எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாற்கரனில் உருகும் பார்தவியே!

உறவுகள் சரி இல்லாத இருவர் உறவாகும் கதை!!.. மோதலில் ஆரம்பித்து, இயல்பான நட்பாகி, காதலால் இணைந்தனர்!!...

நந்தனின் நட்பு ரொம்ப ரொம்ப பிடித்தது!!... எதிர்பாரா திருப்பங்கள் கதையின் போக்கை சுவாரஸ்யமாக்கியது!!..

கடைசி வரை மாறாத பாசம் கொண்டிருந்த பெற்றவர்களையும், உடன் பிறவா சகோதரனையும் பிடித்தது!!..

அந்த பாட்டிக்கு மிதிலா கொஞ்சமாவது பதிலடி கொடுத்திருக்கலாம்!!!... சில காட்சிகளில் உணர்வுகளை உணர முடியவில்லை!!... பவித்ரா இறுதியில் மிதிலாவுக்காக பேசியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!..

காட்சியமைப்புகளிலும், உணர்வுகளை எழுத்தாக்குவதிலும் இன்னும் கவனம் செலுத்தினால் அருமையாக இருக்கும்!!...

தலைப்புக்கான அர்த்தம் சொன்னது அருமை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top