எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 16

NNK-34

Moderator
ஆதவன் 16

"ம்ஹூம் எங்கேயும் போக மாட்டேன்" என்று மறுப்பாக தலையசைத்தவளை இறுக்கமாக முறைத்தவன், அவளது பார்வையில் இருக்கும் மாற்றம் தவறாக படவும், "சரி நானே போறேன்" என்ற ஆதி கதவை திறக்க முனைந்த நேரம் வருணிக்கா அவனை பின்னோடு இருக்கமாக அணைத்துக்கொண்டான்.

ஆனால் ஆதித்தோ வருணிக்காவின் அணைப்பை உணர்ந்த அடுத்த நொடி ஆத்திரத்துடன் வேகமா அவளை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்தவன், "குடிச்சிருக்கியா நீ?" அவளிடமிருந்து வந்த மதுபானத்தின் வாடையை வைத்து கண்டு பிடித்து கோபத்துடன் கேட்க, "கொஞ்சமா" சிறு தடுமாற்றத்துடன் கூறினாள்.

"அங்கையே நில்லு கிட்ட வராத" நெருங்கி வர பார்த்தவளை எட்ட நிறுத்தினான் ஆதித்.

"ஏன் அதி? இந்த கோபமெல்லாம் எப்ப போகும், என்னை எப்ப மன்னிப்ப, என்னை எப்ப ஏத்துக்குவ" ஏக்கத்துடன் வினவினாள்.

"நடக்காதத பத்தி பேசாத" முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினான்.

"நான் பேசுவேன் இந்த கோபம் போகும்போது நீயா என்னை தேடி வருவ டா, ஆனா அதுவரை என்னால காத்துகிட்டு இருக்க முடியல ஆதி. என்னை மன்னிச்சிடு, நான் என்ன பண்ணினா என்னை ஏத்துக்குவ. என்னை விட்டு ஏன்டா விலகுற, பாரு உனக்காக நான் மேக்கப் எல்லாம் பண்ணிட்டு வந்து இருக்கேன். எல்லாம் உனக்காக தான் விலகிப் போகாத ஆதி, ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வர்ஷா உனக்கு பொருத்தமே இல்லை டா. அவளை ஏன் டா கல்யாணம் பண்ணிருக்க உன்னால என்னைக்குமே அவ கூட வாழ முடியாது. உனக்கு நான் தான் என்கிட்ட வா" என்றவளை ஆக்ரோஷமாக முறைத்தவன், "ஏன் என்னால அவ கூட வாழ முடியாது, ஏற்கனவே வாழ்ந்துட்டு தான் இருக்கேன் இன்னும் சந்தோஷமா வாழ்வேன்" என்று சொல்ல,

"கோபத்துல பேசுற டா உன் மனசுல நான் இருக்கும் பொழுது உன்னால அவ கூட வாழ்றது என்ன? அவளை உன்னால ஹக் கூட பண்ண முடியாது, சரி விடு நீ சொல்லு உன் கோபம் போறதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்றேன்" என்றவளை எரிச்சலாக பார்த்த ஆதித்,

"நீ என்ன பண்ணினாலும் எனக்கு உன் மேல உள்ள கோபம் போகாது, என்னால உன்னை எப்பொழுதுமே ஏத்துக்க முடியாது வெளியே போ." அதீத கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

"ஏன்டா அப்படி பேசுற? உன் முன்னாடி இவ்வளவு அழகா நான் நிக்கிறேன் அப்ப கூட உனக்கு கோபம் போலயா. இதெல்லாம் உனக்காக தான் ஆதி, உனக்கு என்னை கட்டி புடிச்சுக்கணும்னு தோணல, முத்தம் கொடுக்கணும்னு தோணல" என்று அழுகையோடு கேட்டவளை எரிப்பது போல பார்த்தவன், "நீ பேசுறத கேட்கவே அருவருப்பா இருக்கு தயவு செஞ்சு இனி இப்படி எல்லாம் பேசாத. உன்னை பார்க்கும்போது எனக்கு எதுவுமே தோணல போதுமா" என்றவன் கதவை திறக்கவும்,

"இப்பவும் எதுவுமே தோணலையா ஆதி" அவள் அணிந்திருந்த சிவப்பு நிற மக்சி தரையில் கிடக்க ஆதித்தின் முன்பு வந்து நிற்க கூடாத கோலத்தில் வந்து நின்றபடி கேட்டாள்.

