எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 8 - கதை திரி

NNK-53

Member
தேன்மிட்டாய் 8

“ஐயா.! அவர் கொடுக்கிறதா சொன்ன சொத்தும் வேண்டாம் அவர் பையனும் வேண்டாம்.” உடனே மறுத்தாள் சுதா.

“அப்படி சொல்லாதம்மா.! உங்க அப்பா அம்மா நிலமைய யோசித்துப் பாத்தியா? உன் அண்ணன்களுக்கும் கல்யாணம் நடக்கணும் இல்லையா? வீட்டுல ஒரு பொண்ணு வாழாவெட்டியா இருக்கும்போது யாரு அவங்க வீட்டு பொண்ணை உன் அண்ணன்களுக்குக் கொடுப்பாங்களா? நீயே கொஞ்சம் யோசித்துப் பாரு.” தொண்ணூறுகளின் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையில் அவர் பேச, யோசனையில் புருவம் முடிச்சிட்டது சுதாவிற்கு.

“ஐயா நீங்க இவ்வளவு சொல்றதால, நான் சில கேள்விகளை உங்க முன்னாடியே அவர்கிட்ட கேட்கிறேன், கேட்கலாமா?” நாட்டாமையைப் பார்த்துச் சுதா வினவ, “ம்ம்.” தலையாட்டினார் அவர்.

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” நேராகவே சுதா அவனை நோக்கி வினா எழுப்ப “இன்ஜினியரிங் படிச்சுட்டு இருக்கேன்.” பதில் கொடுத்தான் திவாகர்.

“எத்தனை அரியர்?”

“அது அது அது வந்து.” என்றவனின் வார்த்தைகள் தந்தி அடித்தன, பின்ன இன்ஜினியரிங் படிக்கிற பையன்கிட்ட கேட்கக் கூடாத கேள்வியை அல்லவா அவள் அவனிடம் கேட்டுவிட்டாள்.

அவன் ப்ளஸ் டூ முடிக்கும்போது தான் அந்த இன்ஜினியரிங் காலேஜில கம்பூட்டர் டிப்பார்டமண்டே வந்தது. புது மெஷின், கணக்கெல்லாம் அதுவே பண்ணுமாம் அப்படி இப்படி என்று அவனது ஊர் மக்கள் பேசும்போது, கெத்தா. எப்படி எப்படி? ... சும்மா கெத்தா, ‘த்தா நானும் அந்தக் கம்பூட்டரை படிச்சிருக்கேனாக்கும்’ என்று காலரைத் தூக்கிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, அதைப்பற்றி ஏ பி சி கூடத் தெரியாமல், அந்தக் காலேஜ் மேனேஜ்மெண்டிற்குக் காசை இறைத்துக் கம்பூட்டர் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தான். அவன்கிட்ட போய் இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்கலாமா? அது மட்டுமா? ஊர் அடி தடிக்குப் போனதால காலேஜ் பக்கமே போனதில்லை. பரீட்சை வந்தால் பிட்டடித்துப் பத்தாதற்கு அக்கம் பக்கத்தில் இருக்கிறவனை எல்லாம் அடிச்சி புடிச்சி பேப்பரப் பிடுங்கி, பரீட்சை எழுதியே நாற்பது அரியர் வைத்திருக்கான். அவன் கிட்டப் போய் இப்படியொரு கேள்வியை அவள் கேட்டால் பாவம் அவன் எப்படிச் சொல்வான்? தயங்கினான்.

“சரி விடுங்க? வாட் இஸ் கம்ப்யூட்டர் விண்டோ?” கைக் கட்டி தோரணையாகச் சுதா கேட்க, “ஹான் இது ஒரு நல்ல கேள்வி. எங்க வீட்டுல எல்லா விண்டோவும் தேக்குல செய்தது தான்.” ஊரே அதிரும் படி அவன் ஒரு பதிலைச் சொல்ல, “ஹும்.” வாயை முடி சிரித்தான் சிவதாஸ்.

