவள் எதிர்பாராத வண்ணம் மென்மையாக இதழில் முத்தமிட்டு விலகினான்.


பெருமாளுக்கு பிள்ளைகளின் நிறைவான வாழ்க்கை மனதை திருப்தியடைய செய்யவும் குலதெய்வ கோவிலுக்கு அனைவருமே சென்று வரலாம் என நினைத்து வாகனம் ஏற்பாடு செய்தார்.

அனைவருமே குடும்பம் சகிதமாக கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு பூஜையை முடித்துக் கொண்டு ஆற அமர ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

கார்த்தி லதா அருகே வந்தவன் உனக்கு நான் ஒரு கிப்ட் தரேன்னு சொல்லி இருந்தேன் இல்ல என்றவன் அவனது மொபைல் போன் எடுத்து ஒரு புகைப்படத்தை அவளிடம் காட்டினான். உடம்பு முழுக்க கட்டுக்கள் போட்டு யார் என்றே தெரியாத அளவிற்கு ஒரு மனிதன் உயிரற்ற சடலம் போல கிடைக்க அச்சோ யார் இது என பரிதாபமாக கேட்டாள்.

எவனோ பக்கத்து ஊர் காரனாம் பேரு பிரியதர்ஷன்னு பேசிக்கிறாங்க என்று வந்த புன்னகையை மேலுதடு கடித்து அடக்கினான்.

ஆஆகார்த்தி என அவளின் மகிழ்ச்சியை கண்களை விரித்து இரு கரம் கொண்டு வாய் பொத்தி காண்பிக்க..

இனிமே அவன் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும் வேற எந்த பார்ட்டும் வேலை செய்யாது உன் கிட்ட மட்டும் இல்ல வேற எந்த பொண்ணு கிட்டயும் அவனால வாலாட்ட முடியாது ஹேப்பி..


மகிழ்ச்சி அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது..

கார்த்தி உன்னை நான் அவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டிவிட்டும் கூட நீ என் வாழ்க்கைக்காக எவ்வளவு செஞ்சு இருக்க இதுக்கெல்லாம் கைமாற நான் என்ன செய்யப் போறேன் என்று கண் கலங்கவும்.

ஒன்னும் பண்ண வேண்டாம் இனியாவது உன் புருஷனை உன் கைக்குள்ள வச்சுக்க பாரு அவர் கைக்குள்ள நீ போகாத என்று புத்தி கூறினான்.

சரி என்பது போல் தலையசைத்தாள்.
இவர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கேசவ் வேகமாக அவர்களிடத்தில் ஓடி வந்தான்.

என்ன தம்பி அண்ணிகிட்ட என்ன பேசிட்டு இருக்க என்று முறை வைத்து பேசினான்.

அவனின் பயத்தைப் பார்த்து சிரித்த கார்த்தி பொசுக்குன்னு தம்பி ஆக்கிட்டீங்க நீங்க அண்ணன் ஆகிட்டீங்க ,சொர்ணலதாவை அண்ணினு சொல்லிட்டீங்க அப்போ இந்த தம்பி அண்ணனுக்கு ஏதாவது செய்யணும் தான என்று குதர்க்கமாக சொல்லவும்.

என்ன என்று அதிர்ச்சியில் கேசவ் கார்த்தியை பார்த்தான்.

சட்டையின் பின்புறம் சொருகி இருந்த ஒரு பத்திரத்தை கையில் எடுத்து அவரிடத்தில் கொடுத்தவன்.

இது நான் புதுசா ஆரம்பித்து இருக்கிற பிசினஸ் இதுல உங்களை ஈக்குவல் பார்ட்னரா போட்டு இருக்கேன் ஹேப்பி .

உங்களுக்கு பிசினஸ் புடிபடற வரைக்கும் உங்க வழக்கமான வேலையை பாருங்க, நல்லா புரிஞ்சதுக்கப்புறம் அந்த வேலையை விட்டு முழு நேர பிசினஸ்மேனா மாறிக்கோங்க என்று சொல்லவும்.

கேசவிற்கு தோன்றிய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது அவனது தாய் தந்தை கூட நம்பாத ஒரு விஷயத்தை இவன் சாதாரணமாக செய்திருக்கிறான் அடுத்த நொடியே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

நீ நிஜமாவே என் தம்பி தாண்டா என் தம்பி தான்..என்று கண்கலங்கினான்.

