எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 04

NNK-106

Moderator

காதல் Not Out ! - 04


"சோ மேடம் எதாவது சாப்பிடுறீங்களா ?" பற்களிடையே அவன் சொற்கள் விழ அதுவே அவன் எந்த அளவு கோபத்தில் இருக்கிறான் என்பதை காட்டியது. இருந்தாலும் இதுவும் நன்றாக தான் இருக்கிறது என அந்த மீடிங் ஹாலில் இருந்த ஒன்பது பேருடன் பத்தாவது ஆளாக அமர்ந்திருந்தாள் கவிதா.​

"இல்ல சார் பரவாயில்ல இருக்கட்டும்.. யூ கன்ட்டினியூ" ஒரு கை அசைத்து கூறும் போதே இதெல்லாம் ஓவர்ரி என்ற மனசாட்சியையும் தட்டிவிட்டுக்கொண்டாள்.​

இவள் வந்து அமர்ந்த மறுநிமிடம் இவள் பின்னோடே வந்திருந்த தனது பி.ஏ இப்போது என்ன செய்வது என்பது போல் வாசலில் நின்றிருந்தான். அவனை போகச்சொல்வது போல் சைகை செய்து விட்டு இவன் தனது மீட்டிங்கை தொடரவும்.. "சஞ்சீவ் சார்.. என்னையும் இன்ரோ கொடுக்கலாமே.." இடையிட்டாள் கவிதா.​

கண்களை இறுக்க மூடி தலையை ஒரு முறை கோதிக்கொண்டவன் ஏதோ கூறவரவும்.. அங்கிருந்தவர்களில் ஒருவர்.. "அதானே சார்.. யாருன்னு தெரியல இன்ரோ கொடுக்கலாமே.." எனவும் தன் கோபத்திற்கான நேரம் இதுவல்ல என்பதை புரிந்து கொண்டான். காரணம் அங்கு இருந்தவர்களும் அந்த நேரமும் கூடவே மீட்டிங்கும் தான். எத்தனையோ பல கம்பனிகளில் தன் கம்பனியை அவர்கள் தெரிவு செய்து வந்துள்ளார்கள் என்றால் அது அவனது அதிஷ்டம் தான். காரணம் இன்றைய மீட்டிங் பல கம்பனிகளின் கனவு. இது கவிதாவும் அறிந்ததே கம்பனி உள்ளே வந்தவள் இவனது பி.ஏ விடம் சஞ்சீவ் பற்றியும் தற்போது நடக்கும் மீடிங் பற்றியும் அனைத்தையும் கேட்டறிந்து இது சரியான தருணம் என நினைத்தே வந்திருந்தாள்.​

"ஷ்யுர்.." என சஞ்சீவ் கூறிக்கொண்டே அந்த நீள வட்ட மேசையை சுற்றிக்கொண்டு அவள் அமர்ந்திருந்த இடம் வரை வந்தான்.​

"இவங்க மிஸ். கவிதா, கம்பனிக்கு ரொம்ப முக்கியமானவங்க.. நான் தான் இன்வைட் செய்தேன்.. கொஞ்சம் லேட்டா வந்திருக்காங்க.. இப்போதைக்கு இது போதும்.." அவள் இடையிடையே ஏதோ கூற வருவது உணர்ந்து அவளது இரு தோள்களையும் பின்னால் இருந்து அழுந்தபற்றியவண்ணம் பேசி முடித்தவன்.. கடைசியாய் யாரும் அறியாவண்ணம் அவள் காதருகில் குனிந்து.. "ஜஸ்ட் ஷட் அப்..மீடிங் முடியும் வரை அசையாதே." என்றான்.​

எப்போதும் போல இப்போதும் எதிர்த்து பேச நினைத்தாலும் அவன் குரலில் இருந்த அழுத்தமும் அதற்கே சமனாக தோளில் அவன் காட்டிய அழுத்தமும் அவளை வாய்மூடி இருக்கச்செய்தது. மீடிங் முடியும் வரை அமைதியாய் கவிதாவின் கண்கள் அவன் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் பதித்துக்கொண்டிருந்தன. ஒருவாரு மீடிங் முடிய அனைவரும் விடைபெற்று கிளம்ப.. இன்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் சஞ்சீவ்.​

