எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 9 - கதை திரி

NNK-53

Member
தேன் மிட்டாய் 9

பாட்டி செல்லத்தாய் அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்த படியே அந்தப் பங்களாவின் கேட்டை ஓங்கி உதைத்துவிட்டு உள்ளே நுழைய, தமிழ்ச்செல்வியோ முத்தியைச் சொருகிய படி விருவிருவேனப் பங்களாவுக்குள் நடந்தாள்.

“ஐயோ பாட்டி வேண்டாம் வந்திரு. திரும்பிப் போயிடலாம். அம்மா சொன்னா கேளும்மா.” கெஞ்சாத குறையாகச் சுதா அவர்களைத் தடுத்துப் பார்த்தும், உஹூம் நோ யூஸ். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் வீறுகொண்டு அவர்கள் அந்தப் பங்களாவிற்குள் செல்ல, “ஐயோ இன்னைக்கு என்ன நடக்கப் போகுது.” பதறினாள் சுதா.

“வாங்க வாங்க.” என்று அவர்களை அன்புடன் ஜமீன்தார்க் கனகவேல் வரவேற்க, “ஹாங். ஹிஹி.! நல்ல இருக்கீங்களா?” அசடு வழிய சிரித்தபடியே தமிழ்ச்செல்வி பேச, தாய் கிழவியோ ஒருபடி மேலே சென்று, “தம்பி நல்ல இருக்கீங்களா? ஹான்.! என்ன தம்பி இளைச்சி போயிட்டீங்க, உடம்புக்கு எதுவும் முடியலையா?” ஓவராக விசாரித்தாள். “ஏய் கிழவி.!” என்று பல்லைக் கடித்தாள் சுதா.

மூவரையும் அவர் மெது இருக்கையில் அமரக் கூற, தயக்கத்துடன் நின்ற சுதாவைக் கையைப் பிடித்து அமர்த்தினாள் பாட்டி செல்லத்தாய்.

“ஐய்யோ, நானே பேசிட்டு இருக்கேன் பாருங்க, ஆமா நீங்க என்ன சாப்பிடறீங்க?” தன்மையாக அவர் கேட்க, “அதெல்லாம் ஒன்னும்.” என்று இவள் வாய் திறக்கும் முன், “எனக்குச் சுகரு இருக்காம், சீனி போடாம ஒரு கோப்ப காபி தண்ணி கொடுக்கச் சொல்லுப்பா.” காலை நீட்டி அமர்ந்து பதில் கொடுத்தாள் பாட்டி.

“ஏய்.! கிழவி.” பற்களை நறநறவென அரைத்தாள் சுதா.

அப்போது அங்கே வந்த திவாகரோ, “வாங்கப் பாட்டி, வாங்க அத்தை, வா ராணி.” உரிமையுடன் அழைக்க முகம் கோபத்தில் சிவந்தது சுதாவுக்கு.

அழைத்ததோடு அல்லாமல் அவளுக்கு முன் அவன் அமர்ந்தும் கொள்ள, படபடப்பு கூடியது இவளுக்கு.

“இந்தப் பங்களா எப்ப கட்டினதுண்ணா?” என்று தமிழ்ச்செல்வி கேட்க, “இது எங்க அப்பா காலத்துல கட்டினது தங்கச்சி.” பதில் கொடுத்தார்க் கனகவேல்.

“நல்லா இருக்குதுண்ணே.”

“என்ன தங்கச்சி வெறும் ஹாலை மட்டும் பார்த்துவிட்டு நல்லா இருக்குதுனு சொல்ற? போத்தங்கச்சி பங்களா முழுசும் சுத்தி பார்த்துவிட்டு வா.”

“ஐயோ... நான் எதுக்குண்ணே? நீங்கவேணா சுதாவைக் கூட்டிட்டுப் போய்ச் சுத்தி காட்டுங்களேன்.” தமிழ்ச்செல்வி கூறிட, பொறை ஏறியது சுதாவிற்கு.

