எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 02

admin

Administrator
Staff member

அத்தியாயம் 2​

பேருந்தில் இறங்கி நடந்து சென்றவளின் நினைவுகள் மீண்டும் தன் கடந்த காலத்தை? நோக்கி பயணித்தது.​

மண்டபத்தில் பேசியவனின் பேச்சு காதில் ரீங்காரம் போல் கேட்டுக் கொண்டே இருந்தது.​

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்​

சோர்ந்துவிட லாகாது பாப்பா!​

அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்​

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!​

பாரதியின் வரிகளை ஒருமுறைக் கூறிக் கொண்டாள். கண்களை இறுக மூடித் திறந்தாள் கண்களுக்குள் விழுந்தான் அகரன். தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி தீவிரமாக அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.​

'ஹேய் பிளீஸ் டி தங்கம், எனக்காக காலேஜ் லீவ் போட்டுட்டு போடி, இன்னைக்கு ஈவினிங் ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகும். நைட்டு ஒரு பதினொரு மணி வரைக்கும் ரிசப்ஷன்ல நிக்கிறது போல இருக்கும். அண்ட் தென் நாளைக்கு மார்னிங் அதே போல இருந்துட்டு அப்படியே காலேஜுக்கு போயிடு பிளீஸ் பிளீஸ் டி, ஒரு ஆள் குறைந்தாலும் அகரன் சார் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கணும்..." ஒன் ஆப் தி இவெண்ட் ஆர்கனிஸரான தோழியின் பேச்சு நினைவு வந்தது.​

அவள் பேசும் போது அகரன் என்பவனை பற்றி நல்ல விதமாக தான் கூறியிருந்தாள். ஆனால் இன்று அவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் வைத்து பார்த்தால் அகரனைப் பற்றி நல்லவிதமாக கூட யோசிக்க தோன்றவில்லை இவளுக்கு.​

அதே சமயம் தோழிக் கூறியதையும் பொய்யென்று கூறவில்லை அது உண்மையாக கூட இருக்கலாம். வெள்ளைத் தோலுடைய பெண்களிடம் நல்லவனாக இருப்பனாக இருக்கும் என நினைத்தவளுக்கு இதழின் ஓரம் அலட்சிய சிரிப்பு ஒன்று மின்னி மறைந்தது.​

அதே கணம் இங்கு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவனோ தீவிரமாக? அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.​

"நீங்க போயாச்சு தானுங்கப்பா நான் எதுக்குங்க அங்க..."​

"..."​

"சரி ப்பா வரேன், எந்த ஹாஸ்பிடலுன்னு சொல்லுங்க..."​

"..."​

"ஹான் சரி வரேங்கனுப்பா..."​

"...."​

"ஏதே? அது எதுக்குங்க தேவையில்லாம..."​

"..."​

" சரி சரி வாங்கிட்டு வரேனுங்க ப்பா..." எனப் பேசிக் கொண்டே கண்களை சுழல விட்டான். தனக்கு எதிரில் நின்ற அரசு பேருந்தில் அமர்ந்திருந்தவளின் மேல் விழுந்தது அவனது பார்வை.​

தன்னைக் கண்டதும் அவள் சிந்திய அலட்சிய சிரிப்பு இவனுக்கு அத்தனைக் கோபத்தைக் கொடுத்தது. அதேநேரம் 'இவலெல்லாம் ஒரு ஆளு, இவளோட சிரிப்பையெல்லாம் பார்த்து உனக்கு கோபம் வருதா அகா. நீ இருக்கிற ரேஞ்சுக்கு இவளையெல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்கக் கூடாது...' அவனுள் இருந்த அகம்பாவி குரல் கொடுத்தான். அக்கணம் அரசு பேருந்தில் அமர்ந்திருந்தவளை ஏதோ மிதித்தது போல் பார்த்துவிட்டு வாகனத்தை உயிர்ப்பித்தான்.​

அவனது பார்வையை தூசிப் போல் தட்டிவிட்டு மறுப்புறம் திரும்ப, அவளது அலைபேசி சத்தமிட்டு கத்தியது. அவளின் தாய் தான் அழைத்திருந்தார்.​

