எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-18

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-18

அந்த வார்த்தைகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அப்படியே திக்பிரம்மை பிடித்தாற் போல அமர்ந்திருந்தாள் இனி.

ரோஹித் பேசிய வார்த்தைகளைவிட தன் தந்தையின் பேச்சில் தான் முற்றும் உடைந்துப் போனாள்.

“இங்க பாரு இனி, நீ ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது, பாரீன்ல இருக்கிறவங்களுக்கு
இதுவெல்லாம் ரொம்ப சகஜம், அவருக்கு ஏத்த மாதிரி உன்ன நீ மாத்திக்கிறது தான் நல்லது, இன்னொரு விஷயம், என் உயிரை அவரு காப்பாத்தி கொடுத்த நன்றிக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் தான் அவர்கிட்ட கேட்டேன், அதை மனசில வச்சிட்டு நடந்துக்கோ, இன்னும் இருபது நாள்ல கல்யாணம், இதுக்கு மேல இந்த விஷயத்த பத்தி பேச ஒன்னுமில்ல” என்று முகத்தில் அறைந்தார் போலப் பேசிய தந்தையை நினைத்துக் குமைந்தாள்.

எல்லாம் விதிவசம் என்று விட்டு விடவும் முடியாமல், உரியவன் உடன் இல்லாததால் போராடவும் முடியாமல் தவித்தாள் இனி.

இதய்யை பற்றி எவ்வளளோ விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பணிக்குச் சென்றாலாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அந்த வாய்ப்பும் கிட்டாமல் போனது.

ரோஹித்தை பற்றி நினைத்தாலே உடம்பெங்கும் தீ வைத்தது போலப் பற்றி எரிந்தது. அவனைப் பற்றிய நினைப்பே ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும்போது, காலம் முழுதும் அவனுடனான வாழ்வு ஒரு நரகம் என்ற ஒன்றும் மட்டும் புரிந்தது.அழுகையை தவிர வேறு எந்தத் துணையும் இல்லாது போக, வாழ்வின் மீது உட்சபட்ச வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு.

தன் அறையிலே முடங்கியவளுக்கு, ஏதோ சிறைச்சாலையில் இருப்பது போன்றதொரு உணர்வு. யாரும் காணா வண்ணம் தாம் மறைந்து போய் விட வேண்டுமென்று தோன்றியது.

அப்போது தன் துறைப் பேராசிரியரிடமிருந்தது இனியிற்கு அழைப்பு வந்தது.

“........”

எதிர்முனையில் சொல்லப்பட்ட விஷயத்தில் ஒரு நிமிடம் மகிழ்ந்தவள், “கண்டிப்பா நான் போறேன் சார்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

இந்த வாய்ப்பை விட்டால் இனிமேல் இதுபோல் வெளியே செல்ல வழியே இல்லை என்று எண்ணியவள், நேராகத் தன் தந்தையிடம் சென்றாள்.

“ என்னோட ஹெட், டாக்டர் சொக்கலிங்கம் கால் பண்ணியிருந்தார், நெக்ஸ்ட் வீக் கொடைக்கானல்ல மெடிக்கல் கேம்ப் ஒன்னு ஏற்பாடு பண்ணியிருக்காங்க, பத்து பேர செலக்ட் பண்ணியிருக்காங்க, நானும் அதுல ஒரு ஆள், நான் கேம்ப் போகனும்” என்றாள் அறிவிப்பாக.

அவளின் இந்தப் பேச்சில் சினம் மூண்டாலும் அதை வெளிக்காட்டாமல், “இன்னும் இருபது நாள்ல கல்யாணத்த வச்சிகிட்டு இந்த மெடிக்கல் கேம்ப் ரொம்ப அவசியமா?” என்றார்.

“ எனக்கு அவசியம் தான்” என்று அவளிடமிருந்து கோவமாகப் பதில் வந்தது.


தந்தையும் மகளும் இதுப்போன்று பேசினால் கண்டிப்பாக ஏதும் சண்டை வரும் என்றெண்ணிய இனியின் அத்தை, ரத்தினம் எதோ பேச ஆரம்பிக்கும் போதே, “அண்ணா விடுங்க, அவ போகட்டும், இப்போதைக்கு அவளுக்கு ஒரு வேலையும் இங்க இல்ல, பாவம் புள்ள அன்னைக்கு ஹாஸ்பிட்டல நடந்த பிரச்சனை ல இருந்து அவ முகமே ரொம்ப வாட்டமா இருக்கு, கொஞ்சம் வெளியில் போயிட்டு வந்தா அவளுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்” என்றார் மேகலா.

