எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 16 (இறுதி அத்தியாயம்)

NNK 89

Moderator

கொலுசொலி ஆசைகள் 16

"செந்தா! கௌது உன் கிட்ட எதுமே சொல்லலையா?" எனக் கேட்டதையே கேட்டுக் கொண்டு இருந்தான் நடராஜன்.

"இல்ல மாமா!" என அவளும் அதையே திருப்பிக் கூறினாள்.

கண்ணன்"அதான் அந்தப் புள்ள காலையில் ஸ்கூல் வாசலில் விட்டுப் போனார், அப்புறம் சாயங்காலம் வெளியில் வரும் போது தான் காணுமுனு பஸ்ஸில் வந்தேனு சொல்லுதே நடராஜன், அப்புறம் கேட்டதையே கேக்குறீங்க?" என அதட்டினான்.

"அவளுக்கு ஒன்னுமே தெரியாது மாப்பிள்ளை, நல்லா மயக்க மட்டும் தான் தெரியும். என் புள்ள என்னோட பேச்சைக் கேட்ட வரை நல்லா இருந்தான், இவ என்ன சோக்குப் பண்ணாளோ அப்டியே பொண்டாட்டி முந்தானையைப் புடிச்சுட்டு சுத்த ஆரம்பிச்சுட்டான். இப்ப எங்கப் போனானோ? அடியேய்! என்னடி பண்ண?" எனச் செவாயி காட்டுக் கத்து கத்தினார்.

இரவில் இருந்து இதான் நடக்குது, செவாயி செந்தாவைத் திட்டிக் கொண்டே இருந்தார்.

கூடவே தமிழும் அம்மாக்குத் துணையாக அப்பப்ப ஏதாவது வார்த்தைகளை விட்டாள். இப்பவரை பொறுமையாக இருந்தான் கண்ணன்.

தமிழு"நீ சொன்னப்ப கூட பெருசா நம்பலம்மா, இப்ப தான் தெரியுது இவ சரியான ஆளுனு, இவ எதும் மிரட்டி கைக்குள்ள வச்சிருந்திருப்பா போல அதான் தொல்லை தாங்காம என் தம்பி எங்கயோ போயிட்டான்." என செவாயிக்கு ஒத்து ஊதினாள்.

கண்ணனுக்கு வந்தக் கோபத்தில் எழுந்து எதிரில் அமர்ந்திருந்த பொண்டாட்டியை ஓங்கி எட்டி உதைத்தான்.

"அய்யோ! அம்மா!" என அலறிப் போய் நகர்ந்து சாய்ந்தாள்.

"இங்க பாருடி! இதுக்கு அப்புறம் நீயும், உன் அம்மாவும் வாயைத் தொறந்தீங்க, தொலைச்சுக் கட்டிடுவேன், நானும் பாத்துட்டு இருக்கேன், அந்தப் புள்ளையைக் கரிச்சுக் கொட்டிட்டு இருக்கீங்க, உன் தம்பி மட்டும் நீ சொன்ன மாதிரி தொல்லைத் தாங்காம ஓடியிருந்தான், வக்காலி! வெட்டிப் போட்டு ஜெயிலுக்குப் போயிடுறேன்.

ஏற்கனவே எட்டு வருசம் விட்டுட்டுப் போயிட்டான். இப்ப மறுபடியும் எங்கப் போனானோ?" என கோபமாக மாமியார், மனைவியை வெளுத்து வாங்கினான்.

"அண்ணே! அவரு அப்டி எல்லாம் போக மாட்டாரு, வேற ஏதும் பிரச்சனையானு பாப்போம், எனக்குப் பயமா இருக்குண்ணே" என செந்தா புலம்பினாள்.

நடராஜன், தெய்வானை, அக்கா இருவரும் செந்தாவை அமைதிப்படுத்தினர்.

"மாமா! இவங்கப் பேசுறத கணக்கில் எடுக்காம, அண்ணனுக்கு என்ன ஆச்சுனு பாப்போம்" என இளா கூறினாள்.

"கண்ணா! நம்ம வேணா போலிஸ்ல கம்பளைன்ட் பண்ணுவோமா.?" எனக் கேட்டான் நடராஜன்.

"எனக்கும் அதான் தோணுது" என இளாவின் கணவன் கூறினான்.

"ம்ம்ம்! அதான் இப்ப செய்ய முடியும், சரி! வாங்க போலிஸ் ஸ்டேசன் போயிட்டு வருவோம்" என எழுந்தான் கண்ணன்.

கூடவே நடராஜன், இளா கணவனும் எழுந்திட, மகேஷ்"நானும் வரேன் மாமா" என அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். அனைவரும் வெளியில் வர, அந்த நேரம் பைக் வரும் சத்தம் கேட்டது, அனைவருமே திரும்பி வீட்டின் சாலையைப் பார்த்தனர். கௌதுவே தான் வந்துக் கொண்டு இருந்தான்.