நீண்ட நெடிய பெருமூச்சுடன் தன்னை சமன் செய்து கொண்டவள் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள். எதிர் முனையில் கூறிய செய்தி இவளை மொத்தமாய் நிலைக்குலைய செய்தது.​

"எங்கம்மா, சரி சரி அழுகக் கூடாது அப்பாக்கு ஒன்னும் ஆகாது. மேஜரா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். மைனர் அட்டெக்கா தான் இருக்கும். நீங்க பயப்படாம இருங்க..." குரலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினாள். அதற்கு எதிர்ப்புறம் பதில் இல்லை என்றாலும் தேம்பல் இருந்தது.​

அவரின் அழுகைக்கு பதில் சொல்லும் விதமாக "ஒன்னுமாகுது ம்மா, தைரியமா இருங்க, அப்பா முன்னாடி அழ கூடாது. சரி எந்த ஹாஸ்பிடல இருக்கீங்க..." நிதானமாகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.​

பாவம் பாவைக்கு தெரியவில்லை, அவளின் தந்தைக்கு தற்போது வந்திருப்பது மேஜர் அட்டாக் என்பதும் மருத்துவ உபகரணங்களால் மட்டுமே அவளது தந்தையின் சுவாசம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும், அவளைக் காண்பதற்காக மட்டுமே தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும்.​

அன்றைக்கென்று பேருந்தில் சற்றே அதிக கூட்டம். நாற்பத்தைந்து நிமிடத்தில் ஈரோடு வரவேண்டிய பேருந்து ஐம்பத்தைந்து நிமிடங்கள் கடந்து தான் ஈரோடு வந்து சேர்ந்தது.. ஈரோடு பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பாதி வழியிலேயே இறங்கி கொண்டவள் கே.எம்.சி. எச்சை நோக்கி வேகமாக நடந்தாள்.​

எத்தனை வேகமாக நடந்தாலும் வாகன நெரிசலில் மருத்துவமனையை சென்றடைய பத்து நிமிடங்களுக்கு மேலாகியது. மருத்துவமனை வளாகத்தில் தந்தையின் பெயர் சொல்லி அவரிருக்கும் அறையை நோக்கி வேக எட்டுக்களுடன் நடந்தாள்.​

அவள் உள்ளே நுழையவும் அவரின் தந்தை மெல்லிய குரலில் ஏதோ பேசவும் இருந்தது "ஆதி இதுக்கு மேல நான் இருப்பேன்னு எனக்கு நம்பிக்கையில்லை, என் மூச்சுக் காத்து என் பிள்ளையை பார்க்கிற வரைக்கும் மட்டும் தான் இருக்குன்னு தோணுது. அவளுக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திடு, என்னோட கடைசி ஆசையா..." அதற்கு மேல் பேச முடியவில்லை அவரால், மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது. இத்தனை மணி நேரம் மயக்கத்தில் இருந்தவர் இப்போது தான் விழித்து இருந்தார். விழித்தவருக்கு அவரின் நிலை புரிந்ததோ என்னவோ? ஒரு தந்தையாய் மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்தியவர் அதனை நண்பனிடம் கூறவும் செய்தார்.​

"டேய் மாதேசா, எதுக்கு டா ஸ்ட்ரைன் பண்ணி பேசற, நான் தான் சொல்றேன்ல உம்பட மவ இனிமே எம்பட மவ, நீ அவளைப் பத்தி கவலைப்படாம இரு..." ஆறுதலாக கூறினார் ஆதி.​

நண்பனின் பேச்சில் நிம்மதி அடைந்தார் போல அவரும், கண்களை மூடித் திறந்தார். இங்கு இவளோ தந்தையின் பேச்சில் இதுவரையிருந்த மொத்த தைரியமும் வடிந்தவளாய் "ப்பா..." என்று உயிர் உருக அழைத்தப்படி உள்ளே நுழைந்தாள்.​

உள்ளே நுழைந்தவளைக் கண்டதும் அறையினுள் நின்றிருந்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.​

ஆம் நீங்கள் நினைப்பது சரியே அகரனும் அங்கு தான் இருந்தான். தீடிரென முளைத்த தந்தையின் நண்பனை காணக் கடுப்போடு வந்திருந்தான்.​