“அதுவும் சரி தான். டேய் திவா, சுதாவிற்குப் பங்களாவைச் சுத்தி காட்டு.” என்று அவர் கட்டளையிட, “ம்ம்.! சரிப்பா.” என்றவன் உடனே எழுந்து நின்றான்.

"ஐய்யயோ அதெல்லாம் வேண்டாம்.” பதறி மறுத்தாள் சுதா.
“அட இதுல என்ன இருக்கு. தம்பிகூட போயிட்டு வாடி. வேணும்னா பாட்டியைக் கூட்டிட்டுப் போ.” என்று தாய் கூற, தாய்க் கிழவியோ, கட்டையை நடு கூடத்திலேயே நீட்டிவிட்டது.

“ஏய் தாய்க்கிழவி.!” என்று இவள் பற்களை அரைக்க, “வா ராணி நான் வீட்டைச் சுற்றிக் காட்டுறேன்.” திவாகரின் குரல் அவள் காதருகே கேட்டது.

இதுங்களோட வந்திருக்கவே கூடாது. இரண்டும் ஏதோ பிளான் போட்டுருக்குதுங்க.' அவ்விருவரையும் முறைத்த படியே சுதா அவ்விடத்தில் ஆணியறைந்தது போல் நிற்க, “ஏன் ராணி என்ன பார்த்து உனக்குப் பயமா?” கேலியாக உதடு வளைத்தான் திவாகர்.
“ஹாங்.! யாரு சொன்னா? நா. நான் நானெல்லாம் யா. யாருக்கும் பயப்பட மாட்டேன்.” என்றவளுக்கோ என்றும் இல்லாமல் இன்று வார்த்தைகள் தந்தி அடித்தன.

“அப்ப என்கூட வருவதற்கு என்ன?” என்றபடி அவன் முன்னால் நடக்க, இவளோ அவனை வால் பிடித்துப் பின்னால் நடந்தாள்.

அந்தப் பங்களாவின் ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தவளின் கால்கள் ஓர் இடத்தில் நின்றது. அந்த அறையிலிருந்த ஜன்னலருகே பறவைகளின் சத்தம் இனிமையான கீதம்போல் அவள் காதில் விழ, மெய் மறந்து அவ்வறைக்குள் சென்றாள்.

அந்த அறையின் மேல்மாடத்தில் ஒரே பறவைகளின் இரைச்சல். குட்டி குட்டியாகப் பறவைகள் அந்த இடத்தில் உரிமையாக நடமாட, ஆசையுடன் அந்த விடத்திற்கு வந்தாள் சுதா.

அவள் அவ்விடத்தில் பிரவேசிக்கவும், அந்தப் பறவைகள் மொத்தமாக அந்த இடத்தை விட்டுப் பறக்க, அதைப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது சுதாவிற்கு.

அதைவிடக் கீழே தோட்டத்தில், பல தேன்சிட்டுகள் அங்கிருக்கும் கல் பாத்திரத்தில் குளித்துக் கொண்டும், அருகே அமையப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டும், அங்கே சிதறிய தானியங்களைக் கொறித்துக் கொண்டும், ஏதோ பார்ட்டி நடப்பது போல அவளுக்குத் தோன்ற, அதைக் கருவண்டு கண்களால் பார்த்துப் பற்கள் மின்னப் புன்னகைத்தாள் சுதா.

அவனோ கட்டிய கைகளுடன் அவளை இமை மூடாது பார்த்தபடியே கதவில் சாய்ந்து நின்றான்.
“க்கும். என்ன இந்த ரூம் பிடிச்சிருக்கா?” தொண்டையைச் செருமி அவன் கேட்க, மலர்ந்த முகமாய் அவன் புறம் திரும்பினாள். ஏனோ அந்நொடி அந்த நொடி அவன்மேல் கோபப் பட அவளுக்குத் தோன்றவேயில்லை. பறவைகளின் ரீங்காரம் அவளது மனதை மாற்றியது போல.

“இது என்னுடைய ரூம் தான்.” என்று அவன் தகவல் கூறிட, “ஓஹ்…!” ஒரு வார்த்தைப் பதில் இவளிடமிருந்து.

