எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 02

NNK-106

Moderator

காதல் Not Out ! - 02


அடுத்த நாள் காலை புத்துணர்வோடு புலர்ந்திருந்தது அவளிற்கு. எட்டு மணிக்கெல்லாம் எட்டு முப்பதிற்கு திறக்கும் கடை முன் தவமிருந்தாள் அவளது நெருங்கிய நண்பன் நிதனின் வருகைக்காய். கண்கள் அது பாட்டிற்கு அங்கிருந்த சூழலை அலசிக்கொண்டிருந்தது. சட்டென அந்த தொடர்பை துண்டிப்பது போல் முன்னால் யாரோ கையை அசைக்க ஒரு முறை கண்ணை மூடித்திறந்தவள் கண்டது அங்கு இவளை சந்தேகமாய் பார்த்துக்கொண்டிருந்த பன்னிரண்டு வயது நிதனை தான்.​

"என்ன இன்னைக்கு வீட்ல செம அர்ச்சனையோ காலையிலயே.." கேட்டவண்ணம் கடைக்கு இவ்வளவு நேரம் பாதுகாப்பளித்திருந்த பூட்டுகளுக்கும் கதவுகளுக்கும் ஓய்வளித்திருந்தான்.​

"ஆமா அது என்னைக்கு தான் இல்ல..இன்னைக்கு புதுசா இருக்கிறதுக்கு.."​

"அப்புறம் எதுக்கு இந்த விடியவே கடைக்கு காவலுக்கு இருக்க அக்கா.."​

"அது வேற மேட்டர்.. இப்படி வந்து உட்காரு சொல்றன்.." அவனை இழுத்து அங்கிருந்த ஒரு டயரில் அமர்த்திவிட்டு தானும் அமர்ந்து கொண்டாள் கவிதா.​

அவள் தன் கதையை கூறிமுடித்து விட்டு பதிலுக்காய் காத்திருக்க அவளது முன்னே அமர்ந்திருந்தவனோ இன்னும் ஹ்ம் தான் கொட்டிக்கொண்டிருந்தான்.​

"டேய் முடிஞ்சதுடா.. நீ என்ன இன்னும் ஹ்ம்ன்ற.." கோபமாய் அவனது தலையில் தட்டினாள்.​

"ஓஹ் அப்போ கதை முடிஞ்சது.. சரி சரி சூப்பரா இருக்கு அக்கா..செம" தான் அமர்ந்திருந்த டயரில் இருந்து எழுந்து ஒரு முறை கைதட்டி விட்டு..​

"இப்போ நான் போய் வேலைய தொடரலாமா.." என்றான்.​

"யூ யூ.. டேய் நான் சீரியசா சொல்லிட்டு இருக்கேன்.. இப்படி மதிக்காம பேசிட்டு இருக்க நீ.."​

"உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இதோட இந்த மாசத்துல இது உனக்கு பதினைந்தாவது க்ரஷ்.. போ போயி வேலைய பாருக்கா.." நிதன் கூறிவிட்டு அங்கிருந்து நகரவும் அந்த மெக்கானிக் கடை உரிமையாளர் ரத்னவேல் வரவும் சரியாய் இருந்தது.​

"ஹாய் அங்கிள்.." அமர்ந்திருந்த டயரில் இருந்து மரியாதையாய் எழுந்து நின்றாள்.​

"வாம்மா கவிதா, என்ன இன்னைக்கி க்ளாஸ் இல்லையா..?" கேட்டவண்ணம் அவர் கடையின் உள்ளே செல்ல..​

"அங்கிள் இன்னைக்கி கட் தான்.. வெயிட் வெயிட் நீங்க என்ன கேட்க போறீங்க தெரியும்.. இப்படி இருந்தா எப்படி படிச்சி பாஸ் பன்ன போறேன்னு தான..? அதெல்லாம் கவலையே இல்ல அங்கிள் ஏன்னா எனக்கு அங்க போனாலும் அவங்க சொல்லி தாரது எப்படியும் ஏறாது.. நம்மளுக்கு எப்பவும் செல்ப் ஸ்டடிஸ்தான்.." அவர் கேட்டதற்கும் மேலதிகமாய் கூறிவிட்டு அழகாய் சிரித்தவளை அதே பதில் சிரிப்போடு பார்த்த ரத்னவேல் ஏதோ கூறும் முன் அங்கு வந்தான் நிதன்.​

