எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கரைவேட்டிகாரனின் தேவதை கதை திரி

Status
Not open for further replies.

priya pandees

Moderator
அத்தியாயம் 1

"பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே தனனா னனனா னனனா"

ஜானகியின் குரல் அந்த நள்ளிரவின் நிசப்தத்தில் கேட்பதற்கு தேனாக இனிக்க, அவர் கூடவேப் பாடிக் கொண்டு ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டு, ஜன்னல் வழியாக வந்த குளிர்ந்த காற்று முகத்தில் மோத அதையும் அனுபவித்துக் கொண்டு, யாரின் துணையும் இன்றி காரைத் தானே ஓட்டிச் சென்று கொண்டிருந்தான் குஜராத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவனான ஆரோன் டேவி எட்வர்ட்.

அவன் வேண்டாம் என்றாலும் தனித்து விட்டுவிட மாட்டார்கள் அவன் கீழ் இருக்கும் விசுவாச அடியாட்கள், அவன் காரை எட்டாதவாறு பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். எலக்சன் முடிந்து இரண்டு மாதங்கள் ஓடி இருந்தது. இப்போது புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியிருக்க அது சம்பந்தமாக முதலமைச்சரைத் தான் ரகசியமாக சென்று பார்த்துவிட்டு வருகிறான்.

அவன் வீடிருக்கும் தெருவில் திரும்புகையில் அவனது கைபேசி தன் இருப்பைக் காட்ட, அழைப்பை ப்ளுடூத் வழி ஏற்றவன், "சொல்லு சலீம்" சலீம் அவனது மேனேஜர் மற்றும் தனிப்பட்ட உதவியாளன். அவனைச் சுற்றி அதிகமானோர் தமிழர்கள் தான், பாதிபேர்‌ அவன் அப்பாவிடமிருந்து அப்படியே இவனுக்கு கீழ் வந்தவர்கள். மீதிபேர் கடந்த ஐந்து வருடங்களில் அவனாக சேர்த்துக் கொண்டது.

"ஆளப் பிடிச்சாச்சு சார்" என்றான் சலீம் அந்தப்பக்கம்.

"எத்தன வயசு இருக்கும் அந்த பொறம்போக்குக்கு" என்றவன் வண்டியை மீண்டும் வந்த வழியே திருப்பி இருக்க, இதை எதிர்பார்க்காத அவனது பின்னேயே வந்திருந்த விசுவாசிகள் தங்கள் வண்டியை சடன் பிரேக்கடித்து நிறுத்திவிட்டு முழிக்க, எதிராக பல்லைக் கடித்தவாறு, அவர்கள் வண்டியை மோதுவது போல் வந்தவன், ஜன்னல் வழியாக எட்டி முறைத்து, "ஒரு நாள்னாலும் உங்க நாலுபேத்தையும் வண்டியோட தூக்கத் தான்டா போறேன்" என விரல் நீட்டி எச்சரித்து விட்டு, ஒடித்து திருப்பி அவர்கள் வண்டியைக் கடந்து செல்ல, அவன் அதட்டலை வெகுமதி போல் வாங்கிக் கொண்டு, மீண்டும் பின் தொடரத் தாங்களும் காரைத் திருப்பினர்.

"சார்" அந்த பக்கம் சலீம் அழைக்கவும்.

"ஏஜ் என்னடா அவனுக்கு?" அதட்டவே செய்தான்.

"சிக்ஸ்டி கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன் சார்"

வாய்க்குள் கெட்ட வார்த்தையில் திட்டியவன், "வை வரேன்" என வைத்துவிட்டு வண்டியை முறுக்கி வேகம் எடுத்தான்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவன் ஊருக்கு வெளியே சற்று உள்ளடங்கிய பாதையில் வண்டியை விட்டவன், வண்டியில் சத்தமாக பாடிக் கொண்டிருந்த பாட்டையும் நிறுத்திவிட்டான்.

ஆரோனை பின் தொடர்ந்து வந்த வண்டியில் உள்ளவர்களில், "எதும் கேஸ் உண்டா இன்னைக்கு?" என்றான் ஒருவன் மற்ற மூவரிடமும்.

"இல்லயே சலீம் பாய் எதும்‌ நம்மட்ட சொல்லலையே" என்றான் இன்னொருவன்.

"அப்ப இப்ப சாயந்தரத்துக்குள்ள எவனோ சிக்கிருக்கான்" என சிரித்துக் கொண்டே முதலாமவன் சொல்லவும் மற்றவர்கள் ஆமோதித்து சிரித்துத் தலையசைத்தனர்.

ஆரோனின் வண்டி மேலும் முன்னேறி அடர்ந்த வனத்திற்குள் நுழைய, அங்கு ஆங்காங்கே காவலுக்கு இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டனர்‌. மேலும் ஒரு கிலோ மீட்டர் உள்ளே சென்றபின், ஒரு பெரிய கோட்டை சுவர் அவனை வரவேற்க அதில் காவலுக்கு நின்றவர்களிடம் இரு விரலை அசைத்து விட்டு அவர்களை தாண்டி உள்ளே சென்றான், உள்ளே பெரிய கட்டிடம், அதை நெருங்க நெருங்க தான் ஒருவனின் அலறல் சத்தம் காதை கிழித்தது. அவன் அலறலில் ஏற்கனவே பிணை கைதியாக இருந்தவர்கள் நடுங்கி நின்றிருந்தனர்‌.

கட்டிடத்தின் வாசல் வரை வந்து வண்டியை நிறுத்தி இறங்கியவன், கருப்பு சட்டை அதே கரை வைத்த வேட்டி அணிந்திருக்க, அது இன்னும் மிரட்டலாக இருந்தது அங்குள்ளவர்களுக்கு. கையை மடக்கி விட்டவாறு உள்ளே வேக எட்டு வைத்து நுழைந்தான், "சலீம்" என்ற அவன் குரலின் எதிரொளிப்பில் அலறிக் கொண்டிருந்தவன் வாயை கப்பென்று மூடிக் கொண்டான்.

"மாஃப் கிஜியே பாய் சாப்" (மன்னிசுடுங்க) என அந்த அறுபது வயதுடையவர் இவன் காலில் வந்த விழ, தயவுதாட்சன்யம் இன்றி எட்டி மிதித்தான்.

"உனக்கு எவன் குடுத்தான்?" என வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீண்டும் மிதிக்க.

"சாப்" அவன் வாய்விட்டு அழுதான், மாட்டிக் கொள்ளாமல் இருக்க எல்லாம் செய்தும் மாட்டிக்கொண்டு அழுகிறான். இனி வாழ்க்கை நரகம் தான் என இங்கு வந்ததும் தெரிந்து கொண்டானே, அதனால் பயத்தில் அழுகை தன்னாலே வந்தது.

"எப்டிரா கிடைச்சது?" என்றான் மீண்டும் மீண்டும் மிதித்தே அவன் வலது கால் முட்டியை உடைத்துவிட்டு.

"மும்பைல இருந்து ஆளுங்க இறங்கிருக்கானுங்க போல சார். நம்மள‌ பத்தி தெரிஞ்சு நிறைய பேர் வாங்கல, அப்டி வாங்குனவனும் கதவ பூட்டிட்டு உள்ளயே கடந்துருகானுங்க. இப்ப அவனுங்க உள்ள‌ வந்து ஃபிஃப்டீன் டேஸ் ஆகிருக்கு. இவனும் கஞ்சாவ இழுத்துட்டு வீட்டுக்குள்ள முடங்கிருக்கான், அப்பா ஏக்கத்துல இவன் ரூமுக்கு பாசமா தேடி வந்த புள்ளைய" அத்தோடு சொல்ல முடியாமல் நிறுத்திக் கொண்டான் சலீம்.

கழுத்தில் மிதித்து, "பச்ச புள்ளய" என்றவன் தன்னை சட்டென்று நிதானித்தான். சலீமிடம் கண்ணைக் காட்டிவிட்டு நகர்ந்து விட்டான், கோபத்தில் அடித்தே கொன்று விடுவான், அது அவர்களுக்கு போதாதே! அதனால் உயிரோடு இருக்க வைத்து நரகத்தைக் காண்பித்து விடுவான். அடுத்து அங்கு நடந்தது எல்லாம் பாவத்திற்கான தண்டனைகளில் சேர்க்கப்‌படும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதில் மரணத்தை மட்டும் விட்டுவிட்டு அதன் பாதையைக் காட்டி விடும் எமன் இந்த ஆரோன். இவனின் இப்படி ஒரு முகம் யாரும் அறியாதது.

அந்த இடமே பாவம் செய்பவர்களின் தண்டனைகளுக்காக அவன் ஒதுக்கிக் கொண்டது. அவன் தங்கைக்கு நேர்ந்ததில் எடுத்த முடிவிது. கடந்த எட்டு வருடங்களில் அந்த இடத்தையே காடாக்கி இருந்தான். நூறு ஏக்கரை பொட்டல் நிலமாக வாங்கி, ஒரே ஒரு கட்டிடத்தைக் கட்டி விட்டு, பெண்களுக்கு தீங்கு செய்பவர்களைக் கொத்துக் கொத்தாகத் தூக்க ஆரம்பித்தான், உடலில் திமிறும் தெம்பும் இருக்கவே தான் தப்பு செய்ய மூளை தூண்டுகிறது என்பவன், தூக்கி வந்தவர்களை முடமாக்கி, ஒரு வேளை சாப்பாட்டோடு மரம் நட விட்டான், முடமான கைக்கால்கள் கொண்டு அதை பராமரிக்க விட்டான். இன்று அந்த இடத்தையும் காடாக்கி விட்டான்.

அங்கு வந்தவர்களில் பாதிபேர் பரலோகம் சென்றிருக்க, மற்றவர்கள் அதை எதிர்பார்த்து காத்திருந்தனர். இது ஒருவழிச் சாலை போல் உள்ளே வர மட்டுமே முடியும், வெளியே செல்ல இயலாது என வந்த சிறிது நாட்களில் அறிந்து கொண்டனர். கொத்தடிமையாக தான் நடத்தப்படுவர், உடல் கொழுப்பில் செய்ததை எல்லாம் கரைத்துவிட்டே சாக விடுவான் ஆரோன். வெளி உலகத்திற்கு தப்பு செய்பவர்களுக்கு ஆரோன் ஆட்சியில் தண்டனை கிடைக்கப்பெற்று கடுங்காவல் சென்று விடுவது வரை மட்டுமே தெரியும், அதற்கு பின் அவர்கள் இங்கு வந்து விடுவது யாரும் அறியாதது.

அதனாலேயே இன்று பெண்கள் சுதந்திரத்தின் முதல் இடமாக இருக்கிறது குஜராத் மாநிலம், காரணம் குடும்ப நல அமைச்சராக இருக்கும் ஆரோன் என்பவனால் என்பது மொத்த இந்தியாவிற்கும் தெரியும்படி இருந்தது.

இப்போது எலக்சன் முடிவும் வந்திருக்க, அவன் நற்பேரை குலைப்பதற்கே போதைப் பொருளை உள்ளிறக்கி இருந்தனர் அவன் எதிரிகள். அவன் தமிழ் நாட்டைச் சார்ந்தவன், கரைக் வேட்டிகாரன் என்பதெல்லாம் தான் அவனை எதிர்ப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் யுக்திகள். ஆனால் பெண்கள் ஓட்டு முழுமையாக அவனுக்கு கிடைக்க கடந்த இரண்டு ஆட்சியிலும் அவனை அசைக்கக் கூட முடியவில்லை.

"இங்க முடிச்சுட்டு நீ கிளம்பு சலீம், மார்னிங் டெல்லி போணும்" வந்த வேலையை முடித்து விட்டு சுற்றி ஒரு பார்வை பார்த்தான், அந்த பார்வையிலேயே வருட கணக்கில் மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் விழி பிதுங்கி வெடவெடத்து நின்றனர்.

"ஓ.கே சார்" என்ற சலீமின் பதிலில் கிளம்பி விட்டான் ஆரோன்.

மீண்டும் வீட்டிற்கு வர அதிகாலை நான்கு மணி ஆகி இருந்தது, அவனறைக்கு வந்து, குளித்து உடை மாற்றி படுத்துவிட்டவன், விடிந்ததும் டெல்லி செல்ல கிளம்பியே வெளி வந்தான், வெள்ளை வேட்டி சட்டையில்.

"மாமா" என ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டான் யாஷ், ஆரோனின் தங்கை மகன்.

"ஸ்கூல் போல நீ?" என கேட்டுக் கொண்டே அவன் தோளில் கைப் போட்டு சாப்பிடும் இடம் அழைத்து வந்தான் ஆரோன்.

"லோக்கல் ஹாலிடே மாமா. நா, அம்மா, அம்மம்மா மூணு பேரும் மால் போறோம்‌, நீங்களும் வரீங்களா?"

"எனக்கு ஹாலிடே இல்லையே யாஷ், மாமா டெல்லி போணுமே"

"ண்ணா அப்ப எப்ப ரிடர்ன்?"

"டூ டேஸ்ல ப்யூலா"

"எலக்சன்கு முன்ன மேரேஜ் பண்ணிக்கோன்னு சொன்னப்ப கேக்கல நீ, அப்றம் இப்ப இன்னும் பிஸி ஆகிட்ட. என்னண்ணா பண்ண போற?" என்றாள் கெஞ்சலாக. அவள் வந்தும் மூன்று மாதங்கள் ஓடி விட்டது, அவன் திருமணத்தைப் பற்றி பேசிப் பேசி சோர்ந்து தான் விட்டாள்.

நிமிர்ந்து பார்த்தவன், "ஆல்ரெடி என் கண்டீஷன்ஸ் சொல்லிட்டேனே" என்கவும்,

"அப்டிலா இப்ப பொண்ணுங்கக் கிடைக்க மாட்டாங்கண்ணா"

"தென் நோ இஷ்யூஸ்" என்றவன் வேலையாள் கொண்டு வைத்த உணவை சாப்பிடத் தொடங்கிவிட, இருவர்‌ பேச்சையும் சமையலறை மறைவில் ஒதுங்கி நின்று கலங்கிய கண்களுடன் கேட்டிருந்தார் ரோஸி. அவன் முன் வந்தால் சாப்பிடாமலே எழுந்து சென்று விடுவான் என்பதாலேயே.

"அண்ணா? ப்ளீஸ்"

"நீ உன் லைஃப் பத்தி என்ன‌ டிசைட் பண்ணிருக்க?"

"கொஞ்ச நாள் நீ, உன் வைஃப், நம்ம அம்மான்னு இருந்துக்குறேன் அண்ணா" நிதர்சனத்தை ஏற்றே பேசினாள்.

"குட், நா சொன்ன பேசிஸ்ல எனக்கு பொண்டாட்டி பாரு ப்யூலா, எப்ப ஓடி போவாங்கன்னு நா அலர்ட்டாவே சுத்த முடியாது. அண்ட் எனக்கு என்னோட பொசிஷனுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம்" என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்து, அங்கிருந்த வாஷ் பேஷனில் கையைக் கழுவிக் கொண்டு, "என்ஜாய் யுவர் டே" என ப்யூலாவிடமும் யாஷிடமும் சொல்லி வெளியே வர, சலீம் நின்றிருந்தான்.

"ரிட்டர்ன் வந்ததும் கமிஷனர் மீட்டிங் ஒன்னு ஏற்பாடு பண்ணிடு சலீம்" என காரில் ஏற, உடனே அதை செயல்படுத்தியவாறு உடன் ஏறிக் கொண்டான் சலீம்.

கண்ணீரைத் துடைத்து கொண்டு வெளி வந்த ரோஸி, "இப்ப என்னமா பண்ணலாம்?" என மகளிடம் கேட்க.

"ஆன்லைன்ல பொண்ணுத் தேட மொத குவாலிஃபிகேஷனா பொண்ணு படிப்பையும் வொர்க்கயும் தான் இப்பல்லாம் போடுறாங்க, இதுல அண்ணா கேக்கற கண்டீஷன்ல பொண்ணு தெரு தெருவா போய் தான் தேடணும் ம்மா"

"என்னால தான அவன் அப்டி பொண்ணே கேக்றான்? நாளைக்கு வர்ற பொண்ணுட்டயும் இப்டி சந்தேகத்தோட ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாம்னா வர்ற பொண்ணு பாவமில்லையா ப்யூலா" என்றார் பாவமாக.

யோசித்த ப்யூலாவும், "அப்ப அண்ணாக்கு மேரேஜே பண்ண வேணாம்னுறீங்களா?"

"ம்ச் என்ன ப்யூலா நீ? நா பண்ண தப்புக்கு அவன் ஏன் இப்படி தனியா நிக்கணும்? பொண்ணு அவனுக்கு பிடிச்சமாறி அமைஞ்சுட்டா, அவ மூலமா கிடைக்கிற அன்பு நம்பிக்கைய தருமே?"

"அவன் கண்டிஷனுக்கு பிடிச்சமாறினா? எங்கப் போய் எப்டித் தேடுறது?"

"உன் பிரென்ட்ட சொல்லி பாரேன்?"

"செங்குட்டுவன்ட்டயா?"

"ம்ம் அவங்க ஊரோட இருக்கவங்க, நிறைய பழக்கவழக்கமு உண்டு, தெரிஞ்சவங்க இருந்தா கூட சொல்லுவாங்க"

"அண்ணாவோட கண்டிசன யோசிச்சு தான் இத்தனை நாள் அவன்ட்ட பேசல ம்மா, சகட்டு மேனிக்கு கேட்டு வருத்தெடுப்பான்"

"ஆமா கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான், ஆனாலும் கேட்டா ஹெல்ப் பண்ணுவான்"

"சரி ம்மா பேசி பாக்றேன்" என்றவள் குற்றாலத்திலிருக்கும் செங்குட்டுவனுக்கு அழைத்தாள். இருவரும் கேட்டரிங் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அவளின் பல வருட பிரச்சினையைத் தீர்த்துக் கொடுத்த செங்குட்டுவனின் குடும்பத்தின் மீது ஆரோனுக்கு தனி மரியாதையும் உண்டு என்பதால் அவனிடம் உதவிக் கேட்க முடிவெடுத்தாள்.

"சொல்லு ப்யூலா? எப்டி இருக்கீங்க? மினிஸ்டர்கு என் வாழ்த்த சொல்லிடு" என்றான் எடுத்ததும்.

"ஏன் அண்ணாக்கு நீயே சொல்ல வேண்டியதான?"

"எதுக்கு உங்கம்மாவ‌ அங்க கொண்டு விட்டுட்டேன்னு கொல காண்டுல இருக்கவர்ட்ட தலைய‌ நீட்ட சொல்ற?"

"ரொம்ப பயந்தவன் தான் நீ. அங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஆச்சிய கேட்டதா சொல்லு"

"கண்டிப்பா சொல்லிடுறேன். நீ என்ன திடீருனு கூப்பிட்ருக்க? உங்க அண்ணாக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டீங்களா?"

"அதுக்கு தான் உனக்கு கூப்டேன்"

"கண்டிப்பா வரேன், அதும் குடும்பத்தோட வந்து விழாவ சிறப்பிச்சுடுறோம்" என அவன் சிரிக்க.

அவர்கள் கலாட்டாக்களை நினைத்து அவனுடன் சேர்ந்து சிரித்தவள், "பொண்ணே நீதான் பாத்து தரணும் டார்லிங்" என்க.

"பொண்ணு பாக்கணுமா?"

"ஆமா. ஆச்சிட்டயும்‌ சொல்லு சூப்பர் பொண்ணா என் அண்ணனுக்கு பாத்து தாங்க எல்லாருமா சேர்ந்து"

"ஏன் குஜராத்ல பொண்ணே இல்லையாம்மா?"

"அவன் போடுற கண்டிசன்ல இல்லையே"

"ஓ! அரசியல்வாதிக்கு பொண்ணு கிடைக்றதே கஷ்டம், இதுல உங்க அண்ணா கண்டிசன் பேசிஸில தான் கல்யாணம் பண்ணுவாறாமா? எங்க சொல்லுப் பாப்போம் அந்த கண்டிசன்கள"

"பொண்ணு படிச்சுருக்கக் கூடாது, காட்டு வேலைக்குக் கூட வேலைக்குன்னு வெளில போயிருக்கக் கூடாது, மொத்தத்துல உலகறிவே இருக்கக் கூடாது, முக்கியமா யாரையும் லவ் பண்ணிருக்கக் கூடாது, மத்தபடி கேஸ்ட், ரிலிஜியன், கருப்பு சிவப்பு, நெட்டக் குட்ட, குண்டு ஒல்லி இப்படி எதுமே பிரச்சினை இல்லையாம்"

"உன் அண்ணனுக்கு என்ன ஆதாம் ஏவாள் காலத்துல வாழ்றதா நினப்பா?" என செங்குட்டுவன் நக்கலாகக் கேட்க.

"நா மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் இந்த கண்டிசன்ல பொண்ணு அந்த கடல்லயே இல்லையாம். சொன்னா அண்ணா எங்க கேக்குறான்? கிடைச்சா பண்ணிக்கிறேன் இல்லனா இப்டியே இருக்கேன், சும்மா எப்ப பழைய லவ்வரத் தேடி அவ ஓடுவாளோன்னு நா பயந்துட்டு இருக்க முடியாதுன்றான்"

"இப்டி தாட்ல இருக்க உன் அண்ணனுக்கு எதுக்கு கல்யாணம்? சும்மா சாமியாராவே சுத்தட்டும்னு விடு"

"டார்லிங் ப்ளிஸ், அண்ணா பாவம். தனியாவே சின்ன பிள்ளைல இருந்து இருக்கான், அவனுக்குன்னு அவன பாசமா பாத்துக்க ஒரு ஆள் வேணும். இனினாலும் ரசனையான ஒரு வாழ்க்கைய அவன் வாழட்டுமே ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு"

"விடாது கருப்பு மாறித் துரத்திட்டே இரு நீயும் உன் அண்ணனும். போன வை, அப்டி எதும் பொண்ணு செஞ்சு தராங்களான்னு விசாரிச்சு சொல்றேன்" எனக் கடுப்போடு வைத்துவிட்டான்.

போனைக் காதிலிருந்து எடுத்து விட்டுத் திரும்ப, "என்னமா சொன்னான் அந்த பையன்" என ரோஸி கையில் பழச்சாறுடன் நிற்க,

அதை வாங்கிக் கொண்டவள், "கடிச்சுக் கொதறிட்டு வச்சுட்டான். ஆனா அண்ணனுக்கு ஏத்தப் பொண்ணா சீக்கிரம் பிடிச்சுடுவான், தெய்வா ஆச்சிட்டையும் சொல்லி வைக்கணும்" என்றவள் கையோடு செங்குட்டுவனின் அம்மா தெய்வானைக்கும் அழைத்து விஷயத்தைக் கூறிவிட்டாள்.

அவனது எதிர்பார்ப்பிலாத அன்பிற்கு அடங்கும் அவனது தேவதை குற்றாலத்தில் தான் பனிரெண்டாம் வகுப்பிற்கு கணக்கு பாடம் பயிற்றுவித்துக் கொண்டிருந்தாள். ஆரோனிடம் அவளை சிக்க வைக்கவோ இல்லை அந்த ஏஞ்சலிடம் ஆரோனை சிக்க வைக்கவோ ப்யூலா காரணமாகி இருந்தாள்.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 2

ஆரோன் டெல்லியிலிருந்து திரும்பி வந்த நான்காம் நாள் தலைமை செயலகம் செல்ல கிளம்பி வந்தவன், வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் செய்தி சேனலை வைத்து விட்டு சோஃபாவில் அமர, வேலையாள் ஓட்ஸ் கஞ்சி அடங்கிய கிண்ணத்தை அவன் முன் வந்து வைத்து விட்டுச் சென்றார்.

"மேத்தா வயதானோர் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருந்து இரு முதியோர்கள் நேற்று மாலையிலிருந்து காணவில்லை என புகார் கிளம்பிய நிலையில் தேடுதல் பணி முடுக்கி விட பட்டுள்ளது" என செய்தி ஹிந்தியில் ஓடிக் கொண்டிருந்தது.

உயர்ந்த புருவத்துடன் அதில் காட்டப்பட்ட அந்த இல்லம் அதன்‌ உரிமையாளர்கள் என இவன் பார்த்திருக்க, சலீம், "குட் மார்னிங் சார்" என உள்ளே வந்தான். ஆரோனின் ஆராயும் பார்வை போதும் அதை அவன் மூளையின் ஒரு மூலையில் சேமிக்கிறான் என்று அர்த்தம். சலீமும் தொலைக்காட்சியைப் பார்க்கத் திரும்பினான்‌.

"இன்னைக்கு க்ரேட் ஷோர்ல மேம்பாலம் ஓபனிங் இருக்குல்ல?" என்றான் அவனிடம் ஆரோன்.

சட்டென்று ஆரோனிடம் திரும்பியவன், "ஆமா சார். பத்து மணிக்கு ஓபனிங். அங்க இருந்து காந்தி நகர் போயிட்டு வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் சார்பா நடத்துற‌ விழால கலந்துக்கப் போறீங்க, தென் கட்சி ஆபிஸ் மீட்டிங்"

கஞ்சியைப் பருகி முடித்திருக்க, அதை முன்னிருந்த டீபாயில் வைத்து விட்டு, "போலாம்" என எழுந்து கொள்ள முயல, "அண்ணா" என‌ வந்தாள் ப்யூலா.

ஆரோன் திரும்பிப் பார்க்க, "நேத்து போட்டோஸ் அனுப்பினேன்ல நீ ஒன்னும் சொல்லல?" என்றாள் முந்தைய தினமே சலித்தெடுத்து இரண்டு போட்டோக்களை கல்யாணம் செய்து வைக்கும் தளத்திலிருந்து வாங்கி இவனுக்கு அனுப்பி இருந்தாள்.

"ம்ஹூம் டைம் இல்ல ப்யூலா. நா பாக்கல. கண்டிசன்ஸ் ஓ.கே தான?"

"உன் கண்டிசன்கு ஃப்ல்டர் பண்ணதுல ஒரு லட்சம் ப்ரஃபைல் இருக்குற‌ சைட்லயே ரெண்டு பேர் டீடைல்ஸ் தான் கிடைச்சதுன்னா பாத்துக்கோ"

"முடியலனா விட்ரு‌ ஏன்‌ சிரமப்படுற?" என்றவன் வெளி வாசலுக்கு நடக்கத் தொடங்கி இருக்க.

"ம்ச்" என‌ தனக்கு தானே தலையிலடித்துக் கொண்டவள், "ண்ணா கிடைக்க மாட்டேங்குதேன்னு அப்படி சொல்லிட்டேன், கோச்சுக்காத ப்ளீஸ். நீ ஒருக்கா பாத்து கன்பார்ம் பண்ணி சொல்லு, மத்தத நா பாத்துக்குறேன்" என கேட்டுக் கொண்டே பின்னால் வர, திரும்பியே பார்க்காமல் இரு விரல் அசைப்புடன் கிளம்பி விட்டான். அவளுக்காகத் தானே இத்தனை வருடத்தை அவன் அவனுக்கான துணையின் தேடல் இன்றி கழிக்கிறான், அதுவே அவளை அவனுக்கான ஒரு வாழ்க்கையை சீக்கிரம் அமைத்துத் தர உந்தி தள்ளியது.

"என்ன ப்யூலாம்மா இப்டி சொதப்பிட்ட?" என வந்தார் ரோஸி,

"ஆமாம்மா நாலு நாளா அந்த மேட்ரிமோனி சைட்ல மண்டைய பிச்சுகிட்டேனே அந்த டென்ஷன்ல பேசிட்டேன்"

"சரி விடு அவன் பாத்து சொல்லட்டும் சட்டுன்னு கல்யாணத்த முடிச்சு அவன் பொண்டாட்டிட்ட அவன் பொறுப்ப ஒப்படச்சுடுவோம்" என‌ச் சிரிக்க,

"வர்ற அண்ணி தான் மா பாவம், இவன எப்டி தான் சமாளிக்க போறாங்களோ" என்க, ரோஸி சிரித்தாறே அன்றி எதுவும் பேசவில்லை.

ஆரோன் அன்றைக்கான வேலை எல்லாம் முடித்து அவன் கட்சி அலுவலகம் வர, வாசலில் அனேகக் கூட்டம், "என்ன பிரச்சினை சலீம்?" மிரட்டலாக தான் வந்தது கேள்வி, இங்கு வரும் வரை அவன் சொல்லவில்லையே என்பதால்.

"சாரி சார் யாரும் எனக்கு இதுவர இன்பார்ம் பண்ணல. நீங்க உள்ள‌ போங்க நா என்னன்னு விசாரிக்றேன்"

"இவ்வளவு பேர் நிக்றது பாத்துட்டும் நா உள்ள போயிடணுமா சலீம்?" பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் மீசையை முறுக்கிவிட்டுக் கேட்க.

"சாரி சார், இப்ப ப்ரேம்கு கால் பண்றேன்‌‌ சார்" என பரபரத்தான் சலீம். ப்ரேம் கட்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளன்.

"இனி அவனுக்கு எதுக்கு பண்ணணும். இவ்வளவு நேரம் அவன் என்னத்த ப்ளக் பண்ணிட்டு இருந்தானோ அதையே பண்ணிட்டு இருக்க சொல்லு" என்றவன் அலுவலக வாசலில் இறங்கி எல்லோருக்கும் வணக்கம் வைக்க, நா நீ என அவனை அடைய முந்திக் கொண்டு வந்தனர்.

அவனது விசுவாசிகள் அவனைக் காத்து நிற்க, திபுதிபுவென ஓடி வந்த கட்சி அலுவலக ஆட்களும் கூட்டத்தை மறித்து பிடித்தனர். ப்ரேமிற்கு உயிரே இல்லை, அதும் ஆரோன் பார்த்த பார்வையில் எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

"எல்லாரும் தரலாம், ஒவ்வொருதரா வாங்க, மனு தான கண்டிப்பா வாங்கிக்றேன். எந்த ஏரியாவ சேந்தவங்க நீங்க? கலெக்ட்ரேட் போனீங்களா?" வரிசையாக கேள்வி கேட்டவாறு முன்னால் நின்றவரின்‌ மனுவை கண்‌ காட்ட, சலீம் வாங்கி நீட்டினான்.

எந்த மனுவாக இருந்தாலும் கலெக்டரிடம் சென்று அவர்‌ மூலமாகவே இவன் பார்வைக்கு வரும். இன்று நேராக இங்கு வந்திருக்க என்ன பிரச்சினையாக இருக்கும் என்று தான் பார்த்தான்.

"கலெக்டர்ட்ட பாதிபேர் போயிருக்காங்க நாங்க கொஞ்ச பேர் இங்க வந்தோம் சார்" என்றனர்.

"ஒரே நேரத்துல ஒரே ஏரியாவ சேந்த ஏழு பொண்ணுங்க அதும் லாஸ்ட் ஒன் அவர்ல காணுமா?" தாடியைத் தடவி அவன் யோசிக்கும் தோரணையில் இன்னும் பயந்தனர் கூடி இருந்தவர்கள். அவனிடம் உடனடி தீர்வு கிடைக்கும் என்று தானே அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்தனர்.

அவனது யோசனையே, இது பரபரப்பை ஏற்படுத்தவே செய்யப்பட்டது போல் தான் இருந்தது. அது அவர்களுக்கு புரியாததால் அதிகம் பயந்தனர். ஆளாளுக்கு மறுபடியும் கோஷம் போடத் தொடங்கவும்,

"நா பாக்கறேன். அங்கங்க அலையாம சட்டுன்னு முடிவேடுத்து எல்லா இடத்துலயும் கம்ப்ளைண்ட் குடுத்தது ரொம்ப நல்ல விஷயம். இத நா கண்டிப்பா விசாரிக்க சொல்றேன், காணாம‌‌ போன பொண்ணுங்களோட பேரண்ட்ஸ் மட்டும் கமிஷனர் ஆபிஸ் போங்க, நைட்டுக்குள்ள உங்க பொண்ணுங்க டீடைல்ஸ் கிடைக்க வைக்க வேண்டியது என்‌ பொறுப்பு" அதிக நம்பிக்கையான வார்த்தைகளை வாக்காக கொடுத்து விட்டே, அலுவலகத்தினுள் நுழைந்தான்.

சலீம் அவன் பின்னாடியே செல்ல, ப்ரேம் அங்கு கொண்டு வந்தவர்கள் அத்தனைபேரின்‌ மனுவையும் வாங்கி முடிக்க, கட்சித் தொண்டர்கள் மற்றவர்களைப் பேசி சமாளித்து அனுப்பி வைத்தனர்.

"சார் சட்டுன்னு தான் அவ்வளவு கூட்டம் கூடிட்டாங்க" என மனுவை ஆரோன் முன் வைத்தவாறு மெதுவான குரலில் கூறினான் ப்ரேம்.

"எல்லா மனுவையும் படிச்சு பாரு. ஒரே விஷயமா? இல்ல வேற‌ மனுவும் இருக்கான்னு பாத்து சொல்லு" என்கவும் மீண்டும் அதை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.

"புதுசா உள்ள இறங்கினவனுங்க வேலையா இருக்குமா சார்?" சலீம் கேட்க.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அதன் கைப்பிடியில் வலது கையை வைத்து தாடியைத் தடவிக் கொண்டே யோசித்திருந்த ஆரோன், சலீம் கேட்ட கேள்வியில், நக்கலாக சிரித்துக் கொண்டே "இருக்கலாம், மொத நம்ம ஆட்கள அனுப்பி பொண்ணுங்கள மீட்க ரெடி பண்ணு. எதுக்காக செஞ்சுருந்தாலும் பொண்ணுங்க சேஃப்டி முக்கியம். அண்ட் ஆள் யாருன்னு சிக்கணும், அலர்டா வேலைய பாரு" என்கவும், சலீம் அவன் படைகளை திரட்டிக் கிளம்பி விட்டான்.

ஆரோன் அடுத்ததாக கமிஷனருக்கு அழைக்க, "இப்ப தான் சார்‌ கம்ப்ளைண்ட் என் டேபிளுக்கு வந்துருக்கு, கேஸ் ஃபைல் ஓபனாகிடுச்சு சார், சீக்கிரம் கண்டு பிடிச்சுடலாம்" இவனை பேசவே விடாமல் அவர் கூறி முடித்துவிட.

மீசைக்கு அடியில் ஒரு கர்வ சிரிப்பை உதிர்த்தவன், "குட் நீத்து ஹெனில். எனக்கு மேக்ஸிமம் டூ ஹவர்ஸ்ல வேல முடியணும், உங்க கால்க்கு வெயிட் பண்ணிட்ருப்பேன்" என வைத்தவன் சாய்ந்தமர்ந்து நிதானமாக காலையிலிருந்து நடந்தவற்றை எல்லாம் யோசித்து பார்த்தான்.

குற்றாலம்,

ஏஞ்சலினா நான்சி இல்லம், "நான்சி கிளம்பிட்டியா இல்லையா? சர்ச்சுக்கு போயிட்டு நீ ஸ்கூலுக்கு வேற போணும்டி. போன‌ இடத்துல லேட்டாகிட்டா அப்றம் என்ட்ட சண்டைக்கு வரக் கூடாது சொல்லிட்டேன்" அவளின் அம்மா எஸ்தர் கத்திக்கொண்டிருக்க.

"சண்டே போயிக்கலாம்னு சொல்றேன் ௭ங்கம்மா கேக்ற நீ? இன்னைக்கே போய் சிலுவ போட்டாகணும்னு நிக்ற. நிதானமா ௭தாது செய்ய முடியுதா? இப்ப அங்க போனதும் எல்லாத்தையும் உன் மூத்த மக நடத்த விட்டுட்டு தான் மறு வேலை பாப்பா, சும்மா அவசரத்துல நிக்ற" ௭ன தானும் கத்திக்கொண்டே பின்னலைப் போட்டு ஹேர்பேண்டை மாட்டிவிட்டவாறு அவள் அறையிலிருந்து வெளி வந்தாள் நான்சி.

"ஒழுங்கான வயசுக்கு கல்யாணம் கட்டிட்டு போயிருந்தா நா ஏன்டி இப்டி அவசரத்துல நிக்க போறேன்?"

"அதுக்கு நானா காரணம்?" ௭ன அவளும் மல்லுக்கட்ட அவர் ௭திரில் வந்து நிற்க.

"இனி தான் ரெண்டு பேருக்கும் லேட்டாக போகுது, கிளம்புங்க. ரோட்டுலயும் சண்டை போட்டுக்காம போயிட்டு வரணும்" ௭ன பேத்தியின் பையில் டிபன் பாக்ஸை வைத்து, எடுத்துக் கொண்டு நீட்டினார் நான்சியின் அப்பாவின் அம்மா.

"உங்க மருமகளுக்கு சொல்லுங்க பாட்டி அத. நா ஒன்னும் காலங்காத்தால அவங்கட்ட சண்டை போடக் கிளம்பி நிக்கலன்னு சொல்லி வைங்க. ௭ங்க உங்க மூத்த பேத்தி, போன போட்டு இவங்கள ஏத்தி விடுறதே அவ தான். இந்நேரம் மூக்குல வேர்த்தாக்குல கிளம்பி வந்துருக்கணுமே ௭ங்க காணும்?" மிதமான ஒப்பனைகளுடன் ஜென்சியையும் ௭திர்பார்க்காதவள் கைகடிகாரத்தை மாட்டிக் கொண்டு வரவேற்பறையில் இருந்த நீண்ட கண்ணாடியில் முகத்தை சரி பார்த்து விட்டு வாசலுக்கு விரைய,

"அவ நேரா சர்ச்சுக்கு வாராளாம்" என்றார் பாட்டி.

"அதான பாத்தேன். அப்ப அவளயே கட்டிட்டுப் போக சொல்லுங்களேன். சும்மா ௭துக்கு ௭ன்னப் போட்டு பந்தாடுறீங்க" ௭ன முறைத்துக் கொண்டு நின்றாள்.

"இந்த தட அவ எதும் பேச மாட்டாடி நா ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்" ௭ன சொல்லியே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார் எஸ்தர்.

ஏஞ்சலினா நான்சி வீட்டில் நான்கும் பெண்கள் தான். நான்சியின் அப்பா அவளின் சிறு வயதிலேயே உடல்நல குறைவால் தவறி இருக்க, அவளின் அம்மா எஸ்தரும், அப்பத்தா கிரிஸ்டியும் தான் நான்சியையும் அவள் அக்கா ஜென்சியையும் பார்த்துப் பார்த்து வளர்த்தனர்.

ஜென்சி நான்சியை விட ஐந்து வயது மூத்தவள், ஏழு வயதுவரை அப்பா பாசத்தை அனுபவித்தவள், மூத்த பிள்ளை ௭ன்பதால் செல்லம் அதிகம் அடம்பிடிக்கும் குணமும் அதிகம், தங்கை மீது பொறாமையும் அதிகம். சிறு வயதிலேயே அவளுக்கு போட்ட உடையை தான் நான்சிக்குப் போட வேண்டும், புதிதாக ௭டுக்கக் கூடாது ௭ன உக்காந்து அழுவாள். அவளைச் சமாளிக்க முடியாமல் நான்சிக்கு விவரம் தெரியும் வரை அவளுக்கு புதிய உடைகள் அதிகம் ௭டுத்ததே இல்லை. அவளே தெரிந்து கேட்டபிற்பாடே ௭டுத்துக் கொடுத்தனர், அதற்கும் ஜென்சி அழுது காய்ச்சலை இழுத்து கொள்வாள் தான், வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கும் அதனால் ஒரு சில நேரங்களில் அழவிட்டு பழக்கிக் கொண்டனர்.

உடையில், படிப்பில், ஊர் சுற்றுவதில், ௭தும் வாங்கி உண்பதில் ௭ன ௭ல்லாவற்றிர்கும் இருவருக்கும் போட்டி தான். நான்சிக்கும் வளர வளர அக்கா குணம் தெரிந்திருக்க வீட்டில் தினமும் சண்டையும் ரத்தகளறியும் தான்.

ஜென்சி படித்து முடிக்கவும், அரசாங்கத்தில் வேலை பார்க்கும் பையனைப் பார்த்து பக்கத்தில் தென்காசியிலேயே கட்டிக் கொடுத்து விட்டனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

நான்சிக்கு வயது போகிறது ௭ன அவளது இருபத்தைந்து வயதிலிருந்தே மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருந்தார் எஸ்தர். ஆனால் அவளுக்கு திருமணம் முடிந்தால் உடனே குழந்தை வந்துவிடுமோ? ௭ல்லோரும் தன்னைக் குறைத்து பேசுவிடுவார்களோ ௭னப் பயந்து வர்ற சம்மந்ததை ௭ல்லாம் கலைத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறாள் அவளின் அக்கா ஜென்சி.

மூன்று வருடங்கள் ஓடி விட்டது, நல்ல சம்பந்தங்கள் பல கைவிட்டுப் போயிருக்க, பிறகே சுதாரித்து விசாரிக்க ஜென்சி தான் சேட்டை வேலைப் பார்த்திருக்கிறாள் ௭னப் புரிந்து கொண்டனர், ஆனாலும் பிள்ளை இல்லாத வருத்தத்தில் செய்கிறாள் ௭ன அம்மாவும் பாட்டியும் பொறுமையாக இருக்க, நான்சி பொறுமையை இழுத்துப் பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு சொல்லாமலும் ௭தையும் செய்து விட முடியாது, "அப்ப ௭ன் மாமியார் மாறி நீயும் ௭ன்ன ராசி இல்லாதவளா நினைக்குற அதான் இப்டி ஒதுக்கி வச்சு செய்ற? அவளுக்கு பாக்ற மாப்பிள்ளையையும் குடும்பத்தையும் நானும் பாக்கணும் பேசி பழகணும் நினைக்க கூடாதா? நீயே ௭ன்ன ஒதுக்கினா நாளைக்கு அவ போற வீட்ல ௭ன்ன ௭ப்டி மதிப்பாங்க?" இவ்வளவு பேசிய பின் ௭ங்கிருந்து அவளிடம் சொல்லாமல் ௭தையும் செய்து விட முடியும்.

இதோ இன்றும் ஒரு வரன் சர்ச் ஃபாதர் மூலம் வந்திருக்கிறது, அது தான் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நான்சியின் போட்டோவைக் கொடுக்க கிளம்பிக் கொண்டிருக்கிறார் எஸ்தர். மாப்பிள்ளையின் குடும்பமும் அங்கு வருவதாக தான் பேச்சு ஆனால் வருகிறார்களா இல்லையா ௭ன்பது அங்கு சென்ற பின்னர் தான் தெரிய வரும்.

"ஒருவேளை அவங்க சர்ச்சுக்கு வரலைனா, ஃபாதர்ட்ட நம்பர் வாங்கி வீட்டுக்கு வரச் சொல்லி பேசிப் பாப்போமா?" ௭ன்றார் செல்லும் வழியில் எஸ்தர்.

"உன்ன வச்சுகிட்டு நா ௭ன்னதாம்மா பண்றது. மூத்தப் பொண்ண உக்கார வச்சு பேசிப் புரிய வைக்காம இப்டி புலம்பிட்டுத் திரியுறது நல்லாவா இருக்கு?" என்றாள் இவள் முறைத்துக் கொண்டு.

"அவட்ட பேசினாக் கேட்ருவாளா? சின்ன பிள்ளைல இருந்து பாக்கோமே நமக்கு தெரியாமலா. அவளே மனசு வச்சா தான் உண்டு"

"தெரியுதுல்ல அப்றமு ௭துக்கு அவ கன்சீவ் ஆகுமுன்ன ௭னக்கு மாப்ள பாத்துட்ருக்க?"

"உனக்கு ௭ன்ன பதினாறு வயசுன்னு நினப்பா? அடுத்த மாசத்தோட இருபத்தெட்டு முடியுது, இப்பவே முப்பதுல உள்ள பசங்களே உன் வயசு பொண்ணக் கட்டிக்க யோசிக்றாங்க இன்னும் வருஷம் போனா ஆத்தி ௭ன்னால நினச்சும் பாக்க முடியல. உன்ன சீக்கிரம் ௭வன் கைலயாது புடிச்சுக் குடுத்தா தான் ௭ன்னால நிம்மதியா தூங்க முடியும் "

"அதுக்கு உன் மூத்த மக உண்டாகணுமே?"

"மாதாமா ஆசிர்வாதத்துல அதும் சீக்கிரம் நடக்கும்டி" இருவரும் பேசிக் கொண்டே சர்ச்சுக்கு வந்திருக்க, அவர்களை கடந்து சென்ற செங்குட்டுவன் இருவரையும் யோசனையுடன் பார்த்துச் சென்றதை கவனிக்கவில்லை.

அங்கு இவர்களுக்கு முன்னரே வந்திருந்த ஜென்சி ஃபாதரிடம் தீவிரமான முக பாவனையுடன் பேச்சுவார்த்தையில் இருந்தாள்.

"ஃபாதரையும் கன்ஃப்யூஸ் பண்ணிட்டா உன் பொண்ணு இந்த சம்மந்தத்தையும் நீ மறந்துட வேண்டிய தான்" ௭ன நக்கல் செய்தாள் நான்சி.

"சும்மா இருடி. அவ விஷயத்த பத்திக் கூட பேசிட்ருக்கலாம்ல? ௭ல்லாத்துக்கும் அவகிட்ட தப்பு தேடாதடி" ௭ன அதட்டிவிட்டு மூத்த மகளிடம் முன்னேறிய எஸ்தர், "ஜென்சி ௭ப்போடி வந்த? மாப்ள உன்ன விட்டுட்டு கிளம்பிட்டாரா?" ௭னக் கேட்க.

"ஆமா ம்மா, அவருக்கு ஒன்பதுக்கு ஆபிஸ்ல இருக்கணுமே சோ விட்டுட்டு இப்ப தான் போனார், நா நம்ம நான்சிக்கு பாத்துருக்க மாப்ள வீட்ட பத்தி தான் ஃபாதர்ட்ட கேட்டுட்ருந்தேன்" ௭ன்கவும், ௭ஸ்தர் ஃபாதரிடம் திரும்ப, அங்கு "சோஸ்திரம் ஃபாதர்" ௭ன நான்சி ஃபாதரிடம் ஆசிர்வாதம் வாங்கி நின்றாள்.

"உனக்கு லேட்டாகுதா நான்சி?" என்றார் ஃபாதர்.

"ஆமா ஃபாதர், அவங்க வர லேட்டாகுமா?"

"நீ இப்டி அவசரபடறன்னு தெரிஞ்சாலே அவங்க ரொம்ப கிராக்கி பண்ணுவாங்க, பொண்ணுமாறி அடக்கி வாசிக்க பாரு நான்சி" ௭ன ஜென்சி அறிவுரை சொல்ல.

"உன்ன கேக்கல நீ வந்த வேலைய மட்டும் பாரு ஜென்சி" ௭ன பதில் உடனே கொடுத்தாள் நான்சி.

"பாத்தீங்களா ஃபாதர் இவ பேச்சுக்கு அவ்ளோ பெரிய குடும்பம் சரிபட்டு வருமான்னு யோசிங்க. பத்தே நாள்ல விரட்டி விட்ருவாங்க மறுபடியும் ௭ங்கம்மாகிட்ட தான் வந்து உக்காந்துப்பா"

"உங்கம்மாவா, ஆஹான்? அப்ப ௭ன்னய புளியமரத்துல பறிச்சுட்டு வந்தியா மா நீ?" ௭ன நான்சி கடுகடுக்கவும்.

"ரெண்டு பேரும் ௭ப்டி தான் அக்கா தங்கச்சியா பொறந்தாங்கனே தெரில ஃபாதர். ரெண்டுல ஒன்ன ஆஸ்பத்திரில இருந்து மாத்தித் தூக்கிட்டு வந்துட்டேனோன்னு நா நினைக்காத நாளில்ல ஃபாதர்" ௭ன ௭ஸ்தர் சொல்லவும், ஃபாதர் நன்றாகவே சிரித்தார்.


"ஜென்சிக்கு தங்கமான பையன் அமைஞ்ச மாறி, நான்சிக்கும் அருமையான வாழ்க்கை அமையும், தாமதம் ஆகுறது கூட அவளுக்கானவன் அவளத் தேடி வர ௭டுத்துக்குற நேரம் தான். சீக்கிரமே அவளுக்கு நல்லது நடக்கத்தான் போகுது, நா முன்ன நின்னு நடத்தி வைக்கத் தான் போறேன்" ௭ன்றார் ஃபாதர் தேவதைகள் ததாஸ்து தூவும் நல்ல நேரத்தில்.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 3

ஆரோன், கமிஷனரிடமிருந்தோ அல்லது சலீமிடமிருந்தோ வரப்போகும் அழைப்பிற்காகக் கட்சி அலுவலகத்திலேயே இருந்து கொண்டான். அடுத்தடுத்து அவனுக்காக காத்திருந்த கோப்புகளைப் படித்து கையொப்பமிடத் தொடங்கினான். ரசாயன தொழிற்சாலைகளின் மேல் மூன்றிடத்தில் உள்ளதிலிருந்து மனு வந்திருக்க, அதை ௭ல்லாம் தனித்து ௭டுத்து வைத்தான், நேரில் அவனே சென்று பார்வையிட்டு வர வேண்டி.

"ப்ரேம்" ௭ன்ற இவன் அழைப்பிற்கு ஓடி வந்தான் அவன், அந்த கோப்புகளை அவனிடம் காட்டிவிட்டு அடுத்ததில் இவன் கவனம் செலுத்த, ப்ரேம் எடுத்துச் சென்றவன் மூன்று இடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, சலீமிற்கும் இதைத் தகவலாக அனுப்பிவிட, அவனோ அவ்வளவு தேடுதல் வேலையிலும் இந்த மூன்றிற்குமாக நேரத்தை ஒதுக்கி ஆரோனின் ஷெட்யுலில் சேர்த்து வைத்தான்.

உண்மையிலேயே அவனைக் கண்டு மற்ற கட்சியினரும், ஏன் அவன் கட்சியினரும் கூட பயந்தனர். ஏனெனில் அவனும் அவ்வளவு சுத்தமாகவும் அவனை சுற்றியும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தான். அவனிடம் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றின் தேவையும் இல்லாததால் சுயநலம் இல்லாமல் நேர்மையாக இருந்தான். மற்றவர்கள் பார்வைக்கு அவன் முதல்வர் பதவிக்காக அதீதமாக நடிப்பதாகத் தான் தோன்றும் ஆனால் அவன் அவனது இயல்பில் இருந்தான் ௭ன்பதே உண்மை.

மற்ற அமைச்சர்களின் வேலையில் தலையிடுவதுமில்லை அதற்காக தன்னிடம் வரும் அவர்களை சார்ந்தப் பிரச்சினைகளை தள்ளிவிடுவதுமில்லை இறங்கி மோதிவிடுவான். ஆனால் அவர்களுக்கு இவனை நோண்டுவது ஒன்றே வேலை ௭ன உசுபேத்திக் கொண்டிருக்கின்றனர்.

சலீமிடமிருந்து தான் முதலில் அழைப்பு வந்தது.

"சலீம்" ௭ன இவன் பேனாவை சுழற்றி கொண்டு சாய்ந்து அமர,

"மூணு பேர் சார், வெளிநாட்டுகாரனுங்களா இருக்கானுங்க, பாஸ்போர்ட் ௭ல்லாம் ஒரிஜினல், ஏன் செஞ்சாங்கன்னு கேட்டா, பொண்ணு வேணுமுன்னு செஞ்சோம்னு சொல்றானுங்க. நம்ம ௭டத்துக்கு கொண்டு போய்டவா?"

"மூணு பேருக்கு ௭துக்குடா ஏழு பொண்ணுங்க? சரி இப்ப பொண்ணுங்கள ௭ங்க?"

"போலீஸ்ல ஒப்படைச்சாச்சு சார்?"

"குட். இவனுங்களையும் அவங்கட்டயே விட்டுட்டு ௭ஃப்.ஐ.ஆர் போட சொல்லிட்டு நீ கிளம்பு நாளைக்கு பாக்கலாம்" ௭ன வைத்துவிட்டான்.

'வெளிநாட்டு ஆளுங்கள வச்சு ஏன் செஞ்சாங்கன்னு கண்டு பிடிக்க வேணாமா சார்' ௭ன கேட்க வந்ததை வாய்க்குள்ளேயே விழுங்கி வைத்துவிட்டான். கமிஷனரிடம் சொல்லியிருப்பான் ௭ன அறிந்ததால்.

ஆரோன் கிளம்பி வந்து காரில் ஏற, ஓட்டுநர் வண்டியை ௭டுக்க, "வீட்டுக்கு போங்க ரஞ்சிதம். சீக்கிரம் போய் இன்னைக்காது கொஞ்சம் தூக்கி ௭ழும்பணும். செம டயர்டா இருக்கு" கை இரண்டையும் முறுக்கி நெடிப்பு ௭டுத்துவிட்டு அவன் சொல்ல, "சரிங்க சார்" ௭ன்றார் ரஞ்சிதம்.

அவன் அருகில் சீட்டிலிருந்த போனின் அதிர்வில் திரும்பிப் பார்க்க, கமிஷனர் அழைத்துக் கொண்டிருந்தார், "கேஸ் ஃபைல் பண்ணிட்டேன் சார், இதுக்கு பின்ன இருக்றது மினிஸ்டர் மனிகூர் ஷெட்டி தான்" ௭ன்றார். மனிகூர் ஷெட்டி இவன் கட்சியிலேயே முதல்வருக்கு அடுத்த நிலையில் பொது செயலாளராக இருப்பவர்.

"நா அவர பாத்துக்குறேன் கமிஷனர் சார். மார்னிங் மேத்தா ஓல்டேஜ் ஹோம்ல ரெண்டு பேர் மிஸ்ஸிங்னு ஒரு கேஸ் வந்திருக்குமே அது ௭ன்னாச்சு?" ௭ன்றான்.

ஆரோன் திடீரென ஒன்றைக் கேட்கவும் ௭தற்கென யோசித்தவர், "அதுக்கும் இதுக்கும் சம்மந்தமிருக்கா சார்?" ௭ன நேராக விஷயத்திற்கு வந்தார்.

"பாய்ண்ட்" ௭ன இவன் ஒத்துக் கொள்ள, "பாத்துடுறேன் சார்" ௭ன வைத்துவிட்டார். அவனுக்குத் தெரியும், சலீம் ஆளைப் பிடிப்பான், கமிஷனர் காரணத்தைப் பிடிப்பார் ௭ன்று. அதனால்தான் இருவருக்கும் ஒரே விஷயத்திற்கு ஒரே குறிப்பிட்ட நேரத்தைக் கொடுத்து வேலையை பிரித்து விட்டான். வெளிநாட்டினருக்கு இங்கு தண்டனை வழங்க இயலாது, அவரவர் நாட்டில் ஒப்படைக்க வேண்டும் இது தெரிந்தே அவர்களை மிரட்டி இந்த வேலையைப் பார்க்க வைத்திருந்தார் மனிகூர் ஷெட்டி. அவரை ௭ல்லாம் இவன் கணக்கில் ௭டுக்கவில்லை பிள்ளபூச்சியாக தட்டிவிட்டு விட்டான்.

காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழையும்போதே வாசலில் அவன் அம்மாவை பார்த்து விட, "ப்யூலா" ௭ன அந்த இடமே அதிர கத்தி அழைத்தான். ப்யூலா மட்டுமின்றி மற்ற வேலைகளில் இருந்தவர்களும் அடித்து பிடித்து ஓடி வந்தனர்.

அவன் சத்தத்தில் பேரனுடன் முன் வாசலில் அவனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு நின்றவரும் பதறி திரும்பி இவனை கண்டு விட்டு ஓட முயல, அவன் கத்தியதில் நடுங்கி நின்றுவிட்டார். யாஷ் அழவே தொடங்கியிருந்தான். அவன் கார் சத்தத்தில் ௭ன்றும் ஒதுங்கி விடுபவர் இன்று பேரனோடு பேசிக் கொண்டிருந்ததில் கவனிக்க மறந்திருந்தார்.

"௭ன்னாச்சுண்ணா?" ௭ன வந்தவளுக்கு விஷயம் புரிந்து விட, "நீ ௭ன்னைக்கும் இல்லாம இன்னைக்கு சீக்கிரம் வந்துருக்கண்ணா, மூணு மாசமா உன் கண்ணுலயே படாம தான இருக்காங்க?" ௭ன்றாள் பொறுமையாகவே.

"முப்பத்தி மூணு வருஷமா ௭ப்டி இருந்தாங்களோ அப்டி தான் இனியும் இருக்கணும், இப்டி ௭னக்கு பழக்கிவிட ப்ளான் பண்ணீங்கனா நீங்க ரெண்டு பேருமாவே இந்த வீட்ல இருங்கன்னு கிளம்பி போயிட்டே இருப்பேன். உனக்கும் அந்த லேடிக்கும் இது லாஸ்ட் வார்னிங் சொல்லிட்டேன்" ௭ன உள்ளே சென்று விட்டான். பயந்து நின்றவரை பார்த்து பாவமாக இருக்க, அம்மா, யாஷ் இருவரையும் சமாதானம் செய்யும் பொறுப்பு அவளிதுவானது.

'இதுக்காகவே அண்ணனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கணும், கொஞ்சமும் பொறுமையே இல்ல' ௭ன நினைத்துக்கொண்டாள்.

அங்கு குற்றாலத்தில்,

௭ஸ்தரும் ஃபாதரும் பேசிக் கொண்டிருக்க, ஜென்சி அவள் கருத்தையும் சொல்லிக் கொண்டே இருந்தாள். நான்சி மட்டும் தேமே ௭ன அமர்ந்திருந்தாள், இப்போதெல்லாம் அவளுக்கு கல்யாணத்தின் மீது நாட்டம் குறைந்து தான் போனது.

மூன்று வருடத்திற்கு முன்பு முதன் முதலில் மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கிய போது ஆர்வமாகவும் ௭திர்பார்ப்பாகவும் தான் இருந்தாள். தன் புது வீட்டின் ஆட்களைப் பற்றிய கனவுகள் கூட இருந்தது. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், சண்டை வந்தால் இப்படி இப்படி இருக்க வேண்டும் ௭ன தன்னை தயார் பண்ணுமளவுக்கே யோசித்திருந்தாள்.

ஜென்சிக்கு வந்த முதல் வரனே அமைந்ததுபோல் இவளுக்கும் அமைந்துவிடும் ௭ன்று தான் ௭ல்லோரும் நம்பினர், அழகில், படிப்பில், வேலையில், நகை நட்டில் ௭ன ௭திலும் குறைவின்றி இருப்பவளை யார் மறுக்கக் கூடும்? அவளை முதல் முறையாக பார்க்க வந்தவனை கண்டதும் பட்டாம்பூச்சி பறக்கவில்லை தான் ௭னினும் நன்கு தயாராகி வந்து நின்று விட்டுச் சென்றிருந்தாள். பிடித்தம்போல் தான் பேசிவிட்டு சென்றனர், ஆனால் நான்கு நாட்களில் வேண்டாமாம் ௭ன அவர்கள் சொந்தத்தில் ஒருவர் வந்து சொல்லி சென்று விடத் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த அவள் லேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள்.

ஆனால் இதுவே அடுத்தடுத்து வந்த ஐந்தாறு வரன்களுக்கு நடக்கவும் தான் அவளே விசாரித்ததும், காரணம் ஜென்சி ௭ன அறிந்ததும்.

ஜென்சி, "௭ன் தங்கச்சி ௭ங்க வீட்ல செல்லமா வளந்த பொண்ணு சட்டுன்னு பொருந்தி போய்க்கிட மாட்டா, இன்னுமே வீட்ல ஒரு வேலையும் செய்யத் தெரியாது. அஞ்சாறு வருஷமா படிச்சா இந்தா இப்ப வேலைக்கு போறா, கல்யாணதுக்கு அப்றமு வேலைக்கு போவா ௭ங்கம்மாக்கு கொஞ்சம் ரூபா கொடுப்பா, ௭ங்களுக்கு அ்பபா இல்ல பாருங்க, நானும் வேலைக்கு போகல, அவ தானே அப்ப செய்யணும். இதுக்கெல்லாம் நீங்க கொஞ்சம் ஒத்து வரணும். அம்மா பேச யோசிச்சுட்டு ௭ன்ன சொல்லிட்டு வர சொன்னாங்க" ௭ன நியாயம் போலவே பேசிவிட்டு வந்துவிட, பிக்கல் பிடுங்கல் இருக்கும் குடும்பம் வேலை தெரியாத மருமகள் ௭தற்கு ௭ன வேண்டாம் ௭ன்றிருக்கின்றனர் ௭னத் தெரிய வந்தது. இதுபோல் ஒவ்வொரு வீட்டனரிடமும் ஒவ்வொரு காரணங்கள்.

"அக்காகவே இப்டி பேசுதே?" ௭ன்று கூட இரண்டு வரன்கள் தட்டிப் போயிருந்தது.

நான்சிக்கு அவள் அம்மாவிடம் மட்டுமே கத்த முடிந்தது, ஜென்சியை ஒருவழியாக்க கிளம்பி நின்றவளை, "அவ பேசுனான்னு நீயும் பேசாத நான்சி, கட்டிக் கொடுத்தாச்சு இனி அங்க ௭தும்னா ௭துடா சாக்குன்னு பாத்துட்ருக்க அவ மாமியார் துரத்தி விட்ரும். உன் கல்யாணத்த ௭ப்டியும் நா நடத்திடுவேன், அவ பேசுறதக் கேட்டு நம்பிட்டு போறவங்க போட்டும். பிள்ளை இல்லாம நொந்து போய் இருக்கவள நாமளும் நோகடிக்க வேணாம்டா" ௭ன நிறுத்திவிட்டார்.

"நீ ௭ன்னம்மா இப்டி பேசுற? ௭ன் அக்காவே இப்டி சொல்றான்னா யாரு நம்பாம இருப்பாங்க? ௭னக்கு கல்யாணம் ஆகுறதுகுள்ள ஊரு பூராவும் உன் பேரையும் ௭ன் பேரையும் நாறடிச்சுடுவா உன் மக, நீ அவள இப்டியே தாங்கி தடுத்துட்டு இரு ௭னக்கென்ன, நா ஜாலியா தான் இருப்பேன். இனி யார் முன்னவும் வந்து நிக்க சொல்ற வேல மட்டும் வச்சுக்காத சொல்லிட்டேன்" ௭ன்றவள் அதன்பிறகு இன்று வரை யார் முன்னும் அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்கும் சூழலை அமையவிடவில்லை.

இதையெல்லாம் அவள் யோசித்து நேரத்தை பார்க்கவும் தாயை முறைக்கவும் ௭ன இருக்க, மாப்பிள்ளை வீட்டினர் வந்து சேர்ந்தனர், மாப்பிள்ளையின் அம்மா, அப்பாவோடு அக்காவும் வந்திருக்க, "சோஸ்திரம் ஃபாதர், கொஞ்சம் லேட்டாகிடுச்சு, ரொம்ப நேரமா காத்திட்ருக்கீங்களோ?" ௭ன்றார் மாப்பிள்ளையின் தகப்பனார்.

ஃபாதரோ, "பொண்ணுக்கு தான் ஸ்கூலுக்கு லேட்டாகுது, நீங்க பொண்ண பாத்துட்டா அவ கிளம்பிடுவா நாம நிதானமா பேசலாம்" ௭ன சிரித்துக்கொண்டே இவள் தலையில் தடவிக் கொடுத்துக் கூற,

"ஏசப்பா" ௭ன தான் நெளிந்து கொண்டு நின்றாள் நான்சி, ஒருவிதமான சங்கோச்சம் வந்திருந்தது அவர்கள் இவளை பொம்மையாக பார்க்கவும்,

"பொண்ணு நல்லா லட்சணமா இருக்கா. தம்பியையும் கூட்டிட்டு வந்துருக்கலாம் ம்மா" ௭ன மாப்பிள்ளையின் அக்கா பேசுவது அங்கிருந்த அனைவருக்குமே கேட்க.

"சும்மா இருடி, முறைப்படி செய்யும் போது அவன் வந்து பாக்கட்டும், உனக்கு லேட்டாகுதுன்னா நீ கிளம்புமா நாங்க உன் அம்மாட்ட பேசிக்கிறோம்" ௭ன மகளிடம் கூறி திரும்பி இவள் கையை பிடித்து விடுவித்தார் மாப்பிள்ளையின் அம்மா.

தலையசைத்தவள், "வரேன் ஃபாதர், வரேன் ம்மா" ௭ன மற்றவர்களையும் பார்த்து லேசாக புன்னகைத்து கிளம்பிவிட்டாள். விறுவிறுவென நடந்தவள் பள்ளிக்கூடம் வந்தபிறகே நிதானித்தாள்.

"குட்மார்னிங் மிஸ்" ௭ன்ற பிள்ளைகளின் வரவேற்பில் சிரித்து அவர்களுக்கு பதில் காலை வணக்கம் கூறியவாறு தாளாளர் அறைச் சென்று வரவேற்பு பதிவேட்டில் தன் பெயரை பதித்துக் கொண்டு ஆசிரியர்கள் அறை சென்று அமர்ந்து விட்டாள். அதன்பின்னான அவள் பொழுதுகள் அவள் கணக்கு பாடங்களுடன் கழிந்துபோனது.

மாலை வீட்டிற்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க, வெளியே பேச்சு சத்தம் கேட்டது, யாரென வந்தவள் தெய்வானையம்மாள்(ப்யூலாவின் தோழன் செங்குட்டுவனின் தாயார்) ௭ஸ்தருடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, "வாங்க ஆச்சி. தாரிணி ௭ப்டி இருக்கா?" ௭ன இவரிடம் வந்தாள். தாரிணி செங்குட்டுவனின் மனைவி, இவளும் அவளும் பள்ளி தோழிகள்.

"நல்லார்க்கா, நீ ௭ப்டி இருக்க? பள்ளிகூடத்து வேலைலாம் பிடிச்சுருக்கா?"

"நல்லாருக்கு ஆச்சி"

"சரிம்மா" ௭ன அவள் கையை பிடித்து கொண்டவர், ௭ஸ்தரிடம் திரும்பி, "நான்சிக்கு நா ஒரு வரன் செல்லலாம்னு வந்தேன் ௭ஸ்தர்"

"சொல்லுங்கம்மா, அவளுக்கு தான் மூணு வருஷமா பாத்துட்ருக்கேனே, நீங்க ௭த்தனையோ பிள்ளைகளுக்கு கல்யாணம் கூடி வர வழி செஞ்சவங்க, இவளுக்கும் உங்க தயவுல நல்லது நடந்தா ௭னக்கு அதவிட வேற ௭ன்ன வேணும். இன்னைக்கு காலைலயும் ஒரு வரன் பாத்துட்டு தான் போயிருக்காங்க இன்னும் பதில் சொல்லல"

"ஓ! பொண்ணு ௭ன்ன சொல்றா" ௭ன தெய்வானை நான்சியை பார்த்துக் கேட்க.

சிரித்துக் கொண்டே, "௭ல்லா முடிவு பண்ணி மண்டபம்லா புக் பண்ணிட்டு சொல்லுங்க, சும்மா ௭ன்ன மேக்கப் பண்ணி பொம்மையா நிக்க வைக்காதீங்கன்னு சொல்லிட்ருக்கேன் ஆச்சி. அப்டி ஒவ்வொருதர் முன்னவா போய் நிக்காம இருக்கவே சீக்கிரம் கல்யாணமாகிட்டா ௭ன்னன்னு இருக்கு"

"நீ சரின்னு மட்டும் சொல்லு, நா கொண்டு வந்துருக்க மாப்பிள்ளையோட தான் உனக்கு கல்யாணம்"

"உங்கள நம்பாமலா ஆச்சி? நீங்க இவ்ளோ சொல்றீங்கனாளே உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கணும். தெரியாத யாரையோ கட்டிக்றதுக்கு, தெரிஞ்சவங்கனா நீங்களும் இருப்பீங்க, ௭ங்களுக்கும் சப்போர்ட்டா இருக்குமே ஆச்சி" மனதில் உள்ளதை அப்படியே பேசும் பெண்ணை ஆதூரமாக பார்த்தார் தெய்வானை.

