எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நவநீதனின் அவனி விமர்சனம்

நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK06 ன் நவநீதனின் அவனி எனது பார்வையில். நவநீத கிருஷ்ணன் தன் அத்தை மகளான ஆண்டாளைத் திருமணம் செய்த நாளன்று தனது இலட்சியமான நடனக் கலைஞராக முயற்சி செய்ய வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். பல ஆண்டுகள் கழித்து தன் தொழிலில் வெற்றி பெற்று தன் அவனியான ஆண்டாளை தன்னுடன் கூட்டிச் செல்லும் நோக்கத்தில் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு வருகிறான்.
அவனது அப்பா சங்கரநாராயணன் அவனது நடனக் கலையை விரும்பாது இருப்பதும் அதற்கு அவன் அம்மா அபிராமியின் கணவனின் கொள்கையில் ஆதரவும் இருக்கும் நிலையில் தன் மனைவி படிப்பை முடித்த பின்னர் பலமுறை அழைத்தும் மாமா சங்கரனின் ஒப்புதலுடன் கணவனுடன் செல்ல விரும்பும் அவளது நோக்கம் நிறைவேறியதா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். நவநீதன் மற்றும் அவனது அவனியின் காதல் அழகு. கணவன் மீது காதலும் மாமனாரின் மீதான பயத்திலும் ஆண்டாள் தடுமாற்றத்தை யதார்த்தமாக இருந்தது. நவநீதன் அவளது தடுமாற்றத்தை அழகாக சமாளித்து தன் நோக்கத்தை நிறைவேற்ற அதிரடியாக நடப்பதும் நன்றாக இருக்கிறது.

நவநீதனின் அவனி இனிய காதல் கதை. வாழ்த்துகள் மா.
 
அழகான விமர்சனம். ரசித்து படித்தமைக்கு ௭னது சிரம் தாழ்ந்த நன்றிகள். மிக்க நன்றி சகி😍😍😍😍
 
Top