“இங்க பாருங்க அந்தச் சிட்டுக்குருவி என்னவெல்லாம் பண்ணுதுனு.” அவனை அருகில் அழைத்து அக்காட்சியைக் காட்ட, அவன் பார்வையோ அவளிடத்திலேயே.

“ஆமா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி உங்க வீட்டுல மட்டும் இவ்வளவு பறவை வந்து சேருது?” மைவிழி அகல அவள் கேட்க, “ப்பு…! இது ஒரு பெரிய விசயமா? அதோ அங்க இருக்குது பாரு அது தான் பெர்ட் ஃபூல் அங்கத் தினமும் தண்ணி ஊதி வைப்பேன், அப்பறம் இங்க இருக்கிற மரங்களில் எல்லாம் மரக் கூண்டு செய்து வைப்பேன், ப்ச்...! அப்பறம் அரசி, சோளம் எல்லாம் போட்டு வைப்பேன். அதான் எங்க வீட்டுல இவ்வளவு பறவைங்க.” நிமிர்வுடன் பதில் கொடுத்தான் திவாகர்.

“ஓஹ் ம்ம்.” மெச்சுதலுடன் சுதா அவனைப் பார்க்க, “நீயும் உங்க வீட்டு தோட்டத்தில டிரை பண்ணி பாரு. நிச்சயமா பறவைங்க வரும்.” நட்பாகக் கூறினான் திவாகர்.

“ஆமா உங்களுக்கு எல்லாப் பறவைகளைப் பத்தியும் தெரியுமா?”

“ம்ம். நல்லாவே எனக்குத் தெரியும். ஆமா நீ அன்றில் பறவையைப் பத்தி உனக்குத் தெரியுமா?”

“அன்றில் பறவையா? அப்படின்னா?”

“அதப் பத்தி தமிழில் கூட ஒரு பாட்டு கூட இருக்குது உனக்குத் தெரியுமா?”

“அப்படியா?”

“ம்ம். அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால், இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ்சொல்னு வரும் அந்தப் பாட்டுல.”

“ஆமா நீங்க எதோ சொல்றீங்க ஆனா எனக்குத் தான் ஒன்னுமே புரியல.”

“அதாவது வேற ஒன்னும் இல்ல அந்தப் பறவை இருக்கும் அது தன் இணையை விட்டுப் பிரியவே பிரியாதாம், நைட்டுத் தூங்கும்போது கூட இரண்டும் ஒன்னை ஒன்னு கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்குமாம். அதுவும் ஒரு கண் தூங்குமாம், இன்னொரு கண் தன் இணையைப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். அவ்வளவு காதல் அதுங்களுக்குள்ள.”

“வாவ் சூப்பர்…! வெரி இன்டர்ஸ்டிரிங். நீங்க அதை எங்கேயாவது பார்த்திருக்கிங்களா?”

“உஹூம் ஆனா கேள்விப்பட்டிருக்கேன் அகநானூறு பாடலில்.”
“ஓஹ் அன்றில் பறவைகளைப் பற்றி இந்த ஒரு பாட்டு தான் அகநானூருல இருக்கா?”

“சே சே…! இன்னுமே இருக்கு. இரு நான் ஒரு பாட்டு நேத்துதான் படிச்சேன் அத சொல்றேன். அது வந்துஉஉ…! ஹாங்…! ஹா எனக்கு ஞாபகம் வந்திருச்சு. நெருப்பினன்ன செந்தலை யன்றில், இறவினன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்க் கையற நரலு நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே. அதாவது அந்தப் பறவையின் தலைச் சிவப்பு நிறமா இருக்குமாம், அதன் அலகு இருக்குல அலகு அது கூட இறால் மீனுக்கு இருக்கிற மாதிரி வளைஞ்சி இருக்குமாம், அப்பறம்…! அந்தப் பறவைக் கூடக் கடலோரமா இருக்கிற பனை மரத்துல தான் கூடு கட்டி வாழுமாம் அப்படினு இந்தப் பாட்டுல இருக்கு.”

“ம்ம். அப்ப உங்களுக்கு நிறைய விசயம் தெரிந்திருக்கு.” என்றவளின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.

