எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 01

NNK-106

Moderator

காதல் Not Out - 01

- காதல் கிரிக்கெட் 🏏


IMG-20240301-WA0004.jpg

வானம் மெல்ல சூரியனின் நிறத்தோடு தன்னை கலக்க ஆரம்பித்திருந்த ஒரு அந்திப்பொழுது அது. மேகங்களும் பகல் அசதியில் இருந்து நீங்கிட சற்றே அந்த மலை முகட்டில் இளைப்பாறவென இறங்கிக்கொண்டிருந்தன. சுற்றி இருந்த மலையின் பச்சையுடன் கலந்த அந்த வெள்ளை பஞ்சுப்பொதிகளின் அழகும் வண்ணவியலும் மழுங்கிவிட்டது போல் தான் இருந்தது அவளுக்கு. கண்களை மூடி படலமாய் கண்ணீர் விரிந்திருக்க அதை வெளியேற்றிடவோ உள்ளிழுத்திடவோ திடமின்றி அப்படியே அந்த மலை உச்சியில் நின்றிருந்தாள்.​

அடுத்த நிமிடம் நினைவுகளை துறந்து சட்டென கால்கள் வெளியில் மிதப்பது போல் இருக்க கடைசியில் அவள் தொட்டது மலை அடிவாரத்தை உரசிச்சென்று கொண்டிருந்த ஆற்று நீரை தான். ஆவேசமாய் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர் ஆசையாய் அவளை தழுவி உள்ளிழுக்க.. மனதில் கனமாய் உறைந்திருந்த பாரமும் கூட இப்போது இலகுவாய் இருப்பது போல் தான் இருந்தது அவளுக்கு. இன்னும் கொஞ்ச நேரம், அசையாது நீரின் இழுப்பிற்கே தன்னை படைத்து விட்டு கண் மூடிக்கொண்டாள்.​

இனி முடிந்தது, அவள் எண்ணிய மறுகணம் நீரின் ஓட்டத்திற்கும் சக்திக்கும் எதிராய் யாரோ தன்னை இழுப்பது போல் இருக்க, திரும்பி விடுபட முயன்றவளை சட்டென இறுக்கமாய் பற்றியது இரு கரங்கள். அடுத்தடுத்து நடந்தது அனைத்தும் இவள் சிந்திக்கும் கணத்தையும் பற்றியிருந்தது எனலாம். அவளை பின்னிருந்தே அந்த கரங்கள் ஆற்றங்கரைப் பக்கமாய் இழுத்துச்சென்றது. அந்த கரங்களின் இறுக்கம், கரையை நெருங்க நெருங்க கூடிக்கொண்டே போக திமிறி விடுபட முயன்று முடியாது போக காலால் பின்னோக்கி தள்ள ஆரம்பித்தாள். அதனை தன் காலால் இலகுவாக சமாளித்தவண்ணம் தன் வேலையிலேயே குறியாய் இருந்தது அந்த உருவம்.​

"டேய் யார்டா..விடு.." இவள் சத்தமிடவும் தரை வரவும் சரியாக இருந்தது. அவளை மறுபக்கம் சுழற்றி இழுத்து தொப் என தரையில் போட்டது அந்த உருவம்.​

"ஆஆவ்.."கையையும் வயிற்றையும் தேய்த்து விட்டுக்கொண்டே இவள் நிமிர்ந்து பார்க்க..அங்கு நீரில் முழுவதுமாய் நனைந்த கறுப்பு கோட்டுடன் தலையில் நனைந்து கலைந்த முடியுடன் கம்பீரமாய் அதேநேரம் கண்கள் கோபத்தை கக்க நின்று கொண்டிருந்தான் ஒருவன்.​

"மொறக்கிறானே..ஆனால் அநியாயத்துக்கு இவ்வளோ அழகா இருக்கான்.." எண்ணிக்கொண்டு நனைந்திருந்த தன் நீண்ட கூந்தலை பின்னே தள்ளிக்கொண்டு அவனை பார்த்து.."சும்மா சுவிம்மிங் சார்.." என்றாள்.​