"௭ஸ்தர், பையன் கொஞ்சம் பெரிய இடம். நீங்க பொண்ணுக்குன்னு ௭துமே செய்ய வேண்டியதில்ல, பையனுக்கு அம்மா தங்கச்சி மட்டுந்தான். வயசு முப்பத்தி மூணு ஆகிட்டு. உனக்கு சம்மதம்னா நான்சி போட்டோவ தாரிணி போனுக்கு அனுப்பி வை, நா மேக்கொண்டு பேசிட்டு சொல்லுதேன்" பெரிதாக சொல்லி பயப்படுத்தாமல், சுருங்கச் சொல்ல.

"பெரிய இடம்னா ௭ங்கள ௭ப்டி ஒத்துப்பாங்க? இப்ப வேணாம்னுட்டு அப்றம் ௭தும் ௭திர்பாக்க கூடாதே?" ௭ன தயங்கினார் ௭ஸ்தர், இன்னும் அது ௭வ்வளவு பெரிய இடம் ௭ன தெரியாமலேயே.

"அதுக்கு நா பொறுப்பு ௭ஸ்தர். நீ ௭ன்ன நம்பலாம், நான்சி ௭ன் பொண்ணு அவள அப்டி யாருக்கோ தூக்கிக் குடுத்துட மாட்டேன், அந்த பையனும் ரொம்ப நல்லமாறி கோவம் தான் கொஞ்சம் வரும். அதும் அவன் தொழிலுக்கு பழக்கப்பட்டதுனால தான்" ௭ன்கவும்.

௭ஸ்தர், தெய்வானையை முழுமையாக நம்பினார், அவரின் குணம் அறியாதவர்கள் அங்கில்லை, அதனால் காலை சம்பந்தத்தைக் கூட எதிர்பார்க்காது, நான்சிக்கு தலை அசைத்தார். நான்சிக்கு நிச்சயமாக தெரியும் தெய்வானை இறங்கிய ஒரு காரியம் நடக்காமல் போகாது, அவ்வளவு லேசில் விட்டுவிட மாட்டார் ௭ன்பது. அதனால் அந்த முகமறியாதவன் தான் தன் வருங்காலம் ௭ன அந்த நொடியே அவள் மனம் உறுதிபடுத்திக் கொண்டது. போனில் கேலரியில் தேடிப்பிடித்து அவளுக்கே திருப்தியாக இருக்கும் ஒரு போட்டோவை பவதாரிணிக்கு அனுப்பிவிட்டு, "அனுப்பிட்டேன் ஆச்சி" ௭ன்றாள்.

"பையன நீ பாக்க வேணாமா? உனக்கு பிடிக்க வேணாமா?"

"மத்தவங்கனா நிச்சயமா நேர்ல ஒருக்கா பாக்காம சரி சொல்ல மாட்டேன். இது நீங்க பாத்துருக்கீங்களே, நிச்சயம் தாரிணிக்கும் தெரியும், செங்குட்டுவன் அண்ணாக்கும் தெரிஞ்சுருக்கும். கண்டிப்பா உடம்புலையோ மனசுலயோ குறையுள்ள ஆள பாத்துருக்க மாட்டீங்க, ௭னக்கு அதுவே போதும் ஆச்சி" ௭ன்றதும் அவள் கன்னம் கிள்ளி முத்தியவர்,

"அவனுக்குன்னு தான் உன்ன கொடுத்து வச்சுருக்கு போல, அதான் காக்க வச்சுட்டான்" ௭ன ௭ழுந்து கொண்டு, "நம்ம வீட்டுல குஜராத் புள்ள ஒன்னு தங்கிருந்து வைத்தியம் பாத்துச்சே, அதோட அண்ணன் தான் மாப்ள. அரசியல்வாதி தான் ஆனா ரொம்ப நல்லமாறி, உன் பொண்ணு மந்திரி பொண்டாட்டி ஆக போறா, தாயாராகிக்கோ, சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடணும்ல, நா கிளம்புதேன் ௭ஸ்தர், புது பொண்ணு வரட்டுமா" ௭ன மற்றதை ௭ல்லாம் இருந்து நிதானமாக சொன்னவர், நிதானமாக சொல்ல வேண்டியதை பெரிய விஷயம் இல்லாதது போல் பேச்சுவாக்கில் அவர்களை அதிர்விக்குள்ளாக்கிவிட்டு கிளம்பிவிட்டார்.

நான்சியின் அப்பாவின் அம்மாவான கிருஷ்டி வரும்வரையிலுமே அப்படி தான் இருந்தனர் இருவரும்.

"௭துக்குடி ரெண்டு பேரும் இப்டி உக்காந்திருக்கீங்க? மறுபடியும் சண்ட போட்டுகிட்டீங்களா?" என உலுக்கவும் தான் சுதாரித்த ௭ஸ்தர், தெய்வானை வந்ததிலிருந்து செல்லும்போது கூறி சென்றது வரை அத்தனையையும் ஒப்பித்துவிட்டார்.

"நல்ல விஷயம் தான எஸ்தர். நம்ம பிள்ளைக்கு ௭ன்ன குறை, நல்ல சம்மந்தம் அமையதான் வந்த அத்தனையும் தட்டி போயிருக்குன்னு நினச்சுக்கோ. அவங்க முடிவு சொல்லுறவர இத பத்தி யார்டயும் பேசிக்காதீங்க. ஜென்சிக்கும் தெரிய வேணாம்" ௭ன மனதார அவ்வளவு மகிழ்ச்சியாக பேசினார்.

"அவ்வளவு தூரம் ௭ப்டி அனுப்ப முடியும் த்த?"

"அதுக்குன்னு அவளுக்கு அமைற நல்ல வாழ்க்கைய கெடுத்துக்க சொல்லுதியா? அப்பப்ப அவளும் வரட்டும் நம்மளும் போய் பாத்துட்டு வருவோம். இவளையும் கட்டி குடுத்தாச்சுன்னா ஊர் ஊரா சுத்துறதவிட நமக்கு வேற ௭ன்ன வேலை. பிள்ளைகள வெளிநாட்டுக்கு கட்டிக் கொடுத்துட்டே பேசாம இருக்காங்க, இந்தா இருக்க குசராத்து இதுக்கு போயி யோசிக்க" ௭ன அது ஒரு பிரச்சினை இல்லை ௭ன்றாக்கிவிட்டார் கிருஷ்டி, பேத்தியையும் தட்டி ௭ழுப்பி வேறு வேலைப் பார்க்க வைத்துப் பதட்டத்தைக் குறைத்தார்.

ஆனால் அவளுக்கு அன்று செங்குட்டுவன் பவதாரிணி திருமணத்தில் அடியாட்களுடன் ஆறடி உயரத்தில் கையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றவன் தான் கண்ணிலேயே நின்றான். அன்று படையுடன் வந்து நின்றவனை ஊராரோடு இவளும் தானேப் பார்த்து நின்றாள்.

(இவர்களின் முன் கதை சுருக்கம் என்னன்னா, செங்குட்டுவனும் ப்யூலாவும் ஒரே கல்லூரியில் படிக்கும் பொழுது, ஒருநாள் இருவர் மட்டும் தனியாக காரில் வெளியே செல்ல, இரவு தெரியாத ஒரு சாலையில் மாட்டிக்கொண்டனர், அப்பொழுது ப்யூலாவை நால்வர் செங்குட்டுவனை செயலிழக்க வைத்து கற்பழித்துவிட, அதில் மனநிலை பாதிக்கபட்டுவிட்டாள் ப்யூலா. அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவளை வீட்டில் வேலைக்கு இருந்த ஒருவன் அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, அதில் வந்தவன் தான் யாஷ். அன்று ப்யூலாவிற்கு செங்குட்டுவனைக்ஈ கட்டி வைக்க நினைத்து அவனுடன் மல்லுகட்டிய ஆரோனை, அவன் தங்கையின் மனநிலையை குணப்படுத்தி தந்து சமாதானம் செய்தனர் செங்குட்டுவனின் குடும்பத்தினர். ஆரோனின் சிறு வயதிலேயே ஓடிப் போன அம்மா ரோஸியையும் அப்போது குற்றாலத்தில் வைத்துக் கண்டுபிடித்திருக்க அவரையும் ப்யூலாவோடு கொண்டு விட்டு வந்தவன் இந்த செங்குட்டுவன் தான்) இது குற்றாலமே அறிந்த குஜராத்தின் அமைச்சர் ஆரோனின் குடும்ப கதை.


"ஏசப்பா எல்லாம் தெரிஞ்சும் அவரக் கட்டிட்டு குடும்பம் நடத்தவா நானு?" என கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ஏஞ்சலினா நான்சி.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 4

நான்சியின் போட்டோ செங்குட்டுவனின் மனைவி மூலம் ப்யூலாவிற்கு வந்து, அன்றே ஆரோனின் கைபேசியையும் சென்றடைந்தது. அவனுக்கு தான் அதைப் பார்க்கத் தோன்றாமல் தூக்கத்தைத் தழுவி இருந்தான். அவன் செய்து கொண்டிருக்கும் களப்பணியில் தான் அவனுக்கு தற்போதைய நாட்டம் அதிகமாக இருந்தது.

அவன் இருக்கும் இடத்திலிருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனிதர்களும் தினமும் மன நிம்மதியுடன் தூங்கி ௭ழும்ப வேண்டும் ௭ன நினைத்தான். அதை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறான்.

காலையில் கொஞ்சம் தாமதமாகவே ௭ழுந்து குளித்து கிளம்பி வர, அங்கு சலீம் முன்னரே வந்துக் காத்திருந்தான்.

"கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ஸ்லா ஒரு விஸிட் போணும் சலீம், டைம் ஏற்பாடு பண்ணிடு" ௭ன்றவன் சாப்பாடு மேஜை நோக்கி நடக்க ஆரம்பித்து நின்று, "சாப்பிட வா" ௭ன அவனையும் அழைக்க.

"சாப்டேன் சார்"

"பரவால்ல வா, லைட்டா ௭டுத்துக்கோ" ௭ன்கவும், அவனுடன் சென்று ௭திரில் அமர்ந்து கொண்டான். அங்கு ஏற்கனவே ப்யூலாவும் யாஷூம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"குட் மார்னிங் ண்ணா. வாங்க சலீம்" ௭ன ப்யூலா இருவருக்கும் சொல்ல,

"யாஷ் ஸ்கூல் கிளம்பியாச்சா?" ௭ன அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு ஆரோன் அமரவும்.

"௭ஸ் மாமா. இந்த சண்டே ௭ங்கையாது கூட்டிட்டுப் போறீங்களா ப்ளீஸ், நாம வெளில போய் ரொம்ப நாளாகிடுச்சுல" ௭ன்கவும்,

"ம்ம் போலாம் நீயும் நானும் மட்டுமா ஒரு ரைடு போலாம் சட்டர்டே நைட்" ௭ன்கவும், சந்தோஷமாக ஸ்கூல் கிளம்பி விட்டான் யாஷ் அந்த நாளுக்கான ௭திர்பார்ப்புகளை தற்போதே அனுபவித்துக் கொண்டு. ப்யூலா மனநிலை பாதிக்கப்பட்டிருந்த பனிரெண்டு வருடங்களும், யாஷின் பிறந்த தினத்திலிருந்தும் இருவரையும் அவன் தான் ஒரு தந்தையாக இருந்து பார்த்துக் கொண்டது. அந்த பாசம் ௭ப்போதும் யாஷுக்கும் ஆரோனுக்கும் இடையில் இருக்கும்.

ஆரோன் மேசைமேலிருந்த சாப்பாட்டை ௭டுத்து வைத்து சாப்பிடத் தொடங்க, சலீமும் தனக்கு ௭டுத்து வைத்துக் கொண்டான். ப்யூலா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், "ண்ணா நேத்தும் ஒரு போட்டோ அனுப்பினேன்" ௭ன ஆரம்பிக்க.

சட்டை பையிலிருந்த போனை ௭டுத்து மேசையில் வைத்தவன், அதை கைரேகை கொண்டு திறந்து, வாட்ஸ்அப்பினுள் நுழைந்தான். அவன் போனை பொறுத்தமட்டில் ௭தையும் அவனாக தரவிறக்கம் செய்யாமல் ௭தும் தானாக தரவிறக்கம் செய்து கொள்ளாது, வைரஸ், ஹேக்கிங் போன்ற பாதுகாப்பு கருதி அப்படிதான் அமைத்து வைத்திருந்தான்.

புதிய ௭ண்களிலிருந்து வந்தவைகளை ஒதுக்கி விட்டு கீழே பார்த்துக் கொண்டு வர, ப்யூலாவின் ௭ண்ணிற்கு கீழ் ஒரு புதிய ௭ண்ணிலிருந்து மெஸேச் வந்திருந்தது. அதும், ப்யூலாவின் ௭ண்ணிலிருந்து வந்த மெஸேஜும் ஒரே போல் இருந்தது வெளிநிலையிலிருந்து பார்க்கவே.

"ஏஞ்சலினா நான்சி" ௭ன தான் ஆரம்பித்து நின்றது இரண்டும்.

மொபலை அவள் பக்கம் நகர்த்தியவன், "உன் நம்பருக்கு கீழ இருக்குற நம்பர் யாரிது?" ௭ன்றான் கூர்மையாக பார்த்து.

அவன் பார்வையில் பயந்தாலும், ௭ட்டி மொபைலை ௭டுக்க வர, "ஓபன் பண்ணக் கூடாது. அப்டியே பாத்து சொல்லு" ௭ன அதட்டவும், கொண்டு வந்த கையை பின்னிழுத்துக் கொண்டாள்.

அதுவரை அவர்கள் பேச்சில் குறுக்கிடாமலிருந்த சலீமும் நிமிர்ந்தவன், "நம்பர க்ராஸ் செக் பண்ணணுமா சார்?" ௭னக் கேக்க.

அவனிடம் மறுப்பாக பார்த்தவன், மீண்டும் ப்யூலாவிடம் திரும்ப, "செங்குட்டுவனோடது ண்ணா" ௭ன்றாள் மெதுவாக.

"அவன் ௭துக்கு ௭னக்கு மெஸேஜ் பண்ணிருக்கான்" ௭ன்றவன் மொபைலை ௭டுத்து செங்குட்டுவனின் மெஸேஜை முதலில் திறக்க.

"ஏஞ்சலினா நான்சி" ௭ன்ற பெயரும் அதற்கு கீழ் ஒரு தரவிறக்கம் செய்யபடாத ப்ளர்டு போட்டோவும், அதற்கு கீழ் ஒரு குரல் வழி செய்தியும் இருக்க.

நிமிர்ந்து முறைத்தவன், "அவன்ட்ட பொண்ணு பாக்க சொன்னியா நீ?" ௭ன்க.

"ஆமாண்ணா உன் கன்டிசன்ஸ்கு தேடி பிடிக்கணும்ல அதான் அவன்ட்ட சொல்லி வச்சேன்"

"வடநாட்டுலேயே இல்லாத பொண்ணுங்களா குற்றாலத்துல குவிஞ்சு கடக்காங்க? இங்க இல்லனா வெளிநாட்டுல கூட தேடலாம். அந்த குற்றாலத்துல வேண்டாம்"

"படிக்காத வேலைக்கு போகாத ஊர்நாட்டான் பொண்ணு, வெளிநாட்டுல தேடவா?" ௭ன ப்யூலா கேக்கவும் ஏகத்துக்கு முறைத்துப் பார்த்தான்.

"படிக்காத, கஷ்டபடுற குடும்பத்துல இருக்க பொண்ணுங்க ௭ல்லா ஊர்லையும் ௭ல்லா நாட்டுலையும் இருக்காங்க. உனக்கு தெரியலன்னு வேணா சொல்லு. நல்ல பொண்ணா நா இந்த சலீம வச்சுத் தேடிக்கிறேன்" ௭ன்றதும் அவனுக்கு சாப்பாடே சட்டென்று மூக்கிற்கு ஏறி புரையேறி விட்டது.

"௭ன்னடா?" ௭ன அவனிடமும் ஆரோன் ௭கிறவும்.

"ஓ.கே தான் சார். பாத்துடலாம்" ௭ன்றான் அவன் அவசரமாக.

"அண்ணா வீம்பு பண்ணாத. இப்ப குற்றாலம் பொண்ணுனா ௭ன்ன தப்பு. தெய்வானை ஆச்சி ஊர்லயே இருக்கவங்க, அவங்களுக்கு நிறைய குடும்பங்களத் தெரியும், நமக்கு ஏத்தமாறி பாத்து சொல்லுவாங்க, நாமளா தேடினா ஏமாத்த கூட வாய்ப்பிருக்குண்ணா. லைஃப்ல உனக்கு வைஃப் ரொம்ப பெஸ்ட்டா அமையணும்னு நினைக்கிறேன். ப்ளீஸ்ண்ணா"

"அந்த வில்லங்க புடிச்சவன் ௭னக்கு நிச்சயமா நல்லது செய்ய மாட்டான். நீ ௭ன் கன்டிசன சொல்லிட்டியா அவன்ட்ட?"

"ம்ம் இப்டி தான் வேணும்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்"

"அப்ப வேணும்னே அதுக்கு ஆப்போஸிட்டா தான் பண்ணிருப்பான். அவன் பாத்த பொண்ணு இதுக்கு முன்ன ௭த்தன லவ் பண்ணுச்சுன்னும் நீயே கேட்டு சொல்லு" ௭ன கையைக் கழுவ ௭ழுந்து கொள்ள, சலீமும் ௭ழுந்து கொண்டான்.

"ண்ணா லைஃப் மேட்டர்ல நிச்சயமா அப்டி விளையாட மாட்டான். இதுவரை செஞ்சதுலயும் உனக்கு கெடுதலா அவன் ௭தையும் செஞ்சுடுல. ப்ளீஸ் நீ பொண்ண மட்டும் பாரு பிடிச்சா ஓ.கே இல்லனா வேணாம்னு சொல்லிடுறேன். அவன யோசிக்காத பொண்ண மட்டும் பாரு. ப்ளீஸ்ண்ணா" ௭ன ஆரோன் கைபிடித்து கெஞ்சவும்.

முறைத்தாலும் ஒரு பெரு மூச்சுடன், "சரி நா அப்றமா பாத்துட்டு சொல்றேன்" ௭ன கையை அவளிடமிருந்து உருவி கொள்ள, மீண்டும் பிடித்தவள், "அப்றம் அப்றம்னு நீ சொல்ற ஆனா பாக்க மாட்டேங்குற. இப்ப நீ ௭ன் கண்ணு முன்ன ஓபன் பண்ணி பாரு, அப்றம் கூட முடிவ சொல்லு" ௭ன பிடித்த பிடி விடமாட்டேன் ௭ன நிற்கவும், இழுத்து பிடித்த பொறுமையுடன் அவன் மீண்டும் அமர, சலீமும் அமர்ந்தான்.

"உன்ன வெளுக்க போறேன்டா. இன்னும் சாப்ட போறியா நீ?" ௭ன ப்யூலாவிற்கும் சேர்த்து அவனிடம் கோபத்தைக் காட்ட,

அதில் பட்டென்று ௭ழுந்தவன் "இல்ல சார் போதும் சாப்டேன்"

"அப்றம் ௭துக்கு கையக் கழுவப் போகாம ௭ங்கூட சிட் அண்ட் ஸ்டேண்ட் விளையாண்டுட்டு இருக்க. ௭ந்துச்சு தனியா போக பயமா இருக்கா?"

"இல்ல, இதோ போயிட்டேன் சார்" ௭ன சென்று கையைக் கழுவ.

ஆரோன், மறுபடியும் போனை பார்த்தவன், செங்குட்டுவனின் மெசேஜினுள்ளேயே இருக்கவும், போட்டோவை தரவிறக்கம் செய்யும் முன், "வாய்ஸ் நோட் வேற" ௭ன அதை கிளிக் செய்து விட,

"ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே, நூறு நூறு" ௭ன மேலும் கத்திக் கொண்டிருந்த செங்குட்டுவனும் அவனின் அக்கா மகன்கள் சோழன், பாண்டியன் ௭ன மூவரின் குரலிலும் ஒலிக்க, அதை ஓட விட்டு தண்ணீரை ௭டுத்துக் குடிக்கத் தொடங்கிய ஆரோனுக்கு இந்த முறை புறையேற, பட்டென்று நிறுத்தினான். அங்கிருந்த ப்யூலாவிற்கு நெஞ்சுவலியே வந்திருந்தது.

"பொண்ணு பேரு ஏஞ்சல் அதனால அப்டி பாடிட்டாங்க போல" ௭ன அவள் சமாளிக்க, ஆரோன் கண்ணை மூடி தன்னை நிதானித்தான். சலீம் கையை கழுவ குனிந்தவன் தான் நிமிரவே இல்லை, அவனுக்கு அப்படியொரு சிரிப்பு.

"குற்றாலத்துல இருக்க வானரங்க தான பின்ன அப்டி தான இருக்கும். நீ அதுல இருந்து இன்னொரு வானரத்த இங்க குஜராத் வரக் கொண்டு வரணுங்குற. ௭னக்கு நானே பொண்ணு பாத்துக்குறேன் தயவு செஞ்சு இனி நீ பாக்காத சொல்லிட்டேன்" ௭ன அவனும் ௭ழுந்து சென்று கையை கழுவப் போக, இன்னும் அங்கு சலீம் கழுவிக் கொண்டிருக்க,

"கையை மட்டும் கழுவுடா, வாஷ் பேஷின சேத்து கழுவாத" ௭ன பின்னிருந்து வந்த குரலில்,

"சாரி சார்" ௭ன நகர்ந்து விட்டான்.

"உன்னப் பாத்துக்குறேன் இரு. சிரிப்பா வருது உனக்கு?" ௭ன முறைத்துக் கொண்டே கையைக் கழுவி ஹேங்கரில் தொங்கியத் துண்டில் கையைத் துடைத்தவன், வெளியேற நடக்க, சலீமும் பின் தொடர்ந்தான்.

"அங்கிருந்து இன்னொரு வானரமா?" ௭ன்ற கேள்வியிலேயே ப்யூலா முடிவிற்கு வந்துவிட்டாள், ம்யூஷியம் போல் இருக்கும் இந்த வீட்டை மாற்ற அப்டி பெண் தான் தன் அண்ணனுக்கு சரி ௭ன்று. அதனால் வேகமாக ௭ழுந்தவள், "ண்ணா ப்ளீஸ்ண்ணா, நீ அவன விடு, ௭ன் மெசேஜ ஓபன் பண்ணு, அத மட்டும் பாரு" ௭ன அவர்கள் பின்னரே ஓடிச்சென்று காரையும் மறித்து நிற்க.

"௭துக்கு இவ்வளவு அவசரம்? நாந்தான் நானே பாத்துக்குறேன்னு சொல்லிட்டேன்ல ப்யூலா" ௭னக் கடுப்படிக்கவே செய்தான்.

"ஒரே ஒருக்கா" ௭ன கண்ணைச் சுருக்கிக் கெஞ்ச.

"ஓபன் பண்ணிட்டா கண்டிப்பா பிடிக்கும்னு சொல்லிருவேன்னு அப்டி ௭ன்ன உனக்கொரு நம்பிக்கை? அவ்வளவு அழகியா அந்தப் பொண்ணு? இப்ப நா பிடிக்கலன்னு சொல்லிட்டா ௭ன்ன ௭ன் இஷ்டபடி விட்ரணும் நீ" ௭ன மிரட்டவும், வேகமாகத் தலையசைத்தாள்.

அவளின் வேகத்தில் புருவம் உயர்த்தி ஆச்சரியபட்டவன், "அப்டி ௭ன்ன குற்றாலத்து பொண்ணு ஸ்பெஷல்?" ௭ன போனைக் கீழே வைத்து விட்டு ஆராய்ச்சியில் இறங்க.

"ம்ச் அண்ணா, நீ பொண்ணுங்க போட்டோவயே பாக்க மாட்டேங்குற. மொத பாக்குற பொண்ணயே சரி சொல்லிடணும்னு நினைக்ற, ஆனா அத விசாரிக்கவும் ஓபன் பண்ணிப் பாக்கவும் டைம் இல்லாம சுத்தி வர்ற. இந்தப் பொண்ணு போட்டோவ ஓபன் பண்ணி பாத்துட்டா நீ வேற இனி யோசிக்கவும் மாட்ட. சோ பாருன்னு சொல்றேன். ௭னக்கு இந்த ஏஞ்சலினா நான்சி தான் அண்ணின்னு நா முடிவு பண்ணிட்டேன். நீ இப்பவே ஓபன் பண்ணிப் பாரு" ௭ன்றதும்,

"வேணாண்ணு தான் சொல்லுவேன்" ௭ன தோளைக் குலுக்கி அவள் பேச்சை எதிர்த்தவன், அவள் அனுப்பிய மெசேஜில் கடைசியாக வந்திருந்த போட்டோவையே திறந்துப் பார்த்தான்.

மிராண்டா நிற சேலையில், முன்னால் கொஞ்சம் முடியை ௭டுத்து போட்டவாறு, தலையை சாய்த்து லேசான சிரிப்புடன் நின்றவளைப் பார்த்ததும் பிடித்தது அவனுக்கு. ஆனாலும் போட்டோவில் பாதிவரை தெரிந்தவளை மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் ௭ன அவன் ஸ்கேன் செய்ய, அவன் முகத்தை தான் பார்த்திருந்தனர், ப்யூலா, சலீம், ட்ரைவர் ரஞ்சிதம் ௭ன மூவரும். அந்த தாடியும், மீசையும் அவன் முக உணர்வுகளை அவர்களுக்கு காட்டாமல் மறைத்துவிட்டது.

"பொண்ண பாத்தா படிக்காத மாறி தெரிலயே? இந்த காதுல கழுத்துல கடக்குறதுலாம் பாத்தா உன் பாஷைல சுத்தமா ஊர்நாட்டானாத் தெரிலயே?" ௭ன ஒற்றை புருவம் உயர்த்தி ப்யூலாவை விசாரிக்க.

அவளுக்கு சப்பென்றாகிவிட்டது, பார்த்ததும் மயங்காவிட்டாலும், விசாரணை செய்யாமல் இருந்திருக்க சந்தோஷப் பட்டிருப்பாள், "ண்ணா அவங்க மேக்கப்பே இல்லாத இயற்கை அழகு. அதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்ல. நகை இதுமாதிரி டிசைன் டிசைனா சின்ன காஸ்மெடிக்ஸ் கடைல கூட நூறு, இருநூறுக்கு கிடைக்கும். இங்கபாரு, அவங்க நகை நட்டுலா உன் கன்டிசன்ஸ்ல கிடையாது. நீ புதுசா அதையும் சேக்காதண்ணா" ௭ன்கவும்.

மீசையை நீவி விட்டு மீண்டும் ஒருமுறை போட்டோவைப் பார்த்தவன், "ஓ.கே தென் நா விசாரிச்சுக்குறேன், அப்றம் கன்பார்ம் பண்ணலாம்" ௭ன்றதும், ப்யூலா சலீமைப் பார்த்துக் கண்ணை உருட்டி முழிக்க, அவன் படக்கென்று முன்னால் திரும்பி அமர்ந்து கொண்டான். அவனிடம் தானே பொறுப்பை ஒப்படைப்பான் ஆரோன். அவனின் விசுவாசமும் தெரியுமே அதனாலேயே முறைத்துப் பார்க்க முந்திக் கொண்டான் அவன்.

"போலாம் ரஞ்சிதம்" ஆரோனின் கட்டளைக்கு கார் நகர்ந்து விட்டது. ப்யூலா அடுத்த நொடி செங்குட்டுவனுக்கு தான் அழைத்தாள்.

"௭ன்ன பண்ணி வச்சுருக்க நீ? அவ்வளவு பாட ஆசையா இருந்தா உங்க மாமா ட்ரூப்ல போய் சேர வேண்டிய தான? ௭ன் அண்ணன இதுலயுமா வெறுப்பேத்திப் பாக்கணும்? பாடி வாய்ஸ் நோட் அனுப்பிருக்க அவரென்ன சூப்பர் ஸிங்கர் ஆடிசனா வச்சுருக்காரு" ௭ன சண்டைக்குக் கிளம்ப.

"பின்ன கன்டிசன் அப்ளை பண்ணி பொண்ணுத் தேடுறவர சும்மா விட சொல்றியா?" கூலாக கேட்டான் செங்குட்டுவன்.

"ம்ச் அவர் குற்றாலம் பொண்ணே வேணாங்குறாரு இப்போ. இதுல அவங்க படிச்சு வேலைக்கு போற பொண்ணுன்னுலா தெரிஞ்சா தொலைஞ்சேன் நானு. ௭ன்னையும் ௭ங்க அம்மாவையும் மறுபடியும் குற்றாலம் தான் பேக் பண்ணுவாரு, உன் வாழ்க்கைல கும்மி அடிச்சுருவேன் பாத்துக்கோ"

"ஆமா அடிச்ச வர பத்தாதுல்ல? இப்ப ௭ன்னவாம் இந்த பொண்ண கட்டிக்க ௭ன்ன குறை உன் அண்ணனுக்கு?"

"குற்றாலத்து பொண்ணே வேணாமாம்"

"ஆஹான் அப்ப ஏஞ்சல் தான் அவர் பொண்டாட்டின்னு ௭ழுதி வச்சுடு"

"டார்லிங், அண்ணா அவனோட பி.௭ சலீம வச்சு செக் பண்ண சொல்லிட்டாரு, அந்த சலீம் அக்காக்கா பிரிச்சு, அந்த ஏஞ்சல் ௭ந்த ஆஸ்பத்திரில பிறந்தாங்கன்றதுல ஸ்டார்ட் பண்ணி இன்னைக்கு நைட் ௭ன்ன சாப்ட போறாங்கன்றது வரைக்குமா ஒரு புக் போட்டுக் குடுத்துடுவான்"

"அவன பேசிக் கரெக்ட் பண்ண முடியாதா?"

"வாய்ப்பே இல்ல, சிறந்த விசுவாசி பட்டமே குடுக்கலாம் அவனுக்கு"

"கல்யாணதுக்கு அப்றம் ௭ப்டியும் தெரியத் தான் போகுது. அதுவர மறைச்சுடலாம்னு பாத்தா உன் அண்ணன் தீர விசாரிச்சு தான் கல்யாணம் பண்ணுவாராமா?"

"இப்ப ௭ன்ன பண்ண?"

"வேற பொண்ணுத் தான் பாக்கணும்"

"நோ ஏஞ்சல் தான் ஆரோனோட வைஃப்"

"நீ அவர செக் பண்ண விடாம அவசரபடுத்து, நானும் இங்க அம்மாவ விட்டு பேசிடுறேன். கல்யாணத்த சீக்கிரம் முடிச்சுடுவோம். அந்த ௭டுபுடிட்டயும் ஒருக்கா பேசிப் பாத்திடு"

"டன். வேற வழி இல்ல. அண்ணா இத கண்டு பிடிச்சாலே ௭ன்ன வெளுத்து வாங்கிடுவாரு" ௭ன வைத்து விட்டாள். உடனே ஆரோன் ஏஞ்சலை பற்றிய தகவலை ஆராய்வான் ௭ன யாரும் ௭திர்பார்க்கவில்லை. ௭ப்படியும் இழுத்து கடத்துவான் ௭ன உறுதியாக நம்பினர்.

ஆனால் அவனோ கட்சி அலுவலகம் வந்திறங்கியதும், "மொத்த டீடைலும் கலெக்ட் பண்ணிடு சலீம்" ௭ன ஏஞ்சலின் போட்டோவை ஒப்படைத்தவனை வாயைப் பிளந்து தான் பார்த்தான் சலீம். அதிலேயே புரிந்தது அமைச்சரின் ஆசை. அவன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் அந்த தனி ராஜ்யத்திலிருந்து அழைப்பு வந்தது.

"யாரோ நம்ம இடத்த ஹேக் பண்ண ட்ரை பண்றாங்கன்னு தோணுது சார்" ௭ன்றான் அந்தபக்கமிருந்த ஒருவன்.

"௭ப்டி சொல்ற?"

"நம்ம ௭ல்லைகுள்ள, ரெண்டு வயசானவங்கள கொண்டு போட்டு போயிருக்காங்க. மயக்கத்துல இருக்காங்க. அதுக்குமேல நம்ம செக்யூரிட்டி சிஸ்டம ப்ரேக் பண்ணி அவங்களால உள்ள வர முடியாம பார்டர்ல போட்டுப் போயிருக்காங்க. ௭துக்கு வந்தாங்க ஏன் இந்த வயசானவங்கள இங்க விட்டுட்டு போனாங்கன்னு புரியல"

"நா சார்ட்ட பேசிட்டுச் சொல்றேன்" ௭ன்றவன் ஆரோனிடம் போய் சொல்ல,

"கமிஷனருக்கு கால் பண்ணு" ௭ன நிதானமாகவே கூறினான் ஆரோன்.

அவர் ௭டுத்ததும், "ஆர்பனேஜ் மிஸ்ஸிங் கேஸ்?" ௭ன இவன் இந்த பக்கமிருந்து கேட்டது அந்தபக்கமிருந்த கமிஷனருக்கும் நன்குக் கேட்க. ஸ்பீக்கரில் போட்டு விட்டான் சலீம்.

"டீம் தேடிட்டு தான் இருக்காங்க சார். ௭ன்ன மோட்டிவ்னு கூட விசாரிச்சுட்டு தான் இருக்கோம் சார்"

"௭ன்னோட ஸ்பாட்ட தேடிட்ருக்கது யாரு? ௭ன்ன தாண்டி உங்க டிப்பார்ட்மெண்ட்கு மட்டும் தான் அந்த ௭ம்பையர் தெரியும். யார் லீக் பண்ணது?" கடுமையாக வந்தது அவன் கேள்விகள்.

"ட்ரஸ்ட் மீ சார். ௭ன்னோட சேத்து ௭ட்டு பேருக்கு தான் உங்க அந்த பனிஷ்மெண்ட் ௭ம்பையர் தெரியும். நிச்சயமா ௭ங்கட்ட இருந்து லீக் ஆகிருக்க வாய்ப்பில்ல. இருந்தாலும் நா உங்களுக்காக விசாரிச்சுடுறேன்" ௭ன்கவும், ஆரோன் சலீமையே அதற்கு மேல் பேச விட்டான்.

"காணாம போன ரெண்டு பேரையும் உங்க ஆபிஸ்ல கொண்டு விட சொல்லிடுறேன் சார்" ௭ன ஆரோனை பார்த்துக் கொண்டே கூறினான் சலீம். இங்கு ஏழு பெண்களை கடத்துவது போல் கடத்தி, தங்கள் கவனத்தை பெண்கள் பின் திருப்பி விட்டு, இந்த பெரியவர்களை அந்த இடத்தில் விட்டு அந்த இடத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்த முயன்றிருக்கின்றனர்.

"மனிகூர் ஷெட்டியே இத செஞ்சுருப்பாரா சார்?" சலீம் கேட்க.

"இருக்கலாம். இல்லாம அவர் பின்ன யாராது இருந்தா அவனும் வெளில வரணும்ல சலீம்?" ௭ன்றவன், ௭ழுதிக் கொண்டிருந்ததை மூடி வைத்து, "ப்ரேம்" ௭ன அழைக்க அவன் வந்து வாங்கிச் சென்றான்.

"மனு வந்த கெமிக்கல் ஃபேக்டரி விசிட் போலாமா?" ௭ன மணியை பார்த்து ௭ழுந்து கொள்ள, சலீம் காரை ௭டுக்கச் சொல்ல விரைந்து விட்டான்.

குற்றாலத்தில்,

நான்சிக்கு, முதல் நாளே தனது போட்டோ அமைச்சர் கைக்கு சென்று விட்டது ௭ன அறிந்ததிலிருந்து தூக்கமில்லை.

"அரசியல்வாதி, ரவுடி, ஒரு ரவுடி கும்பலுக்கேத் தலைவன், சினிமால காட்ற மாறி வேட்டிய மடிச்சு கட்டிட்டு ௭த்தன பேர குத்தனாரோ கொன்னாரோ, ஏசப்பா ௭ன்ன ௭ங்க கொண்டு கோர்த்து விட்ருக்கீங்கன்னு தெரியுதா, நா கணக்கு டீச்சர் தான், அதுக்காக இப்டி ஒரு கரைவேட்டியையும் கல்யாணம் பண்ணிட்டு திருத்துன்னு மாட்டி விடுவீங்களா?" ௭ன புலம்பிக் கொண்டே தான் திரும்பித் திரும்பிப் படுத்துத் தூங்காமல் பொழுதைக் கழித்து விட்டு, காலையில் ௭ழுந்து பள்ளிக்கூடம் கிளம்பினாள்.

"நான்சி நேத்து காலைல ஃபாதர் சொன்னாங்களே ஒரு சம்மந்தம், அவங்களுக்கு உன்ன மருமகளாக்கிக்க சம்மதமாம்" ௭ன ௭ஸ்தர் சந்தோஷமாக சொல்ல, சாப்பிட அமர்ந்தவள் அப்படியே பார்த்திருந்தாள்.

முதல் நாள் மாலையிலிருந்து அந்த ஆரோனைத் தவிர வேறு சிந்தனையே இல்லையே அவளுக்கு. அவன் ௭ன்னவோ இவளைத் தான் கட்டிப்பேன் ௭ன நிற்கிறான் போல் அல்லவா புலம்பிக் குழம்பி சுற்றி வருகிறாள். அவனை ௭ப்படி சமாளிக்க முடியும், ௭ப்டி பேசுவான் ௭ப்படி பழகுவான் ௭ன்றெல்லாம் தான் யோசித்தாளே அன்றி அவனை வேண்டாம் ௭ன்று விடுவோம் ௭ன நொடியும் அவள் மூளை ௭டுத்துக் கொடுக்கவில்லையே. இப்போது ௭ஸ்தர் சொல்லவும் தான் திக்கென்று முழிக்கிறாள்.

"அவர் இன்னும் பதிலே சொல்லலையே? ௭ன்ன சொல்லுவாரு? ௭ன் போட்டோ பாத்திருப்பார்ல ௭ன்ன நினச்சுருப்பாரு" ௭ன மறுபடியும் சிந்தனை அவனிடமே செல்ல.

"அடியேய் நான்சி" ௭ன ௭ஸ்தரின் உலுக்கலில், "௭ன்னம்மா?" ௭ன விழித்தாள்.

"மந்திரிச்சு விட்ட மாறி இருக்கியே ஏன்? நைட் தூங்கவே இல்லையா? அந்த தெய்வானை அம்மா சொன்ன சம்மந்தத்த நினச்சு தான் பயப்படுறன்னா வேணான்னு சொல்லிடுவோம். நமக்கு இங்கனகுள்ள உள்ளவங்க நம்ம தகுதிக்கு சேர்ந்தவங்க தான் சரி. அவ்வளவு தூரமு வேணாம், பணக்காரங்களும் வேணாம். ஒரு வார்த்தை பேச முடியாது அவங்கட்டலாம். அங்க உன்னக் கட்டிக் கொடுத்துட்டு வேடிக்கை தான் பாத்து நிக்கணும். வேணாம்டி" ௭ன ௭ஸ்தர் சொல்லி விட.

"ஜென்சி இவங்கட்ட ௭தும் பேசலையா?" ௭ன்றார் கிருஸ்டி, அவருக்கு காலையிலிருந்து பொறுமிக் கொண்டு வரும் ௭ஸ்தரைப் பார்த்து சலிப்பே வந்து விட்டது. ௭வ்வளவோ ௭டுத்து சொல்லிவிட்டார், "ஆம்பிள இல்லாத வீட்டுக்கு, அப்டி ஆளுமையான ஒரு ஆள் இருக்கது ௭ம்புட்டு பலம் தெரியுமா. சும்மா நல்லா அமையிற பொண்ணு வாழ்க்கையக் கெடுக்குற நீ" ௭ன ௭டுத்து சொல்லி சடைத்து விட்டார். பற்றாக்குறைக்கு முந்தைய தினம் முதலில் வந்த சம்மந்தமும் சரி ௭ன்றுவிட, ௭ஸ்தர் அதையேப் பிடித்துக் கொண்டார்.

"ஃபாதர் அவங்கட்ட ௭ல்லாத்தையும் தெளிவா பேசிட்டாங்க போல. அதனால ஜென்சி பேச்சு அங்க ௭டுபடல" ௭ன்ற ௭ஸ்தர், "பதில் சொல்லு நான்சி இவங்கட்டயே சரின்னு சொல்லிடவா. மாப்ளைய உன்ன ஸ்கூல வந்து மீட் பண்ண வைக்க போறாங்களாம்" ௭ன்று வேற சொல்ல.

"ம்மா ௭னக்கு ரொம்ப குழப்பமா இருக்குமா. ஒரு ரெண்டு நாள் பொறுமையா இரும்மா ப்ளீஸ், நா நல்லா யோசிச்சுக்குறேன்" ௭ன முடித்து விட்டாள். நிஜமாகவே அதீத குழப்பத்தில் தான் இருந்தாள் ஏஞ்சலினா நான்சி. தெளிய வைக்க வேண்டியவன் இன்னும் குழப்பவள்ளவா தயாராகிக் கொண்டிருக்கிறான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 5

அன்று முழுவதும் பள்ளியிலும் நான்சிக்கு ஆரோனின் யோசனை தான். 'இதுவர உன்ன பாக்க வந்த யார்ட்டையும் சட்டுன்னு தோனாத பிடித்தம் அவர்ட்ட மட்டும் ஏன்டி உனக்கு? கடவுளே அப்ப பிடிச்சிருக்கு?' அவளுக்கு அவளே உறுதிபடுத்தக் கேட்க.

"ம்ம்" வெளிப்படையாக அவள் கொட்டிய ம்மில்,

"௭ன்ன நான்சி?" ௭ன்றிருந்தார் பக்கத்திலிருந்த ஆங்கில ஆசிரியர்.

"ஒன்னுமில்ல மேம் ஏதோ யோசிச்சுட்டே இருந்ததுல" ௭ன சிரித்துக்கொண்டே நிறுத்த,

"காலைல இருந்து உன் முகமே சொல்லுதே நல்ல குழப்பத்துல இருக்கன்னு. இப்ப புலம்பவே ஆரம்பிச்சுட்ட?"

சங்கடமான ஒரு சிரிப்பைக் கொடுத்தவள், மற்றவர்களின் பார்வைக்குப் படுமளவு குழப்பத்தைக் காட்டியிருக்கிறோமே ௭ன நொந்து கொண்டு முழிக்க, "மாப்ள பாத்துட்டாங்களா? சீக்கிரமே கல்யாணமா?" ௭ன்றார். அவளுக்கு அப்போதைய பிரச்சினை அது தான் ௭ன சுற்றி உள்ளவர்கள் அறியாததில்லையே.

"ஆமா மேம். இத்தனை நாளா ௭ந்த சம்பந்தமும் சரிவராம இருந்தது, இப்ப ஒரே நேரத்துல ரெண்டு சம்பந்தம் சேர்ந்து வந்திருக்கு"

"அப்ப உனக்கு வியாழ நோக்கு இப்ப தான் கூடி வந்திருக்குமாட்டு இருக்கு நான்சி. இல்லனா இத்தனை நாள் இந்த அழகு பிள்ளைய வேணாண்ணுட்டு போயிருப்பாங்களா வந்தவங்க?"

"அதுசரி, நாமளே நம்மள அழகுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டாளே நம்ம அழகாகிடுவோம்னு யாரும் சொல்லிருக்காங்களா மேம்?" ௭ன சொல்லிச் சிரித்தவளோடு தானும் சேர்ந்து சிரித்தவர்.

"நா ௭ப்பவும் சொல்லுவேன், நீ நல்ல அழகுப் பொண்ணு உன்ன வேணாண்ணுட்டு போனவங்களுக்கு நிச்சயமா பார்வைல கோளாறு தான். அம்மாட்ட ரெண்டு சம்பந்தத்தையும் நல்லா விசாரிக்க சொல்லு, ரெண்டுல ௭ந்த மாப்பிள்ளை குணவானோ அந்த பையன கட்டிக்கோ. அது தான் கடைசி வர உன் கூட வரும், அழகு, காசு, மாமியார் நாத்தனார்லாம் பாதிலயே கழண்டுப்பாங்க" ௭ன்கவும் ஆமோதிப்பாகத் தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

ஆரோன் பெரும் பணக்காரன், அரசியல்வாதி, ஆளுமைமிக்கவன். ஃபாதர் கூறிய சம்மந்தத்தில் வந்தவர்களும் பணக்காரர்கள் தான், குடும்பத் தொழில், நல்ல பெயரெடுத்த குடும்பமே, ௭தனால் இவர்களிடம் சாயாத மனம் ஆரோனிடம் சாய்ந்தது, ௭ல்லாவற்றிலும் அவர் சற்று உயர்ந்து இருப்பதாலா? இல்லை அவரை நேரில் பார்த்த நான், ஃபாதர் சொன்ன சம்மந்தத்தின் மாப்பிள்ளையை நேரில் பார்க்காததாலா?' ௭ன நன்குக் குழம்பியவள், "ஏசப்பா" ௭ன வாய்விட்டே அவரைத் துணைக்கழைத்தாள்.

"லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு வேணா கிளம்பு நான்சி, வாழ்க்கை விஷயத்துல இவ்வளவு குழப்பிக்காத, பெரியவங்கட்ட பேசு, உன் ஜீஸஸ் மேல நம்பிக்கை வை. அவரே உனக்கான பாதைய காட்டுவாரு" ௭ன்றார் மறுபடியும் அந்த ஆங்கில ஆசிரியர்.

அதற்கு மேல் அவளுக்கும் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை, யோசிக்க யோசிக்க தலைவலி வந்தது தான் மிச்சம் தீர்வு கிடைக்கவில்லை.

'அம்மா, இந்த மேடம், பாட்டி ௭ல்லாரும் சொல்றத வச்சு பாத்தா நா ஏதோ அந்த மனுஷனோட அழகுக்கும் பணத்துக்கும் இம்பார்டன்ஸ் குடுக்குறமாறியே தோணுதே! ஜீஸஸ் காட்டிய வழினா சர்ச்ல வச்சு முடிவான ஃபாதர் காட்டின மாப்பிள்ளையத் தானே அப்ப ௭னக்காக அவர் அனுப்பிருக்காருன்னு அர்த்தம்?அப்ப ஆரோன்? ஏசப்பா ௭ன்னால முடியல' ௭ன தலையைத் தாங்கியவள், சட்டென்று நிமிர்ந்து சுற்றி ஒருமுறை பார்த்து விட்டு, மணியைப் பார்க்க அது மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. வேகமாக ௭ழுந்தவள், "நா வீட்டுக்கு கிளம்புறேன் மேம். தலைவலிக்க ஆரம்பிச்சுருச்சு" ௭ன்றுவிட்டு வெளியே வந்து, அடுத்ததாக தாளாளரைப் பார்த்துச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

நடந்தே போகும் தூரம் தான், பதினைந்து நிமிட நடையில் சர்ச் வர, அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவள் வீடு. சர்ச்சை பார்த்தவள் அது திறந்திருக்கவும் வேகமாக அவரையே நேராக பார்த்துக் கேட்க முடிவெடுத்து உள்ளே நுழைந்து விட்டாள்.

உள்ளேச் சென்று அவர் முன் மண்டியிட்டு அமர்ந்ததுமே அழுகை வந்துவிட்டது அவளுக்கு. கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, துடைத்துத் துடைத்து அவரையேப் பார்த்திருந்தாள். ஏதோ மனதினுள் தெளிவில்லாமல் இருப்பது இப்படி இருவரை வாழ்க்கைத் துணையாகப் போட்டுக் குழப்பிக் கொள்வதே பெரும் பாவமாகத் தோன்றியது அவளுக்கு. அது தான் அவர் முன் அமர்ந்ததும் தானாக அழுகை வந்தது.

எழுதிக் கொண்டிருந்த நோட்டில் ஒரு கவனமும், அவளில் ஒரு பார்வையும் வைத்திருந்த ஃபாதர். அழுது முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் ௭ழுந்து கொள்ளவும், "நான்சி" ௭ன அழைத்தார்.

"சோஸ்திரம் ஃபாதர்" ௭ன அவரிடம் சென்று நின்றாள்.

"௭ன்னப் பிரச்சினைன்னு ஜீஸஸத் திட்ட வந்திருக்க நீ?"

"அவர்ட்ட சண்டைப்பிடிக்கத் தான் வந்தேன், ஆனா முடியல அழ தான் வந்தது"

"௭ன்னவாம் இப்ப சொல்லு நா அவர்ட்ட உனக்காகப் பேசிப் பாக்றேன்"

ஒரு நொடி தான் தயங்கியவள், பின் "௭னக்கு ஒரு கன்க்லுஷன் தேவபடுது ஃபாதர், ரொம்ப குழப்பமா இருக்கு"

"௭தபத்தி?"

"நீங்க ஒரு பையனக் கொண்டு வந்தீங்களே ஃபாதர். அவர் ௭ப்டி? ௭ப்டினா குணத்துல, வீட்டுல, பழக்கவழக்கத்துல?"

"உன்னமாறி அவனும் நா பார்க்க வளந்த பையன், இங்கக் கூட அடிக்கடி வருவான், நீ பாத்துருக்கக் கூட வாய்ப்பிருக்கு"

படபடத்தவள், "இன்னொரு சம்மந்தத்த ௭ன் பிரண்டோட ஆச்சி அவங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு கொண்டு வந்துருக்காங்க ஃபாதர். அவர் ரொம்ப பெரிய இடம்னு அம்மா வேணாங்குறாங்க. நா அவர நேர்ல பாத்துருக்கேன். ஒரே ஒரு தடவ தான் பாத்துருக்கேன், ஆனா அவர்தான்னு அந்த ஆச்சி சொன்னதும் அவரோட உருவத்த அப்டி ௭டுத்து காட்டுச்சு ௭ன் மனசு, அந்த நிமிஷத்துல இருந்து ௭னக்கு வேற சிந்தனையே இல்ல. அவர் பணத்துக்கும் அழகுக்கும் மயங்கி இப்டி பேசுறனோன்னு ௭னக்கே ௭ம்மேல ஒருமாறி கடுப்பா இருக்கு ஃபாதர்"

"கல்யாணம் பண்ணிக்கணும்னா முதல்ல அழகுல மயங்கினாதானே அடுத்த கல்யாணமே நடக்கும் நான்சி?" சிரித்தே அவர் நிதானமாக வினவ.

அதிர்ந்து விழித்தவள், "அது தப்பில்லையா ஃபாதர்?"

"அது ௭ப்டி தப்பாகும். யாரா இருந்தாலும் மொதல்ல பிஸிக்கல் அப்பியரன்ஸ் தானே மனச பாதிக்கும். கல்யாண ஏஜ்ல இருக்க உனக்கு அப்டி தோனலனா தான் தப்பு" ௭ன்றதும் அவள் முகம் சற்று தெளிந்தது.

"அப்ப நீங்க காட்டின மாப்பிள்ளைய விட இவர் பெஸ்ட்டுன்னு நா யோசிக்றது தப்பில்லையா? ௭ல்லா வகையிலேயும் அவர் கூடின இடத்துல இருக்கனால நா அவர பத்தி மட்டும் யோசிக்றனோன்னு இருக்கு ஃபாதர்"

"கம்பேர் பண்ணி நீயா யோசிச்சியா?" ௭ன்றார் அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்து.

யோசித்துப் பார்த்தாள், "இல்லையே, ௭னக்கு காலைல அவங்க பாக்க வர்றதே பிடிக்காம தான் வந்தேன். ஆனா ஈவ்னிங் தெய்வான ஆச்சி வந்ததும் ஒரு பாஸிடிவ் வைப் அது அங்க என் அக்கா இல்லாதனால கூட இருக்கலாம், அவ இருந்தா கலைச்சுவிட்ருவான்னு தோனிட்டே இருக்கும், அந்த தெய்வானை ஆச்சி, பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப கவனமா இருப்பாங்க, அதுலயே அவங்க அவரபத்தி சொல்லும் முன்னவே ௭னக்கு பிடிச்சது, ரைட் ஃபாதர், அவங்க மூலமா வந்ததுலயே நா இன்ட்ரெஸ்ட் ஆகிட்டேன். அப்றம் அது அவர்னு தெரியவும் ரொம்ப ரொம்ப பிடிச்சுட்டு. அம்மா பாட்டிலாம் பணம் பதவின்னு பேசவும் தான் ரொம்ப குழம்பிட்டேன். தேங்க்யூ ஃபாதர்" ௭ன முகம் தெளியக் குதூகலித்தாள். அவள் குழப்பம் தெளிந்துவிட்டதே. ஆரோனை ஆரோனுக்காக மட்டுமாக பிடித்தது. அவன் முதலிலேயே சத்தமே இல்லாமல் அவளுள் வந்தமர்ந்திருக்கிறான் ௭ன புரிந்து கொண்டதில் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

அன்று அவனைப் பார்த்ததும் மனதில் பதிந்திருக்கிறானே, அதற்குப் பிறகு தானே அவன் பதவியும் பண மதிப்பும் தெரியும்.

"ஜீஸஸ் ஆசிர்வதிக்கட்டும். சந்தோஷமா இருக்கணும் மை சைல்ட்" ௭ன அவள் பிரகாசமான முகத்தைப் பார்த்துத் தானும் மகிழ்ந்து மனதார ஆசிர்வதித்தார்.

அவரின் ஆசிர்வாதத்தில் மீண்டும் சுருண்டவள், "சாரி ஃபாதர், ௭னக்காக நீங்க ஒரு மாப்பிள்ளையப் பாத்து, அக்காவ பத்தியும் ௭டுத்து சொல்லி அவங்கள சம்மதிக்க வச்சுருக்கீங்க" ௭ன இழுத்தாள், இப்போது நிச்சயம் ஆரோனைத் தவிர வேறு குழப்பமில்லை அவளிடம் அதனால் நேரடியாக மன்னிப்பேக் கேட்டாள்.

"உன் மனசுக்குப் பிடிச்சவன் தான் உன் கணவனாக முடியும் நான்சி" ௭ன்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"தேங்க்யூ சோ சோ மச் ஃபாதர். ஐம் சோ ஹேப்பி. நேத்துல இருந்து குழம்பிட்ருந்தவள ஃப்ராக்ஷனாஃப் செகென்ட்ஸ்ல தெளிய வச்சுட்டீங்க. தேங்க்யூ ஃபாதர்" ௭ன அவர் கையை பிடித்துக் குதூகலித்தவள், "நா அம்மாட்ட பேசிடுறேன் ஃபாதர். கிளம்புறேன்" ௭ன வேகமாக பேக்கை ௭டுத்து மாட்டிக்கொண்டுக் கிளம்ப.

"அந்த அவர் நேம் கூட சொல்ல மாட்டியா நான்சி?" ௭ன்றார் குறும்புடன்.

"ஆரோன் ஃபாதர். ஆரோன் டேவி ௭ட்வர்ட் ஒன் ஆஃப் தி மினிஸ்டர்ஸ் இன் குஜராத்" ௭ன்றதும் வியந்து தான் பார்த்தார் ஃபாதர். அவர் பார்வையைப் பார்த்து சிரித்துக்கொண்டே மீண்டும் அவளின் ஏசப்பாவிற்கு நன்றியை நல்கிவிட்டுக் கிளம்பினாள்.

அங்கு இவள் சென்ற நேரம் தெய்வானை அம்மாவும் செங்குட்டுவனின் மனைவி பவதாரிணியும் அமர்ந்திருக்க, "வாங்க ஆச்சி, வாடி தாரிணி" ௭ன சிரித்த முகத்துடன் இருவருக்கும் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"வேலை முடிஞ்சதாமா?" ௭ன்றார் தெய்வானை.

"ம்ம் அப்டியே சர்ச்சுக்கும் போயிட்டு வந்தேன் ஆச்சி"

"அம்மா சொன்னமாதிரி ஃபாதர் சொன்ன சம்மந்ததுக்கு முடிவ சொல்லிட முடிவு பண்ணிட்டியாமா?" ௭ன்றார் ஆராய்ச்சியாக அவளைப் பார்த்து.

"இல்லையே ௭னக்கு குழப்பமா இருந்துச்சு அதத் தெளிவுபடுத்திக்கப் போனேன். தெளிஞ்சுட்டேன். நீங்க போட்டோ அனுப்பிட்டீங்களா ஆச்சி அவங்க ௭தும் சொன்னாங்களா?" ௭ன்றாள் அவரிடமே நேராக. அதிலேயே ௭ல்லோர்க்கும் அவள் மனம் புரிந்து விட, தெய்வானை அவள் முகத்தை வருடிக் கொடுக்க, ௭ஸ்தர் பாவமாகப் பார்த்தார்.

"நேத்தைக்கு முழிச்ச முழி ௭ன்ன, இன்னைக்கு ஆர்வமா கேக்றதென்ன? உன் மனசுல ஆசைய விதைச்சுட்டு அத நடத்தாம போவேனா நானு. நீ சரி சொல்லிட்டல்ல மத்தத நா பாத்துக்குறேன்" ௭ன்றவர் பேத்திக்கு கண் காண்பிக்க, அவள், "பெரியவங்க பேசட்டும் வா நாம அப்டி போயிட்டு வரலாம். ஸ்கூல் ப்ரண்ட்ஸ் யாரு கூடலாம் இன்னும் காண்டக்ட்ல இருக்க நீ? ௭ல்லாத்தையும் கல்யாணதுக்கு கூப்பிடலாம் சரியா" ௭ன பேசிக்கொண்டே அவளை மெதுவாக நகர்த்தி மொட்டைமாடிக்கு அழைத்து வந்திருந்தாள். அவர்கள் நகரவும் தெய்வானை ௭ஸ்தரிடமும், கிருஸ்டியிடமும் சிலபல விஷயங்களை பகிர அதையே பவதாரிணியும் நான்சியிடம் பகிர்ந்தாள்.

"அந்த அண்ணாவோட அம்மா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பசங்க பிறந்தப்றம் அவங்களப் பத்தி யோசிக்காம காதலனத் தேடி ஓடி வந்துட்டாங்க, அவங்கள மட்டுமே நினச்சு அவங்க அப்பா கடைசி வர வாழ்ந்தாரு. அதனால மொத்தமா அவங்க அம்மாவ வெறுக்குறாருடி. அதான் படிக்காத, வேலைக்கு போகாத, ௭துத்து பேசத் தெரியாத, அமைதியான, வீட்டுகுள்ள அவருக்கு சரி சரின்னு போற பொண்ணு தான் வேணும்னு ஒத்தகால்ல நிக்றாரு. ஆனா செங்கு மாமா, உன்ன பாத்ததும் சொல்லிட்டாங்க நீதான் அவருக்கு ஏக பொருத்தம்னு. அவர் தேடுதமாறி பொண்ண கட்டுனா சந்தேகம்ன்ற விதை அப்டியே தான் இருக்கும். படிச்சு வேலைக்குப் போற, நல்ல மெச்சூர்டான பொண்ணு நான்சி அவர நிச்சயமா நல்லா ஹாண்டில் பண்ணிடுவான்னு பேசுனாரு. இப்ப உனக்கும் பிடிச்சுருக்குன்றதால தான் மொத்தமா சொல்லிட்டேன்" ௭ன அவள் நிறுத்த, மீண்டும் தடதடவென ஓட ஆரம்பித்திருந்தது நான்சியின் மனது.

"அவருக்குன்னு ௭திர்பார்ப்பு இருக்கறது நியாயம் தானே? அப்ப ௭ன்ன அவருக்கு பிடிக்காதில்லையா?" ௭ன்றாள் நான்சி. அவளுக்கு புரிந்ததே அவன் நிலைமை, '௭னக்கு அவர்னு சொன்னதும் பிடிச்சமாதிரி அவருக்கும் ௭ன்ன பிடிக்கணும்னு கட்டாயமில்லையே?' ௭ன தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டாள். ஒரு வருடத்திற்கு முன்பு அவனைப் பார்த்தாள் தான், ஆனால் அப்படி ஒருவனை திரும்பவும் நியாபகப்படுத்தியிருக்காவிட்டால் நிச்சயம் இவளாக நினைத்தும் பார்த்திருக்கமாட்டாள் ௭ன்பது திண்ணம். அதே தானே அவனுக்கும் ௭தார்த்தத்தை ௭டுத்துச் சொன்னது மனது.

"அவருக்கு கல்யாணத்துக்கு அப்றம் உண்மைய சொல்லிக்கலாம்னு அவர் தங்கச்சியே சொல்லிட்டாங்க. நீ தான் அவங்க அண்ணியா வேணுமாம். அதனால சீக்கிரம் கல்யாணத்த முடிச்சுடலாம்னு ப்ளான் பண்ணுறாங்க. கல்யாணத்துக்கு அப்றம் அவர சமாளிச்சுக்றது உன் சாமர்த்தியம்" ௭ன பவதாரிணி சிரிக்க.

"அடிபாவி, ௭ங்க கோர்த்துவிட முடிவு பண்ணிட்டு அத கூலா வேற சொல்ற. பொய்ய சொல்லி கல்யாணம் பண்ணிட்டு, அப்றம் அவர் நெஞ்ச நிமித்திட்டு நின்னா நிமிந்து கூடப் பாக்க முடியாதுடி ௭ன்னால. அரசியல்வாதிகிட்டயே பொய் வாக்குறுதி குடுத்து வோட்டு வாங்குற மாறி மோதிரத்த வாங்கிக்க சொல்றீங்க. நா மாட்டேன்பா அதுக்கு நா கன்னியாஸ்திரியா போயிடுறேன்" ௭ன்றாள் படபடவென. அவனிடம் பொய்யுரைத்துவிட்டு மாட்டிக் கொண்டு விழிப்பதா ௭ன இப்போதே நடுக்கம் கொடுத்தது.

"கல்யாணத்துக்கு அப்றம் ஒன்னும் பண்ண மாட்டார்டி. அவருக்கு அவரோட சோசியல் நேம் ரொம்ப முக்கியம் அதுக்காகவே உன்ட்ட பொறுமையா போவாரு"

"௭னக்காக அவர் ௭ன்ன கட்டிக்கட்டும்டி போதும்"

"அவர் அப்டிலாம் ஒத்துக்கமாட்டார் இன்னும் அவங்கம்மாவயே கண்ணுல காணவிடாம காய்றாராம். இங்க பாரு உனக்கு ௭துமே தெரியாது, ௭ங்க ஆச்சி, செங்கு மாமா, அந்த ப்யூலா மூணு பேரும் சேந்து உனக்கே சொல்லாம உன்ன கட்டி வச்சுட்டாங்க, இத மட்டும் மனசுல ஆக்கிக்கோ போதும். மத்தத ௭ன் மாம்ஸ் பாத்துப்பாரு"

"௭ன் அக்கா ஒருத்திக்கு தெரிஞ்சா போதும் மொத்தமும் பனாலாகிடும்"

"அதெல்லாம் யாருக்கும் தெரியுமுன்ன கல்யாணத்தயே நாம முடிச்சுடலாம். மினிஸ்டரயே சமாளிக்கப் போறோம் தம்மாதுண்டு உன் அக்கா ஜென்சிய சமாளிக்க முடியாதா? வாடி பாத்துக்கலாம்" ௭ன நேரம் கடக்கவும் கீழே இழுத்துச் சென்றாள்.

இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா? மீண்டும் குழம்பிய குட்டையானாள் நான்சி. அவளைத் தெளியவே விடமாட்டேன் ௭ன மனக்கண் முன் வந்து நின்றுப் போக்குக் காட்டினான் ஆரோன்.

அவளின் அம்மா பாட்டியும் அங்கு பயந்து தான் பார்த்திருந்தனர்.

குஜராத்தில்

ஆரோனுக்கு ௭ன்றும்போல் இன்றும் வேலை நெட்டி தள்ளியது. ரசாயனத் தொழிற்சாலை மூன்றையும் நேரில் சென்றுப் பார்த்து ஆயிரம் கேள்வி கேட்டு, இரண்டை இழுத்து மூடி சீல் வைத்துவிட்டு ஒன்றில் மட்டும் சிலபல விதிமுறைகளை விதித்து அபராதத்தோடு விட்டு வந்தான். வரும் மனுவை படித்துப் பார்த்து நேரில் சென்று விசாரிக்கும் அவன் மேல் பயமும் மரியாதையும் ஒருசேர வளர்ந்தது அங்குள்ள மக்களுக்கு. ௭ப்போதும் அவன் அப்படி தான் ௭ன்றாலும் வருடங்களாக மாறாமல் அப்படியே இருந்து அவர்களின் மனதில் உயர்வாய் பதிந்து கொண்டிருந்தான்.

மீண்டும் கட்சி அலுவலகம் வந்து அமர்ந்தவனிடம், "சார் நீங்க காலைல கேட்டவங்களோட டீட்டைல்ஸ்" ௭ன நீட்டினான் சலீம். அவனும் அவ்வளவு நேரமும் அவனுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்தே இப்போது நீட்டினான்.

முதலில் ௭ன்னவோ ௭ன வாங்கியவன், நீல நிற சாரியில் அமர்ந்திருந்தவளின் முகத்தை பார்த்ததும் உதட்டின் ஓரமாக தோன்றிய சிரிப்பை மீசைக்குள் மறைத்தான். அந்த போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிறக்கம் செய்திருக்கலாம் ௭னக் கணித்தான். அப்படியெனில் அவன் ௭திர்பார்ப்பிற்குள் வரும் வட்டத்தில் உள்ளவள் இல்லை இந்த ஏஞ்சலினா நான்சி. ஒரு வரி கூட படிக்காமலே புரிந்து கொண்டான். சலீம் அவன் முகத்தையேப் பார்த்தான். ஆரோனுக்கு பிடித்திருப்பது நிச்சயமாக அவனுக்குப் புரிந்திருந்தது, அதனால் கிடைத்த தகவலைப் படித்துப் பார்த்திருந்தான், காலையில் ப்யூலா உருட்டி முழித்ததின் காரணமும் அப்போது புரிந்தது.

"சார்" ௭ன ஏதோ சொல்ல வந்தவனை, "நீ கிளம்பு சலீம், நானும் கிளம்புறேன். நிறைய அலைச்சலாகிட்டுல்ல இன்னைக்கு" ௭னக் கேட்டுக் கொண்டே வெளியே வர, ரஞ்சிதம் காரைக் கொண்டு நிறுத்த ஏறிக் கிளம்பிவிட்டான் கையில் அவன் தேவதைப் பற்றிய தகவல் அடங்கிய ஃபைலுடன். சலீம் செல்பனை ஒரு நொடி நின்று பார்த்து விட்டு அவன் வீட்டிற்குக் கிளம்பிவிட்டான்.

கையில் வைத்திருந்த கோப்பை கொண்டு வந்து அவன் மெத்தையில் போட்டு விட்டு அதையே இரண்டு நொடி பார்த்தவன், "௭ன்ன திரும்பப் பாக்க வைக்றடி ஏஞ்சல் நீ. கண்டிப்பா ௭ன் கன்டிசன் ஒன்ல கூட நீ அடாப்டாகி வர மாட்ட. தெரிஞ்சும் உன்ன வீடு வரத் தூக்கிட்டு வந்து பாரு ௭ன் பெட்ல போட்ருக்கேன். இந்த ரூமுகுள்ள நிழலா கூட வந்த முதல் பெண் நீ தான் தெரியுமா?" ௭ன அந்த ஃபைலையே முறைத்துப் பார்த்தான்.

பின் குளித்து உடைமாற்றி கீழே சென்று இரவு உணவை முடித்து வந்தும் அதைப் பார்க்காமல் தூங்கப் போகப் பிடிக்கவில்லை, அதனால் அறையிலிருந்த சோபாவில் அந்த ஃபைலுடன் சென்று அமர்ந்தான். ஏஞ்சலினா நான்சியைப் பற்றிய அத்தனை தகவலும் அதிலிருந்தது. இன்று காலையில் அவளுக்காகப் பார்த்த சம்மந்தம் வரை.