மகள் எந்த மறுப்புமின்றி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதே அவருக்குப் போதுமானதாக இருந்ததால், அதற்கு மேல் எந்த வாதமும் செய்யாமல், இனியை மருத்துவ முகாம் செல்ல அனுமதித்தார் ரத்தினம்.

“சரி போயிட்டு வரட்டும், ஆனா அங்க போறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் போகட்டும்” என்றார் தன் மூக்கு கண்ணாடியைச் சரி செய்தவாரே.

அதில் அதீத கோபம் கொண்ட இனி ஏதோ கூறப் போக, அவளை மேகலா தன் கண்ணசைவில் தடுத்திருந்தார்,

“சரிங்கண்ணா நான் இனியை மாப்பிள்ளைகிட்ட பேசச் சொல்றேன்” என்றுக் கூறியதால், அந்தப் பேச்சு அத்துடன் நின்றது.

“நீங்களும் ஏன் அத்த…” என்று அவள் தன் அத்தை மேகலாவிடம் பேச ஆரம்பித்த போதே, “வேண்டாம்டா குட்டி, இதுவரை இந்த வீட்டுல நடந்த பிரச்சனையே போதும், அண்ணன் தான் ஒத்துக்கிட்டார்ல அப்புறம் என்னடா கண்ணு, போ! போய் மாப்பிள்ள தம்பிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நீ கிளம்பு” என்றார் பொறுமையாக.

அவரிடம் மேற்க் கொண்டு எந்த வாதமும் செய்யாதவள், வேண்டா வெறுப்பாக ரோஹித் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

நீண்ட நேரம் கழித்து அழைப்பு ஏற்கப்பட, “மிஸ்டர் ரோஹித், ந… நான் மிருணாளினி பேசுறேன்” என்றாள். அந்தப் பக்கம் பெரும் இரைச்சலாக இருந்தது. “ஹலோ…. ஹலோ” என்று அவள் பேசியதற்கு எந்தப் பதிலும் இல்லாது போகவே, அழைப்பைத் துண்டித்தவள், கடும் எரிச்சலுற்றாள்.

‘இடியட் இவன் ஒரு ஆளுன்னு இவனுக்குப் போன் பண்ண வேண்டியதா இருக்கு, எல்லாம் என் தலையெழுத்து’ என்று அவள் நொந்துக் கொண்டிருந்த போதே, அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ” என்றாள் தன் எரிச்சலைக் கட்டுப்படுத்தியவாரே.

“ஹே பேப்! வாட்ஸ் அப்” என்றவனின் குரலில் எதோ வித்தியாசத்தை உணர்ந்தவள், அவனுக்குப் பின்னால் இருந்து யாரோ முணுமுணுக்கும் சப்தம் கேட்டது.எதுவோ சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

“மிஸ்டர் ரோஹித், நான் நெக்ஸ்ட் வீக் மெடிக்கல் கேம்ப் போறேன், அப்பா உங்கிட்ட சொல்லச் சொன்னாங்க” என்று அவள் விட்டோத்தியாகக் கூற, அவளின் குரலில் கலந்திருந்த அலட்சியத்தில் துணுக்குற்றவன், “நான் ஒரு முக்கியமான வேலையில இருக்கேன், உனக்கு என்கிட்ட இருந்து பர்மிஷன் வேணும்னா, நீ என்ன வந்து நேர்ல பாரு, இப்ப போன வை” என்று எரிச்சலானக் குரலில் ரோஹித் பேச, அதைக்கேட்ட இனியிற்கோ அவ்வளவு வெறுப்பாய் இருந்தது.

தந்தையிடம் சொன்னாலும் அவரும் அவனுக்கு ஆதரவாகவே பேசுவார் என்பதால் ஒன்றும் கூறாமல் ரோஹித்தை பார்க்கச் சென்றாள்.

அரை மணி நேர பயணத்திற்கு பின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரோஹித்தின் வீட்டை அடைந்திருந்தாள் இனி.

வேலையாளிடம் விபரம் கூறிவிட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள்.

கிட்டதட்ட ஒரு மணி நேரமாகக் காத்திருந்தும் அவன் வராத காரணத்தால் அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். பகட்டுக்கு பஞ்சம் இல்லாமல் அவ்வீட்டில் அனைத்தையும் வடிவமைத்திருந்தனர். ஆனால் அது எதுவும் அவளின் கருத்தில் பதியவில்லை.

அப்போது ரோஹித்தின் குரல் கேட்வே, பேச்சு சப்தம் வந்த திசையை நோக்கிச் சென்றவள், அங்கு ஜன்னில் இருந்த திரைச்சீலையை விலக்கிப் பார்க்க, பார்த்தவளின் கண்களில் அப்பட்டமான கோபம் தென்பட்டது.
அவனை நினைத்து அருவெறுப்பும் உண்டானது.