அவனுக்கு நினைவு தெரிந்த வரையில் தந்தையின் நண்பர்களை கண்டதே இல்லை. இன்று தான் இப்படியொரு நண்பன் இருக்கிறார் என்பதையே அறிந்துக் கொண்டான் அகரன்.​

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவனின் தந்தைக்கு அழக்கூட வருமா என்பது தான். முகத்தில் ஒரு வித இறுத்தோடு வளம் வரும் தந்தையுனுள் இப்படியொரு நேசத்தை எதிர்பார்க்கவில்லை அவன்.​

இத்தனை நேரம் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தவன் தற்பொழுது உள்ளே நுழைந்தவளைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியூட்டும் வகையில் "தம்பி, நான் கேட்டதை வாங்கிட்டு வந்தியா?..." கரகரத்தக் குரலில் அதிகாரமாகக் கேட்டார் அகரனின் தந்தை ஆதித்யன்.​

"ஹான் ப்பா..." என்றவன் பாக்கெட்டிலிருந்த மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிற்றை அவரிடம் நீட்டினான். கைகள் நடுங்கியது அவனுக்கு. நடக்க போவதை ஓரளவுக்கு யூகித்திருந்தான். இத்தனை நேரம் அத்தை மகன், மாமன் மகனென்று யாராவது வருவார்கள் என்று எண்ணினான். ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் பலியாகும் ஆடு தான் தான் என்று புரிந்தது. இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தால் ஏதாவது விபரீதம் நடந்து விடும் உடனே இங்கிருந்து செல்லென்று அவனது மனம் எச்சரிக்கை விடுத்தது. மனதின் எச்சரிக்கைக்கு செவி சாய்த்தவன் மெல்ல அங்கிருந்து நகர பார்க்க​

"இப்ப எங்க போற நீ, கால் ஒரு பக்கம் நிக்காதா..." ஆதியின் அதட்டலில் அங்கேயே நின்றான். தந்தையை கடுப்போடு பார்த்தவன் மனமோ ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ஆதியிடம் பேசியதை நினைவுப் படுத்தியது.​

"நானும், உன் அம்மாவும் என் ப்ரெண்ட்டுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் வந்திருக்கோம். ஒரெட்டு நீயும் வந்துட்டு போ..." கட்டளையாக வந்தது அவனது தந்தையின் குரல்.​

"நீங்க போயாச்சு தானுங்கப்பா நான் எதுக்குங்க அங்க தேவையில்லாம..." எனக் கேட்டான் இவனும்.​

"வான்னா வா, அதென்ன என்ன எதுக்குன்னு கேட்கற பழக்கம்,..." என்றார் ஆதி.​

"சரி ப்பா வரேன். எந்த ஹாஸ்பிடலுன்னு சொல்லுங்க. வரேன்..." அவரின் அதட்டல் கொஞ்சமே வேலை செய்தது.​

"ம்ம், வர வழியில மஞ்சக்கயிறு வாங்கிட்டு வா..." இன்னும் அதே கட்டளை தொனி தான் அவரது குரலில்.​

"ஏதே? அது எதுக்குங்க ப்பா தேவையில்லாம..." எனக் கேட்டான் சற்றே அதிர்ந்த குரலில்.​

" இதுக்கும் உனக்கு பதில் சொல்லிட்டு இருக்கணுமா நான். வாங்கிட்டு வான்னா வாங்கிட்டு வா..." என்றார் பெரும் அதட்டலாக​

" சரி சரி வாங்கிட்டு வரேனுங்க ப்பா..." என்றவன் அழைப்பைத் துண்டித்து அவர் கூறியதை வாங்கி வந்தான்.​

மஞ்சள் கயிற்றை வாங்க வாங்கவே "ம்ம் யாரோ ஒரு இளிச்சவாயன் சிக்கிட்டான் போல, இவனுங்க ஹாஸ்பிடல்ல கிடக்கிறது இல்லாம மத்தவங்க உயிரையும் சேர்த்து வாங்க வேண்டியது, கல்யாண செலவும் குறைக்க முடிவு பண்ணிட்டான் போல..." மெல்லிய முனகலுடன் தந்தையின் நண்பனை திட்டிக் கொண்டே மருத்துவமனைக்கு பயணப்பட்டான் அகரன்.​