அவ்வளவு நேரம் அமைதியாய் முறைத்தவன் ஒரு அடி முன்னே வந்து குனிந்து.."அறைஞ்சன்னா பல்லு எல்லாம் கொட்டிடும்.." என்று கர்ஜித்தான்.​

அவன் கூறியது கேட்டதும் தானாகவே கையால் வாயை மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் இரு முறை மூடித்திறந்தாள்.​

அவனது பார்வை அவளை அப்போதுதான் மேலிருந்து கீழாய் கவனித்தது. பட்டுப்புடவை தலை நிறைய பூ, கை நிறைய கண்ணாடி வளையல்கள்..பார்த்து நக்கலாய் சிரித்தவன் ஒரு காலை மடித்து அவள் அருகே அமர்ந்தான்.​

"என்ன ரெஜிஷ்டர் ஆபிஸ் வர போய் ஏமாத்திட்டு போய்டானோ..இதேதான் உங்களுக்கு எல்லாம் அறிவே இல்ல..யார சொல்லுறது..இன்னொரு முறை சாகுறேன்னு அங்க போகாத..பார்க்க ஈஸியா இருக்கும் செத்துரலாம்னு..ஆனால் உள்ள போய் உனக்கு தண்ணீலா குடிச்சிபட்டு..அது மட்டும் இல்ல உள்ள ஆழத்துல இழுத்துட்டு போகும் போது அழுத்தத்துல உள்ள இருக்கது எல்லாம் நசுங்கும் வாய் வழிய வெளில வர பார்க்கும்..இதுக்கு மேல உன் விருப்பம் எனக்கு இங்கேயே உட்கார்ந்து உன்ன பாதுகாத்துட்டு இருக்க முடியாது..அன்ட் பைனலா..ஒருத்தன் போனா அவன் உனக்கானவன் இல்லன்னு அர்த்தம் அவனுக்காக நீ வாழ்க்கையே முடிச்சிகிட்டா அவனுக்கா நஷ்டம் நினைக்கிற..அவன் உன்னையே நினைச்சிட்டு இருப்பானா..உன் வாழ்க்கைதான் போகும் இடியட்..இப்படி லூசுதனமா யோசிக்காம வாழ்க்கைய அதுபாட்டுல விடு உனக்கானவன் வருவான்" என்று படபட என பொறிந்து விட்டு அவன் நடக்க ஆரம்பிக்க.." அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.​

"இப்போ என்ன நடந்தது ..ஒன்னுமே புரியலயே..ஆனா ஒன்னு.." என எண்ணி கண்ணை சிமிட்டியவள்.."சார்.." என்று பின்னே ஓடினாள்.​

அவள் அழைப்பில் அவன் நின்று திரும்பிப்பார்க்க மூச்சிறைக்க அவன் முன்னால் சென்று நின்றாள்.​

நெற்றியில் தவழ்ந்த ஈர முடியை பின்னோக்கி கோதிக்கொண்டு அவள் பேசுவதற்காய் பார்த்திருந்தான்.​

அங்கும் இங்கும் எதையோ தேடிய அவள் கிடைக்காது போக தன் முடியில் இருந்த பூவிலிருந்து ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.​

"வாட்.." அவன் புரியாது புருவம் சுருக்கி குழப்பமாய் கேட்க.."சார் ஐ லவ் யூ.." என்றாள்.​

"என்னது...." பெரிதாக வியந்தவன்.."வேற வேலையே இல்லையா..கொஞ்சம் பேசினா போதுமே..ச்ச்ச.." அவன் கோபமாய் திட்டி விட்டு சென்று தன் காரில் ஏறப்போக அங்கு அவனுக்கு முன்னமே உள்ளே ஏறி அமர்ந்திருந்தாள் அவள்.​

"ஹேய் கெட் ஓப்..நவ்.."கதவை திறந்து விட்டு அவளை பார்த்து சத்தமிட்டான்.​

"ப்ச் என்ன சார் இந்த இருட்டுல எங்க போவேன் எப்படி போவேன்..மனிதனுக்கு மனிதன் உதவுறது தான் மனித குணம்..இப்ப என்ன? போற வழில அப்படியே ட்ராப் பன்னுறதுல என்ன.." அவள் கூற கூற முதலில் நடந்தது கனவோ என நினைக்க தூண்டியது அவனுக்கு.​