ஆதித்தோ ஒருவித எரிச்சலுடன் நெற்றியை நீவியவன் நிமிர்ந்து அவளை பார்க்க, அவள் தன் முன்பு நின்றுகொண்டிருந்த கோலத்தை கண்டு அதீத ஆத்திரத்தில் அவளை பிடித்து மெத்தையில் தள்ளியவன் அவளது விழிகளை கூர்மையாக நோக்கி, "என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க.? உனக்கு இப்படி எல்லாம் பண்ண வெட்கமா இல்ல. இத்தனை வருஷம் என்னை நீ காதலிச்சும் என்னை நீ புரிஞ்சிகிட்டது அவ்வளவுதானா. ச்ச எனக்கே உன்னை லவ் பண்ணினத நினைச்சா வெட்க்கமா இருக்கு. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்னை வேண்டாம்ன்னு சொன்னது நீ, தேவையான நேரத்துல என்னை நம்பாம என்னை விட்டுவிட்டு போனது நீ, இப்படி எல்லாத்தையும் நீ பண்ணிட்டு இப்போ வந்து ஏத்துக்கோனா எப்படி முடியும். கனவுல கூட இனிமே அது நடக்காது. இப்படி எல்லாம் என் முன்னாடி வந்து நின்னா உன் மேல பாஞ்சுடுவேன்னு நீ நினைச்சா சாரி ஐயம் நாட் அ பெர்வர்ட்" என கர்ஜனையுடன் கூறியவன், அவளது ஆடையை எடுத்து அவள் மேல் வீசிவிட்டு,

"இங்க நடந்தது வெளியே தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம். சோ ட்ராமா கிரியேட் பண்ணாம யாரும் வர்றதுக்குள்ள டிரஸ் மாத்திட்டு வா" என்று கூறி விட்டு அறைக்கு வெளியே வந்து நின்றான். இவ்வளவு நடந்த பிறகு அங்கு நிற்க கூட அவனுக்கு விருப்பமில்லை, இருந்தாலும் யாரும் அறைக்குள் வந்துவிட்டால் தவறாகிப்போகுமே என்னும் ஒரே காரணத்திற்காக காத்திருந்தவன் சில பல நிமிடங்கள் கழித்து வருணிக்கா வெளியே வரவும், "ஒழுங்கா வீடு போய் சேரு" என அவளது முகத்தை கூட பார்க்காது இவ்வாறு சொல்லிவிட்டு ஆதித் கிளம்பி விட, வழியும் கண்ணீரை கூட துடைக்காது அவன் விட்டுச்சென்ற இடத்திலேயே அப்படியே நின்றிருந்தாள் வருணிக்கா.

@@@@@@@

'என்னை பத்தி எவ்வளவு சீப்பா நினைச்சுட்டா ச்ச, எங்க இருந்து இவளுக்கு இவ்வளவு தைரியம் வந்திச்சு' வருணிக்கா செய்த காரியத்தை எண்ணி மனதிற்குள் வெதும்பியவன் இறுக்கமாகவே அமர்ந்திருக்க. வந்ததிலிருந்தே கடுகடுவென இருந்த ஆதித்தை யோசனையாக பார்த்த வர்ஷா தயக்கத்தை விடுத்து, "என்னாச்சு?" என்று கேட்க "நத்திங் ஒன்னும் இல்ல" என்றவன் உள்ளுக்குள் இறுக்கமாக இருந்தாலும் முடிந்தளவு வெளியே இயல்பாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அப்பொழுது காம்பியரிங் செய்து கொண்டிருந்த ஆதித்தின் நண்பன், "ஓகே கைஸ் எல்லாருமே ஃபங்ஷனோட லாஸ்ட் ஸ்டேஜுக்கு வந்துட்டோம். சோ கடைசியா ஒரே ஒரு கேம் வச்சு ஃபங்ஷனை முடிச்சிடலாம்" என்று சொல்லவும், அனைவரும், "என்ன கேம், யாருக்கு" என்று கேட்க துவங்க, "கேம் நம்ம புதுமண ஜோடிகளுக்கு தான், அது என்னங்கிறதை இப்ப பார்த்துடலாம்" என்றவன் ஆதித்தையும் வர்ஷாவையும் நமட்டு சிரிப்புடன் பார்த்துவிட்டு விளையாட்டைப் பற்றி பேச துவங்கினான், "கைஸ் இது ஒரு மகாராஷ்ட்ரியன் கேம் சமீபமா சொசியல் மீடியாள வைரல் ஆகிட்டு இருக்கு. இதோட பேரு 'லவங் தோட் விதி - அதாவது தீ கஷ்டம் ஆஃப் பிரேக்கிங் கிளாவ்'. ரூல்ஸ் ரொம்ப சிம்பிள் மக்களே மாப்பிள்ளையோட டீத்ல இருக்குற கிளவ்வை பொண்ணு தன்னோட டீத்த யூஸ் பண்ணி உடைக்கணும். அப்புறம் கைஸ் கேம்ல ஒரு சின்ன சேஞ்ச் நம்ம கிட்ட லவங்கம் இல்லாதனால சாக்லேட் யூஸ் பண்ணிக்கலாம்" என்று அவன் சொல்லவுமே கூட்டத்தில் உள்ள அனைவரும், "செம டா" என்று சத்தமிட,

