chitrasaraswathi
Member
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK89ன் கொலுசொலி ஆசைகள் எனது பார்வையில். செந்தாமரையின் கணவன் கெளது திருமணம் செய்து சில நாட்களில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிடுகிறான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததற்கு கூட வராமல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வருகிறான். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறான். எட்டு வருடங்களுக்கு பிறகு வருபவன் அம்மா விருப்பப்படி ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து மனைவியுடன் வாழும் வாழ்க்கை செந்தாவிற்கு கணவன் மேல் அதிருப்தி வருகிறது. மனைவியை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் அவனை காலமும் மனைவியும் மாற்றினார்களா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வெளிநாட்டில் வேலை செய்ய மனைவியை பிரிந்து வாழும் கணவன் இவர்களது வாழ்க்கை முறையின் யதார்த்தத்தை தந்திருக்கிறார்.
எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக இருக்கிறது. இயல்பான நடையில் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக இருக்கிறது. இயல்பான நடையில் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.