"அதுக்குதானா.." அவன் கேட்க,​

"ஹான்..வேற என்னா..ஓஹ் ஒரு அழகான பொண்ணு இப்படி பக்கத்துல இருக்கும் போது லவ் சொல்ல மாட்டாளான்னு பாக்குறீங்களா..நோ சார் அதெல்லாம் எனக்கு பிடிக்காது..அதிலும் இந்த கண்டதும் காதல் இதெல்லாம் சுத்த வேஸ்ட்டு சார்..சரி நாம போகலாம...முடியலன்ன சொல்லுங்க நா அப்படியே இங்க எங்கயாவது கீழ போய் ஆட்டோ பிடிச்சி போறேன்.." அவள் பட பட என பேசி முடிக்க மலைத்துப்போய் நின்றிருந்தான் அவன்.​

"இல்ல நானே ட்ராப் பன்றன் அட்ரஸ் சொல்லு.." என்றுவிட்டு அமைதியாய் காரில் ஏறி அமர்ந்தான்.​

இவள் அட்ரஸ் கூற காரை எடுத்தான் அவன்.​

சிறிது நேரம் காரில் அமைதியே நிலவ அவன் தான் மூளையை கசக்கி யோசித்துக்கொண்டிருந்தான். அந்த அமைதியை கலைக்க திடீரென அவள் ஏதோ முணுமுணுக்க காதை கூர்மை தீட்டிக்கேட்டான் அவன்.​

"எலும்பு துண்டு போட்டு பாா்த்தேன் நாயும் வாலை ஆட்டலையே தலைக்கு மேல கோவம் வருது ஆனாலும் வெளி காட்டலையே.."​

"வாட்..?"​

"பாட்டு சார் பாட்டு அதாவது சாங்..கேட்டதில்ல.." அவள் கேட்க அதானே பாட்டு இதுக்கு நாம ஏன் டென்ஷனாகுறோம்..இவன் யோசிக்கும் போதே அவள்.."சார் உங்க பெயர் சஞ்சீவா..அப்போ நான் என்னன்னு கூப்பிட..என்ன இருந்தாலும் எல்லாரும் போல நானும் கூப்பிட முடியாதுலயா.." அவள் பேசிக்கொண்டு போக..​

"ஹேய் நிறுத்து நிறுத்து..நீ என்ன பேசுற..மொதல்ல நீ என்ன எதுக்கு கூப்பிடனும்..இப்ப உன்ன இங்க இறக்கி விட்டு போனா உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல..இப்படி புலம்புறத விட்டுட்டு இறங்கு வீடு வந்திரிச்சி.." அவன் கொஞ்சம் கோபமாய் கூற அப்போதுதான் கார் நின்றிருப்பதை கவனித்தவள் இறங்கி காரிற்கு முன்னால் வந்து நின்றாள்.​

இவன் கோபமாய் வழிவிடுமாறு சைகையில் கூற.."நான் யாரா..நான் உங்க வருங்கால மனைவி..அப்புறம் தொடர்பெல்லாம் இருக்கும் சார்...பாருங்க உங்க டீடெய்ல்ஸ் புல்லா நீங்க யோசிச்சி மண்டைய குழப்பின கேப்ல சுட்டாச்சி..டாட்டா..தூங்கும் போது கால் பன்னுறன்.." சொல்லி விட்டு அவள் சென்று விட அவன் வாய் பிளந்து அமர்ந்திருந்தான்.​

"இவள போய் பாவம்னு கூட்டிட்டு வந்தேன் பாரு என்ன சொல்லனும்.." இவன் நினைக்க அதேநேரம் அமைதியே குடிகொண்டிருந்த அந்த குடியிருப்பில் அவள் வீட்டில் இருந்து.."என்ன இன்னக்கிம் சாவலயா.." என ஒரு பெண்ணின் குரல் கேட்க..இன்னுமே அதிர்ச்சிக்கு சென்றிருந்தான் அவன்.​