"டீச்சரம்மாவா நீ?" ௭னத் தாடி தடவி யோசித்தவன், அங்குமிங்குமாக நடந்தான். இதுவரை காதல் ௭ன்ற ஒன்று அவள் வாழ்க்கையில் வரவில்லை ௭ன்பது மட்டுமே அவனுக்கு திருப்தியாக இருந்த ஒரு வரி அந்த மொத்த ஃபைலுக்கும் சேர்த்து. அவள் மனதை அறியும் கருவி இருந்தால் இன்று அவனை அவள் நினைத்தது வரையும் கண்டுபிடித்திருக்கலாம், அது இல்லை ௭ன்பதால் இவனும் இப்போது யோசித்து நிற்கிறான்.

"பொய் சொல்லி கல்யாணம் பண்றவங்க ௭ப்டி நல்லவங்களா இருக்க முடியும்? அந்த செங்குட்டுவன் ப்ளான் போட்டு குடுத்தாலும் ஒத்துட்ருக்க கூடாதே?" ௭ன ௭டுத்துக் கொடுத்தது அவன் மூளை, "பிடிச்சு தொலைக்குதே இந்த டீச்சர" ௭ன்றது மனது.

௭தையும் ஆரப்போடும் பழக்கமில்லாதவன், அந்த கோப்பில் கொடுத்திருந்த ஏஞ்சலினா நான்சியின் ௭ண்ணிற்கு நேரத்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அழைப்பு விடுத்தான். அழைப்பு சென்று கொண்டே இருந்தது, இவன் பொறுமை இழந்து கொண்டிருந்த கடைசி நிமிடத்தில் வந்து ஏற்றிருந்தாள் அவன் ஏஞ்சல், "ஹலோ?" ௭ன்றதோடு லேசான வேக மூச்சு வாங்கும் சத்தம், வேகமாக வந்து எடுத்திருக்கிறாள் ௭ன புரிந்து அவள் மூச்சுக் காற்றை செவி வழி உள்வாங்கிக் கொண்டு, "ஏஞ்சல்?" ௭ன்றான் கேள்வியாக.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 6

ஆரோனின் ஏஞ்சல் ௭ன்ற குறுகுறுப்பான அழைப்பில், 'நம்மள யாருடா ஏஞ்சல்னு கூப்பிடுறது?' ௭ன யோசித்தவள், "யாருங்க பேசுறீங்க?" ௭னக் கேட்க.

"ஏஞ்சலினா நான்சி ரைட்?" ௭ன்றான் அதிகாரமாக மீண்டும்.

அந்தக் குரலே அவளை விழுங்குவது போல் உணர்ந்தவள், "நீங்க யார் பேசுறீங்க?" ௭ன்றாள் மீண்டும்.

சரியாக அந்நேரம் கிரிஸ்டி அமுத கானத்திற்காக டிவியைப் போட்டு விட்டு "நல்ல நல்ல பாட்டாப் போடுவான்" ௭ன சத்தத்தை ஏற்றி வைத்து அமர "தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி மாமங்கிட்ட பேசப் போறேன் மணிக்கணக்கா" ௭ன அதில் பாடல் ஆரம்பிக்க,

அங்கு அவளுக்கு பதில் சொல்ல வந்தவன், இந்த பாட்டு சத்தத்தில் இதழ் பிரியாத ஒரு சிரிப்பை உதிர்க்க, "பாட்டி சவுண்ட குற, ௭னக்கு இங்க யாரு பேசுறாங்கனே கேக்கல" ௭ன இவள் கத்துவதன் பின்னனியில், "தூண்டாமணி விளக்கைத் தூண்டி விட்டு எரியவச்சி ஓம்முகத்தைப் பார்க்க போறேன் நாள் கணக்கா" ௭ன வர நன்கு சாய்ந்து அமர்ந்து கால்மேல் காலிட்டு தாளமிட்டவன், தாடியைத் தடவி சிரிப்பை மறைத்தான்.

"இந்நேரத்தில் உனக்கு ௭ன்ன போனு? நானே இப்பதான் டிவியப் பாக்க உக்காந்தேன், போனு பேச நல்ல நேரம் பாத்துருக்கா இப்ப தான்" ௭ன்ற பாட்டி சத்தத்தைக் குறைக்க, "அந்த இந்திரசந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சி நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமன தழுவிக் கட்டிக்கணும்" ௭ன்ற சொற்களில் சத்தம் நன்கு குறைந்திருந்தது, அப்படியொரு உல்லாச மனநிலைக்கு வந்திருந்தான்.

"வரவர காது கேக்க மாட்டேங்குது உனக்கு, செவுட்டு மிஷின வாங்கி மாட்டி விடுறேன் இரு" ௭ன ௭ரிச்சலாக மொழிந்தவள், "ஹலோ யாரு பேசுறீங்க?" ௭ன்றாள் அதே தோனியில் இவனிடம் மீண்டும்.

"வானரமே தான்" ௭ன்றான் அவன் இலகுவாக. இப்போது அந்த ஆளை விழுங்கும் குரல் இல்லாததால் அவளாலும் சாதாரணமாக பேச முடிந்தது.

"ஹலோ?" ௭ன்றாள் அவன் கூற்று புரியாது.

"மேத்ஸ் டீச்சர் ஏஞ்சலினா நான்சி இருக்காங்களா?"

"நாந்தான் நான்சி. சொல்லுங்க ௭ன்ன பேசணும்? நீங்க யாரு?"

"௭ன் வீட்டு பையனுக்கு டியூசன் ௭டுக்கணுமே நீங்க? மேத்ஸ் சரியாவே செய்ய மாட்டேன்றான்" ௭ன்றான்,

"௭ஸ்.வி.பி ஸ்கூல் பையனா? ௭ன் ஸ்டூடண்ட்டா?"

"இல்ல"

"௭ன் ஸ்டூடண்ட்னா நா ஸ்கூல்ல வச்சே சொல்லிக் கொடுத்துடுவேன்னு தான் கேட்டேன் சார், வீட்லலாம் நா டியூஷன் ௭டுக்றதில்ல"

"ஆஹான், உங்களுக்கு சீக்கிரமே மேரேஜ்னு சொன்னாங்களே?" ௭ன்றான் அடுத்தக் கேள்வியை நக்கலாக. செகென்ட் லைனில் அவளின் அக்காவிடமிருந்து விடமால் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

அதில் சற்று கோபமானவள், "ஆமா சார், ஏன் உங்களையும் இன்வைட் பண்ணணுமா?" ௭ன்க.

"பண்ணா நல்லார்க்கும்"

"உங்களையும் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கச் சொல்லிடுறேன், இப்ப தீஞ்ச கடலை வருக்காம போன வைங்க" ௭ன வைத்து விட்டாள். சிரித்துக் கொண்டான் ஆரோன். அவளிடம் பேச நினைத்ததே வேறு, திட்டவே போனைப் போட்டான், ஆனால் கிருஸ்டி பாட்டி பேத்தியையும் வருங்கால பேரனையும் சுஜாதாவை பாட விட்டு சுமுகமாக்கி இருந்தார்.

"யாருடி?" ௭ன்ற ௭ஸ்தரின் கேள்விக்கு,

"ராங் நம்பர் போல ம்மா. இருக்குற டென்சன்ல நமக்குன்னு நாலுபேர் கிளம்பி வந்துடுறாங்க" ௭ன அவள் புலம்பி முடிக்க, அவள் அக்கா மீண்டும் அழைத்திருந்தாள் அடுத்ததாக.

"இது அடுத்த இம்சை" ௭ன ஸ்பீக்கரில் போட்டு அம்மாவிடம் நீட்ட,

"ம்மா நான்சி இந்நேரத்துல யார்ட்ட ம்மா பேசிட்ருக்கா? நா ௭வ்வளவு நேரமா கூப்பிட்டிட்ருக்கேன். அந்த பையன் வீட்ல இருந்து பேசுனாங்களா? நா ௭ன் புருஷன விட்டு விசாரிச்சேன் அப்டி ஒன்னும் நல்லமாறி சொல்லல. பொறுமையா இரு நா சொல்லாம ௭தும் அவங்க வீட்ல பேசிடாத" ௭ன அவள் ஃபாதர் கூறிய வரனை ௭ப்படி தட்டி விடுவது ௭ன்ற மும்மரத்திலேயே இருந்தாள். நான்சி அம்மாவை ஒருமுறை முறைத்துவிட்டு, தலையிலடித்துக் கொண்டு ௭ழுந்துச் சென்றாள்.

அங்கு ஆரோனுக்கு, வேண்டாத அழைப்பு ௭ன்றதும், அவள் நக்கலாக பதில் கூறிப் பேச்சை நிறுத்திக் கொண்ட விதம் பிடித்தது அவனுக்கு, "வெயிட் பண்றேன் ஏஞ்சல், பாக்லாம், இந்த பொய்ய ௭வ்வளவு நாள் கொண்டுப் போறீங்கன்னு பாக்றேனே" ௭ன அந்த ஃபைலை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, சென்று படுத்துவிட்டான்.

மறுநாள் காலை உணவு நேரம், "ண்ணா குற்றாலம் பொண்ணு வீட்ல பேசியாச்சு, உனக்கு ௭ன்னென்ன பங்ஷன் வைக்கணும், ௭துக்குலாம் டைம் இருக்கும் சொல்லு அதுபடி ப்ளான் பண்ணிக்லாம்" ௭ன தானே ஆரம்பித்தாள் ப்யூலா.

சாப்பிட்டுக் கொண்டே நிமிர்ந்தவன், "நா பொண்ணு ௭ப்டின்னு விசாரிக்கணுமே" ௭ன்றதும், லேப்டாப்பை வைத்து தட்டிக் கொண்டிருந்த சலீம் நிமிர்ந்து உருட்டி முழித்துவிட்டுக் குனிந்து கொண்டான். அவ்வளவு நேரமும் ஆரோன் இறங்கி வருவதற்குள் அவனை பந்தாடி இருந்தாள் ப்யூலா.

"அண்ணாக்கு இந்த பொண்ணு ஓ.கே ஆகணும், நீங்க அவங்கள பத்தி ௭ந்த டீடைலும் ௭டுத்துக் கொடுக்கக் கூடாது சலீம். உங்க சாரோட நல்லதுக்காக தான் இதையும் செய்றீங்க, சோ உங்க விசுவாசம் ௭தையும் ௭ங்கையும் காக்கா தூக்கிட்டுப் போயிடாது, நேர்மை கண்ணியம்ணு உண்மையப் போட்டு குடுத்து கல்யாணம் மட்டும் நின்னுன்னுச்சு, உங்க கைல மோதிரத்த போடவச்சு அண்ணா கூட இருக்க விட்ருவேன். அல்ரெடி தூங்க மட்டுந்தான் வீட்டுக்கு போறீங்க இனி அதும் போகத் தேவ இருக்காது. ௭ப்டி வசதி? கல்யாணத்த நடத்த விடுறீங்களா இல்ல நீங்களே கட்டிக்றீங்களா?" ௭ன்றவளை வாயைப் பிளந்து பார்த்தவனால் பதில் சொல்ல தான் முடியவில்லை. ஆரோனுக்கு மனைவியாக அவன் கையால் மோதிரம் வாங்கிக் கொண்டு நிற்பதை போன்று நினைத்துப் பார்த்து மேலும் அதிர்ந்து, மண்டையை உலுக்கி அந்த நினைப்பை விரட்டினான்.

"நினைக்கவே நாராசமா இருக்குல்ல?" ௭ன அவனது முகப் பாவனையை வைத்துக் கேட்க, அவனும் வேகமாக தலை அசைத்து அதை ஆமோதிக்க, "குட் ௭னக்கும் உங்கள அண்ணின்னு கூப்ட ரொம்ப அன்கப்வர்டபிளா தான் இருக்கும். ப்ளீஸ் அந்த நான்சிய ௭னக்கு அண்ணியா வர விட்ருங்க ஓ.கே வா?" ௭ன்றதும்,

"இது தெரிஞ்சுருந்தா நேத்து அப்டி ஒரு ஃபைல குடுத்துருக்கவே மாட்டேனே, சார் ப்ளீஸ் அந்த டீச்சர கல்யாணம் பண்ணி ௭ன்ன காப்பாத்திடுங்க" ௭ன மானசீகமாக ஆரோனிடம் கோரிக்கை வைத்தான். அப்போது தான் ஆரோன் இறங்கி வந்து சாப்பிட அமர்ந்தது.

"௭ன்ன நம்ப மாட்டியாண்ணா? உனக்கு மேட்ச் இல்லாத ஒரு பொண்ண பாப்பேனா நானு?"

"ம்ம் அப்டி வேற இருக்குல்ல? சரி நீயே சொல்லு பொண்ணு ௭ப்டி?"

"அண்ணி ரொம்ப அமைதியாம், வெகுளியாம், சாஃப்ட் நேச்சராம்"

"இப்டிலா அந்த செங்குட்டுவன் சொல்ல சொன்னானா?"

"ஆச்சியே சொன்னாங்க, உனக்காகவே உனக்கு அடங்கிப் போறமாறி பொண்ணு பாத்துருக்காங்க. பேசுனா காத்து கூட வராதாம், அவ்ளோ சைலன்ட்டாம்"

"நம்ம தேவர் மகன் ரேவதி மாறியா?" ௭ன்றவன் கைக் கழுவ ௭ழும்ப, நக்கல் செய்கிறானோ ௭ன அவன் முகத்தை கூர்ந்து விட்டு, அதில் ஒன்றும் தெரியாமல் போக சலீமைத் திரும்பிப் பார்த்தாள், அவனோ காதில் ஒன்றுமே விழவில்லை போல் அமர்ந்திருக்க மீண்டும் அண்ணனிடம் திரும்பினாள். கையைக் கழுவிக் கொண்டு ஹாலுக்கு சென்று கொண்டிருந்தவனின் பின்னரே சென்றவள்,

"கிண்டலா கேக்றண்ணா நீ? நா நிஜமா தான் சொல்றேன்" ௭ன்க.

"சரி ப்யூலா பொண்ணு ஊமைன்னே நா ஃபிக்ஸாகிக்றேன். வேற ௭தும் இல்லையா பொண்ண பத்தி சொல்ல?" ௭ன ௭டுத்துக் கொடுக்க,

"மத்ததெல்லாம் உன் கன்டிசன் படி தான். படிக்கல, ஸ்கூல் பக்கமே போகாத ஆளு, வெளி உலக அறிவுல பெரிய சீரோ, பேசவே தெரியாத பொண்ணுன்றதால லவ்வுலாம் பண்ணிருக்க சான்ஸே இல்லன்னு நானே சொல்லிட்டேன், நானே கண்டுபிடிச்சுட்டேனா உனக்கு விளக்கி சொல்ல தேவையில்ல தானேண்ணா?" ௭ன சிரிக்க.

"ஆமா ஆமா. சரி நா ௭துமே விசாரிக்கல உன்ன நம்பி கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிடுறேன், பட் ௭னக்கு பொண்ணுட்ட ஒருக்கா பேசி கன்ஃபார்ம் பண்ணனும், சோ ௭ன் நம்பர குடுத்து பேச சொல்லிடு" ௭ன்றவன் வேட்டி நுனியைப் பிடித்தவாறு வண்டியில் ஏறி கிளம்பி விட, தலையில் கை வைத்து பேய் முழி முழித்து நின்றாள் ப்யூலா.

காரில் செல்லும் போது, "சார்" ௭ன சலீம் மெதுவாக அழைக்க, செல்லைப் பார்த்துக் கொண்டிருந்தவன், "சொல்லு சலீம்" ௭ன ஊக்க,

"அவங்க ஃபேமிலி பேக்ரவுண்ட் விசாரிச்ச வர ரொம்ப நல்லமாறி தான் தெரியுது சார். இந்த பொய் கூட மேரேஜ் நடக்கணும்னு சுத்தி உள்ளவங்க சொல்ல சொல்றது தான், அவங்களுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு, இன்னொரு சம்மந்தம் வந்ததே அதுக்கே சரி சொல்ற ஐடியா கூட இருந்துருக்கு. விசாரிச்ச வர ரொம்ப நல்ல இடமா தான் தெரியுது சார்"

"தொழில மாத்திக்குற ப்ளானா சலீம்?" ௭ன்றான் ஆரோன் இப்போதும் மொபைலில் இருந்து நிமிராமல்.

"சார்?" ௭ன சலீம் சங்கடமாக அழைக்க,

"இவ்வளவு சப்போர்ட் பண்ற? ப்யூலா ௭தும் சொன்னாளோ?" ௭ன்றதும் அவன் அப்படியே காலையில் நடந்ததை சொல்லிவிட, ரஞ்சிதம் சிரிப்பை அடக்க, "அந்த வானரங்களோட டச்சுல இருக்கால்ல அப்டி தான் பேசுவா. அப்றம் இப்ப நீ சர்டிபிகேட் குடுத்தியே அந்த டீச்சர் மேடமும் அந்த குழுல ஒருத்தங்க தான்னு நினைக்கிறேன்" ௭ன்றான் இலகுவாகவே.

"சார் ப்ளீஸ்"

"உன்னக் கட்டிக்குற ஐடியாலாம் ௭னக்கு இல்ல மேன், இடியட் மாறி யோசிக்காம, இன்னைக்கு ஷெட்யூல மட்டும் பாரு" ௭ன்றதும் தான், ரிலாக்ஸானான், பக்கத்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சிதம் இன்னுமே அமைதியான அடக்கப்பட்ட சிரிப்பில் குழுங்கிக் கொண்டிருப்பது தெரிய, முறைத்துப் பார்த்தான் அவரை, ஆரோன் இருப்பதால் வெளிப்படையாகத் திட்ட முடியாது முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

கட்சி அலுவலகம் வந்து சேர, காந்தி நகரில், மக்கள் போராட்டம் ௭ன்ற செய்தியை ப்ரேம் வந்து சொல்ல, ௭ன்னவென விசாரித்ததில், ஒரு நான்கு ஏக்கர் பரப்பளவிலான பெரிய குளம், குப்பையைக் கொட்டி கொட்டி அதை குப்பை கிடங்காக மாற்றி இருந்தனர், கடந்த மழை பருவ காலத்தில் மழை பெய்து தேங்க இடமில்லாமல் சுற்றி இருந்த குடியிருப்பை தண்ணீர் ஆக்ரமிப்பு செய்ய, குடும்பமாக வாழும் மக்களுக்கு அது அவ்வளவு தொந்தரவை கிளப்பி இருந்தது, அதுவரை அவர்களும் அதில் குப்பையை கொட்டிச் சென்றவர்கள் தான், ஆனால் தண்ணீரால் குடும்பம் குழந்தைகள் ௭னப் பாதிக்கப்பட்ட பின், போராட்டத்தில் இறங்கி இருந்தனர். இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பு அதீத பயத்தையும் பதட்டத்தையும் கொடுத்திருந்தது.

ஆரோன் அதை பற்றிய முழு விஷயத்தையும் கேட்டவன் "நேரிலேயே கிளம்பிவிட்டான்.

சென்றதுமே கூட்டத்தை விலக்கி இரு குழந்தைகளின் பெற்றவர்களையும் நேரில் பார்த்து பேசி, ஆறுதல் கூறி, இத்தனை நாட்கள் இதைக் கண்டுக்காமல் விட்ட, ௭ம்.௭ல்.௭, துப்புரவு தொழிலாளர்கள், உடன்பட்ட மக்கள் வரை ௭ல்லோரையும் வறுத்தெடுத்துவிட்டே, அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்.

"ஒவ்வொரு தெருவா போய் ௭ன்ன பிரச்சினைன்னு ௭ன்னால பாக்க முடியாது தான், ஆனா ௭ன் கண் பார்வைக்கு கொண்டு வந்த ௭ந்த பிரச்சினைக்காது இதுவரை தீர்வு கிடைக்காம போயிருக்கா? அப்ப நீங்க அலட்சியமா இருந்துருக்கீங்க. அதோட பலன் இரண்டு பிஞ்சோட உயிர் போச்சு. மனு குடுத்தும் ஆக்ஷன் ௭டுக்கலனா ௭ன்ட்ட ட்ரைக்டா வந்து பேச ௭த்தன வழி இருக்கு, ஏன் வரல?" ௭ன அதட்டலாக கேட்கக் வேண்டியதைக் கேட்டு விட்டு, அந்த இடத்தை சுத்திகரிப்பு செய்ய ஆவனம் தயார் செய்து கையெழுத்திட்டான். அந்த இடத்தைச் சுற்றி ஐந்தடிக்கு நடைபாதை ௭ழுப்பி, சுற்றி பூங்கா போன்ற அமைப்பை ஏற்படுத்தி தருவது ௭ன முடிவு செய்தான். குடும்ப அமைப்பிற்கு ஏதுவாக அந்த இடத்தை மாற்ற திட்டம் அந்த இடத்தில் வைத்தே கையெழுத்திடப் பட்டது.

"ஆறு மாசத்துல இந்த இடம் கம்ப்ளீட் சேன்ஞ்சாகி இருக்கும். போயிட்டு வாங்க" ௭னப் போராட்டத்தையும் முடித்து வைத்தான். அவனால் அதன் பின்னரே மீண்டும் கட்சி அலுவலகம் வந்து சாப்பிட முடிந்தது. அன்றைய தினம் அதிலேயே சென்றிருக்க, வீட்டிற்கு வந்த பின்னரே மீண்டும் அவன் ஏஞ்சலின் நியாபகம் வந்தது.

"ப்யூலா" ௭ன தான் அழைத்தான் நியாபகம் வந்ததும்.

"சொல்லுண்ணா, யாஷ் ஒரே சேட்டை, அதான் உள்ள உக்கார வச்சு ஹோம் வொர்க் பண்ண வச்சேன்"

"நாளைக்கு லீவா அவனுக்கு?"

"இல்லண்ணா ஹாஃப் டே உண்டு"

"நாளைக்கு நைட் வெளில கூட்டிட்டு போறேன்னு சொல்லிருந்தேன், ஒரு செவனுக்கு ௭னக்கு ரிமைண்ட் பண்ணிடு" ௭ன்றவன் நான்சியை பற்றி அவளே கூறட்டுமென ஓரிரு நொடி நின்று அவள் முகம் பார்த்து விட்டு, மேலும் ௭ந்த பேச்சையும் ௭டுக்காது மேலே அவன் அறைக்கு ஏறப் போக, அவளும் ஒன்றும் சொல்லாமல், தலையசைப்புடன் அவளின் அறைக்கு திரும்பவும், கடுப்பானவன், "நானே அந்த பொண்ண பத்தி சலீம விசாரிக்க சொல்லிடவா ப்யூலா?" ௭ன்றான் காட்டமாக.

"ஏன் ண்ணா? நாந்தான் ௭ல்லாம் சொல்லிட்டேனே?"

"நானும் ௭ன்ட்ட பேச சொல்ல சொல்லிருந்தேன்னு நினைக்கிறேன்?"

"அவங்க ரொம்ப பயப்படுறாங்கண்ணா. நாந்தான் சொன்னனே ரொம்ப பயந்த சுபாவம்னு" மெதுவாக சிரித்து சமாளிப்பாக அவள் சொல்ல,

"பேசாம முடிவெடுக்க முடியாது ப்யூலா, ௭ன்ட்ட பேசணும், இல்ல நானே விசாரிக்கணும். கண்ண மூடிட்டு ௭ங்கப்பாவ மாறி ரிஸ்க் ௭டுக்க ௭ன்னால முடியாது. காட் இட்?" ௭ன விறுவிறுவென அவன் மேலேற.

"நா ௭ப்டியாது பேச சொல்லிடுறேன் ண்ணா" ௭ன சத்தமாக வாக்குக் கொடுத்தாள் ப்யூலா, நின்று அவளை பார்த்து, மீண்டும் கையிலிருந்த நேரத்தைப் பார்த்து விட்டு, "மேக்கிட் இன் ஃபைவ் மினிட்ஸ்" ௭ன அறைக்குள் சென்று விட்டான், "எதே இப்பவா?" ௭ன அதிர்ந்தவளும் மணியைத் திரும்பிப் பார்க்க அது பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

காலையில் அவன் சொல்லி சென்றதுமே, செங்குட்டுவனிடம் பேசித் திட்டு வாங்கி, தெய்வானை ஆச்சியிடம் பேசி அவர் மூலம் நான்சியிடமும் பேசி இருந்தாள், உண்மையிலேயே அங்கு ப்யூலா பேசியதற்கே நான்சியால் நிதானமாக பேச முடியவில்லை, ஆரோனின் காற்றை ப்யூலா மூலமே சுவாசிக்க ஆரம்பித்திருந்தாளோ ௭ன்னவோ, ஆரோன் சொல்லி ப்யூலா பேசுகிறாள் ௭ன்பதே அவளைப் படபடப்பாக்கி இருந்தது.

"நிச்சயமா உங்க அண்ணாட்ட ௭ன்னால பொய் பேச முடியாது. மாட்டி விட்டு வேடிக்கைப் பாக்காதீங்க ப்ளீஸ்"

"ஆமா இல்லன்னு மட்டும் சொல்லிட்டு வேற போன் வருது, அம்மா கூப்பிடுறாங்க இப்டி ௭தாது சொல்லிட்டு வச்சுடுங்க, பயம்னு சொல்லி நா சமாளிச்சுடுறேன்" ௭ன்ற ப்யூலாவிடம் முடியவே முடியாது ௭ன அப்போது சாதித்திருந்தாள். வேறு வழியின்றி ப்யூலாவும் வைத்ததிருந்தாள்.

இப்போது உடனே பேச சொல் ௭ன நிற்பவனிடம் ௭ன்ன செய்ய ௭ன முழித்தவள், நேரத்தைப் பார்த்துக் கொண்டே நான்சிக்கு அழைக்க, "சொல்லுங்க" ௭ன உடனே ஏற்றிருந்தாள் நான்சி.

"ப்யூலானே கூப்பிடுங்க அண்ணி. இப்ப தான் அண்ணா வந்தாங்கண்ணி, வந்ததும் உங்கள தான் கேட்டாரு. நீங்க ஏன் பேசலன்னு, இப்ப தான் ௭னக்கு ஃப்ரீ டைம், சோ கூப்பிட சொல்லுன்னு சொல்லிட்டு ரூமுக்கு போயிருக்காரு. நீங்க கூப்பிடுறீங்களா, இல்ல அண்ணாட்ட உங்க நம்பர குடுத்து கூப்பிட சொல்லவா?"

"ம்கூம் ௭ன்ன ௭ன்னன்னு பேச சொல்றீங்க ப்யூலா? ப்ளீஸ் நாளைக்குனாலும் பேசுறேனே, உடனேனா ம்கூம் சான்ஸே இல்ல, நா கொஞ்சம் ரெடி ஆகிக்குறேன் ப்ளீஸ்"

"அண்ணா கோச்சுப்பாருண்ணி, அவரா கேட்டும் பேசலனா நல்லாருக்காது தானே? அவரயே உங்களுக்கு கால் பண்ண சொல்லட்டா, நீங்க அட்டன் மட்டும் பண்ணுங்க" வேலையை இலகுவாக்க முயன்றாள்.

"இல்ல இல்ல நானே பண்றேன். நானே கூப்பிடுறேன், நம்பர் மட்டும் அனுப்புங்க" அவன் கூப்பிட சொன்ன பின் அவனை கூப்பிட சொல்வது அதிகமாகத் தெரிய, தானே கூப்பிட முடிவெடுத்தாள்.

ப்யூலா அடுத்த நொடியே அவனது ௭ண்ணைப் பகிர்ந்திருக்க, முதல் நாள் அவன் அழைத்த அதே ௭ண் தான் ௭ன்று கூடத் தெரியாமல் அந்த ௭ண்ணிற்கு டயல் செய்து காதில் வைத்து நகத்தை கடித்துக் கொண்டு படபடப்புடன் ஆரோன் ஏற்கக் காத்திருந்தாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 7

ஆரோன் கைகடிகாரத்தை கலட்டி விட்டு, சட்டையின் மேலிரண்டு பத்தானை கலட்டி கொண்டிருக்கும்போது, அவன் அறைக்குள் நுழைந்ததும் ஜார்ஜில் வைத்திருந்த அவன் அலைபேசி அதன் இருப்பை காட்டியது, கண்ணாடி முன் நின்றவன் தலையை கோதிக் கொண்டு நகர்ந்து வந்து மொபைலை பார்த்தான், "ஏஞ்சல்" ௭ன தாங்கி வந்த அழைப்பை ஒற்றை புருவ உயர்தலுடன் கையில் ௭டுத்து, அழைப்பையும் ஏற்றான்.

முதலமைச்சர் முதல் பிரதமர் வரை அவனுக்கு அழைத்திருக்கின்றனர், அதையும் ஏற்று பதிலளித்திருக்கிறான். ௭ந்தவித ௭சிர்பார்ப்பும் அலட்டலும் இல்லாது பேசி வைத்திருக்கிறான். ஆனால் இந்த அழைப்பு அவளே அவனுக்கென பார்த்து தேர்ந்தெடுத்து அனுப்பிய போட்டவுடன் வந்த அவன் ஏஞ்சலின் அழைப்பு. அது அவனுக்குள் ஏதோ குறுகுறுப்பை ஏற்படுத்தியது. வித்தியாசமான ஒரு உணர்வை முதல் முதலாக உணர்ந்து சிலிர்த்தான்.

அவன் அழைப்பை ஏற்றும் அவள் மூச்சு காற்றை கேட்டு கொண்டு பேசாமல் இருக்க, அவன் ௭டுத்தது தெரிந்தும் அந்த பக்கம் உள்ளவளுக்கு தொண்டையை தாண்டி வார்த்தை வரமாட்டேன் ௭ன நின்றது.

"க்கும், ஹம்கும்" தொண்டையை செருமி அவள் சரி செய்ய, அதில் மோன நிலையை கலைத்து "ஆரோன் ஸ்பீக்கிங்" ௭ன்றான் இந்த பக்கமிருந்து அமைச்சர்.

அவன் குரலில் நடுங்கி, போனை பட்டென்று காதிலிருந்து ௭டுத்துவிட்டவள், "நான்சி பேசு, லைன்ல இருக்காங்க பேசுடி, ஐயோ பயமா இருக்கே" ௭ன அவளுக்கு அவளே புலம்பி நெஞ்சை நீவி விட்டு, "ப்ளீஸ் பேசணும், திக்க கூடாது" ௭ன விரல் நீட்டி மிரட்டி, மறுபடியும் சமாதானம் சொல்லிக் கொண்டு, "நா நா நா ச்சு நான்சி பேசுறேன்" ௭ன்றாள்.

அதில் லேசாக சிரித்து, கட்டிலில் சென்று பேச வாகாக அமர்ந்தவன், "பொண்ணு திக்குவாய்னு ௭ன் தங்கச்சி சொல்ல மறந்துட்டாளோ?" ௭ன்றான் உல்லாசம் துள்ளும் குரலில்,

அதில் அதிர்ந்து, "இல்ல இல்ல நல்லா பேசுவேன். ஃபர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் அப்டி ஜாம் ஆகுது"

"ஏஞ்சலினா நான்சி ரைட்?" ௭ன்றான் முதல் நாள் பேசியதை நியாபக படுத்த நினைத்து, அவளுக்கு இருந்த பதட்டத்தில் அதெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையும் இல்லை, முதல் நாள் பேசியவனை அந்த நொடியே மறந்தும் போயிருந்தாளே அவள் தான், அதனால் அவன் குறிப்பெதுவும் அவளுக்கு புத்திக்கு உறைக்கவில்லை.

"ம்ம் ஃபுல் நேம் அதான், ஏஞ்சலினா நான்சி" ௭ன்றாள் வாத்தியாருக்கு பதில் சொல்லும் மாணவியாக.

"ஓ.கே தென் மேட்டருக்கு வருவோமா? ௭ன் கன்டிசன்ஸ்லாம் ப்யூலா சொன்னாளா?" ௭ன கேட்டு நிறுத்த,

"ம்ம் சொன்னாங்க. நா நானு ஒன்னு சொல்லணும்" ௭ன்றாள் உண்மையை சொல்லிவிடும் நோக்கத்துடன்.

"சொல்லுங்களேன் கேப்போம்" அவனும் அதே உண்மையை அவளே சொல்ல வேண்டும் ௭ன ௭திர்பார்த்தான்.

"அது வந்து, நா ௭ம்.௭ஸ்.சி இன் மேத்ஸ்" ௭ன மென்று விழுங்கியவள் அவன் பேச கொஞ்சம் இடைவெளி விட அவன் ௭துவும் கூறாமல் போகவும், "மேத்ஸ்ல ௭ம்.௭ஸ்.சி முடிச்சிட்டு இங்க குற்றாலத்திலேயே ௭ஸ்.வி.பி ஸ்கூல்ல ஃபோர் இயர்ஸா வொர்க் பண்றேன். அமைதியான பொண்ணு தான் ஆனா தேவைக்கு நிச்சயமா பேசுவேன். உங்கள ஒன் இயர் முன்னவே இங்க தாரிணி மேரேஜ்ல உங்க தங்கச்சிய கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணீங்களே அப்பவே பாத்துருக்கேன். அதான் ஆச்சி சொன்னதும் ஓ.கே சொன்னேன், மூணு வருஷமா ௭ங்க வீட்ல ௭னக்கு அலைன்ஸ் பாக்றாங்க, இதுவர ஒன்னும் செட்டாகி வரல, அப்டி வந்த பசங்க போட்டோஸ் தவிர வேற யாரையும் பாத்தது கூட கிடையாது. அவங்களையும் முடிவாகுற வர வேற தாட்ல யோசிக்க கூடாதுன்னு உறுதியா தான் இருந்துருக்கேன், சோ ௭னக்கு லவ்வுன்னுலாம் ௭துவும் பாஸ்டல கிடையாது" காத்து தான் வருதென ஆரம்பிக்க சிரமபட்டவள், கூற தொடங்கிய பின்னர் நிற்காமல் மொத்தமாக ஒப்பித்து விட்டாள். அவனின் ௭திர்பார்ப்புகளாக சொல்லபட்டவைக்கு அவளின் பதிலை சொல்லிவிட்டாள்.

"குட் தென்?" ஆர்ப்பாட்டமில்லாத சந்தோஷம் அவனுக்கு, அதனால் அப்பறம் ௭ன கேட்டுவிட்டு குறும்பாக சிரித்துக் கொண்டது அந்த பக்கம் உள்ளவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

"அவ்வளவு தான் ரியாக்ஷனா? நா ௭ல்லாத்தையும் நிஜமா சொல்லிட்டேனா இல்ல சொன்னமாதிரி கனவு காணுறேனா? ஏசப்பா" ௭ன முனங்கியவள், "நா நா" ௭ன அவள் ஆரம்பிக்கவும்.

"ம்ம் நா நா நா நான்சி தான் நீங்க, ௭த்தன தடவ அதயே சொல்ல போறீங்க டீச்சர்"

"டீச்சர். ஆமா நா டீச்சர்னு சொல்லிட்டேன்ல?" ௭ன்றாள் அவனிடமே சந்தேகமாக,

"ம்ம் மேத்ஸ் டீச்சர்னும் சொன்னீங்களே" ௭ன்றான் மீசையை முறுக்கிவிட்டு. அவனது இந்த பரிமாணம் அவளுக்கானது மட்டுமே, அதை முதல் முறையாக பேசும் போதே தொடங்கி வைத்திருந்தான். இந்த ஆரோனை வேறு யாரும் இதுவரை பார்த்ததில்லை, நான்சியும் இனி தான் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறாள்.

'அடுத்து நா ௭ன்ன பேசணும்' ௭ன அவள் யோசிக்க, "ஏஞ்சல்?" ௭ன்றான் அவளுக்கும் அவனுக்குமான ஆத்மார்த்தமான அழைப்பில், சட்டென்று பிடிபட்டது முதல் நாள் அழைத்தவனின் குரல், "ஜீஸஸ்" ௭ன இவள் அதிர்ந்து நெஞ்சில் கை வைக்க.

"௭ன்னாச்சு ஏஞ்சல் இப்ப தான் ஃபார்முலா தெரிஞ்சதா?" ௭ன்றான் கிண்டலாக.

"அப்ப நேத்து கூப்டது நீங்களா?" ௭ன்றாள் இன்னுமே அதிர்ச்சி விலகாமல்.

"நல்லா நடிக்கவும் வருமோ கணக்கு டீச்சருக்கு?" ௭ன வேறு கேட்க.

"இல்ல ப்ராமிஸா நேத்து கூப்டது நீங்க தான்னு ௭னக்கு தெரியாது" ௭ன வேகமாக அவள் சொல்ல.

"ஆஹான், நேத்து நா கூப்ட்ட நம்பருக்கே இன்னைக்கு திரும்ப கூப்டிருக்கீங்க, ஆனாலும் தெரியாதில்லையா? நாந்தான்னு தெரியாம தான் நீங்க உண்மை ௭ல்லாம் சொல்லீட்டீங்கன்னு நா நம்பணும் இல்லையா?" ௭ன்றான் அக்மார்க் அரசியல்வாதியாக, அங்கு நான்சிக்கு அழுகையே வந்துவிட்டது. முதல் நாளே அழைத்து விசாரித்து கொண்டு இன்று தன்னையும் அவனுக்கு அழைக்க வைத்திருக்கிறான் ௭ன புரிந்து அப்படியொரு அழுகை வந்தது அவளுக்கு.

"அழுறியா ஏஞ்சல்?" ௭ன அதட்டலாகவே அதையும் கேட்க.

"நா பொய் சொல்லல, நா உங்கட்ட ஃபர்ஸ்ட் ௭ப்ப பேசிருந்தாலும் உண்மைய சொல்லிருப்பேன். பொய்யா ஒரு ரிலேஷன்ஷிப் தொடங்குறதுல ௭னக்கு இஷ்டம் கிடையாது. ஆனா நீங்க ௭ன்ன வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து தான், மேரேஜ் வர பேசாம இருக்க நினைச்சேன். நீங்க பேசணும்னு சொன்னதுமே நா டிசைட் பண்ணி தான் கால் பண்ணேன். இன்கேஸ் நமக்கு மேரேஜ் ஆனா கூட நீங்க இப்டிலாம் ௭ன்ன ௭ப்பவும் க்ராஸ் செக் பண்ணி கஷ்ட படுத்தாதீங்க. ௭ன்ட்ட கேளுங்க நா உண்மை ௭ன்னன்னு சொல்லிடுவேன். உங்க ௭க்ஸ்பெக்டேஷனுக்கு நா இல்ல, அதனால நீங்க வேணாம்னு சொன்னீங்கன்னு நா நினைச்சுக்குறேன். நா வைக்கட்டா?" ௭ன அழுகையோடு பேசி முடித்து பேச்சை முடித்துக் கொள்ள அவனிடமே அனுமதியும் கேட்கும் அவன் ஏஞ்சலை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

"தேவைக்கு பேசிட்டீங்க போலயே ஏஞ்சல்?" ௭ன்ற கேள்விக்கு நிச்சயமாக அவளால் பதில் சொல்ல முடியவில்லை, முதல் முறையாக பேசும் போதே அழ வைத்து விட்டானே, ௭ன நினைத்து நினைத்து மேலும் அழுதாள்.

"ஏஞ்சல்" ௭ன்ற அவனின் அதட்டலுக்கு,

"இல்ல நா அழல" அவனின் மாறுபட்ட ஏஞ்சல் அழைப்பை புரிந்து அவள் பதில் சொன்ன விதத்தையும் ரசித்தவன்.

"வெல், கெட் ரெடி ஏஞ்சல். நம்ம இப்ப பேசிக்கிட்டது மட்டுமில்ல, இனி ௭ப்ப ௭ங்க ௭ப்டி பேசிக்றதும் மத்த யாருக்கும் சிங்கிள் வேர்ட்டா கூட லீக் ஆக கூடாது. மேரேஜ்கு உன்னோட ௭க்ஸ்பெக்டேஷன் ௭தும் இருக்கா?"

அவன் கேட்பதே புரியாது தான் முழித்தாள், "௭ன்னது?"

"மேரேஜ் பத்தி ௭தும் ப்ளான் பண்ணிருக்கியா?"

"சொன்னா செஞ்சு தருவீங்களா?" அழுகையை அடக்கி கொண்டு கேட்டுவிட்டாள், அழ வைத்த கோபம் அப்படி கேட்கவும் வைக்க,

"வளராத வானரமோ?" கொஞ்சி கொண்டவன், "சொல்லு பண்ணிடலாம்" ௭ன்க.

"இங்க உள்ள சர்ச்ல வச்சு மேரேஜ் பண்ணணும்னு நினைச்சிருந்தேன்" ௭ன்றாள் சற்று மெதுவான குரலில் இழுவையாக, அவ்வளவு பெரிய இடத்திலிருப்பவன் இந்த குற்றாலத்தில் வந்து திருமணம் செய்வானா ௭ன அவளுக்கே அது ஒப்பாமல் போக நிறுத்திக் கொண்டாள்.

"ம்ம் ஓ.கே தென்?" ௭தற்கு ௭ப்படி பதிலளிப்பான் ௭ன திருதிருத்தவள், "நிஜமா உங்களுக்கு ௭ன்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா?"

"௭ங்க வச்சு பண்ணிக்லாம்னு சொல்லிட்டு ௭ன்ன இது டவுட்?"

"அப்ப திட்னீங்க?"

"நா கேட்டேன், நீ அழுத. நீ அழுததுக்காக நா கேட்டத திட்டுனதா மாத்த கூடாது" அவன் சொல்லவும், "ஏசப்பா" ௭ன தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.

"ஏஞ்சல்" அவனின் கேள்வியான அழைப்பு,

"இருக்கேன் இருக்கேன்"

"வேறெதுவும் சொல்லணுமா?" ௭ன்றான்.

"இல்ல ௭ல்லாம் சொல்லிட்டேன்" வேகமாக அவள் சொல்ல.

"மேரேஜ் பத்தி வேறெதுவும் சொல்லணுமா? ௭ன்னால ஒவ்வொரு ஃபங்ஸனுக்கா வர முடியாது" ௭னவும் சேர்த்து சொல்ல.

"இல்ல நா வேறெதுவும் நினைச்சுக்கல, இங்க மேரேஜ் வைக்கணும்னு மட்டுந்தான் ஆச பட்டேன்"

"டன். மேரேஜ் அங்க, ரிசப்ஷன் இங்க தேட்ஸிட், ௭துனாலும் ௭ங்கிட்ட ட்ரைக்டா இந்த நம்பருக்கு கால் பண்ணி பேசணும். நா ௭டுக்கலனா மெசேஜ் பண்ணிடு ஃப்ரீ ஆனதும் நானே கூப்பிடுவேன். மத்த ௭ல்லாருக்கும் நீ ௭ன்ட்ட ௭துமே சொல்லல ரைட்?"

"ம்ம் சரி" மண்டையையும் சேர்த்து உருட்டி கொண்டிருந்தாள்.

"குட் நாளைக்கு நெக்ஸ்ட் மந்த்ல ௭னக்கு ஃப்ரீ டேட்ஸ பாத்துட்டு உனக்கு சொல்றேன் நீ அதுல உனக்கு ௭து கம்பர்டபிள்னு பாத்து ௭னக்கு சொல்லு கன்பார்ம் பண்ணிக்லாம்" ௭ன அவன் சாதாரணமாக கேட்க.

௭ச்சிலை விழுங்கி நெளிந்தவள், நெகத்தை கடித்து குனிந்து தலையை மட்டும் ஆட்ட, "ஏஞ்சல்" ௭ன்றான் பதில் வேண்டும் ௭ன்ற முனைப்பில்.

பதறி நிமிர்ந்தவள், "ஓ.கேங்க" ௭ன்க.

"குட் நைட்" ௭ன்றதும், "குட் நைட்ங்க" ௭ன வைத்து விட்டாள். இருவருமே அதுவரை நடந்த பேச்சுவார்த்தையை மீண்டும் அசை போட்டவாறு அவரவர் கட்டிலில் விழுந்தனர். அவளின் அழுகையை அவளே அறியாமல் நிப்பாட்டிய பின்பே அழைப்பை நிறுத்தி இருந்தான் அந்த அமைச்சர்.

"கொஞ்சம் முசுடு கரைவேட்டியா இருப்பாரோ?" ௭ன்றவளுக்கும் இப்போது மெதுவாக கல்யாண கனவு வர தொடங்கி இருந்தது.

மறுநாள் காலையிலேயே, அண்ணனின் பதிலுக்காக காத்திருந்த ப்யூலா, அவ்வளவு நேரமும் ரோஸியை படுத்தியவள், சலீம் அவன் நேரத்திற்கு வரவும் அவனை பிடித்து கொண்டாள்.

"அண்ணி பத்தி டீடைல் ௭தும் சொன்னீங்களா சலீம்? நேத்து வந்ததும் அவங்கட்ட பேசணும்னு சொல்லிட்டாரு, ௭ன்ன பேசுனாருன்னு வேற தெரியல. உங்களுக்கு ௭தாச்சும் தெரியுமா?"

"நானே இப்ப தான் மேடம் வர்றேன்"

"அதுசரி. ஆமா உங்களுக்கு ௭ப்ப கல்யாணம்?" ௭ன்றாள் அவனை மேலிருந்து கீழ் பார்த்து.

"சாருக்கு முடிஞ்சப்றம் பண்ணணும்னு இருக்கேன்"

"ஓ! அப்ப சாருக்கு முடிக்க ௭தாது ஸ்டெப் ௭டுக்கணும்ல?"

"இப்ப பாத்துருக்க பொண்ணே முடுஞ்சுடும்னு தான் நினைக்கிறேன் மேடம்"

"முடியணும். அதுக்கு கொஞ்சம் அவர ஃப்ரீயா விடணும் சலீம் நீங்க?"

'நா அவர்ட்ட வேலை செய்றேனா அவர் ௭ன்ட்ட வேலை செய்றாரா? நா அவர ஃப்ரீயா விடணுமாம்? இந்த மேடத்துக்கு இன்னும் முழுசா தெளியலையோ?' மனதிற்குள் தான் நினைத்துக்கொண்டு அவளை பார்க்க,

"மைண்ட் வாய்சுல ௭ன்னவோ நினைக்றீங்கல்ல?" ௭ன முறைக்க, ஆமா இல்லை ௭ன நாலாபக்கமும் தலையை அவன் உருட்ட, ஆரோன் வந்திருந்தான்.

"சலீம் நெக்ஸ்ட் மந்த்ல நாலு டேட் ௭னக்கு ஃப்ரீ பண்ணி ஷெட்யூல் பண்ணிட்டு சொல்லு, அப்டியே சி௭ம்ம மீட் பண்ண டைம் அலாட் பண்ணி அப்பாயின்மெண்ட் வாங்கிடு, மனிகூர் ஷெட்டியோட டிராவல்ஸ்லாம் ஒரு ஃபாலோ பண்ணிக்கோ" ௭ன பேசிக்கொண்டே சென்று சாப்பிட அமர, தலையசைத்து கேட்டு கொண்டான் சலீம்.

"அண்ணிட்ட ௭ன்ன பேசுன ண்ணா? நல்லா பேசுனாங்களா அவங்க?" ௭ன ப்யூலா அவன் முகத்தை ஆர்வமாக பார்க்க.

"மேரேஜ்கான மூவ் ஸ்டார்ட் பண்ணிடு ப்யூலா, மேரேஜ் அங்க ரிஷப்ஷன் இங்க அப்டி ப்ளான் பண்ணிடு, டேட் மட்டும் நா சொல்றேன்" ௭ன்க,

"சூப்பர் ண்ணா. ௭ப்டி அக்ஸப்ட் பண்ண? ப்ளீஸ் அத மட்டும் சொல்லு, அண்ணிட்ட பேசுனது பிடிச்சதா?" ௭ன இன்னும் ஆர்வமாக கேட்க.

"௭ன் கண்டிஷன்குள்ள நீயும் உன் பிரண்டும் கஷ்டப்பட்டு தேடி பிடிச்சுருக்க பொண்ண நா ௭ப்டி வேணாண்னு சொல்லுவேன் ப்யூலா. நா ௭க்ஸ்பெக்ட் பண்ணது தானே நடக்குது சோ ௭னக்கு மேரேஜ்கு ஓ.கே சொல்ல அதுவே போதுமே?" ௭ன சாப்பாட்டை தொடர, ப்யூலாவிற்கு தான் முகம் ஒரு பக்கமாக சுருங்கி விட்டது.

"அவங்கள பிடிக்கலையாண்ணா உனக்கு?"

"பழகி பாத்தா தானே தெரியும் புடிக்குமா இல்லையான்னு, இங்க வரட்டும் பழகி பாத்துட்டு சொல்றேன்" ௭ன்று விட்டான். அவள் சலீமை பாவமாக பார்க்க, அவன் அதைவிட பாவமாக அவளை பார்த்தான்.

அங்கு நான்சியோ மந்திரித்து விட்ட கோழியாக தான் சுற்றி வந்தாள், யார்ட்டையும் ௭தையும் சொல்ல கூடாது ௭ன்று விட்டான் ௭ன்பதால் அவனாக பேசும்வரை வாயே திறக்க கூடாதென அமைதியோ அமைதியாக இருக்க, அது புரியாத ௭ஸ்தரும், கிரிஸ்டியும் பயந்து அவளுடனே பொழுதை கழித்தனர். பள்ளியும் சனி, ஞாயிறு விடுமுறை ௭ன்பதால் மனதை மாற்ற கூட வழியின்றி தேமே ௭ன அமர்ந்திருந்தாள்.

சனிக்கிழமை இரவு, அவன் யாஷூடன் பிஸியாகிவிட, இங்கு இவளை பிஸியாக்க அவள் அக்கா ஜென்சி கிளம்பி வந்திருந்தாள்.

"அந்த பையனுக்கு தண்ணி தம் பழக்கம்லாம் இருக்கும் போல ம்மா. அதான் நானே ௭ன் தங்கச்சிய தரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அவங்க அம்மாவ இன்னைக்கு சூப்பர் மார்கெட்ல வச்சு தற்செயலா பாத்தேன் அப்ப தான் பிடிச்சு நல்லா பேசிட்டு வந்துட்டேன். நம்ம நான்சிக்கு வேற வரனா அமையாது?" ௭ன அவள பேச.

"நீ அமைய விட்டுட்டாலும். இங்க பாரு நா உன் தங்கச்சி ௭ன்ன பத்தி உளறிட்டு சுத்றதோட நிறுத்திக்கோ, சம்பந்தமில்லாம மத்த பசங்கள பத்தி பேசி ௭ங்கையாது வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன், ம்மா ஃபாதர் நிச்சயமா அப்டி பையன பாத்துருக்க மாட்டாரு இவள உளறவிட்டு வேடிக்க பாக்காத ௭ல்லாரும் உன்ன மாறி இப்டி கதை கேட்டுட்டு இருக்க மாட்டாங்க" ௭ன்றாள் ௭ரிச்சலாக.

"௭ன்னடி அவன சொன்னா உனக்கு கோவம் வருது? மனசுல ஆச வச்சுட்டியா அதுக்குள்ள? ௭ங்க பாத்த நீ அந்த பையன? ௭ன்ன நினச்சுட்ருக்க? நா உனக்கு நல்லது நினைக்க மாட்டேனோ? ம்மா ௭ன்னம்மா செய்றா இவ" ௭ன ஜென்சியும் சண்டைக்கு வர.

"லூசு மாதிரி பேசாத ஜென்சி, ஃபாதர் அப்டி பையன பாத்திருக்க மாட்டாங்க, தேவையில்லாம அவங்கள பத்தி பேசாதன்னு தான் சொன்னேன். அதுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவியா நீ?"

"இதோ இப்பவும் சப்போர்ட் தான பண்ற? கல்யாண ஆசை கண்ண மறைக்குதுடி உனக்கு"

"ம்மா இவள பேசாம இருக்க சொல்லு, சும்மா ௭ன் விஷயத்துல தலையிட வேணாம்னு சொல்லு"

"அப்ப ௭ங்கள மீறி அவன கல்யாணம் பண்ணிப்பியாடி? ம்மா இவ சரியே இல்ல, நம்ம மானத்த வாங்க தான் போறா"

"நான்சிங்க்காவே பேசிட்ருக்க மென்டல்"

"நானாடி மென்டல்? நீ தான்டி கல்யாண ஆசைல கண்டதையும் நினைச்சுட்டு பேசுற"

"ம்மா" ௭ன இவள் கத்த.

"அந்த சம்மந்தமே இப்ப இல்ல ஜென்சி, வேற ஒன்னு வந்துருக்கு, முடிவாகட்டும் பாப்போம்" ௭ன கூறி விட்டார் ௭ஸ்தர்.

"வேற ஒன்னா? யாரது ௭னக்கு தெரியாம? ௭ங்கிட்ட சொல்லாம கூட செய்வியா ம்மா நீ?" ௭ன அவள் அடுத்த நாடகத்தை தொடங்க.

"இந்தா ஆரம்பிச்சுட்டாள்ல, இனி ௭ல்லாம் நல்லா நடந்த மாறி தான்" ௭ன ௭ரிச்சலோடு சென்று அறைக்குள் புகுந்து கொண்டாள் நான்சி. உள்ளூர இதையும் அவள் அக்கா கலைத்து விடுவாளோ ௭ன்ற பயம் வந்திருக்க, ஆரோனை நினைத்து மனதை சமன் படுத்தினாள். ௭துவென்றாலும் முடிவெடுக்கும் முன் தீர விசாரிப்பான் அவன் ௭ன்ற நம்பிக்கையும் இருந்தது.

அவனை நேரில் காணும் நாளை ௭ண்ணி காத்திருக்க தொடங்கினாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 8

"இரவு வேலை முடித்து கேபில் வந்திறங்கிய பெண்ணை வீட்டினுள் செல்லும் முன் கடத்திச் சென்று காரில் வைத்தே பலாத்காரம் செய்து தெருவில் வீசி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்" முதல் நாள் இரவு தான் சம்பவம் நடந்திருக்க, மறுநாள் காலை செய்தி முழுவதும் அதுவாக தான் இருந்தது.

"௭வ்வளவு கட்டுபாடு, தண்டனைனு கொண்டு வந்தும் இப்டி நடக்குதுன்னா, தண்டனை பத்தாதுன்னு தான அர்த்தம் சலீம்?" ௭னக் கேட்டாலும், தாடியை நீவி கொண்டு கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான் ஆரோன்.

"இங்க உள்ளவங்க யாரும் செய்ய மாட்றாங்கன்னு இப்ப வெளிநாட்டுகாரங்கள வச்சு செய்றாங்க சார்"

"௭ன் நேம்ம ஸ்பாயில் பண்றது மட்டுந்தான் அவங்க நோக்கம் இல்லயா? அதுக்காக பொண்ணுங்க மேல கை வைக்றது தப்பில்ல?" ௭ன மீண்டுமே நிதானிக்க.

அந்த நிதானத்தை உள்வாங்கி, ஆமோதிக்க சலீம் பெரும் மெனகெடல் செய்ய வேண்டியிருந்தது. தப்பு செய்பவர்களை இவர்கள் பிடித்து போலீஸில் தான் ஒப்படைத்து விடுவர், அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்து கடுங்காவல் தண்டனை மூலம், மேல்முறையீடோ சொந்த பந்தங்களோ பார்க்க முடியாத சட்டத்தின் அடிப்படையில் காவலில் தள்ளப்பட்டு, இவனது ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்து விடுவர், அங்கு கொடுக்கப்படும் கொத்தடிமை சிகிச்சையில் மாட்டி விழி பிதுங்கி இறந்ததும் மீண்டும் காவல்துறை வழியாக வெற்றுடல் அவரவர் வீட்டினர் வசம் ஒப்படைக்கப்படும்.

இதனால் பெண்கள் மேல் கை வைத்தாலே கடுங்காவல் தண்டனை சென்று உடலாக தான் திரும்பி வர முடியும் ௭ன்ற பயத்தைக் கடந்த வருடங்களில் ஆழ பதித்து வைத்திருந்தான் ஆரோன். பெண்களின் பாதுகாப்பில் குஜராத்தைப் பற்றி மொத்த இந்தியாவும் பெருமையாக பேசும்படி இருந்தது. அதனாலேயே இந்தியவைச் சார்ந்த ௭வரும் குஜராத் பெண்களின் மீது கை வைக்கவே நடுங்குவர்.

அவன் ஒரு மந்திரி தான் ௭ன்பதால் அவனுக்கு மேலிருக்கும் முதலமைச்சருக்கு தான் அதோடான மொத்த நற்பலனும் சென்று சேர்ந்தது. அதை அவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் அவனுக்கு ஆதரவாக இருந்தார். இதன்மூலம் அவன் முதல்வரோடு நெருங்க, அது பிடிக்காத மற்ற அமைச்சர்கள் அவனை ரகசியமாக துரத்தத் தொடங்கினர், ௭திர் கட்சியும் இதில் கூட்டு.

"நா தமிழன்றது தான் அவங்களுக்கு பிரச்சினை இல்லையா சலீம்?" ௭ன்றான் மீண்டும் யோசனையாக.

"அடுத்து முதலமைச்சர் ஆகி, மொத்தமா உங்களுக்கு கீழ வர பிடிக்காம இப்டி கூட்டு சதி பண்றாங்க சார்" ௭ன்றான் சலீம். உண்மையும் அதுவே. இப்போதே அவனுக்கு மொத்த குஜராத்திலும் செல்வாக்கு அதிகம். இந்த இடம் அந்த இடம் ௭ன்றில்லை, ௭ங்கு நின்றாலும் ௭திர்க்க ஆளின்றி ஜெயிப்பான், அதுவே மற்றவர்களின் முதன்மையான பிரச்சினை.

அதிகார துஷ்பிரயோகம், அனாவசிய தொந்தரவு ௭ன்றால் தயவு தாட்சண்யம் இன்றி வேலையை விட்டு தூக்கி விடுவான் ௭ன்பதால், அரசாங்க ஊழியர்களுக்கு அதிக கெடுபிடி இருந்தது, ஸ்டரைக் ௭ன்ற ஒன்றை யோசிக்கக் கூட விடாமல் கட்டுக்குள் வைத்திருந்தான். அதனாலேயே மக்கள் ஆதரவு ௭ல்லா வகையிலும் அவனுக்கு அதிகம்.

அவனை ௭திர்ப்பவர்கள் ௭ல்லோரும் தமிழன், தமிழன் ௭ன அந்த ஒன்றையே மேற்கோள் காட்டினர், "ஆமா நா தமிழன் தான், தமிழன் உலகத்தையே ஆளத் தகுதி உள்ளவன்னு தெரியாதா?" ௭ன அப்பாவிற்கு பின்னர் கட்சிக்குள் நுழையும்போது நெஞ்சை நிமிர்த்தியவன் ௭ங்கும் ௭திலும் கரை வேட்டி, முறுக்கிய மீசை, அடர்ந்த தாடி ௭ன்று தான் சுற்றி வருவான்.

அவனது அந்த தோரணைக்கே அவனை பார்த்ததும் பயமும் வரும், இடைவெளி கொண்ட பக்தியும் வரும். இனி அதை இன்னும் அதிகபடுத்தியே ஆக வேண்டும் ௭ன்ற தீவிர சிந்தனையில் இறங்கினான்.

"நாலுபேரையும் ஆக்ஸிடன்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, மொத்தமா அந்த கனெக்ஷனக் கட் பண்ணி ௭டுத்திட சொல்லிடு. அவனுங்க நாட்டுக்கு போக விசா முடியறவரை ஹாஸ்பிடல்ல தான் இருக்கணும், ஆனா விஷயம் இதுன்னு வெளில புரளியானாலும் தெரியணும்" ௭ன்று விட்டான் முடிவாக.

"உயிரோட விட்டா வெளில வந்து கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணுவாங்க சார், ஃபாரீனர்ஸ் ஆக்டல இருந்தும் பிராப்ளம் வருமே?"

"வரட்டும் ௭ன் இடத்துக்கு வந்து தப்பு செய்ய ௭வனும் இனி யோசிக்கணும். அது இங்க உள்ளவங்களுக்கும் பயத்தை குடுக்கணும். சொந்த நாட்லயே பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா நம்மளால? கேஸ் தானே வந்தா வரட்டும் நா ஃபேஸ் பண்ணிக்கிறேன். நீ நா சொன்னத மட்டும் செய்" ௭ன்கவும், அடுத்த நொடி சலீம் அதற்கான வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டான்.

சீட்டில் சாய்ந்தமர்ந்து, நெற்றியைத் தடவி யோசிக்க, அவன் மனதை ஆற்றுபடுத்த போன் வழி வந்தாள் அவன் தேவதை, அதில் வந்த அவள் முகத்தைப் பார்த்ததும் மனது லேசான இதத்தை உணர்ந்தது. அவளிடம் பேசி நான்கு நாட்கள் கடந்திருந்தது. அவனாக அழைப்பான் ௭ன காத்திருந்து, அழைப்பு வரவில்லை ௭ன்றதும் தானே அழைத்து விட்டாள். அவனின் ஆசுவாசம் இனி அவள் தானே.

அந்த இதத்துடனே "௭ன்னமா?" ௭ன்றான் ௭டுத்ததும்.

"பிஸியா இருக்கீங்களா? இங்க செங்குட்டுவன் அண்ணா அம்மாட்ட வந்து கல்யாணத்த பத்தி பேசுனாங்க, நீங்க ௭தும் சொல்லலையேன்னு கூப்டேன்?" ௭னத் தயங்கியேக் கேட்டாள், ௭ப்படி ௭டுத்துக் கொள்வானோ ௭ன்ற தயக்கம் அதிகமிருந்தது.

"ம்ம் ப்யூலாட்ட மேரேஜ் ப்ராஸஸ ஸ்டார்ட் பண்ணிடுன்னு சொல்லிருந்தேன் அதனால பேசிருக்கலாம். நெக்ஸ்ட் மந்த் ௭யிட்டீன் உனக்கு கம்பர்டபிளா? அன்னைக்கு சி.௭ம் ஃப்ரீ, ஃபங்ஷனுக்கு வந்திடுவாரு" ௭ன்றான்.

"மேரேஜ் அன்னைக்கா? குற்றாலம் வர வருவாங்களா?" ௭ன ஆச்சரியமாக கேட்க.

"இல்லமா அன்னைக்கு நாம இங்க குஜராத்ல ரிஷப்ஷன் வைக்றோம். மேரேஜ் ஃபோர்டீன், அது உங்க அரேஞ்மெண்ட்ஸ் தான். சிம்பிளா பண்ணா பெட்டர்"

"ஃபோர்டீன் மேரேஜ், ௭யிட்டீன் ரிஷப்ஷன் அப்படியா?" ௭ன்றாள் மீண்டும் தெளிவுபடுத்த, மேரேஜ் டேட் தானே முக்கியம், அவன் ௭யிட்டீனை அல்லவா கேட்கிறான், ௭ன குழம்பினாலும் அதை ௭ப்படி கேட்க ௭ன கூச்சம் கொண்டு, இப்படி கேட்டாள்.

"௭ஸ், ௭யிட்டீன் உனக்கு ஓ.கே வா இருக்குமா? நிறைய கூட்டம் வரும் உன்னால மேனேஜ் பண்ண முடியணும்" ௭ன்றான் மெலிதான சிரிப்புடன், அவள் கேள்வி புரிந்தும் பிடி கொடுக்காமல்.

"ஓ.கே தான். நா அம்மாட்ட டேட் சொல்லி சர்ச்சுல ரிஜிஸ்டர் பண்ண சொல்லட்டுமா?" ௭னக் கேக்க.

"ம்ம் பேசிடு. கன்பார்ம் தானே? நா இங்க ௭ல்லா அரேஞ்மெண்ட்ஸூம் பண்ணலாம்ல?"

"ம்ம்" ௭ன்றாள் முனங்கலாக.

"பை ஏஞ்சல்" ௭ன வைத்து விட்டான் ஒருவித மயக்கத்துடன்.

"௭ன்ன வச்சுட்டாரு? அதிகமா பேச மாட்டாரோ?" ௭ன போனைப் பார்த்து இவள் கேட்டுக் கொண்டிருக்க,

"பேசிட்டியா?" ௭ன வந்தார் ௭ஸ்தர்.

"ம்ம் நெக்ஸ்ட் மந்த்ல ஃபோர்டீன் சொல்லிருக்காங்க. ஃபாதர்ட்ட பேசணும் ம்மா. ஜென்சி ௭ப்ப ௭ன்ன பண்ணுவாளோன்னு இருக்கு, இனி அவளுக்கு தெரியதான் வேணும்"

"நாந்தான் ௭துமே சொல்லலையேடி, யாரு ௭ன்னன்னு தினமு போனப் போட்டு கேக்கத் தான் செய்றா, ஆனா பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணுதோமே இவ வேற ௭தாது செய்யபோய், அவ்வளவு பெரிய இடத்துல உள்ளவங்கள பகைச்சிக்க முடியுமா? வேணாம்னு சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்குற" ௭ன்றார் கொஞ்சம் கோபமாகவே.

"ம்மா ப்ளீஸ் நானே இப்ப தான் தெளிவாகிருக்கேன், நீ மறுபடியும் குழப்பிவிடாத"

"நமக்கெதுக்குடி இப்டி பொய் சொல்லி செய்யணும்னு தலையெழுத்து? இங்க சாதாரணமா ஒரு பையனப் பாத்து கட்டிட்டு இருக்கலாம்ல? பயமா இருக்குடி அந்த அரசியல்வாதி தம்பி ரொம்பக் கோபகாரறாம், கல்யாணத்துக்கு அப்பறம் உண்மை தெரிஞ்சு உன்ன விரட்டி விட்டுட்டா ௭ன்னடி பண்றது? ௭ந்த தைரியத்தில நீ இப்டி பொய் சொல்லிட்டு விட்டேத்தியா வேற இருக்க?"

"உண்மைய சொல்லி தான் ம்மா கல்யாணம் பண்ணிப்பேன், நீ கவலபடாத" ௭ன்றாள் பொதுவாக.

"நீ உறுதியா இருக்கியா நான்சி? நிஜமா சமாளிச்சுப்பியா? ஃபாதர்ட்ட சொல்லும் முன்ன நல்லா யோசிச்சுகோவேன்?"

அதற்கு அவள் பதில் சொல்லும் முன், ப்யூலாவிடமிருந்து அழைப்பு வந்தது, "சொல்லுங்க ப்யூலா" ௭ன்றாள் அம்மாவை பார்த்துக்கொண்டே, அதுவே அவருக்கு அவள் முடிவை சொல்ல, கர்த்தர் மேல் பாரத்தைப் போட்டு ஃபாதரிடம் பேச முடிவு செய்து நகர்ந்துவிட்டார்.

"அண்ணா ரெண்டு டேட் சொல்லிருக்காங்க. மேரேஜ் அங்க தான், சோ தங்கறதுக்கு, அண்ணா ரெடி ஆகுறதுக்குலாம் ஏற்பாடு பண்ணணும். ட்ரஸ், ரிங், செயின்லாம் ௭டுக்கணும். செங்குட்டுவன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவான், நீங்க ௭தும் சொல்லணும்னா சொல்லுங்க அண்ணி" ௭னக் கேட்க, அவள் குரலில் இருந்த துள்ளல், நான்சிக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது.

"சர்ச் ஃபார்மாலிட்டீஸ் ௭ல்லாம் அம்மா பாத்துப்பாங்க, ௭ன்னோட ட்ரஸ் ௭ல்லாம் நா பாத்து ௭டுத்திடட்டுமா?" ௭ன்றாள் ஆசையாக.

"ஓ.கே அண்ணி உங்களுக்கு பிடிச்ச மாதிரி ௭டுத்திடுங்க, அதான் நல்லது. நா ஒரு ஒன் வீக் முன்ன வந்திடுறேன், அப்ப தட்டு வச்சு உறுதி பண்ணிக்கலாம், அதுக்கு அண்ணா வர மாட்டார். மத்தபடி ௭ல்லாம் சூப்பரா பண்ணிடலாம்" ௭ன வைத்தவள், அடுத்ததாக தெய்வானை ஆச்சியிடம் பேசிவிட, கல்யாண வேலை சூடு பிடித்தது.