“இந்தப் பாட்டுல என்ன சொல்றாங்கனா தலைவன் வேலைக்காகக் கடல் கடத்து பொருள் தேட போய்விடுவானாம். போனவன் திரும்பவே இல்லையாம்.”

“அச்சச்சோ அப்பத் தலைவி ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கல்ல.” சிறிது கலவரத்துடன் அவள் அவனை நோக்க,

“ம்ம்…! ரொம்ப ரொம்ப…! ஆனா தோழி தான் நீ கவலைப் படாத, தலைவன் நிச்சயமாக வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான்னு சொல்லி ஆறுதல் கொடுக்குறா. ம்ம். அப்ப அந்தத் தலைவி தான் இந்தப் பாடலைப் பாடி, அந்த அன்றில் பறவையைப் பார்த்தப்ப கூட அவனுக்கு என் ஞாபகம் வரவேயில்லையானு கேட்டு வருத்தப்படுவா”
“ம்ம்…! பச்…! ஐய்யோ பாவம்…”

“உண்மையில் பாவம் தான் தலைவி. ஆனா ராணி, தலைவி மட்டும் இல்லச் சில நேரங்களில் தலைவன் கூட வருத்தப்படுவான் என்ன மாதிரி. சாரி ராணி நான் உன்கிட்ட அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கக் கூடாது. எதோ விளையாட்டா செய்யப் போயி ஏதேதோ விபரீதமா நடந்துப்போச்சு.” தலதலத்த குரலுடன் அவன் கெஞ்ச, முகத்தை வெடுக்கென்ன திருப்பினாள் சுதா.

“அப்ப அந்தத் தாலிக்கூடவா விளையாட்டு?”

“சே சே இல்ல.! அது விளையாட்டு இல்ல ராணி. உண்மையிலேயே அந்த நேரம் என்னமோ தோணுச்சு. உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு. அதான் தப்பு தான் டி நான் ஒத்துக்கிறேன். பிளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சுக்கோ.” என்று அவன் கெஞ்ச, கோபத்தில் அந்த அறையை விட்டு வேகவேகமாக வெளியேறினாள் சுதா.

அவனிடம் தான் ஊடல் அந்தப் பறவைகளிடம் இல்லையே…!

வீட்டிற்குத் திரும்பியதும் முதல் வேலையாக அவளது தோட்டத்தில் பறவைகள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள்.
என்ன ஆச்சரியம்…! சிறிது காலத்திலேயே அவளது தோட்டத்திற்கும் பறவைகள் வந்தன.

கீச் கீச்சென அவைகள் ஓசை எழுப்பி அந்த இடத்தையே இரம்மியமாக்க, மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது அவளுக்கு.
தினமும் காலை இரு கைகளையும் விரித்து அவள் காட்ட அந்தப் பறவைகளோ அவளது கரத்தில் அமர்ந்து கொண்டன. அது அவளது கரத்தில் மென்மையாகக் கால் பதிக்க, கண்கள் மூடி முகத்தை வானத்தை நோக்கித் தூக்கினாள் சுதா அளப்பரிய சுகத்தில்.
*************************
நாள்: 14.3. 1998.

நேரம் 1:15

உக்கடம் பேருந்து நிறுத்தம்…

இரு கைகளையும் விரித்து இரு கண்களையும் மூடி வானத்தைப் பார்த்தபடி நின்ற சுதாவைத் தட்டி எழுப்பினாள் ஜான்சி.

“ஏய் என்ன பகல் கனவா?”

“ஐய்இஇ…! சாரி.” அசடு வழிந்தாள் சுதா.

“வாப்பஸ்ஸு வந்திருச்சு.” என்ற ஜான்சியுடன் இவளும் பஸ்ஸில் ஏறிக் கொள்ள, பஸ்ஸிலோ அன்று படுபயங்கரக் கூட்டம்.

கூட்டத்திலிருந்த ஒருவன் டிரான்ஸ்சிஸ்டரைக் காதருகே பிடித்தபடியே நின்றான்.