வாடிய முகத்துடன் வந்து பைக்கை நிறுத்தியவனைக் கண்டு நிம்மதி ஏற்பட்டாலும், புரியாமல் வாசலில் நின்றவர்கள் நோக்கினர்.

"கௌது! எங்கடா போன?" எனக் கண்ணன் தான் முதலில் குரல் கொடுத்தது.

பைக் சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த செந்தா, கணவனைக் கண்டதும் வேகமாக அவன் எதிரில் சென்றாள்.

அதன் பிறகே "கௌது!" என செவாயி, "அப்பா!" என பாப்புவும் வந்தனர்.

கௌது அவன் வீட்டில் இருந்த அனைவரையும் பார்த்தவாறு பைக்கை விட்டு இறங்கினான்.

அவனதிரே சென்ற செந்தா, வேகமாக அவன் கன்னத்தில், தோளில், நெஞ்சில் என மாறி மாறி அடித்தாள்.

"எங்கடா போய் தொலைஞ்ச? நேத்து காலையில் பாத்தது, என்னனு யோசிப்பேன், அப்படி என்ன முக்கியமான வேலையா போன? ஒரு ஃபோன் கூடப் பண்ணி சொல்ல முடியாத அளவுக்கு முக்கியமா?" எனக் கேட்டுக் கொண்டே அடித்தவள் கையைப் பிடித்தான்.

கண்களில் அருவியாய் கண்ணீரைச் சிந்தியவள், சட்டென்று அவன் மார்பில் சாய்ந்து கட்டி அணைத்து அழுதாள்.

"செந்தா! அமைதியா இரு" என அவளைச் சமாதானம் செய்தான்.

செவாயி"என் ராசா! என் தங்கம்! எங்கய்யா போன?" என மகன் கையைப் பிடிக்க, பாப்பு ஒடிவந்து காலைக் கட்டிக் கொண்டு"அப்பா!" என அழுதாள்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் நேற்றுச் சென்றது, அதனால் தான் இத்தனைக் கலவரம் என்பதை உணர்ந்தான்.

பாட்டி மெல்ல நடந்து வந்து"எங்கடா போன படவா பயல? உன் அம்மா, பொண்டாட்டி, புள்ள எல்லாம் ராத்திரில இருந்து தவிச்சுப் போயிட்டாங்க" என அதட்டினார்.

அவர்களிடம் தான், நன்றாக இருப்பதாக சமாதானம் செய்தான். செந்தாவை நிமிர்த்தியவன், பாப்புவை தூக்கிக் கொண்டான். செவாயியை கையைப் பிடித்து"அமைதியா இரும்மா" என்றான்.

"சரிடா! எங்க தான் போன?" என கண்ணனும், அக்கா, தங்கையும் கேட்டனர்.

கௌது கண்கள் கலங்கியது, செந்தா
"என்னங்க ஆச்சு?" என அவன் கையைப் பிடித்தாள்.

"நேத்து உன்னைய ஸ்கூலில் விட்டுப் போனதும் எனக்கு வெளிநாட்டுல இருந்து ஃபோன் வந்துச்சு, என் கூட ஒரே ரூமில் வெளிநாட்டுல இருக்கவர் சொல்லி இருக்கேன்ல வைத்தியநாதன் திடீருனு நெஞ்சுவலி வந்து இறந்துட்டார். மற்ற நண்பர்கள் அவரோட வீட்டுக்கு நேரில் போய் தகவல் தெரிவிக்கச் சொன்னாங்க, எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாகிட்டு, ஒன்னுமே புரியல.

சரினு உடனே பைக்கில் அவங்க ஊருக்குப் போயிட்டேன். ஒரு மணி நேரம் மேல ஆகும், நான் போற வரை அவங்க யாருக்குமே தெரியாது. உனக்கு தகவல் சொல்ல எல்லாம் நான் யோசிக்கல செந்தா, அவங்க வீட்டில் போய் எப்படி சொல்றதுனு யோசிச்சுட்டே போனேன்.

ஏனா! அவரும் நானும் ஒரே ரூம், ஒன்னா சமைச்சு தான் சாப்புட்டோம், அந்தளவு பழக்கம், அவரும் அடுத்த மாசம் லீவுக்கு வர இருந்தார். அவர் ஊருக்கு வந்து அஞ்சு வருசம் ஆகுது. திடீருனு ஹார்ட் அட்டாக்.