"அங்கிள் இன்னைக்கி என்னமோ புது கதையோட வந்திருக்கா.. என்னன்னு கேளுங்க.." என்று விட்டு ஓர் நமட்டுச்சிரிப்போடு அவன் நகர இவளும் "அங்கிள் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு டியூஷன் இருக்கு...டாட்டா.." என்று இரு உனக்கு இருக்கு என்ற ஒரு பார்வையையும் நிதனிடம் வீசிவிட்டு தன் சைக்கிளை உருட்டிக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.​

அதேநேரம் தனது தந்தையின் நெருங்கிய நண்பன் ரமண் அங்கிள் வீட்டில் "நல்லா யோசிச்சி சொல்லுப்பா.." என்ற அவரது இரண்டாவது கேள்வியில் மீண்டும் சற்றே நிதானமாய் நேற்று நடந்ததை யோசிக்க ஆரம்பித்திருந்தான் சஞ்சீவ்.​

நன்றாக யோசித்து பார்த்தவன்.."ஹும் இல்ல அங்கிள் அவ பெயர் தெரில.. நல்லா நினைவு இருக்கு.. அவளும் சொல்லல நானும் கேட்கல.. ஆனால் நான் சொன்னது போல அவ அந்த ஏரியா பொண்ணு தான்.. வீடு கூட அந்த தெருவுல மூணாவது வீடு.. எனக்கு தெரிஞ்சி என் டீடெய்ல்ஸ் புல்லா அவகிட்ட இருக்கு.." சஞ்சீவ் யோசனையாய் கூறவும் எதிரே அமர்ந்திருந்த அந்த பகுதி பொலிஸ் அதிகாரியான ரமணும் சற்றே ஆழ்ந்த யோசனையில் இறங்கினார்.​

"இதுவரை அந்த ஏரியால இப்படி ஒரு புகார் வந்ததில்லபா.. நீ சொல்லுறத பார்க்குறப்போ புதுசா வந்தவங்கலா இருக்கவும் வாய்ப்பில்ல.. சரி நீ யோசிக்காத நான் பார்த்துக்கிறேன்.. உன் போனுக்கோ இல்ல வேற எப்படியோ திரும்ப உனக்கு பேசினான்னா உடனே எனக்கு சொல்லு.." ரமண் கூறவும் இனி இதுபற்றிய யோசனை தேவையில்லை அவர் பார்த்துப்பார் என்ற நிம்மதியுடன் "ரொம்ப தாங்ஸ் அங்கிள்.. அதோட அப்பாகிட்ட எதுவும் சொல்லிக்க வேணாம்.. இன்னும் இரண்டு வார்த்துல சந்தனாவோட பட்டமளிப்பு அப்புறம் அப்படியே இங்க வாரது தான்.. எதுக்கு வீணா டென்ஷன் அவங்களுக்கு.. கனடால நல்லா என்ஜாய் பன்னிட்டே வரட்டும்.." சஞ்சீவ் கூறியதை கேட்டவர் "சரிப்பா.." எனவும் வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் சரியாய் இருந்தது.​

அந்த சத்தத்தில் தான் நினைவு வந்தவராக எதையோ மறந்து விட்டது போன்ற பாவனையில் சட்டென எழுந்தவர்.. "மறந்தே போய்ட்டேன்.. இருப்பா வந்திடுறேன்.." என்றவண்ணம் வெளியே சென்றார். சென்றவர் அடுத்த கணம் இவனையும் அழைக்க.. அங்கு சென்று பாரத்தவனுக்கோ பெரிய அதிர்ச்சி தான்.​

"அங்கிள்.." என இவன் பேசும் முன்னே..​

" சஞ்சீவ், இவ தான் கவிதா.. நம்ம தீப்திக்கு மெத்ஸ் ஸயன்ஸ் டியூஷன் டீச்சர்..அப்புறம் கவிதாம்மா இவரு சஞ்சீவ், என்னோட ரொம்ப நெருங்கிய நண்பரோட மகன்.." இருவரையும் அறிமுகம் செய்ய..​

"ஓஹ் அப்படியா அங்கிள்.. வணக்கம் சஞ்சீவ் சார்.. உங்கள இந்த ஏரியால நான் பார்த்ததே இல்லையே.." அமைதியாய் வணக்கம் வைத்துக்கொண்டே அவள் வினவ.. என்னாமா நடிக்கிறா என்று பதில் கூறவும் மறந்து பார்த்திருந்தான் அவன்.​