அவனுக்கு அருகிலிருந்த ஒரு நடுத்தர வயதுக் காரரோ, “என்ன தம்பி என்ன நியூஸ் போயிட்டுயிருக்கு?” என்று கேட்க, “எதிர்க்கட்சித் தலைவர் ஏல் கே அம்பானி கிளம்பிவிட்டாராம். இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம ஊருக்கு வந்திருவாருனு சொல்றாங்க.” பதில் கொடுத்தான் அவன்.

“ம்ம்…! இப்ப இருக்கிற பிரச்சனையில அவரு வேற…? ஏற்கனவே அவங்க மசூதியை இடிச்சிட்டாங்கனு இங்க இருக்கிற பாய்மாரெல்லாம் கோபத்தில் இருக்காங்க. இந்த நேரத்தில் போய் அவரு இங்க வருவது எனக்கு என்னமோ சரியா படல?”

“இவங்க மட்டும் என்ன? போன வருசம் ஒரு போலிஸ்காரனை வெட்டிக் கொல்லல்ல.”

“ஆமாப்பா அதுவும் உண்ம தான். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுனு சும்மாவா சொன்னாங்க. எவனோ எங்கேயோ என்னமோ பண்ணிட்டுப் போறான் அவன் அங்க பண்ணதுக்கு இங்க இருக்கிற இந்துக்கள் என்ன பண்ணுவாங்க? இவ்வளவு நாள் தாயா பிள்ளையா பழகிவிட்டு இப்ப யாரோ மாதிரி மூஞ்சி தூக்கிட்டு அவங்க போறது என்னமோ மாதிரி தான்ப்பா இருக்கு. ம்ம்…! அந்தப் பிரச்சனையில இருந்து நம்ம ஊரே மாறிப்போச்சு.” பெருமூச்சுடன் அங்கலாய்த்தார் பெரியவர்.

“ம்ம்.! நாமும் அன்னைக்கு அந்த மசூதியை இடிக்கும்போது கொஞ்சமாவது தட்டி கேட்டிருக்கனும். அப்படிக் கேட்டிருந்தா ஒருவேளைப் பாய்மாருங்க எல்லாம் நம்ம கூடவே ஒத்துமையா இருந்திருப்பாங்களோ என்னவோ.” என்றவர்களின் பேச்சுப் பேருந்து இறைத்தலிலும் தெளிவாகக் கேட்டது.

“காலேஜ் ஸ்டாப். இறங்கிறவங்க இறங்குங்க” என்று கத்தியபடி நடத்துநர் சீட்டியடிக்க, இமைத் தூக்கி பார்த்த சுதாவின் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை.

“என்ன மேடம் தனியா சிரிக்கிறதப் பார்த்தா எதோ பெரிசா நடந்திருக்குப் போலயே…” அருகிலிருந்த ஜான்சி அவளது தோளை இடித்து விசாரிக்க, “அதுவா அது வேற ஒன்னுமில்ல முதல் நாள் காலேஜ் ஞாபகம் வந்திருச்சு.” பதிலளித்தாள் சுதா.

“ஓஹ் ஆமா காலேஜ் எங்க படிச்ச?”

“சென்னை காலேஜ்ல எனக்குச் சீட்டு கிடைக்கல அதான் திருச்சியில படிச்சேன் பிஎஸ்சி மேக்ஸ் எடுத்திருந்தேன். அன்னைக்குத் தான் அவருடைய அத்தைப் பையன் ரவியைப் பார்த்தேன். அவனும் அங்க தான் பி காம் சேர்ந்திருந்தான். பார்த்ததும் அக்கா அக்கா னு தம்பி மாதிரி என் கூடவே சுத்தினான். அன்னைக்கும் அப்படித் தான், எதோ வெல்கம் பார்ட்டியினு சொன்னானுங்க. நானும் சரி எதோ ஆப்பிள் சூஸ் ஆரஞ்சு ஜூஸ்ஸுனு எதாவது கொடுப்பாங்கனு நினைச்சேன், கடைசியில பார்த்தா ராகிங்கைத் தான் வெல்கம் பார்ட்டிங்கிற பெயர்ல நடத்திட்டு இருந்தாங்க. ம்ம் அது அப்ப எங்களுக்குத் தெரியாதே. இவன் இந்த ரவி வேற…! அக்கா அக்கானு என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தானா! இத பார்த்த அவனுங்க எங்க இரண்டு பேரையும் கொத்தத் தூக்கிக் கிட்டுப் போயி ஒரு ஸ்டேஜ்ல ஏத்திட்டாங்க…” கண்கள் விரிய எதோ க்ரேம் நாவல்போல் சுதா கதை சொல்ல, “ஹாங் அப்பறம் என்ன ஆச்சு?” சுவாரஸ்யமானாள் ஜான்சி்