அவங்க வீட்டில் போய் சொல்ல முடியாம சொன்னா, அவரு மனைவி மயங்கி, அம்மாக்கு அதிர்ச்சியில் பேச்சே நின்னுப் போச்சு அப்படியே சிலையா இருக்காங்க. பசங்க நல்ல வேளை ஸ்கூலுக்குப் போயிட்டாங்க. ஊரேக் கூடிட்டு அதுக்கு அப்புறம் ஃபோன்லயே எல்லாத்தையும் அவங்க ஆளுங்க வீடியோவா காட்டினா அவரு பொண்டாட்டி தாங்க முடியாம என் ஃபோனைத் தூக்கிப் போட்டாங்க.

அங்கிருந்து பாடி கொண்டு வர ஏற்பாடுப் பண்ணிப் பேசி முடிக்கவே நேரம் போச்சு,
பாடி வர ரெண்டு நாள் ஆகுமாம். விடிஞ்சதும் தான் எனக்கே உணர்வு வந்தது, ஃபோனை மாட்டிக் கொடுத்தாங்க ஆனா அது வேலைச் செய்யல. அவங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பி வந்தேன். யாரு நம்பரும் மனசுல வேற இல்ல. எனக்கு அவர் நினைவா இருக்கு, இப்டிப்பட்ட சாவு வரவே கூடாது" என வாய் விட்டு அழுதான்.

அனைவருமே அவனைச் சமாதானம் செய்தனர்.

அதன் பின், செந்தாவும், கௌதுவும் அந்த இறந்த வீட்டுக்குச் சென்று பாடி வரும் வரை இருந்து, அனைத்தையும் முடித்தே திரும்பினர்.

ஒரு வாரம் ஓடியது...

கௌது மெல்ல அதில் இருந்து வெளியே வந்திருந்தான்.

இன்னும் பத்து தினங்கள் தான் கௌது திரும்பிச் செல்ல இருந்தது.

அன்று இரவு....

பாப்பு அடுத்த நாள் விடுமுறை என்பதால் இளா வீட்டிற்கு செவாயியுடன் ஒரு விசேஷத்துக்கு சென்றவள் அங்கயே இருவரும் தங்கிவிட்டனர். பாட்டி மட்டும் வெளியில் படுத்து உறக்கத்தில் இருந்தார்.

ஏனோ செவாயி வாய் கொஞ்சம் குறைந்திருந்தது, கௌதுவின் கண்ணீரைப் பார்த்ததால் என்னவோ, செந்தாவைப் பற்றி பேசுவதைக் குறைந்திருந்தார்.

செந்தா கௌதுவின் மார்பில் தலை வைத்துப் படுத்திருக்க, மெல்ல நிமிர்ந்து
"ஏங்க!" என்றாள்.

"ம்ம்ம்!"

"இன்னும் நடந்ததையே நெனச்சுட்டு இருக்கீங்களா?"

"மறக்க முயற்சி செய்றேன் செந்தா, ஆனா அவரோட முகம் மறைய மாட்டுது, நானும், அவரும் எவ்வளவோ பேசியிருக்கோம், சிரிச்சு இருக்கோம்"

"ம்ம்ம்! என்ன செய்றதுங்க, அவரோட விதி"

"அந்த விதி தான் பயமா இருக்கு, செந்தா! சொல்றேனு தப்பா நெனக்காத, விதி யாருக்கு வேணா வரலாம், நாளைக்கே எனக்குக் கூட..." என்றவன் வாயை அவசரமாக மூடினாள்.

"வேணாங்க! அப்படி சொல்லாதீங்க"

"நான் அதுக்கு ஆசைப்படல செந்தா, ஒரு பேச்சுக்கு சொல்றேன். அப்படி ஏதாச்சுனா நீ தைரியமா இருக்கனும், பாப்புவை என் ஸ்தானத்தில் இருந்து வளர்க்கனும், அழுது உன்னைய பலவீனமா ஆக்கிடாத, செத்தாலும் உன்னையும், பாப்புவையும், நம்ம குடும்பத்தையே தான் சுத்திட்டு இருப்பேன். ஏனா! எனக்குனு வேற உலகம் இல்ல" எனக் கண்கள் கலங்கியது.

செந்தாவிற்கும் கண்கள் கலங்கிட, "நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க, இந்தப் பேச்சை விடுங்க" என அவன் மார்பில் கண்ணீரை மட்டுமே வடித்தாள். அவளால் அவன் கூறியதைக் கற்பனைக் கூட செய்ய முடியவில்லை.

அவளின் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தவன், "செந்தா!" என அவளை நிமிர்த்தினான்.

"ஏய்! என்னடி, இப்ப எதுக்கு அழுவுற?"

"பின்ன நீங்க சொன்னதுக்கு சிரிப்பாங்களா?"