என்ன அண்ணியாரே நீங்க எதுவும் பேச மாட்டீங்களா என திக்பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்த லதாவிடம் கேட்டான்.

அவளுக்கு கேட்க தோன்றிய விஷயம் ஒன்றே ஒன்றுதான்..பிஸினஸ்னா பணம் நிறையா வேணுமே அது எப்படி எங்களால அதற்கு மேல் அவளால் கேட்க முடியவில்லை.

இது எல்லாமே உங்க பணம்தான்..என்றவன் என்ன புரியலையா பாட்டியோட நகைகள் எல்லாத்தையுமே என் மனைவிக்கு தரனும் என்பதற்காக அப்பா புதுசா மாத்தி வெச்சிருந்தாங்க.

திருமணம் முடிந்ததும் மருமகளை முறையாக வீட்டுக்குள் அழைக்கும் பொழுது அந்த நகைகளை காமிக்க சர்ப்ரைஸா வச்சிருந்தாங்க ஆனா கல்யாணம் நடக்கல உனக்குன்னு செஞ்ச நகைகளை வேற யாருக்கும் கொடுக்கவும் அப்பாக்கு தோணல அதனால அதை அப்படியே வைத்துவிட்டார்.

இப்போ உன் கணவருக்கு பிசினஸ் பண்ணனும் என்ற ஆசை இருக்கிறதை நான் சொல்லவும் உடனே நம்மகிட்ட தான் சொர்ணாவுக்கு செய்த நகைகள் இருக்கே அதை அடமானம் வைத்து பிசினஸ்ல முதலீடா போட்டு அவரையும் ஒரு பார்ட்னரா சேர்த்துக்கோன்னு ஐடியா கொடுத்ததே என்னோட அப்பா தான் இப்போதைக்கு அதை அடமானம் வச்சிருக்கேன் பிசினஸில் வர்ற லாபத்தை வைத்து நீங்கதான் மீட்டுக்கனும் என தம்பதியினருக்கு அன்பு கட்டளை இட்டான்.

கண்களில் நீருடன் தூரத் தெரிந்த பெருமாளை பார்த்தவள் நேரே அவரிடம் ஓடினாள்.

இரு ஆண்களுமே அதை பார்த்துவிட்டு திரும்பினர்.

பிறகு கார்த்தி கேசுவிடம் அண்ணா சொர்ணா ரொம்ப நல்ல பொண்ணு அவ பேருல மட்டும் சொர்ணம் இல்ல அவ ஒழுக்கத்திலும் சுத்தமான சொர்ணம் தான்.. அவள் உங்களுக்கானவள்னு கடவுள் எழுதி வைத்திருக்கும் பொழுது நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.

அதனாலதான் அந்த திருமணம் தடைப்பட்டிருக்கு அந்த ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு நீங்க அவங்களை வார்த்தைகளால் வதம் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு அண்ணா நாம செய்கிற பாவம் நம்ம சந்ததிகளுக்கு தானே போகும் மகி பாப்பாக்கு எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலைமை வர வேண்டாமே.

புரியுது தம்பி இனி என்னைக்கும் நான் அந்த தப்பை பண்ண மாட்டேன்.

அப்புறம் அண்ணா என்னை மன்னிச்சிடுங்க வளைகாப்பு வீட்ல வச்சு அண்ணிக்கிட்ட கொஞ்சம் முறை தவறி நடந்துக்கிட்டதா நீங்க நினைக்கலாம் அது எல்லாமே உங்களுக்கு நான் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் அப்படி கொடுத்ததால் தான் இன்னைக்கு நீங்க அண்ணியோட அருமை தெரிந்து இருக்கீங்க.

அது சத்தியமான உண்மை தம்பி என்றவர் நீ எனக்கு மட்டும்தான் ஷாக் குடுத்தியா அந்த பக்கம் கீர்த்தனாவுக்கும் இல்ல சேர்த்து கொடுத்த என்று சிரிக்கவும்.

நான் கொடுக்க நினைத்தது உங்களுக்கு மட்டும் தான் ஆனா இடையில் வந்து கரண்ட் ஓயரை பிடிச்சது அவ சோ ரெண்டு பேருக்கும் ஷாக் டிரீட்மென்ட் கிடைச்சது எனக்கும் என் அண்ணிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு என்னை சிரித்தான்.

