நீக்கமற நிறைந்தாய் உயிரே 4
காலைத் தென்றல் பாடி வரும்
ராகம் புது ராகம்..
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்..
சிறகுகள் வேண்டும்..
சன் லைப்பில் பாடல் ஓடிக் கொண்டிருக்க கையில் காபி கோப்பையுடன் ஜன்னலில் தெரிந்த வானத்தை வெறிக்க பார்த்தபடி நின்றிருந்தாள் நன்விழி.
இரவு எப்பொழுது அறையில் வந்து படுத்தது எப்படி என்று புரியவில்லை.. இரவு மொட்டை மாடியில் படுத்த நினைவு தான் இருந்தது.. எப்படி கட்டிலில் படுத்தோம் என்ற நினைவு சுத்தமாய் இல்லை.. ஆனால் தன்னை தீண்டிய கரத்தின் மென்மையை பெண்ணவளால் இன்னும் தன் உடலில் உணர முடிந்தது.
ஏனோ அந்த கரத்திற்கு உரியவனை காண வேண்டும் என்று தூண்டினாலும் ஏமாற்றம் தாங்கிய மனம் அதை ஏற்க மறுக்கிறது.. ஆனால் நிச்சயம் அந்த கரத்திற்கு சொந்தமானவன் தன்னை பாதுகாப்பான் என்று நினைத்தாலும் யாரின் மேலும் நம்பிக்கை வர மறுத்தது.
அவளின் நினைவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் அலாரம் அடித்து அன்றைய நாளை நினைவு கூர்ந்தது.
தன் நினைவில் இருந்து மீண்டவள் தன் கையில் உள்ள காபியை முழுதாய் குடித்து விட்டு வேகமாய் சென்று கல்லூரி கிளம்பினாள்.
இதற்கு மேலும் எதை யோசித்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.. எப்பொழுதும் நடப்பது தானே என்ற தன் நினைவை புறம் தள்ளி வைத்தவள் தன் வேலைக்கு கிளம்பினாள்.
இங்கே தன் அறையில் வேலையாய் இருந்த வசீகரனின் அலைபேசி அடித்து அதன் இருப்பை உணர்த்தியது.
அதை அட்டெண்ட் செய்து பேசியவனின் முகமோ பல வித உணர்வுகளை வெளிப்படுத்தியது.
" நான் இப்பவே வர்றேன் ராபரட் அவனை விட்டுடாதே.." என்று அடுத்த பக்கம் இருந்தவனுக்கு உத்தரவு பிறப்பித்தவன் அவசர அவசரமாய் தன் வேலையை ஒதுக்கி விட்டு எங்கேயோ கிளம்பினான் கண்களில் கோபத்துடன்.
மனமோ வேதனையில் தத்தளித்தது.. எப்படி இத்தனை நாள் இவன் ஒருவன் இருப்பதை மறந்து போனேன்.
கண்களில் கோபக்கனல் பொங்க சிட்டிக்கு வெளியே இருந்த அந்த பழைய இரும்பு பேக்டிரியில் தன் வண்டியை நுழைத்தவன் கம்பீரமாக அதிலிருந்து இறங்கினான்.
சுற்றிலும் தன் பார்வையை செலுத்தியவன் அழுத்தமான காலடியோசையுடன் உள்ளே சென்றான்.
அவன் உள்ளே வரவும் எதிரில் கட்டுமஸ்தான உடலுடன் வந்தவன் தலைகுனிந்தபடி,
"பாஸ் அந்த அறையில இருக்கான்.." என்றவனுடன் இணைந்து நடந்தான் வசீகரன்.
அவனின் நடையில் இருந்த கம்பீரமும் முகத்தில் இருந்த கோபமும் அருகிலிருந்தவனின் உடலை நடுங்க செய்தது.
அவனுக்கு தெரியும் வசீகரன் எந்தளவுக்கு பெயரை போல மென்மையானவனோ அதே அளவுக்கு அரக்கனும் கூட.
அவனின் மறுமுகம் கண்டவர்கள் சிலர் தான்.. அந்த சிலரில் அவனும் ஒருவன்.