"சரி! சரி! அந்தப் பேச்சை விடு, அவரு விதி போயிட்டாரு. நான் அதப் பத்தி பேசல"

"ம்ம்ம்! நீங்க கெளம்ப இன்னும் பத்து நாளு தான் இருக்குனு காலையில சொன்னதும், எனக்கு அதை நெனச்சாவே மனசு தவிக்குது"

"நான் வருசத்துக்கு ஒரு முறை வந்துட்டுப் போறேன்டி, கவலைப்படாத இன்னும் கொஞ்ச வருசத்துல இங்கயே செட்டில் ஆகிடுறேன்"

"ம்ம்ம்!"

"என்ன ம்ம்ம்? நல்லா தெளிவா சொல்லு"

"அது முடியாது போங்க, என் மனசு நீங்கப் போறீங்கனு ஏங்க ஆரம்பிச்சுட்டு."

"சரி! பத்து நாளும் உன் கூடவே இருக்கேன், நீயும் ஸ்கூலுக்கு லீவ் போடு. நம்ம எங்கயாச்சும் வெளியில் போயிட்டு வருவோமா? கொடைக்கானல், ஊட்டி, ம்ம்ம்! இல்லனா...." என இழுத்தவனை முறைத்தவளிடம், "அடியேய்! நான் பாப்புவோட ஒரு சுற்றுலா மாதிரி போயிட்டு வரலாமுனு கேட்டேன். வேணுனா சொல்லு கோயில் பக்கம் போகலாம், கும்பகோணம் போனா எல்லாம் கோயிலும் பாத்துடலாம்" என்றான்.

"அது எல்லாம் ஒன்னும் வேணாம், எனக்கு இந்த ரூமே போதும். இது தான் என் சுற்றுலா தளம், கோயில் எல்லாமே. நம்ம நிம்மதியா இங்கயே இருப்போம்" என அவனை மேலும் நெருங்கி நிமிர்ந்தவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள்.

முத்தம் வைத்து நிமிர்ந்தவள் முகம் அவன் முகத்திற்கு நேராக இருக்க, அவளை இடையில் கைப்போட்டு இழுத்து தன் மேல் படர செய்தான்.

விழிகள் நான்கும் விடாமல் நோக்கியது, செந்தாவிற்கு கணவனின் கண்களை முத்தமிட ஆசை எழும்பிட, அதற்கு சற்றும் தயங்காமல்"எனக்கு ஆசையா இருக்குங்க, இந்த கண்ணு ரெண்டுக்கும்....." என நிறுத்தி விழிகள் மேல் இதழ் பதித்தாள்.

அவளின் இதழ் பதிய விழிகள் மூடியவன், மனைவியின் இடையை மேலும் இறுக்கினான்.

"செந்தா! இது நல்லதுக்கு இல்ல, நான் பாவம்"

"உங்களை யாரு பாவமா இருக்க சொன்னா கௌது?"

"ஏன் சொல்ல மாட்ட!" என அவளை நகர்த்தி அவள் மேல் படர்ந்தான்.

"ஏங்க!" எனச் சிணுங்கினாள்.

"ஆமா! நான் ஏன் பாவமா இருக்கனும். அதுவும் பொண்டாட்டியே கேட்டுட்டா. அதோட அவ ஆசைகள் மாதிரி எனக்கும் நிறைய இருக்கு" என மெல்ல நெற்றியில் குனிந்தான். செந்தாவின் விழிகள் தானாக மூடிட, முத்தமானது நெற்றியைத் தாண்டி விழிகள், கன்னங்கள், காது மடல் என நீண்டது.

காது மடலில் இதழ் பதித்திடவும், செந்தாவிற்கு உணர்ச்சிகள் மெல்ல அவளின் ஏக்கத்திற்கு தூது விட்டது, அவன் கைகளை இறுக்கினாள்.

இதழோடு இதழ் பதித்தவன், அவளின் விழிகளை நோக்கிட, அவைகள் மூடிய நிலையிலே இருந்தது.

சில நொடிகளில் இதழ் பதிப்பினை விலக்கியவன், அந்த நிலையிலே "செந்தா!" என்றழைத்தான்.

அவளும்"ம்ம்ம்!" என விழிகளை விரிக்காமல் கேட்டாள்.

"இதுக்கு மேல போகட்டா, வேண்டாமா?"

"என்ன கேக்குறீங்க, எனக்குப் புரியல?" என சட்டென்று கண்களை திறந்து நக்கலாக கேட்டாள்.

"ஏய்! நிஜமா உனக்குப் புரியல?"