தன்னை நோக்கி வேகமாக வந்த லதாவை என்னாச்சு என்பது போல் பார்க்கவும்.. நொடியும் தாமதிக்காமல் அவர் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

மாமா என்ன மன்னிச்சிடுங்க உங்களை நான் தவறாக புரிந்து கொண்டேன் அன்னிக்கு நான் செய்த முட்டாள்தனம் உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கும்னு நான் கொஞ்சம் கூட யோசிச்சு பாக்கல.


எவ்வளவு சுயநலமா நடந்துகிட்டேன் ஆனா அதை எல்லாம் மனசுல வச்சுக்காம நீங்க எனக்காக எவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கீங்க இதை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன் தயவு செய்து உரிமையா கோபப்படுங்க, அடிங்க ஆனா என்னை வெறுத்து மட்டும் ஒதுக்கிடாதீங்க.

அவளை தூக்கி நிறுத்தி ஆறுதல் படுத்தியவர் நீ என் பொண்ணுமா,என் வளர்ப்பு நீ தப்பு பண்ணிட்டேன்னு எவனோ ஒரு நாய் வந்து சொல்லும் பொழுது நான் நம்பி இருப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம், அந்த ஒரு சின்ன வருத்தம் தானே தவிர மத்தபடி என்னைக்குமே உன் மேல எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

ஒருவேளை அந்தப் புகைப்படத்தில் இருந்தது நீயாவே இருந்தாலும் கூட எனக்கு அது விரசமா தெரிஞ்சு இருக்காதுமா எத்தனையோ நாள் உன்னையாம் அமுதாவையும் பம்ப் செட்டுக்கு கூட்டிட்டு போய் குளிக்க வச்சவன் இந்த மாமா..

தன் குழந்தைகளோட நிர்வாணம் எப்படி பெத்தவருக்கு விரசத்தை கொடுக்கும் பெத்தவங்களை நம்புங்க.. இனி ஏதாவது ஒரு பிரச்சனைன்னா உடனே தெரியப்படுத்து உனக்கு நான் இருக்கேன் என்றவர்.

அந்தப் திருமணம் நின்னதால எனக்கு துளி கூட வருத்தம் கிடையாது.. அது நடந்திருந்தால் என் குடும்பம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே குறுகிப் போய் இருக்கும் இப்போ நான்கு விதமான குடும்பங்கள் என் குடும்பத்துக்குள்ள வந்து இருக்கு என் குடும்பத்தோட விருச்சகம் எல்லா பக்கமும் பரவுது ரொம்ப சந்தோஷம்.


அதன் பிறகு சாந்தியிடம் வந்த லதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி கார்த்தியின் மேல் எந்த தப்பும் இல்ல அத்தை என்னோட முட்டாள்தனத்தினால் தான் அன்னைக்கு அவ்வளவு பெரிய பழிச் சொல்லுக்கு கார்த்தி ஆளானது என மன்னிப்பு வேண்டிக் கொண்டாள்.

சாந்திக்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது மகனை எத்தனை நாள் வறுத்து எடுத்திருக்கிறார் எந்த முகம் கொண்டு இனி அவனிடம் பேசுவது காலம் தான் அவரின் தயக்கத்தை போக்கி மகனுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

மதிய உணவை அங்கேயே சமைத்து உண்டவர்கள் கிளம்பலாம் என்று நினைக்கும் வேளையில் மழை பொழிய ஆரம்பித்தது கீர்த்தனா இதுவரை அந்த கோவிலுக்கு வராததால் அந்த மழைக்குள் கணவனை இழுத்துக் கொண்டு ஒரு மரத்தடியில் ஒதுங்கினாள்.

கோவிலை சுற்றிப் பார்க்கலாம்னு நினைச்சா மழை வந்து கெடுத்துருச்சே என்றவள்.

லதா அக்காவோட பேமிலி பிரச்சனையை சால்வ் பண்ணிட்ட போல.


ம்ம்.. ஏதோ என்னால முடிஞ்சது இனிமே அவங்களோட லைஃப்ப அவங்க தான் பாத்துக்கணும் மறுபடியும் அவ கணவர் கொடுமைப்படுத்தினா அந்த வாழ்க்கையை வாழணுமா வேண்டாமான்னு முடிவு பண்ண வேண்டியதும் அவதான்

ஆனால் அந்த அளவுக்கு போகாதுன்னு நினைக்கிறேன் அவளோட பேசும் போது ஒரு சில பாயிண்ட் நோட் பண்ணினேன் அவருக்கு பிசினஸ் மேல ஒரு ஆசை சோ பிசினஸ் வச்சு கொடுத்து அதோட பிடிமானத்தை என் கைக்குள்ள வச்சுகிட்டேன்.

