எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி_ஆசைகள்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#கொலுசொலி_ஆசைகள்

ரொம்ப எதார்த்தமான கதை….

கௌது வெளிநாட்டில் வேலை செய்யறான், செந்தா இங்க வீட்டை பார்த்துக்கறா ஆறு வயது குழந்தை ஓட….

கெளது சரியான அம்மா பையன், இப்ப எல்லாம் டாட்ஸ் லிட்டில் பிரன்சஸ் விட இந்த மா லிட்டில் பிரின்ஸ் அதிகம் ஆயிட்டாங்க….

இவன் அப்படி தான், அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு அவன் பிள்ளை உருவான அப்ப போனவன் எட்டு வருசமா வரவே இல்ல….

அப்ப தனிமையில் தான் இனிமை காண்றாளா செந்தா.?????

அப்போர்ஸ் அதில் என்ன டவுட்….

இப்ப ஊருக்கு வரான், செந்தா ஓட தனிமை வாழ்க்கை தீர்ந்தா, அவளோட சின்ன சின்ன எதிர்பார்ப்புகள், ஆசைகள் எல்லாம்?????

கௌது, அம்மா வார்த்தைக்கு அவளோ முக்கியத்துவம் தரான்…

ஆன அவன் அம்மா????

அம்மா, அக்கா தங்கை ஓட பிறந்த பையன் தான், ஆன தன்னை நம்பி வந்த பெண்ணையும், அவளின் உணர்வுகளையும் ஏனோ உணர மறந்துட்டான்…..

அவளோ கோவம் வந்தது இவன் மேல….அப்படி என்னடா அம்மா சொல் தான்னு……

செந்தா, சராசரி பெண் தான்…எட்டு வருஷம் கழிச்சி வரும் கணவனுக்காக அவள் பார்த்து நின்ன விதம்😍😍😍😍😍

ஒரே சொல்லால், அவளோட மொத்த காத்திருப்பும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டான் பக்கி பய….

ஆன, அவளோட அதிரடி செம்மையான சரவெடி தான்🔥🔥🔥🔥🔥

செவாயி, இவங்களும் அதே தான், ஊரில் உள்ள சில நல்ல மாமியார் தவிர்த்து இருக்கும் சராசரி மாமியார்…..

தன் பெண்கள் புருஷனோட நல்லா வாழனும், அவங்க பேச்சை கேட்கணும் இதுவே தன் பையன் அப்படி செய்துட்டா அந்த மருமகளுக்கு தான் கெட்ட பேரு தருவாங்க….

இது தான், பெரும்பாலான மாமியார் எதிக்ஸ்…..

தமிழ் & கண்ணன், இவ அப்படியே செவாயி தான்…ஆன கண்ணன் ஆதரவு செந்தாக்கு தான்….

இளா இவளும் கண்ணன் போல தான்…

ரொம்ப இயல்பான கதை நகர்வு, எதார்த்த மனிதர்கள் அப்படினு கதை அருமை👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top