எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவியே -14 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி-14


தான் தாயாகப்போகும் விஷயமறிந்து மனம்முழுக்க மகிழ்ச்சிநிறைந்தபடி, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குவந்த மிதிலாவோ, தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை தன் கணவனிடம் எவ்வாறுசொல்வது..? என்ற பயமும் தயக்கமும் மகிழ்ச்சியும் கலந்தநிலையில், தனது கைகளை பிசைந்தவண்ணம் யோசித்துக்கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்தவுடன் பவித்ராவோ, அயர்ந்தபடி அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்துவிடவே சங்கரன்வசந்தியின் பின்னே நின்றிருந்த மிதிலாவைக்கண்ட வேதவள்ளியோ சங்கரனைப்பார்த்து, “டேய் சங்கரா..? உடம்பிற்கு என்னாவாம் இந்த விளங்காதவளுக்கு..? ஏதாவது நோவுகீவு வந்துடுச்சா..? இவளே ஒரு தண்டம்..! இவளால ஆஸ்பத்திரி செலவு அதுஇதுன்னு இன்னும் தண்டசெலவுதான் அதிகமாகிக்கொண்டே போகுது..!” என்று சலித்தபடிபேச,


சங்கரனோ வேதவள்ளியைப்பார்த்து பெருமூச்சுவிட்டவாறு, “அம்மா..? கொஞ்சம் பேசாமல் இருக்கியா..? எப்போ பாரு, நைன்னு ஏதாவது ஒன்னு பேசி மனுசனை டென்ஷன்பண்றது உன்னோட வேலையா போச்சு..!” என்றிட வசந்தியோ, “அத்தை..? அது ஒன்னுமில்ல..! எல்லாம் நல்ல விஷயம்தான்..! நம்ம மிதிலா உண்டாகியிருக்கிறாள்..!” என்று சொல்லவும் அதிர்ச்சியான வேதவள்ளியோ மிதிலாவைக்கண்டு, பின் வசந்தியிடம், “மேலே சொல்லு..!” என்ற சொல்ல தொடர்ந்த வசந்தியோ, “ஆமா அத்தை..! நம்ம மிதிலா தாயாகப்போகிறாள்..! அதுவும் இரட்டை குழந்தையாம்..! குழந்தைஉண்டாகி கிட்டதட்ட மூன்றுமாதம் முடிஞ்சிடுச்சாம்..! இந்தமாதிரி சூழ்நிலையில், இப்படியொரு சந்தோஷமானவிஷயம் நடக்குமென்று நான் யோசித்துக்கூட பார்க்கலை..!” என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் பேசிக்கொண்டிருந்த வசந்தியை பார்த்த வேதவள்ளியோ, சந்தேகமாக தன்முகத்தை வைத்துக்கொண்டு, “ஏன்டி வசந்தி..? எனக்கு ஒருவிஷயம் புரியலடி..? ஆமா..! இந்த விளங்காதவளை, அந்த தஷான்பையன் கடத்திட்டுபோய் ஒரு மூணுமாசம் இருக்காது..?” என்று, மறைமுகமாக மிதிலாவின் நடத்தையின்மீது அபாண்டமாக பழிசொல்ல, அதைக்கேட்டு ஒருகணம் துடித்துபோன மிதிலாவிற்கோ, தன்மனதிலிருந்த மொத்தமகிழ்ச்சியும் வடிந்து, கண்களில் கண்ணீர்திரண்டது..!


அப்போது வசந்தியோ வேதவள்ளியைப்பார்த்து, “அத்தை..? என்னத்தை இப்படி பேசுறீங்க..? அவள் நம்மவீட்டுபொண்ணு அத்தை..?” என்று சத்தமாகப்பேசிட, அதை சட்டைசெய்யாத வேதவள்ளியோ, “நீ ஏன்டி, இவளைபத்தி பேசும்போது வக்காளத்து வாங்கிட்டு வர..?” என்று முறைப்பாகப்பேசிட, அதன்பின் அமைதியானாள் வசந்தி.. மேலும் தொடர்ந்த வேதவள்ளியோ, “நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்..? இந்தக்கழுதை, கல்யாணமண்டபத்துல நம்ம மானத்தை கெடுத்துட்டு, இன்னொருத்தன்கூட போயிட்டாள்..! சரி..! போனவதான் அவனோடு நல்லாபிழைத்தாளா..? அதுவும் கிடையாது..! அவள் புருஷன் இருக்கும்போதே, வீட்டைவிட்டுபோய் வேறு ஒரு ஆம்பளையோட ஏழுநாள் இருந்திருக்கா..! இப்படி இருக்கும்போது, திடீரென்று நீ, இவள் கர்ப்பமாக இருக்கான்னு சொன்னால், எல்லாரும் இப்படிதானே யோசிப்பாங்க..?” என்று சொல்லவே, வேதவள்ளியின் பேச்சைக்கேட்டு மிதிலாவின் மனதிலிருந்த, “ராகவ், தன்னை மீண்டும் ஏறுக்கொள்வான்..!” என்ற நம்பிக்கை அடிவாங்கியது..! அதனைக் காணதவறாத வேதவள்ளியோ, மேலும் மிதிலாவை மனம்நோக செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், “ஏன்டி மிதிலா..? இதுக்கு அப்பன் நிஜமாகவே உன் புருஷன்தானா..?” என்று கேட்க, இதற்குமேல் அங்கு நின்று, அவள் பேசும் கொடியவார்த்தைகளை கேட்க மனதில் திராணியின்றி காதுகளை பொத்தியவண்ணம், வேகமாக தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள் மிதிலா.. அதன்பிறகுதான் வேதவள்ளியின் மனமே நிறைவடைந்ததுபோல் இருந்தது..!


இங்கு ராகவ்வோ அன்று காலை, எப்பொழுதும் தாமதமாக எழுந்திருப்பவன் நேரமாகவே எழுந்து, குளித்துமுடித்து ரெடியாகி எங்கோ வேகமாகசெல்ல, அதனைக்கண்ட நந்தனோ, “என்னடா ராகவ்..? இன்னைக்கு நேரமே எழுந்திட்டபோல..?” என்று கேட்டதற்கு ராகவ்வோ நந்தனைப்பார்த்து, “ டேய் நந்தா..? நீ இன்னும் கிளம்பலையா..?” என்று கேட்க, வித்தியாசமாக ராகவ்வை பார்த்த நந்தனோ, “எங்கடா கிளம்பசொல்ற..?” என்று கேட்டதும், “டேய் நந்தா..? மறந்துட்டியா..? இன்னைக்கு டிரஸ்ட்ஹாஸ்பிடல் பங்க்ஷன்டா..! நம்மைத்தானே அங்கே சீப்கெஸ்டா கூப்பிட்டிருக்காங்க..! அதுகூட மறந்துபோயிடுச்சா உனக்கு..?” என்று கேட்டிட, எப்படியாவது ராகவ்வையும் மிதிலாவையும் சேர்க்கவேண்டும்..! என்றுமட்டுமே யோசித்துக்கொண்டிருந்த நந்தனுக்கு, இந்தவிஷயம் மறந்தேபோனது..! பிறகு நந்தனும் வேகமாககிளம்பி ராகவுடன் சேர்ந்து, குறித்தநேரத்தில் விழா நடக்குமிடத்திற்கு சென்றிட, அங்கே அவர்களை கௌரவப்படுத்தி வரவேற்ற விழாக்குழுவினரோ, அவர்களை உபசரித்தபின் விழாவை ஆரம்பித்தனர்..