நாளைக்கு லதா கிட்ட வாலாட்டினா உடனே பிசினஸ்ஸை பிடுங்கி விரட்டி விட்டிடுவேன்னு பயம் இருக்கும்.

இரண்டாவது அவருக்கு அவள் மேல அக்கறை பாசம் எல்லாம் இருக்கு ஆனாலும் இன்னொருத்தர் ரிஜெக்ட் பண்ணின பொண்ணாச்சேங்கற சின்ன இளக்காரம் அவருக்குள்ள இருந்தது.

அதனால தான் சின்னதா அவரோட பொறாமையை தூண்டிவிட்டேன் பொண்டாட்டியோட அருமை புரிஞ்சு மனுஷன் கப்புன்னு ஒட்டிக்கிட்டாரு.

இனி அவ்வளவு சீக்கிரம் அவளை காயப்படுத்த மாட்டாருன்னு நினைக்கிறேன் என்று சொல்லவும்.

ஒரு கல்யாணத்தை நிறுத்தி ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை அழிச்சிட்டான்னு சொன்னவங்களை எல்லாம் இன்றைக்கு கார்த்தி இல்லனா இந்த பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்குமான்னு சொல்ல வெச்சிட்ட பாரு கிரேட் ரியலி கிரேட் என மெச்சிக்கொண்டாள்.


உனக்கு என் அம்மாவை வம்புக்கு இழுக்கலன்னா தூக்கம் வராதே.


மாமியார் மருமகள்னா அப்படித்தான் இருப்போம் என்று கூறியவள்.

எனக்கு இந்த கிராமமும் இங்க இருக்கிற மனுஷங்களும் ரொம்ப பிடிச்சிருக்காங்க நாம ஏன் கார்த்தி இங்க செட்டில் ஆக கூடாது.

தாராளமா செட்டில் ஆகலாம் ஆனால் இது நமக்கு சம்பாதிக்கிற வயசு வேணுங்கிற அளவு சம்பாதிச்சு முடிச்சுட்டு என் அம்மா அப்பாக்கு முடியாத காலத்துல நாம இங்க வந்து செட்டில் ஆகலாம் அதுவரைக்கும் சென்னை வாசிகளாக வாழலாம் சரியா மாதத்துக்கு ஒரு முறை இல்லனா எப்போ எல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பெல்லாம் இவங்களை வந்து பாத்துக்கலாம்.

சரியென ஒத்துக்கொண்டவளிடம் வா மழை விட்டுருச்சு எல்லாரும் நமக்காக தான் காத்திருக்காங்க போய் வண்டியில் ஏறி ஊர் போய் சேரலாம் என அழைத்தான்.

அப்பொழுது மெல்லிய தென்றல் மரத்தில் மோத மரத்திலிருந்து நீர்த்துளிகள் எல்லாம் மழையாக அவர்களின் மேல் விழுந்து வாழ்த்தியது ஹே கார்த்தி இங்க பாரு மரம் மழை பெய்யுது..ம்ம் மரம் தூவும் மழைன்னு பெயர் வைக்கலாமா..


ஓஓ வைக்கலாமே என்று கூறியபடி அங்கிருந்து நகர இப்பொழுது மீண்டும் ஒரு தென்றல் மரத்தின் மோத இம்முறை பூக்களை தூவி அவர்களை ஆசீர்வதித்தது.

அந்த குடும்பத்தின் வாழ்வு என்றும் சிறக்க நாமும் அவர்களை வாழ்த்தி விட்டு விடை பெறுவோம்.

நன்றி
வணக்கம்.
 
கார்த்தி சூப்பர்!!... கீர்த்தனாவும், கேசவ்வும் அந்தர் பல்டி அடிச்சாலும் நல்லாதான் இருக்கு!!... ப்ரியதர்ஷனுக்கு நல்லா வேனும்!!... சூப்பர் சூப்பர்!!...
 