"நிஜமா தான்!" என நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

"அப்ப சரி! நீ தூங்கு, நானும் போய் தூங்குறேன்" என விலகப் போனவனை விடாமல் பிடித்திழுத்தவள்,

"புரியலனு சொன்னா, என்னனு விளக்கிச் சொல்லனும், அத விட்டுட்டு இப்டியா கோச்சுட்டுப் போறது, உங்களுக்கு எதுமே தெரியல போங்க" என இதழ்களைச் சுளித்தாள்.

"ம்ம்ம்! இப்ப எனக்கு நீ தான் விளக்கிச் சொல்லனும் போல" என முழித்தான் அவன்.

அவனை முறைத்தவள், "சரியான மரமண்டை கௌது நீங்க! இதுவரை கொடுத்த முத்தத்திற்கு எல்லாம் ஒருத்தி அமைதியா இருக்கா, அவ கிட்ட போய் இதுக்கு மேல போகட்டா, வேண்டாமானு கேள்விக் கேக்றீங்க? புடிக்கலைனா இப்டி தான் கண்ணை மூடிப் படுத்திருப்பாங்களா?" என முகத்தைச் சுளித்தாள்.

"ஓ! எனக்கு இப்ப தான் புரியுது பொண்டாட்டி, இனிமே பேச்சுக்கே இடமில்லை" என அவளை இடையுடன் அணைத்து, கழுத்தின் வழியே முத்தத்தை தொடர்ந்தான்.

அன்று மாலை சந்திரா, செந்தாவிற்கு மல்லிகைப் பூ கொடுத்துவிட்டிருந்தாள். அதை தலை நிறைய வைத்திருந்தவள் கழுத்துப் பகுதியின் வழியே சென்ற இதழ் பதிப்பின் தேடலைத் தோளில் மல்லிகைப் பூவும், அதன் மணமும் அவனைத் தடுத்தது.

கண்களை மூடி அதை முகர்ந்தவன், "செந்தா! செம வாசனையா இருக்கு" என மெல்லியக் குரலில் கூறினான்.

"ம்ம்ம்! சந்திரா அக்கா கொடுத்தாங்க"

"பாரு, எப்டி, எந்த நேரத்தில் அண்ணி கொடுத்த பூ பயன்படுதுனு" என்றவன் சட்டென்று மார்பை மறைத்திருந்த புடவையின் முந்தானையை விலக்கியவாறு, மேலும் முன்னேறினான்.

அவன் தலை முடியின் பிடரியைப் பிடித்தவள், கூச்சத்தில் அவனை அதற்கு மேல் செல்ல தடைச் செய்து, தலையை தன் முன்னே இழுத்தாள்.

அவனும் சிரித்தப்படி நகைக்க, தலையைப் பிடித்திருந்தவள், அப்படியே அவனை கீழ் தள்ளி அவன் மேல் சென்றாள்.

கௌதுவின் மார்பில் படர்ந்திருந்தவள் தனது முந்தானை விலகியிருக்கிறது என்பதை மறந்திருந்தாள்.

ஆனால் அதைக் கவனித்த கௌது, நமட்டுச் சிரிப்புடன், "செந்தா! இதுக் கூட நல்லா இருக்கு" எனப் புருவத்தை உயர்த்தி பார்வையால் அவளை நோக்கினான்.

அவளோ புருவத்தை சுருக்கி, அவன் பார்வைச் சென்ற திசையைக் குனிந்துப் பார்க்கவும், "ச்சீ! போங்க" என அவன் மேல் முழுவதுமாகப் படர்ந்து, தோளில் முகம் பதித்தாள்.

"இந்த வெட்கத்தை இப்ப தான் ரசிக்கிறேன் செந்தா, அழகா இருக்கு இதுக்கு தான் ஆசைப்பட்டீயா?"

"எதுக்கு?" என நிமிராமல் கேட்டாள்.

"எதுக்குனு எனக்கு சரியா சொல்ல தெரியல, ஆனா தாம்பத்யம் என்பது இருவருக்கும் புடிச்ச வித்தியாசமான உணர்வாக இருக்கனுமுனு புரிஞ்சுகிட்டேன்."

"எப்படி புரிஞ்சது...?" எனத் தலையை நிமிர்த்திக் கேட்டவள், இந்த முறை அந்த வெட்கம் போய் அவனின் பதிலைக் கேட்க ஆர்வமாக தன்னிலை மறந்தாள்.