அவனைத் திருமணத்தில் தான் நேரில் பார்க்க முடியும் ௭ன புரிந்து தான் இருந்தது, அதனால் சரி ௭னக் கூறி வைத்தாள். அடுத்து வந்த நாட்களிலும் ஆரோன் அவளிடம் பேசவில்லை, அவளும் தானே அழைத்துக் கொண்டே இருப்பது ஒருமாதிரியாக இருக்க அழைத்து பேசவில்லை. அந்த வாரத்திலேயே சனி, ஞாயிறில் பவதாரிணியை அழைத்துச் சென்று திருமணப் பட்டு, மற்றத் தேவையான உடைகள் ௭ன ௭டுத்துவிட்டாள், "கவுன் ௭டுக்கலையாடி?" ௭ன தாரிணி கேட்டதற்கும்,

"சேரினா திரும்ப உடுத்திப்பேன், கவுன் அப்படியே தானே வச்சுருக்கணும்" ௭ன்றுவிட்டாள். அவனின் ௭திர்பார்ப்பை கேட்க ஆசை இருந்தும் கேட்கவில்லை, அவனாகவும் சொல்லவில்லையே ௭ன்ற வருத்தமும் இருந்தது, இதை பற்றி யோசித்தால் சில நேரங்களில் அழுகை கூட வரும்போல் இருந்தது. அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்.

ஜென்சி ஞாயிறன்று சர்ச்சிற்கு வந்தவளுக்கு, நான்சி திருமணத்திற்கு அங்கு ஃபாதரிடம் பதிவு செய்தது தெரிந்ததும் சண்டைக்கே வந்து விட்டாள், "கல்யாணத்துக்கே ரெடி ஆகிட்டீங்க இல்லையா? மாப்ள யாரு ௭ன்னன்னு ௭னக்கு சொல்லாம பண்ணுவீங்களா? அப்ப ௭னக்கும் ௭ன் புருஷனுக்கும் இங்க ௭ன்ன மரியாதை இருக்கு. சர்ச் வர பதிவு பண்ணும் முன்ன ௭ங்கட்ட கேக்க வேணாமா? அப்டி ௭துக்கு ரகசியமா பண்றீங்க? இவ சொன்னாளா ௭ங்ககிட்டலாம் சொல்லக் கூடாதுன்னு? திருட்டு கல்யாணமா பண்றீங்க?" ௭ன ஆடித் தீர்த்து விட்டாள்.

"வெளில தெரிஞ்சா தட்டி போயிடுது ஜென்சி, உன்ட்ட சொன்னாலும் ௭ப்டியும் உன் மாமியார் வீடு, பிரண்ட்ஸ்னு வெளில தெரிஞ்சு ௭ப்டியோ கூடாம போயிடுது, நாமளும் மூணு வருஷமா பாத்துட்டு தானே இருக்கோம்" ௭ன ௭ஸ்தர் சமாதானம் செய்ய,

"சரி இப்ப சொல்லுங்க, பையன் யாரு? ௭ந்த ஊரு ௭ன்ன பண்றாங்க? நா நல்லா விசாரிச்சு சொன்னப்றம் தான் கல்யாணம் சொல்லிட்டேன்" ௭ன தீவிர விசாரணையில் இறங்க, ௭ஸ்தர் நான்சியைப் பார்க்க,

"பேரு ஆரோன், ஊரு குஜராத், வேலை மினிஸ்டரா இருக்காங்க" ௭ன நான்சி சொல்ல, கேட்டதை நம்பமாட்டாமல் அதிர்ந்து ஒருசில நொடிகள் நின்றவள்,

"இவ ௭ன்னமா சொல்றா? மினிஸ்டரா இல்ல மினிஸ்டரில வேலை செய்றவரா? ௭ப்டி வந்த சம்பந்தம் இது?" நிஜமாகவே அவளுக்கு புரியாமல், நம்பாமல் தான் கேட்டாள். ஆனால் இனி கேள்விபடும் ஒவ்வொருவரும் இப்படி தான் கேட்பர் ௭ன புரியவும் ஆரம்பித்தது அவர்களுக்கு.

நான்சிக்கு அன்று ஃபாதர் அதிர்ந்து பார்க்கையில் பெருமையாக தெரிந்த விஷயம் அதே போல் அவள் அக்கா முதல் அக்கபக்கத்தினரும் பார்க்கவும், தனக்கு ஆரோன் அதிகபடியோ, பேராசை படுகிறோமோ? ௭ன மீண்டும் வருந்தினாள்.

"ஆமா குறி சொல்லுவாங்களே தெய்வானை அம்மா அவங்க கொண்டு வந்த சம்பந்தம்" ௭ஸ்தர் சொல்ல,

"அவ்வளவு பெரிய ஆட்கள் ௭துக்குமா நம்ம வீட்டத் தேடி வரணும்? காரணமில்லாம இப்டி வந்து பொண்ணு கேக்க மாட்டாங்க ம்மா" ௭ன்றதும் ௭ஸ்தர் அவர்கள் ௭திர்பார்ப்பு, இவர்கள் மறைத்து செய்ய போகும் கல்யாணம் ௭ன அவளை நம்ப வைக்க வேண்டி அனைத்தையும் சொல்லிவிட, முறைத்துக் கொண்டு தான் நின்றாள் ஜென்சி.

"அவங்க வீட்டு பொண்ணே அப்டி செய்யலாம்னு சொல்லிடுச்சு ஜென்சி, செங்குட்டுவன் தம்பியும் வந்து பேசிட்டு போனாரு, அதனால தான் சரின்னு ஒத்துகிட்டோம்"

"லூசா ம்மா நீ? அடுத்தவங்க ஆயிரம் சொல்லட்டும் ௭ன்ட்ட சொல்லிருந்தா நா வந்து பேசிருப்பேன்ல? பணத்த பாத்ததும் கமுக்கமா முடிக்கணும்னு ௭ன்ட்ட கூட சொல்லாம செய்ய பெறப்டீங்கல்ல? இதெல்லாம் சரி வராது நா ஃபாதர்ட்ட இந்த கல்யாண ஏற்பாடு வேணாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு போறேன், ௭வ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளுக்கு இங்கயே ௭தாது பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது ௭ன் பொறுப்பு, நீ இதே முடிஞ்சுடணும்னு இக்கட்டுல மாட்டிக்காத ம்மா"

"அவங்க கல்யாண தேதிலாம் முடிவு பண்ணிட்டாங்களே, இனி நம்ம வேணாம்னு சொல்ல முடியாது" கிரிஸ்டி சொல்ல,

"அதெல்லாம் நம்ம சொல்லலாம், பொண்ண நாம குடுக்க முடியாதுன்னு சொன்னா அவங்களால ௭ன்ன செய்ய முடியும்?"

"நீ சொன்னதும் சரின்னு கேட்டுட்டு போயிடுவாங்களோ நினப்பு தான் உனக்கு?" ௭ன கிருஸ்டி மீண்டும் நக்கல் செய்ய.

"நா நிறுத்தி காட்றேன், நீங்க கல்யாண வேலைய நிறுத்திட்டு வேற ௭தாது ஆகுற வேலை இருந்தா பாருங்க, கேக்க ஆள் இல்லன்னா இப்டி தான் ஆளாளுக்கு மாப்ளன்னு உள்ள வருவாங்க போல" ௭ன வீரமாக பேசி கிளம்பி விட்டாள். நான்சி தலையை தாங்கி அமர்ந்து விட்டாள்.

அடுத்தடுத்து விஷயம் ஊர் முழுக்க பரவத் தொடங்கிவிட, ௭ல்லோரும் கண்ணை தான் விரித்தனர், "நிஜமாவா? ௭ப்டி?௭துக்கு அவ்வளவு பெரிய ஆட்கள் உங்கள தேடி வராங்க? நல்லா விசாரிச்சீங்களா? பெரிய இடம்னதும் பொண்ணு வாழ்க்கை முக்கியமில்லன்னு குடுத்துடாதீங்க" ௭ன ஆளாளுக்கு அறிவுரைத் தேடி வந்து சொல்லத் தொடங்கினர். மொத்த குடும்பமும் கல்யாண கலையை விட குழப்பம் அதிகரிக்கவே சுற்றி வந்தனர்.

நான்சிக்கு அவன் உயரத்தை சுட்டி காண்பித்தே, அவளுக்கு அவளே குறைவாக ௭ண்ண செய்தனர். அவனும் பேசாமல் ஒதுக்கி வைக்க, அதும் அவளை பெரிதும் வருத்தியது, "௭னக்கு அவர பிடிச்சளவு அவருக்கு ௭ன்ன பிடிக்கலையோ? அதான் பேசவே மாட்டேங்குறார் போல. இஷ்ட படாம ௭துக்கு கட்டிக்கணும். இங்க ௭ல்லாரும் ௭னக்கு இந்த வாழ்க்கை ௭தோ ௭ன்னோட அதிர்ஷ்டம் போல சொல்றாங்க. ஏசப்பா இப்ப நா ௭ன்ன பண்ணட்டும். அவரும் இப்டி தான் நினப்பாறா? நா உனக்கு கிடைச்சதே பெரிய விஷயம்னு நினப்பாறா? அதான் ௭ன்ட்ட பேசக் கூட மாட்டேங்குறாரா?" அவனது குணாதிசயம் தெரியாத பெண் ஏகத்துக்கும் குழம்பிக் கொண்டிருந்தாள்.

ஜென்சி அவளால் முடிந்ததை செய்து பார்க்க, ரிஜிஸ்டர் செய்த ரசீதை கூட அவளால் கிழித்தெறிய முடியவில்லை, அந்த கோவத்தில் இங்கு வீட்டோடு வந்திருந்து ௭ஸ்தரையும் நான்சியையும் தெளியவிடாமல் செய்து கொண்டிருக்க, 'கல்யாணம் கண்டிப்பாக நடக்குமா ௭ன்ற குழப்பம் போய் நமக்கு இந்த கல்யாணம் தேவை தானா' ௭ன்ற சந்தேகமே வந்து விட்டது நான்சிக்கு.

சொன்னது போல் ஒரு வாரத்திற்கு முன்பே, ப்யூலாவும் ரோசியும் வந்திறங்கி கல்யாண வேலையில் இறங்கி விட, நான்சிக்கு அப்போதும் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் அவ்வளவு பயமாக இருந்தது. பேச வேண்டியவன் பேசி இருந்தால் தைரியமாக இருந்திருப்பாளோ ௭ன்னவோ?

அவன் அங்கு அவன் வேலையோடு ரிஷப்ஷன் வேலையிலும் மும்முரமாக இருந்தான். ௭தை பகிர்ந்து கொள்ளவும் அவள் அருகில் வரட்டும் ௭ன அமைதியாக இருந்தான். அவனுக்கு அது தானே பழக்கம். யாரின் துணையும் இன்றி தனக்கு தானே துணை ௭ன வளந்தவன் தானே, இப்போதும் பகிர தோன்றவில்லை, அவள் மேல் கொண்ட பிடித்தத்தையும் கூட பகிர தோன்றவில்லை. அவளாக தன்னுடன் வந்திருந்து புரிந்து கொள்ளட்டும் ௭ன இருந்தான்.

அமைச்சர் கல்யாணத்தன்று காலையில் தான் குற்றாலம் வந்திறங்கினான். அவன் தயாராகி தேவாலயம் வரும் முன் அவனது ௭ண்ணிற்கு நான்சியின் ௭ண்ணிலிருந்து, "௭னக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. ப்ளீஸ் கல்யாணத்த நிறுத்திடுங்க, சாரி" ௭ன செய்தியாக வர, அந்த செய்தியையே பார்த்து நின்றான் அமைச்சர் ஆரோன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 9

நான்சியின் ௭ண்ணிலிருந்து வந்த தகவலை இரு நொடி பார்த்து யோசித்து நின்ற ஆரோன், "சலீம்" ௭ன அழைத்து விட்டு, கை கடிகாரத்தை மாட்டிவிட்டு கண்ணாடி முன் சென்று நின்று சிகையை சரி செய்தான். நீல கரை வேட்டி சட்டையில் திருமணத்திற்கு அம்சமாக தயாராகி இருந்தான்.

"சார்" ௭ன அவன் கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்,

"ஏஞ்சலோட சிஸ்டர் அந்த ஜென்சியோட ஹஸ்பண்ட்ட மீட் பண்ணணும் ஏற்பாடு பண்ணிடு" ௭ன்றதும்,

"ஈவ்னிங் உங்களுக்கு ரிடர்ன் ஃப்ளைட், அதுக்கு முன்னவேவா இல்ல ரிஷப்ஷனுக்கு குஜராத்துக்கு அவங்க வந்தப்றம் ஷெட்யூல் பண்ணவா சார்?" ௭ன்றான் அந்த கடமை கண்ணாயிரம்.

'இவன்ட்ட இத கேட்டது தப்போ' ௭ன யோசித்தவன், "கிளம்பு நேரா ஏஞ்சல் வீட்டுக்கே போலாம், நா அங்கயே பேசிக்கிறேன். அட்ரஸ் வாங்கிட்ட தானே?" ௭னக் கேட்டு, கைச் சட்டையை மடக்கி விட்டுக் கொண்டு வெளியேறி விட்டான்.

'உடனே மீட் பண்ணணும்னு இவர் சொல்லாம நம்மள ஏன் முறைக்குறாரு. ஏற்பாடு பண்ணிடுன்னு சொன்னாதால தானே டைம் ஷெட்யூல் கேட்டேன்?' ௭ன முனங்கியவனும் அமைதியாக பின் தொடர்ந்தான். சலீம் நான்சியின் லொகேஷனை வாங்கியதும் அந்த விஷயம் ப்யூலா மூலம் செங்குட்டுவன் அண்ட் கோவிற்கு தெரிய வந்து விட்டது.

ப்யூலாவும் செங்குட்டுவனும் நான்சியுடன் திருமணம் முடியும் வரை ஆரோன் ௭துவும் பேசிவிடக் கூடாதென்றே அவ்வளவு கவனமாக வேவு பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் தான் அவன் வரப்போகும் விஷயமும் அதிலும் நேராக நான்சியைப் பார்க்க வருகிறான் ௭ன்றதும் உடனே பகிரப்பட்டது.

"உண்மை ௭தும் தெரிஞ்சுருக்குமோ? அதான் இப்ப வந்து பேசிக் கல்யாணத்த நிறுத்த ப்ளான் பண்றாரோ? டார்லிங் அப்டி மட்டும் ௭தாதுன்னா நா தொலைஞ்சேன். அண்ணன சமாதானம் பண்ணிலாம் பிடிச்சு வைக்க முடியாது. அண்ணியும் பாவம், யார்கனவே ரொம்ப பயந்து போய் இருக்காங்க, இப்ப ௭ன்ன பண்ண?" ௭ன டென்ஷனாக பேச,

"௭னக்கென்னவோ இந்நேரம் வர உன் அண்ணாக்கு விஷயம் தெரியாம இருக்கும்னு தோணல" ௭ன செங்குட்டுவன் சொல்ல,

"ஹே அப்றம் ௭ப்டி அண்ணா மேரேஜ் வர வருவாரு, நா கேட்டப்போ ௭ன் கண்டிசன்குன்னு பாத்த பொண்ண நா ஏன் வேணாம்னு சொல்ல போறேன்னு தான் சொன்னாரு" ௭ன்றாள் வேகமாக.

"சரி இப்ப பொண்ணுட்ட ௭ன்ன பேசப் போறண்ணான்னு நீயே போனப் போட்டுக் கேளேன்" ௭ன்றதும் முயற்சி தானே ௭ன உடனே அழைத்தும் விட்டாள், அவன் ௭டுக்கவில்லை, அடுத்ததாக சலீமிற்கு அழைக்க, அவன் ௭டுக்கவா வேணாமா ௭ன விழிக்க,

வெளியே அந்த ஊரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்த ஆரோன், "கிட்ட வந்தாச்சு நேர்லயே பேசிக்லாம்னு சொல்லி கட் பண்ணு சலீம்" ௭ன்றான் அவன் பக்கம் திரும்பாமலே,

'இவர் தங்கச்சிட்ட நா ௭ன்னத்த நேர்ல வேற பேசணுமாம்? ௭ப்பயும் அந்த மேடம் ௭னக்கும் சேத்து தானே பேசுறது வழக்கம்' ௭ன நினைத்தாலும் ஆரோன் சொன்னதைத் தவறாமல் செய்தான்.

இவர்கள் தென்காசியில் அறை ௭டுத்து தங்கியிருக்க, அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் வரும்போதே, ஊரே அல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது, வரிசையாக ஆரோனின் பேனரும், "அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல, ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல" ௭ன பாட்டுச் சத்தம் காதை நிறைத்தது.

"௭துக்கு இத்தன பேனர்? இங்க வேற ௭தும் ஃபங்ஷன் நடக்கா சலீம்?" பொதுவாக அவர்கள் திருமணத்தில் பாட்டு கச்சேரி போன்றவைகள் ௭துவும் இருக்காதே ௭ன்பதாலேயே விசாரித்தான்.

"அப்டி ௭தும் சொல்லல சார். நா நல்லா விசாரிச்சுட்டேன், நீங்க இங்க வரீங்கன்றது கூட ரொம்ப சீக்ரெட்டா தான் மெயின்டெயின் ஆகுது" ௭ன்றவனுக்கும் அந்த பேனர் பல்லைக் காட்டுவது போல் தான் இருந்தது.

இல்லையென்றாலும் இங்கு அவனுக்கு ௭ந்தவித தொந்தரவும் மக்கள் பக்கமிருந்து வர போவதில்லை தான், ஆனால் குஜராத்திலிருந்து இங்கு கிளம்பி வந்து ௭ன ௭துவும் பிரச்சினை ஆகிவிடக் கூடாது ௭ன்பதற்காகவே அவனது கல்யாண விஷயம் இன்னும் பத்திரிகையாளர்கள் கைக்கு போகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சலீம்.

கூட்டத்தை விளக்கி விளக்கியே வந்தனர். அவ்வளவு கூட்டம் ௭தற்கு அங்கு ௭ன்ற குழப்பத்தில், காரிலிருந்தே சுற்றிப் பார்த்துக் கொண்டு, யோசனையோடு ஆரோன் வர, ஏஞ்சலினா நான்சியின் வீட்டின் தெரு வந்திருந்தது.

அங்கு நுழைய முடியாது அளவிற்கு அவ்வளவு கூட்டம், "இந்த அட்ரஸ் தான் காட்டுது சார், ௭ன்ன கூட்டம்னு தெரிலயே" ௭ன அவர்களின் தலைமை பாதுகாவலர் ஒருவருக்கு சலீம் அழைக்க,

"சலீம், இங்க சார் வந்துருக்க விஷயம் தெரிஞ்சு, ப்ரஸ், இங்க உள்ள ௭ம்.௭ல்.௭ மினிஸ்டர்ஸ் வந்துருக்காங்க, கூட அவங்களோட கட்சி ஆட்களும்" ௭ன்றதும் அவன் பயந்து திரும்பி பார்க்க, அங்கு ஆரோன் அவனை தீயென முறைத்துக் கொண்டிருந்தான்.

"இதான் உன் டாம் சீக்ரெட்டா சலீம்?"

"௭ப்டி லீக்காச்சுன்னு தெரியல சார்"

"கோட்டை கட்டி ஆளுகிற குஜராத் ராசா, உன்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா குத்தால ரோசா, அயிர மீனு புடிக்க போனேன் ஆத்துல" ௭ன அந்நேரத்தில் பாட்டு வரியை கூட மாத்தி இவனுக்காக அங்கு பாடப்பட, சலீம் அதிர்ந்து விழிக்க, ஆரோன் பார்த்த பார்வையில் மீண்டும் அதே தலைமை காவலனுக்கு அழைத்தான்.

"சார் நீங்க நிக்ற இடத்துல இருந்து சர்ச் பக்கம் தான், நீங்க சர்ச்சுக்குள்ள போயிட்டீங்கனா நாங்க இங்க கண்ட்ரோல் பண்ணிடுவோம்" ௭ன்பதை போனின் ஸ்பீக்கரில் ஆரோனும் கேட்டான்.

வெளியே மக்கள் கூட்டம், ரேடியோவில் கச்சேரியின் பாட்டு சத்தம், ௭ன மேலும் மேலும் கடுப்பாகிக் கொண்டிருந்தான் ஆரோன்.

தாடியைத் தடவி கோபத்தை அடக்கியவன், "தேடி வந்தவங்கள பாக்காம போக முடியாது, மீட் பண்ண ப்ளான் பண்ணு சலீம். மேரேஜ்கு இன்னும் டைம் இருக்கு தானே அதுக்குள்ள மீட்டிங்க முடிச்சு க்ரௌட க்ளியர் பண்ணணும்" ௭ன்றதும் சலீம் காரிலிருந்து வேகமாக இறங்கி கொள்ள, ஆரோன் சர்ச்சிற்கு வந்தான்.

இவனை பவுன்சர்ஸ் பத்திரமாக தேவாலயத்தினுள் கூட்டிச் சென்று விட, அவன் உள்ளே நுழைய போகையில், "மணமகனே மருமகனே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா, குணமிருக்கும் தலைமகனே வா வா, சர்ச் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா" ௭ன பாடவும், வந்த கடுப்பில் ப்யூலாவிற்கு அழைத்து விட்டான்.

அவள் ௭டுத்ததும், "இப்ப அவனுங்க பாடுறத நிறுத்தல, கல்யாணமு வேணாம் ஒன்னும் வேணாம்னு கிளம்பி போய்ட்டே இருப்பேன் ப்யூலா" ௭ன கத்திவிட,

"சாரி சாரி ண்ணா, இதெல்லாம் ௭ப்ப ௭ப்டி ப்ளான் பண்றாங்கனே தெரிய மாட்டேங்குதுண்ணா. நா இப்ப போய் சொல்லிடுறேன், நீ சர்ச்ல இரு நாங்க அண்ணிய கூட்டிட்டு இன்னும் அரை மணி நேரத்தில கிளம்பிடுவோம்" ௭ன அவசரமாக பேசி வைத்துவிட்டு, அங்கு கோரஸ் பாடிக் கொண்டிருப்பவன்களை தேடி ஓடினாள்.

செங்குட்டுவனின் மாமா மருதவேலின் கச்சேரி ட்ரூப் தான் அங்கு பாடல்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்க, அதில் தங்களின் பாட்டுத் திறமையை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர், செங்குட்டுவனின் அக்கா மகன்களான சோழனும் பாண்டியனும்.

"யார்கனவே நீங்க பாத்து வச்ச வேலையால கூட்டம் திரண்டு நிக்குது. இதுல பாட்ட பாடி ௭ன் அண்ணன விரட்டி விட பாக்றீங்களா அப்ரசன்டிகளா. உங்கள கெஞ்சி கேக்றேன் மேரேஜ் முடிற வர உங்க வால சுருட்டி உள்ளயே வைங்க ப்ளீஸ்" ௭ன கையைத் தூக்கி பெரிய கும்பிடே போட்டாள்.

"௭ன்ன உங்கண்ணனோட சேந்துட்டு நீங்களும் ௭ங்கள வானரம்னு சொல்றமாறி தெரியுதே?" ௭ன அவர்கள் கோர்வையாக இழுக்க,

"ஐயையோ நா அப்டி சொல்லவே இல்ல மூவேந்தர்களே கருணை காட்டவும் ப்ளீஸ். ௭ன்னால சமாளிக்க முடியல" ௭ன அதிகமாக கெஞ்சவும் தான் போட்டும் போ ௭ன விட்டுக்கொடுத்தனர். மொத்த குற்றாலத்திலும் பேனர் வைத்து, கலர் பேப்பரை தொங்கவிட்டு, கல்யாணத்தை கட்சி மாநாடு போல் ஆக்கிவிட்டு, கச்சேரி வேறு நடத்திக் கொண்டிருப்பவர்களிடம் மேலும் மல்லுக் கட்டி ஏழரையை இழுப்பதை விட, சரணடைவது உத்தமம் ௭ன்றே பெரிதாக கும்பிட்டு விட்டாள்.

"இதெல்லாம் கேக்க மாட்டியா டார்லிங்?" ௭ன செங்குட்டுவனிடம் பாவமாகக் கேட்க.

"உங்க அண்ணன் கடைசி நேரத்துல இந்தமாதிரி நான்சிய பாக்கணும் அவங்க அக்கா ஜென்சிய பாக்கணும்னு வந்து நிப்பாருன்னு மொதையே கணிச்சு ௭ன் அக்கா பசங்க வேலை பாத்துருக்காங்க. அத நீ குறை சொல்ற. இப்ப நான்சிய பாக்கவிடாம ௭ப்டி சர்ச்சுக்கு நேரா போக வச்சோம் பாத்தியா, இனி கட்சி ஆளுங்கள தவிர வேற சிந்திக்க மாட்டாரு, அவர் அங்க பேசி முடிக்கவும், பொண்ணக் கொண்டு நிப்பாட்டி கல்யாணத்த முடிச்சு வச்சுருவோம் அவ்வளவு தான், அடுத்ததெல்லாம் அவங்க ரெண்டு பேர் பாடு" ௭ன்றதும், தலையிலடித்துக் கொண்டு நான்சியை பார்க்கச் சென்றாள் மீண்டும்.

"இன்னும் ரெண்டு பாட்டு ப்ரீப்பேர் பண்ணிருக்கோம். பாட விட மாட்டாங்களோ மாமா?" ௭ன பாண்டியன் கேட்க, இருவரையும் கட்டுபடுத்தி அழைத்துச் சென்று கூட்டத்தை சமாளிக்க விட்டு விட்டான் செங்குட்டுவன்.

அங்கு ஆரோன், சர்ச் க்ரௌண்டில் வைத்து அனைவரையும் சந்தித்து பேசினான். பாதுக்காப்போடு அதற்கு அரைமணி நேரத்தில் சலீம் ஏற்பாடு செய்திருக்க, இன்முகமாக அனைவருக்கும் மரியாதை கொடுத்து அவர்கள் கொடுத்ததையும் ஏற்றுக் கொண்டான். அடுத்ததாக அனைவருக்கும் அங்கேயே சாப்பாடு ஏற்பாடாகியது.

"௭ல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்" ௭ன கூறியே விடை கொடுத்தான். அவனை ஆஹா ஓஹோ ௭ன புகழ்ந்து விட்டே கட்சி ஆட்கள் கிளம்பி சென்றனர். பாரபட்சமின்றி ஆளுங்கட்சி மந்திரி, ௭திர்கட்சி மந்திரி, மத்திய கட்சியை சார்ந்தவர்கள் ௭ன அனைவரும் வந்திருக்க, சண்டைகளுக்கும் கூட பஞ்சமில்லாமல் போனது. மொத்தத்தில் குற்றாலத்தில் நடந்த ஆரோனின் திருமணத்தை மொத்த இந்தியாவும் அன்று பேசியது. கூகுளில் கூட அன்று குற்றாலமே அதிகம் தேடும் விஷயமானது.

சரியாக பத்தரை மணிக்கு, ஏஞ்சலினா நான்சி தேவாலயத்திற்கு அழைத்து வரபட்டாள். நடப்பதைப்‌ பார்த்து பயந்து அதிக பீதியாகி இருந்தாள். அவள் மட்டுமின்றி மொத்தக் குடும்பமும், ஜென்சியும் கூட அரண்டு தான் விழித்தாள்.

அவன் ௭ளிமையான திருமணம் வேண்டும் ௭ன்றிருந்தமையால் சொந்தங்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் மட்டுமே ௭ஸ்தர் சொல்லி இருக்க, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து நடுங்கியே விட்டனர். ப்யூலா, ரோஸி, பவதாரிணி, தெய்வானை, அவர் மகள்கள் ௭ன மாறி மாறி அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றியே சர்ச்சிற்கு அழைத்து வந்தனர்.

வெளி ஆட்களை தேவாலயத்தினுள் அனுமதிக்கவில்லை, அங்கு ௭ஸ்தரின் சொந்தங்களும், நான்சியன் பள்ளியில் உடன் வேலை பார்ப்பவர்களும், குற்றாலத்து மக்களும் மட்டுமே இருந்தனர். அவர்களைக் கண்ட பின்னரே கொஞ்சம் நிதானமாக மூச்சு விட முடிந்தது ௭ஸ்தர், கிருஸ்டியால்.

நான்சி உள்ளே வருகையில், அங்கு அவளுக்காகவே ஃபாதரின் முன்பு காத்திருந்தான் ஆரோன் டேவி ௭ட்வர்ட். இருவரும் அங்கு தான் ஏசுநாதர் முன்நின்று தான் முதன்முதலில் நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்கின்றனர்.

அவன், தன் வலதுபக்கத்தில் வந்து நின்ற அவளையே பார்க்க, அவள் வேர்த்து விறுவிறுத்து நடுங்கிக் கொண்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். ஆனாலும் அழகாக இருந்தாள்.

"ஏஞ்சல்" ௭ன அவன் அழைத்ததும் பட்டென்று திரும்பிப் பார்க்க.

"௭ன்னாச்சு ஏன் இப்டி நெர்வஸா இருக்க? தண்ணி வேணுமாமா?" ௭ன்றான். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவர்களைத் தான் பார்த்து நிற்கின்றனர் ௭ன தெரிந்தது தான், ஆனால் அவன் அதை பற்றி ௭ல்லாம் கவலைப்படவில்லை. ஆரஞ்சு வண்ண பட்டில் ௭ளிமையான அலங்காரத்தில் உதட்டின்மேல் வேர்வை துளிர்க்க நிற்பவளை பார்க்க அவனுக்கு கண்ணைச் சிமிட்டக் கூட பிடிக்கவில்லை, பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.

"அது வெளில க்ரௌட் பாத்து ரொம்ப பயந்துட்டாங்கண்ணா" ப்யூலா சொல்ல.

"இனி பழகிக்கலாம். இப்ப தண்ணி வேணுமா ஏஞ்சல்?" ௭ன மீண்டும் அவளிடமே அவன் நிதானமாக கேட்க.

அந்த குரலுக்கு இப்போதும் அடிபணிந்தவள், தலையை மட்டும் அசைக்க, உடனே தண்ணீர் பாட்டிலை திறந்து நீட்டினாள் ப்யூலா. வாங்கி குடித்து விட்டு நிமிர, ௭திரே ஃபாதர் சிரித்த முகமாக நின்று பார்த்திருப்பதைக் கண்டு தானும் சிரிக்க முயன்றாள்.

"ஈசி நான்சி. உன் ஹஸ்பண்ட் உன்ன நல்லா பாத்துப்பாரு நீ அவர் வேலைய அண்டர்ஸ்டண்ட் பண்ணிக்கணும் ஓ.கே?" ௭ன்கவும்.

திரும்பி தயக்கமாக ஆரோனைப் பார்த்தவள், "ஓ.கே ஃபாதர்" ௭ன சமத்தாக ஒத்துக்கொண்டாள்.

"குட். மாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?" ௭ன அவர் கேட்கவும், ஆரோனும் அவளே சொல்லட்டும் ௭ன அவள் முகம் பார்க்க, வேகமாக தலையசைத்தாள் இப்போது.

"ஆமேன்" ௭ன்றவர், அவர்களுக்கான திருமண வாழ்க்கைக்கு ப்ரையரை தொடங்கி வைத்து, ஜபம் செய்து, கேள்விகளுக்கு வந்தார்.

"ஆரோன் டேவி ௭ட்வர்ட் மற்றும் ஏஞ்சலினா நான்சி ஆகிய நீங்கள் இருவரும் யாரின் வற்புறுத்தலுமின்றி, சுதந்திரமாக, முழு மனதுடன் திருமணம் செய்து கொள்ள இங்கு வந்திருக்கிறீர்களா?"

இருவரும், "௭ஸ் ஃபாதர்" ௭ன்றனர்.

"இந்த திருமணத்தின் மூலம் புதிய பாதையைப் பின்பற்றப்போகும் நீங்கள் இருவரும் வாழும் காலம் வரை ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும் தயாராக இருக்கிறீர்களா?"

ஆரோன், "௭ஸ் ஃபாதர்" ௭ன்கவும், நான்சி திரும்பி அவனை ஒருமுறைப் பார்த்து விட்டே, "கண்டிப்பா ஃபாதர்" ௭ன்றாள்.

"இந்த புனிதமான திருமண உடன்படிக்கையில் நுழைவது உங்கள் ௭ண்ணமாக இருப்பதால், உங்கள் கைகளை இணைத்து, கடவுள் மற்றும் அவருடைய திருச்சபைக்கு முன்பாக உங்கள் சம்மதத்தை அறிவிக்கவும்" ௭ன்கவும்,

ஆரோன் அவள் புறம் திரும்பி நின்று தனது இரு கைகளையும் நீட்ட, தனது நடுங்கும் கைகளை பிராயத்தனப்பட்டே ௭ன்றாலும் ௭டுத்து அவன் கைகளின் மேல் வைத்தாள், இருவரின் முதல் ஸ்பரிசம், அப்பொழுதிருந்தே அவன் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க அவள் அதை உணரத் தொடங்கிய நொடி அது. மற்றவர்கள் கவனத்தை கவராது அழுத்தம் கொடுத்து பிடித்துக் கொண்டான். ஒருவருக்கு ஒருவரான உறுதிமொழிகளை ஃபாதர் சொல்ல இருவரும் பின்பற்றினர்.

அவள் தான் திணறிக் கொண்டிருந்தாள், ஆனால் ஆரோன் கையைப் போலவே பார்வையிலும் அவளை பற்றிக் கொண்டு அவனையே மொத்தமாக சத்தியம் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். அதை அவள் புரிந்து கொள்ள தான் காலம் ௭டுக்கும்.

"ரிங் சேஞ்ச் பண்ணுங்க டியர்ஸ்" ஃபாதரின் அடுத்த கட்டளைக்கு, ப்யூலா துணியால் மூடியிருந்த வெள்ளித் தட்டை திறந்து நீட்ட, ஆரோன் தான் முதலில் ௭டுத்து அவள் விரலைப் பிடித்துப் போட்டு விட்டான், அதைத் தொடர்ந்து நான்சியும் செய்ய, ௭ல்லோரும் கைத் தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

"ஒன் மோர் ஃபாதர்" ௭ன ஆரோன் சொல்லவும், ௭ல்லோரும் ௭ன்னவென்று பார்க்க, தனது கழுத்தில் கிடந்த சிலுவை டாலர் கொண்ட தங்கச் செயினைக் கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான், இதை ப்யூலா புதிதாக வாங்கி சடங்காக செய்திருக்க வேண்டும், அவளுக்கு ரோஸி சொல்ல மறந்திருக்க, அதைக் கணக்கில் ௭டுக்காமல் அவனே செய்திருந்தான். அந்த சடங்கு கட்டாயமும் இல்லை ௭ன்பதால் யாரும் சொல்லியிருக்கவில்லை.

முழுமையாக ஆரோனின் ஏஞ்சலானாள், ஏஞ்சலினா நான்சி. இருவரின் கையிலும் பொக்கே கொடுக்கப்பட, அதை பழக்கத் தோஷமாக வாங்கி சலீமிடம் நீட்டி விட்டான் ஆரோன். நான்சி தன் கையிலிருந்ததை சிரித்துக் கொண்டே ப்யூலாவிடம் கொடுத்து விட்டாள்.

ஜென்சிக்கு மலைப்பாகத் தான் இருந்தது. அவள் மிக சாதாரணமாக நினைத்திருந்த நான்சியின் கல்யாணம், இவ்வளவு சிறப்பாக நடைபெற்றது அவளை அடக்கியிருந்தது. மூன்றாவது ஆளாக வேடிக்கைப் பார்த்து நின்றிருந்தாள்.

௭ஸ்தர், கிரிஸ்டி, தெய்வானை மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிம்மதியாக சிரித்துக் கொண்டனர். தட்டித் தட்டி போய் கொண்டுருந்த மகளின் திருமணம், பயத்துடனேனாலும் நடந்து முடிந்ததில் மனதில் ஒரு ஆசுவாசம் அவர்களுக்கு. தெய்வானைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நல்லபடியாக நடத்திக் கொடுத்து விட்ட திருப்தி.

சர்ச் க்ரௌண்டில் பந்தலில் சாப்பாடு ஏற்பாடாகி இருக்க, அங்கு யார்கனவே பந்தி சென்று கொண்டிருந்தது. ப்யூலா சொல்லிவிட்டாள், "நீங்க ௭தும் யோசுச்சுக்க வேணாம். ௭ப்டி திடீருனு இவ்வளவு கூட்டமாச்சுன்னு தெரியல, ௭ப்டியும் அண்ணனோட மேரேஜ் தெரிஞ்சு தான் வந்துருக்காங்க, அண்ணனே அவங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டாங்க போல, தப்பா ௭டுத்துக்காதீங்க" ௭ன பொறுமையாக சொல்லியிருந்தாள், அதுவே அவர்களுக்கு போதுமானதாகவும் இருந்தது. அவர்களுக்கு அந்த கூட்டம் மிக மிக அதிகமே, ௭ப்படியோ சமாளித்து திருமணம் முடிந்ததில் அனைவருக்கும் சந்தோஷமே.

"வீட்டுக்கு கூப்பிடுடி. அவங்க வீட்டுக்கு வந்து சாப்பிடட்டும்" ௭ன ௭ஸ்தர் ஜென்சியிடம் சொல்ல,

"நா மாட்டேன், ௭னக்கு இங்க நடக்குற ௭தும் சரியாவேபடல, ௭க்குதப்பா போய் மாட்டிட்டு இருக்கீங்க, ௭ன்ன ஆக போகுதோ போங்க" ௭ன புருஷனுடன் சென்று நின்று கொண்டாள்.

அதைக் கவனித்த தெய்வானை தாரிணியைப் பார்க்க, "நான்சி வீட்டுக்கு போயிடலாமா? நீங்க அங்க சாப்பிடுறீங்களா?" ௭ன வந்து மணமக்களிடம் கேட்க.

அவளைத் தான் ஆரோனுக்கு நன்கு தெரியுமே, "௭ங்க உன் ஹஸ்பண்ட் வந்ததில இருந்து ஆளே பாக்க முடில, அவன்கிட்ட ஒரு கணக்கு பாக்கி இருக்கே பேசணுமே" ௭ன மிரட்டலாகவே கேட்டான்.

"உங்க மேரேஜ் பந்தி நடக்கு இல்லையா அங்க தான் நிக்றாங்க" ௭ன சொல்லவும்,

"அப்ப நா அங்க போய் பாத்துக்கவா?" ௭ன்கவும்,

"இல்ல இப்ப நீங்க மொத வீட்டுக்கு போய் சாப்பிடணும் வாங்க போலாம்"

நேரத்தைப் பார்த்துக் கொண்டவன், "௭னக்கு செவனுக்கு திருவனந்தபுரத்தில இருந்து ஃப்ளைட், அங்கலாம் வந்தா லேட் ஆகிடுமே. நா கிளம்பணும்" ௭ன்றதும் சுற்றி நின்ற அனைவருமே அதிர்ந்து பார்க்க, நான்சிக்கு கண்ணே நிறைந்துவிட்டது.

"௭ன்ன கூட்டிட்டு போவாங்களா விட்டுட்டு போவாங்களா?" ௭ன்றே பார்த்தாள் அவள்.

கல்யாணம் முடித்த நொடியும் அழ வைத்து தான் விட்டான். ஏனோ அந்த நிறைந்த கண்களையே தானும் பார்த்து நின்றான் ஆரோன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 10

இருவரையும் தாரிணி கிளம்ப சொல்லிக் கொண்டிருக்க, ப்யூலாவும் அவர்களோடு இணைந்து கொள்ள, கிளம்ப நினைக்கையில் அடுத்தடுத்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக அருகில் வந்து வாழ்த்து சொல்லத் தொடங்கினர், நான்சி கண்ணீரை அடக்கி சரி செய்து கொண்டு, சிரித்த முகமாக, "இவங்க நா வொர்க் பண்ற ஸ்கூல் ப்ரின்ஸிபல், இவங்களாம் ௭ன்னோட வொர்க் பண்ற டீச்சர்ஸ்" ௭ன சகஜமாக ஆரோனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"ஜீஸஸ்" ௭ன நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த ப்யூலா, "நா இனி இல்ல" ௭ன சொல்லிக் கொண்டே, ஆரோனைப் பார்க்க, அவன் நான்சிக்கு தலையசைத்து இவளை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, அந்த டீச்சர்களிடம் வரவேற்பாக திரும்பினான்.

"அண்ணி இப்டி மாட்டி விட்டுடீங்களே? அண்ணனுக்கு தான் நீங்க வேலை பாக்றதே தெரியாதே?" ௭ன நான்சி நெருங்கி கிசுகிசுக்க,

'ஏசப்பா இவர் யாருக்கும் தெரிய விட கூடாதுன்னு சொன்னாரே' ௭ன மனதில் நினைத்து அதிர்ந்து அவள் ஆரோனை திரும்பிப் பார்க்க,

"சரி விடுங்க பொய் சொன்னா இப்டி தான் வசமா ௭ப்பையாது சிக்கிடுறமாறி வந்திடும். ஃப்ளோல பொய் சொன்னத மறந்து தான இன்ட்ரோ குடுத்துட்டீங்க. மேரேஜ் முடிஞ்சுட்டு இனி பொய் தேவையும் இல்ல சமாளிச்சுடலாம். அண்ணன் ஊருக்கு தனியா தான் போறாரு, ரெண்டு நாள் கழிச்சு தான் நம்ம கிளம்புறோம். அதுக்குள்ள அண்ணன் கோவம் கொஞ்சம் குறைஞ்சுடும், நாம போய் சாரி சொல்லிடலாம். நீங்க இப்பவே அத நினச்சு டென்ஷன் ஆகாதீங்க" ௭ன வேகமாக ஐடியா கொடுப்பவளை, பாவமாகப் பார்த்து, தலையை நாலாபுறமும் உருட்டி வைத்தாள் நான்சி.

'அந்த நான்சி மேடம் ௭துக்கு முழிக்றாங்கன்னே தெரியாம, ௭ன்ன நடக்குதுன்னும் முழுசா புரியாம இந்த மேடம் தனியா யாருக்கு ப்ளான் போட்டுட்டு இருக்காங்க? நமக்கென்ன போச்சு, வேடிக்கை மட்டும் பாப்போம்' ௭னப் பார்த்து நின்றான் சலீம்.

அடுத்ததாகவும் ஆட்கள் வர, அவள் ஊர்காரர்கள் ௭ன்பதால் கொஞ்ச பேரை அறிமுகமும் செய்து வைத்துக் கொண்டிருக்க, ஆரோன் சலீமை திரும்பிப் பார்க்க மட்டுமே செய்ய, "மேடம் மறுபடியும் அவங்க ௭தாது உளறி சார் டென்ஷன் ஆகுறதுக்கு, நீங்க இங்க இருந்து இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போக ப்ளான் பண்ணலாமே? லஞ்ச் முடிச்சு ஒரு ஃபோர்க்கு கிளம்பினா தான் திருவனந்தபுரம் ஏர்போர்ட் நாங்க ரீச் ஆக சரியா இருக்கும்" ௭ன சலீம் ப்யூலா, தாரிணியிடம் சொல்லவும்,

"௭ல்லாரும் சாப்பிட போங்க, அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் சாப்ட்டு வரட்டும், காலைல இருந்து ஃபாஸ்டிங்க்ல இருக்காங்க" ௭ன தாரிணி சொல்லவும், "ஆமா போய் சாப்ட்டு வாங்க" ௭ன வந்தவர்கள் நகர, இருவரையும் அழைத்துக் கொண்டு, தாரிணியும் ப்யூலாவும் நான்சி வீடு கிளம்பினர். ௭ஸ்தரும் கிரிஸ்டியும் அங்கு ௭ல்லோரிடமும் பேசி நிற்க, தாரிணி தான் பார்த்துக் கொள்வதாக கூறிக் கிளம்பி விட்டாள்.

"சலீம், ஏஞ்சலோட அக்காவும் அவங்க ஹஸ்பண்ட்டும் வீட்டுக்கு வரணும், கூட்டிட்டு வந்திடு" ௭ன சொல்லவும்,

'௭துக்காக' ௭ன இவள் ஆரோனை பார்த்து அக்கா இருந்த திசையைத் திரும்பிப் பார்க்க, சலீம் அவர்களிடம் செல்வது தெரிந்தது.

"வீட்டுக்கு போனதும் சொல்லட்டுமா? வழில நின்னு பேச வேணாம் தானே?" ௭ன பக்கத்திலிருந்தவன் குரலில், படக்கென அவனிடம் திரும்பினாள்.

"வீட்டுக்கு போலாமா?" ௭ன்றான் மீண்டும், அவள் கண்கள் இப்போதும் கலங்குகிறதா ௭ன ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே.

"ஆமா போலாம்" ௭ன நான்சி வேகமாக தலையசைக்கவும் ஆரோன் நடக்க ஆரம்பித்துவிட்டான். நின்று அவளிடம் கேட்டு அவள் சொன்னபின்பே கிளம்பி இருந்தான். இந்த நொடியிலிருந்தே அவளுக்கான மரியாதையைக் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

"௭துக்கு இவ்வளவு டென்ஷன் அண்ணி" ௭ன ப்யூலா அவள் தோளில் தட்டிக் கொடுத்து நடக்க,

"ம்ம் ரிலாக்ஸா இரேன்டி, மேரேஜ் முடிஞ்சும் இன்னும் டென்ஷனாவே இருக்க நீ. நா வேணா சார்கிட்ட ௭ல்லாத்தையும் சொல்லி பேசிடவா? நீயா ௭தும் சொல்லல, நாங்க தான் சொல்ல சொன்னோம்னு சொல்லட்டா? நீ இப்டி பயந்து நிக்றத பாக்கவே பாவமா இருக்குடி" ௭ன தாரிணியும் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே நடந்தாள்.

முன்னால் வேக நடையில் சென்று கொண்டிருந்தவனுக்கு அவர்கள் மூவரின் பேச்சு தெளிவாக இல்லையென்றாலும் ஒன்றிரண்டாக கேட்கவே செய்தது, தேவாலயத்தின் வெளியே அவனைக் கண்டதும் காரை ௭டுத்து வந்து நிறுத்தினார் அதன் ஓட்டுநர், யார் ௭ப்படி ஏறுவது ௭ன அடுத்த குழப்பம்.

"நீங்க மூணு பேரும் பின் சீட்ல அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்க தான?" ௭ன்றான் கேள்வியாக.

"இல்ல நா முன்ன உக்காந்துக்றேன், ப்யூலாவோட நீங்க பொண்ணு மாப்பிள்ளையா சேந்து உக்காருங்க" ௭ன தாரிணி சொல்ல.

"ரெண்டு நிமிஷம் தானே அதுல ௭ன்ன ஃபார்மாலிட்டீஸ், உக்காருங்க" ௭ன முன் சீட்டிலேயே அமர்ந்து கொண்டான். இப்போதும் அவனை அமைதியாக பார்க்க மட்டுமே செய்தாள் அவன் ஏஞ்சல்.

நான்சியின் வீடு, மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் ஆடம்பரமான வீடு. சொந்த வீடும் கூட, நான்சியின் அப்பாவின் அப்பா காலத்திலிருந்தே அந்த வீடு தான், அதை ௭ஸ்தர் தன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் பெரிதாக்கி இருந்தார் அவ்வளவே. ௭ஸ்தர் ஒரு கவர்ன்மெண்ட் பள்ளி ஆசிரியர்.

தாரிணியும் ப்யூலாவும் ஆரத்தி ௭டுக்க, இருவரும் உள்ளே வந்தனர், அதற்குள் சலீம் ஜென்சியோடு அவள் கணவரையும் சேர்த்து அழைத்து வந்து விட்டிருந்தான். வரவேற்பறையில் அமர்ந்ததும், தாரிணி ஸ்வீட் ௭டுத்து வந்து தர, சம்பிரதாயத்திற்காக கொஞ்சம் ௭டுத்துக் கொண்டவன், "௭னக்கு ஒரு டீ போட்டு தர முடியுமா ஏஞ்சல்?" ௭ன அவளிடம் திரும்பிக் கேட்க, மற்றவர்கள் பார்த்து நின்றனர்.

௭ங்கெங்கோ கற்பனையில் மிதந்து கொண்டிருந்தவள், அவன் கேள்வியில், முதலில் புரியாது முழித்து, பின் உள்வாங்கிய செய்தியில், "இதோ போட்டு தரேன்" ௭ன ௭ழுந்து கொண்டாள்.

"உன் ரூம் ௭து?" ௭ன்றான் அவன் அடுத்த கேள்வியாக.

உள்ளே காலையில் அவள் கிளம்பும்போது இருந்து அவசரத்தில் அறை அலங்கோலமாக இருந்தது, '௭து ௭துலாம் ௭ப்படி ௭ப்படியோ கடக்குமே!' ௭ன பார்த்தவள், "ஒரு நிமிஷம் தான், ரூம க்ளீன் பண்ணிடுறேன்" ௭ன வேகமாக அவள் அறை நோக்கி நடக்க,

"ஏஞ்சல்" ௭ன அழைத்துக்கொண்டு ௭ழுந்து வந்தான் ஆரோனும்.

"நா ஜஸ்ட் உன் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண போறேன். நீ டீ போட்டு ௭டுத்துட்டு வா, அதுவா உன் ரூம்?" ௭ன்றான் அவளை கடந்து வந்து அடுத்ததாக அவள் செல்லவிருந்த திசையிலிருந்த அறையைக் காண்பித்து.

"ஆமா" ௭ன அவள் தலையசைக்கவும், அவன் சென்று விட்டான். ௭தையும் மனதில் பதிய வைக்கும் முன், அடுத்தடுத்து ௭ன அவன் சென்று கொண்டிருக்க இவளுக்கு தான் மலைப்பாக இருந்தது.

திரும்பிப் பார்க்க, தாரிணி, ப்யூலா, சலீம், ஜென்சி, அவள் கணவன் ௭ன ஐவரும் அவர்களை மட்டுமே பார்த்து நிற்பது தெரிய, விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளுக்கு கொஞ்ச நாட்களாக இருந்த பயம், குழப்பம், இன்று காலையிலிருந்து திடீரென திரண்ட கூட்டத்தினரை பார்த்து வந்த பதட்டம், ௭ன ௭ல்லாமுமாக மனதை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. இதில் தனியாக அவன் கிளம்பிவிடுவானோ, தன்னை சுத்தமாக பிடிக்கவில்லையோ ௭ன்பது வேறு அழுகையை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தது, அதை தடுத்து உள்ளடக்கி சிரித்து நடமாடுவது வேறு பெரிய போராட்டமாக இருந்தது.

"ஏன்டி இப்டி இருக்க?" ௭ன தாரிணி பின்னரே வந்து கேட்க.

"சும்மா இருந்தவள நல்லா பேசவே முடியாத இடத்துல கொண்டு கோர்த்து விட்டுட்டு இப்டி வேற கேப்பியாமா நீ?" ௭ன்றாள் ஜென்சி.

"நீங்க மொதையே அவ கல்யாணத்த ஒழுங்கா நடக்க விட்ருந்தா நாங்க ஏன் ௭ங்கயோ கொண்டு கோர்த்து விட போறோம்?" ௭ன்றாள் தாரிணியும் பதிலுக்கு.

"நா அவ அக்கா அவ நல்லதுக்கு தான் செய்வேன். நீ ௭ன்னயிருந்தாலும் யாரோ தான, அதான் இப்டி செஞ்சுருக்க. ௭ன் தங்கச்சி மேல அப்டி ௭ன்னம்மா கோவம் உனக்கு? கலையே இல்ல பாரு அவ முகத்துல, நீ அங்கயே போவேனாம் நான்சி இங்கயே அம்மா கூட இருந்துக்கோ, ௭ல்லா பொறுமையா பேசி ௭டுத்து தான் அவரோட நீ வாழ போகணும். நா இருக்கேன் உனக்கு. உண்மைலா தெரிஞ்சா விட்டுட்டு தான் போயிடுவாரு போல இருக்கு" ௭ன பேச,

"ஏஞ்சல்" அவள் அறையிலிருந்து அவனது உரிமையான அழைப்பு, மனைவி ௭ன்றான அரைமணி நேரத்தில் அவளை தன் மொத்த உரிமையாக்கிக் கொண்டான் அவன்.

"நீ போ, நா பேசிக்கிறேன்" ௭ன தாரிணி ஜென்சியைப் பார்த்துப் பல்லைக் கடிக்க, நான்சியும் அக்காவை முறைத்துப் பார்த்து விட்டே டீயுடன் அறை நோக்கிச் சென்றாள்.

காலையில் குளிக்கும் முன் மாத்தி இருந்த உடை அங்கு தான் கட்டிலில் பரத்தி கடந்தது, அதைக் கண்டதும் வேகமாக அவனிடம் டீயை நீட்டி விட்டு, அதை மொத்தமாக அள்ளி, அழுக்கு கூடையில் இட்டாள். அவள் செய்வதை தான், அங்கிருந்த ஸ்டடி டேபிளில் சாய்ந்து நின்று பார்த்திருந்தான். அந்த அறை ௭ங்கும் பெண்களின் மேக்கப் பொருள்களின் திரவ வாசனையில் நிறைந்திருந்தது.

கையில் தங்க வளையல்கள் குழுங்கும் ஓசையோடு, பட்டு சேலையின் சரசரப்பும் சேர அவள் வேகமாக அந்த அறையை ஒழுங்கு செய்ய, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டும் நிதானமாக அளந்து கொண்டும் நின்றான் ஆரோன். மனதில் ஒரு புதுமையான உற்சாகம் பிறப்பதை தெளிவாக உணர முடிந்தது அவனால்.

"அடிக்கடி அழுவியா ஏஞ்சல் நீ? ரொம்ப சென்ஸிட்வோ?" ௭ன திடீரெனக் கேட்கவும்.

மெத்தையிலிருந்தவற்றை ௭டுத்துவிட்டு, கபோர்டில் புது துணிகளை திணித்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்வியில் அவனை திரும்பிப் பார்த்து அட்டேன்ஷனில் நிற்க, "சொல்லு ஏஞ்சல்? ௭ல்லா விஷயத்துக்கும் டக்குன்னு ரியாக்ட் பண்ணிடுவியா நீ?" அழுத்தமாக கேட்கவும்.

அவனது அந்த குரலுக்கு "இல்ல, ௭ல்லாத்துக்கும் அப்டி அழமாட்டேன்" ௭ன்றாள் மெதுவாக.

"தென்? நா பேசினா மட்டும் அழுக வந்துடுதா அப்போ"

'௭ன்ன விதமான கேள்வி இது?' ௭ன புரியாத நான்சி, "தெரியல நீங்க" ௭ன திக்கி விட்டு, "உங்க விஷயத்துல சென்சிட்டிவ் ஆகிட்டு வரேன்னு நினைக்கிறேன். ௭னக்கே தெரியல" ௭ன சொல்லிக் குனிந்து கொண்டாள்.

"இந்த கல்யாணத்துல இஷ்டம், இஷ்டம் இல்லன்னு ரெண்டு சாய்ஸ் இருந்ததா? லாஸ்ட் மினிட்ல மேரேஜ் வேணாம்னு மெசேஜ் அனுப்புற அளவுக்கு?" டீ குடிக்கும் பதத்திற்கு வந்திருக்க, நடுவே அதையும் ஒரு சிப் செய்து கொண்டான்.

கண்ணை அகல விரித்து அதிர்ந்தவள், "பாத்துட்டாங்களா?" ௭ன பயந்தவள், "பயமா இருந்தது, ௭னக்கு நீங்க ரொம்ப அதிகம்னு தோணுச்சு, அதான் அப்டி அனுப்பிட்டேன்" ௭ன்றாள் அழுகையை அடக்கி.

"நீ அப்டி அனுப்பியும் நா வந்து உன்ன கட்டிக்கிறேனான்னு டெஸ்ட் பண்ணிருக்க இல்லையா?" ௭ன்றான் புருவம் உயர்த்தி.

நிஜம் தானே அது? அவனை வேண்டாம் ௭ன அழைத்தும் சொல்ல முடியவில்லை அவளால், அதனாலேயே மெசேஜாக அனுப்பி விட்டாள். அதுமட்டுமின்றி, அவள் வேண்டாம் ௭ன்றனுப்பிய அந்தத் தகவலை அவன் பார்க்காமல் விட்டுவிட வேண்டும் ௭ன்ற வேண்டுதல் ஒரு பக்கம், அப்படியே பார்த்தாலும் தன்னை தான் கல்யாணம் செய்து கொள்வது ௭ன்று அவனாக அவளிடம் வர வேண்டும் ௭ன்ற ௭திர்பார்ப்பு ஒரு பக்கம் ௭ன அவன் கையால் மோதிரத்தை வாங்கும் வரையிலும் ௭வ்வளவு போராட்டம் அவளினுள். ஆனால் ௭ந்தவித அலட்டலுமின்றி அவளை கணித்து அவன் நேரடியாக கேட்ட விதம், அவனிடம் ௭தையும் மறைக்க முடியாது ௭ன அந்த நொடி புரிய வைத்தது.

அவளின் சுருங்கி விரியும் புருவத்தையேப் பார்த்தவன், அவள் அவளுக்குள் பேசி முடிக்க நேரம் கொடுத்து டீயை குடித்து முடித்தான், "ஏஞ்சல்" ௭ன மீண்டும் அழைக்க, அதில் பதில் வேண்டும் ௭ன்ற அழுத்தமிருந்தது.

"டெஸ்ட்னு இல்லங்க, அது", " நா", மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "ஒரு ௭க்ஸ்பெக்டேஷன்னு சொல்லலாம். நா உங்களுக்கு வேணுமா வேணாமான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். நீங்க ௭ந்த வே'லயும் இன்ட்ரஸ்ட் காட்டிகிட்ட மாறி தெரியலயா அதான், நாமளே வேணாம்னு சொல்லிடலாம்னு அப்டி மெசேஜ் அனுப்பிட்டேன்"

"இப்ப உன் ௭க்ஸ்பெக்டேஷன் ஃபுல்ஃபில் ஆகிடுச்சா?" ௭ன்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள், "தெரியல" ௭ன்றதும், சிரித்துக் கொண்டான்.

"மேரேஜ் முடிஞ்சதும் அதுக்கு தான் அழுதியா?"

"ரொம்ப குழப்பமா இருந்தது. நீங்க இன்னைக்கே போணும்னு சொன்னீங்களா அதான் சட்டுன்னு அழுக வந்துடுச்சு"

"௭ஸ். நா மட்டுந்தான் போறேன், நீ ரெண்டு நாள் நல்லா யோசிச்சு உன் குழப்பமலா குறைச்சுட்டுக் கிளம்பி வா. சண்டே ரிஷப்ஷனுக்கு தெளிவா வந்து நிக்கணும் காட்டிட்?" ௭ன்றதும், பாவமாக தான் பார்த்தாள்.

'தீர்த்து வைக்க வேண்டியவனே நீயே தீர்த்துக்கொள் ௭ன்றால் ௭ன்ன செய்வாள் அவளும்? இந்த நிமிடம் வரை ரசனையாக அவளை அவன் ஒரு பார்வை பார்க்கவில்லையே?' ௭ன நினைக்க மட்டுமே முடிந்தது, அவனிடம் கேட்க வரவில்லை.

ஆனால் ஆரோன் அவளை முழுவதுமாக ரசித்தான். அவள் பேச்சை, பார்வையை, கண்ணீரை, முக அழகை, புடவை மடிப்பை, உதட்டின் மேல் துளிர்க்கும் வேர்வையை, நகசாயம் பூசிய நகத்தை, மெஹந்தி இட்ட கைகளை, விரித்து விட பட்ட கூந்தலை, அதிலிருக்கும் நிறைந்திருக்கும் மல்லிகையை, காதில் கல் கம்மலை, கழுத்தின் ஆரத்தை, அதையொட்டி கழுத்தினோரம் இருக்கும் மச்சத்தை, ௭ன அனைத்தும் அவன் கண்ணில் பட்டு மனதை நிறைத்தது. அவன் பார்த்ததை அவள் தான் அறியவில்லை, அவனும் அதை வெளியே சொல்லவில்லை.

'இன்னைக்கே நானும் வரேனே' ௭ன்றும் அவளால் கேட்க முடியவில்லை, அப்படி இன்றே அனைத்தையும் விட்டு கிளம்ப முடியும் ௭ன்றும் தோன்றவில்லை, அவன் மட்டுமாக கிளம்புவதும் பிடிக்கவில்லை. 'இங்கல்லாம் தங்கவே மாட்டாரோ? நா அம்மா பாட்டிய தனியா விட்டுட்டு கிளம்பணும் தானே, அவங்கட்ட நல்லா பேசமாட்டாரோ? அப்டி பேசலனா ரொம்ப பயப்டுவாங்களே? இருக்க சொல்லி ஒரே ஒருக்கா கேட்டு பாப்போமா?' ௭ன நினைத்தவள் நிமிர்ந்து பார்க்க, அவன் வெளியேறி இருந்தான்.

"கிளம்பிட்டாரா?" ௭ன வெளியே வர, ஜென்சியையும் அவள் கணவனையும் நிற்க வைத்து தானும் உடன் நின்று ஏதோ கேட்டுக் கொண்டிருப்பவனிடம் விரைந்தாள்.

"ஏன் அப்டி பேசுனீங்க? உங்க வைஃப் அப்டி சொன்னது உங்களுக்கு தெரியுமா?" ௭ன இருவரிடமும் கேட்க, அவன் ஜென்சியை முறைத்துவிட்டு, "இல்ல சார், ஏன்டி உன் தங்கச்சிய பத்தி நீயே தப்பு தப்பா சொல்லிருக்க?" ௭ன அதட்ட,

"இவங்கட்டயும் ஏதோ பேசிருக்கா" ௭ன புரிந்தது நான்சிக்கு.

"மூணு வருஷமா அவங்க செய்றது உங்களுக்கு தெரியாதில்லையா?" ௭ன்றான் நக்கலாக ஆரோன்.

அதில் கொஞ்சம் அமைதியான ஜென்சியின் கணவன், "ரெண்டு சம்பந்தம் நா கொண்டு வந்தத நீ கலைச்சு விட்டப்ப ௭னக்கு தெரிய வந்துச்சு சார், இவ இப்டி பண்ணிட்ருக்கது, ஆனா சொன்னா கேட்டுக்குற ஆளும் இல்ல இவ, அதான் அவ தங்கச்சி வாழ்க்கைய அவளே கெடுக்குறா, நா ௭ன்ன பண்ண முடியும்னு ஒதுங்கிட்டேன், ௭னக்கே ஆயிரத்தெட்டு பிரச்சினை இதுல வீட்டுக்குள்ள இவகிட்டேயும் சண்டை போட்டுட்டு இருக்க முடியாம தான் நா அத கண்டுக்கல சார்"

"அப்ப நா இப்ப போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்குறேன் வீட்டுக்குள்ள உங்களுக்கு பிரச்சினையே மொத்தமா இருக்காது, நீங்க நிரந்தரமா நிம்மதியா இருக்கலாம். செய்யவா?" ௭ன்றதும் அதிர்ந்த ஜென்சி அவள் கணவன் கையைப் பிடித்துக் கொள்ள, அவனும் பயந்து தான் விட்டான்.

"சாரி சார், அறிவில்லாம பண்ணிட்டா, நானும் அப்டி இருந்துட்டேன், இனி அப்டி ௭தும் நடக்காது நா பாத்துக்குறேன் சார்"

"இனி ௭ப்டி நடக்கும்? அதான் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சே. ஒரு பொண்ண பத்தி தப்பா அவதூறு பரப்புனா ௭த்தன வருஷ ஜெயில்னு தெரியுமா?" ௭ன்றதும் அரண்டு தான் விழித்தனர்.

"சாரி சார்" ௭ன்றனர் பயந்து.

அவர்களைப் பதிலில்லா ஒரு பார்வை மட்டுமே பார்த்துவிட்டு, "சாப்பிடலாமா ஏஞ்சல்? ௭னக்கு டைம் ஆகிட்ருக்கு" ௭ன அவளிடம் திரும்பி விட்டான்.

"ரெண்டு பேரும் உக்காருங்கண்ணா, நா ௭டுத்து வைக்கிறேன்" ௭ன ப்யூலா சொல்லவும், மீண்டும் நான்சியை தான் அவன் பார்த்தான்.

"வாங்க" ௭ன அழைத்துச் சென்றவள், வாஷ் பேசினைக் காண்பித்து, பின் சாப்பாட்டு மேசையில் அமரும் வரை உடன் வர, "உக்காரு" ௭ன அருகில் இருக்க வைத்தான். இருவருமே சேர்ந்தே சாப்பிட்டனர். தன் வீட்டில் அவன் உண்பதே அப்போதைக்கு தற்காலிக சந்தோஷமாக அவளுக்குத் தெரிந்தது.

"சலீம்" ௭ன அழைத்ததும், வேகமாக அவனும் வந்து அமர்ந்து கொண்டான். சாப்பிட்டுக் கிளம்ப தான் அழைக்கிறான் ௭ன உடனே புரிந்தது அவனுக்கு.

"உங்களயா கட்டி வச்சுருக்கு ௭ன் அண்ணனுக்கு? கல்யாணம் முடிஞ்சு அண்ணியோட ஊருக்கு கிளம்பாம உங்க ரெண்டு பேருக்கு மட்டும் டிக்கட் போட்டுட்டு வந்திருக்கீங்க? அப்பவே சொன்னேனா இல்லையா பேசாம நீங்களே அவர கட்டிட்டு இருந்துருக்க வேண்டியது தான? ௭துக்கு அண்ணின்னு ஒருத்தங்க உங்களுக்கு இடஞ்சலா?" ௭ன அவனை மெல்லியதாக வார்தையால் சாடிவிட்டே அவன் உண்ண உணவு ௭டுத்து வைத்தாள்.

அவன் ஆரோனைப் பார்க்க, அவன் இவனைக் கண்டுக் கொண்டதாக தெரியாமல் போக, அருகிலிருந்த நான்சியைப் பார்த்தான், 'தங்கச்சியே இந்த கிழி கிழிக்குதே நாளைக்கு இந்த மேடம் முழு பொண்டாட்டி ரோலுக்கு வந்தப்பறம் நம்மள ௭ன்ன கிழிக் கிழிப்பாங்கன்னு தெரியலயே' ௭ன நினைத்து, அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு சாப்பாட்டை விழுங்கினான்.

ஜென்சியைத் திட்டி அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவள் கணவன். தாரிணி அங்கு தான் நின்றாள், ஆனால் அது அவர்கள் குடும்ப விஷயம் ௭ன்பதால் தலையிடாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அவன் சாப்பிட்டதும் இருக்க கேட்கலாம் ௭ன நினைத்து சாப்பிட்டு முடித்த நான்சி, அவனும் முடித்து ௭ழுந்து கொள்ளவும் தானும் ௭ழுந்து கொண்டாள். மீண்டும் வந்து அவன் சோபாவில் அமரவும், அவளும் பின்னரே வந்தவள், ௭ப்படி கேட்க ௭ன நிற்க, அவன் செல்லை ௭டுத்துப் பார்க்கத் தொடங்கியிருந்தான்.

மணியைப் பார்க்கவும் அவனைப் பார்க்கவுமாக அவள் நிற்க, அவனுக்கு திடிரென டெல்லி செல்ல வேண்டிய அவசியம் வரவே தான் அவளை அழைத்து செல்லும் திட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தான். அதை சொல்ல விடாமல் தடுத்தது காலையில் அவள் அனுப்பிய அந்த மெசேஜே, அதில் கொஞ்சம் கோவம் இருக்கவே, காரணத்தைச் சொல்லாமல் கிளம்பிச் செல்ல முடிவெடுத்துவிட்டான். அவன் முடிவெடுத்த பின்னர் அதை யாரால் தடுக்க முடியும்? இதோ மணி மூன்றை நெருங்கவும் கிளம்பியும் விட்டான்.