  • Love
Reactions: @38

@38

Moderator
கார்த்தி சூப்பர்!!... கீர்த்தனாவும், கேசவ்வும் அந்தர் பல்டி அடிச்சாலும் நல்லாதான் இருக்கு!!... ப்ரியதர்ஷனுக்கு நல்லா வேனும்!!... சூப்பர் சூப்பர்!!...
ரொம்ப ரொம்ப நன்றி டா
 
ரெண்டு பேருக்குமே பிடிக்காத கல்யாணம்!!... ஆனால் பிடிக்கும்!!... இப்படி மனநிலையோட இருக்கும் ஜோடிகளோடு கதை ஆரம்பிக்குது!!...

மகனை விட அண்ணன் மகள் மேல அப்படி என்ன பாசம்??.., மகன் மேல ஏன் அவ்வளவு கோவம்??.. இப்படின்னு பல கேள்விகளோடு நகரும் கதை!!...

தந்தைகளோட புரிதல் ரொம்ப அழகா இருந்தது!!...மகனை மட்டுமில்லாமல் கூட இருக்கும் எல்லாரையும் புரிந்து, அரவனைத்து சென்ற விதம் அருமை!!...

தவறான துணையை தேர்ந்தெடுப்பதால் வரும் வாழ்வியல் பிரச்சினைகளை இயல்பான வாழ்வியலோடு சொன்ன விதம் அருமை!!..

தன் பிள்ளை போல் அவளின் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட தாயை பிடித்தது!!... புரிதல் இல்லாமல் பிள்ளைகள் ஒதுங்கி இருந்தாலும் அரவணைத்து செல்லும் பாசம் அழகு!!..

கதிரவன் சரியான அவசரம்!!... கொஞ்சம் அவனுக்கான பாசத்தை புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுருக்கலாம்!!...

கடைசி சில அத்தியாயங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது!!!.. அவளால் வாழ்வின் திசை மாறியிருந்தாலும் அவளுக்கான பிரச்சினையை அறிந்து, ஆறுதல் சொல்லி, தீர்த்து வைத்தது அசத்தல்!!!... புரிய வச்சதும் சூப்பர்!!... ஒரே கல்லுல நிறைய மாங்காய்👌🏻👌🏻!!...

இறுதியில் அனைவரின் வாழ்வும் நிறைவாய் இருந்தது!!... அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
  • Love
Reactions: @38

@38

Moderator
ரெண்டு பேருக்குமே பிடிக்காத கல்யாணம்!!... ஆனால் பிடிக்கும்!!... இப்படி மனநிலையோட இருக்கும் ஜோடிகளோடு கதை ஆரம்பிக்குது!!...

மகனை விட அண்ணன் மகள் மேல அப்படி என்ன பாசம்??.., மகன் மேல ஏன் அவ்வளவு கோவம்??.. இப்படின்னு பல கேள்விகளோடு நகரும் கதை!!...

தந்தைகளோட புரிதல் ரொம்ப அழகா இருந்தது!!...மகனை மட்டுமில்லாமல் கூட இருக்கும் எல்லாரையும் புரிந்து, அரவனைத்து சென்ற விதம் அருமை!!...

தவறான துணையை தேர்ந்தெடுப்பதால் வரும் வாழ்வியல் பிரச்சினைகளை இயல்பான வாழ்வியலோடு சொன்ன விதம் அருமை!!..

தன் பிள்ளை போல் அவளின் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட தாயை பிடித்தது!!... புரிதல் இல்லாமல் பிள்ளைகள் ஒதுங்கி இருந்தாலும் அரவணைத்து செல்லும் பாசம் அழகு!!..

கதிரவன் சரியான அவசரம்!!... கொஞ்சம் அவனுக்கான பாசத்தை புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுருக்கலாம்!!...

கடைசி சில அத்தியாயங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது!!!.. அவளால் வாழ்வின் திசை மாறியிருந்தாலும் அவளுக்கான பிரச்சினையை அறிந்து, ஆறுதல் சொல்லி, தீர்த்து வைத்தது அசத்தல்!!!... புரிய வச்சதும் சூப்பர்!!... ஒரே கல்லுல நிறைய மாங்காய்👌🏻👌🏻!!...

இறுதியில் அனைவரின் வாழ்வும் நிறைவாய் இருந்தது!!... அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
தேங்க்யூ சோ மச் கௌசி.

அழகான நிறைவான விமர்சனம்.
தாமதமாக ரிப்ளே தர்றதுக்கு மன்னிக்கவும் மா
 
Top