விழாவில் பங்கேற்றவர்களோ விழா முடிந்தபின்னர், அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனிக்கும்போது, அங்கே நின்றிருந்த ராகவை அழைத்த மருத்துவரோ ராகவிடம், “ஹலோ ராகவ்..? எப்படி இருக்கீங்க..?” என்று கேட்க, ஏற்கனவே அந்த மருத்துவரின்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் ராகவ்வோ புன்சிரிப்போடு, “நான் நல்லா இருக்கேன் டாக்டர்..! நீங்க நல்லா இருக்கீங்களா..? டிரஸ்ட்டில் எல்லாம் நல்லா போகுதுதானே..?” என்று கேட்கவும், “ஓ..!எஸ்..! நல்லாபோகுது ராகவ்..! அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்..? கங்க்ராஜுலேசன்..!” என்று அவனதுகைகளை குலுக்கி அவனுக்கு வாழ்த்தை தெரிவித்திட, புரியாத ராகவ்வோ மருத்துவரைப்பார்த்து, “என்னாச்சு டாக்டர்..?” என்று கேட்க, அந்த டாக்டரோ புன்சிரிப்புடன், “என்ன ராகவ்சார்..? ஒன்னும் தெரியாததுபோல் கேட்கிறீர்களே..?” என்று சொல்ல புரியாதுவிழித்த ராகவோ மருத்துவரையே பார்க்க, மேலும் தொடர்ந்த மருத்துவரோ, “எல்லாம், உங்க வைஃப் கன்சீவ்வா இருக்கிற விஷயத்திற்குதான் சார் வாழ்த்து சொன்னேன்..!” என்று சொல்ல,


“என்ன மேடம் சொல்றீங்க..? என் வைஃப் கன்சீவ்வா இருக்காங்களா..?” என்றதும், அப்போதுதான் அந்த மருத்துவருக்கோ, ராகவிற்கு இன்னும் விஷயம் தெரியவில்லை..! என்ற விஷயமே புரிந்தது..! பிறகு மிதிலாவை, தான் பரிசோதித்த விஷயத்தையும், ஏற்கனவே மிதிலாவுக்கு இருந்த குழந்தை பெறமுடியாத பிரச்சனையையும், அதையும்மீறி கடவுள் கிருபையால் இப்போது மிதிலா, இரட்டை குழந்தைகளுக்கு தாயாகப்போகும் விஷயத்தையும் கூறிய மருத்துவரோ, “ஐஅம்சாரி.. ராகவ்..! இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்னு நினைச்சிருந்தேன்..! சாரி..!” என்று சொல்லி அங்கிருந்து நகரவே ராகவிற்கோ, “தன் மனைவி தாயாகப்போகிறாள்..!” என்ற விஷயம் கேட்டு, மனம்முழுக்க மகிழ்ச்சிஅலை அடித்தாலும், “இத்தனை பெரியவிஷயத்தை தன்னிடமிருந்து மறைத்துவிட்டாளே..? அப்படி என்ன நான் தவறுசெய்துவிட்டேன்..? இப்படியொருநாள் வந்திடாதா..? தன் மனைவி, தான் தாயாகப்போகும் விஷயத்தை தன்னிடம் மகிழ்ச்சியாக கூறிவிடமாட்டாளா..?” என்று எத்தனைநாள் நானும் ஏங்கியிருப்பேன்..? எந்த ஒரு ஆண்மகனுக்கும், தன் மனைவி தாயாகப்போகும் விஷயத்தை அவளுடைய வாயால் சொன்னால்தானே அவனுக்கு நிறைவாக இருக்கும்..? இப்படி ஒரு மூணாவது நபரின் வாயால் இந்த விஷயத்தை தெரியும்படி செய்துவிட்டாகளே..? அப்படி என்ன மன்னிக்கமுடியாத தவறுசெய்தேன் நான்..?” என்று மிதிலாவின்மீது கோபம் கொண்டவனோ, தன் மனதிலிருக்கும் கோபத்தை அடக்கிக்கொண்டு காரை நோக்கி செல்ல, நடந்தவற்றையெல்லாம் கவனித்த நந்தனோ, மிதிலா தாயாகப்போகும் விஷயத்தை கேட்டு மகிழ்ச்சியுடன், எதுவும் பேசாமல் ராகவ்வின் பின்னால்சென்று காரில் ஏறினான்..


இங்கே பரத்தோ, இரண்டுநாட்கள் அலுவலக விஷயமாக வெளியூர் சென்று வீட்டிற்குவந்தவுடன் பவித்ராவைக்கண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அன்று மிதிலா மயங்கிவிழுந்த விஷயத்தையும், அதனால் மருத்துவமனைக்கு சென்று செக்கப்செய்து பார்க்கையில், மிதிலா கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் உறுதிசெய்த விஷயத்தையும் கூற, மிகுந்த மகிழ்ச்சியடைந்த பரத்தோ மனதில், “இந்தவிஷயத்தை எப்படியும் ராகவிடம் கூறினால், தனக்கு குழந்தை பிறக்கப்போகும் சந்தோஷத்தில், நடந்தவற்றையெல்லாம் மறந்து ராகவ் மிதிலாவை ஏற்றுக்கொண்டு, பழையபடி இருவரும் சேர்ந்து நல்லபடியே தங்களது வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பர்..!” என்று நினைத்தவனோ, “ இதனை முதலில், தான் ராகவ்விடம் சொல்லியாகவேண்டும்..!” என்று, வீட்டில் இருப்பவர்களிடம் தனக்கு வெளியே வேலை இருக்கிறது..! என்று சொல்லிக்கொண்டு, காரை கிளப்பியபடி ராகவன் வீட்டிற்குசென்றான் பரத்..


அடுத்த 20நிமிடத்தில் ராகவின் வீட்டை அடைந்தவனோ, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று பார்க்கையில், ஹாலில் அமர்ந்திருந்த நந்தனோ வீட்டுக்குள்ளேவந்த பரத்தைக்கண்டு புன்னகைத்தபடி, “வா..பரத்..!” என்றழைக்க, உள்ளே வந்தவனும், “நந்தா..? ராகவ் எங்கே..? அவர்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்..!” என்று சொல்ல நந்தனோ பரத்தைக்கண்டு, “அப்படி என்ன பரத், முக்கியமானவிஷயத்தை சொல்லப்போற..?” என்று கேட்டிட, மிதிலா கருவுற்றிருக்கும் விஷயத்தை கூறிய பரத்தோ, “இந்தவிஷயத்தை ராகவ்கிட்ட சொன்னால், கண்டிப்பாக பழசெல்லாம் மறந்து, மிதிலாவை நேரில் பார்க்கசெல்வார்..! என்றும், அப்படி இருவரும் நேரில் சந்தித்தால், தங்களது பிரச்சனைகளை மனம்விட்டு பேசிதீர்த்து, மீண்டும் இருவரும் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது..!” என்று சொல்லவும், நந்தனோ அதற்கு எந்த பதிலும்கூறாமல் தலைகவிழ்ந்தபடி நின்றிருக்க அதனைக்கண்டவனோ, “ஏன் எதுவும் பேசாமலிருக்கிறீங்க..?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கட்ட ராகவோ, “இல்லை..! இனிமேல் அதற்கான அவசியமிருக்காது..!” என்று சொல்ல, திடீரென்று அங்குவந்த ராகவ் சொல்வதைக்கேட்ட பரத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது..! ஆம்..! இவ்வளவுநேரம் தாங்கள் பேசியதை ராகவ் கேட்டுக்கொண்டுதானே இருந்திருப்பான்..?