"சார் கொஞ்சம் வேலையில இப்போ பிஸி போல இந்த பக்கம் எப்போவாது தான் காத்து வீசும்.. இல்லடா சஞ்சீவ்.." நகைத்து விட்டு.. "சாரிமா உனக்கு கால் பன்னி சொல்லனும் இருந்தேன் மறந்துட்டேன் பாரேன்.. இன்னைக்கு பானுவும் தீப்தியும் காலையிலே அவங்க அம்மாவுக்கு உடம்புக்கு கொஞ்சம் முடியலன்னு போன் வரவும் போனாங்க.. நான் தான் சொல்ல மறந்துட்டேன்.. ரொம்ப சாரிம்மா.."​

"அச்சோ அங்கிள் அதெல்லாம் பரவாயில்ல சாரிலா கேட்க வேணாம்.. மறதி எல்லாருக்கும் இருக்கது தானே.. நான் கூட மார்னிங் வாரப்போ என்னோட லன்ச் பாக்ஸ மறந்துட்டேன்னா பாருங்களேன்.. " என்று விட்டு ஏதோ பெரிய ஜோக் கூறியது போல் அவள் சிரிக்க கூடவே ரமணும் சேர்ந்துகொள்ள.. சஞ்சீவ் தான் இப்போ நாமளும் சிரிக்கனுமா தேவையில்லையா என்றவண்ணம் நின்றிருந்தான்.​

சிரித்து முடித்த ரமண்.. "திரும்பவும் மறந்துட்டேன் பாரு..உன் ஏரியா பொண்ணு தான்.." என்று தொடங்கி அவர் சஞ்சீவ் கூறிய கதையை அவளிடம் ஒப்புவிக்க.. அவளும் ஓஹோ போட்டு கன்னத்தில் கைவைத்து கதை கேட்டு அதற்கு முகபாவனை வேறு கொடுத்துக்கொண்டிருந்தாள்.​

ரமண் கூறிமுடிக்கவும் உள்ளே போன் யாராவது இருக்கீங்களா என்பது போல் அழைப்புமணியை அலறவிடவும் சரியாய் இருக்க.. "நீ உனக்கு தெரியுமான்னு பாருமா.. சஞ்சீவ் நீயும் கேட்டு பாரு.. இதோ வாரன்.." என்று உள்ளே சென்றார்.​

"சொல்லுங்க சார் அந்த பொண்ணு எப்படி இருப்பா.." அப்பாவியாய் அவள் கேட்க..திரும்பி முறைத்த சஞ்சீவ்.."அஞ்சரடி உயரத்துல மோகினி பேய் மாதிரியே இருப்பா.."என்றான் எரிச்சலோடு.​

"ஒஹ்ஹோ அப்போ ஓகே சொல்ல வேண்டியது தான இந்த மூஞ்சே உங்களுக்கு ரொம்ப அதிகம் இல்ல.." கூறிவிட்டு அவள் சிரிக்க "நல்லா சிரி..அங்கிள் வரட்டும் உன்ன பற்றி எல்லாத்தையும் எடுத்து விடுறேன்.." கூறிவிட்டு பதிலுக்கு சிரித்தான் அவன்.​

"சொல்லுங்கோ நானும் இதோ இதை அப்படியே அங்கிள்கிட்ட சொல்லி பாரின்ல இருக்க அத்தை மாமாக்கு அனுப்பிடுவேனே..." அவள் கையிலிருந்த போனில் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் சஞ்சீவ் அருகில் ஸ்டைல் என்ற பெயரில் ஆங்காங்கே கிழிசலாய் இருந்த நவநாகரீக ஆடையோடு இவனை ஒட்டிப்பிணைந்து நின்றிருந்தாள் இவனது தோழி இனியா.​

"ஏய் அவ என்னோட ப்ரன்ட்.." சஞ்சீவ் போனை பறிக்க முயல அதை பின்னோக்கி இழுத்தவள்.."ஆஹா தெரியுமே.. ஆனாலும் நீங்க இரண்டு பேரும் நின்னிருக்க போஸ பார்த்தா நீங்க ப்ரன்டுன்னு சொன்னா யாரும் நம்புவாங்க நினைக்கிறீங்க??" அவள் கேட்க அதானே என்றிருந்தது அவனிற்கும்..​