ஆதித்தோ, "ரொம்ப ஓவரா போறீங்கடா, இதோட ஸ்டாப் பண்ணுங்க" என்று சொல்ல,

"நோ நோ பண்ணி தான் ஆகணும்" என்று வழக்கம்போல அனைவரும் சத்தமிட ஆரம்பிக்கவும்,

இந்தமுறை, "சான்சே இல்லடா" என்று ஆதித் உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த வருணிக்கா கூட்டத்தினருக்கு பின்னால் நின்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களுக்கு முன்னால் அவள் கூறியதை எண்ணிப் பார்த்தவன் என்ன நினைத்தானோ தன் நண்பர்களை பார்த்து, "சரி" என்று சொல்லவும் கூட்டத்தில் உள்ள அனைவரும் "மச்சான் சூப்பர்" என்று சொல்லி சிரிக்க, வர்ஷா அதிர்ந்து விட்டாள். ஆதித் நிச்சயம் இதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டான் என்கிற நம்பிக்கையில் இருந்தவள், அவன் சரி என்று சொன்னதும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, ஆனால் அவனோ வருணிக்காவை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

இதே நேரம் கூட்டத்தினர் முன்னால் எதுவும் பேச முடியாது சங்கடத்தில் அமர்ந்திருந்த வர்ஷாவோ, என்ன செய்வது என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்க, தன் முன்னால் நீட்டப்பட்ட சாக்லேட்டை பார்த்த ஆதித்,

"இத விட சின்னதா கிடைக்கலையாடா" என்று தன் நண்பனை பார்த்து முறைத்தபடி கேட்க்க, அவனது நண்பனோ "என்ஜாய் மச்சான்" என்றபடி கண்ணடிக்கவும், அவனை முறைத்த ஆதித், தன் நண்பன் கொடுத்த ஜெம்சை தன் பற்களுக்கு இடையே வைத்து விட்டு அப்பொழுது தான் வர்ஷாவை பார்த்தான்.

விட்டால் அழுதுவிடுவேன் என்கிற நிலையில் அமர்ந்திருந்தவள் ஆதித்திடம், "ப்ளீஸ்" என வாய்விட்டே கெஞ்சி விட, அவளது சங்கடத்தை உள்வாங்கியவன், 'இவளை பத்தி யோசிக்காம விட்டுட்டோமே' என்று எரிச்சலுடன் தன் நெற்றியை நீவியப்படி மீண்டும் வருணிக்காவை பார்க்க, அவளோ நான் தான் சொன்னேன்ல என்பது போல ஏளனமாக அவனைப் பார்த்தாள்.

அவளது ஏளன பார்வையை கண்டு ஆதித்திற்கு ஆத்திரமாக வந்தது, ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டவன் வர்ஷாவை பார்த்தான், "கமான் வர்ஷா, கமான் அண்ணி, உங்க ஹஸ்பண்ட் தானே ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க?" என்று கூட்டத்திலிருந்து வெவ்வேறு நபர்கள் வர்ஷாவை ஊக்கப்படுத்துகிறேன் என்னும் பெயரில் அவளை ஒரு பாடு படுத்திக் கொண்டிருக்க, "இல்ல வேண்டாம்" என்றவள் சங்கடத்துடன் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டு பதற்றத்தில் கரங்களை பிசைந்து படி அமர்ந்திருக்க, அவளது நாடிய பற்றி தன்னை நோக்கி நிமிர்த்திய ஆதித் அவளது விழிகளை தான் பார்த்தான். அவளது அப்பாவிதனமான பார்வை அவனது மனதை மிகவும் அழுத்த,

கண்களை மூடித் திறந்து அவளது கருவிழிகளை இன்னும் அழுத்தமாக பார்த்தபடி அவளின் வதனத்தை தன் இரு கரங்களிலும் ஏந்தி கொண்டவன், இப்பொழுது கண்களை மூடியபடி தனது இதழிலிருந்த இனிப்பை முத்தத்தின் மூலமாக அவளது இதழுக்கு கடத்தியிருக்க நடந்ததை எண்ணி அதிர்ச்சியில் விரிந்த விழிகளுடன் நின்றிருந்தவளுக்கு கண்கள் இரண்டும் நிறைந்து விட, இவர்கள் அனைவரும் தங்களிடம் விடை பெற்று செல்லும் வரை மிகச் சிரமப்பட்டு கண்ணீர் கீழே விழுந்து விடாமல் இருக்க பாடுபட்டவள், அவர்கள் சென்ற மறு நொடி விழிநீருடன் அங்கிருந்து செல்ல, ஒருவித குற்ற உணர்வுடன் வர்ஷாவை பின் தொடர்ந்தான் ஆதித்.