‘வேண்டாம் இந்தக் கல்யாணம் வேண்டவே வேண்டாம், நிறுத்திவிடலாம்’ என்றுத் தனக்குத் தானே கூறிக் கொண்டவள், அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது, அரைகுறை ஆடையுடன் அவள் முன்னாடி நின்றிருந்தான் ரோஹித். அவனருகே அதே போல் அரை குறை ஆடையுடன் ஆண்ணொருவனும், பெண்ணொருத்தியும் அவனின் தோள்மேல் கைப்போட்டபடி நின்றிருந்தனர். அவர்கள் மூவரையும் பார்க்கவே இனியிற்கு வெறுப்பாக இருந்தது.
அவளின் எண்ணவோட்டத்தை நன்கு கணித்த ரோஹித்தோ, அவளை ஒரு அற்ப பார்வை பார்த்து வைத்தான்.

“ என்ன மீட் பண்ண வந்துட்டு இப்போ பார்க்காமலே போற, எங்க கிளம்பிட்ட?” என்றான் தன் சிகையை கலைத்தவாரே.

“அ… அதுக்கு இனிமேல் அவசியமே இல்ல. இந்தக் கல்யாணம் நடக்காது, நடக்கவே நடக்காது” என்றாள் பெண் வேங்கையாய்.

“ஹா ஹா ஹா! முடிஞ்சா போய் நிறுத்திப்பாரு” என்றான் ரோஹித் நக்கலாக.

“ நான் அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லப் போறேன், அவரு புரிஞ்சிப்பாரு” என்றாள் இனி நம்பிக்கையாக.

“ மறுபடி மறுபடி நீ ஒரு விஷயத்த மறந்திடுற, இந்தக் கல்யாணம் நின்னா உங்கப்பா செத்துடுவாருன்னு உனக்குத் தான் நல்லா தெரியுமே, அப்புறம் எப்படி நிறுத்துவ மிருணாளினி” என்றான் படு நக்கலாக.
அவன் கூற்றில் இனி அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள்.

“ எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறியா, உங்க அப்பா ஆதி முதல் அந்தம் வரை எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டார். அவர் உயிர நான் காப்பாத்தியிருக்கேன், அந்த நன்றிக்காக, உன்ன எனக்குக் கட்டிக்க கொடுக்க முன்வந்தார், இப்ப நீ கல்யாணத்த நிறுத்தினா, ஏற்கனவே உன் ரெண்டு அக்காவ நினைச்சு மனசு உடைஞ்சவர், இதையும் கேட்டு மொத்தமா நெஞ்சு வெடிச்சு செத்திருவாரு.” என்றவனின் பதிலில் இன்னும் இன்னும் அதிர்ந்துப் போனாள் பெண்.

“ என்ன ஒன்னுமே பேச மாட்டேன்ங்கிற, அப்பா அம்மா செண்டிமென்ட் எதையும் செய்ய விடாம தடுக்குதா?” என்று பெருங்குரலெடுத்து சிரித்தான்.

“ இந்தச் செண்டிமென்ட்ல நீ லாக் ஆகியிருந்ததால தான் உன்னைக் கல்யாணம் பண்ண செலக்ட் பண்ணேன்.இன்னொரு விஷயம், நீ பாத்தது எல்லாம் உண்மை தான், எஸ் ஐம் எ பைசெக்ஸ்வல் (bisexual). அதனால உனக்கு எந்தப் பாதிப்பும் வராது, இவன் என்னோட பார்ட்னர் சஞ்சு, இவன் உன்ன டேக் கேர் பண்ணிப்பான்” என்றான் வக்கிரமாக.

“அப்புறம், மேடம் ஒன்னு நல்லா தெரிஞ்சிகனும், என்னோடு பாய் ப்ரண்ட் சஞ்சு& கேர்ள் ப்ரெண்ட் ரீனா இவங்க ரெண்டு பேரும் இல்லாம என்னால இருக்க முடியாது, இவங்களோட நீ இருந்துக்க பழகிக்கோ” என்றவனை கடுமையாக முறைத்தவள்,

“அப்புறம் நான் எதுக்கு ...?, நீங்க இவங்க ரெண்டு பேரோட சந்தோஷமா இருக்க வேண்டியது தானே, எதுக்கு இந்தக் கல்யாண நாடகம்” என்றாள் கோபமாக.