“கம்ப்யூட்டர் கீபோர்ட் தெரியுமா?”

“ஓஹ் அதுவா? அது எனக்கு நல்லாவே தெரியுமே.” பெருமையுடன் திவாகர்ப் பதில் கொடுக்க,“ அந்தக் கீபோர்ட் ல் மொத்தம் எத்தனைக் கீ?” அடுத்த கேள்வியை அவள் கேட்க, “என்ன ஒரு நூறு இருக்குமா?” எதிர்க் கேள்வி அவனிடத்தில்.

“ஐயா நீங்கச் சொல்றதால இவரைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கிறேன். ஆனா எனக்குச் சில கண்டிஷன் இருக்கு. இப்ப எனக்கு இன்னும் பதினெட்டு கூட ஆகல, அப்பறம் எனக்கு இன்னும் படிக்கணும், எனக்கான அடையாளத்தை நான் ஏற்படுத்திக்கணும். அதற்காக எனக்குக் குறைஞ்சது ஒரு நாலு வருஷமாவது ஆகும். அதுக்கு அப்பறமா முறையா வந்து எங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்கச் சொல்லுங்க. எங்க அப்பாவுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரி தான்.” தீர்க்கமாகச் சுதா தனது முடிவைக் கூற, மறுப்பு சொல்ல வழியின்றிச் சபையும் அமைதியாகிவிட, “என்ன சதாசிவம்? உமக்கு எப்படிப் பட்ட பையன் வேணும்னு இப்பவே சொல்லிடும்.” நாட்டாமை மட்டும் குரலை உயர்த்தி கேள்வி கேட்டார்.

“ஐயா.! எல்லாத் தகப்பனும் நினைக்கிற மாதிரி தான் எனக்கும் என் மகளுக்கு வரப் போறவன் நல்லா படிச்சு கை நிறைய சம்பாதிக்கணும் அவ்வளவு தான். அந்தப் பையனும் அதே மாதிரி ஒழுங்கா காலேஜ் முடிச்சுக் கை நிறைய சம்பாதிச்சா, நான் என் மகளைத் தாராளமா அவனுக்கே கொடுக்கிறேன்.” என்று ஒப்புதல் கொடுக்க, ஊர்ப் பெரியவர்களிடம் கலந்து பேசிய நாட்டாமை தனது தீர்ப்பைக் கூற தொடக்கினார்.

“பொண்ணு சொன்ன மாதிரி நாலு வருசம் கழிச்சு ஜமீன்தாரும் அவர் பையனும் முறையா சதாசிவம் வீட்டுக்குப் போய்ப் பொண்ணு கேட்குமாறு….” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தான் கதிரேசன்.

“ஐயா நாலு வருசத்திற்கு அப்பறம் எப்ப வருவாங்கனு எங்களால காத்திட்டுயிருக்க முடியாது. அவளைப் பலிவாங்குகிறதிற்காக வராமலே போயிட்டா, எங்க வீட்டு பொண்ணுக்கு அப்பறம் என்ன வழி? இங்க பாருங்க ஐயா, ஒரு குறிப்பிட்ட வருசத்துக்குள்ள வந்த கேட்கணும் னு சொல்லிடுங்க.”

“கதிர் தம்பி சொல்றதும் சரிதான். அடுத்து நாலு வருசத்திற்கு அப்பறம் அஞ்சாவது வருசம் முடியுறதுக்குள்ள அதாவது 1998 வது வருசம் சித்திரை மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடி, எல்லாத் தகுதியோட ஜமீன்தாரும் அவர் மகனும் முறையா பொண்ணு கேட்கனும். சதாசிவமும் எந்த மறுப்பும் சொல்லாம தனது பொண்ணைத் தம்பி திவாகருக்குக் கொடுக்கனும்.” என்று தீர்ப்பு வழங்கிய நாட்டாமை ஜமீன்தார்க் கனகவேல் கொடுத்த சொத்து பத்திரங்களைச் சதாசிவம் மறுக்க மறுக்கக் கையில் திணித்து அனுப்பினார்.