"சஞ்.. எஹ்ம் சார்.." மெதுவாய் இவள் அழைக்கவும் உணர்வு வந்தவனாய் அணிந்திருந்த கோட்டை கழற்றி மேசையில் வைத்துவிட்டு டையையும் எடுத்து விட்டு குளிரூட்டியில் குளிரை இன்னும் அதிகப்படுத்தினான். பின் ஒரு கதிரையை இழுத்து போட்டு இவள் அருகில் அமர்ந்து.."சொல்லு கவிதா உனக்கு என்ன தான் பிரச்சனை இப்போ.. காலைல தான் சொன்னேன்..அதுக்கே டபுள்ளா கொடுக்கனும்னு தான் இப்போ இங்க வந்தியா..?" பொறுமையாய் கேட்டான்.​

"ஹை அப்போ உங்களுக்கு புரிஞ்சிரிச்சா..?"​

"கவிதா இங்க பாரு.. நான் பொண்ணுங்கள மதிக்கிறவன் அதுவும் இல்லாம உன்ன பத்தி ரமண் அங்கிள் சொன்னதும்னால தான் இதுவரை பொறுமையா பொலிஸ் கம்ளைன் எதுவும் போகாம இருக்கேன்.. ஆனால் இப்படியே எப்பவும் இருப்ப நினைக்காத.." சிறுபிள்ளைக்கு விளக்குவது போல் அவன் ஒவ்வொரு வார்த்தையாக கூறினான்.​

"தண்ணீ கிடைக்குமா சார்.. ?"​

"யூ..கவித்தா ப்ளீஸ்.. என்னய மனுஷனா இருக்க விடு.."​

"சார் நீங்க தாராளமா மனுஷனா இருக்கலாம்.. இதுக்கெல்லாம் என் பர்மிஷன் தேவையில்ல.." கதிரையில் சாய்ந்து அமர்ந்தவளை ஆழமாய் நோக்கினான் சஞ்சீவ்.​

"ரமண் அங்கிள்க்கு மட்டும் இவளை தெரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...ஏன் மென்டல்னு கூட நினைச்சிருக்கலாம்.. ஆனா அதுதான் இல்லையே.." மனம் எண்ண அதை படித்தவள் போல் முன்னால் சாய்ந்து அமர்ந்தவள்..​

"சார் ஐம் நாட் மென்டல்.. அப்படி யோசிக்காதீங்க.."​

"ஆமா ரொம்ப புத்திசாலி.. அறிவாளி ஏன் வேணும்னா உனக்கு சயன்டிஸ்ட் மூளைன்னு கூட ஒத்துக்குறேன்.. தயவு செஞ்சி போறியா.. போய்ட்டு திரும்ப வந்துடாத.." அவள் போவதற்கு வசதியாக இருக்க என்றோ என்னவோ கதவிருந்த திசைக்கும் கையை காட்டியே கூறினான் சஞ்சீவ்.​

"சார்.. உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.. இப்போ எதுக்காக என்னை போக சொல்லிட்டே இருக்கீங்க.. என் லவ் தான் பிரச்சனைன்னா என் லவ் ஏன் உங்களுக்கு பிரச்சனை..அப்படியேன்னா ஏன் போக சொல்லுறீங்க ?" பட பட என எழுந்து நின்றே அவள் கேள்விகளை கேட்க..​

"வாட்.. கவிதா.. நீ ஒரே கேள்விய தான் மாத்தி மாத்தி கேட்குற.. ?"​

"புரிதுல..அப்போ சொல்லுங்க எனக்கு பதில்.."​

டக்கென கூறிக்கொண்டே அவள் மேசை மேலே அவள் ஏறி அமரவும்.. சஞ்சீவ் தான் சற்று நேரம் தன்னையறியாதே வாய்பிளந்து பார்த்து விட்டு..இருந்த கொஞ்ச பொறுமையும் பறந்துவிட..இருந்தும் வார்த்தையில் நிதானத்தை விடாது எழுந்து நின்றவன்.. "ப்ளீஸ்.." என்றான் கதவு பக்கமாய் கை நீட்டி.​

"ஓகே போறேன்.. ஆனா நாளைக்கு.. இல்ல வேணாம்.." தன் பையை அவள் தேட போனால் போதும் என்பது போல் மேசையின் கீழ் இருந்த பையை எடுத்து கையில் கொடுக்கப்போனவன் மீண்டும் அதை எடுத்து நன்றாக பார்த்தான்.​

கண்ணை பறிக்கும் இளம்சிவப்பு நிறத்தில் பல வர்ணங்களில் ஆங்காங்கே பூக்கள் வரையப்பட்டிருக்க.. எதிலும் கறுப்பு நிறத்தையே தேர்ந்தெடுக்கும் அவனுக்கு இதை பார்க்கவும் என்ன !!! என்று தான் இருந்தது.​