"அப்போ இதேதான் வேலையா..பணம் கொள்ளயடிக்கிற கேங்கா இருக்குமோ..மொதல் வேலையா இதை ரமண் அங்கிள்கிட்ட சொல்லனும்.." எண்ணிக்கொண்டு அங்கிருந்து பறந்தான்...​

***************************​

அறையின் ஒவ்வொரு மூலையும் கூட அங்கு ஜன்னல்வழி கசிந்த ஒளிக்கு தப்பி ஒழிந்திட முயன்றவண்ணம் இருந்தன. கண்ணை திறந்து தான் இருக்கிறோமா என்று புரியாவண்ணம் மீண்டும் நன்றாக திறந்து மூடி பார்த்தான் அவன். தன் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்க, துணைக்கென்றோ கால்களும் சேர்த்தே கையோடு கட்டியிருந்தான் அந்த அரக்கன். அரக்கன் தான் எத்தனை நாட்கள் இன்றோடு, உயிர் போகாதா என்று ஏங்க வைக்கிறான், வாய்விட்டு கெஞ்சியும் விட்டான்; கொன்று விடேன் என்று, செவிசாய்க்க மறுக்கும் அரக்கனே தான் அவன். உடலில் உயிர் இருப்பதை இப்படி விழித்திருக்கும் தருணங்களில் மூளை கேள்விகளால் தன்னை குடையும் தருணங்களில் தான் அவனே உணர்கிறான் எனலாம். கை கால்கள் வலிக்கு பழகிவிட்டது போல் தான் இருந்தது. அவன் வந்து சென்று இரண்டு நாட்கள் இன்றோடு. தண்ணீர் மட்டும் தான் அடுத்து அவன் வரும் வரை இவனுக்கு ஜீவன்.​

சட்டென இருளை கிழித்துக்கொண்டு வெளிச்சம் வர, எண்ணங்கள் சிதறி ஓடிட, கை கால்கள் உதறத்தொடங்கியது அவனுக்கு.​

"சார்.. சார்.. வேணாம்..ப்ளீஸ்.." திறந்த கதவின் வாசலில் வரி வடிவாய் தெரிந்த அந்த உருவத்தை பார்த்து கெஞ்சினான். மெல்ல மெல்ல முன்னேரி வந்த அந்த உருவம் கதவை அடைத்து விட்டு மீண்டும் தஞ்சம் புகுந்த இருளை விரட்ட அங்கிருந்த மெழுகுவர்த்தியை ஒவ்வொன்றாய் ஒளியூட்டியது.​

இவனும் கெஞ்சிக்கொண்டே எங்கே அது அருகே வந்துவிடுமோ என்று பதட்டமாய் தரையில் ஊர்ந்து கொண்டே இருந்தான். பொறுமையாய் அங்கிருந்த முப்பது மெழுகுவர்த்திக்கும் உயிரளித்து விட்டு அதில் ஒன்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அங்கே இவ்வளவு நேரம் இருந்தவனை இப்போது தான் கவனிப்பது போன்ற பாவனையுடன் அருகில் வந்தான் அவன். பின்னால் சுவர் தட்டவும் அதனுடனே ஒதுங்கியவண்ணம் அவனை நிமிர்ந்து பார்த்தான். அருகில் வந்து நன்றாக குனிந்து அவனை பார்த்தவன் தன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுக்க அவன் செயலுக்கு துலங்கலாய் இவனுக்கு பயத்தில் நா உலர்ந்து கட்டியிருந்த கால்களும் வெடவெடத்தது.​

"சார் வேணாம்.. என்ன கொன்னுடுங்க..ப்ளீஸ். " இவன் பேச்சு ஏதோ உலறல் என்றவண்ணம் அதை ஒதுக்கியவன் அருகில் அமர்ந்து அவன் கட்டுக்களை அவிழ்த்து, அவன் வலது கையை தன்பிடிக்குள் கொண்டு வந்தான். என்ன செய்ய போகிறான் என கண்கள் பயத்தை வெளிப்படையாய் காட்ட பேயறைந்தாற்போல் செயலற்று பார்த்திருந்தான். மெதுவாய் முழங்கையிலிருந்து அவன் கையை தன் கையால் வருடுவது போல் கீழிரக்கிக்கொண்டே வந்தவன், உள்ளங்கையில் எதையோ வைத்து அழுத்தினான். இரத்தம் பீறிட்டு பாய்ந்தது. வலியில் அவன் கதற.. அதனை இரசித்து தன் கையில் இருந்த ப்ளேடை இன்னும் அழுத்த அது குறுக்கே நன்றாக அவனது கையில் ஆழமாய் சென்று தன்னை பதித்துக்கொண்டது.​