பிறகு நந்தனின் புறம்திரும்பிய பரத்தோ தனது கண்களால், “என்னாச்சு..?” என்று சைகைகாட்ட, அதற்குள் அங்கே நின்றிருந்த ராகவோ, “என்னைக்கு நான் அப்பாவாகப்போகும் விஷயத்தை, மூணாவது மனுஷங்க மூலமா தெரிஞ்சுக்கவேண்டிய சூழ்நிலைவந்துச்சோ..? அன்னைக்கே நான் உடைந்துபோயிட்டேன்..! என்னோட இந்த நிலைமை வேற எந்த ஆம்பளைக்கும் வரக்கூடாது..! இனிமேல், நீங்க யாரும் என்னோட வாழ்க்கையை நினைத்து கவலைப்படவேண்டாம்..! என் விதி என்னவோ..? அதன்படியே எல்லாம் நடக்கட்டும்..!” என்று சொல்லிவிட்டு வேகமாக தனதறைக்குள் செல்ல,


ராகவ் சென்றததை உறுதிசெய்த நந்தனோ பரத்தைப்பார்த்து, “ஆமாம் பரத்..! இன்னைக்கு நாங்க காலையிலே டிரஸ்ட்ஹாஸ்பிடல் பங்ஷனுக்கு போனோம்.. என்று சொல்ல ஆரம்பித்து, அங்கே விழாவில் பங்கேற்றதையும், அங்கிருந்த மருத்துவர் மிதிலாவை பரிசோதித்து, அவள் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்ததை ராகவிடம் கூறியதையும் கூறியவனோ, “இப்போ நீ, சொல்லு பரத்..? மிதிலா பண்ணது தப்புதானே..? யாரா இருந்தாலும், இந்தவிசயத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாங்கதானே..? அப்படி என்ன இவன் தப்பு பண்ணிட்டான்..? எந்த ஆம்பளைக்கும், தான் அப்பாவாகப்போகும் விஷயத்தை அவங்க மனைவி மூலமாக தெரிஞ்சுக்கத்தானே ஆசைப்படுவாங்க..? அந்த சின்ன ஆசைகூட அவன் வாழ்க்கையில நடக்கலயே..? யாரோ மூணாவது மனுஷங்க மூலமா இந்தவிஷயம் தெரியும்போது, பாவம்..! ரொம்ப நொறுங்கிப்போய்ட்டான்..! என்னாலேயே அவன் முகத்தை பார்க்கமுடியலை..! போதும்..! நாம கஷ்டப்பட்டவரையும் போதும்..! அவனையும் கஷ்டப்படுத்தி பார்த்தவரையும் போதும்..! அவன் சொன்னதுபோல, அவன் விதியில் என்ன இருக்கிறதோ..? அதுவே நடக்கட்டும்..!” என்ற சொல்லிட, பரத்தும் எதுவும்பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டான்..!


இப்படியே நாட்கள் நகர்ந்தது.. மிதிலாவுக்கு இது ஆறாவது மாதம்..! ராகவ்வை பிரிந்து வந்தபிறகு மிதிலா ராகவை நேரில் பார்க்கவே இல்லை..! ராகவும் அப்படித்தான்..! மிதிலாவே நேரில் பார்க்கவில்லை என்றாலும், மனதில் அவள் நினைவுகளும், அவளது வயிற்றில்வளரும் குழந்தை பற்றிய எண்ணங்களுடனே வாழ்ந்துவருகிறான்..! அதன்பின் பரத்தும் நந்தனும்கூட மிதிலாவையும் ராகவையும் சேர்ப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை..! பரத்தின் மனைவி பவித்ராவுக்கு, ஆடம்பரமாக ஊரையே அழைத்து வெகுவிமர்சையாக வளைகாப்புவிழா நடத்தியபொழுதும்கூட அதனை சாக்காகவைத்து மிதிலாவையும் ராகவையும் சந்திக்க வைத்துவிடலாம்..! என்று தோன்றிய, பரத்தின் எண்ணங்களுக்கு முற்றிலும் முட்டுக்கட்டையிடும்படி, பரத் நேரில்சென்று அழைத்தும்கூட ராகவ் அந்தவிழாவில் பங்கேற்கவில்லை..!


ஒருபுறம் வேதவள்ளிபாட்டியோ, வழக்கம்போல் தன்னுடைய ஊசிசொற்களால் மிதிலாவின் இதயத்தை குத்திக்கிழித்து ரணமாக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் மிதிலாவோ, என்னதான் தன் வாழ்க்கையில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடந்திருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கிதள்ளிவிட்டு, தன் வயிற்றில் வளரும் தனது மகவை நல்லபடியாக பெற்றெடுக்கவேண்டும்..!” என்ற உறுதியுடன், தன் கணவனின் நினைப்போடு வாழ்ந்துவருகிறாள்.. இப்படியிருக்க, அன்று ஒருநாள் பவித்ராவிற்கு ஒன்பது மாத செக்கப்பிற்கு செல்வதற்காக, வசந்தியும் பவித்ராவும் மருத்துவமனைக்கு சென்றுவிட, சங்கரனும் வேலைக்கு சென்றுவிட்டார்.. அப்போது வீட்டில் வேதவள்ளிபாட்டி மட்டுமே இருக்க, வசந்தி மருத்துவமனை செல்வதற்கு முன்பே மிதிலாவிற்கு உணவு எடுத்து வைத்துவிட்டு செல்ல, அதனைக்கண்ட வேதவள்ளியோ தனது நரிபுத்தியால் மிதிலாவின் நிம்மதியை கெடுப்பதற்கே யோசித்தபடி, தானும் ஒருதாய்தான் என்பதை மறந்து, இரண்டு கருவை சுமக்கும் கர்ப்பவதிக்கு மனசாட்சியின்றி அவள் உண்ணும் உணவில், அளவுக்கு அதிகமான உப்பை கொட்டி கலந்துவிட, வழக்கம்போல் தனது வயிற்றில் இருக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் பசி எடுக்கவே, உணவு உண்ணவந்த மிதிலாவோ, உணவை எடுத்து வாயில்வைக்க உப்பு கரித்ததும் துப்பிவிட்டாள்..! அதன்பிறகு ஒருபிடி அளவிற்குகூட அந்தஉணவை எடுத்து அவளால் உண்ணமுடியவில்லை..! அந்தளவுக்கு உப்புகரித்தது அந்த உணவில்..! அதன்பிறகு அந்தநாள்முழுக்க பட்டினியாக இருந்த மிதிலாவோ, பாலாவது குடிக்கலாம்..! என்று கிச்சனுக்கு சென்று பார்க்கையில், அங்கே ஏற்கனவே வேதவள்ளியால் பிரிட்ஜிலிருந்த பால் மொத்தமும், சிங்கிள் கொட்டி கழுவப்பட்டிருந்தது..! இதெல்லாம் பாட்டியின் வேலைதான்..! என்று புரிந்துகொண்ட மிதிலாவோ, வழக்கம்போல் வாய்பேசாது அமைதியாக சென்று, தனது கடுமையான பசியையும் பொறுத்துக்கொண்டு அறையிலிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டாள்..!