"ஆர் யூ சீரியஸ்.. இதென்ன பேக் லைக் நர்ஸரி கிட்"​

"அதை கொடுங்க.. இது எனக்கு பிடிக்கும்.. உங்களுக்கும் வேணும்னா சொல்லுங்க வாங்கி தாரன்..நல்லா இடம் இருக்கு நாலு லன்ச் பாக்ஸ் போட்டுக்கலாம்.." பட்டென பறித்துக்கொண்டு அவள் வெளியேறிட.. தான் ஆபிஸிற்கு அந்த மாதிரி ஒரு பையுடன் வருவதை தன்னை மீறியே மனம் கற்பனையில் வரைய.."ச்சீ" என்று தலையை உலுக்கிக்கொண்டான். மெல்ல நடந்து சென்று தன் ஜன்னல்வழி பார்க்க அவள் கேட் அருகில் அங்கிருந்த காவலாளியுடன் ஹை பை போடுவது தெரிய.. எப்போதும் தன் கம்பனி ஊழியர்களை பத்தடி தள்ளியே வைப்பவனுக்கு இதுவும் புதிதாய் தான் இருந்தது. கவிதா என்றால் புரியாத புதிராய் கேள்விக்குறியோடு தான் அவன் மனதில் எழுந்து நின்றாள்.​

மணி இரவு பதினொன்றை தொட்டுக்கொண்டிருக்க.. தன் அறையில் கட்டிலில் போர்வையை இழுத்துப்போர்த்தி உள்ளே உறக்கமின்றி மூளையை கசக்கிக்கொண்டிருந்தாள் கவிதா. மீண்டும் நிதனிற்கு அழைத்துப்பார்க்கலாம் என பத்தாவது முறையாக அழைக்க இப்போது முதல் ரிங்கிலே அழைப்பு ஏற்கப்பட்டது.​

"டேய் எரும எங்கடா இருக்க.. பதினொரு மணிக்கு வான்னு சொன்னேனா இல்லையா.. நீயும் வாரன்னு தலையாட்டினயா இல்லையா.." கோபமாய் பொறிந்தாள்.​

"அடியே அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் பார்த்துக்க.. இப்போதான பதினொரு மணி ஆகுது.. அப்புறம் எதுக்கு இப்படி குதிக்கிற நீ.. வெளிய தான் இருக்கேன் நீ வா அவசரமா..." மறுபக்கம் இருந்து கிசுகிசுப்பாய் ஒலித்தது அவன் குரல்.​

"இரு இரு வாரேன்.. யாருக்கும் தெரியாம வர வேணாமா..உன் அவசரத்துக்கு எப்படி வாரதாம்." மெதுவாக போர்வையிலிருந்து எட்டி பார்த்தவாரே கூறினாள் கவிதா.​

"ஏதே.. இத்தனை கால் எனக்கு பன்னதுக்கு.. உருப்படியா வெளில வாரதுக்கு யோசிச்சிருக்கலாம்ல எரும.."​

"அதெல்லாம் ஈசி.. இரு வாரன்.."​

"ஆமா அப்படியே உங்க வீட்டாளுங்க கதவை திறந்து உன்ன போம்மான்னு அனுப்பி வைப்பாங்க ரொம்ப ஈசி பாரு.."​

"இப்போ நீ பேசிட்ட இருந்தா நான் எப்படி வாரது.. வை போன.." அவன் மேலே ஏதோ பேச வந்ததையும் போனிலே புதைத்து விட்டு மெல்ல எழுந்து ஓசையெழுப்பாது வந்து அறை கதவை மூடினாள். இருந்த கதிரையை கட்டில் மேல் போட்டு அதில் ஏற தலைக்கு முட்டுவது போல் சரியாக இருந்தது கூரை. தனக்கு மேலே நேரெதிரை இருந்த சில ஓடுகளை விலக்கவும்.. அவையும் அட நீதானா என பழக்கப்பட்டவை போல் அமைதியாய் ஓசையெழுப்பாது விலகிக்கொண்டன.​

அந்த அறை கூரையை ஒட்டியே நிதன் நின்றிருக்க முதலில் கூரைவழி கவிதா கையை நீட்டி காட்ட.. "ஏதோ ஒபாமான்னு நினைப்பு.. அட ச்சீ வா மொதல்ல.." என்றான்.​