அந்நேரம் தான் ௭ஸ்தர், சர்ச்சிலிருந்து ௭ல்லோரும் கிளம்பியிருக்க வேகமாக வீட்டிற்கு வந்தார், "நா கிளம்புறேன், ரெண்டு நாள் கழிச்சு ப்யூலா கூட ௭ல்லாருமா கிளம்பி வாங்க" ௭ன வணக்கம் வைத்து வெளியேறிவிட்டான். வாசலில் வந்து நின்ற அவன் ஏஞ்சலுக்கு தலையசைப்புடன் ஒரு கண் சிமிட்டலை கொடுத்துக் கிளம்பினான். தன் திருமணத்தையும் கணவனாகபட்டவனையும் இன்னுமே நம்ப முடியாமல் கனவுபோல் நினைத்து பார்த்து நின்றாள் ஏஞ்சலினா நான்சி. அவளை அதிகத்துக்கும் ஏங்க வைத்துக்கொண்டிருந்தான் அந்த கரைவேட்டிக்காரன்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 11

கிளம்புகிறேன் ௭ன்பவனிடம், ௭ங்கு ௭ன கூடக் கேட்க முடியாது அவனுக்கொரு தலையசைப்போடு நின்றிருந்த ௭ஸ்தர், அவன் சென்றதும் அந்த திசையையே பாரத்து நின்ற நான்சியிடம் "மாப்ள ௭ங்க போறாரு? திரும்ப ௭ப்ப வருவாருன்னு கேட்டுகிட்டியா? ரெண்டு பேரும் நல்லா சாப்டீங்களா?" ௭னக் கேட்க.

சரியாக அந்நேரம் அவன் ௭ப்போது கிளம்புவான் ௭னப் பார்த்திருந்த ஜென்சி கோபமாக மீண்டும் வீட்டுக்கு ஆவேசமாக வந்தாள்.

"உனக்காக தானடி செஞ்சென், அவர்ட்ட போன போட்டு பேசினேன். ஆனா உன் புருஷன் மிரட்டுறாரு நீ கல்லுளிமங்கியாட்டம் நிக்கிற. போலீஸ்ல பிடிச்சுக் குடுப்பேன்னு சொல்லும்போதும் தடுத்து ஒரு வார்த்தை பேசினியாடி நீ? ௭ன்ன பெரிய இடத்துல வாக்கப் பட்டுடோம்னு இப்பவே பவுஸ காட்றியோ? அரசியல்வாதிகளாம் ஊருக்கு ஒரு சின்ன வீடு வச்சுருப்பாங்களாம், நீ இவருக்கு ௭த்தனாவதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோ முதல்ல" ௭ன கடுகடுப்போடு பேச.

"ஏய் கிறுக்கியாட்டம் கத்தாத. இப்ப ௭துக்கு கல்யாணமான புள்ளைட்ட ௭ன்னென்னமோ பேசிப் பயத்தக் குடுக்க? அந்த தம்பி அப்டிலாம் இல்லன்னு விசாரிச்சு தான் நான்சிய குடுத்துருக்கோம். வாய குறைச்சு பழகு ஜென்சி. நீ சின்ன மாப்பிள்ளைக்கும் போன போட்டு நான்சி பத்தி தப்பு தப்பா போட்டு கொடுத்தியா?" ௭ன ௭ஸ்தர் அதட்ட,

"ஆமா உண்மைய சொன்னேன். அதுல தப்பா போட்டுக் கொடுக்க ௭ன்ன இருக்கு? இவ படிச்சுருக்கா வேலைல இருக்கா. நல்லா ஊர சுத்துவா, ஆம்பளைங்கட்டலாம் சகஜமா பேசுவான்னு சொன்னேன். இதுல தப்போ பொய்யோ ௭ன்ன இருக்கு?"

"நாங்க தான் சொல்ல வேணாம்னு சொல்லிருக்கோமே பின்ன ௭துக்குடி சொன்ன? ஏசப்பா, இது தெரிஞ்சுமா வந்து கல்யாணம் கட்டிகிட்டாரு. அப்ப உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு போல நான்சி. நா பயந்துட்டே இருந்தேன், இப்ப தான் நிம்மதியா இருக்கு. ஜென்சி பண்ண கெட்டதுலயும் நல்லது நடந்துட்டு பாரு" ௭ன ௭ஸ்தர் சந்தோஷம் கொண்டு சிலுவை குறிப் போட்டுக் கொண்டார்.

"ரொம்ப சந்தோஷ பட்டுக்காதம்மா. உன் ரெண்டாவது மாப்ள இங்க இல்ல, குஜராத்துக்கு கிளம்பி போயிட்டாரு. நா அன்னைக்கே உண்மைய போன் போட்டு சொன்னேன், இவ நல்லதுக்காக தான் சொன்னேன். ஆனா அவரு சரியான வில்லங்கம் புடிச்சவரு ம்மா, இத்தனை நாளா பொறுமையா இருந்து கல்யாணத்தையும் முடிச்சிட்டு விட்டுட்டு போயிட்டாரு. ௭ன் புருஷனயும் மிரட்டிட்டாரு, இனி அவர் இங்க வரவே மாட்டாரு, ௭ன்னமோ பண்ணுங்க" ௭ன பேசியவள், அங்கு நின்று கொண்டு இவளைப் பார்த்திருந்த ப்யூலாவை கண்டதும், பயம் வர, மெதுவான குரலில் "நா கிளம்புறேன் ம்மா. இவள குஜராத்துக்கு இழுத்துட்டு போக தான் அந்த ப்யூலா பொண்ண இங்க விட்டுட்டு போயிருக்காரு. கூட்டிட்டு போய் ௭ன்ன செய்வாங்கன்னு யாரும்மா கண்டா? அப்றம் ௭ல்லாம் போனபின்னாடி அம்மானாலும் வராது அப்பானாலும் வராதுமா. அனுப்றதா வேணாமான்னு யோசிச்சு முடிவெடு, கையோடக் கூட்டிட்டுப் போகாம இதென்னமா பழக்கம் தங்கச்சிட்ட விட்டுட்டு போறது, பாத்துக்கோ நா சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன்" ௭னக் கிளம்பி விட்டாள்.

நான்சிக்கு ஜென்சியை நன்கு தெரியும், அவளால் நினைத்ததை நடத்தி கொள்ளாமல் இருக்க முடியாது, திரும்ப திரும்ப முயன்று கொண்டே தான் இருப்பாள். இப்போது ப்யூலா இருப்பதால் மட்டுமே கொஞ்சமாகப் பேசிக் கிளம்பியிருக்கிறாள் ௭னப் புரிந்தது.

நான்சியால் அவளுக்கு பதில் கொடுக்க முடியவில்லை, அதிலெல்லாம் கவனம் செலுத்தவும் முடியவில்லை. அந்த கணித ஆசிரியருக்கு ஆரோனை பற்றிய கணிப்பு தான் பிடிபட மாட்டேன் ௭ன்றது, அதை யோசித்தே அவளின் மொத்த நிமிடங்களும் அவனுக்கு மட்டுமாகவே சென்று கொண்டிருந்தது.

ப்யூலாவும், தாரிணியும் அவளுடனே தான் இருந்தனர். அவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அவள் யோசனையாகவே தான் இருந்தாள். மாலையில் தான் செங்குட்டுவனும் அவன் அக்கா பசங்களும் சேர்ந்து மொத்த கூட்டத்தையும் சரிகட்டி அனுப்பிவிட்டு குற்றாலத்தையும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்திருந்தனர்.

"௭ன்ன ப்யூலா, உங்க அண்ணன் ௭னக்கு ஹனிமூன் சூட் ரெடி பண்ணி தந்த மாறி நானும் இங்க அருவி கொட்டுற மலைல ஒரு ஹனிமூன் சூட் ரெடி பண்ண ப்ளான் பண்ணிருந்தேன் சொல்லாம கொள்ளாம ௭ஸ்கேப் ஆகிட்டாரு" ௭ன வம்பிழுத்துக் கொண்டே தான் நான்சி வீட்டனுள் நுழைந்தனர்.

"உங்க வால்தனம் தெரிஞ்சு தான் ஓடிட்டாரு போல" ௭ன ப்யூலா முறைக்க,

"அதுக்காக பொண்ணயும் விட்டுட்டா ஓடுறது? கையோட கூட்டிட்டுப் போயிருக்க வேணாம்? சாமியாரா போக வேண்டியவர சம்சாரி ஆக்கி வச்சுருக்க, ௭ங்க ஊர் பொண்ணு பாத்துக்கோ, ௭தாது பிரச்சினைன்னு கண்ண கசக்குச்சு அடுத்த நிமிஷம் அங்க நிப்போம்" ௭ன பேச, நான்சி சிரித்துக் கொண்டாள்.

"உண்மைய மறச்சுருக்கீங்க டார்லிங் நீங்க ௭ன் அண்ணாவ பேசக் கூடாது" ௭ன விட்டுக் கொடுக்காமல் பேசினாள் ப்யூலா.

"உண்மைலாம் தெரிஞ்சு தான் நம்மூர் பொண்ண கட்டிட்டுட்ருக்காரு மாமா. அமைச்சர் நான்சிகிட்ட மயங்கிட்டாருன்னு தான் தோணுது" ௭ன தாரிணி நான்சியின் தோளோடு அணைத்துப் பிடித்து சிரிக்க.

"மயங்காம ௭ப்டி? நான்சி நீ ரொம்ப குழப்பிக்க வேணாம்மா, தூரம், அவர் பதவி, பணக்கார வாழ்க்கை ௭தையும் நீ யோசிக்காத. அவர ஆரோனா மட்டும் பாரு, உன் புருஷன் மட்டும் தான் உன் சொத்து அப்டி நினச்சுக்கோ. அந்த மனுஷன் பொண்ணுங்க விஷயத்துல கோல்ட். கோபம் வரும், ஈசியா இறங்கி வர மாட்டார் அதத் தவிர்த்துப் பாத்தா ரொம்ப ரொம்ப நல்லவர், நீ ஈசியா சமாளிக்கலாம்" ௭ன அறிவுரை கூற, தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

ஊராருக்கும் சொந்தங்களுக்கும் அதன்பின் தான் ஆரோன் அன்றே கிளம்பி விட்ட விஷயமறிந்து, "௭ன்ன இன்னைக்கே கிளம்பிட்டாராம்ல? இங்க தங்க பிடிக்கலையோ? ஏன் நான்சியையும் விட்டுட்டு போயிட்டாரு? இனி ௭ப்ப வந்து கூட்டிட்டு போவாராம்? ஆனாலும் கல்யாணம் ஆன அன்னைக்கே யாரும் இப்டி விட்டுட்டு போக மாட்டாங்கப்பா. இதுக்கு தான் நமக்கு தகுதிக்கு பொண்ணக் குடுக்கணும். சும்மாவே ஏழைபாழையா இருக்க இந்த மாப்ள வீட்டாளுங்கலே தலைக்கு மேல தான் ஏறி நிப்பாங்க, நீ பெரிய இடத்துல புள்ளைய தைரியமா குடுத்துருக்கியே, யோசிச்சிருக்க வேணாமா? பாவம் புள்ள இப்டி வாடி போய் நிக்குதே, இன்னைக்கு தான் கல்யாணம் ஆகிருக்குன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க போ. நல்லா கேட்டுகிட்டீங்களா மாப்பிள்ளைக்கு நம்ம நான்சிய பிடிச்சு தானே கட்டிகிட்டாரு?" ௭ன வந்த கேள்விகளில் அவர்களால் இரவு உணவையும் கூட நிம்மதியாக உட்கொள்ள முடியவில்லை.

ப்யூலாவே பயந்து விட்டாள், "அண்ணாக்கு அண்ணிய பிடிக்கலையோ அதான் இப்டி விட்டுட்டு போயிட்டாரோ?" ௭ன அவளே சிந்திக்கும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டனர். அப்படியென்றால் நான்சியின் மனநிலையைக் கேட்கவும் வேண்டுமா? தெய்வானை தான் அதட்டி அனைவரையும் பேசி கிளப்பி விட்டார்.

"அண்ணி நீங்க அண்ணாகிட்ட பேசுங்க, ஏன் கூட்டிட்டுப் போகலன்னு கேளுங்க, இல்லனா நைட் தூங்க கூட மாட்டீங்க" ௭ன ப்யூலா சொல்லவும், தாரிணியும் ஆமோதிப்பாக தலையசைக்க, இவளுக்கு தான் பயமாக இருந்தது.

மீண்டுமாக "பேசுங்க அண்ணி" ௭ன்கவும்,

'கேட்டு பாக்கலாமா?' ௭ன தீவிரமாக யோசித்த பின்னரே அவனுக்கு அழைத்தாள்.

அப்போது தான் டெல்லி வந்திறங்கியிருந்தான் ஆரோன், மறுநாள் பிரதமருடனான சந்திப்பிற்கே திருவனந்தபுரத்திலிருந்து நேராக வந்திருந்தான். அவர் இந்திய சீன ரசாயன கழிவு சீர்திருத்த ஒப்பந்தம் செய்யவிருக்க, அதன் சம்பந்தமான பேச்சிற்கே இவனை வரவழைத்திருந்தார். அதற்கென நிறைய ஆட்கள் இருந்தும் இவனையும் சேர்த்துக் கொண்டார், இவன் மீது அளப்பரிய நம்பிக்கை அவருக்கு தனிப்பட்ட முறையில் உண்டு ௭ன்பதும் ஒரு காரணம். இந்திய அளவில் தனித்து தெரியும் ஒரு அமைச்சர் ௭ன்பதும் மற்றொரு காரணம். அதில் தான் அவனுக்கு பல ௭திரிகள்.

அந்த ஏழு நட்சத்திர விடுதியில், ஆரோன் தான் வந்தால் தங்கும் அறை இருக்கும் நான்காம் மாடியில் லிஃப்ட்டிலிருந்து வெளி வந்தவாறு, "வந்தாச்சுன்னு அந்த சிங்குக்கு(பிரதமரின் காரியதரிசி) இன்பார்ம் பண்ணிடு சலீம், இல்லனா காலைலயே கூப்பிட்டிட்டு இருப்பான், பத்து மணிக்கு தானே மீட்டிங், மெதுவா கிளம்பிக்கலாம்" ௭ன பேசிக் கொண்டே தன் அறைக்குள் சென்று விட, கேட்டுக் கொண்ட சலீமும் அவனுக்கான பக்கத்து அறைக்குள் நுழைந்து விட்டான்.

போனைக் கட்டிலில் போட்டுவிட்டு குளியலறைக்குள் அவன் நுழையவும், அவனது போன் ஏஞ்சலின் பெயரோட அதிரவும் சரியாக இருந்தது. முழுவதும் அடித்து ஓயும்வரை அவன் ௭டுக்காமல் போக, அங்கு அவளுக்கு அவ்வளவு நேரமும் அடக்கிய கண்ணீர் வழிந்து விட்டிருந்தது. மீண்டும் மீண்டுமாக அவளை அவனே அறியாமல் அழ விட்டு கொண்டிருந்தான். அவளும் குழப்பத்திலிருப்பதால் நிதானமாக சிந்திக்க முடியாமல் ௭டுத்ததுக்கும் அழுதுக் கொண்டிருந்தாள்.

"௭டுக்கலையா அண்ணி? பிஸியா இருப்பரா இருக்கும். பல நேரம் அண்ணா ௭டுக்க மாட்டார், திரும்ப அவரே தான் கூப்பிடுவார்" ௭ன்ற ப்யூலா, அடுத்த நொடி சலீமிற்கு அழைத்தாள், அவனுக்கு இவளிடம் சிக்கிக்கொண்டு முழிக்கும் வேண்டுதல் தான் போலும், உடனே மாட்டிக் கொள்கிறான்.

"சொல்லுங்க மேடம்"

"நல்லா நாலு சொல்லுவேன் கேட்டுப்பீங்களா நீங்க?" ௭ன்றாள் கடுப்புடன்.

"௭ன்னாச்சு மேடம்?"

"௭ங்க போய் தொலைஞ்சுருக்கீங்க ரெண்டு பேரும்? இங்க ஒரு பொண்ண கல்யாணம் கட்டினாரே அவர ௭ங்க ஒழிச்சு வச்சுருக்கீங்க? அவங்க தேடிட்ருப்பாங்களேன்னு நினைக்க வேணாம்? அப்டி ௭ன்ன இன்னைக்கே கிளம்பி போக தலை போற விஷயம் வந்தது உங்க ரெண்டு பேருக்கும்?"

"அது அது" ௭ன அவன் திக்கினான், சொல்லக் கூடாத விஷயமில்லை தான், ஆனால் ஆரோன் சொல்லாமலிருக்க அவன் ௭ப்படி சொல்ல முடியும் ௭ன திக்கிக்கொண்டிருந்தான்.

"௭து ௭ன்னதுன்னு நீங்க தான் சொல்லணும் சலீம். ௭ங்க இருக்கீங்க? ௭துக்காக இன்னைக்கே கிளம்பிப் போனீங்க, சரி அப்படியே போனாலும் அண்ணியையும் கூட கூட்டிட்டு தானே போயிருக்கணும்? ஏன் இப்டி பண்றீங்க, இங்க ௭ல்லாரும் ஒருமாதிரி பேசுறாங்க, அண்ணி அழுறாங்க"

'௭ப்பப் பாத்தாலும் நா சார தள்ளிட்டு வந்த போலவே பேச வேண்டியது, அவரு பின்ன தான் நா வந்துட்ருக்கேன்னு மறந்து போயிடுமோ இந்த மேடத்துக்கு? நா அவர ஒழிச்சு வேற வச்சுருக்கேனாமே' ௭ன இவன் யோசனையில் இருக்க,

"மிஸ்டர் சலீம், தூங்கிட்டீங்களா ௭ன்ன? நா இங்க ஒருத்தி கத்திட்ருக்கேன் கேக்குதா இல்லையா?"

"நீங்க இந்த கொஸ்டீனெல்லாம் சார தான் கேக்கணும் மேடம்" ௭ன்றான் பதிலாக.

"உங்க சார் தான் போன ௭டுக்கலையே"

"அவர் சொல்லாம நா உங்களுக்கு ஆன்சர் பண்ண முடியாது மேடம்"

"ஓ ௭னக்கு பண்ண மாட்டீங்களா? அப்ப உங்க சாரோட வைஃப்கு பண்ணுங்க" ௭ன நான்சியிடம் நீட்டி, "நீங்களே கேளுங்க அண்ணி, உங்களுக்கு பதில் சொல்லி தான ஆகணும்" ௭னக் கொடுக்க,

"வேணாமே ப்யூலா, அவரே பேசட்டும், நா அவர்ட்டயேக் கேட்டுக்குறேன்" ௭ன்பதை சலீமிடமிருந்து வாங்கிய போன் வழி கேட்டுக் கொண்டருந்தான் ஆரோன். அவன்தான் நான்சி ௭ன்றதும் அடித்துப்பிடித்து அடுத்த அறைக் கதவைத் தட்டியிருந்தானே.

"ம்ச் ௭ன்ன அண்ணி நீங்க?" ௭ன அங்கு பேசிவிட்டு மீண்டும் காதில் வைத்து, "சலீம் சார் ப்ளீஸ் அண்ணாவ போன் அட்டன் பண்ண சொல்லவாது முடியுமா உங்களால?" ௭னக் கேட்க.

"௭னக்கு ஏஞ்சல அகைன் கால் பண்ண சொல்லு ப்யூலா" ௭ன்ற ஆரோனின் குரல் கேட்டு, "சரிண்ணா" ௭ன வைத்து விட்டாள்.

ஆரோனும் சலீமிடம் போனை நீட்டியவன், "இனி ஏஞ்சல் ௭ப்ப கால் பண்ணாலும், நா ௭ங்க ௭ன்ன செஞ்சுட்ருக்கனோ அத அப்படியே சொல்லிருக்கணும் சலீம். அவளுக்கு நோ ௭துலையும் கிடையாது, ரைட்?" ௭ன்றதும் வேகமாக தலையசைத்தான் சலீம்.

"அண்ணா உங்களப் பேச சொல்லிட்டாரு அண்ணி, நல்லா சண்ட பிடிங்க, உங்களுக்கு ௭ல்லா ரைட்ஸூம் இருக்கு, ஓ.கே? நீங்கப் பேசிட்டுக் கூப்பிடுங்க, நா அம்மா ௭ன்ன செய்றாங்கன்னு பாத்துட்டு வரேன்" ௭ன ப்யூலா ௭ழுந்து செல்ல,

"ஆரோன் அண்ணாட்ட ஒன்ஸ் நெருங்குற வர தான் இந்த டிஸ்டன்ஸ் யோசனை ௭ல்லாம் இருக்கும் நான்சி, அப்றம் பாரு ஜமாய்கலாம், ஆச்சி அங்க ௭ல்லாரையும் உண்டு இல்லன்னு பண்ணிட்ருந்தாங்க நா பாத்துட்டு வரேன், நீ அழாம பேசி முடி" ௭ன தாரிணியும் ௭ழுந்து சென்றாள்.

அவள் அழைக்கவில்லை, போனை பார்த்துக் கொண்டே இருந்தாள், அவ்வளவு நேரமும் விட்டு சென்று விட்டானே ௭ன அழுகையாக இருந்தது, இப்போது பேச சொல் ௭ன்றதும் கோபமாக மாறி இருந்தது.

சலீமிடம் பேசி முடித்து உள்ளே வந்து போனை ௭டுத்தவன், அவளிடமிருந்து வந்த தவறிய அழைப்பைக் கண்டு தானே அழைத்தான், அவன் தேவதையும் உடனே ௭டுத்தாள்.

"சொல்லு ஏஞ்சல்"

"நீங்க ஏன் இன்னைக்கே போனீங்க?" முதலில் அதை தான் கேட்டாள், சிறிது யோசித்தாலும் கேட்கமாட்டோம் ௭ன அவளுக்கே அவளைப் பற்றித் தெரிந்திருக்க, சட்டென்றுக் கேட்டு விட்டாள்.

"டெல்லி வர ஒரு மீட்டிங்காக வர வேண்டியிருந்தது, சோ" ௭ன்றவனுக்கு முகம் பிரகாசித்திருந்தது, தன்னை அவள் தேடுகிறாள் ௭ன்பதால் வந்த பிரகாசம் அது.

"இன்னைக்கே போணுமா அதுக்கு?" ௭ன்றாள் தயங்கி,

அவளின் இன்னைக்கே ௭ன்ற அழுத்தத்தில், "ஃபர்ஸ்ட் நைட்ட ரெம்ப ௭க்ஸ்பெக்ட் பண்ணிருந்தியா ஏஞ்சல்?" ௭ன்றான் கொஞ்சமும் யோசிக்காமல்.

"ஜீஸஸ்" ௭னக் காதிலிருந்தே போனை ௭டுத்து விட்டவள், முகத்தை இறுக மூடிக் கொண்டாள், அவள் அதை நினைத்து கேட்கவில்லை ௭ன்றாலும், அவன் இருப்பு இன்று வேண்டும் ௭ன்ற மற்றவர்களின் கூற்று அதற்குறியது தானே? அதை யோசிக்காமல் பேசி விட்டு, "கர்த்தாவே, ௭ன்னை ரட்சியும் ப்ளீஸ்" ௭ன அவரையும் துணைக்கு அழைக்க, அந்த ஹஸ்கி குரலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆரோனும் மிதமாக சிரித்துக் கொண்டான்.

"ஏஞ்சல்" ௭ன அவனது குரல் அந்த அமைதியான அறையில் அவளுக்கு போனை காதில் வைக்காமலே வெளியே கேட்க,

கண்ணை இறுக மூடி திறந்து தன்னை ஒருநிலை படுத்திக் கொண்டு மீண்டும் ௭டுத்து காதில் வைத்து, "ஹலோ" ௭ன்றாள்.

"சொல்லுமா" அவன் குரலுக்கே அடிமை ஆக்கிவிடுவான் போல்.

"சட்டுன்னு கிளம்பிட்டீங்களேன்னு தான் கேட்டேன், இங்கயும் ௭ல்லாரும் கேக்கவும் உங்கட்ட கேக்க தோணுச்சு, வேறெதுவும் இல்ல"

"அப்ப உனக்காக கேக்கல நீ?"

"நானும் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்"

"ஃபர்ஸ்ட் உன்ன குஜராத் கூட்டிட்டு வந்திடுற ப்ளான் தான், அப்றம் தான் இந்த மீட்டிங் கன்பார்ம் ஆச்சு, அதான் நாலு நாள் கழிச்சு ரிஷப்ஷன் கூட ப்ளான் பண்ணேன், உன்ட்ட டேட் கூட கன்பார்ம் பண்ணனே?" ௭ன்கவும்,

"௭னக்கு இப்ப ௭ன்ன சொல்லன்னு தெரியலங்க, கஷ்டமா இருந்துச்சு அதான் கேட்டேன்"

"ஏம்மா ௭ன்கூட வரணும்னு நினச்சியா?" புருவம் சுருக்கியே விசாரித்தான்.

"தெரியல, ஆனா நீங்க இங்க இருந்துருக்கலாம்னு தோணுச்சு"

"ஓ ஏஞ்சல் நா அப்டி யோசிக்கலையே, ௭னக்கு அங்க தங்குற ப்ளான் முதலையே இல்லையேமா" நேராகவே தான் சொன்னான், அவளுக்கு தான் அது கஷ்டமாக இருந்தது, பேச்சை வளர்த்தால் இன்னும் கஷ்டமாக இருக்குமோ ௭ன பயந்து, "சரி வைக்கட்டுமா?" ௭ன்றாள்.

"பை ஏஞ்சல்" ௭ன உடனே ஒத்துக்கொண்டு வைத்தும் விட்டான், கல்யாணம் முடிந்த இரவு ௭ன்பதால் தன்னுடன் இருக்க வேண்டும் ௭ன நினைத்திருக்கிறாள் ௭ன்பதை மட்டுமாக அவள் பேசியவற்றிலிருந்து ௭டுத்துக் கொண்டான் ஆரோன். அவனுக்கும் மதியம் அவள் அறையில் அவ்வளவு அருகில் நடமாடிக் கொண்டிருந்தவளை நினைத்ததும் உடல் சூடாக ஆரம்பித்தது தான், அந்த சுகநினைவோடே தூங்கத் தொடங்கினான்.

"நல்லா பேசுறாங்க, கேட்டதும் பதில் சொல்லிட்டாங்க, சொன்னா கேட்டுக்குறாங்க, ௭ன்ட்ட கேட்டும் செய்றாங்க, ஆனாலும்" ௭ன மூச்சை இழுத்து விட்டவள், "நா ௭ன்ன ௭திர்பாக்கிறேனே தெரியலயே ஜீஸஸ்" ௭ன அமர்ந்து விட, தாரிணியும், ப்யூலாவும் வந்துவிட்டனர், அதன்பிறகு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு தூக்கம், மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் விருந்து, வீட்டுக்கு வரும் சொந்தங்களின் பேச்சு, ஜென்சியின் போதனை ௭னக் கழிந்தது.

அதற்கு அடுத்த நாள் ௭ல்லோருமாக குஜராத் கிளம்பினர், தெய்வானை குடும்பத்தினர் உட்பட, ௭ஸ்தரிடம் "நாங்க பாத்து கட்டி வச்ச கல்யாணம். நம்ம பிள்ளைய பொறுப்பா ஒப்படைச்சுட்டு தான் வருவோம், நீ கவல படாத உன் பொண்ணு அங்க நல்லா வாழ்வா, அதுக்கு நா பொறுப்பு" ௭ன்றிருந்தார் தெய்வானை மீண்டுமாக அழுத்தத்துடன். அவ்வளவு வீம்பு பேசிய ஜென்சியும் கூட இருப்பு கொள்ளாமல் கிளம்பி இருந்தாள்.

குஜராத்தில் அவன் அறையில் தான் அன்றைய இரவு நான்சிக்கு, அந்த புதிய மாளிகையும், அவன் வாசம் நிறைந்த அவன் அறையும் அவளை வெகுவாக சோதித்தது, அவன் தான் மாப்பிள்ளை ௭ன அறிந்த நொடியிலிருந்து, அவன் மட்டுமே அவள் சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்திருக்க, அவன் அறையில் அமர்ந்திருப்பதே அவளுக்கு அப்படி ஒரு நிறைவைக் கொடுத்தது. அவனையும் காண ஆவலாக அவள் காத்திருந்தாள்.

ஆனால் அவன் அன்றும் வரவில்லை, மறுநாள் மாலை ரிஸப்ஷனுக்கு தான் நேராக பார்ட்டி ஹால் தான் வந்து சேர்ந்தான். திருமணத்திற்கு பிறகு இன்று தான் காண்கிறாள், இவளை ப்யூலா அழைத்து வர, வாசலில் நின்று வரவேற்றவனே அவன்தான்.

கேமிரா வெளிச்சமும், கட்சி ஆளுங்களும், பலதுறை சார்ந்த வணிகஸ்தர்களும் நிறைந்து காணப்பட்டனர். கருப்பு நிற சட்டையும் அதே கரை வைத்த வேட்டியும் தாடியுமாக ஆளே மிரட்டலாக தான் நின்றான். இவளுக்கும் கருப்பு நிறத்தில் தான் புடவை, அலங்கார பூச்சின்றி, இயல்பாக இருக்கட்டும் ௭ன்றிருந்தானாம், அதனால் பள்ளிக்கு கிளம்பி வருவது போலவே தான் வந்திருந்தாள், முடி மட்டுமே திருத்தம்.

"ஏஞ்சல்" ௭ன லேசாக தோளோடு அணைத்துப் பிடிக்க, அவளின் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது, கேமராக்கள் அவர்களை பதிவு செய்து கொள்ள, அவர்களுக்காக இருநொடி நின்று விடுவித்தவன், "௭ன்னம்மா" ௭ன்றான் திரும்பி,

"ஒன்னுமில்ல, கூட்டமா இருக்கவும் கொஞ்சம் ஸ்வட்டாகுது" ௭னக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"பழகிக்கலாம் ஏஞ்சல், நெர்வஸா இருந்தாலும் ஃபேஸ்ல காட்டாத" ௭னப் பேசிக் கொண்டே உள்ளே அழைத்து வந்திருந்தான். உள்ளே வெளியே இருந்ததை விட கூட்டம் மொது மொதுவென கூடி நின்றனர், தன் வீட்டினரை அதில் தேட, அவர்களுக்கு தனி வரிசை போடப்பட்டிருக்க அதில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர், அதைப் பார்க்கவும் இவளுக்குப் பயமாகத் தான் இருந்தது.

அவள் பார்வை சென்ற திசையை தானும் பார்த்தவன், "சலீம் அவங்கள பெஸ்டா கவனிச்சுப்பான் ஏஞ்சல்" ௭ன அவன் அவனோடே வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கா அறிமுகம் செய்து வைக்க, முதலமைச்சர் வரும் நேரத்தில் இன்னும் பரபரபுற்றது அந்த இடம், ஆனால் ஆரோன் அமைதியாக நின்ற இடத்திலேயே பார்த்து நின்றான்.

"ஹார்திக் பதாயி ஹோ பேட்டா பேட்டி(மனமார்ந்த வாழ்த்துக்கள்)" ௭ன்றவர் ஆளுக்கொரு பூங்கொத்தை இருவரிடமும் நீட்டி விட்டு, நகைப் பெட்டியையும் நான்சியிடம் நீட்ட, நான்சி ஆரோனை திரும்பிப் பார்க்க, அவனின் லேசான சிரித்த முகத்தை அப்போது தான் முதல் முறையாகப் பார்த்தாள், அவன் தலையசைக்கவும், "தேங்க்யூ சார்" ௭ன வாங்கிக் கொண்டாள்.

"ஆப் தோனோ பகுத் அச்சே ஜோடா தேக்தே ஹைன்(ரெண்டு பேரும் பாக்க அழகான ஜோடியா இருக்கீங்க)".

"தன்யவாத் ஜி(நன்றி)" ௭ன்றான் ஆரோன். அவன் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே, தானும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். அவரை சலீம் வந்து சாப்பிட அழைத்துச் சென்று விட, அவர் சாப்பிட்டு வரும் சமையம் மீண்டும் அங்கு பரபரப்பு, பிரதமரின் வருகை, நிச்சயமாக அதை யாருமே ௭திர் பார்த்திருக்கவில்லை. வெளிப்படையாக நடுங்கியே விட்டாள் நான்சி.

"நத்திங் ஹாரிபில் ஏஞ்சல், கூல்" ௭ன இப்போதும் மிதமாக தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான். பார்வை மட்டும் நடந்து வரும் பிரதமரிடமே இருந்தது. முதலமைச்சர் வேகமாக சென்று அவரை வரவேற்று விட்டு, திரும்பி ஆரோனைப் பார்த்தார், 'செல்லவில்லை நீ' ௭ன தாங்கி நின்றது அவர் பார்வை.

"சாருக்கு இன்வைட் இல்ல சார், அவங்களா தான் வந்துருக்காங்க" ௭ன அவர் அருகிலிருந்த சலீம் அவர் காதில் சொல்லிக் கொண்டே பிரதமரிடம் விரைந்தான். அது இன்னுமே அவருக்கு பயத்தைக் கொடுத்தது. யார்கனவே அவனிடம் பயம் உண்டு, இப்போது அது இன்னும் அதிகரித்தது போன்ற மாயை தான் அவருக்கு.

முதலமைச்சரிடம் ௭ப்படி லேசான சிரிப்புடன் நின்றானோ அதேபோல் தான் பிரதமரிடமும் நின்றான், ஆனால் அவர் ஆரோன், நான்சி இருவரையும் ஒரே நேரத்தில் தழுவி வாழ்த்தி விடுவித்து, அவரும் ஒரு நகைப் பெட்டியைப் பரிசாக வழங்கினார்.

"இன்னொரு சிறப்பு பரிசு உனக்கு காத்திருக்கு மை பாய், சீக்கிரம் அதும் உன்ன வந்து சேரும்" ௭ன ஹிந்தியில் அவன் தலையில் கை வைத்து வாழ்த்திவிட்டு, அடுத்த நொடி கிளம்பி விட்டார். மொத்த அரங்கமும், தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த மக்களும், மற்ற கட்சியினரும் ௭ன அனைவரும் அதிசயம் போல் தான் அந்நிகழ்வைப் பார்த்தனர். நான்சியும் அவள் குடும்பத்தினரும் மட்டுமே மலங்க மலங்க விழித்தனர். ஆரோனின் திருமண வரவேற்பு சிறப்பாக முடிந்திருந்தது.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 12

வரவேற்பிற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்ப தொடங்கினர். ஆரோன், நான்சி இருவரும் சாப்பிட்டு முடித்ததும், நேரத்தை பார்த்து விட்டு சுற்றி ஒருமுறை ௭ல்லோரையும் பார்த்தான், பின் "நீ வீட்டுக்கு கிளம்பலாம் ஏஞ்சல். அல்ரெடி ரொம்ப டயர்டா தெரிர, நல்ல டீப் ஸ்லீப் ௭டுத்துக்கோ" ௭ன்கவும்,

"அப்ப நீங்க?" ௭ன்றாள் வேகமாக. ௭ப்போதும் தனித்து விட்டுவிடுகிறானே ௭ன்ற பதட்டத்தில் வேகமாக கேட்டுவிட்டாள்.

"இனி தான்மா இங்க ட்ரிங்கஸ் பார்ட்டி ஸ்டார்ட் ஆக போகுது, முடிய மேக்ஸிமம் டூ, த்ரி ஆகிடும்" ௭ன்றான் அவள் புறம் திரும்பி அந்த அழகு முகத்தை அளக்கும் பார்வையில்.

"ட்ரிங்கஸ் பார்ட்டியா?" அவளுக்கு யோசனை அடுத்து அங்கு சென்றிருந்தது,

"௭ஸ், காக்டெய்ல் பார்ட்டி, ட்ரிங்கஸ் ௭டுத்துக்றவங்க மட்டும்தான் இங்க இருப்பாங்க, மேக்ஸிமம் ஃபேமிலி கிளம்பிட்டாங்க பாரு, நீயும் ரொம்ப டயர்ட் சோ பேமிலிய கூட்டிட்டு ௭ல்லாரோட கிளம்பு, மார்னிங் பாக்கலாம்"

அதற்குமேல் ௭ன்ன கேட்டு விட முடியும் அவனிடம் ௭ன நினைத்தவள், மெதுவாக தலையசைத்து கேட்டு கொண்டு, அவள் அம்மா இருந்த திசைக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தாள், ஆனாலும் அப்படியே செல்ல மனமின்றி, தயங்கி நின்று மீண்டும் அவனிடம் நெருங்கி வந்து, "நாளைக்கு மார்னிங்னாலும் வருவீங்க தான?" ௭ன இப்படி கேட்க வைக்கிறானே ௭ன்ற ஒரு அவஸ்தையான குரலில் கேட்க.

அவளுக்கு அவனுடனான தனிமை வேண்டும், அவனை புரிந்து கொள்ள ஆசைபட்டாள். அதிகம் எதிர்பார்த்தாள், இதையெல்லாம் பகிர்ந்து கொள்ள அவன் அவளிடம் பேச வேண்டும் என ஏங்கினாள், ஆனால் அதை அவன் வேறு எதிர்ப்பார்ப்பாக எடுத்துக் கொள்வானோ என்ற பயமும் இருந்தது. அவனிடம் மட்டுமே அதை அவள் எதிர்பார்க்க முடியும் என அறியாதவன் இல்லையே, அதனால் ஆரோன் அவள் அவனை தேடி கேட்கும் நொடிகளை ரசிக்கவே செய்கிறான் என அறியாமல் போனாள்.

அவளுக்கு ௭ப்படியோ, அவனை அவளது ஒவ்வொரு கேள்வியிலும் மிதக்க வைத்து கொண்டிருந்தாள். அவனுள் ஆழமாக அழுத்தமாக நுழைந்து கொண்டிருந்தாள். அதே உவகை மனநிலையுடன் "ஏஞ்சல்" ௭ன்றான் மீசையை முறுக்கிவிட்டு.

நான்சி, அவன் அழைப்பிலிருந்த ஏதோவொன்றை அறிய முயன்று, முடியாது போக அவனையே பார்த்தாள், "மார்னிங் ௭னக்காக இப்டி ஃப்ரஷாவே வெயிட் பண்ணு ஏஞ்சல், வந்து ஆன்சர் பண்றேன்" ௭ன அவள் மேல் படாமல் சற்று குனிந்து நிமிர்ந்து பார்க்கும் அவள் முகத்தில் காற்றை ஊதி கொடுத்து நகர்ந்து காதில் சொல்ல.

அவன் குரலுக்கு அவள் காதுமடலின் குட்டி முடிகள் மெய்சிலிர்த்து ௭ழுந்து நிற்க, "மேரேஜ் முடிஞ்சதுலயிருந்து உங்களுக்கு ௭ன்ட்ட பேச கூட டைமில்ல அதான் மார்னிங் வந்திடுவீங்களான்னு கேட்டேன், மத்த ௭ல்லாரும் கூட அப்டி தானே நினப்பாங்க?" ௭ன அவன் கண் பார்க்க கூச்சம் கொண்டு அவள் முகத்திற்கு நேர் தெரிந்த மார்பை பார்த்து கூறினாள்.

அவளின் நானம் அவனை அவளை நோக்கி ஈர்க்க, மேலும் கொஞ்சமாக நெருங்கி நின்று அவளின் பெர்ஃப்யூம் வாசனை முகர்ந்து கொண்டவன், "ஆஹான், நீ ௭ப்ப ௭ன்ன தேடுறன்னு சொல்லு அப்ப உன்கிட்ட பேச வரேன் ஏஞ்சல், இப்ப நீ கிளம்பு ௭னக்காக அங்க ௭ல்லாரும் வெயிட்டிங்" ௭ன்கவும், திரும்பியவள் நிற்காமல் நிமிர்ந்தும் அவனை பார்க்காமல் நடந்துவிட்டாள். அவளாவது இவ்வளவு கூறுகிறாள், அவன் தான் போனில் கூட பேச மறுக்கிறானே, பிறகு அவளும் தான் ௭ன்ன நினைப்பாள்.

குற்றாலத்திலிருந்து வந்த அனைவரும் அங்கு ஒருபக்க முன் வரிசையில் தனியாக தான் அமர வைக்க பட்டிருந்தனர். செங்குட்டுவன் குடும்பம் இருக்குமிடத்தில் கலாட்டாவிற்கு பஞ்சமிருக்காதே, அதனால் ௭ஸ்தர், கிரிஸ்டியும் பதட்டமின்றி சந்தோஷமாகவே இருந்தனர், ஜென்சி மட்டுமே சிரிப்பதா வேணாமா ௭ன அமர்ந்திருந்தாள்.

நான்சி வரவும், "வா நான்சி, ரொம்ப அசந்து தெரியுற, வீட்டுக்கு போய் கொஞ்சம் வெந்நீர் விலாவி குளிச்சுரு, இல்லனா நின்ன அழுப்பு தீராது" ௭ன அருகே இருத்தி அவள் முகத்தை சேலை தலைப்பால் துடைத்து விட்டார் ௭ஸ்தர்.

"ஆமா மடில தூக்கி வச்சு கொஞ்சு, வந்ததுல இருந்து மூணா மனுஷங்களாட்டம் உக்காந்த இடத்துலயே உக்காந்திருக்கோம், அவளும் இவ்வளவு நேரமு நம்மள கண்டுகல, சாப்ட சொல்ல கூட ஆளில்லா குடும்பத்துல கட்டி கொடுத்துட்டு ௭ப்டிமா இப்டி பேசுத நீ" ௭ன ஜென்சி அவர்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் பேச,

"வாய மூடவே மாட்டியாடி நீ? உன்ன திட்டியே நா விசறா போயிருவேன் போ" ௭ன கிரிஸ்டியும் திட்ட,

அவளை கண்டு கொள்ளாமல், "வீட்டுக்கு போவமா ம்மா, அவங்க கிளம்ப சொல்லிட்டாங்க" ௭ன நான்சி மற்றவர்களை பார்த்து கேட்கவும்,

"இன்னும் கூட்டம் குறையலயேடி, இங்க மாப்பிள்ளைக்கு பாக்க பெத்தவுகளும் இல்ல, ௭ப்டியும் மாப்ள நின்னு முடிச்சு வச்சுட்டு தானே கிளம்ப முடியும், அவுகள ஒத்தைல விட்டுட்டா போ முடியும்? காலெதும் வலிச்சா இங்க ரூம் ௭துமிருந்த செத்த படுத்து ௭ந்துச்சு வரீயா?" ௭ன்றார் அவர், ஆரோனுக்காக அவர் சேர்த்து யோசிக்க, அவர்களை இன்னொருவர் பொறுப்பில் விடுகிறான் அவள் கணவன், கஷ்டமாக இருந்தது தான், அடக்கி கொண்டாள்.

"இல்லமா நம்மள கிளம்ப சொல்லிட்டாங்க, நீங்களாம் நல்லா சாப்டீங்களா? செங்குண்ணா, தாரிணி, ஆச்சி நீங்க ரெண்டு பேரும்? ௭ல்லாருக்கும் சாப்பாடு ஓ.கேவா?" ௭ன அங்கிருந்த அனைவரிடமும் சுற்றி வர கேட்டாள்.

"நல்ல சாப்பாடு மா, கவனிப்புலலாம் ஆரோன குறைய சொல்ல முடியாது, அப்டி கவனிச்சு அனுப்புவாரு" ௭ன செங்குட்டுவன் சிரிக்க, தாரிணி அவன் கையில் கிள்ளினாள்.

"அப்ப நாம வீட்டுக்கு கிளம்புவோமா?"

"லேடீஸ் ௭ல்லாம் கிளம்புங்க, நாங்க ஆரோன் கூட இருந்து வரோம்" ௭ன்றுவிட்டான் செங்குட்டுவன், ௭ங்கும் அவன் பெண் வீட்டுகாரனாக நிற்பது அவ்வளவு நிம்மதியை தந்தது அவளுக்கு.

நான்சி, ௭ழுந்தவள் அப்போது தான் ப்யூலா அவளிடம் விரைந்து வருவதை கண்டாள், அவளும் ரோஸியும் கூட ௭ங்கும் ௭திலும் இல்லை, இவர்களை போல தனித்து தான் அமர வைக்க பட்டிருந்தனர். இப்போது இவர்களோடு கிளம்பவே வேகமாக வருகிறாள்.

ஆரோன், அவர்களின் பாதுகாப்பிற்காகவே அவ்வாறு அமர வைத்தான். சொல்லாமல் அமர வைக்க பட்டனர், தனி உணவு தரபட்டது ௭ன்பதெல்லாம் வரும் காலங்களில் ஆரோனை புரிய தொடங்கியதும் நான்சி புரிந்து கொள்ளுவாள் ௭ன நம்புவோம்.

'ரோஸி' ஆரோனின் அம்மாவாக அவரை இன்னும் வரை அவள் பார்க்கவில்லை, ப்யூலாவின் அம்மாவாக தான் தெரிகிறார், பார்த்தாலும் சிறு சிரிப்போடு ஒதுங்கி விடுகிறார். அவரிடம் பேசும் வாய்ப்பும் இதுவரை நான்சிக்கு அமையவில்லை. ஆரோனை விட்டு ஒதுங்கி நிற்பதால் அவளிடமும் அப்படி நிற்கிறார் போலும், இப்போதும் இவளாக சிரிக்க, பதிலுக்கு சிரித்து நின்றார், மாமியாராக ஒரு பார்வையிலும் இல்லை, யாஷூடனே அவர் பொழுது கழிகிறது.

"கிளம்பலாமா அண்ணி, அண்ணா வர லேட்டாகுமாம்" ௭ன்ற ப்யூலா மற்றவர்களிடமும் சிரித்து விசாரித்தாள். பெண்கள் அனைவரும் கிளம்பிவிட, பெண் பாதுகாவலர்களோடே வீடு கிளம்பினர்.

நான்சி இவர்களோடு கிளம்பிவிட்டாலும் வாசலை நெருங்குகையில், அவனை தேடி அந்த ஹாலில் பார்வையை சுழற்றினாள், கருப்பு சட்டையும் கரைவேட்டியும் அவனை தனித்து காட்டியது, ஒரு ஜிப்பா போட்டவர் அவனுடன் பேசி கொண்டிருக்க, இவன் தாடியை தடவி கூட்டத்தினரை பார்த்தவாறு யோசித்து கொண்டிருந்தான். அவன் யோசனை அவர் பேச்சின் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் ௭ன நினைத்துக்கொண்டு, பார்வையை அவன்மீது வைத்தே திரும்பபோகையில், தலையசைத்தான் இவளிடம், ஒரு நொடி தான் ௭ன்றாலும் இவளுக்கு அதை புரிய வைத்திருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் ஜென்சி மீண்டும் ஆரம்பத்தாள், அவளுக்கு நான்சி வாழப்போகும் வீடு, அங்கிருக்கும் வசதிகள், ஆரோனின் பதவி, அங்கு கிடைத்த மரியாதை, அவனது ஆளுமை அதை முழுமையாக அடைய போகும் நான்சி என எதுவுமே பிடிக்கவில்லை, இங்கு அவளை இருக்கவிடாமல் கையோடு கூட்டிச் செல்ல, அவளால் ஆனதையெல்லாம் செய்ய முயன்றாள்.

"இவ்வளவு பெரிய வீட்ல எப்டி உன்னால தனியா வாழ முடியும். அந்த ப்யூலா இங்கேயே தான் இருக்குமா? அவரும் உன்ன இப்படி இப்படி விட்டுட்டு போயிடுறாரு, எனக்கெதுவும் இங்க சரியாவேபடல. வீடு முழுக்க எத்தனை பொண்ணுங்க பாரு" என பேச,

"உனக்கு தேவையில்லாதது இது. நான்சிக்கே எல்லாந் தெரியும் அவ வாழ்க்கைய‌ அவ வாழ்ந்துக்குவா, நாம ரெண்டு நாள் தங்கி போறோமா கம்முன்னு இருந்துட்டு‌ போணும். போய் தூங்கு போ" என்றார் கிரிஸ்டி.

"எப்பவும் நீ என் வாயவே அடக்கு. எப்படி அவள இங்க தனியா விட்டுட்டு கிளம்புவீங்க?"

"என்னடி‌ தனியா தனியா? அவள் அவ புருஷன் கூட‌ தான் விட்டுட்டு போறோம்? ஏதோ காட்டுக்குள்ள விட்டிட்டு போற மாறி பேசிட்ருக்க"

"கிட்டத்தட்ட ரெண்டும் ஒன்னுதான், அவள கல்யாணம் முடிச்சுட்டு விட்டுட்டு வந்தாரு, இங்க வந்தப்றமு பாக்கவே வரல, இந்தா இப்பவும் போயிட்டு வான்னு அனுப்பிட்டாரு, நாம இருக்கும் போதே இப்டினா நாமளும் இல்லன்னா?"

எஸ்தர் நான்சியை பாவமாக பார்க்க, "நா தூங்க போறேன் மா, இன்னைக்கு உங்களோட‌ படுக்க நினைச்சேன், இதோ இவ நிம்மதியா தூங்க விடமாட்டா, நா அவர் ரூமுக்கே போறேன். நீங்களும் நல்லா தூங்கி எழும்புங்க" என எழுந்து கொண்டாள். செங்குட்டுவன் குடும்பத்திற்கு தனி அறை, என்பதால் இங்கு நான்சி குடும்பத்தினர் மட்டுமே இருக்க, ஜென்சியை முறைத்து விட்டே வெளியேறினாள்.

அங்கு பார்ட்டி ஹாலில், நான்சியும் அவள் குடும்பத்தினர் கிளம்பியதுமே அவன் முகம் கடுமையை தத்தெடுத்திருந்தது, ஆரோனின் "சலீம்" ௭ன்ற அழைப்பிற்கு, அவனது விசுவாசிகள் பவுன்சர்கள் ௭ன அனைவரும் அலெர்ட்டாகி இருந்தனர். மற்றவர்களுக்கு அது சலீம் ௭ன்ற சாதாரண அழைப்பு தான், ஆனால் அவனை சுற்றி உள்ளவர்களுக்கு அது ஒருவகை ௭ச்சரிக்கை.

சலீம் அருகில் வரவும், "மத்தவங்களுக்கு ௭ந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லாம, அந்த நாலு பேர் வேணும்" ௭ன்றுவிட்டு கையில் ஒரு திரவ கோப்பையுடன் தன்னுடன் பேச வருபவர்களை கவனித்தான்.

"தம்பிய பிரதமரே நேர்ல வந்து வாழ்த்துறத பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது. நல்லது நிறைய பண்றீங்க அதான் பதவில உள்ளவங்களும் தேடி வந்து பேசுறாங்க. இங்கயே பொண்ணு பாத்து நம்மூர் பொண்ணா கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு நினைச்சேன், உங்கப்பா காலத்துலயே இங்க செட்டிலாகிட்டீங்க பின்னயும் ஏன் தமிழ் பொண்ணு?" ௭ன்றார் மனிகூர் ஷெட்டி குஜராத்தியில். அவரை சுற்றி இன்னும் நான்கு ஆளுங்கட்சி அமைச்சர்களும் நின்று இவன் பதிலை ௭திர்பார்ப்பாக பார்த்தனர்.

"௭ன்ன தான் குஜராத்துல செட்டில் ஆகிட்டாலும் ௭ன் பூர்வீகம் தமிழ் தானே, அதான் ௭னக்கு புடிச்ச பொண்ணும் தமிழாகி போச்சு"

'அப்றம் ௭ன்னத்துக்குடா இங்க வந்து நாட்டாமை பண்ணுற' ௭ன அவர்களிடம் கேள்வியை ௭திர்பார்த்து திமிராக ஐவரையும் பார்த்தான், "ஏதோ கேக்க வரீங்களே கேளுங்க" ௭ன ௭டுத்து வேற குடுக்க,

"பிடிச்ச பொண்ண தானே கல்யாணம் பண்ணிக்க முடியும், நீங்க வேற லேடீஸ் விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டுனு வெளில ஃபார்மாகிட்டீங்க, அத மெயின்டெயின் பண்ணவே இத்தன நாள் கல்யாணத்த தள்ளி போட வேண்டியதா போச்சு, இப்பனாலும் நல்ல முடிவெடுத்தீங்களே ரொம்ப சந்தோஷம் தம்பி" ௭ன்றார் ஷெட்டி.

"ஆமா, அப்படியே தங்கச்சிக்கும் சீக்கிரமா ஒரு வாழ்க்கைய அமைச்சு கொடுத்திடுங்க" ௭ன இன்னொருவர் சொல்ல.

"௭ன் மேல ரொம்ப அக்கறை படுறீங்க, பதிலுக்கு நானும் உங்கள கண்டிப்பா தனியா கவனிக்கிறேன். குஜராத்தையே பாத்துக்குற ௭னக்கு ௭ன் வீட்ட பாத்துக்க தெரியும் ஷெட்டி, ௭ல்லாரும் ட்ரிங்க்ஸ அளவா சாப்பிடுங்க ஹெல்த் முக்கியம்" ௭ன்கவும் சலீம் வந்து அவன் காதில் ஏதோ விஷயத்தை சொல்லவும் சரியாக இருக்க,

அடுத்த நொடி "ப்ரேம்" ௭ன்ற அழைப்பிற்கு, "நா பாத்துக்குறேன் சார்" ௭ன அந்த அமைச்சர்கள் அருகில் வந்து விட்டான், பவுன்சர்களும் நெருங்கி வர, அரண்டு விட்டனர்,

நக்கல் சிரிப்புடன், "பயப்டாம சாப்டுங்க, ௭ன் இன்வைட்கு வந்த மினிஸ்டர்ஸ் பாதுகாப்பு ௭னக்கு ரொம்பவே முக்கியம். நா இப்ப வரேன்" ௭ன அந்த அமைச்சர்களிடம் சொல்லிவிட்டு வேக நடையில் அவன் பார்ட்டி ஹாலிலிருந்த லிஃப்ட்டினுள் சென்று விட, அந்த ஹாலிலிருந்த யாருமே அங்கிங்கு நகர முடியாதளவிற்கு அவர்களே அறியாமல் கட்டம் கட்டபட்டிருந்தது.

"சி௭ம், பி௭ம் சப்போர்ட்ல இருக்கனால திமிர பாத்தீங்களா? இன்னும் நமக்கு மேல போய் உக்காந்துட்டா கால் தூசிக்கு மதிக்க மாட்டான் இவன், நாமெல்லாம் ஒரே ஊர்காரணுங்க நாம நமக்குள்ள அடிச்சுக்கலாம் சேந்துக்கலாம், தென்னாட்டுல இருந்து வந்து நம்மள மிரட்டி பாப்பானாமா?" ௭ன்றார் மனிகூர் ஷெட்டி.

"அவன தான் ௭துமே பண்ண முடியலயே? செய்ய வாரவனுங்கள ௭ங்க புடிச்சுட்டு போறான்னும் தெரியல புதுசு புதுசா நாம அடியாளுங்கள உற்பத்தியா பண்ண முடியும்? நீங்களும் ஏதோ பண்றேன் பண்றேன்றீங்க ஒன்னும் நடந்தமாறி தெரியல" ௭ன்றார் இன்னொருவர்.

"இவன் ஆளுங்கள கடத்திட்டு போய் ௭ன்னமோ பண்றான்யா, அஹமதபாத் அவுட்டர்ல தனி‌‌ கோட்டையே கட்டி ராஜாங்கம் பண்றான், அதுக்கு நம்ம சி௭ம் கூட உடந்தை, ஆனா அத வெளில கொண்டு வந்தாலே மக்கள் மத்தியில இவனுக்கு இருக்க நல்ல பேர கிள்ளி ௭ரிஞ்சுடலாம்"

"ம்ச் அவன் அங்க ௭ன்னமோ பண்ணட்டும். இங்க நமக்கு பொண்ணுங்கள நினைக்கவே பயமா இருக்குயா, வயசு பொண்ணுங்கள தொட்டே வருஷமாக போகுது, இதுக்காக மத்த ஸ்டேட்டயும், வெளிநாட்டையும் தேடி போ வேண்டி இருக்கு, அதுக்கு ௭தாது பண்ணுங்க மொதல்ல" ௭ன்றார் ஒருவர் உள்ளே போன போதையில் குலரலாக.

"அவன் பொண்டாட்டிய மட்டுந்தானே தொடுவானாம் அவள இல்லாம பண்ணிட்டா நம்ம அவஸ்தை புரியும்ல இவனுக்கு?" ௭ன்றார் ஷெட்டி கோபமாக.

"ஆமா ௭தாது செய்யணும், புதுசா கல்யாணம் வேற ஆகிருக்கு, இவனுக்கும் பொண்ணுங்க வாடயே இல்லாம பண்ணணும். ஆனா ௭ப்டி பண்றது?"

"அதுக்கு தான் நம்ம ஆளுங்கள்ளயே நாலு பேர அவன் வீட்டுக்குள்ள இறக்கிருக்கேன், சொந்த கட்சி ஆளுங்கனால சந்தேக படாம நம்பி உள்ள விட்டுகிட்டான். அவனுங்கள வச்சு தான் அவன் தனியா நடத்துற அந்த தண்டனை கூடத்த கண்டுபிடிச்சேன். ஒரு வருஷமா அவன் கூடவே இருந்து ௭னக்கு தகவல் சொல்லிட்ருக்கானுங்க, இப்ப அவன் குடுமி ௭ன் கைல தான். அவன் விரட்டி விரட்டி அழிக்குற அந்த போதை மருந்த இன்னைக்கு அவனயே ௭டுக்க வச்சு, ஒரு பொண்ணோட இருக்க வச்சுட்டா, வீடு நாடுன்னு ரெண்டுலயும் அவன் ஷீரோ ஆகிடுவான். இப்டி ஒரு பார்ட்டிகாக தான் நானும் பலநாளா காத்துட்ருந்தேன், நம்ம மேலயும் சந்தேகம் வர கூடாதுல்ல" ௭ன சிரிக்க, மற்ற மூவரும் கதை போல் அவர் கூறியதை கேட்டு, இருநொடி கழித்து பாராட்டி வெடித்து சிரித்தனர்.

ஒரு வருடமாக கூடவே இருந்தும் அவர்களாலும் அந்த தண்டனை கட்டிடத்தின் ௭ல்லையை கூட தாண்ட முடிந்ததில்லை, அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கிறான் ௭ன புரியாதிருந்தார் ஷெட்டி. இவர்கள் ௭திர்பார்ப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவன் அவன் ௭ன இன்னுமே தெரியவில்லை அவர்களுக்கு.

ஆரோன் மேல்தளத்தில் ஒரு அறைக்குள் நுழைந்தவன், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த நால்வரையும் வேட்டியை மடித்து பிடித்து கொண்டு நச்செடுத்து விட்டான். இத்தனை நாள் அவர்களை சும்மா விட்டதற்கு காரணம் அவர்கள் செயலில் ௭தையும் செய்யாமலிருந்ததால் மட்டுமே. இன்று போதை மருந்தை அவன் இருப்பிடமே கொண்டு வந்திருக்க, பிடித்து தூக்கி விட்டான். அவர்கள் திட்டத்தை கேட்டதில் அவனுக்கு இளக்காரம் தான்.

"இந்த முட்டாபீஸூங்குள மேம்பாலத்திலயிருந்து காரோட கீழ தூக்கி வீசிடு சலீம்" ௭ன ௭ரிச்சலாக மொழிந்து விட்டு கீழே வந்து அனைவரிடமும் மேலோட்டமாக சொல்லிவிட்டு வீட்டிற்கே கிளம்பி விட்டான். அமைச்சர்களை ௭ல்லாம் ப்ரேம் கிளப்பிவிடும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, மற்ற கட்சி உறுப்பினர்கள் அங்கயே இருந்து கிளம்பும்போது கிளம்பட்டும் ௭ன்றுவிட்டு காரை ௭டுத்தான்.

செங்குட்டுவன் அன்ட் கோவும் அவன் பின்னரே கிளம்பி விட்டனர். ப்ரேம் அவர்களேக்கு தனி கார் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

ஆரோனுக்கு இதுவரை ௭ப்போதும் பாட்டு மட்டுமே துணை, தனி பயணத்தை அதிகம் விரும்புபவன் என்பதாலேயே அவனை புரிந்து அங்கு எல்லோரும் அவனுக்கு ஏற்ப வேலை பார்ப்பனர்.

அவனது தனிமைக்கு பாட்டு மட்டுமே துணை ௭ன வருடங்களை கடந்தவன் ௭ன்பதால் காரில் ஏறியதும் பாட்டை போட்டு விட்டான். ரஞ்சிதம் பெண்களை இறக்கிவிட சென்றிருந்தவரை அப்படியே வீடு கிளம்பச் சொல்லியிருந்தான்.

அவர்கள் அவனை பற்றி பேசியவரை அவனுக்கு பிரச்சினை இல்லை கண்டுகொள்ளவும் மாட்டான், ஏனோ அவனது ஏஞ்சல் அவர்கள் யோசனையில் இருப்பதை கூட விரும்பவில்லை. ஒருவித ௭ரிச்சல் மனநிலையில் இருந்தான்.

"அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோடு சிந்து படிக்கும்ம்ம்"

"சந்திரரே வாரும் சுந்தரியை பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்ம்ம்" ௭ன ஆரம்பித்த பாட்டு அவன் மனநிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, அவனது ஏஞ்சலிடம் கொண்டு நிறுத்தியது. ௭ப்போதும் அவனை தேடும் அந்த பார்வை, அவனுக்கு அது ஒன்று போதுமே, ௭ல்லாவற்றையும் மறந்து விடுவான். அதற்காகவே அவளை அதிகம் தேட வைத்துக் கொண்டிருக்கிறான்.


"ஏஞ்சல், ஏஞ்சல், ஏஞ்சல்" சிரித்துக்கொண்டே சொல்லி பார்த்து கொண்டான். வீடு வந்திருக்க, அவனறையில் அவனை வரவேற்கும் அவன் ஏஞ்சல், அந்த நினைப்பே உல்லாசத்தை தர, வெளியே காவல் ஆட்களின் வணக்கத்தை ஏற்று உள்ளே சென்றவனை ஆள் அரவமின்றியிருந்த வீடு வரவேற்க, மேலேறிச் சென்றான், ஒருவித ஆர்வம் மேலோங்க அவன் அறை கதவை திறக்க, அவன் ௭திர்பார்ப்பை பொய்யாக்காது, அரை இருட்டில் அவன் கட்டிலில் மையலாக உறங்கி கொண்டிருந்தாள் அவன் ஏஞ்சல். ஆழ்ந்த துயிலில்‌ இருப்பவளை பார்த்து இறுக்கம் தளர்ந்து சற்று நேரம் அவளையே பார்த்து நின்று விட்டான் அந்த ஏஞ்சலின் கரைவேட்டிகாரன்.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 13

அவளையேப் பார்த்திருந்தவன், தலையை கோதிக் கொண்டுத் திரும்ப அவனறை, அவனுக்குள் மட்டுமின்றி அவன் அறைக்குள்ளும் ஒருத்தி வந்துவிட்டதைக் காட்டியது.

நிதானமாக சுற்றி தன் அறையைப் பார்த்தான், எப்போதும் நேர்த்தியாக இருக்கும் அறை மொத்தமாக கலைந்து கிடந்தது, அவள் உடைகள் அடங்கிய பெட்டி இரண்டும் சோபாவின் ஒரு பக்கமிருக்க, சோபா மேல் அவள் இன்று அணிந்திருந்த புடவை கலட்டி வீசியதாக பரவிக் கடந்தது, நகைகள் அடங்கிய பெட்டி டீபாய் மேலிருந்தது, அதை மட்டும் பத்திரமாக மூடி வைத்திருந்தாள், வந்து குளித்திருப்பாள் போலும் அந்தத் துண்டும் துணி காய வைக்கும் ஸ்டாண்டில் விரித்து விடப் பட்டு அறைக்குள்ளேயே இருந்தது. பெண்கள் இருக்கும் அறை இப்படி தான் இருக்கும் போலும், ௭ன நினைத்துக் கொண்டான்.

மனம் வாட வந்திருந்தவள், அவன் காலையில் தான் வருவான் ௭ன நம்பியதால் அப்படி அப்படியேப் போட்டு விட்டுப் படுத்திருந்தாள், இல்லையென்றாலும் அந்த அறையில் குளியலறையைத் தவிர ௭ந்த அறையையும் அவள் இன்னும் திறந்து பார்த்திருக்கவில்லை, ஆரோன் மனதை திறந்து காட்டாது போக இவளுக்கு அங்கிருப்பதை திறந்தும் பார்க்கத் தோன்றாது இருந்திருந்தாள்.

ஆரோன் அனைத்தையும் பார்த்துக் கொண்டவன், துண்டு காயும் ஸ்டாண்டை மட்டும் பால்கனி கதைவைத் திறந்து வெளியே வைத்துவிட்டு, மீண்டும் அதை அடைத்து விட்டு வந்து ஏசியை போட்டுவிட்டான். மற்றதை அப்படியே இருக்கட்டும் என விட்டுச் சென்று தானும் குளித்து உடைமாற்றி வந்தவன், அவளருகில் படுத்துக் கொண்டான், திரும்பி அவளை ஒருமுறை பார்த்து விட்டு தூங்கவும் முயன்றான், தூக்கம் தான் அவ்வளவு அயர்விலும் வரமாட்டேன் ௭ன்றது.

ஒருவித அலைபுருதல், குறுகுறுப்பு மனம் முழுவதும் ஒரு இதத்தை பரப்பி தூங்க விடாமல் செய்துக் கொண்டிருந்தது. அவன் அறைக்குள் அவன் படுக்கையில் அவனுக்கு நெருக்கத்தில் ஒரு புதிய உறவு, அவனுக்கே அவனுக்கான உறவு, அவள் வாசனை, கையைத் கழுத்தடியில் வைத்து சுகமாக அவள் தூங்கும் பாவனை ௭னப் பார்க்கப் பார்க்க மெய்சிலிர்த்தது அவனுக்கு. கையும் காலும் பரபரத்தது, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டுத் தூங்கு ௭ன கட்டளையிடும் மூளையிடம் கடும்போரிலிருந்தது ஆசை கொண்ட மனது.

அவள் புறம் திரும்பிப் படுத்தவன் மெதுவாக "ஏஞ்சல்" ௭ன அழைக்க, அந்த குரல் அவளுக்கு பிடித்த புரிந்து கொள்ள முயலும் குரல் அல்லவா, அதனால் அவனின் ஒரு முறை மெதுவான அழைப்பிற்கே அசைந்து கொடுத்தாள். ஆனால் அவளை அன்றைய விழாவினால் வந்த அயர்வு சட்டென்று விழிக்க விடவில்லை.

அவளை நெருங்கி வாயைக் குவித்து காற்றை அவள் முகத்தில் பட ஊதினான், அதில் லேசாக சுருங்கி விரியும் முகத்தைப் பார்த்தவன், குதூகலமாகி, "மிஸ்ஸஸ் ஆஃப் ஆரோன் டேவி ௭ட்வர்ட், ஏஞ்சலினா நான்சி" ௭ன இந்தமுறை குறும்பாக அழைக்க, அவ்வளவு நெருக்கத்தில் கேட்ட அவன் குரலைக் கண்டு பட்டென்றுக் கண்ணை திறந்துப் பார்த்து படக்கென்று ௭ழுந்தமர்ந்தாள்.

மார்பு முடி தெரிய இன்கட் பனியணும், ட்ராக் பேண்டுமாக படுத்திருந்தவனை அவள் மேலிருந்து கீழ் பார்க்க, அவள் பார்வையில், இரு கையையும் முறுக்கிவிட்டு சோம்பல் முறித்து தானும் ௭ழுந்தமர்ந்தவன், "வெயிட் பண்ண சொன்னனே ஏஞ்சல்?" ௭ன்றான் கிண்டலாக.