இப்படியே அந்தநாள்முழுவதும் மிதிலா எதுவும் சாப்பிடாமல், கடும்பசியில் மயக்கநிலைக்கு செல்ல, மாலைவேளையில் வீட்டிற்குவந்த வசந்தியும் பவித்ராவும் மிதிலாவைக்காண, அங்கே மிதிலா மயங்கியநிலையில் கட்டிலில் படுத்திருப்பதைக்கண்டு பதட்டமான வசந்தியோ, “அம்மாடி மிதிலா..? என்னம்மா ஆச்சு..? உடம்புக்கு ஏதாவது செய்யுதா..?” என்று கேட்டிட, மயக்கம்தெளிந்து கண்விழித்த மிதிலாவோ மிகவும் களைப்பாகஉணர தன் தாயைப்பார்த்து, “ம்மா.. ரொம்ப பசிக்குதும்மா..! சாப்பிட ஏதாவது குடும்மா..!” என்று கேட்டிட, தன்மகள் கர்ப்பிணியாக இருக்கும் இந்தநேரத்தில், அவளது பசி முகத்தில் தெரியவே, அதனைக்கண்ட வசந்தியோ கண்களில் கண்ணீர் துளித்தபடி, “இதோ வரேன்மா..!” என்று கிச்சனுக்கு சென்று பார்க்க, அங்கே சாப்பிடுவதற்கு உணவு எதுவுமில்லை..!


அதனைக்கண்டவுடனே, “இதெல்லாம் தனது மாமியாரின் வேலைதான்..!” என்று புரிந்துகொண்ட வசந்தியோ, வீட்டில் இருக்கும் ரவையைவைத்து உடனடியாக உப்புமா செய்து கொண்டுவந்து மிதிலாவிற்கு கொடுக்க, அதனை வாங்கி வாஞ்சையுடன், பசியின் வீரியத்தில் வேகவேகமாக உண்டாள் மிதிலா.. உண்டுகொண்டிருந்த தன் மகளை பார்த்த வசந்தியோ கண்ணீர் சிந்தியபடி, “ஏன்டி..? உனக்கு இதெல்லாம் தேவையாடி..? உன்புருஷன், ஊரிலிருக்கிற எல்லோருக்கும் சாப்பாடு போடுறாரு..! அவரோட குழந்தைகளை சுமக்கிற நீ, இப்படி சோறுதண்ணி இல்லாமல் பட்டினியா கிடக்கவேண்டிய நிலைமை வந்துருச்சேடி..! நீ ஏன்டி இங்கேயிருந்து கஷ்டப்படுற..? தயவுசெஞ்சு உன் புருஷன் வீட்டுக்கு போயிடும்மா..!” என்று சொல்ல, தன் தாயிடத்தில் எந்தபதிலும் பேசாமல் மெலிதான சிரிப்பொன்றை மட்டுமே சிந்திய மிதிலாவோ முகத்தை வேறுபுறம் திருப்பியபடி அமர்ந்திட,


அதனைக்கண்ட வசந்தியோ மனதில், “ஐயோ கடவுளே..? எவ்வளவு சொல்லியும், இந்த பொண்ணு புரிஞ்சுக்கமாட்டங்கிறாளே..! இங்கே இருக்கவங்க, இந்த பொண்ணோட நிம்மதியை கெடுத்து இவளை கஷ்டப்படவைக்கிறாங்க..! இருந்தும், இந்தக்கஷ்டத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இங்கேயிருந்து இப்படி சாகுறாளே..?” என்று நினைத்தவளோ, “கடவுளே..? என் பொண்ணுக்கு சீக்கிரமே நல்லவழியை நீங்கதான் காட்டனும்..!” என்று வேண்டிக்கொண்டாள்..! இப்படியே இரண்டுநாட்கள் சென்றிட, அடுத்தநாள் சங்கரனோ விடுமுறைதினம் என்பதால், வீட்டிலிருக்கவே மிதிலாவின் மேடிட்டவயிற்றை பார்த்தவருக்கோ, அப்போதுதான் அவளுக்கு வளைகாப்பு செய்யவேண்டும் தோன்றியது..! “என்னதான் பெண்ணும்,மாப்பிள்ளையும் பிரிந்திருந்தாலும் சம்பிரதாயபடி சில சடங்குகளை தவிர்க்ககூடாது..!” என்று நினைத்தவரோ, பின்னர் உடனே அதனைசெயல்படுத்த முனைந்தார்.. அதனால், தன் மனைவியிடம் இதைப்பற்றி கலந்தோசித்தவரோ, “மிதிலாவிற்கு வளைகாப்பு நடத்துவதற்காக நாள் குடிப்பதற்கு ஜோசியரை காணவேண்டும்..!” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே, குறுக்கிட்ட வேதவள்ளியோ, “ஏன்டா சங்கரா..? உனக்கு அறிவு இருக்குதா..? நீ என்ன பண்றன்னு உனக்கு புரியுதா..?” என்று கேட்டிட, சலிப்பாக வேதவள்ளியைப்பார்த்த சங்கரனோ, “அம்மா..? இப்போ உனக்கு என்ன பிரச்சனை..? மிதிலாவுக்கு ஒன்னு என்றால், வரிஞ்சுகட்டிக்கிட்டு முன்னாடிவந்து நிக்கிறீங்களே..? என்னதான் வேணும் உங்களுக்கு..?” என்று கேட்டிட, “இப்போ இவளுக்கு வளைகாப்பு பண்ணலன்னு யாருடா அழுதா..?” என்றதும் கோபம்கொண்ட சங்கரனோ, “அம்மா..? அவ என் பொண்ணுமா..! அவளுக்கு நான் பண்ணாமல், வேறயாரு பண்ணுவா..?” என்று கேட்ட சங்கரனை ஏராளமாகப்பார்த்த வேதவள்ளியோ, “என்னது..? உன் பெண்ணா..? நீயா அவளை பெத்த..?” என்று நக்கலாக கேட்க,