ஆனால் இது எப்படி இவகிட்ட..அதையே அவன் அவளிடம் கேட்க.." உங்க மொபைல் நம்பர் ஏன் வீட்டு அட்ரஸ் கூட எடுத்த எனக்கு இந்த ஒரு போட்டோவ எடுக்குறது என்ன கஷ்டமா.." அவள் கூலாய் கூற.."ஏது வீட்டு அட்ரஸா.." அதிர்ச்சியில் வினவினான் சஞ்சீவ்.."ஆமா நாளைக்கு வர போறேனே.." இவள் சொல்லவும் ரமண் வரவும் சரியாக இருந்தது.​

"என்னபா யாருன்னு தெரிஞ்சதா.."​

"ஆஹ் ஆமா அங்கிள்..கவிதா சொல்லிதான் தெரியும் அந்த பொண்ணுக்கு கொஞ்சம்.." என அவன் தலையை தொட்டுக்காட்டி விட்டு..​

"என்ன நடந்தாலும் சாக போறேன்னு கடல் பக்கம் ஆத்து பக்கம் ஓடிடுவாளாம்..அப்படிதான கவிதா.." அவன் கேட்க பதிலுக்கு முறைத்து வைத்தாள் அவள்.​

"ஓஹ் அப்போ கம்ளைன் எல்லாம் வேணாம்பா.." ரமண் கூறவும் அதையே ஒத்துக்கொண்ட சஞ்சீவ்.."அங்கிள் அப்போ நான் போய்ட்டு வரேன்.."​

"சஞ்சீவ் கவிதாவும் உன் ஆபிஸ் பக்கம் தான் போறா கொஞ்சம் ட்ராப் பன்னிட முடியுமா.. இல்லனா சைக்கிள்ல அவ்வளோ தூரம் போவா கஷ்டம்" ராம் கேட்க கவிதாவோ சிறகின்றி வானில் பறக்க சஞ்சீவ் இருந்த சிறகையும் பிய்த்துக்கொண்டு கீழே விழுந்திருந்தான்.​

"அங்கிள் நான் கொஞ்சம் லேட் ஆகும் போற வழில.." அவன் காரணம் யோசித்து இழுக்க.."ஆஹ் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் வெயிட் பன்னுறன்..அங்கிள் பாய்.." அவன் வேறு எதுவும் கூறும் முன்னே ஆளுக்கு முதலாய் அவனை தாண்டிக்கொண்டு சென்றாள் கவிதா.​

அவள் சென்றதும் ராமை பார்த்து கூறிவிட்டு பல்லைக்கடித்துக்கொண்டே வந்து காரில் ஏறினான் சஞ்சீவ்.​

"விழிந்திருச்சு விக்கெட்டு​

உன்னை நானும் பாா்த்ததாலே​

ஆனேனே டக் அவுட்டு..." அவன் கார் பாடிக்கொண்டிருக்க அதனை ஒரே அழுத்தில் ஓப் செய்தான் அவன்.​

"வொய் சார்..." ராகம் இழுத்து அவள் கேட்க..​

"எதுக்கு இந்த பாட்டையே போட்டு கடுப்பேத்துற..உனக்கு என்னதான் பிரச்சனை..சொல்லு எவ்வளோ பணம் வேணும்..சொல்லு.."அவன் 100°c யில் அவளை பார்த்து சத்தம் போட கவிதாவோ வெட்கப்படுகிறேன் என்ற பெயரில் கைவிரல் நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.​

"வாய திறந்து பேசு.."​

"அதான் வெட்கப்பட்டுட்டு இருக்கேன்ல.."​

"கடவுளே..இங்க பாரும்மா பொறுமையா கேட்குறன்..நான் ரொம்ப கோபக்காரன்..உனக்கு எவ்வளோ பணம் வேணும்.." அவன் கேட்க அவன் பொறுமையாக கேட்குறன் எனும் போதே சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் பக்கம் திரும்பி அமர்ந்திருந்த கவிதா அவன் கேட்ட கேள்விக்கு கைகளால் கணக்கு போட தொடங்கினாள்.​

அவனும் தொல்லை விட்டால் போதும் என காத்திருக்க கடைசியில் ஒருவாரு தன் கணக்கை முடித்தவள்.."சஞ்சீவ்..." என தொடங்கவும்..​

