எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் 10 - கதை திரி

NNK-53

Member
தேன்மிட்டாய் 10

நாள் 25, ஜூலை 1993

“டிரிங் டிரிங்…!” என்று அவர்கள் வீட்டுத் தொலைப்பேசி எடுப்பார் யாருமின்றித் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

சுதாவோ அவளது அறையில் தலையணையைக் கட்டிப்பிடித்தபடி சோகமாகப் படுத்திருந்தாள். மனத்திரையிலோ கல்லூரியில் நடந்த அவமானங்களே ஓடிக் கொண்டிருந்தன.

‘அவர்களின் கேலிப் பேச்சும் நக்கல் சிரிப்பும் அப்பப்பா…!” நினைக்க நினைக்க நெஞ்சு குமிறியது அவளுக்கு.

‘இனி காலேஜுக்கே போகக் கூடாது.’ மனம் முழுவதும் வெறுமையே நிரம்பி வழிந்திட, எங்கும் போக மனமின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.

“ஏய் சுதா ஏடி சுதா…” பாட்டி பத்துத் தடவை அழைத்தபின் தான் இவளுக்குச் சுய நினைவே வர, “ஹாங்…! என்ன பாட்டி?” படுத்தபடியே குரல் கொடுத்தாள் சுதா.

“ஏய் உனக்குத் தான் போனு. வா வந்து பேசு.” தொலைப்பேசியை மேசையில் வைத்துவிட்டுப் பாட்டி சென்றுவிட, சிரமத்துடன் அவ்விடம் வந்த சுதாவோ, அலுப்புடன் தொலைப்பேசி வாங்கியை எடுத்துக் காதிற்குக் கொடுத்து வெறுப்புடன் “ஹலோ…” என்றிட,

“ராணி…” காதோடு இதமாய் பேசினான் திவாகர்.

“ராணியா யாரு நீங்க?” என்றவளின் முகத்திலோ கலவர ரேகைகள் படர்ந்தன.

“ஹும்…! உன் புருசன் டி.” இதழ் வளைத்து அவன் கேலி பேச, குப்பென்று வியர்த்தது சுதாவிற்கு.

“யா… யாரு? எ… என்ன நீங்க ஃபோன் போட்டு, த… தப்பு தப்பாய் பேசுறீங்க?” வார்த்தைகள் தடுமாறின.

“நான் யாருனு உனக்கு நல்லவே தெரியும் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறீயே இது உனக்கே நியாயமா? ம்ம்…” கிண்டல் தொனியில் அவன் பேச, மேலும் முகம் கருத்தது சுதாவிற்கு.

“ம்ம்… ரொம்ப தான்…” முணுமுணுத்தாள்.

“காலேஜில என்னமோ அதிசயம் நடந்துச்சாம். மேடம் பேசின பேச்சில் இங்கிலீஷ்காரனே மயங்கிட்டானாமே அப்படியா? ஹாஹா…” நக்கல் ததும்பியது அவன் பேச்சில்.

அதைக் கேட்ட சுதாவிற்கோ அவமானத்தில் முகம் சிவக்க, எதுவும் பேச விரும்பாமல் அவள் அமைதியாகிவிட, அம்முனையில் அவனோ “ஹாஹா என்ன மேடம் என்ன ஆச்சு? அவ்வளவு தானா உங்க திறமை எல்லாம்.” ஓட்டினான்.

“ஹலோ மிஸ்டர். மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான்… நான்…” கோபத்தில் திக்கியது.

“என்ன நான் நான் நான்… ஆமா டுவல்த் எப்படிப் பாஸ் பண்ணினா? ஹாங்… ஓஹ் நான் மறந்தே போயிட்டேன் பாரு. உங்க அப்பா தான உங்க ஊரு ப்ரேசிடண்ட் இல்ல. அந்தப் பவர வச்சி பாஸ் பண்ணிருப்ப. ம்ம். அம் ஐ ரைட்?” இன்னும் அவன் பேச்சில் கேலியும் கிண்டலும் இளைந்தோட கோபத்தில் மூக்கு விடைத்தது சுதாவிற்கு.