அதில் கோபமுற்ற சங்கரனோ, “அம்மா..? உன்கிட்டயெல்லாம் மனுஷன் பேசமுடியாது..! வரவர நீ பண்றது, நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே போகுது..! முதல்ல ஒரு பெரியமனுஷியா நடந்துக்கோ..!” என்று கேட்க, கோபம்கொண்ட வேதவள்ளியோ, “இத்தனைகாலங்கள் தன் பேச்சிற்கு கீழ்படிந்து, தானிட்ட கோட்டைதாண்டாத தன்மகன், இன்று தன்னையே எதிர்த்துபேசுவதற்கு காரணம் மிதிலாதானே..?” என்று நினைத்து, அவள்மீது இன்னும் வன்மம்கூட, அங்கு நின்றிருந்த மிதிவிலாவிடம், “போதுமாடி..? சந்தோசமா..? என் வீட்டுக்கு பிடிச்ச சனியனே..! என்றைக்கும் என்னை எதிர்த்துபேசாத என்மகன், இன்று என்னை எதிர்த்து பேசிவிட்டான்..! இப்போ உனக்கு நிம்மதியா..? இதுக்குதானே நீ ஆசைப்பட்ட..? என் குடும்பம் களையறதை பாக்கத்தானே நீ, இவ்வளவுநாள் இங்கேயே வாழவெட்டியா இருக்க..? பீடையே..! உனக்கெல்லாம் வளைகாப்பு ஒரு கேடாடி..? முதலில் உன் வயித்துலிருக்கும் குழந்தைக்கு, அப்பன் யாருன்னே தெரியலை..! எவனை அப்பன்னு சொல்லிட்டு ஊர அழைச்சு உனக்கு வளைகாப்புபண்றது..? முதலில் அதை சொல்லுடி..? மானங்கெட்டவளே..? உன் கால்பட்ட இடமே விளங்காது..! அதனால்தான், நீ போறேன்னு சொன்னவுடனே உன்னை கட்டிக்கிட்டவனும் துரத்திவிட்டுட்டான்..! மறுபடியும்வந்து, எங்கவீட்ல புகுந்து எங்க குடியை கெடுக்கபார்க்குறயேடி..? மானங்கெட்டவளே..!” என்று விஷவார்த்தைகளை உமிழ்ந்திட, அதில் மனம் உடைந்துபோன மிதிலாவோ கண்ணீர்வடித்தபடி தன் நடத்தையைப்பற்றி கேவலமாக பேசும் வேதவள்ளியின்மீது கோபம்கொண்டவளோ, “போதும் நிறுத்துங்க பாட்டி..!” என்று உச்சஸ்தானியில் கத்த அங்கிருந்தவர்களுக்கெல்லாம், வேதவள்ளிபாட்டி எவ்வளவோமுறை மிதிலாவை சீண்டியும் இவ்வளவு நாள் வாய்பேசாத மிதிலா, இன்று வேதவள்ளியை எதிர்த்துபேசுவதை ஆச்சரியமாக பார்த்திட,


மேலும் தொடர்ந்த மிதிலாவோ, “நிறுத்துங்க பாட்டி..! நான் என்ன பாட்டி உங்களுக்கு பாவம் செய்தேன்..? நான் வேண்டுமென்றே இந்தவீட்டுக்கு வரலையே பாட்டி..? என்னை பெத்தவங்க, என்னை துரோகிகளிடமிருந்து காப்பாற்றுவதாக நினைத்து, ரயில்பெட்டியில் போட்டுட்டு போனபோதே, நீங்களும் என்னைப்பார்த்து அங்கேயேவிட்டுட்டு போயிருக்கலாமே..? இப்படி என்னை தூக்கிட்டுவந்து வளர்த்து, சின்ன வயசுலிருந்து இப்போவரை நாளுக்குநாள் வார்த்தையால குத்திக்காயப்படுத்தி ரணப்படுத்தறீங்களே..? இது உங்களுக்கே நியாயமா இருக்கா..? என்னைக்காவது ஒருநாள், உங்க வார்த்தையை எதிர்த்து பேசியிருப்பேனா..? ஏன்..? என் கல்யாண விஷயத்துலக்கூட நான் உங்களை எதிர்த்து பேசலையே..? நான் மனசார நினைச்சவரை கட்டிக்கஆசைப்பட்டது ஒரு குத்தமா..? எனக்கு கர்ப்பப்பையில் கோளாறு..! இயற்கையாக ஒருகுழந்தையைப் பெற்றுக்கொள்ளமுடியாது..! என்று டாக்டர்ஸ் என்கிட்ட சொன்னபோதே நான் செத்துபோயிட்டேன்..! அதிலிருந்து மீளமுடியாமல் தவிச்சிட்டிருந்தபோதுதான் அந்த தஷான் நாய் என்னைக்கடத்தினான்..! அவன்கிட்டயிருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள கொடுமையை அனுபவிச்சேன்..! பிறகு, ராகவேவந்து என்னை காப்பாற்றியும் நான் அவர்கூட போகாததற்கு காரணம், என்னால் அவருக்கு ஒரு வாரிசை பெற்றுத்தரமுடியாது..! என்றும், அடுத்தவன் கடத்திட்டுபோனதனால், எங்கே அவர் என்னை தப்பாக நினைச்சுட்டுவாரோ என்ற பயத்தில்தான் அவரை நான் தவிர்த்தேன்..! இறைவன்அருளால், எனக்கு குழந்தைபாக்கியம் கிடைத்தவுடனே அவர்கிட்டபோய் மன்னிப்புகேட்டு, அவரோட வாழ ஆசைப்பட்ட என்னைப்பற்றி, தப்புதப்பாக பேசி, தாழ்வு மனப்பான்மையை என் மனசில் வரவைத்தீங்க..! அதனாலதான், என் புருஷன்கிட்ட நான் கடைசிவரையும் போகாமயே இருந்துட்டேன்..! மனசளவுல ரணப்பட்ட எனக்கு, ஆறுதல் தேடித்தான் இங்கேவந்தேன்..! அது ஒரு தப்பா..? உங்களுக்கு நான் என்ன செய்தேன்..? ஏன் என்னை எதிரியைப்போல் நினைக்கிறீங்க..? நான் கர்ப்பமான விஷயத்தை, முதன்முதலில் ஆசையாக அம்மா கூறினபோது, இந்த குழந்தையோட அப்பா யாருன்னு அவமானப்படுத்தி, என்னை கடத்திட்டுபோன தஷான்னோடு சேர்த்து சந்தேகப்பட்டு பேசுறீங்களே..? நீங்களும் ஒரு பெண்தானே..? இப்போசொல்றேன்..! என்புருஷன் ஆம்பளை பாட்டி..! அவர்தான் என் வயித்துல வளர குழந்தைகளுக்கு அப்பா..! இதுதானே உங்களுக்கு தெரியனும்னு ஆசைப்பட்டீங்க..? தெரிஞ்சுக்கோங்க..!” என்று சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து மடமடவென்று வெளியேபுறப்பட்டு சென்றாள் மிதிலா..


எப்போதும் அவளுக்கு மனஅமைதி இல்லாதநேரங்களில் கோவிலுக்கு செல்வது வழக்கமென்று அனைவரும் அவளைவிட்டுவிட, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பரத்தோ பவித்ராவிடம், “ஏன் பவித்ரா..? உங்க பாட்டி இவ்வளவு கேவலமா நடந்துக்குறாங்க..?” என்று கேட்கவும், அதனைக்கேட்ட வேதவள்ளியோ கோபம்வந்து, “பவித்ரா..? உன்புருஷன் என்னடி அவளுக்கு சப்போர்ட்பண்ணி பேசிட்டிருக்காரு..?” என்று சொல்ல பரத்தோ, “பவித்ரா..? பாவம்..அண்ணி..! இவங்களால மனசுநொந்து போயிட்டாங்க..! இப்படியொரு கொடுமையை வேறெங்கேயும் அனுபவிக்க முடியாதளவுக்கு கொடுமைக்காரி உங்கபாட்டி..! ச்ச..!” என்றபடி முகம்சுழித்திட வேதவள்ளியோ, “பவித்ரா..? என்னடி உன் புருஷனையும், அந்தகைகாரி வளைத்து போட்டுட்டாளா..? அவளுக்கு இப்படி சப்போர்ட்பண்றாரு..?” என்று நக்கலாக கேட்க, கோபம்கொண்ட பாரத்தோ வேதவள்ளியை முறைத்தபடிநிற்க,