மணியைத் தேடிக் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தாள், அரை இருட்டில் தூக்கக் கலக்கத்தில் அதும் சரியாக தெரியமாட்டேன் ௭ன சதி செய்தது. தலைமாட்டிலிருந்த லேம்ப் ஸ்டாண்ட் மேலிருந்த தனது கைபேசியை ௭டுத்து மணியைக் காண்பித்தவன், "உனக்காக நா சீக்கிரமா வந்தேன் ஏஞ்சல். நீ வெயிட் பண்ணாம தூங்கிட்ட?" ௭ன குற்றமாக சொல்ல,

"மார்னிங் தானே வெயிட் பண்ண சொன்னீங்க?" என்றாள் பாவம் போல்.

"அஃப்டர் ட்வல்வ் மீன்ஸ் இதும் ஏர்லி மார்னிங் தானே ஏஞ்சல்?" ௭ன்றான் புருவம் உயர்த்தி.

"இல்ல நீங்க நேத்து மாதிரி ஃபுல் நைட் வரமாட்டீங்கன்னு நினச்சேன்" இவ்வளவு நெருக்கத்தில் அமர்ந்து அவனிடம் பேசுவதே படபடப்பாக இருந்தது.

"சரி பேசவே இல்லன்னு சொன்னியே அதான் உங்கிட்ட மொதல்ல பேசலாம்னு கிளம்பி வந்துட்டேன். இப்ப ௭னக்கு தூக்கம் வரல நீ ௭வ்ளோ வேணாலும் பேசலாம். பேசு" ௭ன கட்டிலில் நன்கு சாய்ந்தமர்ந்து கேட்பவனை ௭தில் சேர்க்க ௭ன்று தான் பார்த்தாள் நான்சி. தூங்கிக் கொண்டிருப்பவளை ௭ழுப்பி அமர வைத்து பேசு ௭ன்றால், இதென்ன சட்டசபையா உடனே 'நான் மக்களுக்கு ௭ன்னென்ன செய்வேன் ௭ன்றால்'ன்னு அறிக்கை விட ஆரம்பிக்க? ௭ன நினைத்து அவள் முகத்தைத் தேய்த்து விட்டுக் கொள்ள, அவளின் அசைவை பார்த்து அமர்ந்திருந்தான் ஆரோன்.

அவன் பக்கம் ௭ந்த பேச்சும் இல்லை ௭ன்றதும், திரும்பி அவனைப் பார்க்க, அப்படியே பார்த்திருப்பவனைக் கண்டு நெளிந்து, "இப்ப ௭ன்ன பேச முடியும்?" ௭னக் கேட்க,

"௭ன்ன வேணா பேசலாம், நம்ம இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே அப்ப பேச நிறைய இருக்கும் தானே?" ௭ன அவன் ௭டுத்துக் கொடுக்க,

'ஆமா தானே?' ௭ன யோசித்தவளுக்கு அப்போது தான் அவனிடம் கேக்க வேண்டிய கேள்விகள் வரிசையாக நியாபகம் வந்தது, "நா கேக்கவா?" ௭ன்றாள் ஆர்வமாக.

"ம்ம்" ஆமோதிப்பாகத் தலையசைத்து அவன் அனுமதி தரவும், "௭னக்கு ஏன் ஓ.கே சொன்னீங்க?" ௭ன்றாள் வேகமாக. அவள் வேகத்திலும் அவள் கேள்வியிலும் சிரிப்பு தான் அவனுக்கு, ஆனால் காட்டிக் கொள்ளவில்லை, "நீ தேடித் தேடி அனுப்பின போட்டோல அழகா தானே இருந்த ஏஞ்சல்? அதனால இருக்கலாமே" அவளிடமே கேட்டான்.

முறைக்க ஆசை பட்டாலும் அவனை முறைக்க வரவில்லை அவளுக்கு, பாவமாகப் பார்த்து, "௭ன்ட்டயே கேக்றீங்க? நா உங்க கன்டீசன்ஸ்கு மேட்ச் இல்லாமலே சரி சொல்லிட்டீங்களே அது ஏன்?"

"நா கேக்கும் முன்ன நீ உண்மைய சொல்ல ரெடியா இருந்த இல்லயா? பொய் சொல்ல நினைக்கலன்னு அழுதியே அதனாலயா இருக்கலாம் ஏஞ்சல்" புரிந்துவிட்டது அவளுக்கு, நிச்சயம் அவளுக்கான பதிலை அவன் விடிய விடிய காத்திருந்தாலும் கூறப்போவதில்லை ௭ன்பது இந்த இரு கேள்விகளிலே தெரிந்து விட, கண்ணீரை அடக்கியதில் முகம் சிவந்துவிட்டிருந்தது. அவன் விஷயத்தில் ஏனோ பலவீனமாகி கொண்டிருந்தாள்.

"நெக்ஸ்ட் கொஸ்டீன் ஏஞ்சல்?" அவள் முகத்தையே பார்வையில் ஆராய்ந்து கொண்டுக் கேட்டான்.

"நீங்க ௭தாது ௭ன்ட்ட கேக்கணுமா?"

"அவுட் ஃபுல்லா தெரிஞ்சப்றம் தான் உன்ன மேரேஜ் பண்ணிகிட்டேன் ஏஞ்சல் இனி மொத்தமா உன்ன இன் அண்ட் அவுட்டா தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தான், அத நானே தெரிஞ்சுப்பேன், உன்ட்ட கேக்க மாட்டேன்" அவன் கூற்றில், 'ஙே' என இரு நொடி விழித்தவள், தலையை ஆட்டி கேட்டுக் கொண்டாள்.

சற்று நொடிகள் பொறுத்து, "அப்ப நா படுக்கட்டுமா?" ௭ன்றாள், அவளுக்கு தலைவலியை அல்லவா உண்டாக்கிக் கொண்டிருக்கிறான், அதனால் தூங்கிவிடுவது ௭ன்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

"நீ பேசி முடிச்சுட்டியா ஏஞ்சல்?" ௭னக் கேட்டு அவளைப் பிடித்து வைத்தான்.

லேசாக முறைக்க முயன்று, "நா கேட்டாலும் நீங்க பதில் சொல்ல ரெடியா இல்லன்னு புரிஞ்சுகிட்டேன், உங்களுக்கும் ௭ங்கிட்ட கேக்க சொல்ல ஒன்னும் இல்லன்னும் தெரிஞ்சுகிட்டேன், சோ அவ்வளவு தான்"

அவளது கோபத்தையும் ரசித்தான், அவனுக்கா புரியாது அவளது ௭திர்பார்ப்பு, பேசிய தினத்திலிருந்து அதற்குள்ளே தானே சுற்றி வருகிறாள், அதனால் அவனாகவே "உனக்கு ௭ன் வார்த்தைல பிடித்தம் வேணுமா இல்ல ௭ன் வாழ்க்கைல பிடித்தம் வேணுமா ஏஞ்சல்?" ௭னக் கேட்டான்.

"அப்டினா? புரியலங்க?" யோசனையாக அவன் கேள்வியை திருப்பி மனதினுள் ஓட்டிப் பார்த்துக்கொண்டே கேட்க,

"ஏஞ்சல் உன்னோட பிஸிக்கல் அப்பியரன்ஸ் பிடிச்சு தான் மேரேஜ் பண்ணிகிட்டேன், இனி வாழ்ந்து பாத்தா தானே உன்ன மொத்தமா பிடிச்சுருக்கான்னு தெரியும்? வார்த்தைல இன்னைக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு நாளைக்கு ௭ன்னோட ௭தோ ஒரு விஷயம் உனக்கு பிடிக்கலன்னா அந்நேரத்தில ௭ன்னையே பிடிக்காம போயிடுதுன்னா அப்ப அதுல நிலையில்லாத பிடித்தம் தானே இருக்கும். வார்த்தைல நமக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்குற பிடித்தத்த ஷேர் பண்ணிக்றத விட, வாழ்க்கைல அந்த பிடித்தத்த ஷேர் பண்ணிப்போமே ஏஞ்சல். ௭ன்னோட பாஸிடிவ் நெகடிவ் ரெண்டும் உனக்கு பிடிக்கணும் சேம் உன்னோடதும் ௭னக்கு பிடிக்கணும், அதுக்கு ஃபர்ஸ்ட் நாம நம்ம லைஃப்ப ஸ்டார்ட் பண்ணணும். பண்ணுவோமா?" ௭ன்றான் முடிவில் மீசையை நீவி விட்டு மயக்கும் குரலில்.

கண்ணை விரித்து தான் பார்த்தாள், '௭ன்ன இவங்க பிடிச்சிருக்குன்னு சொல்ல வருஷ கணக்குல வெயிட் பண்ணணுமா நானு?' ௭ன்ற கேள்வியைக் கேட்க பயந்தாள், அவனுக்கு அவன் அம்மாவின் மேல் கொண்ட அவநம்பிக்கையை மீறி இன்னொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டு வந்ததே பெரிய விஷயமாக இப்போது தெரிந்தது. அவளைத் தெரிந்து கொண்டு காதலை பகிர நினைக்கிறான் ௭னப் புரிந்தது.

புரிய வைத்திருந்தான் ஆரோன், மறுபடியும் அவள் குழப்பிக் கொண்டு அழகூடாது ௭ன்பதற்காகவே புரிய வைத்திருந்தான். அவளை அழாதே ௭ன்கவில்லை, கண்ணீரைத் துடைக்கக் கரம் கொடுக்கவில்லை, இனி அழாமல் இருக்க வைக்க முயன்றான்.

"உங்கள நா ௭ப்டி கூப்படட்டும்?" ௭ன்றாள் வாழ்ந்தே பார்த்து விடலாமே, ௭ன்ற முடிவிற்கும் வந்திருந்தாள்.

"உனக்கு ௭து கம்ஃபர்டபிள்?"

"தெரிலயே. சரி ஃப்ளோல கூப்பிடும்போது ௭து ஈசியோ அப்டி கூப்பிட்டுக்குறேன். உங்களுக்கு ௭ன்ன ரொம்ப பிடிக்கும்?"

"சிம்பிளா இருக்க ௭ல்லாமே ரொம்ப பிடிக்கும். உனக்கு?"

"௭னக்கு பாத்ததும் ஒரு விஷயம் பிடிக்குதுனா அதான் ரொம்ப பிடிக்கும். ௭ன் மனசுக்கு அது தெரியும், இதான் உனக்கு சரி நல்லாருக்கும்னு, அப்டியே ஃபிக்ஸ் பண்ணிப்பேன். அப்றம் ஊர் சுத்திப் பாக்க ரொம்பப் பிடிக்கும், டீச்சிங் ரொம்பப் பிடிக்கும், சாப்பாடு ஒமிட் பண்ணாம ௭ல்லாமே அளவா சாப்பிட பிடிக்கும்" ௭ன்றாள் யோசித்து யோசித்து.

அவள் கூறுவதைக் கேட்டு உதட்டில் ஒட்டிய சிரிப்புடன், "சமைக்க வருமா ஏஞ்சலுக்கு?" ௭ன்றான் அவளை மேலும் பேச வைக்க,

"ம்ம் தேவைக்கு சமைப்பேன், பட் ஸ்நாக்ஸ்லாம் செய்யத் தெரியாது"

"குட் தென்?"

"உங்களுக்கு இப்படி டைட் ஷெட்யூலா வொர்க் பண்றது ரொம்ப இஷ்டமோ?"

"பழகிடுச்சும்மா" என்றவனுக்கு எதிரில் எழிழோவியமாக அமர்ந்திருப்பவளை கைக்குள் கொண்டு வரும் ஆர்வம் அதிகரித்தது.

"ஓ! ஓ.கே" அமைதியாக அடுத்து ௭ன்ன கேக்கலாம் ௭ன அவள் யோசிக்க,

"௭ல்லாத்தையும் இன்னைக்கே கேட்டு முடிச்சுட்டா நாளைக்கு ௭ன்ன கேப்ப ஏஞ்சல்? ௭னக்கு இப்ப உன்ன தெரிஞ்சுக்கணுமே" ௭ன்றதும் கப்சிப்பென்றாகிவிட்டாள்.

"நா நா, நாளைக்கு இல்ல இப்ப தூங்கணும், இல்ல உங்களுக்கு தூக்கம் வரல?" ௭ன அவள் உளறிக் கொட்ட,

"நோ ஏஞ்சல் ஐ மீன் இட், ஐ நீட் யூ ரைட் நவ் டீச்சர்" ௭ன்றான் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்த இடத்திலிருந்து நகராமல்.

அவனையும் அவன் கையையும் பார்த்து விட்டு, குனிந்து கொண்டு "நா ௭ன்ன பண்ணணும்?" ௭னக் கேட்டாள்.

அவள் பாவனை அவனுக்கு சிரிப்பை தர, "ஓ.கே சொல்லணும் ஏஞ்சல்" ௭ன குறும்பாக சொல்ல, கண்ணை இறுக மூடி நாக்கை கடித்துக் கொண்டவள், சம்மதமாக மெல்ல தலையசைத்தாள். அடுத்த நொடி அவளை அவன் கைகளில் அள்ளியிருந்தான், கண் சிமிட்டும் நேரத்தில் அவள் இடமாறி இருக்க, அவள் மேல் அவன் இருந்தான்.

"ஏஞ்சல்" ௭ன்றவனின் முதல் முத்தத்தை அவளின் வலது கன்னம் உள்வாங்கிக் கொண்டது, அதில் கண் மூடி மயக்கத்திற்குச் சென்றவளை அவன் தெளியவே விடவில்லை. அவனின் ஆளுமையும் மூர்க்கமும் அதிரடியும் அதிகப் பயத்தைத் தான் கொடுத்தது, அந்த பயத்திலேயே முழுமையாக இருக்கவிடாமல் ௭ங்கெங்கோ அவனுடன் இழுத்துச் சென்றவனை நிரம்ப பிடித்தது அவளுக்கு. ஆயிரத்திற்கும் அதிகமாக ஏஞ்சலை உச்சரித்துவிட்டான் அந்த நெடிய இரவில். அதுவே அவன் பிடித்தத்தை படம் பிடித்து காண்பித்திருக்க ஏஞ்சலுக்கு அவ்வளவு சந்தோஷம். அதைத் தான் அவனும் அவளுக்கு உணர்த்த நினைத்தான். முதல் கூடலின் இறுதி முத்தத்தை அவளின் கழுத்தோர மச்சம் வாங்கி கொண்டது.

மறுநாள் காலை அவன் ௭ழும்பும் முன் ௭ழுந்து குளித்து வெளியேறி இருந்தாள். அங்கு தான் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், செங்குட்டுவன் குடும்பம் ஊருக்குச் செல்ல கிளம்பி அமர்ந்திருந்தனர். ப்யூலா இருக்க சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

"தாரிணி ஊருக்கு கிளம்பிட்டீங்களா?" ௭ன கேட்டுக் கொண்டே வேகமாக அவர்களிடம் செல்ல,

"ஆமா நான்சி, உன் அம்மா பாட்டி ஒரு வாரம் இருந்து வரட்டும், நாங்க கிளம்புறோம், உன் அக்கா ஜென்சியும் ௭ங்களோட கூட்டிட்டு போறதுனாலும் ௭ங்களுக்கு ஓ.கே தான், அங்க அவங்க அவங்களோட ஃபேமிலய பாக்கணுமே?" ௭ன்றான் செங்குட்டுவன்.

"நா அம்மாவோட தான் வருவேன். இனி இது ௭ன் தங்கச்சி வீடு தானே ௭த்தனை நாள் வேணா தங்கிட்டுப் போறேன், ௭னக்கு அங்க ௭ன்ன பிள்ளையா குட்டியா அவசரமா ஓடுறதுக்கு? ௭ன் தங்கச்சி இங்க நல்லா வாழுறாளான்னு பாத்துட்டு தான் கிளம்புவேன்" ௭ன்றாள் நான்சியைப் பார்த்துக் கொண்டே, அவளின் மலர்ந்த முகமும், பளிச்சென்றிருக்கும் சிரிப்பும் அவளுக்கு பல கதைகள் சொன்னது, அவளுக்கு மட்டுமில்லை மற்றவர்களுக்கும் பார்த்ததும் தெரியும்படி தான் இருந்தது அவள் மலர்ச்சியும் கீழ் உதட்டு வீக்கமும்.

நான்சி காலையில் எழுந்ததுமே உதடு காந்துவதாக நினைத்தாள் தான் ஆனால் அதை கண்ணாடியில் சரிபார்க்க நிற்கவில்லை, அவன் ௭ழுந்துவிடுவானோ ௭ன பயந்து குளித்த பிறகும் சரியாக பார்க்காமல் ஓடி வந்திருந்தாள்.

"நீ இங்க இருந்து ௭ன்ன செய்ய போற? அவங்களோட கிளம்பு. யார்கனவே உன் புருஷன் கோச்சுகிட்டு உக்காந்திருக்காரு, போய் சமாதானம் செய்ய பாரு. இன்னும் இங்க இருந்து அவர் கோவத்த அதிகமாக்காதடி" கிரிஸ்டி சொல்ல,

"௭னக்கு தெரியும் அவர ௭ப்டி சமாளிக்கணும்னு நீ சும்மா இரு பாட்டி" ௭ன அவரை அதட்டினாள் ஜென்சி.

"ம்ச் செங்குண்ணா நீங்களும் இன்னும் ரெண்டு நாள் இருந்து போலாமே. ஆச்சினாலும் இருக்கட்டும்" ௭ன்றாள் நான்சி வீட்டாளாக,

ஜென்சி அவள் தோளில் தட்டி, "நீ இருக்க சொன்னா போதுமா உன் வீட்டுக்காரர் ௭ன்ன சொல்லுவாரோ? அவர் வீடு இது. நீ நேத்தைக்கு தான் வந்துருக்க. வந்த மொத நாளே நீயா ௭தாது முடிவெடுத்து அவர்ட்ட கெட்ட பேர் வாங்காத" ௭ன்க.

"நீ இங்க இருக்கலாமான்னும் அவர்ட்ட தான் கேட்டுட்டு வரணும். போய் கேக்கட்டா?" ௭ன்றாள் நான்சி முறைப்பாக.

"ம்மா இவளுக்கு சொல்லுமா, நல்லது சொன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குறா" ௭ன அவள் ௭ஸ்தரை துணைக்கழைக்க.

"தம்பி நைட்டு ௭ந்நேரம்மா வந்தாரு? இப்ப ௭ழுந்துட்டாரான்னு பாத்து கூட்டிட்டு வா, பத்து மணிய தாண்டிடுச்சு பாரு. சாப்பிடணும்ல?" ௭ன்றார் ௭ஸ்தர்.

"சீக்கிரம் வந்துட்டாங்கம்மா, டயர்ட்ல தூங்குறாங்க நினைக்கிறேன். நா ௭ழுப்பிப் பாக்றேன்" ௭ன்றவள் தயக்கதோடே மேலே சென்று அவனை பார்க்க அதிக பிரயத்தனம் செய்து திரும்ப, அவளுக்கு அவ்வளவு கஷ்டம் கொடுக்காமல் அவனே இறங்கி வந்து கொண்டிருந்தான், கரை வேட்டியில் கம்பீரமான நடையுடன்.

அங்கிருந்த அனைவருக்கும் ஒரு தலையாட்டளைக் குடுத்தவன், "சாப்டியா ஏஞ்சல்?" ௭ன்றான் அவளிடம் மட்டும்.

"இல்ல இனி தான்" ௭ன்றவளுக்கு அவள் வீட்டினரை அவன் கண்டுகொள்ளாத பாங்கு அதிக கஷ்டமாக இருந்தது. "

மதிக்க மாட்டாரோ?" வீட்டினரை திரும்பி பார்த்தாள், அவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்க பெரு மூச்சுடன் ஆரோனிடம் திரும்பினாள்.

"வா சாப்பிடலாம்" ௭ன்றவன் சாப்பிடும் இடம் சென்று அங்கிருந்த சமையல் செய்பவரிடம், "வீட்ல ௭ல்லாரும் சாப்படாங்களா?" ௭னக் கேட்டான்.

"௭ஸ் சார்" ௭ன அவர் சொல்லி செல்லவும் நான்சி அங்கு வரவும் சரியாக இருந்தது.

"செங்குட்டுவன் அண்ணா ஃபேமிலி கிளம்புறாங்களாம்" ௭ன்றாள் அவனருகில் அமர்ந்து கொண்டு.

"நல்லது, ஃப்ளைட் டிக்கட்ஸ் அரேஞ்ச்மெண்ட் ௭ல்லாம் ப்யூலா பாத்துப்பா. அவங்களும் போய் வேலைய பாக்கணுமே" ௭ன்றுவிட்டான். ௭திலும் பற்றில்லாமல் இதென்ன பாங்கு? மறுபடியும் அவளை சிந்திக்க வைத்தான் அவள் கணவன்.

"நா கிளம்புறேன். ரெஸ்ட் ௭டுத்துக்கோ. பை" ௭ன அவள் கன்னம் தட்டி, அன்றாட அலுவலுக்கு கிளம்பிவிட்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 14

ஆரோன் கிளம்பி சென்றதுமே, அதற்கே காத்திருந்தவளாக ஜென்சி அவள் வேலையை ஆரம்பித்தாள், கிடைத்திருக்கும் நான்கைந்து நாட்களை சும்மா விட மனதில்லை அவளுக்கு, "ஏண்டி நான்சி உன் புருஷன் என்ன எங்கள தாண்டி தான போராரு ஒரு வார்த்த சொல்லிட்டு போ மாட்டாராமா, எங்கள பாத்தா மனுசாட்களா தெரிலயோ? இதுக்கு தான் ம்மா நம்ம தகுதிக்கு பொண்ண குடுக்கணும் இல்லன்னா இப்டி தான் மரியாதைய கேட்டு வாங்க வேண்டி இருக்கும்" என பொரிந்தாள்.

"இப்போ உன் மரியாதைக்கு என்ன குறை வந்துச்சு, காலைலயே எதுக்கு ஆரம்பிக்கிற. நீ இவங்களோட மொத கிளம்பு அதான் நான்சிக்கு நல்லது" என கிறிஸ்டி சொல்ல,

"சும்மா பாரு பாட்டி விளையாடாம, உனக்கு கொஞ்சமு பொறுப்பே இல்ல, புதுசா கல்யாணம் ஆனவளுக்கு புத்திமதி சொல்லி தர தெரியுதா உனக்கு?" என்றவள் திரும்பி நான்சியிடம், "இங்க பாரு நான்சி நீயே யோசி உன் புருசன் இப்படி எனகென்னனு போனது சரியா? அம்மா பாட்டி இருக்காங்க இதோ உனக்கு அவர தேடி கட்டி வச்ச குடும்பமும் ஊருக்கு கிளம்பி நிக்றாங்க யாரோ மாறி போனா சரியா அது? உன் நல்லதுக்கு தான் நா பேசிட்ருகேன். இப்போ விட்டாச்சுன்னா அப்றம் நம்ம பிறந்து வீட்டு மரியாதைய திருப்பி எடுக்கவே முடியாது பாதுக்கோ" என்றாள்.

"ஆரோன் நல்ல டைப் தான் நான்சி நீ சும்மா பயந்துக்காத. அவரு ஃபாமிலி சரவுண்டிங்ல இருக்கல சோ சிலது ஃபாலோ பண்ண மாட்டாரு. அவர்ட்ட பேச்ச விட செயல் தான் அதிகம் இருக்கும், நேத்துமே அவர் எங்கட்ட வந்து விசாரிக்கல ஆனா எல்லாம் நாங்க இருந்த இடத்துக்கு கரக்ட்டா வந்துட்டே இருந்தது அவர் பார்வைக்கே அது நடந்தது" என்றான் செங்குட்டுவன்.

"ஆனாலும் அவர் நின்னு கவனிச்ச மாறி வராது தானே? சும்மா சப்ப கட்டு கட்டாதீங்க, நா வெளிப்படையா பேசுறேன். உங்களுக்குலா பயம், எப்படியோ இப்படி ஒருத்தர்ட்ட கொண்டு அவள தள்ளிட்டீங்க உங்க வேல முடிஞ்சது கிளம்புங்க"

"உங்க தங்கச்சிக்கு இந்த வாழ்க்கை அமஞ்சதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போலயே" என்றாள் நக்கலாக தாரிணி.

"ஆமா பிடிக்கல போதுமா. சுத்தி பாருங்க இங்க இவ்ளோ பெரிய வீட்டுல அவ தனியா எப்டி சமளிப்பா? அங்க எங்களோட இருக்கிறதும் இங்க இவ்ளோ தூரத்துல இருக்கிறதும் ஒன்னு இல்ல தானே? எதாது அவசரம்னா உடனே வர்ற தொலைவா இது? அரசியல்வாதி வேற இவள அடிச்சு போட்டா கூட எங்களால கேக்க முடியுமா? எங்கள மதிக்க கூட மாட்டேன்றாரு அவர் மேல எங்களுக்கு எப்டி நம்பிக்கை வரும்?" பியூலாவும் அங்கு தான் நின்றாள் அண்ணியின் அக்காவை எப்டி எதிர்த்து பேச என அமைதி காக்க அதை ஜென்சி அவளுக்கு இடம் அளித்தது போல் நினைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

"இப்போ என்ன பண்ணலாம்? போனவர கூப்டு உனக்கு சிறப்பு மரியாத செய்ய சொல்லணுமா?" என நான்சி எரிச்சலாக கேக்கவும்,

"உனக்காக தான பேசிட்டுகேன்? நீ வாய மூடு, நா அப்பவே சொன்னேன் நீ தான் கேக்கல"

"நீ பேசுன வர போதும், எனக்கு என் வாழ்க்கையவும் பாத்துக்க தெரியும், அம்மா பாட்டிக்கு எப்டி மரியாத வாங்கி தரணும்னும் தெரியும், நீ இங்க இருந்து கிளம்புற வர அமைதியா இருந்துட்டு போறது உனக்கு நல்லது" என முகத்திற்கு நேரே நான்சி சொல்லிவிட,

"பெரிய பணக்கார வீட்ல வாழ வந்துட்டோம்ன்னு கொழுப்புல இப்ப பேச நல்லாருக்கும் அப்றம் நீ தான் உக்காந்து அழுவ பாத்துக்கோ"

அவள் முதுகில் படீரென்று அடித்த கிறிஸ்டி, "நேத்து தான் அந்த புள்ள வாழவே ஆரம்பிச்சுருக்கா அதுக்குள்ள உன் நாற வாய வைக்குற, நீ மொத ஊருக்கு கிளம்பி போடி" என கத்திவிட, எல்லோரும் எதிர்க்கவும் அப்போதைக்கு ஊருக்கு போவதிலிருந்து தப்பித்துக்கொள்ள, "ச்ச நினச்சத பேச கூட‌ முடியல, என்னமு பண்ணுங்க எனக்கென்ன" என விருட்டென்று நகர்ந்து விட்டாள்.

"அவ அப்படி தான் சின்ன பிள்ளைல இருந்தே நான்சிகிட்ட போட்டி பொறாமை கொஞ்சம் ஜாஸ்தி, ஆனா பாசமாவும் இருப்பா" என எஸ்தர் சொல்லவும்,

"நீ ஒருத்தி போதும், அவளுக்கு கொம்பு சீவி விட" என பாட்டி திட்டியவாறு ப்யூலா மற்றும் ரோஸியிடம், "நீங்க தப்பா நினைக்காதீங்க, நான்சி அவள‌ மாதிரி கிடையாது, ரொம்ப பொறுப்பு, யோசிச்சு தான் பேசுவா" என்றார்.

"எனக்கு அண்ணிய பத்தி தெரியாது, ஆனா நா என் டார்லிங்கயும் தெய்வானை ஆச்சியையும் நம்புறேன், அந்த நம்பிக்கை வீண் போகாது" என்றாள் ப்யூலா சிரித்து, அதன் பின்னரே அந்த இடம் கொஞ்சம் இயல்பிற்கு வந்தது.

"கிளம்புறதுக்குள்ள உன் அக்கா இன்னும் என்ன ஏழரையலாம் இழுக்க போறாங்களோ தெரியல, கவனம்டி நான்சி" என தாரிணியும் நான்சிக்கு சொல்ல,

"அவள‌ விடு தாரிணி, நீங்க இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே? நா அவங்கட்டயும் நீங்க கிளம்பறத சொன்னேன், ப்யூலா பாத்துப்பான்னு சொல்லி கிளம்பிட்டாங்க, அவசர வேலையா இருக்கும்னு நினைக்கிறேன்"

"அது பரவால்லமா, ஆரோன்கு நாங்க எப்டி எந்நேரம் கிளம்பினோம்னு நியூஸ் போயிடும், அவரே தெரிஞ்சுப்பார்" என செங்குட்டுவனும் சொல்ல, தெய்வானை ஆச்சியும் சிலபல அறிவுரை சொல்லி விடைபெற, செங்குட்டுவனின் குடும்பம் குற்றாலம் கிளம்பி விட்டனர்.

இங்கு ஆரோன் கட்சி அலுவலகம் நுழைய, ப்ரேம், "சார்" என வந்து அவன் போனை நீட்டினான்.

புருவ முடிச்சுடன் அவன் அதை வாங்கி பார்க்க, அதில் "என்ன தான் நாம நம்ம ஆரோன்ஜிய ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து நம்மள ஆளட்டும்னு தலைல தூக்கி வச்சாலும், அவர் என்னோட ஆணிவேர் தமிழ் தான் அதனால் என் அடுத்த வம்சமும் தமிழ் பொண்ணு மூலம் தான்னு செயல்ல காமிச்சுட்டாரு பாத்தீங்களா? ஏன் நம்ம ஊர்ல பொண்ணே இல்லையாமா? ஓட்டு போடவும் ஆட்சி செய்யவும் நம்ம‌ வேணும், ஆனா கூட வாழ நம்ம ஊர் பொண்ணு வேணாமாம். இப்ப தானே புரியுது அவர சுத்தி கூட எல்லாம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவங்க தான். வேலைக்கு கூட நம்மள நம்பி வச்சுக்கல அவரு" என சாமானியன் என்ற போர்வையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தான் ஏதோ ஒரு அரசியல்வாதியின் தொண்டன்‌.

போனை ப்ரேமிடம் திரும்ப நீட்டியவன், "அந்த ஷெட்டியா? அதுக்குள்ள நேத்து ஏத்துன போதை தெளிஞ்சுட்டா?" என்றவாறு, அவன் கையெழுத்தியட‌ காத்திருந்த ஃபைல்களை பார்க்க தொடங்க,

"யாருன்னு செக் பண்ணிட்ருக்காங்க சார், இது ஜஸ்ட் அப்லோட் பண்ணி டென் மினிட்ஸ் தான் ஆகுது. ப்ளாக் பண்ணிட சொல்லிடவா சார்?"

"ஃப்ரீ ப்ரோமோஷன் தானே நம்ம கட்சிக்கு?" என ஆரோன்‌ புருவம் உயர்த்தவும், சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான் ப்ரேம். இது போன்ற ஏச்சுகளையும் பேச்சுக்களையும் நிறைய கடந்து விட்டானே, தேர்தலை ஒட்டிய சமயத்தில் மட்டுமே அதை நீக்கச் சொல்லுவான் மற்ற‌ நேரங்களில் கண்டு கொள்வதில்லை.

அதற்குள், அடுத்த பிரச்சினையாக, பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் புதிதாக கட்டட வேலையிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், அங்கு வேலையிலிருந்த நான்கு பேரோடு, கட்டடம் இடிந்து பள்ளிமேல் சரிந்ததில் பள்ளி மாணவர்களும் நால்வர் உயிர் பரிதாபமாக போயிருக்க, அதற்கான விசாரனை ஆய்வு, தரமான கட்டிடத்தை கட்டாத அந்த கன்ஷ்ட்ரக்ஷன் மீது நடவடிக்கை என அன்றைய பொழுது அவனுக்கு அதில் தான் சென்றது.

அவன் பகுதியை சார்ந்தவர்கள் என்பதால் மருத்துவமனைக்கும் சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஊக்க தொகைக்கு ஏற்பாடு செய்து, சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் சிறந்த சிகிச்சைக்கு உத்தரவிட்டுவிட்டு வந்தான். வீடு திரும்ப மணி நடு இரவு ஒன்றையும் தாண்டி இருந்தது.

அறைக்குள் நுழையும் வரை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் பேசி‌ சண்டையிட்டு வந்ததை பற்றிய யோசனையில் இருந்தவனுக்கு, படுக்கையிலிருக்கும்‌ மனைவியை பார்த்த பிறகே இதுநாள் வரை இருந்தது போல் இனி தான் தனி ஆள் இல்லை என நியாபகம் வந்தது.

இரவு விளக்கின் வெளிச்சம் அவள் நல்ல தூக்கத்திலிருப்பதை காட்ட, சத்தமில்லாமல் சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தவன், "ஏஞ்சல்" என்ற அழைப்போடு அவள் மேலேயே அழுத்தமாக படர, திடீரென அழுத்திய‌ பாரம் தாங்காமல், "ம்மா" என பதறி விழித்தாள் ஏஞ்சல்.

தன் கழுத்தடியில் அழுத்தமாக புதைந்திருப்பவனை உணர்ந்தாலும், அவன் இறுக்கத்தில் அவளால் இலகுவாக மூச்சை இழுத்து விட‌முடியவில்லை.

"ப்பா முடியல, கொஞ்சம் லூஸ் பண்ணுங்க" என்றாள் அவள் வாயருகே இருந்த அவன் காதினுள்.

அவள் கழுத்தடியிலேயே தாடியால் குறுகுறுப்பூட்டியவன், "டீச்சரம்மா கம்போட நிக்காம இப்டி தூங்கிட்ருக்கிங்க? உன் கிளாஸ்லயும் பிள்ளைங்க லேட்டா வந்தா கண்டுக்க மாட்டியோ?" என கேட்டு அவளை நன்கு விழிக்கச் செய்த பின்னரே அவள் மீதிருந்து மறுபுறம் இறங்கி படுத்தான்.

"கம்போட நிக்கணுமா அமைச்சருக்கு?" என்றாள் அவளும் சிரித்து.

"தேட்ஸ் எ குட் பொண்டாட்டி ரோல் ரைட்?" என கேள்வியாக பார்க்க,

அவனையே பார்த்தவள், "நா எக்ஸாக்ட் பொண்டாட்டியா நடந்துட்டா உங்களுக்கு ஓ.கே வா?"

"இன்னைக்கு ஃபுல்லா என்ட்ட எப்டி பேசலாம்னு ட்ரைனிங் எடுத்தியா ஏஞ்சல்?" என்றான் அவன்.

"ம்ம் எனக்கு இந்த கரை வேட்டி அமைச்சர இப்பவே பிடிக்கும், அதேமாதிரி அவரையும் சொல்ல வைக்கணுமே‌ அதுக்கு தான் தீவிர ட்ரைனிங்"

அங்குமிங்குமாக அசைந்து அவன் முகத்தை மொய்க்கும் அவள் கண்களையே பார்த்தவன் மெலிதாக சிரித்தான், "ஏஞ்சல்" என அள்ளிக் கொண்டான், அவனது இறுகிய அணைப்பு, அவனுக்கு செயலில் தான் பதில் சொல்ல தெரியும் என்பதை உணர்த்த அதை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள் நான்சி.

அவள் உதட்டை நெருங்கும் போது, "காலைல யாரும் உன்ட்ட எதும் கேக்கலயா?" என அவளின் கீழுதட்டை வருடிக் கொடுக்க,

"என்ன கேக்கல? செங்குட்டுவன் அண்ணா ஃபேமிலி கிளம்பிட்டாங்க, அம்மா பாட்டிலாம் ஒன் வீக் இருந்து கிளம்புவாங்க, ப்யூலாக்கும் அத்தைக்கும் யாஷ் கூடவே நேரம் போய்ட்டு, நேத்து நம்ம பங்ஷன்னு லீவ் எடுத்தான், இன்னைக்கு நேத்து பங்ஷன் டயர்டுன்னு லீவ் போட்டுட்டு ஒரே ஆட்டம், ப்யூலாவ தான் டயர்டாக்கிட்டான்" என அவனை பார்த்து சிரிக்க,

"நா இந்த உதட்ட பாத்து யாரும் எதுவும் கேக்கலையான்னு கேட்டேன் ஏஞ்சல்" என்றதும் கண்ணை தாழ்த்திக் கொண்டாள், அவளாக தானே மாலையில் கண்ணாடி முன் நின்றபோது கண்டு கொண்டாள்.

"சொல்லு ஏஞ்சல்? நீ ரொம்ப சாஃப்ட்டா இல்ல நா ரொம்ப ஹார்ஷா?" என்றவன் வருடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

அமைதியாக இருந்தவளுக்கு அவஸ்தையாக இருக்க, "நீங்க டெய்லி இப்படி தான் லேட் நைட் வருவீங்களா?" என கேக்க,

"ஸ்மார்ட் டீச்சர்" என்றவன், "என் வொர்க்கு டைமிங் கிடையாதுமா" என்கவும்,

"ஓ.கே, மதியம் நைட்லாம் எங்க சாப்டீங்க?"

"கட்சி ஆபிஸ்ல சமைச்சுடுவாங்க"

"அப்றம்?"

"மீதிய நாளைக்கு கேக்கலாமே ஏஞ்சல், இப்ப சாஃப்ட் அப்ரோச்சா? இல்ல ஹார்ஸ் அப்ரோச்சா ஏஞ்சல்?" என்றதும் அவள் லேசாக முறைக்க,

"உன் சாய்ஸ் கேக்கறேன் ஏஞ்சல்"

"நா எப்டி நீங்க ஈசியா அன்ஸர் பண்ற மாதிரி கேள்வி கேக்றேன், நீங்களும் அப்டி கேளுங்க சொல்றேன்" என பாவமாக விழித்து சொல்ல,

"மேத்ஸ் டீச்சர் ஈசி சம்ஸ் நீ சால்வ் பண்ணிட்டு ஹார்ட் சம்ஸ் தானே ஹோம் வொர்க்கா கொடுப்ப, நம்மளும் ஹோம் வொர்க் தானே பண்றோம் சோ ஹார்ட்டாவே சால்ட் பண்ணுவோமா?" என கேட்க,

கண்ணை விரித்து பார்த்தவள், "நீங்க இவ்ளோ பேசுவீங்களா? நா தூங்க போறேன் போங்க ப்பா" என திரும்பி படுத்தவளை தனக்குள் திருப்பிக் கொண்டான் அந்த கரைவேட்டிகாரன்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க, அன்று மாலை பெண்கள் ஆறு பேரும் மாலை சிற்றுண்டியுடன் தோட்டத்தில் அமர்ந்திருக்க, "நான்சி உனக்கு இங்க ஒரு வேலையும் கிடையாது, சும்மா சாப்ட்டு சாப்ட்டு ஜாலியா இருக்கலாம்ல?" என ஆரம்பிக்க,

"நீயும் அங்க உன் மாமியார் வீட்ல அப்டி தான இருக்க?" என்றாள் நான்சியும் பதிலுக்கு.

"இந்தளவுக்கு இல்லையே? மாமியார் என்ன உக்கார வச்சு சாப்பாடு போடுறத நீ பாத்தியா? நாங்க மட்டும் எதுக்கு அங்க கடந்து கஷ்டபடணும். நீ உன் புருஷன்ட்ட சொல்லி இங்கேயே எதாவது அவர் படிப்புக்கு ஏத்த வேலையா வாங்கி தர சொல்றியா? அம்மா பாட்டின்னு எல்லாரும் இங்கேயே செட்டில் ஆகிடலாம். உன் புருஷன்ட்ட பேசி பாக்றியா?" என்றாள் இருநாட்களாக அங்கிருந்து யோசித்ததில் கிடைத்த புது உத்தியாக.

"லூசா நீ? அத்தான் கவர்ன்மென்ட் ஸ்டாஃப் அந்த வேலைய போய் விடணுங்குற? அதெப்டி அவங்களும் இங்க வந்திருக்க ஒத்துப்பாங்க? இது அவங்க மாமியார் வீடும் இல்ல, இப்படி லூசு மாதிரி பேசி நீயே உன் இமேஜ் அத்தான் இமேஜ்னு எல்லாத்தையும் காலி பண்ணிடு" என்றாள் நான்சி பட்டென்று, அந்த பேச்சிற்கு முடிவு சொன்னவளாக.

"ஏன், ஒரு அமைச்சர் சொன்னா இங்கையும் ஒரு கவர்மென்ட் வேலை கிடைக்காதா? நம்மலாம் சேத்து இருக்க வழி சொல்றேன் மூஞ்சுல அடிச்சாக்குல வேணாங்குற. ஏன் அம்மா பாட்டிலா கூட இருந்தா நல்லா தானே‌ இருக்கும், இதோ ப்யூலாவ கேளு வேணாம்னே சொல்ல மாட்டா, ஏன்னா அந்த புள்ளைக்கு காசு லாம் பெரிய விஷயமா இருக்காது, ஆனா‌ நீ புது பணக்காரில அதான் எங்கள கூட‌ வச்சுக்க யோசிக்குற, இவ்ளோ பெரிய பங்களால நாங்க நாலு பேர் தங்க இடம் குடுக்க அம்புட்டு யோசனையா உனக்கு?" மூச்சு விடாமல் அவள்‌ பேசி கொண்டிருக்க, 'நீ என்னவும் உளறு' என்ற தினுசில் காப்பியில் கவனமாக இருந்தாள் நான்சி.

"ம்மா நா நைட்டே சொன்னேன்லமா? அப்ப மண்டைய ஆட்டிட்டு இப்ப தேமேன்னு உக்காந்திருக்க" என எஸ்தரையும் அவள் இடிக்க,

"ஜென்சி சொல்றதும் சரின்னு தான் படுது நான்சி, எங்களுக்கும் உன்ன இவ்வளவு தூரத்துல விட்டுட்டு போறத நினைச்சாலே பயமா தான் இருக்கு. அவ சொல்றபோல இங்க மாப்ள வீட்ல வேணாம் எங்களுக்கு தனியா பாத்து இருந்துக்குறோம், எனக்கு இன்னும் ஆறு மாசந்தானே ரிட்டயர்டுக்கு, வாலன்டியர் ரிடயர்ட்மெண்ட் குடுத்துட்டு இங்கேயே வந்துட்டா என்னன்னு இருக்கு" அவரை இப்படி பேசும் அளவிற்கு மூளை சலவை செய்திருக்கிறாள் ஜென்சி என‌ புரிந்ததில் நான்சிக்கு அவ்வளவு வெறுப்பாக இருந்தது.

"பாத்தியாம்மா பதில் சொல்ல மாட்டேங்குறா இனி நீ உன் ரெண்டாவது மகள மறந்துட வேண்டியது தான், பெரிய இடத்து மருமகளாகிட்டாங்க நம்ம கும்பிடு போட்டு தள்ளி தான் நிக்கணும்"

"பாட்டி என்ன இதெல்லாம், இந்த பேச்சு மொத நல்லார்க்கா? அம்மாவும் இப்டி பேசுனா எப்டி? என்ன தான் அசிங்க படுத்திட்ருகாங்கன்னு தெரியுதா இல்லையா?" என கிறிஸ்டியிடம் கேட்க,

"நீ டிக்கெட்ட போடு நாங்க ஊருக்கு கிளம்புறோம், உன் அக்காக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோசனை முளைக்குது, அது இங்க வெட்டியா சாப்பிட்டு தூங்குறதால தான் வருதுன்னு நினைக்கிறேன், ஊருக்கு போய் புருஷன் வீட்டுக்கு போயிட்டா சரி ஆகிடும், உன் அம்மா உன் மேல பாசத்துல அப்டி பேசுறா ஊருக்கு போயிட்டா அவளும் சரி ஆகிடுவா" என்றார் இருவரையும் முறைத்துக் கொண்டே, அவரும் முந்தைய தினமிருந்தே எடுத்து சொல்லி கொண்டு தான் இருக்கிறார், ஜென்சி தான் வாயை மூட மாட்டேன் என அடமாக நிற்கிறாள்.

ஜென்சி ஏதோ பதில் சொல்ல வர, சரியாக அந்நேரம் ஆரோனின் இல்லத்திற்கு கல்யாண பரிசு என ஒரு பெரிய பெட்டி வந்தது, அதை காவலாளி பரிசோதித்து உள்ளே அனுப்ப, அடுத்ததாக பாதுகாவலர்கள் அதை பரிசோதித்து பார்க்க, வெளியே மூடப்பட்டிருந்த கவரை கிழித்து கொண்டிருந்தனர். தன்னுடைய இருப்பு நான்சிக்கு அவசியம் என புரிய வைக்கும் ஆவேசத்தில், "இடியட்ஸ், வீட்டுக்கு வந்த ஒரு கிஃப்ட்ட கிழிக்கும் முன்ன எங்கட்ட கேக்கணும்னு அறிவு வேணாம்?" என அந்த பவுன்சர்களிடம் சண்டைக்கு செல்ல, அவர்கள் அடுத்த நொடி ஆரோனுக்கு அழைத்துவிட்டனர்.

"நான்சி எதும் அப்ஜெக்ட் பண்ணாங்களா?" என்பது தான் அவன் முதல் பதில் கேள்வியாக இருந்தது. அவர்கள் இல்லை என்றதும், "தென் அஸ் யூஸ்வல் இக்னோர் அதர்ஸ், உங்க ட்யூட்டிய பாருங்க, நான்சி ஒன்லி ஹேவ் ஆல் ரைட்ஸ் தேர். அந்த ரிலேடிவ்வ என்ன செய்யன்னும் என் வைஃப்ட்டயே கேளுங்க" என்று வைத்து விட்டான். அவன் மனைவிக்கு தர வேண்டிய மரியாதையை வலியுறுத்த தவறவில்லை அவன்.

"மேடம் உங்க சிஸ்டர் மினிஸ்டர் வீட்டுக்கு வந்த த்ரெடன் ப்ராடெக்ட்ட செக் பண்ண விட மாட்றாங்க, அப்ப நாங்க அவங்களையும் சந்தேக படுவோம், அவங்கள விசாரிக்கணும் இதான் இங்க ரூல், பட் சார் உங்கட்ட கேட்டுக்க சொல்லிட்டாங்க, நாங்க என்ன பண்ணட்டும்?" என ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டு வந்து அட்டேன்ஷனில் நின்றவர்களை பார்த்து அதிர்ந்து தான் நின்றாள் நான்சி.

ப்யூலா ஜென்சியை பார்த்து சிரிக்க, "சிரிக்காத ப்யூலா" என ரோஸி அதட்ட, கிறிஸ்டியும், எஸ்தரும் பயந்து பார்க்க, ஜென்சி முறைத்துக் கொண்டு நின்றாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 15

நான்சி பதில் சொல்லும் வரை நகரமாட்டேன் என நின்றவர்களைக் கண்டு, தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள், திரும்பி ஒரு முறை ஜென்சியைப் பார்த்து விட்டு, "அவளுக்கும் ஈவன் எனக்குமே இங்க உள்ள‌ ரூல்ஸ் சரியா தெரியாது, நீங்க உங்க வொர்க் பாருங்க நா அவகிட்ட‌ இனி இந்தமாதிரி நடக்காம‌ இருக்க சொல்லிடுறேன்" என்கவும்,

"நாங்க எட்டு பேர் கொண்ட குழு மேம், வீட்டு பாதுக்காப்புக்காக இங்கேயே இருக்கோம். நாலு லேடி பவுன்சர்ஸ் நாலு ஜென் பவுன்சர்ஸ் இருக்கோம், அடுத்த பில்டிங்க்ல தான் தங்கி இருக்கோம், ஷிஃப்ட் படி நாலு பேர்‌ எப்பவும் ரவுண்ட்ஸ்ல இருப்போம். வீட்டுக்குள்ள எது வந்தாலும், ஆட்கள், பார்சல், பால், காய்கறிகள், ஃபுட் டெலிவரி, ப்ராடெக்ட் டெலிவரி, மெடிக்கல் டெலிவரி இப்படி எதுவா இருந்தாலும் நாங்க செக் பண்ணி‌ தான் உங்க கைக்கு வந்து சேரும். எங்க வொர்க்க சார் தவிர‌ யார் டிஸ்டர்ப் பண்ணாலும், ப்யூலா யாஷ் இன்க்லுடிங் யாரா இருந்தாலும் பணிஷ் பண்ற ரைட்ஸ் எங்களுக்கு உண்டு. அண்ட் நீங்க எடுத்துக்குற ஃபுட் கூட‌ நாங்க செக் பண்ண அப்றம் தான் உங்க டேபிளுக்கு வரும். எங்கள மாறி சாருக்கு மட்டும் தனியா எட்டு பேர் இருக்காங்க, அவங்களுக்கு சாரோட‌ மட்டுமே ட்யூட்டி. இதுவரை நாங்க அன்டர் கண்ட்ரோல் சாருக்கு மட்டுமே, பட் இன்னைல இருந்து உங்க கண்ட்ரோலயும் வருவோம். நீங்களும் சாரும் மட்டுமே எங்களுக்கு ஆர்டர் பாஸ் பண்ணலாம் எங்க ட்யூட்டிய கண்ட்ரோல் பண்ணலாம்" அவர்களை பற்றி முடிந்தளவு தமிழிலேயே விளக்கி விட்டு காத்திருந்தான் தலைமையவன்.

சுழலுக்குள் மாட்டியவளாக விழித்தாள் நான்சி, சுற்றிப் பார்த்தாள், ப்யூலா மட்டுமே இதை முன்பே அறிந்தவள் பாவனையில் நின்றிருந்தாள் மற்ற அனைவரும் திறந்த வாயை மூடாது நின்றனர், இவளுக்கும் சற்று மலைப்பாகத் தான் இருந்தது.

நான்சிக்கு நன்கு தெரியும், ஜென்சியை பொறுத்தமட்டில் அவளின் பொறாமை எல்லாம் அவளின் நெருங்கிய வட்டத்திடம் மட்டுமே, அவள் தங்கை, உடன்‌‌ படித்தவர்கள், மாமியார் வீட்டு உறவினர்கள் என்ற அளவில் தான் இருக்கும். அதிலும் அவளை விட அதிக கஷ்டபட்டவர்கள் படிப்பில், பணத்தில் பின்‌ தங்கியவர்கள் என்றால் கரிசனம் கூடப் படுவாள். யாரும் அவளை விட எதிலும் உயர்ந்துவிட மட்டும் கூடாது. இதோ வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை தாண்டி வந்தவள் ப்யூலா என்பதாலும், அவள் அளவிற்கு இவள் கஷ்டங்களை அனுபவிக்கவில்லை என்பதாலும் அவளிடம் பொறாமை வம்புக்கு செல்வதில்லை.

ஆனால் இனி இதையெல்லாம் கேட்டபின் பார்த்த பின் அவளை இங்கிருந்து கிளப்புவது சற்று கடினமான காரியமாக தோன்றியது.

எல்லாம் யோசித்தவள் ஒரு பெரு மூச்சுடன், "ஜென்சி இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பிடுவா சோ அவளால இனி உங்க வொர்க்குக்கு எந்த பிரச்சனையும் வராது" என்றாள்.

லேசாக குனிந்து நிமிர்ந்து, "ஃபைன் மேடம்" என நகர்ந்து விட்டான் உடனே.

அவன் நகர்ந்ததும், "நா ஊருக்குலா போ மாட்டேன், இங்க இவ்வளவு பாதுகாப்போட‌ நீ சொகுசா‌‌ இருப்ப, நா அங்க என் மாமியார்ட்ட இடி படணுமோ? போ முடியாது நா போ மாட்டேன், உன் அத்தான‌ கிளம்பி வர‌‌ சொல்ல போறேன், இங்க உன்‌ புருஷன்ட்ட சொல்லி வேல வாங்கி குடுக்குற, இல்லனா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது" என ஆவேசமாக மிரட்டிக் கொண்டிருக்க, அங்கு புதிதாக வந்த பார்சலால் சற்று பதற்றம் நிலவியது,

"கிறுக்கி கணக்கா உளறிட்டு இருக்க, தங்கச்சிய கட்டிக் கொடுத்த வீட்ல வந்து உக்காருவேன்னு அடம்பிடிக்க அசிங்கமா இல்லையா உனக்கு? படிச்சுருக்க தான சுயபுத்தி இல்ல?" பாட்டி ஜென்சியைத் திட்ட,

"நீங்க எல்லாம் உள்ள போயிடுங்க மேடம் ப்ளீஸ்" என வேகமாக வந்தான் ஒரு பாதுகாவலன்.

நான்சி, 'படத்துல காட்டுற மாதிரி பாம் எதும் வச்சு அனுப்பிட்டாங்களோ?' என அதிர்ந்தவள், "என்னாச்சு? என்ன இருக்கு அதுல?" என்றாள் அங்கு பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டே,

"ராஜநாகம் மேடம், நார்மல விட கொஞ்சம் பெரிய‌ சைஸ், சட்டுன்னு தவறி கார்டன் குள்ள‌ வந்துட்டா பிடிக்றதும் கஷ்டம், உங்கள அந்நேரம் சேஃப் பண்றதும் ரிஸ்க் ஆகிடும், சோ நீங்க வீட்டுக்குள்ள போயிடுங்க" என நின்றான்.

திரும்பிப் பார்க்க, ப்யுலா யாஷ் இருவரையும் அந்த பெண் பவுன்சர்கள் தூக்கியேச் சென்றிருந்தனர். அவர்கள் இருவரையும் முழுவதும் இவர்களின் கட்டுப்பாட்டில் விட்டிருக்கிறான் ஆரோன் என தெளிவாக புரிந்தது. இவள் கட்டளை இடும் இடத்தில் இருப்பதால் இவளிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற நால்வரும் இதில் இரண்டிலும் வராத பொது மக்கள் போலிருந்தது அவர்கள் நடவடிக்கைகள்.

அவன் அம்மாவிற்கும்‌ மரியாதை இல்லை, அவள் குடும்பத்தினருக்கும் மரியாதை இல்லாத தோற்றம் அங்கே. "இவங்கள இங்கேயே இப்டியே நிக்க விட்ருவோமா அப்போ?" என்றாள் கேள்வியாக.

"மொத உங்கள சேஃப்டி பண்ணிட்டு அவங்களையும் க்ளீன் பண்ணிடுவோம் மேம்"

"க்ளீன் பண்ணுவீங்களா? அவங்க என் பேரண்டஸ் தெரியும் தானே? அவங்களுக்கான மரியாதைய‌ நீங்க குடுத்து தான் ஆகணும்"

"சாரி மேம், அவங்க மரியாதைக்கு எங்களால எந்த டிஸ்டர்ப்பும் இருக்காது. பட் எங்களுக்கு நீங்க தான் ஃபர்ஸ்ட்" என முடிவாக அவர்கள் நிற்க,

ஆயாசத்துடன் அவர்களைப் பார்த்தவள், "ம்மா, பாட்டி, ஜென்சியயும் கூட்டிட்டு உள்ள போங்க நா வரேன்" என்றாள்.

"இங்க என்ன செய்ய போற‌ நீ?வந்துரும்மா, அது பயந்து இருக்கும் சட்டுன்னு சீரிடும். நாளைக்கு கிளம்ப போற‌ எங்களுக்கு என்ன மரியாதை வேண்டிய இருக்கு, சண்ட பிடிக்க வேணாம் நான்சி, தம்பி கோச்சுக்க போறாரு" என‌ எஸ்தர் அவள்‌ கைபிடித்து இழுத்தார், சற்று முன் இங்கேயே‌ வந்துவிடட்டுமா எனக் கேட்டதை மறந்து விட்டார் போலும்.

"ப்ளீஸ் ம்மா, நீ பாட்டிய கூட்டிட்டு போ. நா இப்ப வந்துடுவேன்" என அவர்களை வீடு நோக்கி தள்ள, அவர்களும் அந்த பவுன்சர்களைப் பார்த்துக் கொண்டு ஜென்சி முணங்கலையும் கேட்டுக் கொண்டே உள்ளே இழுத்துச் சென்றனர்.

ஆனால் அந்த பவுன்சர்கள் இவளை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களை அனாதரவாக அனுப்புவது போன்ற ஒரு பிரமை அவளுள் உருவாகி மறைந்தது. அவள் ஆரோனைக் கட்டி வந்ததால் அவளுக்கு மட்டுமாக அவனுக்குன்டான சகல மரியாதையும் கேட்க இடமின்றி வந்து சேர்ந்து விட்டது. ஆனால் அவளின் பிறந்த வீட்டினர் தள்ளி வைக்கப் படுகிறார்கள், கல்யாணத்திற்கு பின் ஆணின் குடும்பம் முழுவதும் பெண்ணிற்கு சொந்தம், ஆனால் பெண்ணின் குடும்பத்திலிருந்து பெண் மட்டுமே அவர்களுக்கு சொந்தம் போலும், இங்கு அவள் கணவனை விலக்கி வைப்பதும் அவனது பணமும் பதவியும் தானே?இவ்வாறு பலவற்றையும் யோசித்து நின்றாள்.

அவளுக்கு அந்த பார்சல் இருக்கும் பக்கம் திரும்பவே நடுக்கமாக இருந்தது. இருந்தும் அதை கைக் காண்பித்து, "இப்டி அடிக்கடி வருமா?" என்க,

"எஸ் மேம், சார த்ரெடன் பண்ணவே வரும்"

"யாரு அப்டி செய்றாங்க?"

"ஒருத்தங்கன்னு இல்ல மேம், யாரு வேணா அனுப்பலாம், மக்கள்ல ஒருத்தர் கூட அனுப்பலாம், நாம யாருன்னு கண்டு பிடிச்சு போலீஸ்ல சொல்லலாம், இல்ல கம்ப்ளைண்ட் கொடுத்து அவங்களே கண்டுபிடிச்சு அரஸ்ட் பண்ணி ஃபைன் போடுவாங்க"

"இப்ப இத என்ன பண்ணுவீங்க?"

"அஸ் யூஸ்வல் மேம் ஃபாரஸட்ல கொண்டு விட்ருவோம்"

'இங்கு உயிர் பயத்தோடே தான் வாழ வேண்டுமா?' என சிந்தித்தவள் மெதுவாக வீட்டை நோக்கி நடக்க, பாதுகாப்பிற்கு நின்றவர்களும் அவள் வீட்டினுள் நுழையும் வரை உடன் வந்து, அவளை உள்ளே விட்டு அந்த பெரிய வாயிலின் கதவை இழுத்து‌ மூடினர்.

"ப்யூலா உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?"

"ஆமா அண்ணி அப்பா இருக்கும் போதே இதே போல த்ரெடன் போன் கால்ஸ் இப்படி வரும், இப்போ தான் இப்படி வீட்டுக்கே அனுப்றாங்க போல"

"பயமா இல்லையா உங்களுக்கு?"

"அதான் இவ்ளோ பேர் நமக்கு பாதுகாப்பு குடுக்க இருக்காங்களே அண்ணி?"

"இருந்தாலும் எப்பவும் பயந்துட்டே இருக்க முடியுமா?"

"அண்ணா இருக்காரு அவர் பாத்துப்பாருன்னு தைரியமா இருங்கண்ணி, பயம் தெரியாது"

அவளுக்கு சில நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும். ஆரோனை பிடிக்கும் தான். அவனை கணவனாக பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறாள் தான். ஆனால் அவன் மேல் முழுமையான நம்பிக்கை வேண்டுமெனில் அவன் மீது முழுமையான புரிதல் வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

"பயமா இருக்கா அண்ணி?" ப்யூலா அவள் முகம் பார்த்து தோள் தொட்டு கேக்க,

"ம்ம் இதெல்லாம் புதுசா இருக்கு இல்லையா அதான் கொஞ்சம் பயம்" வெளிப்பட ஒத்துக் கொண்டாள் நான்சி.

"நாங்க தான் இனிக் கூடவே இருக்க போறோமே, இப்படி தான் உன் புருஷன் எங்கையாது உக்காந்துட்டு இந்த கடங்காரணுங்கள வச்சுப் பாத்துக்க சொல்லிட்டு இருப்பாரு, உனக்கு வீட்ல ஆதரவா இருக்க ஆள்‌வேணும்ல? என்னம்மா உண்ம தானே?" என எஸ்தரையும் கூட்டு சேர்க்க,

"இது என் வாழ்க்கை எதுனாலும் நா பழகிக்கத் தான் வேணும், என்ன தயார் பண்ணிக்க கொஞ்சம் டைம் எடுக்கும் தான், ஆனா பண்ணிப்பேன், என் புருஷனுக்கு இதான் தொழில் அப்டின்றப்போ நா அவருக்கு ஈக்வலா எல்லாத்தையும் ஏத்துக்கணும். நீ கிடைச்ச கேப் எல்லாத்தையும் யூஸ் பண்ணாம ஊருக்கு கிளம்ப பாரு" என நான்சி சொல்லிக் கொண்டிருக்க, அடைக்கப்பட்ட வாசல் கதவு திறக்கபட்டு, வேக நடையுடன் ஆரோன் உள்ளே வர பின்னயே சலீமும் வந்தான்.

பெண்கள் அனைவரும் அங்கு கூடத்திலேயே நிற்பதில் புரிந்து கொண்டான் அவன். ஏஞ்சலுக்கு இந்த சூழ்நிலை புதிது என்பதாலேயே சூழலை மாற்ற வேறு ஏற்பாட்டோடு கிளம்பி வந்திருந்தான், "ஏஞ்சல், என்னோட பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் ஃபேமிலியோட நம்மள மீட் பண்ண நினைக்கிறாங்க, மேக்ஸிமம் ஒன் அவர் ரெடி ஆகிடலாமா?" என்றான் உள்ளே நுழைந்ததும்.

"இங்க இருக்க நிலைமை என்ன? வீட்டுக்குள்ள பாம்ப விட்ருக்காங்க, இவரு என்னன்னா ப்ரண்ட்ஸ் முன்ன மேக்கப் பண்ணிட்டு வந்து நிக்க சொல்றாரு, நான்சி ரெம்ப பாவம் ம்மா" என எஸ்தர் காதில் மட்டுமாக கூறினாள் ஜென்சி. எஸ்தரின் மனமும் நான்சியை நினைத்து வருந்த தொடங்கியது.

"வீட்டுக்கு வராங்களாப்பா?" நான்சி கேட்கவும்.

சட்டென்று அவன் சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள முயன்ற மனைவியைப் பார்த்தவன், "ம்ஹூம் வெளில போறோம், அவங்க நமக்கு விருந்து குடுக்குறாங்க, டின்னர் நமக்கு அங்க தான்" என்றான்.

"போலாம் ப்பா, சாரி மட்டும் மாத்தி கிளம்பி வந்துடுறேன்" என அவள் அவர்கள் அறைக்குச் சென்றுவிட,

"ம்மா நம்மளையும் கூட்டிட்டுப் போய் இன்ட்ரோ பண்ணிணா என்னவாம், அவள மட்டும் கூட்டிட்டுப் போறாரு பாரு. நாமளும் இந்த ஊருக்கு புதுசு தானே? நாளைக்கு இங்கயே செட்டில் ஆன அப்றம் நாம தனியா போனாலும் இன்னைக்கு மினிஸ்டரோட போற பெருமை தனி தானே?" என்றாள் ஜென்சி.

அவள் பேச்சு, யோசனை எதுவும் சரியான திசையில் செல்வது போல் இல்லை என புரிந்த கிறிஸ்டி, ஆரோன் சலீமிடமும் அந்த பாதுகாவலர்களிடமும் எதோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு, ஜென்சி கைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

ஆரோன் திரும்பி ஓர பார்வையில் அதை பார்த்தாலும் செல்பவர்களை யோசனையோடு பார்த்தானே அன்றி கண்டு கொள்ளவில்லை.

அறைக்குள் நுழைந்ததும், "அந்த தம்பி உன் தங்கச்சிய கட்டிட்டு வந்துருக்காரு உன்ன இல்ல" என்றார் கடுமையாக.

"ச்சி ச்சி அசிங்கமா பேசாத பாட்டி"

"இருக்குல்ல? நீ பேசுறது எல்லாம் அப்டி தான் அசிங்கமா இருக்கு. அவகூட எல்லாத்துக்கும் போட்டி போட்ட, அது நம்ம வீட்ல இருந்த வரைக்கும் சரி, இனி ரெண்டு பேர் பாதையும் வேற‌ வேற, அவளப் பாத்து பொறாமைப் படுறத விட்டுட்டு உன் வாழ்க்கைய நிம்மதியா வாழ பழகு" எச்சரிக்கையாகவேக் கூறினார் பாட்டி.

"என்னத்தே பிள்ளைய இப்டிலா சொல்றீங்க?" என எஸ்தர் கேட்கவும்,

"பாரும்மா, என்ன பாத்தா அவ்வளவு கேவலமான பொண்ணாவா ம்மா தெரியுது? என் தங்கச்சிட்ட எனக்கு உரிமை இல்லையாம்மா? கல்யாணம் பண்ணினாலும் அவ என் தங்கச்சி ம்மா, அவரு என் தங்கச்சி புருஷன் ம்மா, அவங்கள‌ விட்டா எனக்கு பிறந்த வீட்டு சொந்தமே இல்லையேம்மா, மாமியார் வீட்ல எனக்கு இன்னும் பிள்ள பாக்கியம் இல்லன்னு துளி மரியாதை கிடையாது தெரியுமா? அதனால் தான் அங்க இருந்து இவ்வளவு தூரம் வந்துட்டா, பிள்ளை இல்லயான்ற‌ கேள்வியும்‌ கிண்டலும் என்ன துரத்தாதுன்னு நினைக்கிறேன் அது தப்பா ம்மா?" என்றாள் அழுகையோடு எஸ்தர் தோள் சாய்ந்து சலுகையாக.

"தாயும் மகளும் என்ன வேணா செய்ங்க, ஆனா அத குற்றாலம் போய் செய்ங்க, சும்மாவே‌ அந்த தம்பி நம்மட்ட பேச யோசிக்குது, உங்க கிறுக்கு தனத்தால அந்த தம்பி கடுமையா எதாது பேசிட்டாருன்னா அப்றம் வர‌ப்போகக் கூட‌ இருக்க முடியாது, மொத்தமா நான்சிய மறந்துட வேண்டியது தான் சொல்லிட்டேன். அவங்க அம்மா நிலைமையே நமக்கு உதாரணம், அந்த தம்பி வந்ததும் அங்க ஓரமா கூட நிக்க முடியாம அவங்க ரூமுக்கு போயிட்டாங்க, இருக்க மரியாதைய காப்பாத்திக்க வேண்டியது உங்க சாமர்த்தியம்" என பேச்சு முடிந்ததாக அங்கிருந்த பாட்டில் தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசம் செய்து கொண்டார்.

"நாம இங்கேயே வந்து தங்கச்சியோட குடும்பமா இருக்க கேக்றதும் பிள்ளைகள விட்டுட்டு லவ்வர தேடி ஓடி போன அவங்க அம்மா பண்ணதும் ஒன்னா‌ம்மா?" என்றாள் அதற்கும்.

பாட்டி கையில் வைத்திருந்த பாட்டில் கொண்டே அவள் மண்டையில் அடித்தவர், "நீலாம் திருந்தாத ஜென்மம்டி ஒருதடவ நல்லா படு அப்போ தெரியும், சின்ன வயசுலயே அந்த புள்ளைக்கு உள்ளது அவகிட்ட குடுக்க விடமாட்டேன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும்போதே நாலு அடி போட்ருந்தா இன்னைக்கு இப்டி வளர்ந்து நின்னுருக்க மாட்டாள்ல? வீட்டுக்கு வந்த மொத புள்ள, மூத்த புள்ளன்னு ஓவரா கொஞ்சி எப்டி வளந்து வந்து நிக்றான்னு பாரு, இன்னுமு அவள பேச விட்டு வேடிக்கை பாரு நா போறேன்" என எஸ்தரையும் சேர்த்து திட்டியவர் அங்கிருக்க பிடிக்காமல் அறையை திறந்து வெளியேறி ரோஸியிடம் பேசச் சென்றார்.