“ஹலோ மிஸ்டர்! என்ன விட்டு ஓவரா பேசிட்டே போறீங்க? என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அத்தோடத் திறமையைப் பத்தி நீங்கப் பேசாதீங்க. அதைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. முத ஒழுங்கா உங்க நாற்பது அரியர் முடிக்கிற வழியைப் பாருங்க.” பதிலுக்குச் சீறினாள் சுதா.

“இதோ பாருடா என்கிட்டவே ஓவர் லந்தா? ஹும்…! இங்க பாரு டி நான் மட்டும் நினைச்சேன்னு வச்சிக்கோ ஒரே வருசத்தில் அத்தனைப் பேப்பரையும் கிளியர்ப் பண்ணிடுவேன்.” குரலை உயர்த்தினான்.

“ஆஹான். ஃபஸ்ட் இந்த வருசத்துப் பேப்பரையாவது அரியர் இல்லாம பாஸ் பண்ணிறீங்களானு பார்ப்போம்.” என்று இவள் அவனை மட்டம் தட்ட,

“ஓஹ்…! அப்படி ஒருவேளை நான் இந்த வருசம் எந்த அரியரும் இல்லாம பாஸ் பண்ணிட்டா நீ என்ன டி பண்ணுவா?”

“நானும் ஒருவேளை இந்த வருசம் நடக்கப் போற அனுவல் டே ஃபங்சன்ல இங்கிலீஷ்ல ஸ்பீச் கொடுத்துட்டா, நீங்க என்ன பண்ணுவீங்க?”

“அதெல்லாம் உன்னால முடியாது, சும்மா வாய் பேசாத!”

“உங்களாலும் கிளியர்ப் பண்ண முடியாது.”

“ஒருவேளை நான் கிளியர்ப் பண்ணிட்டா?”

“நானும் இங்கிலீஷ்ல ஸ்பிச் கொடுத்துட்டா?”

“ம்ம்… நீ மட்டும் இங்கிலீஷ்ல ஸ்பீச் கொடுத்துட்டா அதுக்கு அப்பறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் டி. ஒருவேளை உன்னால முடியலைன நீ என்ன பண்ணுவ?”

“என்ன பண்ணனும்?”

“எனக்கு ஐ லவ் யூ சொல்லனும், சொல்வீயா?”

“உஹூம் மாட்டேன்.”

“அப்ப நீ தோல்வியை ஒத்துக்கிற, ம்ம் கரக்ட்?”

“உஹூம் அதெல்லாம் கிடையாது. ம்ம். ஓகே நீங்கச் சொல்ற மாதிரியே செய்றேன். சப்போஸ் நீங்கத் தோத்துட்டா?”

“நான் தான் நீ என்ன சொன்னாலும் கேட்பேன்னு. ம்ம் இப்ப நீ சொல்லு ஒருவேளை நீ அந்தப் பங்சனில் இங்கிலீஷ்ல ஸ்பிச் கொடுக்கலைனா ஐ மீன் உன்னால முடியலைன?”

“என்னால முடியும்.”

“முடியலைனா?”

“ம்ம் சரி நீங்கச் சொன்னது தான் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். சப்போஸ் நான் சூப்பரா பேசிட்டேனா, நீங்க என்ன பண்ணுவிங்க?”

“என்ன பண்ணனும்? நீயே சொல்லு?”

“இனிமே என்ன பார்க்கவோ பேசவோ கூடாது. சரியா?”

“ஹும்.” ஒரு வெற்று புன்னகையுடன், “ஓகே டன்.” உடனே ஒத்துக் கொண்டான் திவாகர்.

*******************

1:35, 14.2.1998

“ஆர் எஸ் புறத்துக்குள்ள வண்டிப் போகாது. எல்லாரும் இங்கேயே இறங்கிக்கங்க.” என்று நடத்துநர் சத்தம் கொடுக்க, இருவரும் அலுப்புடன் வண்டிலிருந்து கீழ் இறங்கினர்.