"பெயர சொல்லி கூப்பிட்ட கொன்னுறுவன்..சார் சொல்லு.." என்றான் அவன் கடுமையாக..​

"மூஞ்ச பாரு..சரி சரி சார்ர்ர்..எனக்கு பணம்லா வேணாம்..உங்க மூஞ்ச கட்டிகிறதுக்கு நீங்களே இப்படி விலை பேசலாமா சார்..அவ்வளோக்கு எல்லாம் கேவலமா இல்ல ஏதோ சமாளிச்சிகலாம்.." என்றாள் கூலாக.​

அவள் பதிலைக்கேட்டவன் காரினுள் எதையோ தேட அவனை புரியாது பார்த்த கவி.."சார் என்ன தேடுறீங்க.." என்றாள்.​

அவளை நிமிர்ந்து பார்த்தவன்.."உன்ன இங்கேயே வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போக போறேன். " என்றான்.​

"சார் அப்போ நம்ம காதல்.." கண்களை விரித்து கவிதா கேட்க..​

"கண்ண நோண்டிடுவேன்..காதலாம் காதல்..நான் எப்போ சொன்னேன்..உன்ன லவ் பன்னுறேன்னு.." பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டான் அவன்.​

"சொல்லாட்டி தெரியாதா..அந்த கண்ணு ரெண்டையும் பார்க்கும் போதே தெரியுதே.." சல்வார் நுனியை கையில் சுற்றிக்கொண்டு குனிந்தவாறு அவள் கூற..தலையிலே அடித்துக்கொண்டவன்.."இப்போ புரியுது..உன்ன காப்பாத்தினது தான் நான் செய்த முதல் தப்பு.." என்று விட்டு அவன் காரை தன் கோபம் முழுவதையும் காட்டி வேகமாய் எடுத்தான்.​

அமைதியாய் இருந்த கவிதா..சட்டென.."சார் கவிதா சஞ்சீவ்...எவ்வளோ மெச்சா இருக்குல்ல.." என்று அவன் கோபத்தில் இன்னும் எண்ணையை ஊற்றினாள்.​

ஸ்டியரிங் வீலை இறுக்க பிடித்து கோபத்தை அங்கே காட்டிக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.​

"என் பெயர் பர்ஸ்ட் எழுத்து கே..உங்க பெயரோட பர்ஸ்ட் எழுத்து எஸ்..கே எஸ்..இல்ல எஸ் கே..ஆஹ் எஸ் கே சூப்பரா இருக்கும்.." அவள் கண்டுபிடித்த சந்தோஷத்தில் அவன் பக்கம் திரும்ப காரோ நடு ரோட்டில் நின்றிருந்தது.​

இவள் புரியாது.."இடம் வரலியே இன்னும்.." என்க.."இறங்கு.." என்றான் ஒற்றை சொல்லாக.​

"ஏன் சார்.." கவிதா கேட்கவும்.." இறங்கு சொல்லுறேன்.." கர்ஜனையாய் வந்தது அவனிடம் இருந்து..பயத்தில் கதவை திறந்து அவள் இறங்க...அவள் பக்கம் திரும்பியவன்.."இதுவே நான் உன்ன பார்க்குறது கடைசியா இருக்கனும்.." என விரல் நீட்டி எச்சரித்து விட்டு காரை வேகமாக எடுக்க அது புகையை கிளப்பிக்கொண்டு பறந்தது.​


---------------------

கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளவும் 😊
 
Last edited:

Mathykarthy

Well-known member
நிஜமாவே லூசா இருப்பாளோ ... 😳😳😳😳😵😵😵😵🤣🤣🤣

காதலா.. பாவம் அவனே கொலை காண்டுல இருக்கான்... 🤭🤭😂😂😂...
யாரு பெத்த பிள்ளையோ இவகிட்ட மாட்டிகிட்டு முழிக்குது... 🤪🤪🤪
 

NNK-106

Moderator
நிஜமாவே லூசா இருப்பாளோ ... 😳😳😳😳😵😵😵😵🤣🤣🤣

காதலா.. பாவம் அவனே கொலை காண்டுல இருக்கான்... 🤭🤭😂😂😂...
யாரு பெத்த பிள்ளையோ இவகிட்ட மாட்டிகிட்டு முழிக்குது... 🤪🤪🤪
😆😆😆 irpalo
Hehe ama..
🤣🤣🤣
 
Top