“என்னண்ணே தீர்ப்பு இப்படிக் கொடுத்துட்டாங்க! அப்ப இன்னையிருந்து சரியா அஞ்சாவது வருசம் நாம நம்ம சுதாவை அவனுக்குக் கொடுக்கணுமா?” காருக்கு வரும் வழியில் சிவதாஸ் கதிர்யிடம் கேட்க, “ஹும்…! இதைப் பத்தி எல்லாம் நீ கவலைப்படாத சிவா. நான் விசாரிச்ச வரைக்கும் அவன் கிட்டத்தட்ட நாற்பது அரியர் வச்சிருக்கானாம். இன்ஜினியரிங்ல இப்ப அவன் நாளாவது வருசம் வேற, அவன் என்னைக்கு அரியரை முடிச்சு என்னைக்கு வேலைக்குப் போறது. இதெல்லாம் நடக்கிற காரியமா? அந்த அரியரைக் கிளியர் பண்றதுக்கே அவனுக்குப் பல வருசம் ஆகிடும். அப்பறம் எங்க வேலைக்குப் போறது? எங்க வந்து பொண்ணு கேட்கிறது? நீ தைரியமா இரு சிவா. அந்தத் திவாகர் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறது இல்ல.” தீர்க்கமாகக் கதிர் கூற, “அப்பச் சரி…” கேலியாக உதடு வளைத்தான் சிவதாஸ்.

***************************

“அப்ப உங்களுடைய திட்டம் அவனை எப்படியாவது கழட்டிவிடுறது. அம் ஐ ரைட்.” என்று ஜான்சி கேட்க, “அப்சலூட்டிலி ரைட்.” பதில் கொடுத்தாள் சுதா.

“நாலு வருசம் வரைக்கும் கல்யாணத்தைப் பத்தி பேசவே கூடாது. அஞ்சாவது வருசம் எல்லாத் தகுதியோட முறையா வந்து பொண்ணு கேட்கனும். அப்படி ஒருவேளை இந்த ஏப்ரலுக்குள்ள அவரு பொண்ணு கேட்கலைனா பஞ்சாயத்து கேடு முடிஞ்சிடும். அப்பறம் அவங்களே வந்து பொண்ணுக் கேட்டாலும் நாங்க கொடுக்கனும் என்கிற எந்த அவசியமும் இல்லை.” என்றவள் முகத்தில் ஏனோ சோகம் இழைந்தோடியது.

“ஒஹ்…! அப்ப வர ஏப்ரலுக்குள்ள அவன் வந்து உன்ன பொண்ணு கேட்கனும் அப்படி அவன் வந்து உன்ன பொண்ணு கேட்கலைனா பின்ன எப்ப வந்து பொண்ணு கேட்டாலும் உங்க வீட்டுல உன்ன அவனுக்குக் கொடுக்கமாட்டாங்க அப்படித் தானா?” என்று ஜான்சி கேட்க, “ம்ம்…” என்று தலையாட்டினாள் சுதா.

“அவனுக்கு இந்த விசயம் எல்லாம் தெரியும்ல? இதுவரைக்கும் ஏன் வந்து அவன் பொண்ணு கேட்கல?”

“ஏன்னா நான் அந்த அளவுக்கு அவரை ஹட் பண்ணிருக்கேன்.” விழிகள் சிவந்து கலங்கின அவளுக்கு.

“ஏன்?” புருவம் சுருக்கி ஜான்சி விசாரிக்கும் முன் அந்த வீட்டின் உரிமையாளர் வந்துவிட, இருவரும் அவர் முன் வந்து நின்றனர்.

“ஆமா திவாகர் உங்களுக்கு என்ன வேணும்?” என்று புருவம் உயர்த்தினார், “அவரு எனக்கு…! நான்.! அது நான் அவரு கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு.” தயக்கத்துடன் பதிலுரைத்தாள் சுதா.