“ஐய்யோ இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனும்னு தெரியலையே.” என்று சுதா புலம்ப, “இரு நான் கேட்டுட்டு வரேன்.” என்ற கூறிவிட்டுச் சென்ற ஜான்சி சிறிது நேரம் கழித்து வந்தாள்.

“ம்ம்… சுதா நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். இங்கிருந்து டு மினிட்ஸ் வாக் தான். நாம வேகமா நடந்தா இன்னும் சீக்கிரமா போயிடலாம்.” என்றிட, “ம்ம்.” என்று தலையாட்டிய சுதா, ஜான்சியுடன் நடக்க ஆரம்பித்தாள்.

“ஆமா சுதா அப்பறம் யார் தான் ஜெயிச்சது?”

“அத ஏன் கேட்கிற? இரண்டு பேரும் தான் ஜெயிச்சோம். அவனிடம் தோற்கக் கூடாது னு நினைச்ச நான் இங்கிலீஷ் க்ளாஸு எல்லாம் போய், இங்கிலீஷ் நல்லவே பேசக் கத்துக்கிட்டேன். அந்த இயர் மட்டும் இல்ல அதுக்கு அப்பறம் எந்தப் பங்சன் வந்தாலும் நான் தான் இங்கிலீஷ்ல ஸ்பிச் கொடுப்பேன். அவனும் அந்த இயர் எந்த அரியரும் இல்லாம பாஸ் பண்ணிட்டான்.”

“ஆக, முத முறையா உங்க சண்டையில நல்லதும் நடந்திருக்கு.” மென்னகையுடன் புருவம் உயர்த்தினாள் ஜான்சி.

“ம்ம்… அது என்னமோ உண்ம தான் ஜான்சி, ரவி மூலமா காலேஜ்ல நடந்த விசயங்களை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுத் தான், அன்னைக்கு அப்படியெல்லாம் பேசி என்ன உசுபேத்தி விட்டிருப்பான் போல, அவன் மட்டும் அப்படிப் பேசலைன்ன ஒருவேளை நான் மறுபடியும் காலேஜ் போயிருப்பேனோ என்னவோ?! ஆனா ஒரு உண்மய நிச்சயம் ஒத்துக்கிட்டே ஆகனும் ஜான்சி. அவமானம் என்பது எல்லாருக்கும் பொது தான! எல்லாரும் சிரிக்கிறபோது எனக்கு எப்படி எல்லாம் தோணுச்சோ அதே மாதிரி தான திவாவுக்கும் தோணியிருக்கும். அப்பத் தான்டி நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்பு னு எனக்குப் புரிய ஆரம்பிச்சது. என்ன ஏதுனு தெரிஞ்சிக்காம நான் அவனை அடிச்சிருக்கக் கூடாதோ னு அப்பத் தோணுச்சு.”

“அது என்னமோ உண்ம தான் சுதா, நீ ஒரு தடவை அவன் தரப்பு நியாயத்தையும் கேட்டிருக்கனும். எடுத்தவுடனே அடிதடியில் இறங்குகிறதும் அவ்வளவு நல்லா இல்லத் தெரியுமா?”

“ம்ம். நீ சொல்றதும் சரி தான் ஜான்சி, நான் கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடிச்சிருந்தா, பல பிரச்சனைகள் என் வாழ்க்கையில் நடக்காமலேயே போயிருக்கும். ஆமா என்ன பத்தியே கேட்கிறீயே? உன் பத்தி ஏன் ஒன்னுமே என்கிட்டச் சொல்லல்ல? ஏன் ஜான்சி நீ யாரையாவது காதலிக்கிறீயா?” என்று சுதா புருவம் உயர்த்திக் கேட்கவும், ஜான்சியின் முகத்திலோ வெட்கப்பூ மலரத் துவங்கியது.