கூடவே வந்தவன் அந்த அறையின் கதவை திறக்க அறை முழுவதும் இருட்டில் சூழ்ந்திருந்தது.
இருட்டு கண்களுக்கு புலப்பட்டதும் புள்ளியாய் தெரிந்த வெளிச்சமான இடத்திற்கு சென்றான்.. அந்த வெளிச்சம் இருட்டு கண்களுக்கு புலப்பட்டவுடன் தான் தெரியும்.. அதை நோக்கி சென்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் கைக்கு மேலே உள்ள ஒயரை இழுக்க பகலைப் போல் வெளிச்சம் பரவியது.
அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் வாலிபன் ஒருவனை கட்டி வைத்திருந்தனர். அவனோ ஆழ் மயக்கத்திலிருப்பான் போல தலை தொங்கியபடி இருந்தது.
தன் அருகில் இருந்தவனை பார்த்து,
"ராபின் எங்கே.." என்றான் அழுத்தமாய்.
"பாஸ் நீங்க சொன்னதை வாங்கிட்டு வர போயிருக்காரு.." என்றான் பவ்யமாய்.
அதை கேட்டு தலையாட்டியவன், "அதை கொண்டு வா.." என்று கட்டளையிட்டான்.
தலையாட்டியவன் அங்கிருந்து சென்ற சற்று நேரத்தில் ஒரு வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தான்.
அந்த பெரிய வாளி நிறைய தண்ணீர் ஆவி பறக்க இருந்தது.
வசீகரன் கண் அசைக்க அதற்காக காத்திருந்தவன் போல் தலை கவிழ்ந்திருந்தவன் மேல் அப்படியே தூக்கி ஊற்றினான்.
அதுவரை உணர்வில்லாத இருந்தவன் உடல் தடதடக்க கண் விழித்தவனின் எதிரே எமனாய் அமர்ந்திருந்தான் வசீகரன்.
அவனை பார்த்ததும் கண்களில் மரண பயத்துடன், "வசீ நீ நீயா.. என்னை ஏன் கட்டி வச்சிருக்க.. நான் உன்னோட நண்பன் தானா வசீ.." என்று நயந்தியபடி பேசினான்.
அதை கேட்டு மௌனமாய் வலியுடன் சிரித்த வசீ மீண்டும் திரும்பி தன் பக்கத்திலிருந்தவனை காண அவனின் பார்வைக்கு பொருள் அறிந்தவனோ வேகமாய் எழுந்து சென்று கையில் ஒரு மிஷினுடன் வர அதை கண்டதும் எதிரிலிருந்தவனின் கண்களில் உயிர் பயம் ஊசலாடியது.
" வசீ வேணாம்னு சொல்லு.. முதல்ல என்னை அவுத்து விட சொல்லு.. நான் போகனும் வசீ.. இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா உனக்கு தான் பிரச்சனை.. வேணாம் வசீ விட்ற சொல்லு.." என்று கத்தியபடி தன்னை கட்டியிருந்த சேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினான்.
ஆனால் அவன் பிடிபட்டிருப்பது ஒரு இரும்பு பிடிகாரனிடம் என்று அவனுக்கு தெரியவில்லை போலும்.
அதே நேரம் அங்கே வேகமாய் வந்தான் ராபின்.
" பாஸ் இதுல நீங்க கேட்டது இருக்கு.. பாஸ் அப்புறம் மேடம் இன்னைக்கு உங்களை பாக்க கேட்டாங்க பாஸ்.." என்றான் தலைகுணிந்தபடி.
"ராபின் இப்போ வந்த வேலையை முடி.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.. எனக்கு இன்னைக்குள்ள இவன்கிட்ட இருந்து அந்த வீடியோ ஆதாரம் வேணும் ராபின்.. அது என்னோட ஹனியோடது.. யாருக்கும் அவ்வளவு ஈசியா கிடைக்க கூடாது.. டூ சம்திங் இட் நீட்புல்.." என்றான் கண்களில் வலியை தேக்கியபடி.