அதன் மறுபக்கம் இவனது கையிலும் கொஞ்சம் இரத்தத்தை சுவை பார்க்க இருந்தும் அது அவனுக்கு ஒன்றுமில்லை என்பது போல் தான் இருந்தான். இப்போது அந்த ப்ளேடுக்கு உள்ளே இடம் போதவில்லை என்றவண்ணம் அதனை அழுத்தமாய் பற்றி சுழற்றினான். இவனது ஒவ்வொரு அசைவிற்கும் அவனில் தோன்றிய வலியின் கதறல்கள் அமிர்தமாய் தான் இருந்தது இவனது செவிகளுக்கு.​

அப்படியே அந்த ப்ளேடிற்கு அவன் கையில் தஞ்சம் கொடுத்து விட்டு மீண்டும் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு ப்ளேடை எடுத்தான். கையைபிடித்தவண்ணம் அலறிக்கொண்டிருந்தவன் அருகில் ஒரு காலை மடித்து அமர்ந்தவன் அவன் தலையை சுவற்றோடு சாய்த்து கழுத்தில் அந்த ப்ளேடை வைத்து நேராய் அவன் கண்களுக்குள் ஊடுறுவி.. "கேட்டல்ல எதுக்குன்னு.. " கேட்க அவன் குரலை இவ்வளவு நாளைக்கு இப்போது தான் கேட்கிறான் அந்த நேரத்திலும் மூளை இதை அவனுக்கு நினைவூட்டியது.. அதை ஓரமாய் தள்ளிவிட்டு அவனது இத்தனை நாள் கேள்விக்கு பதில் தெரிந்திட பார்த்திருந்தான்.. தன் காதருகில் வந்து அடுத்த கணம் அவன் கூறியது அதிர்விற்குள்ளாக்க தொடர்ந்து இவன் சிந்திக்கக்கூட அவகாசம் அளிக்காது அந்த ப்ளேடை கழுத்தில் பதித்திருந்தான் அந்த அரக்கன்.​


------------------------------

கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளவும் 😊

 
Last edited:

kalai karthi

Well-known member
ஆரம்பம் லூசு ஹீரோயின். ஹீரோ கெட்டவனா நல்லவனா? சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 

Mathykarthy

Well-known member
அடிப்பாவி.. 😱😱😱😱😱 பாவம்ன்னு காப்பாத்தினா சரியான அராத்து....
மலை உச்சியில இருந்து குதிச்சு விளையாடுறது தான் இவ வேலையா... 🥶🥶🥶🥶😳😳😳😳

சன்ஜீவன் தான் ஹீரோவா... யார் அந்த அரக்கன்... 🤔🤔🤔

செம ஸ்டார்ட் 🎉
 

NNK-106

Moderator
ஆரம்பம் லூசு ஹீரோயின். ஹீரோ கெட்டவனா நல்லவனா? சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
ஹாஹா 😁 ரொம்ப ரொம்ப நன்றி 😍🥰
 

NNK-106

Moderator
அடிப்பாவி.. 😱😱😱😱😱 பாவம்ன்னு காப்பாத்தினா சரியான அராத்து....
மலை உச்சியில இருந்து குதிச்சு விளையாடுறது தான் இவ வேலையா... 🥶🥶🥶🥶😳😳😳😳

சன்ஜீவன் தான் ஹீரோவா... யார் அந்த அரக்கன்... 🤔🤔🤔

செம ஸ்டார்ட் 🎉
ஹாஹா அதானே.. இல்ல தற்கொலை முயற்சியா இருக்குமோ 🧐
யாரா இருக்கும் 🤔
ரொம்ப ரொம்ப நன்றி 🥰😍
 
Top