“ஏய் நீ வெட்கப்படுறதப் பார்த்தா என்னமோ நடந்திருக்குது போல, பிளீஸ் பிளீஸ் என்ன நடந்துச்சுனு சொல்லேன்” நடு்ரோட்டில் நிறுத்திச் சுதா கேட்க, “ப்ச்…! போடி எனக்கு வெட்கம் வெட்கமா வருது.” நகத்தைக் கடித்துச் சிணுங்கினாள் காக்கி சட்டைக்காரி.

“யாரு டி அது? ஏய் பிளீஸ் என்கிட்ட சொல்லக் கூடாதா?”

“ஏய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. எங்க வீட்டுல மாப்பிள்ளைப் பார்த்து வச்சிருக்காங்க.”

“வாவ் சூப்பர் டி என்கிட்ட சொல்லவே இல்ல. ஆமா மாப்பிள்ள என்ன பண்றாரு? அவர் பேரு என்ன?” என்று இவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, “ப்ச் இருடி சொல்றேன் அவர்ப் பேரு ஆல்பர்ட்.” நிறுத்தி நிதானமாகப் பதில் கொடுத்தாள் ஜான்சி.

“பேரு நல்லா இருக்குது டி. ஆமா அவரு என்ன செய்றாரு?”

“ஒரு பேஜர்க் கம்பெனியில ஓர்க் பண்றாரு.”

“வாவ் டி, ஆமா எப்ப கல்யாணம்?”

“மார்ச் ஒன்னு”

“அடியேய் அப்ப நீ கல்யாண பொண்ணா?”

“ம்ம்.”

“சொல்லவே இல்ல. ஏய் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எதுக்குடி இப்படிச் சுத்திக்கிட்டு இருக்கிற? லீவ் போட்டுக் கல்யாண வேலையைப் பார்க்க வேண்டியது தான?”

“ப்ச் அதுக்கு தான் டைம் இருக்குல. அக்சூவலா இருபதாம் தேதியிலிருந்து நான் லீவ் தான்.”

“ஓகே ஒகே… அப்பறம் மாப்பிள்ள எப்படிச் சிவப்பா? கருப்பா? என்ன படிச்சிருக்காரு?”

“அதெல்லாம் என் கல்யாணத்தனைக்கு வந்து பார்த்துத் தெரிஞ்சிக்கோ.”

“ஏய் நான் எப்படி டி?”

“அதெல்லாம் வரலாம். ப்ச்…! சரி இப்ப வா, நாம அந்த ஹோட்டல்லச் சாப்பிட்டு ஸ்டேசன் போகலாம்.” கைக் கடிகாரத்தைப் பார்த்தபடியே பேசிய ஜான்சி, விறுவிறுவென முன்னால் நடக்க, பின்னால் நடந்த சுதாவின் மனமோ பின்னால் நடைபோட்டது.

**************

ஜூலை 8, 1995. காலை 9.

ஓட்டமும் நடையுமாகக் கல்லூரி போகும் பேருந்து பிடிக்க வேண்டி விறுவிறுவென நடந்து கொண்டிருந்த சுதாவின் முன் வந்து நின்றது அந்த யமஹா வண்டி.

அதிர்ந்த விழிகளுடன் சுதா தலை நிமிர்ந்து பார்க்க, அந்த வண்டியில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் திவாகர்.

சிவப்பு நிற சட்டையும் நீல நிறக் கால் சட்டையும் கட்டிளம் காளையான அவனைப் பேரழகனாகக் காட்டிட, ஒரு நிமிடம் உறைந்து நின்றவள், பின் ‘என்ன இவ்வளவு நாளா தூரமா நின்னு பார்த்துட்டுப் போயிடுவான் இன்னைக்கு என்ன என் முன்னாடியே வந்து நிக்கிறான்.’ மனதோடு பேசினாள்.

“ராணிஇ…!” என்று அவன் அழைக்கவும் நடப்பிற்கு வந்தவள் வரவழைக்கப்பட்ட கோபத்துடன் அவனை ஒரு முறை முறைத்துப்பார்த்துவிட்டு விலகி நடக்க, “ராணி கொஞ்சம் நில்லு. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.” உரிமையாக அழைத்தான் அவன் அவளை.