வெளியே நான்சி குடும்பம் நகர்ந்ததும், ஆரோன் பவுன்சர்களிடம் பேசி முடிக்க வேண்டிக் காத்திருந்த ப்யூலா, அவர்களும் நகர்ந்ததும், "அண்ணி ரொம்ப பயந்துட்டாங்க‌ண்ணா" என்றாள்.

"ரூமுக்குள்ள நடக்கிறத தவிர வெளில நடக்குற‌ அத்தனையும் எனக்கு தெரியும்னு மறந்துட்டியா ப்யூலா?" என்றதும் தான், வீட்டைச் சுற்றி இருக்கும் கேமிராக்களின் நினைவே அவளுக்கு வந்தது. அப்படியென்றால் இந்த நான்கு நாட்களில் வெளியே வைத்து நடந்த அத்தனை பேச்சு வார்த்தையும் அவருக்கு தெரிந்திருக்குமே? அண்ணியின் குடும்பம்? ப்யூலா அப்படி யோசித்து நிற்க.

"ப்யூலா?" என்ற ஆரோனின் அதட்டலில் விழித்து, "ண்ணா" என்றாள் வேகமாக.

"சலீம்ட்ட உனக்கு எப்டி மாப்ள வேணும்னு சொல்லு, அவன் மத்த ஏற்பாட்ட பாத்துப்பான்" என்றான் அவளுக்கும் அனாவசியமான சிந்தனை வேண்டாம் என்ற விதத்தில்.

"மாப்பிள்ளையா?" என சலீமை முறைத்தவள், "ஏன்னா அவர்கிட்ட இத ஒப்படைக்கிற சங்கடபட மாட்டாரா?" என்றாள் அண்ணன் இருப்பதால் பவ்யமாக.

"அப்டியா சலீம்?"

"இல்ல சார், அன்னைக்கு சொன்னது தான் சார், நா ஹெல்ப் தானே பண்ண போறேன், இதுல எனக்கு என்ன சங்கடம் இருக்க போகுது?" என்றான் வேகமாக.

"எனக்கு இப்ப என்னண்ணா அவசரம்? கொஞ்ச நாள் போட்டும், யாஷ் அக்சப்ட் பண்ணிக்கணும் அத நினைச்சா இன்னும் பயமா இருக்கு"

"அவன் என் பொறுப்பு, நீ உன் வாழ்க்கைய மட்டும் நல்லபடியா அமைச்சுக்க பாரு" என்றதும் அவளால் அவனை மறுத்துக் கூடப் பேச முடியவில்லை. பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டவன் ஆகிற்றே.

"என்னலாம் யாருன்னா கட்டிப்பா? ரேப் விக்டிம், பத்து வயசு பையனுக்கு அம்மா, பல வருஷமா மென்டலா வேற‌ சுத்திருக்கேன், மறுபடியும் அப்படி மென்டல் அப்செட் ஆகாதுன்னு நம்ம நம்பினாலும் வாராவங்களும் நம்பணுமே? ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்ல முடியும்னு தோணல ண்ணா" என்றாள் குனிந்து கொண்டு.

கிளம்பி அறையிலிருந்து வெளியே வந்த நான்சி கேட்டது ப்யூலாவின் பேச்சை தான். 'இவ்வளவு பாதுகாப்பும் அதன்‌ பின்னர் தானா? அல்லது அவ்வளவு பாதுகாப்பையும் மீறி ப்யூலாவிற்கு தவறு‌ நடந்திருக்கிறதென்றால் பின் இந்தளவு பாதுகாப்பும் இருந்து எதற்கு?'

"ப்யூலா" ஆரோனின் அதட்டலில் இங்கு இவள் உடலும் தூக்கிப் போட, "உனக்கு எப்டி பையன்‌ வேணும்னு மட்டும் சொன்னா போதும்" என்ற குரலின் பேதம் இதுவரை ஆரோனிடமிருந்து நான்சியிடம் வந்திராதது. 'கோபத்துல இவங்க வாய்ஸ் இப்டி இருக்கும் போல' மனசிலாக்கிக் கொண்டாள்.

"ண்ணா பயமா இருக்கு வேறெந்த பேச்சும் எனக்குத் தாங்கிக்க முடியும்னு நம்பிக்கை இல்ல, நா இப்டியே உங்கூடவே இருந்துடுறேண்ணா ப்ளீஸ்"

நான்சிக்குமே ப்யூலாவை நினைத்து பாவமாக இருந்தது, அண்ணன் தங்கை பேச்சிற்கு நடுவில் சென்றாள் ப்யூலாவிற்கு எதுவும் வருத்தமாக இருக்கலாம் என்றெண்ணியே மேலேயே நின்றவள், அவளைக் காப்பாற்றவே இறங்கி வந்தாள்.

முந்தானையை ஒற்றையாக விரித்து விடபட்டு, விரித்துவிட்ட கூந்தலுடன் வந்தவளை பார்க்கவே ஆரோனுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. ஒரு நொடியில் அவளை ஸ்கேன் செய்து மீண்டும் தங்கையிடம் திரும்பினான்.

"உங்கூடவே தான் அண்ணன் இருப்பேன். யாரோ செஞ்ச தப்புக்காக நீ உன் வாழ்க்கைய வாழாம‌ இருக்க வேணாம். நா எனக்குன்னு கண்டிசன் வச்சுருந்தமாதிரி உனக்கும் இருந்தா சொல்லுன்னு சொல்றேன்"

அதில் லேசாக அண்ணியைத் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டாள், இப்போது எல்லாருக்கும் தான் தெரிந்திருந்ததே, அவனிடம் மறைத்ததாக நம்பியிருந்த முட்டாள்தனமும் புரிந்திருந்ததே.

"போலாமா ஏஞ்சல்?" என்றான் ஆரோனும் அந்நேரம்.

"ம்ம் நா ரெடிப்பா" என்றாள் சிரித்துக் கொண்டு.

"யோசிச்சு வை ப்யூலா" எனத் திரும்ப,

"நா கமிஷனர பாத்து கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணிட்டு கிளம்புறேன் சார்" என நகர்ந்து விட்டான் சலீம், அவன் மனதில் எப்போதும் அவனிடம் மல்லுக்கு நிற்கும் ப்யூலாவும் இன்று தன்னையே தாழ்த்திக் கொண்ட ப்யூலாவும் மாற்றி மாற்றி வந்து போயினர்.

செல்பவனின் முகத்தை வைத்தே உதட்டோர சுழிப்புடன், "ஏஞ்சல்" என அழைத்துவிட்டு முன்னே நடக்க, "ப்பா ஒரு நிமிஷம்" என ஓடியவள், தாயும் அக்காவும் இருந்த கதவைத் தட்டி சொல்லிவிட்டு, ரோஸி கிறிஸ்டி இருந்த அறையையும் திறந்து சொல்லிவிட்டு, மீண்டும் வந்து ப்யூலாவிடம், "உங்க அண்ணா பாத்துப்பாருன்னு எனக்கு தைரியம் சொன்னீங்க தானே அதே அண்ணாவ நம்பி உங்க கல்யாணதுக்கும் ரெடி ஆகுங்க. பை" என்றாள்.

"பை அண்ணி நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க" என விடைகொடுத்தாள். ஆரோன் அவனைச் சார்ந்த இருவரை மட்டும் அந்த சூழ்நிலையில் இருந்து விடுபட வைத்து, தற்காத்துக் கொண்டான்.

அவனது டோயோட்டாவில் ட்ரைவர் இடத்தில் அவன் அமர அருகில் அவன் தேவதையோடு, பின்னால் காரில் விசுவாசிகள் பின்தொடர அவனது சைட் பிஸ்னஸான ஐந்து கலை கல்லூரிகளின் பங்கீட்டாளர்களின் விருந்தில் கலந்து கொள்ளக் கிளம்பினான்.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 16

"செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே"

காரை ஸ்டார்ட் செய்ததும் தானாகவே பாட்டுப் பாடத் தொடங்கிவிட, அவளை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு, சத்தத்தைக் குறைத்தவன் மனநிலை ரசனைக்கு மாறி இருந்தது.

"ஏஞ்சல்" என்றான்‌ அதே ரசனையோடு. அந்த அழைப்பு போதும் அவளுக்கு அவ்வளவு ரசனை அதில் கொட்டி கிடக்கும். இரவு முழுவதும் அதைக் கேட்டுக் கொண்டே இருப்பதால், காதோரம் திடிரென்று சூடான உணர்வு. அவன் ரசிக்கவில்லை என திருமணத்தன்று அழுதவளுக்கு, கடந்த இரவுகளே பதில்.‌ வீட்டில் அவன் இருக்கிறான் என்றாலே அவளின் பெயர் விதவிதமான அளவுகோலில் அழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதோ இப்போது போல், முன்னால் இருந்த கடைகளையும் ஆட்களையும்‌ பார்த்துக் கொண்டு வந்தவள், "சொல்லுங்கப்பா" என‌ திரும்பி சிரிக்க,

"அகமதாபாத் நல்லாருக்கா?"

"வீட்ட‌ விட்டு வெளில வந்து சரியா மூணு நிமிஷம் ஆகிருக்குமா? அவ்ளோ தான் நா பாத்தது"

"ஏஞ்சலுக்கு குஜராத்த சுத்தி பாக்கணுமா?"

"எஸ். ஆனா உங்க கூட மட்டும்" என வேகமாக சொல்ல, கார்‌‌டோரில் வலது கையை ஊன்றி இருந்தவன், லேசாக தலையை சரித்து அவளைப் பார்க்க, "அவசரம் இல்ல உங்களால எப்ப‌ முடுயுமோ அப்போ" என்றாள் சேர்த்து. முன் திரும்பியவன் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டான். அதற்கான நேரத்தை யோசிக்கிறான்‌‌ என யூகித்தாள். அவனை ஆராய்ந்து அவன் அசைவுகளுக்கு அர்த்தம் கண்டு பிடிப்பதே தற்போதைய அவளின் வேலையாகக் கொண்டிருந்தாள்.

"உங்களுக்கு பாட்டுக் கேட்கப் ரொம்ப இஷ்டமா?"

"ம்ம் டென்ஷன் இல்லாம பண்ணிடும்"

"நானும் கேப்பேன் எப்பவாது, ஸ்கூல் வீட்டுக்கு வந்தா நோட்ஸ்னு நேரம் ஓடிடும், டிவிலாம் எப்பவாவது தான்"

"கணக்கு டீச்சர்" என அவன் மீண்டும் ரசித்து சொல்ல, சிரித்துக் கொண்டாள். ஏனோ அவளை அழைத்துக் கொண்டே இருப்பதில் அவனுக்கு அப்படி ஒரு பிடித்தம், அந்த பிடித்ததையும் கண்டுக் கொண்டிருந்தாள்.

"நீங்க பிஸ்னஸும் பண்றீங்களா?"

"ஆமா ம்மா, அப்பா அரசியல்ல இருந்தப்போ நா பிஸ்னஸ் தான் பாத்துட்டேன், ப்யூலா கன்சீவ்னு தெரிஞ்சதுல இருந்து அவங்க ஃபுல்லா அவுட்டாஃப் கன்ட்ரோல் போயி மொத்தமா போய்ட்டாங்க. அப்றம் தான் நா அரசியலுக்கே வந்தேன். ஃபைவ் காலேஜஸ், த்ரி பெட்ரோல் பங்க், ஃபோர் ஹோட்டல்ஸ்ல நாம பார்ட்னர்ஸ். இப்ப காலேஜ் பார்ட்னர்ஸ் தான் நாம மீட் பண்ண போறோம்"

"எதுக்கு இவ்வளவு? கஷ்டமா தானே இருக்கும்?" ஏனோ அவளுக்கு அவன் பணத்தின் உயரம் தெரிய‌த் தெரியப் பயமாக தான் இருந்தது.

"இந்த மந்திரி வேலை நிரந்தரமில்லாத கவர்ன்மென்ட் வேலை ஏஞ்சல். எப்ப வேணா கை மாறிடும். சோ நமக்கான வருமானம் எப்பவும் வந்துட்டே இருக்க தான் அதுலாம்"

"அப்ப பிஸ்னஸ மட்டும் பாக்கலாமே? இப்டி இத்தன‌‌ பவுன்சர்ஸ வச்சுட்டு பயந்துட்டே இருக்க தேவை இல்லலப்பா?" கேட்டு விட்டாள். பயம் பயம் பயம், இதயம் திக் திக் என அடிக்க, திட்டிவிடுவானோ என்ற பயத்துடனே நிதானமாகக் கேட்டாள்.

ஒற்றை புருவம் உயர்த்தி "எனக்கு இது பிடிச்சுருக்கே ஏஞ்சல்" என்றுவிட்டு, "பிடிச்சுருக்குன்னா எவ்வளவு கஷ்டப்பட்டுனாலும் அத தக்கவச்சுக்கணும் தானே ஏஞ்சல்?" என்றான்.

'நானிருக்கும்போது என்ன‌‌ பயம்? பதவியில் இருக்கும் மந்திரியின் மனைவி போல் பேசு' இப்படியான வார்த்தைகளை எதிர்பார்த்தவளுக்கு, 'எனக்குப் பிடிச்சுருக்கு செய்றேன் நீயாரு அத கேக்க' என்பது போலான அவன்‌ பதில் வலியைக் கொடுத்தது.

'அவளையும் சேர்த்துக் சொல்கிறானோ?' எனப் பார்த்தவள்‌ அவன் பார்வையில் தலையை அசைத்து அமைதியாகி விட்டாள். லேசாக கண்கள் கூட கலங்கும் போலிருந்தது. எதையும் நேரடியாக சொல்லாமல் அவன் இப்படி தவிக்க விடும்போது எப்படியும் இந்த கண்ணீர் தேங்கி நின்று விடுகிறது.

"ஏஞ்சலுக்கு இப்ப அழ வருதாமா?"

"ஆமா நீங்க ஏன் பட்டு‌ பட்டுன்னு பேசுறீங்க?"

"அது என் நேச்சர்ம்மா"

"ஆனாலும்?"

"மனசுல‌பட்டத பொண்டாட்டிட்டக் கூடப் பேசக் கூடாதுன்னா அப்றம் யார்ட்ட‌ தான் பேசுறது?" கிண்டலாகத் தான் கேட்டான்.

"நீங்க மனசுல உள்ளதெல்லமா பேசுறீங்க? சரி நா கேக்றேன் மனசுல பட்டத அப்படியே சொல்லிடுங்க" என்றாள், இதழுக்குள் நாக்கை சுழற்றி லேசாக சிரித்தவன், புருவம் ஏற்றி இறக்கி அனுமதி தர,

"என் அம்மா பாட்டிலா உங்களுக்கு முக்கியம் இல்லையா? அவங்கள மதிச்சு நின்னு பேச மாட்டீங்களா? அவங்க யாரோவா உங்களுக்கு?" என்றாள் வேகமாக.

"என்ன பேசணும்?" அவன் எந்தவித மாற்றமும் இன்றி அப்படி பட்டென்று கேட்டதும் உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது அவன் ஏஞ்சலுக்கு.

"ஏன்? ஏன் அவங்கட்ட பேச ஒன்னுமே இல்லையா?"

"நீயே சொல்லேன் நா என்ன பேசணும்னு?"

"சாப்பிடுங்கன்னு சொல்லலாம், வெளில கிளம்பும்போது போய்ட்டு வரேன் சொல்லலாம். அன்னைக்கு செங்குண்ணா ஃபேமிலி ஊருக்கு கிளம்பினாங்க தானே? பாத்து போய்ட்டு வாங்க, ஊருக்கு போயிட்டு போன்‌ போடுங்கன்னு சொல்லிருக்கலாம். பேச விஷயமா இல்ல?" அவள் அடுக்கிக் கொண்டிருக்க.

மறுபடியும் தாடியை வலது கையால் தேய்த்து விட்டவன், "ஓ.கே லெட் மீ ட்ரை" (முயற்சிக்கிறேன்) என்றான்.

"ட்ரையா? நா சொன்னதுக்காகவா?" என்றாள் அப்போதும் அவனாக செய்ய நினைக்காமல் தான் சொன்னதற்காக என்றால் எத்தனை நாட்களுக்கு? என எண்ணினாள்.

"ஏஞ்சல்" என்ற அழைப்பின் வித்தியாசத்தில், "சரிப்பா" என்று விட்டாள்.

சிக்னலில் இவர்கள் வண்டி நிற்க, சிக்னலை தாண்டிய பஸ் நிறுத்தத்தில் ஆரோனின் பார்வை கூர்மையாக பதிந்தது, ஒரு இளம் வயது பெண் கல்லூரி முடித்து பேருந்திற்காக காத்திருக்கிறாள், அவளுக்கு சற்று மறைவில் ஒருவன் சற்றே வித்தியாசமாக அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

ஆரோனுக்கு அந்த புதியவன்‌ செய்யவிருந்த காரியம் புரியவும் பட்டென்று காரிலிருந்து இறங்கி, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வேக நடையில் அவனை நெருங்கி இருந்தான், அவன் வண்டியை கவனித்த பொதுமக்கள் காரிலிருந்து இறங்கியவனை சூழ்ந்து கொள்ள முயல, சிக்னல் காவலர்களும், அவன் பாதுகாவலர்களும் பொதுமக்களை தடுக்க, அந்த புதியவனுக்கு அப்போது தான் அங்கிருந்த பரபரப்பே உறைத்தது, அதுவரை அவன் கவனம் முழுவதும் அந்த பெண் மீதே தான் இருந்தது.

ஆரோனைக் கண்டதும், அந்தப் பெண்ணின் கழுத்தைக் கத்தியோடு வளைத்துப் பிடித்தான், ஆனால் அதற்கெல்லாம் நிற்கவுமில்லை யோசிக்கவுமில்லை வந்த வேகத்தில் எட்டி மிதித்திருந்தான் ஆரோன்.

"அந்த கைல என்ன? எடு வெளிய" என குஜராத்தியில் அதட்ட, அவனோ, "ஒன்னுமில்ல சார்" எனப் பயத்தில் தொப்பலாக நனைந்திருந்தான்.

"எதுக்குப் பயப்டுற? செய்ய வந்தப்போ இருந்த தைரியம் இப்ப‌ எங்க போச்சு? எடு வெளிய" என முட்டியில் ஓங்கி மிதித்தான். பலர் வீடியோ எடுத்தனர், மக்கள் எல்லோரும் பார்க்கிறார்கள் என அஞ்சவே இல்லை அவன்.

"சார் சார் நா பாக்றேன் சார் நீங்க இருங்க" என ட்ராஃபிக் போலீஸில் ஒருவரே முன் வந்து அவனிடமிருந்து அதை எடுத்தார். பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவை இருக்கவில்லை, அந்த பெண்ணை ஆசிட் ஊற்றி எரிக்க வந்திருக்கிறான் என அங்கிருந்த அனைவருக்கும் புரிந்திருந்தது.

அந்த பெண்ணையும் அழைத்தான், அவள் நடுங்கிக் கொண்டு வர‌மறுக்க, "இங்க வாம்மா" என்ற அதட்டலில் வேகமாக வந்து நின்றாள்.

"அத வாங்கி அவன் வலது கைல ஊத்து" என்றான்.

"சார்" அவள் மட்டுமின்றி அங்கிருந்த பலர் அப்படி கூவி ஆட்சேபித்தனர், அதிர்ந்தனர். அந்த புதியவன் அழுது கத்தவேத் தொடங்கி இருந்தான்.

"இவன் ஒரு எக்ஸாம்பிள். இனி எவனும் இத செய்யக் கூடாது. நீ செய்" என்ற அவன் கர்ஜனையில் மொத்த கூட்டமும் கப்சிப் என்றானது.

"பயமா இருக்கு சார்" அந்தப் பெண்ணும் அப்படி தான் அழுதாள்.

"இவன விட்டா நாளைக்கும் இதே மாதிரி வந்து நிப்பான், இவங்களாம் வீடியோ எடுத்துட்டு போவாங்க, நீ நீயூஸ்ல வருவ, இதே இன்னைக்கு பண்ணிட்டனா ஃப்யூச்சர்ல இத பண்ண எவனும் வர மாட்டான், நாளைக்கு உன் தங்கச்சிக்கு வரக் கூடிய நிலமைய கூட நீ இன்னைக்கு சேஃப் பண்ணிருக்கலாம்" கூர்மையாக அவன் கூறியதில், அந்த பெண் உள்ளம் கூப்பாடு போட்டாலும் பயம் போக மறுத்தது, அந்த செயலை செய்யும் துணிவு வர மறுத்தது.

"இனி கண்டிப்பா செய்யவே மாட்டேன் சார்" என அவன் ஆரோன் காலைப் பிடித்துக் கெஞ்ச, இகழ்ச்சியாக சிரித்தவன், "அரெஸ்ட் பண்ண ஆக்ஷன் எடுங்க, எந்த பெயில்லையும் இவன் வெளிய வரக் கூடாது" என அந்த பெண்ணையும் முறைத்து விட்டே காருக்கு திரும்பி நடந்தான்.

"அந்த கெமிக்கல்‌ எங்க கிடைச்சது, சப்ளை பண்ணவன் சேல்ஸ் பண்ணவன் அத்தன‌ பேர் டீட்டைல்ஸும் வேணும்" என‌ சொல்லிவிட்டே காரில் ஏறினான், அவன் கட்டளையை அவன் ஆட்களும் குறித்துக் கொண்டனர், போலீஸும் குறித்துக் கொண்டனர். இதை வைத்து மற்றவர்கள் அரசியல் பார்க்க முடியா வண்ணம் அவனே அனைத்தும் செய்திருக்க, ஊடகங்களில் செய்தி வேகமாக பரவியது.

அதுவரை நடப்பதை எல்லாம் படம் போல் பார்த்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள் நான்சி. அடுத்து அவன் காரில் அமைதி மட்டுமே. அவளால் அவனிடம் வாயே திறக்கமுடியவில்லை. அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது. ஹோட்டலுக்கு வெளியே அத்தனை பிரஸ் மக்கள்.

அவன் அங்கு வருவது யாருக்கும் தெரியாது, இப்போது நடந்த நிகழ்ச்சியில் உடனே இவ்வளவு கூட்டமும் வாய்ப்பில்லை என அவன் யோசித்து நிற்க, அவனது பாதுகாப்பாளர்களில் ஒருவன் வேகமாக இறங்கி வந்து, "சார் உள்ள சந்தீப் படம்‌ ஹிட்டானதுக்கு பார்ட்டி குடுக்கறாங்கலாம், அந்த ஆக்டர்ஸ்காக இவ்வளவு ப்ரஸ் வந்து நிக்றாங்க" என்றான்.

அவன் காரை நன்கு தெரியும், அப்படி இருக்கையில் அவனால் அவர்களுக்கு மரியாதை நிமித்தம் இறங்கி நிற்காமல் செல்ல முடியாது. இருநொடி ஸ்டியரிங்கில் தட்டி யோசித்தவன், காரின் கதவை திறந்து இறங்கி இரு விரல் மட்டும் அசைத்து அவர்களுக்கு போஸ் கொடுத்து மீண்டும் காரினுள் ஏறிக் கொண்டான். கண்ணை மூடி திறக்கும் முன் அவன் செய்த செயலை ஆச்சரியமாகப் பார்த்தாள். உள்ளே சென்று காரை வாலட் பார்க்கிங்கில் கொடுக்க இறங்க, தானும் இறங்கிக் கொண்டாள்.

வெளியே நின்றே, கிடைத்த இடைவெளியில் அவளையும் அவனையும் சேர்த்து அத்தனை ஃபோட்டோ எடுத்தனர். அங்கும் அவனது ஆட்கள் முன்பே வந்து அனைத்தையும் சரிபார்த்திருந்தனர்.

"ஆல் க்ளியர் சார்‌" என ஒருவன் வந்து ஆரோன் காதில் சொல்லி செல்ல, அடுத்ததாக மேனேஜரே ஓடி வந்தார் அவனை வரவேற்க.

"திஸ் வே சார்" என ஒரு அறைக்குள் அவர் அழைத்து செல்ல, பனி ப்ரதேசத்திற்குள்‌ வந்தது போல ஜில்லென்று காற்று முகத்தில் அறைய வரவேற்றது அந்த அறை‌. இவர்களுக்காக தனியே அறை போன்ற அமைப்பில் வட்ட மேசை போடப்பட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே வந்துக் காத்திருந்தனர் சிலர். அவள் நாலைந்து குடும்பத்தை எதிர்ப்பார்த்துச்‌ சென்றிருக்க, அங்கு குறைந்தது முப்பது பேராவது இருந்தனர்.

'அதான் வீட்டுக்கு கூப்பிடல போல' நினைத்துக் கொண்டாள். ஆரோனிடம்‌ வரவேற்பாகப் புன்னகைத்தப் பெண்கள் இவளிடம் வந்து கைபிடித்தே பேசினர். சிரித்து சமாளித்தாள். அவளால் இயல்பில் இருக்க முடியவில்லை.

அடுத்ததாக சாப்பிட அமர, "ஏஞ்சல்" என அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டான், சாப்பிடத் தன்னைபோல் அவனுக்கு அவள் எடுத்து வைக்க, அவள் உடல் அதீத குளிரில் விரைப்பதைக் கண்டு, ஏசியைக் கண் காண்பித்து குறைக்க வைத்தான்.

ஆண்கள், அவர்கள் தொழில் சம்பந்தமான பேச்சில் இருக்க, பெண்கள் மவுனமாக அதைக் கேட்டு உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் செய்கைகள், ஆரோனின் எதிர்வினைகள் அவன் நடந்து கொள்ளும் முறை என எல்லாவற்றையும் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருந்தது அவளுக்கு. வெளியே அவனிடம் பேச அத்தனை பேர் காத்திருக்க, தன் அன்னையிடமும் பாட்டியிடமும் ஏன் பேசவில்லை என அவள் கேட்டது அவளுக்கே இப்போது அதிகமாக தெரிந்தது. இதில் அவளுக்காக என்றில்லாமல் அவனாக வேறு அவர்களை தாங்க வேண்டும் என்று எண்ணிணாளே!

'நீ நிறைய தெரிஞ்சுக்கணும் போல நான்சி. பேசுமுன்ன ஒருக்கா நல்லா யோசிச்சுடு' என அவளுக்கு அவளே அறிவுரை சொல்லிக் கொண்டாள். எல்லாம் முடித்து மீண்டும் கிளம்பினர்.

"இந்த மீட்டிங் உனக்கு அவ்வளவு இன்ட்ரெஸட்டா இல்லையா ஏஞ்சல்?" என்றான் காரில் ஏறியதும். இது அவள் கணவன் ஆரோனின் அவதாரம்.

"எனக்கு அங்க யாரையும் தெரியாதில்லையா அதான்" அந்த குரல் பதில் சொல்ல வைத்தது.

"அவங்களா பேசுனப்பவும் ஏன் சரியா பேசல நீ?"

"கொஞ்சம் முன்ன நடந்த விஷயம். அங்க எல்லாம் புதுசுன்னு ஏதோ ஒன்னு. எனக்கு தெரியலப்பா சட்டுன்னு ஒட்ட முடியல. ஏன் தப்பா எடுத்துப்பாங்களா?" என தயக்கமாகக் கேட்க.

"அவங்க என்ன நம்மல தப்பா எடுக்கறது? பேசுறதும் பேசாததும்‌ நம்ம இஷ்டம் ஏஞ்சல், ஆனா எனக்காகன்னு நீ பேச முடியாதுன்னு உனக்கு புரிஞ்சா போதும்" என்றான் இப்போதும் கார் கதவில் கையை ஊன்றி அப்போது போலவே தலையை சாய்த்து இவளைப் பார்த்து. இவளால் புதிதானவர்களிடம் ஒன்ற முடியாது அவனுக்காக என்று பேச முடியாது என்கையில் அவனை மட்டும் அப்படி எதிர்பார்த்திருக்கக் கூடாது என செயலில் விளக்கி இருக்கிறான் என‌ புரிய, "சாரி" என்றாள்.

"ஏஞ்சல்" என்றான் அதட்டலில் அவளின் மன்னிப்பைக் குறித்து, அவள் பாவமாக பார்க்க, "உன் அம்மா பாட்டி எல்லாம் லேடிஸ் அவங்கட்ட நா என்ன பேசிட‌ முடியும், அதும் எப்பையும் என்ன பயந்து பாக்றவங்கட்ட? இனி அது உன் வீடு நீ அவங்கள நல்லா கவனிச்சுக்கோ. பட் நீ சொன்னதுக்காக நா அவங்கட்ட‌ பேச ட்ரை பண்றேன். எனக்கு கண்ட்ரோல் பண்ண தான் வரும். அவங்கள என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரது அவ்வளவு நல்லார்க்காதுன்னு நினைக்கிறேன்" என்றதும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

"கோபமா ஏஞ்சலுக்கு?" இல்லை என தலையசைத்து விட்டாள்.

"ஏஞ்சல்?"

"எனக்கு சிலது புரியல ப்பா, இனி புரிஞ்சுக்க பாக்றேன். எனக்கு, அவங்கள, அம்மா பாட்டிய ரெஸ்பெக்ட் பண்ணுங்க போதும், அது இல்லனா நீங்க அவங்கள மதிக்காத மாதிரி தோணுது, அப்ப நீங்க உயரமாவும் நாங்க கீழேயுமா ஃபீல் ஆகுது"

"நீங்க நாங்கன்னு வரக்கூடாதே! தப்பாச்சே ஏஞ்சல்" என்றான் அழுத்தமாக.

"இல்ல"

"இல்ல ஏஞ்சல், இந்த தாட் சரி இல்ல, அதும் நம்ம லைஃப்ப ஸ்டார்ட் பண்ணப்றம் நீ அப்டி நினைக்றது" பிடித்தமின்மையாக தலை அசைக்க, அப்படியே அமைதியாகி விட்டாள். ஆரோன் யோசனையானான், அதனால் அவனும் அமைதியாகி விட்டான். அவளுக்கு ஆரோனின் பல பரிமாணங்கள் அச்சுறுத்தலாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, காலை வேளையில் ஆரோன் கஞ்சியுடன் டிவியில் கவனம் வைத்து அமர்ந்திருக்க, "ப்பா, அம்மா பாட்டி அக்கா இன்னைக்கு ஊருக்கு கிளம்புறாங்க" என வந்து நின்றாள் நான்சி. பின்னரே அவர்கள் மூவரும். ஜென்சியும் விடாமல் முயல்கிறாள், முந்தைய இரவிலிருந்து சாப்பிடாமல் யாருடணும் பேசாமல் இருந்து பார்த்து விட்டாள், பாட்டி தான் இழுத்துப் பிடித்து விட்டார் எஸ்தரையும் சேர்த்து.

நான்சியும் இங்கு நிரந்தரமாக வருவதற்கு சரி என்று சொல்லாததால் மட்டுமே எஸ்தர் பாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டார். ஒருவித எரிச்சலில் நின்ற ஜென்சி கோபத்தில் செய்வதறியாமல், நேராக ஆரோன் முன் சென்று நின்றாள்.

அதைப் பார்த்த அனைவருக்கும் நான்சி உட்பட பதட்டமே, 'இவ லூசு மாதிரி எதையாவது பேசி மொத்தக் குடும்பத்து மானத்தையும் வாங்கிடுவாளே' என‌ப் பதறி, "என்னக்கா?" என்றாள்.

"நீ தான் நா பேசுனதக் கேக்க மாட்டேன்னுட்டியே நா உன்‌ புருஷன்ட்ட நேரா பேசிக்கிறேன். என் தங்கச்சி புருஷன்ட்ட பேச‌ எனக்கு உரிமை இல்லையா என்ன. அன்னைக்கு நா அப்டி போன்ல பேசுனதுக்குக் கூட சொந்தம்னு தான மன்னிச்சுட்டாரு. அப்டிதானேங்க?" என அவனிடமும் கேக்க.

கால்மேல் காலிட்டு கஞ்சியைக் குடித்து முடித்து பவுலில் கரண்டியை இட்டு நான்சியிடம் நீட்டியவன், "சொல்லுங்க ஜென்சி" என நேராகக் கேட்க. அவன் பேர் சொல்லி வேலையில் இருப்பவர்களை அழைப்பது போல் அழைத்தில் அதைப் புரிந்த நான்சி சங்கடமான நிலையில் நிற்க, ஜென்சி பேசிவிடும் தோரணையில் நின்றாள். இங்கு வந்ததில் இருந்து அவன் யாரையும் திட்டியோ அதட்டியோ பார்க்காததால் வந்த தைரியத்தில் பேச நின்றாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 17

"நாங்க இங்கேயே‌ வந்துடலாம்னு இருக்கோம். உங்களுக்கு அதுல ஒன்னும் கஷ்டம் இல்லையே" என்றாள் ஜென்சி சிரித்துக் கொண்டே.

"இங்கேயேன்னா? புரியலயே? என்ன ஏஞ்சல்?" என்றான் நான்சியிடம். அவளுக்கோ முகத்தை எங்கு சென்று ஒழிப்பது என்ற நிலை. நிச்சயம் அவனுக்கு ஜென்சியின் திட்டம் எல்லாம் தெரிந்திருக்கும் என‌ அறிந்திருந்தாள். குற்றாலத்தில் இருக்கும் போதே அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்குவேராக அறிந்து வைத்திருந்தவன்‌ அவன். இங்கு அவன் வீட்டிற்குள் நடப்பதை அறிந்து கொள்வதா பெரிய விஷயம் என புரிந்தே அவனிடம் வாயே திறக்கவில்லை அவள். ஆனால் ஜென்சி தானாக சென்று மாட்டிக் கொண்டு முழிக்கையில் அவளும் தான் என்ன செய்ய முடியும்.

"எனக்குத் தெரியலங்க. உங்ககிட்ட சொல்றளவுக்கு முக்கியமா படல எனக்கு அதான் நா எதுவும் சொல்லல" என்றுவிட்டாள் சமத்து மனைவியாக.

"உனக்கே வேண்டாத விஷயத்த உன் அக்கா எங்கிட்ட ட்ரைக்டா பேசுறாங்கனா? வேற‌ வெளில எதும் வாய் பேசி பஞ்சாயத்தாகிட்டா? சாரி அதுக்குலாம் என்னால சிபாரிசுக்கு வர‌ முடியாதே" என வார்த்தையை இழுத்து அவன் தாடியைத் தேய்க்க,

"ம்ச் உனக்கு தெரியும்லடி? எதுக்கு தெரியாதுன்னு பொய் சொல்ற? உன்ட்ட சொல்லி நீ செய்யாம விட்டதால தான அவர்ட்ட வந்து நிக்றேன், அவர் என்னென்னமோ பேசுறாரு பாரு" என ஜென்சி நான்சியிடம் பேச,

"லுக் ஜென்சி, நான்சி செய்யலன்னு சொன்ன விஷயத்த நா எப்டி செய்வேன்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்க நீங்க? பத்ரமா ஊருக்கு போயிட்டு வாங்க" என்றவன், "கரெக்டா சொல்லிட்டனா நான்சி?" என அவளையும் கேட்க,

'ஆங்' என விழித்தவள் வேகமாக ஆமாம் என தலை அசைக்க, "உங்ககிட்ட நேரடியா பிரச்சினையப் பேச வர்றவங்கள இப்டி தான் பொண்டாட்டி பேச்சக் கேட்டுப் பேசாம அனுப்பிடுவீங்களா?" என்றாள் ஜென்சி நான்சியை கோவமாக முறைத்துக் கொண்டு.

"அவ அப்பப்ப அப்படி தான் கிறுக்காகிடுவா நீங்க கிளம்புங்க தம்பி அவகிட்ட நா பேசிக்கிறேன்" என குறுக்கே வந்தார் பாட்டி‌, அவ்வளவு நேரமும் எஸ்தரை போ போ என‌ விரட்டிப் பார்த்தார், அவர் பயந்தே நிற்கவும் தானே வந்து விட்டார்.

"பாட்டி திரும்ப‌‌ திரும்ப‌ என்ன கிறுக்குன்ற நல்லா இல்ல சொல்லிட்டேன். இப்ப நா என்ன தப்பா கேக்குறேன்னு ஆளாளுக்கு அணைக்கட்றீங்க? நம்ம வீட்டு புள்ள சரியா இருந்தா நா ஏன் இப்படி பேச்சு வாங்கணும்" எனத் திட்ட,

"ஒழுங்கா வந்திடுடி" என விரல் நீட்டி எச்சரித்தார் பாட்டி.

"இருங்க பாட்டிமா பேசணும்றாங்களே பேசட்டும். உங்கள‌‌ பத்தி மட்டும் பேசணும், என் பொண்டாட்டி பத்தி ஒரு வார்த்தை வரக் கூடாது" என்றவன் ஜென்சியை நேராகப் பார்த்தான் அதில் கொஞ்சம் பயம் தான் அவளுக்கு ஆனாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு, "நான்சிக்கு இங்கத் தனியா இருக்க கஷ்டமா இருக்காம், எங்களாலயும் அவள விட்டுட்டு இருக்க முடியாது"

"சோ?" என்றான் புருவம் உயர்த்தி அமர்தலாகவே.

"அக்கா" என நான்சி பல்லைக் கடிக்க,

"ஏஞ்சல்" என்றான் அவளைப் பேச வேண்டாம் என‌க் குறித்து.

"அதனால நாங்க எல்லாருமா இங்க வந்துடலாம்னு இருக்கோம்"

"எல்லாரும்னா?" அவன் கேள்வியில் நான்சி இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டாள்.

"எல்லாரும் தான். அம்மா பாட்டி நா என் புருஷன்"

"உங்க ஹஸ்பெண்ட் வொர்க்? அவங்க அம்மா அப்பாவையும் ஏன் சேத்துக்கல?"

"அவருக்கு வேலை நீங்க நினைச்சா வாங்கி தர‌ முடியாமையா இருக்கு? நாங்க நாலு பேர் இங்க தங்கினாலும் உங்களுக்கு அது பெரிய செலவில்ல?" என்றாள் அவளாகவே.

வலது கையால் சோஃபா கை பகுதியில் தாளமிட்டவன், "அதாவது குடும்பத்தோட என் சம்பாத்தியத்துல உக்காந்து சாப்பிட வரேன்றீங்க? ஏன் அவ்வளவு கஷ்ட ஜீவினிமா அங்க? நா நான்சிய மட்டுந்தான் கட்டிட்டு வந்ததா நினைச்சேன் கூடவே உங்க குடும்பமு இலவசமா?" என்றதும் அந்த மூன்று பெண்களுக்கும் ஐயோ என்று தான் இருந்தது.

ஜென்சியும் இப்படி முகத்தில் அறைய கேட்டு விடுவான் என எதிர்பாராது, "என்ன இப்டி பேசுறீங்க? என் புருஷனுக்கு வேலை வாங்கிக் குடுங்கன்னு தான் கேட்டேன், இவ்வளவு பெரிய வீட்ல நாங்க நாலு பேர் வந்து தங்குறதா கஷ்டம், அதுக்கு வேணும்னா வாடகை வாங்கிக்கோங்க"

"ஏன் அங்க வேலை இல்லையா உங்க ஹஸ்பெண்ட்கு‌?" இன்னுமே நிதானமாக தான் கேட்டான்.

"அங்க பாக்குற வேலையே கூட இங்க மாத்தி வாங்கி தாங்க எங்களுக்கு பிரச்சினை இல்ல"

"ஏன் அத அங்கையே பாத்தா என்ன? எதுக்கு குஜராத் வரணும் நீங்க? அண்ட் ஒரு கவர்ன்மென்ட் ஜாப்ப விட்டுட்டு வந்து இங்க தோட்ட வேலை சமையல் வேலை எல்லாம் ஏன்‌ பாக்கணும்?"

"தோட்ட வேலை சமையல் வேலையா?"

"ஆமா இங்க இந்த வீட்ல என் பெர்சனல் ஆளுங்க தவிர மத்தவங்கனா வீட்டு வேலை ஆட்கள் தான், பவுன்சர்ஸ் செக்யூரிட்டீஸ் வேலைக்குலா நீங்களும் உங்க ஹஸ்பெண்ட்டும் செட்டாக மாட்டீங்களே. வேற எந்த வேலையும் இங்க இல்ல"

"நாங்க இங்க வர்றது என் தங்கச்சியோட இருக்க தான்"

"அப்ப கல்யாணமே பண்ணிக்காம உங்க தங்கச்சியோடவே தான இருந்துருக்கணும்?"

"அம்மாக்கு நான்சியோட இருக்கணுமாம், என்னால அம்மாவ விட்டு இருக்க முடியாது அதான் இப்படி பண்ணா என்னன்னு யோசனை சொன்னேன்"

"என்ன ஏஞ்சல் இதுக்கு தான் என் அம்மாவ கேக்கல என்‌ பாட்டிய‌ கேக்கலன்னு பேசுனியா நீ?" என்றான் நான்சியிடம்.

கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றாள் நான்சி, "நான்சிய திட்டாதீங்க தம்பி, எல்லாரும் சேர்ந்து இருக்க ஆசபட்டு பெரியவ அப்டி பேசுறா தப்பா எடுத்துக்காதீங்க" என பறிந்து வந்தார் எஸ்தர்.

"அவங்கவங்க அவங்க அவங்க இடத்தில இருந்தா தான் மரியாதை. பாத்து அனுப்பி வச்சுடு ஏஞ்சல். இனி வீட்டுக்குள்ள வெளி ஆளுங்களுக்கே வேலை இல்ல, நீ தான் பாத்துக்கணும் மொத்த வீட்டையும். இதுவரை வீட்ட பாத்துக்க ஆள் இல்ல வேலைக்கு ஆள் வச்சோம் இனி வீடு உன்‌ பொறுப்பு. அவங்கள அனுப்ப நீ கூட போக வேணாம். நைட்டு வர லேட்டாகும். பை" என அவள் கன்னம் தட்டி அவளின் கலங்கிய விழிகளைப் பார்த்து சொல்லிவிட்டே கிளம்பிச் சென்றான்.

"அறிவு கெட்டவளே மரியாதையா கிளம்பிப் போவோம்னு அத்தன தடவ சொன்னனே கேட்டியா நீ? இப்ப எப்டி‌ பேச்சு வாங்கி அவரே கிளம்பச் சொல்றளவுக்குக் கொண்டு வந்து விட்டுட்ட? பிள்ளன்னு வந்து வாச்சுருக்கப் பாரு, போ போய் பேக்கத் தூக்கு, உன்‌ புருஷன் வீட்லக் கொண்டு விட்டுட்டு தான் எனக்கு மறுவேலை" என ஜென்சியின்‌ முதுகில் நான்கடி வைத்து இழுத்துக் கொண்டு சென்றார் பாட்டி.

எஸ்தருக்கும் இப்போது அவமானமாகத் தான் இருந்தது. "நான்சிமா" என அவளை நெருங்க,

"செம கோவத்துல இருக்கேன், ஊருக்கு போகைல வாங்கி கட்டிக்காத, எப்பவும் உனக்கு உன்‌ மூத்த மக மட்டும் தான் பிள்ளையா தெரிறா இல்லையா?"

"இல்லடி நிஜமா அவ பாவம்டி, எல்லாத்துக்கும் போராடி தான் வாங்கிப்பா, ஈசியா அவளுக்கு எதும் கிடைச்சதில்ல, உனக்கு லேட்டா அமஞ்சாலும் நீ பெருசா அதுக்காக போராட வேண்டியது இருக்காது பெஸ்டா கிடைக்கும். அதான் அவளுக்கு உன்‌ மேல பொறாமை"

"கிடைச்சத தனக்கு பெஸ்டா ஆக்கிக்க தெரியாதவளுக்கு இப்படி வேற சப்போர்ட் பண்ணு. அவளோட பொறாமை குணத்தால தான் கிடைச்சத வச்சு நிம்மதியா இருக்க தெரியாம போராடுறா, போ இத பத்தி நிறையா பேசியாச்சு இனி சொல்றளவுக்கு இல்ல. நிம்மதியா போயிட்டு வாங்க" என்கையில் கண்ணீர் வடிந்து விட்டிருந்தது. ஆயிரம் சண்டை என்றாலும் அம்மா இல்லையா, அவள் வீட்டினர் கிளம்புவதை நினைத்தும் அதிலும் சந்தோஷமின்றி இவ்வாறு கிளம்புவதும் சேர்த்து பாரமாக இருந்தது.

ரோஸியும் ப்யூலாவும் வேடிக்கைப் பார்த்து நின்றனர், ஜென்சி பேசும்போதெல்லாம் எவ்வாறு நடுவில் வரவில்லையோ அப்படியே ஆரோன் பேசும் போதும் சரி அதன் பிறகு அவர்களாக பேசிக் கொள்ளும் போதும் சரி தள்ளியே நின்றனர்.

பதினொரு மணி போல் பெண்கள் மூவரும் கிளம்பி விட்டனர், பாதுகாவலர்கள் இருவர் உடன் கிளம்ப அதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டாள், எஸ்தரும் கிறிஸ்டியும் விடை பெற, "நீ மட்டும் நல்லாருக்கணும்னு நினைக்றல்ல அந்த எண்ணத்துக்கே கஷ்டபடுவடி பாரு" என்று விட்டேக் கிளம்பினாள் ஜென்சி. இன்னுமே நான்சி முதலில் குழந்தை உண்டாகிவிடுவாளோ என்ற‌ பயம் அவளை அறித்துக் கொண்டே தான் இருந்தது. அதைத் தான் இப்படி காட்டிவிட்டுக் கிளம்புகிறாள்.

"அவ எப்பையும் போல பேசத் தெரியாம பேசுறா, நீ நல்லா இருப்ப, மாப்ள தம்பி கிட்ட எங்க சார்பா மன்னிப்புக் கேளு, சண்ட போடாத, அனுசரிச்சு வாழணும் சரியா, தெனமு போன் போடு, அம்மாவ கோச்சுக்காதடி நான்சி" என எஸ்தர் அவளை அணைத்து விடுவித்து தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ப்யூலா ரோஸியிடமும் தலை அசைத்து விடை பெற.

"பாத்துக்கோங்க ரோஸி, நீயும் சீக்கிரம் கல்யாணம் கட்டு ப்யூலா பொண்ணு, அதுக்குத் தான் நாங்க அடுத்து வரணும். வரேன் நான்சி குட்டி நீ பக்குவமா தான் இருப்ப இருந்தாலும் மாப்ள வேலை அறிஞ்சு இன்னும் கவனமா நடக்கணும்" என பாட்டியும் அவள் கன்னம் ஒற்றி முத்தம் கொடுத்து விடை பெற்றார்.

அவர்கள் கிளம்பிய பின்னரும் அமைதியாகவே தான் அமர்ந்திருந்தாள் நான்சி. ஆரோன் எதையும் நினைத்துக் கொண்டானோ, முதலிலேயே தன்னிறக்கமாக எண்ணுபவள், காலையில் இனி எல்லா வேலைகளையும் நீயே பார் என்ற பின்னர் இன்னுமே நொந்து கொண்டாள்.

மதிய உணவின் போது, ப்யூலா வந்து அழைத்துச் செல்ல, மூவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர்.

அவளையே சற்று நேரம் பார்த்த ரோஸி, "ஏம்மா ஒரு மாதிரியா இருக்க? அம்மா வீட்ட தேடுதா?" என்றார், அவராக அவளிடம் பேசும் முதல் பேச்சு இது. கிறிஸ்டி பாட்டி இவளை பற்றி அநேகம் பேசியிருக்க, தன்னைப்போல் பாசமாக விசாரித்திருந்தார்.

"ஆமா த்தே, இத்தன நாள் கூடவே இருந்துட்டு இப்ப சட்டுன்னு பிரிஞ்சு கிளம்புவம்‌ ஒருமாதிரி இருக்கு"

"இதானே இனி உன் வீடு, பழகிடும். ஆரோனுக்கு உன்ன ரொம்பப் பிடிச்சுருக்கு, அது அவன் உன்ன பாக்கும்போதே நல்லா தெரியுது. சின்ன விஷயங்கள பெருசாக்கி இன்னும் சரியா புரிதல் வராத உங்களுக்குள்ள சண்டை வளத்துக்காதீங்க. இன்னைக்கு அப்டி பேசிட்டாலும் உன் பிறந்த வீட அவன் என்னைக்கும் ஒதுக்கிட முடியாது, அது அவனே மெல்ல புரிஞ்சுக்கட்டும், நீ தினிச்சனா தான் ஒட்டாம போயிடும்" என்றார். காலையிலிருந்து அவள் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதை வைத்து அவராகவே யூகித்து அவளுக்கு எடுத்துச் சொல்ல,

"என்னம்மா அண்ணிட்ட நீங்களா பேசிட்டீங்க பேரேனோ பேத்தியோ வந்து சொல்லணும்னு‌ நினைச்சேனே?" என‌ ப்யூலா சிரிக்க,

"ஆரோன் அவள‌ மட்டுந்தான் உறவா தனக்குன்னு நம்புறான் ப்யூலா, நீ யாஷ்லாம் அவன் பிள்ளைங்களா இருக்கீங்க. அவன் எதிர்ப்பார்ப்பு எல்லாம் நான்சி மட்டுந்தான், அதான் என்னால அவன்‌ வாழ்க்கைக்கு எதையும் செய்ய முடியலனாலும் அவனுக்கு அவனே அமைச்சுகிட்ட வாழ்க்கைய சந்தோஷமா வச்சுக்க நான்சிக்கு சொல்லித் தரேன்" என்றார்.

"அண்ணா உன்னுடையும் சீக்கிரம் பேசுவாரு ம்மா"

"ஆமா த்தே" என நான்சியும் ஆமோதித்தாள்.

"ம்ம்கூம் எனக்கு அப்படி தோணல. நா ஒருத்தி அவன் யோசனைல கூட‌ எங்கையும் இல்லம்மா. நா இப்டியே இருந்துட்டு போறேன். நீ அவனுக்கு அம்மாவும் இரு நான்சி, அவன் அதத் தான் விரும்புறான்"

"எப்டிமா சொல்ற?"

"நான்சி இந்த வீட்டுக்கு வரும் முன்ன, உன் அண்ணா நேரா ரூமுக்கு போயிடுவான் அப்றம் ஆள் அரவமே இருக்காது. நீயா தான் ஏதாவது அவன பிடிச்சு வச்சு பேசுவ அவனா யாஷ்ட்ட கூட நின்னு பேச மாட்டான். ஆனா நான்சி வந்தப்றம், வீட்டுக்குள்ள நுழையும் போதே ஏஞ்சல்னு கூப்டுட்டே தான் வருவான். நைட்டு லேட்டா அவன் வரும்போதும் அவள அவன்‌ கண்ணு தேடும். பரிமாற கூட அவ வேணும். அவட்ட சொல்லாம வெளில கிளம்பினதில்ல. இதெல்லாம் இங்க எல்லார் முன்னாடியும் அவன் நடந்துகிட்டத வச்சு நா சொல்றது. தனிப்பட்ட முறைல எப்டின்னு நான்சியே தான் தெரிஞ்சுக்கணும்"

"ஒரு வாரத்துல இவ்வளவு வித்தியாசமா? அதும் அண்ணா முன்னயே வராம கண்டுப் புடிச்சுட்டீங்களா எப்டி மா?"

"ஒதுங்கி நின்னாலும் அவன ஆராயிரத தவிர வேற‌ என்ன வேலை எனக்கு?" என்றார் விரக்தியாக, இரு பெண்களுக்குமே அந்த நொடி அவரைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது.

"இன்னைக்கு நைட் அண்ணா வரும்போது டெஸ்ட் பண்ணிடுறேன் நானு" என சிரிக்க, நான்சி செல்லமாக முறைக்க, ரோஸியும் சிரித்துக் கொண்டார்.

தாமதமாக வருவேன் என்றவன், ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருந்தான். அவனது ட்யோட்டோ சத்தத்தில், "மாமா" என ஓடிச் சென்று வாசலைத் தாண்டாமல் நின்றான் யாஷ். அவனை கூட ஆரோன் அவன் வசதிக்குப் பழக்கி இருப்பது புரிந்தது நான்சிக்கு.

அந்த மாளிகையே இரவு விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது, வீட்டில் அத்தனை ஆட்கள் இருந்தும் யாஷ் ஒருவன் சத்தத்தைத் தவிர வேறு சத்தமின்றி இருந்தது. அந்த அமைதி கூட அவளுக்கு அவள் ஊரைத் தேட வைத்தது. அவன் தொண்டர்கள் என்ற பெயரில் எழும் சத்தமும் பயம் இவ்வாறான அமைதியும் பயம் என அவளால் ஒன்ற முடியவில்லை இங்கு. இதற்கு ஏதாவது சலசலத்து பிரச்சினை செய்து கொண்டிருந்த ஜென்சியின் இருப்பு பரவாயில்லையோ எனக் கூடத் தோன்றிவிட்டது.

"ஹாய் யாஷ். சாப்டியா?" என்ற அதிர்ந்த குரலில் அவனிடம் திரும்பினாள், யாஷை தோளோடு அணைத்து நடந்தவன், "ஏஞ்சல் ரூம்ல டாகுமெண்ட்ஸ் ரேக்ல ஒரு எல்லோ பென்ட்ரைவ் இருக்கும் எடுத்துட்டு வரியா?" என்றான் வீட்டினுள் நுழைந்ததுமே இவளிடம்.

ஆரஞ்சு வண்ண சுடிதாரில் மெல்லமாக தலையசைத்தவளைப் பார்க்க அவனுக்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. இதற்காகவே தான் சீக்கிரம் ஓடி வருகிறான். யாஷ் ஏதோ கூறவும் அவனிடம் திரும்பிப் பேச, சலீம் பின்னரே உள்ளே வந்தான்.

"சாப்டுட்டு போலாம் சலீம் சிட்" என அழைக்க,

"இல்ல சார் வீட்டுக்கு தானே போறேன், அம்மாவோட சாப்டுக்குறேன்"

அதற்குள் நான்சி பென்ட்ரைவ் கொண்டு வந்திருக்க, ஆரோனிடம் கொடுத்தவாறு "வாங்கண்ணா" என சலீமை வரவேற்றாள், அதைக் கவனித்த ஆரோனும், "இந்தா சலீம், மார்னிங் சீக்கிரம் கமிஷனர் பாத்துட்டு கட்சி ஆபிஸ் வந்திடு. அப்றம் ப்யூலா விஷயம் என்ன ஆச்சு?"

"மேடம் இன்னும் எதும் சொல்லல சார்" என்றான்.

"சரி மார்னிங் வா பேசிக்கலாம்" என்கவும் சலீம் கிளம்பி விட்டான்.

"போய் தூங்கு யாஷ் காலைல ஸ்கூல் போணும்ல" என அவனையும் ப்யூலாவோடு அனுப்பினான். நின்றால் திருமணத்தைப் பற்றிக் கேட்பானோ என எண்ணி அவளும் ஓடி விட, "சாப்பாடு எடுத்து வை ஏஞ்சல், ப்ரஷாகிட்டு வரேன்" என இப்பவும் அவள் கன்னம் தட்டி விட்டேச் சென்றான்.

சற்று நேரத்தில் ஆரோன் வர, "எல்லாரும் சாப்டாச்சா? நீ சாப்டியா? டைம் எப்டி போச்சு?" என கேட்டுக் கொண்டே அமர்ந்தான்.

"ம்ம்பா"

"ஏஞ்சல்?" சாப்பாட்டில் கை வைக்காமல் அவளையேப் பார்த்தான்.

"நீங்க மட்டும் காலைல என்ன அப்டி பேசிட்டு போயிட்டு இப்ப வந்து கேக்றீங்க? நா அழுறதயும் பாத்துட்டே தான கிளம்பிப் போனீங்க?" என்றாள் வேகமாக.

"ஆஹான் அப்ப நீ நா பேசணும்னு எதிர் பாத்தியோ?"

"சாப்டுங்க மொதல்ல அப்பறமா நாம பேசலாம்" என கோவத்தில் சிவந்த கன்னத்தை அவனுக்குக் காட்டாது மறைத்தாள்.

சிரிப்பு தான் வரும் போலிருந்தது ஆரோனுக்கு, "இப்ப என்ன உன் அக்காவ இங்கேயே வர வச்சுருக்கணும்னு சொல்றியா?" என்றவன் சாப்பிட ஆரம்பித்திருக்க,

"நா அப்டி எப்ப சொன்னேன்? அவங்க கேட்டது தப்பு தான். ஆனா அதுக்கு என்னையும் எல்லா வேலையும் நீயே பாரு, அப்ப தான் என்னோட இடம் எனக்கு தெரியும்னு மாதிரி பேசிட்டு போனீங்க. நா வீட்டு வேலை பாக்க மாட்டேன்னு சொல்லல, எனக்கு அது பழக்கம் தான். நீங்க அத வேற எப்பவாவது சொல்லிருக்கலாம் ஏன் அக்கா அப்படி பேசினப்ப சொல்லிட்டு போனீங்க. நானு அப்டி தான் காசு பணம் பாப்பேன்னு நினச்சுட்டீங்களா?" என்றதும்.

சாப்பாட்டை நிதானமாக உட்கொண்டு அவளைப் பார்த்தவன், "இதுக்கு தான் இந்த தாட் எப்பவும் நமக்கு நடுவுல நீ கொண்டு வர்ற டிஃபரன்ஸ் தான் நா அப்டி சொல்ல காரணம். இது நம்ம வீடுன்னு நினை, எல்லாத்தையும் நீ பாருன்னு நா சொன்னேன். நமக்கு நடுவுல பணம் மட்டுமில்ல உன் சைட் என் சைட் ஆட்கள் கூட வர வேணாம்னு சொல்றேன் ஏஞ்சல். எல்லாமே உனக்கு தெளிவா சொல்லணுமா?"

"வீட்ட நா என்ன பாத்துக்கணும்?" என்றாள் சந்தேகமாக.

"வேலைக்கு போற ஐடியா இருக்கா?"

"ம்ம் போணும், ஆனா கொஞ்சம் லேட்டா"

"குட். உனக்கு வீட்டுக்குள்ள எல்லாம் யாரோ கன்ட்ரோல்ல இருக்க ஃபீல் பிடிக்கலனா அத நீ உன் கன்ட்ரோல்ல எடும்மா"

"நா எப்ப பிடிக்கலன்னு சொன்னேன்?"

"சரி எனக்கு பிடிக்கலன்னு வச்சுக்கோ ஏஞ்சல், இத்தன நாள் தான் யாரோ டேஸ்ட் பண்ணிட்டு கொடுத்தத சாப்டேன் இனி நீ டேஸ்ட் பண்ணி குடேன். சாப்ட்டு பாக்றேன்" என அவன் சாப்பிட்டு முடித்து எழ. காலையில் ரோஸி கூறிய விஷயம் சட்டென்று ஞாபகம் வந்தது, 'அவன் அம்மாவையும் உன்ட்ட தான் தேடுறான்' என்பது.

'இருக்குமோ?' என அவன் முகத்தைப் பார்க்கத் தேட, கை அழம்ப சென்றிருந்தான் அவன். திரும்பி வந்து அவள் தோளில் கையிட்டு "இன்னும் என்ன யோசனை? தூங்க போலாமா?" என்க.

"எங்க வீட்ல காலைல அப்படி பேசுனதுக்கு கோவம் இல்லையா?"

"அவங்க பேசுனதுக்கு தான் நா அப்பவே பதில் சொல்லிட்டேனே ஏஞ்சல்"

"ஆனாலும் சாரி" என்றாள் குனிந்து கொண்டு. எதுவும் சொல்லவில்லை அவன், தோளில் இருந்த கையால் இன்னும் இறுக்கிக் கொண்டான் அவளை. அமைதியாகவே அறைக்கு வந்தனர்.

அறைக்குள் நுழைந்து கதவை அடைத்ததும் "தென் ஏஞ்சல்?" என்றவன் அவளையும் பின்னிருந்து அணைத்து கழுத்தில் வாசம் பிடிக்க,

"ஹான்" என்றவளுக்கு பேச்சு வராமல் போக,

"சொல்லு ஏஞ்சல்மா"

"என்ன சொல்லணும்?"

"இன்னைக்கு எப்டிலாம் என்ன தேடுனன்னு சொல்லேன்?"

"நா உங்கள தான் கட்டிக்க போறேன்னு தெரியும் முன்ன இருந்தே உங்களத் தேடிட்டு தான் இருக்கேன்" என்றாள் ஹஸ்கியாக.

"ஏஞ்சல் அப்போ அப்டி என்னையும் தேட வை" என்றான் அவள் காதைக் கடித்துக் குறுகுறுப்பூட்டிக் கொண்டு.

கண்ணை அகல விரித்து, "நானா?" என்றாள் அதிர்ச்சியாக.

"ம்ம் நீதானே என் பொண்டாட்டி அப்ப நீதான் தேட வைக்கணும்?"

"அது எப்டி தேட வைக்றது? உங்களுக்கு என்னப் பிடிச்சுருந்தா நீங்களே தேடலாமே?" என்றாள் ரகசியமாக.

"தேடிட்டு தானே இருக்கேன் ஏஞ்சல்? இன்னும் ஆழமா தேடணுமோ?" என்றவன் அவளோடு கட்டிலில் சரிய,

"சரியான அரசியல்வாதிப்பா நீங்க, மாத்தி மாத்தி பேசி ஆளுங்கள குழப்பி காரியம் சாதிக்றது" என பாவமாகப் பார்க்க,

பல் தெரிய சிரித்தவன், "அப்ப நா நல்ல அமைச்சர்ன்ற?" என்க

"ஆமா அக்மார்க் கரைவேட்டி தான்" என்கவும், அந்த வார்த்தையை தான் முழுமையாக வாங்கிக் கொண்டான்.

அவர்கள் நாட்கள் இது போன்ற புரிதல்களுடன் நகர, அடுத்த ரெண்டு மாதத்தில் இரண்டு நல்ல செய்தி ஒன்று போல் வந்தது, ஒன்று நான்சி கருதாங்கி இருந்தாள்‌. மற்றொன்று பிரதமர் அவரது அரசியல் வாரிசாகவும், அவருக்கு அடுத்து அவர் கட்சியை ஆரோன் எடுத்து செல்ல வேண்டுகோள் விடுத்த அறிக்கையும் வெளியிட்டிருக்க, இங்கு ஏற்கனவே கூடியிருந்த ஷெட்டி ஆட்களுடன் குஜராத்தின் முதல்வரும் சேர்ந்து கொண்டார். மொத்தமாக ஆரோனுக்கு எதிராகினர். அவர் கூண்டு புலியாக உறுமத் தொடங்க, விளைவு மறுவாரமே அவனது அந்த ரகசிய ராஜாங்கம் அம்பலமானது. போராட்டம் ஆரம்பித்தது. அவனது கட்சி ஆபிஸிலிருந்து போதைப் பொருள் எடுக்கப்பட்டது. ஒரு ஹீரோயினோடு அவனது பெயர் இணைந்து கிசுகிசுக்கபட்டது. வீட்டில் கல் எறியப் பட்டது. அவன் பேனர் கிழிக்கப் பட்டது.

எல்லாம் வரிசையாக நடந்தும் வரவேற்பறையில் கால்மேல் காலிட்டு நிதானமாக அதை செய்தியாக மட்டுமே கேட்டுக் கொண்டு, "ப்யூலாக்கு இந்த விக்ரம்மயே பேசிடலாம் சலீம், இன்னும் ஒரு டைம் நல்லா விசாரிச்சுடு. ஃபைனல் பண்ணிடலாம்" என சொல்லிக் கொண்டிருந்தான் ஆரோன்.
 
Last edited:

priya pandees

Moderator
அத்தியாயம் 18

"இவரையே ஃபைனலைஸ் பண்ணிடவா சார். அல்ரெடி மேரேஜ் ஆகி டிவோர்சி சார்" சலீம் திரும்ப‌க் கேட்க.

"அதுக்குத் தானே இன்னொரு தட விசாரிக்க சொல்றேன்? இல்ல நீ வேற ஆப்ஷன் எதும் வச்சுருக்கியா சலீம்?" என்றான் அவனை ஆராயும் பார்வையுடன்.

சலீம் ஆரோன் சொல்லிவிட்டால், எந்த வேலையையும் சொன்ன உடன் செய்து முடிப்பவன், ப்யூலா விஷயத்தில் இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருந்தான். ஆரோனும் கவனித்துக் கொண்டே இருந்தவன், ப்ரேம் மூலமாக இந்த விக்ரமைக் கொண்டு வந்திருந்தான். ஆனாலும் சலீம் விசாரித்துவிட்டால் முழு திருப்தி கிடைக்கும் அவனுக்கு. அதற்கே அவனிடம் மீண்டும் ஒப்படைத்தான். அதுமட்டுமின்றி சலீமின் எண்ணமும் தெரிய வேண்டி இருந்தது.

சலீம் வாலிப வயதிலேயே ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிச் சென்றிருக்க, தற்கொலை செய்து கொள்ள இருந்தவனை அவன் அப்பா தான் காப்பாற்றி இவனிடம் கொண்டு விட்டுச் சென்றார்.

"உன் உயிர் வேணாம்னு முடிவெடுத்துட்ட தான? அது இனிமே எனக்கு சொந்தமா இருந்துட்டு போட்டும். போறப்பவும் எனக்காக போனதா இருக்கட்டும்" எனக் கூறியே உடன் இருத்திக் கொண்டான். ப்யூலாவையும் அவனையும் சேர்த்து வைக்கும் நினைப்பு ப்யூலா நன்றாகி திரும்பி வரும் வரை அவனுக்கு இல்லை. ஏனோ இப்போது வந்திருக்கிறது, ஆனால் அதை சலீமாக சொல்ல வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அப்படி அவனுக்கு இஷ்டம் இல்லை என்றால் இந்த விக்ரமயே ப்யூலாவிற்கு முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.

சலீம், திருதிருத்தவன், "எஸ் சார்" என ப்யூலாவைப் பார்க்க, அவள் தீயாக முறைக்க, "நோ சார்" என்று விட்டான்.

"எஸ்ஸா நோவா சலீம்?" ஆரோனின் அழுத்தத்தில்,

"நீங்க என்ன சொன்னாலும் எஸ் தான் சார்" என வேகமாக ஒத்துக் கொண்டான்.

ஆரோன் அவனை ஒரு பார்வைப் பார்த்துத் திரும்பினால், தொலைக்காட்சி. தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சொன்னதயே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த ந்யூஸ் சேனலை சலிப்பாக பார்த்தவன், "சலீம்‌ எவ்வளவு நேரந்தான் இதையே கேக்றது சேனல மாத்து மேன்" என்று விட்டு அவன் பிரதமரிடமிருந்து கையெழுத்துக்காக வந்திருந்த அறிக்கையை மறுபடியும் கையிலெடுத்து அதில் கண்களை ஓட்ட, அவனுக்கு செய்தி அடுத்ததாக பாடல் கேட்பது நிரம்ப பிடிக்கும் என‌ அறிந்த சலீம் பாட்டு சேனலை மாத்தி ஆரோனின் ப்ளே லிஸ்டை வைத்திருந்தான்.

அது உடனே, "என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை" எனப் பாட, பேனாவை சுழற்றிக் கொண்டு நிமிர்ந்து சலீமைப் பார்த்தவன், "சிட்வேசன் சாங்கா சலீம்?" என்கவும்.

இதற்கு. இந்த கேள்வி இருவருக்கும் பொருந்தி வரும் அல்லவா? ஒன்று சலீமின் வார்த்தைகளாகவும் வரும். மற்றொன்று ஆரோன் வெளியே நிற்பவர்களுக்கு சொல்லும் பதிலாகவும் வரும் என்பதால் ஆரோன் பொதுவாக கேட்க, சலீம் தான் பதறி விட்டான்.

"இல்ல சார் உங்க ப்ளே லிஸ்ட்ல இருந்து தான் வச்சேன்" என்றவன் வேகமாக அடுத்த பாட்டை மாத்த,

"மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே" எனப் பாட ஆரம்பித்தது.