"ம்ம்ம்!" என அவளை அப்படியே இழுத்து அதே வேகத்தில் கழுத்தின் கீழே தெரிந்த கோட்டில் முத்தம் வைத்தவன், அவளை பக்கவாட்டில் சாய்த்தப்படி, "முன்னாடி இருந்த நம்ம உறவில் இந்தக் கொலுசோட சத்தம் எனக்கு எரிச்சலைத் தந்தது. அப்ப தெரியல அது கட்டாய உறவுனு. ஆனா இப்ப உன் கால்களின் கொலுசொலி அப்டியே இசை மாதிரி, ரம்மியமா கேக்குது, உன்னோட ஒவ்வொரு அசைவிற்கும் அதனோட ஒலி மாறுபடுது. ஒவ்வொரு ஒலிக்கும் பதில் உன்னோட ஆசைகள் இது தான், இது தானு சொல்லுது. எனக்குப் புரிஞ்சுட்டு" எனச் சிரித்தான்.

"ம்ம்ம்! பெரிய கண்டுப்பிடிப்பு தான்" என்றவள், அவன் கால் மேல் கால்களைப் போட்டு இடிக்க, கொலுசின் திருகாணி பதிந்தது.

"ஆ!" என்றான்.

"அச்சோ! என்னங்க ஆச்சு?"

"இப்படி எல்லாம் செஞ்சீனா ரத்தக்களமா மாறிடும் செந்தா, அப்புறம் என்னோட ஆசைகள் என்ன ஆகுறது" என அவளை வம்பிழுத்தான்.

"ம்ம்ம்! அடுத்த தடவை அடிவாங்காம ட்ரை பண்ணுங்க" எனச் சிரித்தாள்.

"அடிப்பாவி!" என்றவன், "நோ! நோ வே!" என அவள் மேல் படர்ந்தான்.

அதன் பிறகு நடந்தது எல்லாம் இருவரின் மனமும், உடலும் விரும்பி எதைச் செய்ய உணர்ச்சிகள் தூண்டப்பட்டதோ அதன் உணர்வுகள் முழுமையான மகிழ்ச்சியாக பரிமாற்றம் அடைந்தது.

செந்தாவின் கொலுசொலியின் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டது, மெல்லிசையில் தொடங்கி இன்னிசையில் தத்தளித்து பேரிடர் இசையில் இறுதியாக மிகுந்த ஒலியை எழுப்பி ஆசைகளின் ராஜாவான பேராசையாக ராணியுடன் கலந்து, கரைச் சேர்ந்தது காதல்.

"கொலுசொலி ஆசைகள்"

கணவனும், மனைவியும் இணையும் தாம்பத்யதிற்கு ஒரு பக்கத்தின் ஆசையாக உடல் மொழிகள் ஒலித்தால் அங்கு காமத்தின் கலவர யுத்தம் மட்டுமே நிகழும்.

இருவரின் ஆசைகளும் உடல் மொழிகளில் கலந்திட, அது காதலும், காமமும் சேர்ந்து முத்தத்தின் யுத்த களமாக மாறி, மனதின் உணர்வுகளை உணர்ச்சிகளாய் பெருக்கி தாம்பத்யத்தின் இன்பத்தை அடைந்திடும்.

கௌது, செந்தாவின் தாம்பத்யமும் இன்று அந்த மாதிரியான ஒரு நிலையில் மீண்டது.
……………………

சில வருடங்கள் கழித்து....

"செந்தா! சீக்கிரம் வா, கோயிக்குப் போகனுமுல" எனக் கத்தினான் கௌது.

"வரேங்க!" என வெளியில் வந்தவள், போர்டிகோவில் படுத்து இருந்த மாமியாரிடம்"அத்த! வெந்நீர் இருக்கு, சந்திரா அக்கா சாப்பாடு எடுத்து வரும் சாப்புட்டுங்கோ" என்றாள்.

"ஆ! ஆ! போய் ஊரையே வெலைக்கு வாங்காம வந்துச் சேருங்க, புள்ளைய பத்தரமா பாத்துக்கோ, அவன் சின்னப்புள்ள அப்டிதான் சேட்டைப் பண்ணுவான். உன் புருசன் பண்ணாததா" என நீட்டினார்.

பாட்டி இறந்திட, செவாயி அந்த இடத்திற்கு வந்திருந்தார்.

ஆனால் செவாயி வாய் குறைந்தாலும் அப்பப்ப செந்தாவை ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.

கௌது கார் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருக்க, பின் பக்கம் பாப்பு அருகில் தம்பி மிருதனுடன் அவனை அணைத்தப்படியே அமர்ந்திருந்தாள்.

செந்தா வந்து கணவன் அருகில் அமர்ந்திட, கௌது காரை ஸ்டார்ட் செய்தான்.

கார் கும்பகோணம் கோயிலை நோக்கிச் சென்றது.

கௌது தேவையான நேரத்தில் ஊர்த் திரும்பி, புதிய தொழிலைத் தொடங்கி நல்ல நிலைக்கு வந்திருந்தான்.

செந்தாவும் அரசுப் பள்ளியில் டீச்சராக வேலையில் சேரவும் கூடுதல் பலனாக அமைந்தது கௌதுவிற்கு.