அவனோ மீண்டும் சிரித்தபடி,
“ ஊருக்குக் கணக்கு காட்ட பொண்டாட்டின்னு ஒருத்தி வேணும்ல்ல, இல்லனா என்னை ஆம்பள இல்லன்னு சொல்லிடுவாங்க, அதுக்காகத் தான்” என்றான் தெனாவட்டாக.

“அதுக்கு நான் தான் கிடைச்சனா, ஊருல வேற பொண்ணே இல்லையா” என்றாள் இனி, அடங்காக் கோபத்துடன்.

“ இருக்காங்க…பட் அவங்கள நான் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்சதும், ஒன்னு டைவர்ஸ் வாங்கிடுவாங்க, இல்லனா என்னோட உண்மையான குணத்த எக்ஸ்போஸ் பண்ணிடுவாங்க. ஆனா நீ அந்த மாதிரி பண்ண வாய்ப்பே இல்ல, நீ டைவர்ஸ் வரப் போனா, தான் தப்பான மாப்பிள்ளைய பார்த்தனால பெண்ணோட வாழ்க்கை வீணாப்போச்சேன்னு, உன் அப்பா, அவரே தற்கொலை பண்ணிக்குவாரு. இல்ல, நீயா சாகனும்னு நினைச்சாலும், உன் மனசல வேற ஒருத்தன் இருக்கான் அதனால என் கூடச் சேர்ந்து வாழப் பிடிக்காம தற்கொலை பண்ணிகிட்டான்னு சொல்லி ஒரு ட்ராமா போட்டேன்னு வை, உன் மானம் மரியாதையோட உன் அப்பன் உயிரும் இல்லாம போயிடும்” என்றவன் மேலும் தொடர்ந்து, “இங்க பாரு, நானாகப் போய் உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்கல, என் பாய் ப்ரெண்ட் சஞ்சு யூஸ் போயிருந்தப்போ ஒரு அக்சிடண்ட் பண்ணிட்டான், அதுல உங்கப்பாக்கு அடிப்பட்டுச்சு, நான் தான் ஹாஸ்பிட்டல சேர்த்தேன், எங்க சஞ்சுவுக்கு ப்ராப்ளம் ஆகிடுமோன்னு ஒரு வாரம் அவரு கூடவே இருந்து பாத்துகிட்டேன், அதை வச்சு, உங்கப்பாவ நான் தான் காப்பாத்தினதா நினைச்சிகிட்டு உங்க ஃபேமிலி ஹிஸ்டரிய ஒப்பிச்சார் .உன்ன கல்யாணம் பண்ணா எனக்குப் பெர்சனல் லைப் பாதிக்காதுன்னு தோணுச்சு, சோ அதுக்கு தகுந்த மாதிரிக் காய்களை நகர்த்தினேன், அதுல கவுந்து உங்கப்பாவே என் பொண்ண கட்டிக்கோங்கன்னு கேட்டாரு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையா நீ என் வாழ்க்கைல தானா வந்து விழுந்திட்ட, இத நான் உன்கிட்ட ஏன் சொல்றேன்னா, நீ என் கூட இருக்கப் போற ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் தான், அத தெரிஞ்சிகிட்டே நீ என்ன கல்யாணம் பண்ணினா தான் கிக், சோ வெல்கம் டூ தி ஹெல்!” என்றவனின் பேச்சில் திகைத்துப் போய் நின்றிருந்தாள் மிருணாளினி.
 
Last edited:

NNK-70

Moderator
இவன்லாம் மனுஷனே கிடையாது!!... மாப்பிள்ளை பார்க்கும் போது கொஞ்சம் கூட விசாரிச்சு யோசிக்க மாட்டாரா!!!
அவருக்கு ஈகோ சிஸ், பொண்ணு வாழ்க்கை விட அவருக்கு கெளரவம் முக்கியமா போச்சு
 

santhinagaraj

Well-known member
இவன் எல்லாம் ஒரு மனுஷன்னு இவனை போய் மாப்பிள்ளையா பார்த்து வச்சிருக்காரு பாரு அந்த ரத்னம் அவர அடிவெழளுத்தா எல்லாம் சரியா போகும் இனி உங்க அப்பா செத்தா சாகட்டும் நீ இந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்காத 😡😡😡
 

NNK-70

Moderator
இவன் எல்லாம் ஒரு மனுஷன்னு இவனை போய் மாப்பிள்ளையா பார்த்து வச்சிருக்காரு பாரு அந்த ரத்னம் அவர அடிவெழளுத்தா எல்லாம் சரியா போகும் இனி உங்க அப்பா செத்தா சாகட்டும் நீ இந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்காத 😡😡😡
ஆமா சிஸ்... ஊருல வேற மாப்பிள்ளையே கிடைக்கலாயா இவருக்கு
 
Top