பவித்ராவோ வேதவள்ளியிடம், “பாட்டி..? கொஞ்சம் சும்மா இருக்கியா..?” என்று சொல்லிவிட்டு, “ஏங்க..? நான் தெரியாமல்தான் கேட்கிறேன்..? இந்தவீட்ல எந்த விஷயத்திலும் தலையிடாத நீங்க, ஏன் அக்கா விஷயத்துலமட்டும் இவ்வளவு அக்கறையாய் இருக்கீங்க..? அவள் என்னோட அக்கா..! நானே அமைதியாக இருக்கும்போது, நீங்க ஏன் பாட்டிகிட்ட சண்டைபோடுறீங்க..?” என்று சொல்ல பரத்தோ, “அவங்க, உன் கூடபிறந்த அக்கா என்பதற்காக நான் பேசலை..! என்கூடபிறந்தவனின் மனைவி என்பதற்காகத்தான் இவ்வளவு அக்கறைப்படுறேன்..!” என்று சொல்லிவிட்டு, கோபமாக ராகவின் வீட்டிற்குசென்றான்..


அங்கேசென்று உள்ளேநுழைந்ததும், “டேய்..ராகவ்..? வெளியே வாடா..! டேய்..ராகவ்..? எங்கடா இருக்க..? வாடா வெளியே..!” என்று கத்திய பரத்தைக்கண்ட நந்தனோ, “என்ன பரத்..? ஏன் இப்படி கோவமாக இருக்கீங்க..? என்னாச்சு..?” என்று கேட்க, நந்தினை கண்டுக்கொள்ளாத பரத்தோ, “டேய் ராகவ்..? கூப்பிடுறேன் இல்ல..? எங்கடா இருக்க..? இப்போ வெளியே வரப்போறியா என்ன..?” என்று கோபமாய் மிரட்ட நந்தனோ, “பரத்..? கொஞ்சம் பார்த்து பேசுங்க..! அவனை டேய்..!வாடா..போடான்னு பேசுறதை நிறுத்துங்க..!” என்றிட, அதனைக் கண்டுகொள்ளாமல் மேலும், “டேய்.. நீ இப்போமட்டும் வெளியே வரலை..? அவ்வளவுதான்..! உன்னை கொன்னுடுவேன்டா..! பாத்துக்கோ..?” என்று கோபமாக சொல்ல, நந்தனுக்கும் கோபம்வரவே சட்டென பரத்தின் சட்டைகாலரை பிடித்து, “சொல்லிட்டே இருக்கேன்..! கேட்காமல், அவனை கொன்னுடுவேன்னு என் முன்னாடியே மிரட்டுறியா..?” என்று திட்டும்போது குறுக்கிட்ட ராகவோ, “டேய் நந்தா..? அவனை விடுடா..!” என்றதும், ராகவ்வைப்பார்த்த நந்தனோ, “யாருடா இவன்..? உன்னையே மிரட்டுறான்..! உன்னை மிரட்டுவதற்கு இவனுக்கு என்னடா உரிமையிருக்கு..?” என்று கோபமாகபேச அடுத்தகணமே அசராது, “அவன் என் தம்பிடா..!” என்று பதில் சொன்னான் ராகவ்.. ஆம்..! ராகவ்வும் பரத்தும் உடன்பிறந்தவர்கள்தான்..! ராகவ்வின் தந்தைக்கு பிறந்த, சித்தி வயிற்றுமகன்தான் இந்த பரத்..! சிறுவயதில் ராகவ்வை வீட்டைவிட்டு அனுப்பியபிறகு, அவனது பிரிவு துயர்தாங்காமல் தவித்த ராகவின் தந்தையோ, தனது இளைய மகனை அழைத்து, “தான் ராகவ் விஷயத்தில் தவறிழைக்கவில்லை..! சித்தியாகவந்தவள், அவளது அண்ணன் பேச்சைக்கேட்டு எங்கே ராகவ்வை ஏதாவது செய்துவிடுவாளோ..? என்ற பயத்தில்தான் அவனை வீட்டைவிட்டு அனுப்பினேன்..! வாழ்வில் என்றாவது ஒருநாள் நீ, அவனை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தால், என் சார்பு நியாயத்தைசொல்லி அவனிடம் மன்னிப்பு கேட்டுவிடு..!” என்று கேட்டதன் காரணத்திற்காகதான், ஊர்ஊராக ராகவ்வை தேடி அலைந்தவனோ, அவன் பெங்களூரில் இருக்கும் விஷயமறிந்துதான் இங்கே அவனுடன் தன் தொழிலை தொடங்கினான்..!


இது ராகவிற்கும் தெரியும்தான்..! இருந்தும், சிறுவயதிலேயே ஏமாற்றபட்ட சிலஉறவுகளின் கசப்புகளினால், வெளிப்படையாக எதையும் காட்டிக்கொள்ளாமல் இவ்வளவுநாட்கள் இருந்துவந்தான்..! அன்று தஷானை சுடுவதற்கு முன்பும்கூட, அவனது காதில் ராகவ் கூறிய விஷயமும் இதுதான்..! “நான்தான், அன்று உனது தந்தை தயானந்தத்தின் சூழ்ச்சியினால், குடும்பத்தைவிட்டு வெளியே துரத்தியடிக்கப்பட்ட ராகவ்..!” என்பதுதான் அந்த செய்தி..! அதைக்கேட்டுதான் இறக்கும்தருவாயில்கூட தஷான் ராகவ்வைக்கண்டு அதிர்ச்சியாகி நின்றான்..!


இப்போது நடந்த அனைத்தையும் புரிந்த நந்தனோ பரத்தின் சட்டையிலிருந்து கையை எடுத்துக்கொண்டு, “சாரி பரத்..! நீங்க யாருன்னு தெரியாமல், உங்க சட்டையை பிடித்துவிட்டேன்..!” என்று சொல்ல, “பரவாயில்லை..! இவன்மேலிருந்த பாசத்துலதானே அப்படி பண்ணிங்க…! பரவாயில்ல..!” என்று சொல்லிவிட்டு ராகவ்வின்புறம் திரும்பி, “என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல..? ஏதோ சின்ன மனஸ்தாபம்..! ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கீங்கன்னு பார்த்தால், இப்படியே மொத்தமாக பிரிஞ்சுபோயிடுவீங்க போல..? அங்கே அந்தபாட்டி, அண்ணியை அவ்வளவு கொடுமைபடுத்துறாங்க..! என்னாலயே அதை பார்த்துட்டு சகிச்சுட்டிருக்க முடியலைடா..! நீ போய் அவங்களை கூப்பிடு..! கண்டிப்பா அண்ணி வருவாங்க..! அதுக்காகதான் அவங்களும் காத்துட்டிருக்காங்க..!” என்று சொல்ல, “அவளாகதானேடா போனாள்..? அப்போ அவளாதானே வரணும்..? என்ன அவள் வேண்டாம்னு சொல்லிட்டு போனதுக்கு, நியாயமான ஒரு காரணம் சொல்ல சொல்லு..!” என்று கோபமாக ராகவ் சொல்ல பரத்தோ, “அண்ணியால் உனக்கு குழந்தை பெற்றுத் தரமுடியாது என்றும், அவர்களைவிட்டு நீ பிரிந்தால்தான், இன்னொரு திருமணம் செய்துகொள்ளமுடியும் என்றும், இன்னொருத்தனால் கடத்தப்பட்டபிறகு, அண்ணியால் உனக்கு எந்த அவமானமும் ஏற்படக்கூடாது என்பதற்காகதான்டா, அவங்க மனசை கல்லாக்கிக்கிட்டு, அவங்க அப்பாவீட்டுக்கு போயிட்டாங்க..!” என்று, மிதிலா போனதற்கான காரணத்தைக்கூற, அப்போதுதான் ராகவ்விற்கு அனைத்தும் புரியஆரம்பித்தது..!