மிருதன் பிறந்து ஆறு ஆண்டுகள் ஆகியதால் வேண்டுதலை நிறைவேற்றப் புறப்பட்டார்கள்.

"அப்பா! ஸ்லோவா ஓட்டுங்க, தம்பி தூங்குறான்" என அவனை மடியில் சாய்த்துக்கொண்டாள் பாப்பு.

"அம்மா வரட்டுமா பாப்பு, நீயும் தூங்குறீயா?"

"இல்லம்மா! நானே பாத்துக்கிறேன்"

பாப்புவிற்கு மிருதன் தான் எல்லாமே. அவனுக்கு அம்மாவாக மாறியிருந்தாள்.

அதனாலே கௌது, செந்தா இன்னும் காதலிக்க முடிந்தது, அளவில்லாமல் காதலித்தார்கள்.

அழகான குடும்பமாக அமைதியான வாழ்க்கையில் பயணித்தார்கள்.

தேவையான நேரத்தில் சரியான முடிவெடுத்து குடும்பத்துடன் சேர்ந்திருக்க ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நினைத்தாலே வாழ்க்கையில் யாவருக்கும் அன்பான, அழகான குடும்பமாக மாறிடும்.

"கொலுசொலி ஆசைகள்" மனைவியின் ஆசைகளும், கணவனின் ஆசைகளும் ஏராளம் அதைப் புரிந்துக் கொள்வதே மகிழ்ச்சியான தாம்பத்யம்.

....................... முடிவுற்றது..............

இக்கதையைத் தொடர்ந்துப் படித்து ஆதரவு தந்த, தரப்போகின்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

 

admin

Administrator
Staff member
அருமையான எழுத்து ரொம்ப அழகா ஆரம்பிச்சு அழகா முடிச்சுட்டீங்க நான் எங்கேயுமே தயங்கி நிற்கல ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன்.. செந்தா கௌது மாதிரி எத்தனையோ தம்பதிகள் இந்த குடும்ப அரசியலில் மீள முடியாமல் இந்த காலத்தில் ரொம்பவே தவிக்கிறாங்க அதை உங்க களத்துல ரொம்ப அழகா காட்டிட்டிங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்..
 

NNK 89

Moderator
அருமையான எழுத்து ரொம்ப அழகா ஆரம்பிச்சு அழகா முடிச்சுட்டீங்க நான் எங்கேயுமே தயங்கி நிற்கல ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன்.. செந்தா கௌது மாதிரி எத்தனையோ தம்பதிகள் இந்த குடும்ப அரசியலில் மீள முடியாமல் இந்த காலத்தில் ரொம்பவே தவிக்கிறாங்க அதை உங்க களத்துல ரொம்ப அழகா காட்டிட்டிங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Thanks so much ma 😍😍😍😍😍😍😍
 

santhinagaraj

Well-known member
அருமையான ஃ பீல் குட் ஸ்டோரி ரொம்ப அருமையான கருத்து நல்லா இருந்தது சூப்பர் 👌👌👌
 
கணவனை பிரிந்திருக்கும் பெண்ணின் வலி, எதிர்பார்ப்பு, ஆசைகளை சொல்லும் கதை!!..தன் மணவுணர்வுகளை கணவனே புரிந்து கொள்ளாதபோது வரும் துன்பங்களை சொன்ன விதம் அருமை!!!..

எவ்விய சூழ்நிலையிலும் கல்வியும், வேலையும் ஒரு பெண்ணிற்கு பல வித நன்மைகளை தரும் என செந்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்!!!... பெண் பிள்ளைக்கான கல்வியையும் கதையின் போக்கில் சொன்னது அருமை!!!.. பெண்ணின் நுன் உணர்வுகளை அனைவரிடமும் சொல்லவும் முடியாது, கணவனிடம் சொல்லி புரிய வைக்கவும் முடியாது தவித்த தருணங்கள் உணர்வுப்பூர்வமானவை!!...

அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்து அவன் செய்த மாற்றங்கள் அழகு!!... சிறு சிறு மாற்றங்களும் அழகு தானே!!..

சராசரி மாமியாரும், பிறந்த வீடும்!!..அத்தனைக்கும் மத்தியால் எதிர்பார்ப்பின்றி உறைதுணையாய் இருந்த சந்திரா போன்ற உறவுகள் அருமை!!!...

சொன்ன கருத்துக்கள் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருந்தது!!.. அருமையான குடும்ப கதை!!..வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 

NNK 89

Moderator
கணவனை பிரிந்திருக்கும் பெண்ணின் வலி, எதிர்பார்ப்பு, ஆசைகளை சொல்லும் கதை!!..தன் மணவுணர்வுகளை கணவனே புரிந்து கொள்ளாதபோது வரும் துன்பங்களை சொன்ன விதம் அருமை!!!..