“மிஸ்டர் பிளீஸ் தயவு செய்து கலாட்டா பண்ணாதீங்க. பிளீஸ் இங்க இருந்து போயிடுங்க.” சிடுசிடுத்தவள் தொடர்ந்து நடக்க, அவளுக்குப் பக்கவாட்டில் வண்டியை உருட்டியபடியே அவள் பின்னால் நடந்து வந்தான் திவாகர்.

‘சே என்ன இந்த மனுசனுக்கு இங்கீதமே தெரியாது போல.’ மனதிற்குள் அவனை வசைப் பாடியே இவள் நடக்க,

“ப்ச். ஓ காட் ராணிஇஇ… நான் எந்தக் கலாட்டாவும் பண்ண வரலடி. உன்கிட்ட கொஞ்சம் பேசனும் அதுவும் தனியா பேசனும். பிளீஸ் புரிஞ்சுக்கோ. வா அந்தக் கோவில் பக்கத்தில போய்ப் பேசுவோம்.” என்றிட, ‘சே இந்த மனுசன் திருந்தவே இல்லப் போல, யாராவது பார்த்தா, என்னைய என்ன நினைப்பாங்க.’ என்று நினைத்தவளுக்கோ எரிச்சலுடன் கோபமும் வந்து ஒட்டிக் கொண்டது.

“சே உங்களுக்கு ஒரு தடவைச் சொன்னா புரியாதா? நீங்க யாரு என்கிட்ட பேச? சாரி முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட நான் பேசுறதில்ல.” முகத்தில் அடித்தாற் போல் பேசியவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடக்க, “ஏய் ராணி…! ஒரே ஒரு நிமிசம் நில்லுடி. ஒரு முக்கியமான விசயம் டி, அதை உன்கிட்ட தான் முதலில் சொல்லனும் னு நினைச்சி உன்ன தேடி வந்திருக்கிறேன். ப்ச் ஏய் புரிஞ்சுக்கோ டி. நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டா நிச்சயம் நீயும் சந்தோசப்படுவ டி.” கெஞ்சினான்.

“எந்த விசயத்தையும் கேட்கிற மனநிலையில் நான் இல்ல. பிளீஸ் தயவு செய்து என் பின்னாடி வராதீங்க.” வெடுக்கெனக் கூறிவிட்டு விறுவிறுவெனச் சுதா நடக்க, “ராணி நான் அரியர் எல்லாத்தையும் கிளியர்ப் பண்ணிட்டேன் டி.” போகும் அவளின் முதுகு பின்னால் கத்தினான் திவாகர்.

ஏனோ எதற்கோ அவன் கூறிய சுப செய்தி அவளுக்கும் சந்தோசத்தை வாரி வழங்கிட, சட்டென்று நின்றது அவளது வேக நடை.

சந்தோசத்துடன் அவன் புறம் திரும்பியவளுக்கோ பேரதிர்ச்சி.

அவனோ அவளைப் பார்த்தபடி வண்டியில் சாய்ந்திருக்க, அவனுக்குப் பின்னால் ஒரு சுமையுந்தோ தாறுமாறாக அந்தச் சாலையில் வந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த சுதாவிற்கோ அடுத்து நடக்கப் போகும் விபரீதம் புரிந்துவிட, “திவாஆஆஆ…” தொண்டைக் கிழியக் கத்தினாள்.

என்ன கத்தி என்ன பிரோஜனம், அவள் வாய் கிழியக் கத்தவும் அந்தச் சுமையுந்து அவன் பின்னாலிருந்து இடிக்கவும் சரியாக இருந்தது.


தொடரும்..


please likes me and comments me. I always need your full support. thank you
 
இவ அவசரப்பட்டு கோவப்பட்டுருக்க கூடாது தான்!!... ஆனாலும் அவன் கல்யாணம் பன்னதை ஏத்துக்க முடியலை!!... என்ன இப்படி பன்னிட்டீங்க!!..
 
Top