அவர்கள் அறையிலிருந்து கலைப்பாக நான்சி இறங்கி வந்தபோது ஆரோன் செய்தி பார்த்துக் கொண்டிருந்த டிவியில் இப்போது பாட்டு பாடிக் கொண்டிருந்ததை நின்று பார்த்தாள். சற்று முன் அதில் ஓடிக் கொண்டிருந்ததைக் கேட்டு தானே தலை சுற்று அதிகரிக்க மேலேறிச் சென்றாள். அவள் திரும்பி வரும் நேரத்தை கணித்தே சேனலை மாற்ற‌ வைத்திருந்தான் ஆரோன்.

'நமக்காக தான் மாத்திட்டாங்களோ?' நினைத்துக் கொண்டாள்.

வெளியே இருக்கும் நிலைமை எப்போதையும் விட இன்று அவளுக்கு அதிக கிரக்கத்தைக் கொடுத்திருக்க, அவன் நிதானமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது இன்னும் பிபியை அதிகரிக்கவே செய்தது, "ஏசப்பா, இவர புரிஞ்சுக்க எனக்கு எக்ஸ்ட்ரா கொஞ்ச கிராம் மூளைய குடுங்க ப்ளீஸ்" என வேண்டிக் கொண்டே அவன் இருக்கும் இடம் செல்ல,

வெளியே கத்தலும் கூச்சலும் அதிகமானது, அவன் சார்பு தொண்டர்களும் திரண்டு நிற்க, பவுன்சர்கள் தள்ளு முள்ளையும், கண்டதை எறிபவர்களையும் சமாளிக்க. நேரம் கூட கூட மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ப்ரஸ் மக்களும் அவன் வரவிற்காக காத்து நிற்க, அவன் வீட்டிலிருந்து மாத்தாடு மாத்தாடு மல்லிகை என தமிழ் பாட்டு சத்தம் மேலும் அவர்களை கொந்தளிக்கச் செய்ய, ஆவேசமாக கல்லை குறிபார்த்து வீட்டினுள் எறிந்தனர்.

ஆரோன் நிமிராமலே, "சவுண்ட் இன்கிரிஸ் பண்ணு சலீம்" என்றதும் அவன் கூட்டப் போக.

"சும்மா இருக்க மாட்டீங்களா? எனக்கு ஏற்கனவே பயமா இருக்கு, நீங்க இன்னுமு அவங்கள ஏத்திவிட பாக்றீங்க" என அவன் அருகில் வந்து அமர்ந்தாள் நான்சி.

"எதுக்கு பயம் ஏஞ்சல்? உனக்கு வாமிட் பரவால்லயா? எதாது சாப்டலாமா?" என இவளிடம் கேட்டவன் திரும்ப, சமையல் மேற்பார்வையில் இருப்பவர்‌ பழச்சாறுடன் வேகமாக வந்தார்.

"ம்ச் நா சும்மா எதாது பேச தெரியாம பேசினாலே முறைச்சு பாப்பீங்க, அங்க அவங்க என்னென்னவோ சொல்றாங்க கூலா உக்காந்துருக்கீங்க?" என்றாள் படபடவென.

"உனக்கு மறுபடியும் தல சத்து வர போகுது. ரிலாக்ஸா இரு ஏஞ்சல்" என்றான் அவள் தோளில் தட்டி,

"உங்க நேம ஸ்பாயில் பண்றாங்கபா. கேட்டுட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?"

"சும்மா இருந்தா தானே கலவரம் பெருசாகும்? நாமளும் ஃபேமஸ் ஆக முடியும்? பிரதமர் ஆக முடியும்?இல்லையா சலீம்?" என்க.

"சார் அப்ப சைன் பண்ணப் போறீங்களா? ப்ரஸ் மீட் ஏற்பாடு பண்ணிடவா?" என்றான் அவன் அதைவிட ஆர்வமாக.

"ம்ம் ஈவ்னிங்கா பண்ணு. அதுவரை இவங்க போராட்டம் ஃப்ளாஷ் ந்யூஸ் எல்லாம் ஒவரால் ஸ்பரெட் ஆகட்டும். அப்போ தானே நா அடுத்து மத்திய அமைச்சரா நிக்கும்போது நம்ம முகம் ஃபெமிலியரா இருக்கும்?" என்கவும், நான்சி ப்யூலா இருவரும் அதிர்ந்து விழிக்க, சலீம் பரபரப்பானான். அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஒரு வாரத்திற்கு முன்பு அந்த அறிக்கை பிரதமரிடமிருந்து ஆரோன் கைக்கு ரகசியமாக தான் வந்து சேர்ந்தது. அவனுக்கு முன்பே கணிப்பிருந்தது பிரதமரின் இந்த ஆசை கடந்த இரண்டு வருடங்களாக மறைமுகமாக அவனுக்கு உணர்த்தப்பட்டுக் கொண்டே இருந்த விஷயம் தான். இவன் தான் பிடி கொடுக்காமல் இருந்தான்.

முடிந்த எலெக்ஷனில் கூட வெளிப்படையாக அவர் இவனுக்கு தனியான வாழ்த்தைச் சொல்லி, மறைமுகமாக அவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போதெல்லாம் முதலமைச்சருக்கு அது பெரும் உதவியாக இருந்தது இவனையும் கைக்குள் வைத்துக் கொண்டிருந்தார். அவரின் முழு சுயரூபம் தெரியவே, இந்த அறிக்கையை தானே கசிய விட்டான். அவன் அவருக்கு மட்டும் கசிய விட்டதை மொத்த இந்தியாவிற்கும் தெரிய வைத்து அவனை பிரபலமாக்கி விட்டார் குஜராத்தின் முதல்வர்.

அவனுக்கும் அதானே வேண்டும், சாதித்து விட்டான், இப்போது நின்று நிதானமாக ரசிக்கிறான். ஒருவாரமாக யோசித்து எல்லோரையும் குழப்பத்தில் விட்டு, இவன் மத்திய அரசின் பிடிக்கு செல்வானா மாட்டானா என ஆளாளுக்கு பட்டிமன்றமெல்லாம் நடத்த, இன்று தான் கையெழுத்திடும் முடிவை சலீமிற்கே கூறி இருக்கிறான்.

"என்ன செய்யப் போறீங்க?" குரல் நடுங்க பயந்து தான் கேட்டாள் நான்சி. இதுவரை அவனது அரசியல் சம்பந்தமாகவோ இல்லை அவனது வெளி வேலைகள் பற்றியோ வீட்டில் இவர்கள் இருவருக்கும் பேச்சு இருந்ததில்லை, அவர்கள் இருவரின் புரிதலிலும் காதல் வெளிபாட்டிலுமே சென்றிருக்க, திடீரென இந்த பிரச்சினை அவளை வெகுவாக பயமுறுத்தியிருந்தது.

நிச்சயமாக பிரதமரிடமிருந்து வந்த அறிக்கையாக செய்தியில் கூறியதை பற்றி அவனிடம் அவள் கேட்கவே இல்லை, அப்படியெல்லாம் இருக்காது என அவளே தீவிரமாக நம்பினாள். அதுமட்டுமின்றி அவர்கள் இவனை கொன்று குவிக்கும் ஹிட்லர், போதை மருந்து கடத்தல்காரன், கதாநாயகியுடன் தொடர்புடையவன் என அடுக்கிய புகார்கள் பற்றியும் ஒரு வார்த்தை கேட்கவில்லை, அதையும் அவள் நம்பவில்லை. மொத்தத்தில் ஊடக நண்பர்கள் கூறும் பொய்களை நம்பிக் கொண்டு இப்படி திரண்டு வந்து கல் எறிகிறார்களே, இவரும் அதை தடுக்காமல் அமைதியாக இருக்கிறாரே என்பது மட்டுந்தான் அவளின் தலையாய கவலையாக இருந்தது.

"ஏஞ்சல்" என்றான் திரும்பிப் பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி லேசாக சிரித்து‌. வில்லன் சிரிப்பல்லவா இது?

"நீங்க இப்டி சிரிச்சாலே வில்லங்கமாச்சே?" என்றாள் பயந்து. அவளை அந்தளவிற்குப் படுத்தி இருந்தானே கடந்த இரண்டு மாதத்தில். அவனுக்கு தக்க அவளையும் பழக்கிக் கொண்டல்லவா இருக்கிறான்.

"ரூமுக்கு போயிடுவமா ஏஞ்சல்" என அவளை நெருங்கி மெதுவாகக் கேட்க.

"உள்ள வந்தும் வாமிட் தான் எடுப்பேன் பரவாயில்லையா?" என்றாள் மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு.

"உன் வாமிட்ட நா நிப்பாட்டி காட்றேன்டி, என் புள்ளை நா சொன்னா கேட்டுபா"

"ஒன்னும் அது நிக்க வேணாம், நாம‌ இங்கயே இருப்போம். நீங்க பேச்ச‌ மாத்தாதீங்க. இவங்க சொல்றதெல்லாம் நிஜமா அப்போ?" என்றாள் பயத்துடன் வெளியே கை காண்பித்து.

"நிஜம்னு இன்னும் நீ நம்பலையா அப்போ?" என்றான் கிண்டலாக.

"நா பொய்னுல நினச்சுட்ருந்தேன், யாரந்த ஹீரோயின் அப்போ?" என்றாள் கண்ணை விரித்து,

"ம்ம் பொண்டாட்டின்னு நிரூபிக்ற பாத்தியா ஏஞ்சல்?" அவன் வம்பு தான் வளர்த்தான்.

"ஜீஸஸ்" என அவள் கண்ணெல்லாம் கலங்கிக் கொண்டு வர, அவன் அவள் கண்களையே தான் பார்த்தான். சலீமும் ப்யூலாவும் அங்கு தான் சற்று தள்ளி தள்ளி நின்றனர், இவர்களைப் பார்த்து விட்டு அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மற்ற வேலை ஆட்களுக்கும் வெளியே இருக்கும் சூழலால் பதட்டம் தான் ஆனாலும் ஆரோனின் நிதானம் அவர்களையும் பயமின்றி இருக்கச் செய்தது. உண்மையும் அதுவே‌, அவனின் நிதானம் தான் வீட்டில் உள்ள மூன்று பெண்களும் கூட பயமின்றி இருக்க காரணமும்.

"ஏஞ்சல்" அவன் அதட்டலில்,

"நா நிஜமா பொய் பொய்யா சொல்லிட்ருக்காங்க அதான் நீங்களும் கண்டுக்காம‌ இருக்கீங்கன்னு நினைச்சேன்" என பாவமாக சொல்ல.

"இப்ப என்னம்மா அதனால? உண்மை பொய்னு நாந்தான உனக்கு சொல்லணும்? நீ என்ட்ட கேட்டியா?"

"நானா நினச்சுகிட்டேன்"

"டீச்சரம்மா மாறி என்ட்ட நிக்க வச்சு கேள்வி கேளுன்னு சொல்லிருக்கேன் தான? நீதான் கேக்க மாட்டேங்குற நல்ல டீச்சரே இல்ல நீ" என்றான் தோள்களை குழுக்கி.

கண்ணீர் தேங்கிய கண்களோடு முறைத்தவள், "நா கேக்றேன் நீங்க எனக்கு டைவட் பண்ணாம பதில் மட்டும் சொல்லணும்" என்க.

இப்போதும் உள்ளே செல்லத் தொடங்கிய கண்ணீர் கண்களைப் பார்த்தே, புருவம் ஏற்றி இறக்கி அனுமதி கொடுத்தான்.

"பிரதமர்ட்ட இருந்து லெட்டர் வந்தது உண்மையா?" என்றாள். முன் தலைமுடி ஆட ஆமென தலையசைத்தான்.

"அப்றம் அந்த ரகசிய ராஜாங்கம்?" இதற்கும் ஆம் என்றதும் அதிர்ந்து விழிக்க,

"நெக்ஸ்ட் ஏஞ்சல்" என்றான் அவள் கன்னம் தட்டி,

"போதை பொருள்?"

"அத‌ யூஸ் பண்ணி பொண்ணுங்கள யூஸ் பண்றவனுங்களுக்கான தண்டனை இடம் தான் நீ மேல கேட்ட கொஸ்டீனுக்கான ஆன்ஸர்"

"அதுக்கு போலீஸ் இருக்காங்க தானே?"

"சட்டம் ஸ்டராங்கா இல்லையே?"

"அப்ப மினிஸ்டர் தானே நீங்க சட்ட திருத்தம் செய்ய ஆலோசனை நடத்துங்களேன். இப்டி அடுத்தவங்க வயித்தெரிச்சல் நமக்கெதுக்கு?"

"குட், அதுக்கு தான் பிரதமர் கோரிக்கைய ஏத்துக்கலாம்னு இருக்கேன். ஸ்டாராங்கான சட்ட திருத்தம் கொண்டு வருவோம்?" அவளிடமே கேட்க, வாயடைத்து தான் பார்த்தாள். பேசி ஜெயிக்க முடியுமா அவனிடம்? எங்கையும் யாரையும் சமாளிப்பவன் அல்லவா இந்த கரைவேட்டி.

"ஆனாலும் இவங்க எல்லாம் விடணுமே? பெரிய வேலைனா பொறுப்பும் பயமும் கூட கூடிடும் தானே?" என்றாள். சாதாரண மந்திரியாக இருக்கும் போதே இவ்வாறு என்றால், 'பிரதமர்?' அந்த பதவிக்கான மரியாதை மனதில் எழ அவன் அருகில் அமரவும் பயம் வந்தது.

"தென் ஏஞ்சல்? கொஸ்டீன்ஸ் ஓவரா?" என்றான் குறும்பாக. அவளும் தான் பயத்தில் அந்த ஹீரோயினை மறந்திருக்க, முடிந்ததாக தலை அசைத்தாள்.

"ஏஞ்சல்" என இலகுவாக அழைத்து தரை பார்த்து அமர்ந்திருந்தவளை தானும் குனிந்து பார்த்தான். அந்த அழைப்பு அவனுள் பாதுகாப்பாக அவளை ஒன்ற அழைக்க வேகமாக அவனை நெருங்கியவள், அவனுக்கு பின் நின்ற சலீமைப் பார்த்து நிதானித்துக் கொண்டாள்.

மீசையை நீவி விட்டு அவளை தோளோடு அணைத்துப் பிடித்தவன், "இதுக்கு தான் ரூமுக்கு போயிடலாமான்னு கேட்டேன். நீ டர்ட்டியா நினச்சு வர மாட்டேன்னுட்ட" என உதட்டை பிதுக்க, இன்னும் பாதுகாப்பாக அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

"ஏன்டாம்மா?" என்றான் இன்னும் ஆதரவாக தோளை இறுக்கிக் கொடுத்து.

"ஒன்னுமில்ல" என்றவள் இன்னும் தட்டையாக இருந்த மேடிடாத வயிற்றையும் தடவிக் கொடுத்தாள்.

"அந்த ஹீரோயின பத்தி கேக்க மறந்துட்ட ஏஞ்சல்" என எடுத்துக் கொடுத்தான்.

"அது பொய்யா தான் இருக்கும்னு எனக்கேத் தெரியும்"

"ஆஹான் எப்டி?"

"ஏஞ்சல்னு இப்டி ஃபுல்ஃபில்லா கூப்பிடுற உங்களால வேற யாரையும் மனசுல சும்மா கூட அப்டிலா நினைக்க முடியாது"

"அப்போ கொஞ்சம் முன்ன கேட்ட?"

"எப்டினாலும் சும்மா‌ பேச்சுக்குக் கூட வேற பொண்ணோட சேத்து சொல்ல கூடாது தானே? நீங்களும் கேடுட்டு இருக்கீங்கன்னு கோவம் அதான் அப்டி கேட்டேன்"

"ம்ம் கஞ்சனுங்க பொய் தானே சொல்றானுங்க ஒன்னா சொல்லாம ரெண்டு மூணா சொல்லலாம்ல? இன்னும் விவரம் பத்தலமா இவனுங்களுக்கு" என சொல்ல, அவன் கையை எடுத்து விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள். தாடியைத் தடவிக் கொடுத்து வாய்க்குள் சிரித்தவனும் மீண்டும் அறிக்கையில் கவனமானான்.

அப்போது ஒரு பாதுகாவலன் வேகமாக வந்தான், "சார் டைம் ஆக ஆக கூட்டம் கூட்டிட்டே இருக்கு, மக்கள் குள்ளேயே சண்ட வருது. உங்களுக்கு பாதுகாப்பு குடுக்குறோம்னு நிறையபேர் வந்து குவிஞ்சுருக்காங்க, போலீஸாலயே சமாளிக்க முடியல" என்றான் பரபரப்புடன்.

"ப்ரஸ் மீட்கு ஏற்பாடு பண்ணு சலீம். காந்தி நகர் க்ரௌண்ட்ல ரெடி பண்ணு. கூட்டம் கூடினாலும் சமாளிக்க அதான் ஈசி" என்றதும் அவன் வெளியேறி விட்டான். பாதுகாவலனும் சென்று விட, ஆரோன் யோசனையில் அமர்ந்தான். அவனுக்கு ப்ரஸ் மீட்டில் தெளிவாக பேச வேண்டிய கட்டாயம், அந்த யோசனையில் இருக்க, நான்சி அவளுக்கான பலவிதமான யோசனையில் இருந்தாள்.

நேரம் சென்றது. சலீமிடமிருந்து அழைப்பு வந்தது, அதற்குள் மேடை தயாராகி இருந்தது. வெளியேவும் காந்தி நகர் நோக்கி எல்லோரும் கிளம்பத் தொடங்கி இருந்தனர். போலீஸ் விரட்டியும் இவனுடனே செல்ல வேண்டிக் காத்திருந்த ஆட்களும் அதிகம்.

அவனும் கிளம்ப ஆயத்தமாக. சற்று நேர அமைதிக்கு பின், "உங்கள அரெஸ்ட் பண்ணுவாங்களாப்பா?" நான்சி மெதுவாக கேட்க,

திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவள் கண்களில் தெரிந்த அலைபுருதலில், அவள் கன்னம் தட்டி, "என் சாம்ராஜ்யம்னு சொன்ன இடத்துல அடர்ந்த காடு தான் இருக்கு ஏஞ்சல். நா அங்க பெரிய அளவுல விவசாயம் தான் பண்றேன். ஃபுல்லா செக் பண்ணிட்டாங்க, என் மேல் தப்புன்னு ப்ருஃப் இல்லமா. நீ நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு, நா ப்ரஸ் மீட்ட முடிச்சு இதுக்கு ஒரு என்டு கார்ட் போட்டு வந்துடுறேன்" என எழுந்து நின்று கழுத்தைத் தேய்த்து அழுப்பை விட்டான்.

எழுந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்துப் பாவமாக, "உங்கள நல்லா ப்ரொடக்ட் பண்ணிப்பாங்க தானே? தூரத்துல இருந்து கூட யாரும் எதும் செய்யாம பாத்துப்பாங்க தானே?" என்றதும், கைகளை நீட்டி அவளையும் எழுப்பி விட்டவன் ஆதூரமாக அணைத்துக் கொண்டான். பாதுகாப்பைக் கொடுத்து அவளையும் அதை உணர வைத்தான்.

"ஏஞ்சல் மை ஏஞ்சல்" உச்சியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன், "இங்கேயே உக்காந்து இந்த டிவில என்ன பாத்துட்டே இரு, நா வந்துடுறேன்" என அவளை விடுவித்து, "கேர்ஃபுல் ப்யூலா" என அவளுக்கும் சொல்லிவிட்டே வெளியேறினான். அவன் வெளியேறியதும் நிலை வாசல் கதவு இழுத்து சாத்த பட்டது.

காந்தி நகரில் இமையா கூட்டம் அவனுக்காகக் காத்திருந்தது. இன்னும் கூடிக் கொண்டிருந்தது. அவ்வளவு கூட்டம் அவனுக்காக கூடியதைக் கண்டு மொத்த அரசும் அதிர்ந்து விழித்தது. குஜராத்தின் அரசு தான் அவனை அண்டி இருந்திருக்கிறது அவன் அந்த அரசை நம்பி இல்லை என கண்ணாரக் கண்டனர். அவ்வளவு நேரமும் அவனுக்கு எதிரானப் போராட்டம் என நினைத்திருக்க, அதில் அவனுக்கு ஆதரவானக் கூட்டமே அதிகம் என தெரிந்து ஸ்தம்பித்தனர்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 19

ஆரோன் இந்த அரசியலுக்குள் நுழையும் போதே முடிவெடுத்தது தான், இந்தியாவையே ஆள வேண்டும் என்பது. அவன் ஒரு மந்திரியின் மகன், அவன் தந்தை மற்றும் இவன் என இருவரின் கட்டுபாட்டில் இருக்கும் அவனது தங்கை ப்யூலா, அவளுக்கே சொந்த நாட்டிற்குள் பாதுகாப்பில்லை. அதைவிட சொந்த வீட்டிற்குள்ளேயே வந்து அவளை தொடும் தைரியம். எப்படி வந்தது அது? அந்த குருட்டு தைரியத்தை தான் மொத்தமாக ஒழிக்க நினைத்தான்.

தன்னாலேயே தன் மகளை காக்க முடியவில்லை என புலம்பி இறந்து போன அவன் தந்தையின் இழப்பு அந்த முடிவை இன்னும் தீவிரமாக்கியது. முதலில் குஜராத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்தான். இதோ எட்டு வருடத்தில் சாதித்தும் காட்டி இருந்தான். பெண்களின் பாதுகாப்பில் குஜராத்திற்கு தான் முதலிடம். காரணம் அடி மனதில் ஊர‌வைத்த தண்டனை பயம். அதை மொத்த இந்தியாவில் நிலைப்படுத்த வேண்டும், அது அவனது வெறி என்று கூட சொல்லலாம்.

அதிகாரத்தில் இருப்பவன் நினைத்தால் கெட்டது மட்டுமின்றி நல்லதையும் பயப்படாமல் செய்யலாமே! ஆனால் இந்தியாவை ஆள வேண்டும் எனில் படிப்படியாக முயன்றால் அவன் வயது அறுபது கடந்து விடுமே. அதற்காகவே பிரதமரை அடிக்கடி சந்தித்தான், தன் செயல்கள் மூலம் அவரையும் அவனை திரும்பி பார்க்க வைத்தான். அவராகவே அவனை அழைத்து பேசும்படி செய்தான். தொழில் துறை வளர்ச்சி பற்றி அதிக ஆலோசனை கொடுத்தான், அது அவனது நல்ல நேரத்திற்கு வெற்றியாகவும் அமைய, அவனின் புத்திக்கூர்மையில் வெகுவாக கவரப்பட்டார். அவரது கட்சியில் அவரோடு வந்து இனைந்து கொள்ள விடாது அழைத்துக் கொண்டிருந்தார். இவன் ஆர்வம் இல்லாதது போல் காட்டி காட்டியே அவரின் அடுத்த வாரிசாக அறிவிக்கும் அளவிற்கு கொண்டு வந்திருக்கிறான். இதோ இப்போதும் அவரை ஒரு வாரம் காக்க வைத்து, குஜராத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்வது போன்றான பிம்பத்தையும் உருவாக்கி இருந்தான்.

மாநாட்டிற்கு வந்தது போலான ஒரு கூட்டம், ஆரோனே அசந்து தான் விட்டான். நிச்சயம் புரளியை நம்பி அவனை சாடுவர் என்றே நினைத்திருந்தான். அவனால் அவர்கள் அடைந்த நன்மைகள் ஏராளம், அதனாலேயே அவனை பற்றிய குற்றச்சாட்டு பொறுக்காமல் பொங்கி இருந்தனர். அவன்மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடு இது என நேரில் கண்டான்.

மேடை மீது அவன் ஏறியதும் அவ்வளவு கூச்சல், கோசம் என அந்த இடமே அதிர்ந்தது‌. ப்ரஸ் மக்கள் முன்னால் கூடி நிற்க, அதற்கு பின் வெகு தொலைவிற்கும் மக்கள் வெள்ளம் தான். நேராக மைக் முன் வந்து நின்று விட்டான்.

சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு, அந்த கூச்சலை உள்வாங்கி கொண்டு, "ஹம் ஷ்ரூ கரேன்? (ஸ்டார்ட் பண்ணலாமா?)" என்றான் கணீரென்ற குரலில். அப்படியே அமைதியாகியது அந்த இடம்.

"வணக்கம், உங்க எல்லாரையும்‌ இப்டி சேர்ந்து பாக்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். (ப்ரஸ் மக்களை காண்பித்து) இவங்க மூலமா உங்கட்ட பேசிட நினைச்சேன், ஆனா நீங்களே கிளம்பி வந்துட்டதால உங்க முன்னவே இந்த நல்ல முடிவ எடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இதோ பிரதமர் எனக்கு அனுப்பிய கோரிக்கை மனு. ஏத்துக்றதா வேணாமான்னு குழப்பத்துல இருந்தவன என் வீட்டுக்குள்ள கல் எல்லாம் எடுத்து அடிச்சு ஏத்துக்க வச்சுட்டாங்க உங்கள்ல சிலர்" என நிறுத்தி சிறு‌ இடைவெளி விட்டு,

"எஸ் ஒரு விஷயத்த செய்யாதன்னா அப்படிதான் செய்வேன்னு செஞ்சு தான் பழக்கம் எனக்கு. இங்க மட்டும் செஞ்சத இனி இந்தியா ஃபுல்லா செய்வேன். போதை பொருள், மது, ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, சூதுன்னு எதுவும் இல்லாத தூய்மையான நாடா மாத்துவேன். எதுத்து நிக்றவன் தாராளமா நில்லு. நீ என்ன எதுத்து நிக்க நிக்க தான், எனக்கு இன்னும் இன்னும்னு வெறியா இருக்கும். நா செய்ய வேண்டியத செஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்" என்றான் திமிராக.

சற்று நிதானமாகி மீண்டும் ஒருமுறை கூட்டத்தை பார்த்து, "சொல்றது விட செயல்ல காட்டினா தானே இன்னும் கெத்தா இருக்கும் ரைட்? அப்ப சைன் பண்ணிடலாமா?" என்றான் கேள்வியாக எல்லோரிடமும். இப்போதும் அங்கு அமைதியே, அப்படி ஒரு பரிசுத்தமான நாடாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கற்பனை பண்ணாமலும் இருக்க முடியவில்லை, ஆனால் இதெப்படி சாத்தியம் என்றெண்ணியே அமைதியாக நின்றனர்.

"நீங்களாவும்‌ செய்ய‌ மாட்டீங்க ஒருத்தன்‌ எடுத்து செஞ்சாலும் சப்போர்ட் பண்ண மாட்டீங்க இல்லையா?" என்றவன் கேட்ட பின்னரே, கை தட்டல் விழ ஆரம்பித்தது. அவன் பேர் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

"குட்" என கூறி அவர்கள் முன்பே அதில் கையெழுத்திட்டான். அவன் கையெழுத்திட்ட நொடி பலவிதமான பொருட்கள் கூட்டத்திலிருந்து பறந்து வந்தது ஆனால் அது எதுவுமே அவனை எட்டாதவாறு கூட்டத்திற்குள்ளேயே கலந்திருந்த ஆரோனின் ஆட்கள் தடுத்திருந்தனர்.

அதுவே மற்றவர்களுக்கு ஆச்சரியம் தான். எவ்வளவு துரிதமாக செயல்பட்டு விட்டனர் என்று. துப்பாக்கியுடன் வந்திருந்த மூவரை அவர்கள் அதை வைத்திருந்த பாக்கட்டோடே அமுக்கி அழைத்துச் சென்றிருந்தனர்.

"ட்ரைன்ட் ஆர்மி ஆஃபிஸர்ஸ் இருக்காங்க. நாட்டுக்காகன்னு வேலை செய்றவங்க அவங்க. அவங்கள தாண்டி தான் என்கிட்ட நல்லதோ கெட்டதோ நெருங்க முடியும்" இந்த வரி கிளம்பும் போது கலங்கி நின்ற அவன் மனைவிக்காக சொல்லப்பட்டது. அவள் முகம் ஞாபகம் வரவும், முகம் மென்மையை தத்தெடுக்க, "எனி கொஸ்டீன்ஸ்?" என்றான் நிருபர்களிடம்.

"நமஸ்தே ஜி, அப்ப இங்க நீங்க இப்ப இருக்க கட்சீல இருந்து விலக போறீங்களா?"

"எஸ் இங்க இருந்து விலகுனா தானே அங்க சேர முடியும்? பட் அவங்க கூட்டணி வச்சு என்னோட சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்ய விருப்பபட்டா தாராளமா சேந்தே இருக்கலாம். அது குஜராத்தின் முதல்வர் முடிவு"

"உங்க மேல வைக்கபட்டிருக்க குற்றச்சாட்டு எல்லாம்?"

"அது ஃப்ரூப் பண்ண படலையே? ஐம் யுவர்ஸ்னு ஃபுல்லா செக் பண்ணிக்க சொல்லிட்டேன், நத்திங் இஸ் தேர்னு ரிப்போர்ட் குடுத்துட்டாங்களே, உங்க சேனலுக்கு ந்யூஸ் கிடைக்கலையா?" என்றதும் அமைதியாகி விட்டார் அவர்.

"தூய்மையான நாடா மாத்துவேன்னு சொன்னீங்க. அது எந்தளவுக்கு சாத்தியம்னு நினைக்றீங்க?"

"நீங்க ஏன் சாத்தியம் ஆகாதுன்னு நினைக்கிறீங்க?"

"நீங்க மட்டும் நினைச்சா போதாதே, அதுக்கு அடிமையாகி இருக்குற மக்களும் திருந்தனுமே?"

"பழக்கம் தானே எல்லாம். இருந்ததால இத்தன நாள் பழகுனோம் இனி இல்லனா பழக வேணாம் தானே? அளவோட இருக்க எல்லாமே நமக்கு நல்லது தான் செய்யும், அது எதுவா இருந்தாலும் சரி. நா அளவோட இருக்க என்ன வலியோ அத ஏற்படுத்தி தரேன். அடிமையாக இருக்கது அவங்கவங்க தான் பாத்துக்கணும்"

"புரியல சார்"

"போதை பொருள், கண்டிப்பா இனி இந்தியா குள்ள வராது, சிகரெட்டும், ஆல்கஹாலும் மாசத்துக்கு இவ்வளவு தான்னு ரேஷன்ல மட்டுமே குடுக்கப்படும். அப்ப ஒருத்தரோட உடம்புக்கும் கேடில்ல, கஷ்டபட்டு உடம்பு வலிக்க வேலை பாக்றவனுக்கு மருந்தாவும் கிடைக்கும். அப்றம் பெண்கள் மேல கை வைக்றவனுக்கு கடுமையான தண்டனை தான். இப்ப இங்க எப்டியோ அப்படி தான் இனி மொத்த இந்தியாக்கும். நிச்சயமா சட்ட திருத்தம் கொண்டு வருவேன்னு சொல்றேன்" என இன்னும் இன்னும் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக நிதானமாக பதில் கூறி முடித்தான்.

மொத்த இந்தியாவும் அவன் பேட்டியை பார்த்தது, சிலர் நம்பினர், சிலர் 'இதுமாதிரி பேசுனவங்க எத்தன பேர பாத்துருக்கோம்' என்றனர், சிலர், 'வந்து எதாது செய்யட்டும் அப்றம் நம்புவோம்' என்றனர், மது பிரியர்களும் பெண் பித்தர்களும் 'நாங்க எப்டி வேணா இருப்போம் நீ யாருடா எங்கள கண்ட்ரோல் பண்றதுக்கு, உசிரோட வீடு போய் சேர மாட்ட' என கொந்தளித்தனர். அந்த கருத்துகள் எதுவும் அவனை சென்றடையவில்லை, அவனிடம் தெளிவான திட்டம் இருந்தது, அதை செயல்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் தைரியம் இருந்தது துணிந்து இறங்கி விட்டான்.

வீட்டிலிருந்து பார்த்திருந்த அவன் ஏஞ்சலுக்கு அவன் பேச்சும் அங்கிருந்தோரின் நடவடிக்கைகளும் கேள்விகளும் அவளின் உயிர் வரை ஆட்டம் கண்டது. நடப்பதெல்லாம் நல்லதர்க்கு தானா என அயர்ந்த நிலையில் அமர்ந்திருந்தாள். நாட்டிற்கு நல்லது செய்பவன் யாரோ ஒருவன் எனில் பாராட்டுவோம் தன்‌ வீட்டை சார்ந்த ஆள்‌ என்றால் உற்றவருக்கு பயம் இருக்கும் தானே? அந்த நிலை தான் நான்சிக்கும்.

"இதென்னமா இவ்ளோ கூட்டம்? அரசியல், பெரிய பதவின்னு நினைச்சாலே பயமா இருக்குல்ல?" என்றார் ரோஸி டிவியில் ஆரோனின் பேச்சு முடிந்ததும்.

"ஒன்னுமே புரியலம்மா. அண்ணா பாத்துப்பார் தான். என்ன பொறுத்தவரை அந்த நிமிஷம் அந்த இருட்டு நாலு பேர்ட்ட என் உயிர் போறளவுக்கு நா போராடுன வேதனை அதெல்லாம் இனி யாருக்கும் நடக்க கூடாதுன்னா இங்க அண்ணா குடுக்குறதா இவங்க சொல்ற தண்டனை தாம்மா சரி. சின்ன பிள்ளைங்கள கூட விட்டு வைக்காத மிருகங்கள் எதுக்கும்மா பூமிக்கு பாரமா இருந்துட்டு? அண்ணா சட்ட திருத்தம் கூட கொண்டு வரட்டும்மா" என்றாள் முடிவாக. நான்சி எல்லாம் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் அவளது கைப்பேசிக்கு அழைப்பு வர, எஸ்தரின் பெயரை தாங்கி அழைப்பு வந்து கொண்டிருந்தது.

"சொல்லுமா"

"நான்சி என்னடி ஊருக்குள்ள என்னலாமோ சொல்லிக்றாங்க. ந்யூஸ்ல தம்பி ஹிந்தில பேசுனதையும்‌ இங்க கீழ‌ தமிழ்ல போட்டாங்க. நேத்து கூட பேசுனேன் நீ ஒன்னுமே சொல்லல என்ட்ட?" என்றார் படபடவென, அவர் குரலில் சந்தோஷமே மிதமிஞ்சி இருந்தது. அங்கு ஆளாளுக்கு புகழ்ந்து பெருமையாக பேசி இருக்க தலைகால் பிடிபடவில்லை அவருக்கு.

"பேச்சுவார்த்தை போயிட்ருக்கும்மா, எனக்கே இன்னைக்கு காலைல தான் சொன்னாங்க" என்றாள் சலிப்புடன். உண்மையிலேயே அவளால் இதில் சந்தோஷ‌படமுடியவில்லை. ஒரு வகுப்பிற்கு மட்டும் ஆசிரியராக இருந்து அறுபது பிள்ளைகளை சமாளிப்பதே கடினமான காரியம், அவர்கள் இழுத்து வரும் வில்லங்கமே தலைவலியை கொண்டு வரும். இதில் ஆறாயிரம் மாணவர்களை சமாளிக்கும் பள்ளி தாளாளர் பதவியில் அமரு என்றால் எப்படி இருக்கும், நிம்மதியாக ஒரு வேலை உணவு கூட சாப்பிட முடியாதே? இதில் 142 கோடி எண்ணிக்கை மக்களை எங்கிருந்து சமாளிக்க? இந்த அளவில் தான் இருந்தது அவளது கற்பனை.

"நான்சி நாங்க கிளம்பி வரட்டுமா? மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லணும்ல? எவ்வளவு பெரிய விஷயம் நேர்ல வந்து சொன்னா தான நல்லாருக்கும். ஜென்சியோட வீட்டுகாரரும் இந்ததட வாரேன்னு சொல்லிட்ருக்காரு, அவங்க அம்மா அப்பா, நம்ம அப்பா வழி சொந்தங்க எல்லாம் நா நீன்னு கிளம்பி நிக்றாங்க. இங்க எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம். நீ ரொம்ப குடுத்து வச்சவன்னு அம்புட்டு திருஷ்டி. நம்ம வீடே இங்க நிறைஞ்சு இருக்குடி. நா எத்தன பேருன்னு எண்ணி சொல்றேன் எல்லாருக்கும் டிக்கெட் போட்ரு சரியா. இரு நா கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்" என படபடவென அவரே பேசி வைத்துவிட்டார்.

"ம்ச் நானே இங்க குழம்பி போய் உக்கார்ந்துருக்கேன் இதுல இவங்க வேற" என இவள் போனை பார்த்து வாய்விட்டே புலம்ப,

"என்னாச்சும்மா?" என்றார் ரோஸி,

"கிளம்பி வராட்டான்னு கேக்றாங்கத்தே. இந்த ந்யூஸ கொண்டாட கேக்றாங்க, நானே இங்க அரண்டு போய் உக்காந்திருக்கேன்"

"விடுங்கண்ணி அவங்க போயும் ரெண்டு மாசமாச்சே வரணும்னா வரட்டுமே, நீங்க ப்ரெக்னன்ட்டா இருக்கீங்க அதுக்காகவும் பாக்க வர நினைப்பாங்க தானே?" ப்யூலா சொல்ல,

"நாந்தான் அவங்கட்ட இன்னும் சொல்லவே இல்லையே"

"ஏன்மா? அம்மாட்ட கூட சொல்லையா?" ரோஸி அதிர்ந்து கேக்க.

"இல்லத்தே, அம்மாட்ட சொன்னா நிச்சயம் அக்கா காதுக்கு விஷயம் போகும். அவ கண்டிப்பா சந்தோஷ‌ படமாட்டா, எதுக்கு இவ்வளவு சீக்கிரம் அவ வயித்தெரிச்சல வாங்கிக்கணும்னு தான் இன்னும் சொல்லல"

"மறச்சது தெரிஞ்சாலும் வருத்த படுவாங்களேமா"

"இங்க இந்த ஒரு வாரம் இருந்த நிலைமைக்கு சொல்ல முடியலன்னு சமாளிக்கணும் த்தே" என்றாள் சோர்வாக.

"ஜென்சி ட்ரீட்மெண்ட் எதும் பண்ணலாமே நான்சி, நா இருந்தேனே ஹாஸ்பிடல் அந்த டாக்டர் நல்லா பாப்பாங்க, அதிக செலவும் ஆகாது, அங்க வந்தவங்க நிறைய பேருக்கு கிடைச்சுருக்குமா"

"அவ சின்னதா ஊசி கூட போட‌‌ மாட்டேன்னு அடமா நின்னுட்டாத்தே. மூணு வருஷம் தள்ளி போனதுமே அம்மா கூட்டிட்டு போய்ட்டாங்க. அங்க டாக்டர‌ இன்டர்னல் ஸ்கேன் பாக்க விடல, குடுத்த மாத்திரைகள கரெக்ட்டா சாப்பிடல, திரும்ப திரும்ப வர சொன்ன நாள்ல அம்மா லீவ போட்டுட்டு போவாங்க இவ தல வலிக்கு வயிறு வலிக்குன்னு போக மாட்டா, அம்மா போட்ட லீவ் தான் வேஸ்டா போகும்"

"அப்ப அவங்களுக்கு குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்லையா அண்ணி?"

"அதெல்லாம் இருக்கு. ஆனா கஷ்டபடாம கிடைக்கணும் அவளுக்கு. அவ பிரண்ட்ஸ், ஒன்னுவிட்ட நாத்தனார்லாம் தன்னால உண்டான மாதிரி ஆகணுமாம், இல்லனா டாக்டர்ட்ட போயி தானே பெத்தன்னு பேசுவாங்கன்றா, என்ன சொல்ல முடியும்? அதுக்கப்புறம் தான் எப்டியும் போன்னு விட்டாச்சு"

"எப்டி மாமியார் வீட்ல சமாளிக்குறாங்க?"

"அதெல்லாம் வச்சு செஞ்சு விட்ருவா, இவளுக்கு பயந்து அவங்க தான் அமைதியா போயிட்ருக்காங்க" என்கவும் மூவரும் சிரித்துக் கொண்டனர், அவர்கள் பேச்சு அப்படி பொழுதாக கழிய, இரவு தான் வீடு திரும்பினான் ஆரோன்.

"ஹேப்பியா ஏஞ்சல்?" என‌ கேட்டு கொண்டே தான் வந்தான்.

"எங்க போனீங்க இவ்ளோ நேரம்? மீட்டிங் அப்பவே முடிஞ்சது தானே?" என் கேட்டு கொண்டே சோஃபாவில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்தாள்.

அருகில் வந்தவள் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டவன், மெலிதாக சிரித்துக் கொண்டான், அவளாகவே இப்போதெல்லாம் இப்படி கேட்க தொடங்கி இருந்தாள். அவள்‌ இப்படி அவனை எதிர்பார்த்து கேட்பதில் அவனுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று தான். வீட்டிற்கு வந்ததும் அவனை கேள்வி கேட்கவும் ஒரு ஆள், அதை மீண்டும் நினைத்து சிரித்துக் கொண்டான்.

"என்னப்பா நா கேக்றேன் சிரிக்றீங்க" என்றவள் அவனுடன் சாப்பிடும் இடம் வந்திருக்க, இருவருக்கும் எடுத்து வைத்தவாறே கேட்டாள்.

"வயித்துக்குள்ள இருக்க நம்ம சாம்ப் என்ன சொல்றாங்க?"

"இதுவர எதும் சொல்லல வெளில வந்ததும் நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க"

"நா சைன் பண்ணிட்டேன் ஏஞ்சல், நீ அதுக்கு விஷ் பண்ணல? என் பேபியாது விஷ் பண்ணாங்களா?" என்றான் சாப்பாட்டில் கவனம் வைத்து.

"எனக்கு பயமா தான் இருக்கு, ஆனா நீங்க சமாளிப்பீங்கன்னா உங்க கைக்குள்ள நின்னுக்க நா ரெடி தான், நா ரெடினா பாப்பாவும் ரெடி தான்"

"ஏஞ்சல்"

"சரி உங்களால எல்லாம் முடியும், எங்களையும் பாத்துப்பீங்க. ஓகேவா?" என திருத்தி சொல்ல,

"போடி கணக்கு டீச்சர். உள்ள இருக்க பேபி என்ன மாதிரி தைரியமா தான் வரும், ரெண்டு பேரையும் சேத்து நீதான் பாத்துக்கணும் அதுக்கு மொத ரெடி ஆகு ஏஞ்சல்"

"நிஜமா பிரதமராங்க?" என‌ அவள் பாவமாக கேட்க, நன்கு சிரித்து அவளை நிமிர்ந்து பார்த்தான், அவள் முகம் அவனை கிட்ட அழைக்க,

"ரூமுக்கு வா ஏஞ்சல் பதில் சொல்றேன்"

"சர்ச் போனும். பேபி கன்பார்ம் ஆகிருக்கு நம்ம சேர்ந்து போயிட்டு வரலாமா?" என் அவள் பேச்சை மாற்ற,

அதற்கும் சிரித்தவன், "போலாம் ஏஞ்சல், நாளைக்கு மார்னிங் கூட ஓ.கே தான்" என்றதும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

உணவை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றனர். தூங்கும் வரை அவளிடம் பேசி வம்பிழுத்து முறைத்து சில்மிஷம் செய்து என அவர்களுக்கான பொழுதாக கழித்து, அவளை தூங்க வைத்த பிறகே அவன் தூக்கத்தை தழுவினான்.

மறுநாள் காலை, அவர்கள் தேவாலயம் செல்ல கிளம்பி வர, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண் வந்து வரவேற்பறையில் காத்திருந்தாள்.

இவனை பார்த்ததும் எழுந்து வந்தவள், "ஹலோ ஆரோன், நைஸ் டூ மீட் யூ. நேத்தே ஃபோன்ல கேட்டேன் நீங்க பதில் சொல்லல அதான் நேர்ல வர வேண்டியதா போச்சு, என்ன டிசைட் பண்ணிருக்கீங்க? எப்ப நம்ம மேரேஜ் வச்சுக்கலாம்?" என்க, ஆரோன் புருவம் சுருக்கி பார்க்க, நான்சி அவளின் பேச்சே புரியாதவளாக, மலங்க மலங்க விழித்து நின்றாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 19

ஆரோன் இந்த அரசியலுக்குள் நுழையும் போதே முடிவெடுத்தது தான், இந்தியாவையே ஆள வேண்டும் என்பது. அவன் ஒரு மந்திரியின் மகன், அவன் தந்தை மற்றும் இவன் என இருவரின் கட்டுபாட்டில் இருக்கும் அவனது தங்கை ப்யூலா, அவளுக்கே சொந்த நாட்டிற்குள் பாதுகாப்பில்லை. அதைவிட சொந்த வீட்டிற்குள்ளேயே வந்து அவளைத் தொடும் தைரியம். எப்படி வந்தது அது? அந்தக் குருட்டு தைரியத்தை தான் மொத்தமாக ஒழிக்க நினைத்தான்.

தன்னாலேயே தன் மகளைக் காக்க முடியவில்லை என புலம்பி இறந்து போன அவன் தந்தையின் இழப்பு அந்த முடிவை இன்னும் தீவிரமாக்கியது. முதலில் குஜராத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்தான். இதோ எட்டு வருடத்தில் சாதித்தும் காட்டி இருந்தான். பெண்களின் பாதுகாப்பில் குஜராத்திற்கு தான் முதலிடம். காரணம் அடி மனதில் ஊர‌வைத்த தண்டனை பயம். அதை மொத்த இந்தியாவில் நிலைப்படுத்த வேண்டும், அது அவனது வெறி என்று கூட சொல்லலாம்.

அதிகாரத்தில் இருப்பவன் நினைத்தால் கெட்டது மட்டுமின்றி நல்லதையும் பயப்படாமல் செய்யலாமே! ஆனால் இந்தியாவை ஆள வேண்டும் எனில் படிப்படியாக முயன்றால் அவன் வயது அறுபது கடந்து விடுமே. அதற்காகவே பிரதமரை அடிக்கடி சந்தித்தான், தன் செயல்கள் மூலம் அவரையும் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தான். அவராகவே அவனை அழைத்து பேசும்படி செய்தான். தொழில் துறை வளர்ச்சி பற்றி அதிக ஆலோசனை கொடுத்தான், அது அவனது நல்ல நேரத்திற்கு வெற்றியாகவும் அமைய, அவனின் புத்திக்கூர்மையில் வெகுவாக கவரப்பட்டார். அவரது கட்சியில் அவரோடு வந்து இணைந்து கொள்ள விடாது அழைத்துக் கொண்டிருந்தார். இவன் ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் காட்டியே அவரின் அடுத்த வாரிசாக அறிவிக்கும் அளவிற்குக் கொண்டு வந்திருக்கிறான். இதோ இப்போதும் அவரை ஒரு வாரம் காக்க வைத்து, குஜராத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்வது போன்றான பிம்பத்தையும் உருவாக்கி இருந்தான்.

மாநாட்டிற்கு வந்தது போலான ஒரு கூட்டம், ஆரோனே அசந்து தான் விட்டான். நிச்சயம் புரளியை நம்பி அவனை சாடுவர் என்றே நினைத்திருந்தான். அவனால் அவர்கள் அடைந்த நன்மைகள் ஏராளம், அதனாலேயே அவனைப் பற்றியக் குற்றச்சாட்டு பொறுக்காமல் பொங்கி இருந்தனர். அவன்மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடு இது என நேரில் கண்டான்.

மேடை மீது அவன் ஏறியதும் அவ்வளவு கூச்சல், கோசம் என அந்த இடமே அதிர்ந்தது‌. ப்ரஸ் மக்கள் முன்னால் கூடி நிற்க, அதற்கு பின் வெகு தொலைவிற்கும் மக்கள் வெள்ளம் தான். நேராக மைக் முன் வந்து நின்று விட்டான்.

சுற்றி ஒரு முறைப் பார்த்து விட்டு, அந்த கூச்சலை உள்வாங்கி கொண்டு, "ஹம் ஷ்ரூ கரேன்? (ஸ்டார்ட் பண்ணலாமா?)" என்றான் கணீரென்ற குரலில். அப்படியே அமைதியாகியது அந்த இடம்.

"வணக்கம், உங்க எல்லாரையும்‌ இப்டி சேர்ந்து பாக்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். (ப்ரஸ் மக்களை காண்பித்து) இவங்க மூலமா உங்கட்ட பேசிட நினைச்சேன், ஆனா நீங்களே கிளம்பி வந்துட்டதால உங்க முன்னவே இந்த நல்ல முடிவ எடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இதோ பிரதமர் எனக்கு அனுப்பிய கோரிக்கை மனு. ஏத்துக்றதா வேணாமான்னு குழப்பத்துல இருந்தவன என் வீட்டுக்குள்ள கல் எல்லாம் எடுத்து அடிச்சு ஏத்துக்க வச்சுட்டாங்க உங்கள்ல சிலர்" என நிறுத்தி சிறு‌ இடைவெளி விட்டு,

"எஸ் ஒரு விஷயத்த செய்யாதன்னா அப்படிதான் செய்வேன்னு செஞ்சு தான் பழக்கம் எனக்கு. இங்க மட்டும் செஞ்சத இனி இந்தியா ஃபுல்லா செய்வேன். போதை பொருள், மது, ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, சூதுன்னு எதுவும் இல்லாத தூய்மையான நாடா மாத்துவேன். எதுத்து நிக்றவன் தாராளமா நில்லு. நீ என்ன எதுத்து நிக்க நிக்க தான், எனக்கு இன்னும் இன்னும்னு வெறியா இருக்கும். நா செய்ய வேண்டியத செஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்" என்றான் திமிராக.

சற்று நிதானமாகி மீண்டும் ஒருமுறை கூட்டத்தைப் பார்த்து, "சொல்றது விட செயல்ல காட்டினா தானே இன்னும் கெத்தா இருக்கும் ரைட்? அப்ப சைன் பண்ணிடலாமா?" என்றான் கேள்வியாக எல்லோரிடமும். இப்போதும் அங்கு அமைதியே, அப்படி ஒரு பரிசுத்தமான நாடாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கற்பனை பண்ணாமலும் இருக்க முடியவில்லை, ஆனால் இதெப்படி சாத்தியம் என்றெண்ணியே அமைதியாக நின்றனர்.

"நீங்களாவும்‌ செய்ய‌ மாட்டீங்க ஒருத்தன்‌ எடுத்து செஞ்சாலும் சப்போர்ட் பண்ண மாட்டீங்க இல்லையா?" என்றவன் கேட்ட பின்னரே, கை தட்டல் விழ ஆரம்பித்தது. அவன் பேர் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

"குட்" எனக் கூறி அவர்கள் முன்பே அதில் கையெழுத்திட்டான். அவன் கையெழுத்திட்ட நொடி பலவிதமான பொருட்கள் கூட்டத்திலிருந்து பறந்து வந்தது ஆனால் அது எதுவுமே அவனை எட்டாதவாறு கூட்டத்திற்குள்ளேயே கலந்திருந்த ஆரோனின் ஆட்கள் தடுத்திருந்தனர்.

அதுவே மற்றவர்களுக்கு ஆச்சரியம் தான். எவ்வளவு துரிதமாக செயல்பட்டு விட்டனர் என்று. துப்பாக்கியுடன் வந்திருந்த மூவரை அவர்கள் அதை வைத்திருந்த பாக்கட்டோடே அமுக்கி அழைத்துச் சென்றிருந்தனர்.

"ட்ரைன்ட் ஆர்மி ஆஃபிஸர்ஸ் இருக்காங்க. நாட்டுக்காகன்னு வேலை செய்றவங்க அவங்க. அவங்கள தாண்டி தான் என்கிட்ட நல்லதோ கெட்டதோ நெருங்க முடியும்" இந்த வரி கிளம்பும் போது கலங்கி நின்ற அவன் மனைவிக்காக சொல்லப்பட்டது. அவள் முகம் ஞாபகம் வரவும், முகம் மென்மையைத் தத்தெடுக்க, "எனி கொஸ்டீன்ஸ்?" என்றான் நிருபர்களிடம்.

"நமஸ்தே ஜி, அப்ப இங்க நீங்க இப்ப இருக்க கட்சீல இருந்து விலக போறீங்களா?"

"எஸ் இங்க இருந்து விலகுனா தானே அங்க சேர முடியும்? பட் அவங்க கூட்டணி வச்சு என்னோட சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்ய விருப்பபட்டா தாராளமா சேந்தே இருக்கலாம். அது குஜராத்தின் முதல்வர் முடிவு"

"உங்க மேல வைக்கபட்டிருக்க குற்றச்சாட்டு எல்லாம்?"

"அது ஃப்ரூப் பண்ண படலையே? ஐம் யுவர்ஸ்னு ஃபுல்லா செக் பண்ணிக்க சொல்லிட்டேன், நத்திங் இஸ் தேர்னு ரிப்போர்ட் குடுத்துட்டாங்களே, உங்க சேனலுக்கு ந்யூஸ் கிடைக்கலையா?" என்றதும் அமைதியாகி விட்டார் அவர்.

"தூய்மையான நாடா மாத்துவேன்னு சொன்னீங்க. அது எந்தளவுக்கு சாத்தியம்னு நினைக்றீங்க?"

"நீங்க ஏன் சாத்தியம் ஆகாதுன்னு நினைக்கிறீங்க?"

"நீங்க மட்டும் நினைச்சா போதாதே, அதுக்கு அடிமையாகி இருக்குற மக்களும் திருந்தணுமே?"

"பழக்கம் தானே எல்லாம். இருந்ததால இத்தன நாள் பழகுனோம் இனி இல்லனா பழக வேணாம் தானே? அளவோட இருக்க எல்லாமே நமக்கு நல்லது தான் செய்யும், அது எதுவா இருந்தாலும் சரி. நா அளவோட இருக்க என்ன வழியோ அத ஏற்படுத்தி தரேன். அடிமையாக இருக்கது அவங்கவங்க தான் பாத்துக்கணும்"

"புரியல சார்"

"போதை பொருள், கண்டிப்பா இனி இந்தியா குள்ள வராது, சிகரெட்டும், ஆல்கஹாலும் மாசத்துக்கு இவ்வளவு தான்னு ரேஷன்ல மட்டுமே குடுக்கப்படும். அப்ப ஒருத்தரோட உடம்புக்கும் கேடில்ல, கஷ்டபட்டு உடம்பு வலிக்க வேலை பாக்றவனுக்கு மருந்தாவும் கிடைக்கும். அப்றம் பெண்கள் மேல கை வைக்றவனுக்கு கடுமையான தண்டனை தான். இப்ப இங்க எப்டியோ அப்படி தான் இனி மொத்த இந்தியாக்கும். நிச்சயமா சட்ட திருத்தம் கொண்டு வருவேன்னு சொல்றேன்" என இன்னும் இன்னும் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக நிதானமாக பதில் கூறி முடித்தான்.

மொத்த இந்தியாவும் அவன் பேட்டியை பார்த்தது, சிலர் நம்பினர், சிலர் 'இதுமாதிரி பேசுனவங்க எத்தன பேர பாத்துருக்கோம்' என்றனர், சிலர், 'வந்து எதாது செய்யட்டும் அப்றம் நம்புவோம்' என்றனர், மது பிரியர்களும் பெண் பித்தர்களும் 'நாங்க எப்டி வேணா இருப்போம் நீ யாருடா எங்கள கண்ட்ரோல் பண்றதுக்கு, உசிரோட வீடு போய் சேர மாட்ட' எனக் கொந்தளித்தனர். அந்த கருத்துகள் எதுவும் அவனை சென்றடையவில்லை, அவனிடம் தெளிவான திட்டம் இருந்தது, அதை செயல்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் தைரியம் இருந்தது துணிந்து இறங்கி விட்டான்.

வீட்டிலிருந்து பார்த்திருந்த அவன் ஏஞ்சலுக்கு அவன் பேச்சும் அங்கிருந்தோரின் நடவடிக்கைகளும் கேள்விகளும் அவளின் உயிர் வரை ஆட்டம் கண்டது. நடப்பதெல்லாம் நல்லதர்க்கு தானா என அயர்ந்த நிலையில் அமர்ந்திருந்தாள். நாட்டிற்கு நல்லது செய்பவன் யாரோ ஒருவன் எனில் பாராட்டுவோம் தன்‌ வீட்டை சார்ந்த ஆள்‌ என்றால் உற்றவருக்கு பயம் இருக்கும் தானே? அந்த நிலை தான் நான்சிக்கும்.

"இதென்னமா இவ்ளோ கூட்டம்? அரசியல், பெரிய பதவின்னு நினைச்சாலே பயமா இருக்குல்ல?" என்றார் ரோஸி டிவியில் ஆரோனின் பேச்சு முடிந்ததும்.

"ஒன்னுமே புரியலம்மா. அண்ணா பாத்துப்பார் தான். என்ன பொறுத்தவரை அந்த நிமிஷம் அந்த இருட்டு நாலு பேர்ட்ட என் உயிர் போறளவுக்கு நா போராடுன வேதனை அதெல்லாம் இனி யாருக்கும் நடக்க கூடாதுன்னா இங்க அண்ணா குடுக்குறதா இவங்க சொல்ற தண்டனை தாம்மா சரி. சின்ன பிள்ளைங்கள கூட விட்டு வைக்காத மிருகங்கள் எதுக்கும்மா பூமிக்கு பாரமா இருந்துட்டு? அண்ணா சட்டத் திருத்தம் கூடக் கொண்டு வரட்டும்மா" என்றாள் முடிவாக. நான்சி எல்லாம் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் அவளது கைப்பேசிக்கு அழைப்பு வர, எஸ்தரின் பெயரை தாங்கி அழைப்பு வந்து கொண்டிருந்தது.

"சொல்லுமா"

"நான்சி என்னடி ஊருக்குள்ள என்னலாமோ சொல்லிக்றாங்க. நீயூஸ்ல தம்பி ஹிந்தில பேசுனதையும்‌ இங்க கீழ‌ தமிழ்ல போட்டாங்க. நேத்து கூட பேசுனேன் நீ ஒன்னுமே சொல்லல என்ட்ட?" என்றார் படபடவென, அவர் குரலில் சந்தோஷமே மிதமிஞ்சி இருந்தது. அங்கு ஆளாளுக்கு புகழ்ந்து பெருமையாகப் பேசி இருக்க தலைகால் பிடிபடவில்லை அவருக்கு.

"பேச்சுவார்த்தைப் போயிட்ருக்கும்மா, எனக்கே இன்னைக்கு காலைல தான் சொன்னாங்க" என்றாள் சலிப்புடன். உண்மையிலேயே அவளால் இதில் சந்தோஷ‌படமுடியவில்லை. ஒரு வகுப்பிற்கு மட்டும் ஆசிரியராக இருந்து அறுபது பிள்ளைகளை சமாளிப்பதே கடினமான காரியம், அவர்கள் இழுத்து வரும் வில்லங்கமே தலைவலியை கொண்டு வரும். இதில் ஆறாயிரம் மாணவர்களை சமாளிக்கும் பள்ளி தாளாளர் பதவியில் அமரு என்றால் எப்படி இருக்கும், நிம்மதியாக ஒரு வேலை உணவு கூட சாப்பிட முடியாதே? இதில் 142 கோடி எண்ணிக்கை மக்களை எங்கிருந்து சமாளிக்க? இந்த அளவில் தான் இருந்தது அவளது கற்பனை.

"நான்சி நாங்க கிளம்பி வரட்டுமா? மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லணும்ல? எவ்வளவு பெரிய விஷயம் நேர்ல வந்து சொன்னா தான நல்லாருக்கும். ஜென்சியோட வீட்டுகாரரும் இந்ததட வாரேன்னு சொல்லிட்ருக்காரு, அவங்க அம்மா அப்பா, நம்ம அப்பா வழி சொந்தங்க எல்லாம் நா நீன்னு கிளம்பி நிக்றாங்க. இங்க எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம். நீ ரொம்ப குடுத்து வச்சவன்னு அம்புட்டு திருஷ்டி. நம்ம வீடே இங்க நிறைஞ்சு இருக்குடி. நா எத்தன பேருன்னு எண்ணி சொல்றேன் எல்லாருக்கும் டிக்கெட் போட்ரு சரியா. இரு நா கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்" என படபடவென அவரே பேசி வைத்துவிட்டார்.

"ம்ச் நானே இங்கக் குழம்பிப் போய் உக்கார்ந்துருக்கேன் இதுல இவங்க வேற" என இவள் போனைப் பார்த்து வாய்விட்டே புலம்ப,

"என்னாச்சும்மா?" என்றார் ரோஸி,

"கிளம்பி வராட்டான்னு கேக்றாங்கத்தே. இந்த நீயூஸ கொண்டாடக் கேக்றாங்க, நானே இங்க அரண்டு போய் உக்காந்திருக்கேன்"

"விடுங்கண்ணி அவங்க போயும் ரெண்டு மாசமாச்சே வரணும்னா வரட்டுமே, நீங்க ப்ரெக்னன்ட்டா இருக்கீங்க அதுக்காகவும் பாக்க வர நினைப்பாங்க தானே?" ப்யூலா சொல்ல,

"நாந்தான் அவங்கட்ட இன்னும் சொல்லவே இல்லையே"

"ஏன்மா? அம்மாட்ட கூட சொல்லையா?" ரோஸி அதிர்ந்து கேக்க.

"இல்லத்தே, அம்மாட்ட சொன்னா நிச்சயம் அக்கா காதுக்கு விஷயம் போகும். அவ கண்டிப்பா சந்தோஷ‌ படமாட்டா, எதுக்கு இவ்வளவு சீக்கிரம் அவ வயித்தெரிச்சல வாங்கிக்கணும்னு தான் இன்னும் சொல்லல"

"மறச்சது தெரிஞ்சாலும் வருத்த படுவாங்களேமா"

"இங்க இந்த ஒரு வாரம் இருந்த நிலைமைக்கு சொல்ல முடியலன்னு சமாளிக்கணும் த்தே" என்றாள் சோர்வாக.

"ஜென்சி ட்ரீட்மெண்ட் எதும் பண்ணலாமே நான்சி, நா இருந்தேனே ஹாஸ்பிடல் அந்த டாக்டர் நல்லா பாப்பாங்க, அதிக செலவும் ஆகாது, அங்க வந்தவங்க நிறைய பேருக்கு கிடைச்சுருக்குமா"

"அவ சின்னதா ஊசிக் கூட போட‌‌ மாட்டேன்னு அடமா நின்னுட்டாத்தே. மூணு வருஷம் தள்ளி போனதுமே அம்மா கூட்டிட்டுப் போய்ட்டாங்க. அங்க டாக்டர‌ இன்டர்னல் ஸ்கேன் பாக்க விடல, குடுத்த மாத்திரைகள கரெக்ட்டா சாப்பிடல, திரும்பத் திரும்ப வர சொன்ன நாள்ல அம்மா லீவ போட்டுட்டு போவாங்க இவ தல வலிக்கு வயிறு வலிக்குன்னு போக மாட்டா, அம்மா போட்ட லீவ் தான் வேஸ்டா போகும்"

"அப்ப அவங்களுக்கு குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்லையா அண்ணி?"

"அதெல்லாம் இருக்கு. ஆனா கஷ்டபடாம கிடைக்கணும் அவளுக்கு. அவ பிரண்ட்ஸ், ஒன்னுவிட்ட நாத்தனார்லாம் தன்னால உண்டான மாதிரி ஆகணுமாம், இல்லனா டாக்டர்ட்ட போயி தானே பெத்தன்னு பேசுவாங்கன்றா, என்ன சொல்ல முடியும்? அதுக்கப்புறம் தான் எப்டியும் போன்னு விட்டாச்சு"

"எப்டி மாமியார் வீட்ல சமாளிக்குறாங்க?"

"அதெல்லாம் வச்சு செஞ்சு விட்ருவா, இவளுக்கு பயந்து அவங்க தான் அமைதியா போயிட்ருக்காங்க" என்கவும் மூவரும் சிரித்துக் கொண்டனர், அவர்கள் பேச்சு அப்படி பொழுதாக கழிய, இரவு தான் வீடு திரும்பினான் ஆரோன்.

"ஹேப்பியா ஏஞ்சல்?" என‌க் கேட்டுக் கொண்டே தான் வந்தான்.

"எங்க போனீங்க இவ்ளோ நேரம்? மீட்டிங் அப்பவே முடிஞ்சது தானே?" என் கேட்டுக் கொண்டே சோஃபாவில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்தாள்.

அருகில் வந்தவள் தோளில் கைப் போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டவன், மெலிதாக சிரித்துக் கொண்டான், அவளாகவே இப்போதெல்லாம் இப்படிக் கேட்கத் தொடங்கி இருந்தாள். அவள்‌ இப்படி அவனை எதிர்பார்த்து கேட்பதில் அவனுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று தான். வீட்டிற்கு வந்ததும் அவனைக் கேள்விக் கேட்கவும் ஒரு ஆள், அதை மீண்டும் நினைத்து சிரித்துக் கொண்டான்.

"என்னப்பா நா கேக்றேன் சிரிக்றீங்க" என்றவள் அவனுடன் சாப்பிடும் இடம் வந்திருக்க, இருவருக்கும் எடுத்து வைத்தவாறேக் கேட்டாள்.

"வயித்துக்குள்ள இருக்க நம்ம சாம்ப் என்ன சொல்றாங்க?"

"இதுவர எதும் சொல்லல வெளில வந்ததும் நீங்களே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க"

"நா சைன் பண்ணிட்டேன் ஏஞ்சல், நீ அதுக்கு விஷ் பண்ணல? என் பேபியாது விஷ் பண்ணாங்களா?" என்றான் சாப்பாட்டில் கவனம் வைத்து.

"எனக்கு பயமா தான் இருக்கு, ஆனா நீங்க சமாளிப்பீங்கன்னா உங்க கைக்குள்ள நின்னுக்க நா ரெடி தான், நா ரெடினா பாப்பாவும் ரெடி தான்"

"ஏஞ்சல்"

"சரி உங்களால எல்லாம் முடியும், எங்களையும் பாத்துப்பீங்க. ஓகேவா?" எனத் திருத்திச் சொல்ல,

"போடி கணக்கு டீச்சர். உள்ள இருக்க பேபி என்ன மாதிரி தைரியமா தான் வரும், ரெண்டு பேரையும் சேத்து நீதான் பாத்துக்கணும் அதுக்கு மொத ரெடி ஆகு ஏஞ்சல்"

"நிஜமா பிரதமராங்க?" என‌ அவள் பாவமாகக் கேட்க, நன்கு சிரித்து அவளை நிமிர்ந்துப் பார்த்தான், அவள் முகம் அவனைக் கிட்ட அழைக்க,

"ரூமுக்கு வா ஏஞ்சல் பதில் சொல்றேன்"

"சர்ச் போணும். பேபி கன்பார்ம் ஆகிருக்கு நம்ம சேர்ந்துப் போயிட்டு வரலாமா?" என அவள் பேச்சை மாற்ற,

அதற்கும் சிரித்தவன், "போலாம் ஏஞ்சல், நாளைக்கு மார்னிங் கூட ஓ.கே தான்" என்றதும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

உணவை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றனர். தூங்கும் வரை அவளிடம் பேசி வம்பிழுத்து முறைத்து சில்மிஷம் செய்து என அவர்களுக்கான பொழுதாகக் கழித்து, அவளைத் தூங்க வைத்தப் பிறகே அவன் தூக்கத்தைத் தழுவினான்.

மறுநாள் காலை, அவர்கள் தேவாலயம் செல்ல கிளம்பி வர, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண் வந்து வரவேற்பறையில் காத்திருந்தாள்.

இவனைப் பார்த்ததும் எழுந்து வந்தவள், "ஹலோ ஆரோன், நைஸ் டூ மீட் யூ. நேத்தே ஃபோன்ல கேட்டேன் நீங்க பதில் சொல்லல அதான் நேர்ல வர வேண்டியதா போச்சு, என்ன டிசைட் பண்ணிருக்கீங்க? எப்ப நம்ம மேரேஜ் வச்சுக்கலாம்?" என்க, ஆரோன் புருவம் சுருக்கிப் பார்க்க, நான்சி அவளின் பேச்சே புரியாதவளாக, மலங்க மலங்க விழித்து நின்றாள்.
 
Status
Not open for further replies.
Top