எவ்விய சூழ்நிலையிலும் கல்வியும், வேலையும் ஒரு பெண்ணிற்கு பல வித நன்மைகளை தரும் என செந்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்!!!... பெண் பிள்ளைக்கான கல்வியையும் கதையின் போக்கில் சொன்னது அருமை!!!.. பெண்ணின் நுன் உணர்வுகளை அனைவரிடமும் சொல்லவும் முடியாது, கணவனிடம் சொல்லி புரிய வைக்கவும் முடியாது தவித்த தருணங்கள் உணர்வுப்பூர்வமானவை!!...

அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்து அவன் செய்த மாற்றங்கள் அழகு!!... சிறு சிறு மாற்றங்களும் அழகு தானே!!..

சராசரி மாமியாரும், பிறந்த வீடும்!!..அத்தனைக்கும் மத்தியால் எதிர்பார்ப்பின்றி உறைதுணையாய் இருந்த சந்திரா போன்ற உறவுகள் அருமை!!!...

சொன்ன கருத்துக்கள் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருந்தது!!.. அருமையான குடும்ப கதை!!..வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
Thanks so much ma 😍😍😍😍😍😍😍😍 .. அழகான விமர்சனம்... 👍👍
 

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK89 #கொலுசொலிஆசைகள்
கௌதம சந்திரன் அனைவருக்கும் கௌது..
இவன் மனைவி செந்தாமரை அனைவருக்கும் செந்தா...
குடும்பத்திற்காக அயல்நாட்டில் உழைக்கும் இவன் திருமணம் முடிந்து மனைவி கர்ப்பம் ஆனதோடு வெளிநாட்டுக்கு செல்பவன் எட்டு வருடங்கள் கழித்து திரும்ப வருகிறான் மூன்று மாத விடுமுறையில்... இதுவரை தொலைபேசியில் மட்டுமே குடும்பம் நடத்தி வந்தவர்கள் தாய் செய்வதும் சொல்வதும் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவனுக்கு.. நிதர்சனம் அப்படி இல்லை என்று உணர்த்துகிறது மனைவியின் கோபத்தால். அனைவரையும் போல மனைவியும் ஒரு உறவாக நினைப்பவன் அவளுக்கென்று தனிப்பட்ட உணர்ச்சிகள் ஆசைகள் இருக்கும் என்பதை அவளின் கோபத்தின் மூலம் அறிந்து கொள்கிறான்.. செய்த தவறை திருத்தி மனைவியோடு காதலாக வாழ்ந்தானா என்பது கதையில்.. செந்தாமரை இழந்துவிட்ட ஆசைகளை கணவனின் மூலம் அடைந்து கொண்டாளா என்பதும் கதையில்.. தெளிவான எழுத்து நடையோடு எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்தது சிறப்பு👏👏👏 அருமையான கதை கரு👏விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck 🥰🌹❤️
 

NNK 89

Moderator
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK89 #கொலுசொலிஆசைகள்
கௌதம சந்திரன் அனைவருக்கும் கௌது..
இவன் மனைவி செந்தாமரை அனைவருக்கும் செந்தா...
குடும்பத்திற்காக அயல்நாட்டில் உழைக்கும் இவன் திருமணம் முடிந்து மனைவி கர்ப்பம் ஆனதோடு வெளிநாட்டுக்கு செல்பவன் எட்டு வருடங்கள் கழித்து திரும்ப வருகிறான் மூன்று மாத விடுமுறையில்... இதுவரை தொலைபேசியில் மட்டுமே குடும்பம் நடத்தி வந்தவர்கள் தாய் செய்வதும் சொல்வதும் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவனுக்கு.. நிதர்சனம் அப்படி இல்லை என்று உணர்த்துகிறது மனைவியின் கோபத்தால். அனைவரையும் போல மனைவியும் ஒரு உறவாக நினைப்பவன் அவளுக்கென்று தனிப்பட்ட உணர்ச்சிகள் ஆசைகள் இருக்கும் என்பதை அவளின் கோபத்தின் மூலம் அறிந்து கொள்கிறான்.. செய்த தவறை திருத்தி மனைவியோடு காதலாக வாழ்ந்தானா என்பது கதையில்.. செந்தாமரை இழந்துவிட்ட ஆசைகளை கணவனின் மூலம் அடைந்து கொண்டாளா என்பதும் கதையில்.. தெளிவான எழுத்து நடையோடு எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்தது சிறப்பு👏👏👏 அருமையான கதை கரு👏விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck 🥰🌹❤️
Thanks ma...😍😍😍😍
 
Top