“ம்ம். உண்மைய சொல்லப் போனா எனக்கும் திவாகர் எங்க இருக்காரு தெரியாதும்மா. ஆனா ஆர் எஸ் புறத்தில் இருக்கிறதா கேள்வி.” அவருக்குத் தெரிந்த விவரங்களைக் கூற சுதாவிற்கோ ஏமாற்றத்தில் முகம் சிறுத்தது.

“வேற எதாவது…! பிளீஸ் கொஞ்சம் யோசித்துச் சொல்லூங்களேன்…! பிளீஸ் சார்” கையெடுத்துக் கும்பிட்டுச் சுதா கேட்கவும், “ஹா…! அது…! என்கிட்ட ஆபிஸ் போய் வர ரொம்ப சிரம்மா இருக்குதுனு சொன்னான். எனக்குத் தெரிந்த வரைக்கும் அவன் ஆபிஸ் ஆர்.ஏஸ் புறத்தில் தான் இருக்கு. நிச்சயமா அங்க தான் அவன் இருக்கனும்.” தீர்க்கமாக அவர் கூறவும், “ரொம்ப தாங்கிஸ் சார்…” பணியுடன் கூறி விடைப்பெற்றாள் இவள்.

“இப்ப என்னடி பண்ண போற?” என்று ஜான்சி கேட்க, “உப்…! தெரியலையே.” பெருமூச்சுடன் சுதா.

“உஷ்…! நீ எதுக்கும் கவலப் படாத. எனக்கு அங்க தான் இன்னைக்கு டூட்டி. கிட்டத்தட்ட நூறுக்கு மேற்பட்ட போலிஸ் கூட அங்க தான் இருப்பாங்க. எப்படியும் அவனைக் கண்டுபிடிச்சிடலாம்.”

“ம்ம்…!” தலையாட்டினாள் சுதா.

“அப்பறம் அவனை நீ பார்க்கவே இல்லையா டி…” நடந்தபடியே ஜான்சி கேட்க, “யாரு சொன்னா அடுத்த வாரமே அவரை மறுபடியும் பார்த்தேன். அக்சூவலி அவங்க அப்பா ஜமீன்தார்க் கொடுத்த சொத்து இருக்குதுல்ல. அது விசயமா அவர் வீட்டுக்குப் போனேன்.”

“ஏன் அந்தப் பத்திரத்தில் என்ன இருந்துச்சு?”

“அவர் கொடுத்த சொத்தை நான் உபயோகப் படுத்திக்கலாம். ஆனா விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாது. ஏன்னா அந்த உரிமையை அவரு எனக்குக் கொடுக்கல. எனக்குப் பிறக்கிற குழந்தைக்குத் தான் அந்த உரிமை என்று எழுதி வச்சிருந்தாரு.”

“அட கிழவன் சரியான கேடி போல…” என்று ஜான்சி வாய் பிளக்க, “பின்ன ஜமீன்தாருனா சும்மாவா?”

“அது சரி… ம்ம் மேல சொல்லு.”

“அண்ணன்ங்க ரெண்டு பேரும் கோபத்தில் குதிச்சாங்க. அந்தக் கிழவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கனும்னு அண்ணன் சிவா கத்த, கிழவன் அந்தப் பொறுக்கிய நம்ம சுதா தலையில கட்டலாம்னு பார்த்திருக்கான்னு கதிரண்ணா கத்த, அப்பாவோ தலையிட விரும்பாமல் விலகிக் கொண்டார். அம்மாவும் பாட்டியும் தான் இதை இப்படியே விடக் கூடாது நேரவே போய்ச் சண்டைப் போடனும்னு என்ன இழுத்திட்டுப் போனாங்க.”

“ஐய்யயோ அப்ப அன்னைக்குப் பெரிய சண்டையா?” என்ற ஜான்சிக்கு அருகில் மென்னகையுடன் நடந்தாள் சுதா.

தொடரும்..

கமெண்ட்ஸ் பிளீஸ்..
 
Top