எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆல்பா --5

இதுவரை ஆல்பா…

கண்ணுக்கு எட்டாமல் விஞ்ஞானிகளுக்கு கண்ணாமூச்சி காட்டும் பிளானட் எக்ஸ் கோள் பற்றீய ஆராய்ச்சியில் மணிசேகரனும் மேகலாவும் ஈடுபட்டு இருந்தனர். ஆராய்ச்சி தொய்வாக இருப்பதை கண்டு தலைவர் மல்கோத்ரா அழைத்து அவர்களை வேகப்படுத்த, அவர் அறைக்கு சென்று திரும்பியவர்கள் மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு வர………

ஆல்பா --5

ஆச்சரிய ஆல்பா– 05

மீண்டும் மல்கோத்ரா அறைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள் மணியும், மேகலாவும்.

“என்னம்மா இப்பதான் போயிட்டு வந்தோம் அதுக்குள்ள எதுக்கு திரும்ப கூப்பிடறாரு”

”எனக்கு என்ன தெரியும் ? நானும் உன்கூடதான் வந்தேன். எனை கேட்டா நான் என்ன சொல்ல”

“ சரி சரி கோவிச்சுக்காதே மணி. வா முதல்ல போய் என்ன சொல்றாருன்னு பாப்போம் “

’இதைதான் நான் சொன்னேன். ஆராய்ச்சி ஆராய்ச்சினு அலைஞ்சு கிழவனாகி சாக வேண்டியதுதான். நாம எங்க காதலிச்சு கல்யாணம் பண்ணி………ம்ம்ம்ம்’ என தனக்குள் முணுமுணுத்தான் மணி.

“என்ன மணி வர வர உனக்கு நீயே பேசிக்கற.. என்னாச்சு உனக்கு ? தலைவர் அறை வந்தாச்சு. கதவை திறந்து உள்ளே போவோம் . வா..” என்று மேகலா அவனைத் தோளில் தட்டி சத்தமாகச் சொன்னவுடன் மணி சுய உணர்விற்கு வர, இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

உள்ளே வழக்கம் போல மல்கோத்ரா கம்பீரமாய் அமர்ந்திருக்க அவருக்கு அருகே உரித்த பிராய்லர் கோழி நிறத்தில் ஒருவர் தலையில் ஒரு முடிக் கூட இல்லாமல் ஏதோ ஒரு புதிய கோள் பளபளவென மின்னுவது போன்ற முழு வழுக்கைத் தலையுடன் அமர்ந்திருந்தார்.

அவரின் தோற்றம் கண்டு எழுந்த சிரிப்பைக் அடக்கி மணியும் மேகலாவும் தலைவர் முன் இருக்கைகளில் அமர்ந்தனர்.

“என்னய்யா இரண்டு பேருக்கும் ஒரே குழப்பமா இருக்கும். மனசுக்குள்ள அல்லது வாய்விட்டு என்னை திட்டியிருப்பிங்களே. என்னடா இப்பதான் கூப்பிட்டு அனுப்பினாரு மறுபடி எதுக்கு திரும்பவும் கூப்பிடறாருனு ?”

மணி வேகமாக இடை மறித்தான்.

“ ஐய்யோ அப்படியெல்லாம் இல்ல சார். இது எங்களோட வேலை. கண்டிப்பா எங்களை வேகப்படுத்தினாதான் வேலை சீக்கிரம் முடியும்.”

மேகலா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். ”பச்சோந்தி நிறம் மாறுவதை விட மணி வேகமா மாறுறானே. படு கில்லாடி. ம்ம்ம்ம…”

”இவர் ப்ரான்க் டேவ். மிக சிறந்த தொலை நோக்கிகளின் ஆராய்ச்சியாளர்.. என்னுடைய ரஷ்ய நண்பர். மிக முக்கியமான ரகசிய விசயமா இங்க வந்திருக்காரு”

இருவரும் புன்னகைத்து கைகுலுக்க அவரும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

“ இவருக்கு ஆங்கில மொழியும் தெரியும். இனி அவரே சொல்வார். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் மொழியும் தெரியும்”.

( இனி அவர்களுக்குள் நடப்பது தமிழில் உங்களுக்காக )

“நீங்க இரண்டு பேரும் மிக சிறந்த ஆராய்ச்சியாளர்கள்னு என் நண்பர் மல்கோத்ரா சொல்லியிருக்கார். இப்ப பிளானட் எக்ஸ் கண்டுபிடிக்கறதுல நீங்க கடுமையா போராடிகிட்டு இருக்கீங்க. அப்படிதானே.”

மேகலா வாய் திறந்தாள்.

“ஆமா சார். தலைவர் வழிகாட்டுதல்ல எங்களுடைய முயற்சி நடந்துகிட்டு இருக்கு. கண்டிப்பா இலக்கை அடைஞ்சிருவோம்.”

“மேகலா மேடம் உங்க இரண்டு பேரோட வேலைகள் அனைத்தையும் படிச்சு பார்த்தேன். கிட்டத்தட்ட நெருங்கிட்டிங்க. இப்ப நான் வந்துருக்கறது உங்களுக்கு உதவத்தான்”

மணி இப்போது வாயைத் திறந்தான்.

“ரொம்ப நன்றி சார். எங்களுடைய திட்டம் பெயர் ஆல்பா. அதாவது ஆல்பான்னா தொடக்கம். ஏற்கனவே பால்வெளி மண்டலத்துல ஆல்பான்னு பெயர் இருந்தாலும் எங்க நோக்கம் புதிய கோளை கண்டு பிடிக்கறதுதான். புதியதாய் ஒரு தொடக்கத்தை கண்டுபிடிக்கறதுதான்.”

ப்ரான்க் டேவ் மற்றும் மல்கோத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

ப்ரான்க் டேவ் மறுபடி ஆரம்பித்தார்.

“ நீங்க செய்யற வேலை வெளிப்படையா புதிய கோளை கண்டுபிடிக்கறதா இருந்தாலும் உண்மையான நோக்கம் அது அல்ல. இன்னொரு ரகசியத்தை கண்டுபிடிக்கறதுதான் உங்க ஆராய்ச்சி”.

மணியும் மேகலாவும் ப்ரான்க் சொன்னதை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தனர்.‘ என்னடா இது , இந்த மனுசன் இப்படி குழப்பறாரே. நம்மளை கண்டு பிடிக்கச் சொன்னது பிளானட் எக்ஸ் . ஆனா இவரு வேறு ஏதோ திட்டத்தை சொல்றாரே. என்ன புது குண்டை போட போறார் போல’.

மேகலா தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

மணியும் உச்சக்கட்ட குழப்பத்தில் ஆழ்ந்தான்.

மல்கோத்ராவும் , டேவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்துக் கொண்டார்கள்.

அந்த அறையில் அலறிய தொலைக்காட்சி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு திடீர் அமைதி நிலவுவது போல ஒரு அமைதி நிலவியது. குளிருட்டப்பட்ட அந்த அறையில் மர்ம வெப்பம் உள்நுழைந்தது.

அவர்கள் இருவரின் நிலை கண்டு டேவ் எழுந்தார். ஏதோ ஒரு வித்தியாசமான கருப்பு பெட்டியை தூக்கிக் கொண்டார். திரும்பி மல்கோத்ராவை பார்த்தார்.

ஆல்பா திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன ?.........

மேகலா மற்றும் மணி அடைந்த ஆச்சரியத்திற்கு விடை கிடைக்குமா ?

அவர்கள் காத்திருந்தார்கள்…

நீங்களும் காத்திருங்கள்…
 
Top