பின்னர் பரத்தை பார்த்தவனோ மௌனமாய் நிற்க, மேலும் தொடர்ந்த பார்த்தோ, “டேய் ராகவ்..? நீ போய் அண்ணியை கூட்டிட்டுவாடா..! ப்ளீஸ்..! அவங்க ஏற்கனவே மனசு உடைஞ்சு போயிட்டாங்கடா..! அந்தபாட்டி உன் வயித்துல வளரும் குழந்தைக்கு அப்பா யாருன்னு..? கேவலமா பேசிடுச்சுடா..!” என்று சொல்ல, தன்னவளின் நிலையை எண்ணி வருந்திய ராகவ்வோ, “இனியும் தாமதிக்ககூடாது..!” என்று வேகமாக மிதிலாவை தேடிச்சென்றான்.. அதேபோல் இங்கே வீட்டில் இருந்தவர்களும் மிதிலாவைத்தேட, மிதிலா கோவிலில் மட்டுமல்ல வேறு எங்கேயும் காணவில்லை..! அதில் பதட்டமானவர்களோ ராகவிற்கும் பரத்திற்கும் தகவல்தெரிவித்து, ஆளுக்கு ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, இவ்வளவுகாலங்கள் அமைதியாக இருந்த வசந்தியோ, மிதிலா காணாமல் போனதற்கான காரணமான வேதவளியைப்பார்த்து, “இப்போ உங்களுக்கு சந்தோசமா..? பாவம்..! என் பொண்ணை கரிச்சுக்கரிச்சுக்கொட்டி, இப்ப அவளை மொத்தமா காணாமல்போக வச்சிட்டீங்க..! இப்போ சந்தோஷமா..? ஏன் அத்தை இப்படி இருக்கீங்க..? அவள் ரெண்டு குழந்தைகளை வயித்துல சுமந்துட்டிருக்கும் கர்ப்பிணி பொண்ணுத்தை..! அவள் சாப்பிடுற சாப்பாட்டுல உப்பள்ளி கொட்டி, ஒருநாள் முழுக்க பட்டினி போட்டு இருக்கீங்களே..? இது நியாயமா..? மிதிலாவால் இந்த குடும்பத்துக்கு நன்மைதான் நடந்திருக்கு..! ஒருபோதும் கெட்டது நடந்ததே இல்லை..! வாயில்லாபூச்சி அத்தை என்பொண்ணு..! அவளைப்போய் இப்படி கொடுமைபடுத்திட்டீங்களே..? நீங்களும் ஒரு பொண்ணுதானே..? நம்ம வீட்டிலேயும் அப்படி ஒரு பொண்ணு இருக்கா..! நியாபகம் வச்சுக்கோங்க..! இப்படிப்பட்ட பாவமெல்லாம் செஞ்சா, நீங்க செத்த பின்னாடிகூட சொர்க்கத்துக்கு போகமுடியாது அத்தை..! நீங்கெல்லாம் என்ன ஜென்மமோ..?” என்று கூறிவிட்டு செல்ல, பவித்ராவும் அவளது பங்கிற்கு, “பாட்டி..? உன்னைமாதிரி ஒரு பொம்பளையை நான் பார்த்ததே இல்லை..! இது வாயா..? இல்ல தேள் கொடுக்கான்னு தெரியலை..? அந்தளவுக்கு ஒவ்வொருமுறையும் மிதிலாவிடம் நீங்க விஷத்தை கக்கியிருக்கீங்க..! இனிமேலாவது தயவுசெஞ்சு திருந்திவாழுங்க பாட்டி..!” என்று கூறிவிட்டு செல்ல, வேதவள்ளிக்கோ அப்போதுதான் உரைக்க தொடங்கியது..!


இங்கு மிதிலாவோ, வேதவள்ளி கூறிய கடும்சொற்களையெல்லாம் மனதில் போட்டு குழம்பியபடி, “தான் செய்த முட்டாள்தனத்தினால், இனி எப்போதும் தன்னவனிடம் சேரமுடியாது..! என்றாலும், இனி யாருடைய கடுமையான சொல்லுக்கும் தான் ஆளாகிடக்கூடாது..! என்று நினைத்து, தன் வயிற்றிலிருக்கும் குழந்தைகளைப்பற்றிக்கூட யோசிக்க தவறியவளோ, தனது உயிரைத்துறக்க முடிவுசெய்து கண்ணீர் சிந்தியபடி, தன் வயிற்றிலிருக்கும் குழந்தைகளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு, கோவிலுக்குசெல்லும் வழியிலிருக்கும் உயரமான பகுதிக்குச்சென்றவளோ, அங்கிருந்து கீழேகுதிக்க முற்பட சட்டென்று ஒருகரம் இழுத்து அவளை பின்னுக்கு தள்ளியது..!


திடீரென்று தன்னை குதிக்கவிடாமல் தடுத்தவனை பார்த்தவளோ, ஒருகணம் அதிர்ச்சியாகி நின்றாள்..! ஆம்..! அவளை தடுத்தது வேறு யாருமில்லை சாட்சாத் அவளது கள்வன்தான்..! எங்கெங்கோ தேடி மிதிலாவை காணாதவனோ, அடிக்கடி அவள்செல்லும் கோவிலுக்கு சென்று பார்க்கையில்தான், மிதிலா இந்த உயரமானபகுதிக்கு வந்திருக்க வாய்புள்ளதை எண்ணியவனோ, “இப்படிதான் ஏதாவது முட்டாள்தனமாக முடிவெடுப்பாள்..!” என்று நினைத்து, ஓடோடி வந்துவிட்டான்..! பின், தன்னவனை பார்த்தவளோ இவ்வளவுநேரம் விசும்பலாக அடக்கி வைத்திருந்த அழுகையை, மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டிதீர்த்திட, அவள் மனதிலிருக்கும் ரணங்கள் புரிந்தவனோ, “அழுதாவது அனைத்தையும் கொட்டிதீர்த்துவிடட்டும்..!” என்று நினைத்து நின்றிருக்க மிதிலாவோ, “ஏன் என்னை தடுத்தீங்க..? எனக்கு வாழவேபிடிக்கலை..! என்னை விடுங்க..!” என்று சொல்ல ராகவ்வோ, “அப்போ சரி..! நானும் உன்னோடுசேர்ந்து குதிக்கிறேன்..! நாம ரெண்டுபேரும் ஒண்ணாவே செத்துப்போயிடலாம்..!” என்று சொல்ல, அதனை அவசரமாக மறுத்தவளோ, “ நீங்க எதுக்கு சாகணும்..?” என்று கேட்டதும், “என் பொண்டாட்டிகயும் பிள்ளைகளும் இல்லாத உலகத்தில், எனக்கு மட்டும் இடம் எதுடி..? நீங்க இல்லாமல் என்னால வாழமுடியாதுடி..!” என்று தன்னவளின் கண்களைப்பார்த்து உருக்கமாகபேச, தன் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு, தான்தான் அப்பா..! என்று உரைத்தவனைக்கண்டு, அவன் தன்நடத்தையின்மீது எந்த சந்தேகமும் படவில்லை..! என்பதை புரிந்தவளோ, வேகமாகதாவி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..! தன் மனைவியின் அணைப்பில் உருகியவனோ, தன்னவளை கட்டிக்கொண்டு, “மித்துமா..? ஐ லவ் யூடி..!” என்று சொல்ல,