அதை கேட்ட எதிரிலிருந்தவனோ, "வசீ அந்த வீடியோ தானே நான் தந்துடறேன்.. என்னை விட்டுடு.. நான் இங்கேயிருந்து போயிடுறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் வசீ.." என்றபடி ராபினின் கையில் இருந்த பொருளை பார்த்தவன் கண்களுக்குள் பயபந்து உருண்டது.
அலட்சியமாக அவனை பார்த்த வசீகரன்,
"என்ன கருணா அவ்வளவு பயமா உனக்கு.. இன்னமுமா நீ சொன்னதை நான் நம்புவேன்.. அப்படி என்னை ஈசியா நினைச்சிடாத கருணா.. நான் பழைய வசீகரன் இல்லை.. அந்த வசீகரன் அப்பாவி யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவான்.. ஆனா இந்த வசீகரன் மீண்டு எழுந்து வந்தவன் டா.. சில நம்பிக்கை துரோகிங்க செஞ்ச செயல் என்னோட ஹனியை என்கிட்ட இருந்து பிரிச்சது.. அந்த துரோகிங்களுக்கு சரியான தண்டனை நான் தானே கொடுக்கனும்.. அது தான் இப்போ கொடுக்க போறேன் கருணா.. அதுக்கு முதல் பலி நீதான்.. நல்லா எண்ணிக்கோ உன்னோட மரணம் இனி ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நொடியும் நான் தான் எழுதுவேன்..
இனி உன் வாழ்நாள் இந்த இருட்டறைக்குள்ள முடிய போகுது.. நீ இருந்ததுக்கான எந்த ஒரு அடையாளமும் இனி இருக்கப்போறது இல்லை கருணா.. ராபின் இவனோட பாவத்துக்கான சம்பளத்தை கொடுத்துடு.." என்று கட்டளையிட்டபடி அவனின் கையில் ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
தன் முதலாளியின் கட்டளைக்கேற்ப தன் கையில் இருந்த பாக்சை அந்த டேபிளில் வைத்தவன் அதை திறந்து அதிலிருந்த ஒரு ஊசியை எடுத்தவன் பக்கத்திலிருந்த சிறிய ஐஸ் பாக்சை திறந்தான்.
அதில் சுகமாய் உறங்கி கொண்டிருந்த அந்த மருந்தை பத்திரமாய் எடுத்தவன் அந்த பெரிய ஊசியில் அதை ஏற்றி கருணாவிடம் சென்றான்.
அதை பார்த்தவன் கண்களில் பயம் மிகுந்து தெரிய அதை தன் கண்களால் ரசித்து பார்த்த வசீகரனின் கண்களில் அந்த ரசனையை தாண்டி கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.
தன் கண்களை இறுக மூடியவன் கண்களில் சில காட்சிகள் நிழலாய் தெரிய ஆடவனின் மூக்கில் செந்நிற உதிரம் வழிந்தது.
அதை கண்ட ராபின் வசீகரனின் அருகில் இருந்தவனிடம் கண் காட்ட சற்று நேரத்தில் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்றவனின் காதுகளில் ரசீ என்ற பெண் குரல் காதில் ஒலித்து மறைந்தது.
அந்த அடியாளோ கீழே விழ இருந்த வசீகரனை தாங்கி கொண்டான்.
அதை வலியுடன் பார்த்த ராபின் வலுக்கட்டாயமாய் கருணாவின் இடது கையில் அந்த ஊசியை இறக்கி விட்டு வந்து வசீயை தன் மடியில் தாங்கி கொண்டவன் இருவரும் சேர்ந்து அவனை காருக்கு தூக்கி சென்றனர்.
"கடம்பா இவனை பாத்துக்கோ.. நான் பாஸை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.." என்று அந்த அடியாளுக்கு உத்தரவிட்டு விட்டு சென்றான்.
இங்கே கல்லாரிக்கு வந்த நன்விழியின் உடலில் ஏதேதோ ரசாயன மாற்றம் தோன்ற பெண்ணவளின் உடல் வியர்வையில் நனைந்து கண்கள் இருட்டி கொண்டு கீழே மயங்கி விழுந்தாள்.
ஹாய் மக்களே கதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பா.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க மக்களே.