"பேக்க பிடிடா.." அவளை முந்திக்கொண்டு இவன் காலடியில் வந்து விழுந்த பேக் அப்படி போட்டா இப்படி தான் சத்தம் வரும் என்பது போல் பொத் என்ற ஓசை எழுப்பியது..​

"அய்யோ.." என்று நிதன் வீட்டின் மற்றைய இரு அறைகளையும் பார்க்க நல்ல வேளை விளக்குகளுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கும் உறக்கம் கலையவில்லை.​

ஒருவாறு நிதன் ஏணியை கொடுக்க கூரை ஓடுகளை இருந்தவாரே பொறுத்தி வைத்து விட்டு இறங்கி வந்து மூச்சு வாங்கினாள். "சரி சொல்லு இவ்ளோ அறக்க பறக்க நீ பன்னிரண்டு மணிக்கு போய்தான் ஆகனும் சொல்ல காரணம் ??" நிதன் கேட்க..​

"உன் மாமா வீட்டுக்கு போகதான்.. வா" பையை தூசி தட்டி எடுத்துக்கொண்டு தன் சைக்கிள் பக்கம் சென்றாள் கவிதா.​

"யேய்.. அக்கா.. நீ லூசா.. நீ லூசு தான்.. ஆனா ஆனா எப்படி அப்படி.. இரு மொதல்ல யாரு மாமா.. உங்க அம்மாவுக்கு எங்க இருக்காங்க மாமா.. ?" பயத்தில் இவன் உலறிக்கொட்ட..​

"டேய் நிப்பு மொதல்ல இந்த ஒலறல நிறுத்து.. நாம போறது உன்னோட மாமா வீட்டுக்கு.. கம் ஆன் ஏறு. இல்ல விட்டுட்டு போயிறுவன்.." சைக்கிளை ஸ்டார்ட் செய்வது போல் ஓசை எழுப்ப.. அவள் தலையில் தட்டிய நிதன் "பின்னாடி போ" என அவளை பின்னால் ஏற்றி தான் ஓட்ட ஆரம்பித்தான்.​

"எந்த மாமா ?" அந்த தெருவை கடந்தவாறே கேட்டான்.​

"சஞ்சீவ் மாமா.." கவிதா கூற பட்டென அந்த சந்தியிலே நின்றது சைக்கிள்.​

"யக்கா விளையாடாத.. நீ என்ன பன்னுற..எப்படி பன்னுற இப்படி.. அய்யோ எனக்கு வேற பேச்சே வருதில்லையே..?" நிதன் புலம்ப..​

"மூச்ச ஆழமா இழுத்து விடு பேச்சு வரும்.. ஒன் டூ த்ரி.. இன்ஹேல்.." கைகளால் அவனுக்கு செய்கை வேறு காட்ட..​

"அக்காவ் அடிச்சிடுவன் பாரு.. எப்படி அந்த ஆளூ வீட்டுக்கு.. அதுவும் இப்போ..நீ என்ன விளையாட்றியா.."​

"டேய் அவர் என்ன உன்ன சாப்பிடவா போறாரு.. அப்படியே நீ வரலன்னாலும் நான் போகதான் போறேன்.." கவிதா முகத்தை இழுத்து வைத்துக்கொள்ள.. அவள் பிடிவாதம் அறிந்த நிதனும் வேறு வழி இல்லாது சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.​

இவர்களது இந்த இரவுப்பயணமும் இந்த சண்டையும் வழமை தானே தான் எதுக்கு என்பது போல் நிலவு அமைதியாய் வானில் முகிழ்களிடையே மூழ்கிட அந்த பதினொன்றரை மணிக்கு ஊரே தூங்கி இருக்க அந்த சைக்கிள் அவர்களை சுமந்து கொண்டு சஞ்சீவ் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.​

------------------​

கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளவும்.
 
Last edited:

Mathykarthy

Well-known member
இவ இப்படி எல்லாம் பண்ணினா இரிடேட்டா தான் இருக்கும்... எப்படி லவ் வரும்... அரை லூசு... 😤
பாவம் ஹீரோ... 😩
 

NNK-106

Moderator
இவ இப்படி எல்லாம் பண்ணினா இரிடேட்டா தான் இருக்கும்... எப்படி லவ் வரும்... அரை லூசு... 😤
பாவம் ஹீரோ... 😩
Ama 😂 thank you so much for your continues support sis ♥️
 
Top