எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள்

santhinagaraj

Well-known member
கொலுசொலி ஆசைகள்

விமர்சனம்

கணவனை பிரிந்து தவிக்கும் ஒரு பெண்ணின் ஆசைகள்,வலிகள், ஏக்கங்கள் நிறைந்த உணர்வுபூர்வமான கதை.

திருமணம் முடிந்து சில மாதங்களில் மனைவியை பிரிந்து குடும்பத்திற்காக வெளிநாடு செல்லும் நாயகன் எட்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வர எதிர்பார்ப்புடன் ஆசைகளுடன் காத்திருக்கும் மனைவியை தாம்பத்தியத்திற்காகவும் குழந்தை பெறுவதற்காகவும் நெருங்குவதும் அவளின் மன உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் இருப்பதும் வேதனைக்குரிய விஷயம்.

அம்மா சொல்வது தான் சரி அம்மா நம்ம விட நல்லா இருக்கிறார் என்று எல்லாத்தையும் செய்வாங்கன்னு சொல்லி மனைவியின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பவர்களுக்கு வீட்டில் மனைவி இல்லாத தனிமை எவ்வாறு இருக்கும் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொன்ன விதம் சூப்பர் 👏👏

மாமியார் வீட்டிலும் சரி தாய் வீட்டில் சரி அவளின் உணர்வுகளை மதிக்காமல் கணவனின் ஆசைகளுக்கு ஆசைகளுக்கு இணங்கி ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு சந்தோசமாக வாழு என்று சராசரி குடும்பத்தில் வாழும் பெண்களின் நிலை விளக்கிய விதம் சூப்பர்.

மனதில் சில நுண் உணர்வுகளை அடுத்தவர்களும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் மனதில் புழுங்குவதும், உங்களுக்கு என்ன நீங்க தண்ணி அடிச்சுட்டு படுத்துறீங்க நாங்க என்ன பண்ணுவது என்பதான உணர்வுபூர்வமான வசனங்களும் மாமியாருக்கு மருமகள் கொடுக்கும் பதிலடிக்கும் செம்மயா இருந்தது 👌👌

ஒரு பெண்ணிற்கு படிப்பும் வேலையும் இருந்தால் எங்கும் உயர்ந்து நிற்கலாம் என்றும் படிக்கும் இடமும் அங்கிருக்கும் பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் என்று கதையின் போக்கில் சொன்ன கருத்து சூப்பர்👌👌👌👌

தவறு செய்பவர்கள் திருந்தி வரும்போது அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமலேயே அவர்களின் தவறை பெரிதாக நினைத்து விட்டு விட்டால் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதையும்,
ஒரு வாய்ப்பு கொடுக்கும்போது அவன் திரும்பி எவ்வாறு மாறுகிறான் என்பதையும் ரொம்ப அருமையா காட்டி இருக்கீங்க சூப்பர். 👌👌

மனைவி கொடுத்த வாய்ப்பினை ஏற்று மனைவியின் ஏக்கங்கள், ஆசைகளை புரிந்து நடக்கும்போது அவனுள் ஏற்படும் உணர்வுகளும் மாற்றங்களும் அழகு😍😍

அருமையான உணர்வுகள் நிறைந்த குடும்ப கதை சூப்பர்👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
Top