"அகரா, இங்க வா..." என்ற தந்தையின் குரலில் தன் நினைவிலிருந்து வெளி வந்தவன்​

தந்தையை பார்த்தான்.​

"இங்க வாடா..." பெரிய அதட்டல் அவரிடம்.​

"ப்ச், இவள் முன் அதட்டி வேறு அழைக்கிறார் என நினைத்துக் கொண்டே "என்னங்க ப்பா..." எனக் கேட்டவனை அவளுடன் சேர்ந்து நிற்க வைத்தார் ஆதி.​

நடக்கப் போவதை உணர்ந்தவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது அதிர்ச்சி மாறாது தாயைப் பார்த்தான். ராஜியின் முகத்தில் தெரிந்த பாவனையே கூறியது அவருக்கு இது தெரியுமென்று.​

அடுத்து என்ன? என்ன செய்யலாம்? எப்படி இதனை தடுத்து நிறுத்தலாம் பலவாறு யோசித்தவனின் முன் மஞ்சள் நாணை நீட்டினார் ஆதி.​

இங்கு இவன் நிலை இப்படியென்றால் அவளது நிலையைப் பற்றிக் கூறவே வேண்டாம். பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அதுக் கூட நொடி நேரம் மட்டுமே உடனே தன்னை சமன் செய்து கொண்டவள் தாய், தந்தையை பார்த்தாள்.​

கண்களை சூழ்ந்த கண்ணீரோடு நண்பனைப் பார்த்தது பார்த்தபடி படுத்திருந்தார் மாதேசன். அவரின் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பும் ஆசையும் இவளை நிலைக் குழைய செய்தது.​

உன் வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு விஷயமும் உன்னை மீறி நடக்கவே கூடாது..."​

என்றோ ஓர் நாள் தந்தைக் கூறிய வரிகள் நினைவில் வந்தது. ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவள் 'இதில் எனக்கு விருப்பமில்லை எனக் கூற நிமிரவும் அகரன் அவளது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டவும் சரியாக இருந்தது. நொடி நேர மெளனம் கூட நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் என்பது தாமதமாக உணர்ந்தாள்.​

வெறும் கயிறு என்ன செய்ய போகிறது உன்னை? அறுத்து போடு ஒரு மனம் கூப்பாடு போட மற்றொரு மனமோ முதலில் உன் தந்தையை பாரென்று கட்டளையிட்டது.​

கண்களை சூழ்ந்த கண்ணீரோடு தந்தையை பார்த்தாள். அவரோ இவர்களையே பார்த்தது பார்த்தபடி படுத்திருந்தார். ஏதோ தவறாகப் பட்டது "ப்பா..."என்று அழைத்தாள் அதிர்ச்சியில் குரல் வரவில்லை காற்று தான் வந்தது. குரலை சரி செய்ய முயன்றவாறு மீண்டும் "ப்பா..." என அழைத்தாள். அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் அவளின் குரலுக்கு செவி சாய்த்தனர்.​

"என்னங்க..."​

"மாதேஸா?..."​

"ப்பா..."​

"அண்ணே..." பலக் குரல்கள் அவ்வறையில் கேட்டது. அவரது குரல் மட்டும் காற்றோடு காற்றாய் கலந்து போனதோ?​

***​

பிடிச்சி இருந்தா Comments பண்ணுங்க, share பண்ணுங்க,​

நன்றி​

 

Priyakutty

Active member
இந்த பயல கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன நல்லாருக்கும் அந்த பொண்ணு... 🙄

இப்படி situation ல அவருக்கும் விருப்பம் இல்லாம அதட்டி அவங்கள அவர் கையில பிடிச்சு கொடுத்தா உடனே எல்லாம் ஓகே ஆகிடுமா... என்ன இது 🙄
 
இந்த பயல கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன நல்லாருக்கும் அந்த பொண்ணு... 🙄

இப்படி situation ல அவருக்கும் விருப்பம் இல்லாம அதட்டி அவங்கள அவர் கையில பிடிச்சு கொடுத்தா உடனே எல்லாம் ஓகே ஆகிடுமா... என்ன இது 🙄
,😅😅சில சமயம் நம்மையும் மீறி ஒன்னு ந்தக்கும் ப்பா... அதை மாத்தவே முடியாது அதுல இதுவும் ஒன்னு...
கல்யாணம்😂😂
 
Top