“என்ன டா இரண்டு பேரும் ஒன்னாவே சுத்திறீங்க. உங்களுக்குள்ள என்ன டா? என்று ஒருவன் கேட்க, அதற்கு ரவியோ, இவங்க எனக்கு அக்கா வேணும்னு பதில் கொடுத்தான். ஓஹ் அப்படியா சரி அக்கா தம்பியும் இரண்டு பேரும் சேர்ந்து நடித்துக்காட்டுங்கனு சொல்லிட்டாங்க.”

“க்கும்…! அது சரி அப்படி இரண்டு பேரும் என்ன வேசத்தில் நடிச்சிங்க?”

“அதுவா? நான் சீதா தேவி அவன் ஆஞ்சனேயர்.”

“நீ ஆஞ்சனேயருனு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது. நம்ம கூட வந்தாங்கல்ல ஏட்டு சாந்தகுமாரி.”

“ஆமா அவங்களுக்கு என்ன?”

“அவங்க சரியான ஆஞ்சனேயர் பக்தர், எப்பவும் சனிக்கிழமை வந்தா பெருமாள் கோவிலுக்குப் போயிடும் இன்னைக்குச் சனிக்கிழமை, ஆனா பாரு பந்தோபஸ்தென்று சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டாங்க காலையிலேயே புலம்புச்சு இப்ப என்ன பண்ணுதோ…” என்று ஜான்சி கூறவும் கலகலவெனச் சிரித்தாள் சுதா.

“ஹாஹா…! ஆமா அப்பறம் என்ன நடந்துச்சு?”

“ஹாஹா அதுவா? அப்பறம் இரண்டு பேரும் ஸ்டேஜ்ல நான்காம் அவனைத் தான் அன்னையேனு நடிப்பை ஆரம்பிச்சான், நானும் டயலாக் சொல்றதுக்கு முன்னாடி நிறுத்து நிறுத்து னு ஒரே சத்தம் அவங்க சைடுல இருந்து.”

“ஏன்?” புருவம் சுருக்கினாள் ஜான்சி.

“டயலாக் தமிழில் இல்லையாம் இங்கிலீஷ்லயாம்.”

“அச்சச்சோ பேசிட்டீங்களா?”

“ம்ஹூம். எனக்கு இங்கிலீஷ் வாய் தகராறு அவனுக்கோ அது வாய்க்கால் தகராறு போல, இரண்டு பேரும் பேப்பேனு முழிச்சோம். ம்ம் ஆரம்பிங்கனு அவங்க சொல்ல நாங்க இரண்டு பேரும் தஸ் புஸ் னு உளற, அங்கிருந்தவங்க எல்லாரும் கேலி பண்ணி சிரிச்சிட்டாங்க.”

“ஹாஹா. சோ ஃபன்னி… ஹாஹா.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ஜான்சி.

“ஹாஹா. இப்ப எனக்கும் நினைச்சி பார்க்கும்போது சிரிப்பு சிரிப்பா தான் வருது ஆனா அப்ப…!, அப்ப எனக்கு அப்படியில்ல, ரொம்பவே கஷ்டமா, அவமானமா இருந்துச்சு. காலேஜூக்கே போகமா ஒரு வாரமா என் ரூமிலேயே அடைஞ்சி கிடந்தேன்னா பார்த்துக்கோயேன்.” என்ற சுதாவின் முகத்திலோ கவலை ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தன.


தொடரும்..

கமெண்ட்ஸ் பிளீஸ்..
 
Top