அதனைக்ககேட்டு கண்ணீர்சிந்தியவளோ, “ராகவ்..? ஐ லவ் யூராகவ்..! என்னை நீங்க நம்புறீங்களா..? நான் சுத்தமானவன்னு நீங்க நம்புறீங்களா..?” என்று கேட்டிட, “நான் உன்னை சந்தேகப்பட்டால், அது என்னையே சந்தேகிப்பதற்கு சமம்டி..! உன்னை என்னைக்குமே, நான் பிரிச்சு பார்த்ததே இல்லை..! அன்னைக்கு விளையாட்டாய் நீ எழுதிய கவிதை, நம்வாழ்க்கையில் நிஜமாகிவிட்டது..! உனக்கு நான் பாற்கரனாக (ஶ்ரீராமனாக) இருக்கிறேன்..! என்று சொன்னாயே..? இப்போ நான் சொல்றேன்டி..! நீதான்டி என்னோட பார்தவி..! (சீதை) என்றதும், வேறென்ன வேண்டும் பெண்ணவளுக்கு..? தன்னை சீதைக்கு நிகரானவள் என்று, தன்னவனின் வாய்மொழியாக கேட்டவளின் மனதில் இன்பம் பொங்கவே, மேலும் தன்னவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..!எபிலாக்


இரண்டு வருடத்திற்கு பிறகு..


திருமணமண்டபத்தில் ராகவ்வின் குடும்பத்தினர் அனைவரும் அவசரஅவசரமாக ஆடியோடி வேலை செய்துகொண்டிருக்க, மணப்பந்தலில் ஐயர்கூறிய மந்திரங்களை சிரத்தையுடன் கூறிக்கொண்டிருந்தான் நந்தன்.. நந்தனுக்கு துணைமாப்பிள்ளையாக ராகவ்வும் பரத்தும் அவர்களது கைகளில் தங்களின் ஒருவயது ஆண்குழந்தைகளான குஷனையும், ஹாசனையும் ஏந்திக்கொண்டு நின்றிருக்க, மிதிலாவோ மணப்பெண் லீலாவை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.. ஆம்..! மிதிலாவின் தோழி வாயடி லீலாவைதான், நந்தன் இரண்டுஆண்டுகளாக கடினப்பட்டு காதல்செய்து, இன்று கரம்பிடிக்கவிருக்கிறான்..! அப்போது மிதிலாவின் இன்னொரு மகனை தூக்கிவந்த பவித்ராவோ, “அக்கா..? இங்கேபாரு..? உன்பையன் சேட்டை பண்ணிட்டே இருக்கான்..!” என்ற சொல்ல மிதிலாவோ, தனது ஒருவயது மகன் லவனை பார்த்துக்கொஞ்சியபடி, “கொஞ்சம் சேட்டைபண்ணாமல் இருடி தங்கம்..? அம்மா, இதோ வந்துடுறேன்..!” என்று சொல்ல, அவனுக்கு என்ன புரிந்ததோ..? மழலைமொழியில் சரியென்று தலையாட்டினான்..! பின்பு ஐயரோ, முகூர்த்தவேளை நெருங்கிவிட்டது என்றுகூறி, பெண்ணை அழைத்து வரச்சொல்ல, மிதிலா லீலாவை அழைத்துவந்து மணப்பந்தலில் அமரவைத்தபின், ராகவ்வின் அருகே நின்றுகொள்ள ராகவ்வோ, “எங்கடி போன..? இந்த குஷன்பையன் தொல்லை தாங்கமுடியலை..! பாரு..? அம்மா..அம்மான்னு உன்னையே கேட்டுட்டு இருக்கான்..!” என்று சொல்ல மிதிலாவோ, “அப்படியே இரண்டும், உங்களைமாதிரி வந்து பிறந்திருக்கு..! நான்மட்டும் என்ன பண்ணட்டும்..?” என்று சொல்ல, அதற்குமேல் பேசுவானா ராகவ்..?


பின்பு ஐயரோ, “கெட்டிமேளம்..!கெட்டிமேளம்..!” என்றுகூறி நந்தனின் கையில் தாலி எடுத்துக்கொடுக்க, அதை வாங்கி லீலாவின் கழுத்தில் மூன்றுமுடிச்சுட்டான் நந்தன்..! அப்போது அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அச்சத்தை தூவ, மிதிலாவின் பெற்றோர்களாகிய சங்கரனும் வசந்தியும் அட்சதைதூவி வாழ்த்தினர்..!

அன்றைய நிகழ்வுக்குப்பிறகு வேதவள்ளிபாட்டி வீட்டைவிட்டு எங்கும் வெளியே வருவதே இல்லை..! கேட்டால்..? “நான் திருந்திவிட்டேன்..!” என்று, கேட்பவர்களுக்கே பாடம் எடுக்கிறதாம்..! எது உண்மை என்று, அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்..!


நந்தன் தாலிகட்டுவதை பார்த்து, அச்சதைதூவியப்படியே தன் மனையாளை பார்த்த ராகவ்வோ, “மித்துக்குட்டி..?நாமும் மறுபடி இன்னொருகல்யாணம் பண்ணிக்கலாமாடி..?”என்று காதோரமாககேட்க, வெட்கம்கொண்ட மிதிலாவோ, “இப்போ கல்யாணம் பண்ணசொல்லுவீங்க..? அப்புறம் மறுபடியும் முதலிரவு வேண்டுமென்று கேட்பீங்க..! எதுக்குப்பா வம்பு..?” என்று சொல்ல, இவர்கள் கிசுகிசுத்தபடி பேசிக்கொண்டிருப்பது பரத்திற்கும் நந்தனுக்கும் தெளிவாகபுரியவே இருவரும் ராகவைக்கண்டு, “மறுபடியும் முதலில் இருந்தா..?” என்று பாவமாகபார்த்திட, அதைக்கண்டு வெட்கத்திலிருந்த ராகவ்வும் மிதிலாவும் பார்ப்பவர்களின் கன்களுக்கு பாற்கரனில் உருகிய பார்தவியாகவே நின்றிருந்தனர்..! பின்பு, இவர்களைக்கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் சிரிக்கத்தொடங்கினர்..! இப்படியே அந்த அரங்கம்முழுவதும் சிரிப்புசத்தம் நிறைந்திருந்தது..! இதேமகிழ்வுடன் நாமும் இவர்களிடமிருந்து விடைபெறலாம்.


நன்றி


சுபம்.
 
Last edited by a moderator:
மிதிலா கொஞ்சம் நிதானமா யோதிக்கலாம் எல்லாத்துலையும்!!... எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சது!!... வாழ்த்துகள்
 
Top