கடைசி நொடி வரை நம்பிக்கை கொண்டிருந்த வருணிக்காவால் ஆதித் வர்ஷாவுக்கு முத்தம் கொடுத்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, "என் மேல உனக்கு அவ்வளவு கோவமா ஆதி" என்று வலியுடன் ஆரம்பித்த அவளது குரல், "அவளுக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு போயிட்ட நீ" என்று முடிக்கும் பொழுது ஆக்ரோஷமாக முடிய, "என்னை ஏத்துக்க மாட்டியா ஏத்துக்க வைக்கிறேன்" என்று கண்ணீரைத் துடைத்தபடி உறுதியாக கூறினாள் வருணிக்கா.

@@@@@

தன் முன்னால் அழுது கொண்டிருந்த வர்ஷாவை பார்ப்பதற்கு ஆதித்திற்கு சங்கடமாக இருக்கவும் தன் செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவன் அவளை சரி செய்யும் பொருட்டு வழக்கம் போல தன் பாணியில், "இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க, நியாயப்படி நான் தான் அழணும். எதுக்குடி என்னை கிஸ் பண்ணின" என்று கேட்க, நிமிர்ந்த வர்ஷா அவனை அடிபட்ட பார்வை பார்க்கவும், ஆதித்திற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

உடனே தன் இரு கரங்களையும் உயர்த்தியவன், "சாரி ஜஸ்ட் உன்னை சரி பண்ணத்தான் அப்படி சொன்னேன் " என்று சொல்ல, குனிந்து கொண்டவள் மீண்டும் அழ, அவள் அழுது முடிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் விழிதாண்டி இமையோரம் விழத் துடித்துக் கொண்டிருந்த ஒற்றை விழி நீரை தன் விரலில் ஏந்தி,

"இப்ப இந்த கண்ணீருக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டான் ஒருவித எதிர்பார்ப்புடன்.

அதற்கு சில நொடிகள் கழித்து நிமிர்ந்து அவனது விழிகளை இமைதட்டாமல் பார்த்த பெண்ணவளோ, "உங்களுக்கு தெரியாதா" என்று அவனிடமே கேட்டாள்.

அந்த கேள்வியில் ஆயிரம் உணர்வுகள், ஆயிரம் வலிகள், ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்க, தன் பதிலை எதிர்பார்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளின் விழிகளை ஆராய்ச்சியாக பார்த்தவன், "பயப்படாத வர்ஷா" என்றான் அழுத்தமாக.

வர்ஷாவின் கேள்வியில் நிறைந்திருந்த அத்தனை உணர்வுகளுக்கும், வலிகளுக்கும் ஒரே வார்த்தையில் பதிலளித்திருந்தான் ஆதித்.

அதை கேட்ட வர்ஷா, "நான் ரொம்ப சாதாரண பொண்ணு, ரொம்பவே சாதாரண பொண்ணு, என்னை சுற்றி நடக்கிற விஷயம், எனக்குள்ள நடக்கிற விஷயம் இப்படி எல்லாமே எனக்கு புதுசு? விசும்பலுடன் கூறினாள்.

"பயப்படாதன்னு சொன்னேனே" என்றான் அவன்.

"பயப்படாம இருக்க முடியல" குரல் நலிந்து ஒலிக்க, மீண்டும் அழுதாள்.

தன் மனதிற்குள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனோ அந்த போராட்டத்தை எப்படியாவது நிறுத்தும் பொருட்டு,

"உன் பயத்தை போக்குறதுக்கு என்கிட்ட வழி இருக்கு" என்றான் தீவிரமாக.

அவளோ, "முடியுமா?" என அழுகையை நிறுத்திவிட்டு அவனை பார்த்து கேட்டாள்.

"ம்" அவளை நெருங்கி வந்தவன் நூலளவு இடைவெளியில் அவளது விழிகளை பார்க்க, அவளோ என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆர்வத்துடன் அவனது விழிகளை பார்க்க,

வர்ஷா, " நமக்கு எந்த விஷயத்தை பார்த்து ரொம்ப பயமா இருக்கோ அதே விஷயத்தை திரும்ப பண்ணினா அந்த பயம் போயிடுமாம்" என்றவனின் பார்வை இப்பொழுது அவளது கண்களில் இருந்து நகர்ந்து வந்து அவளது இதழில் நிலைத்திருக்க, "ஓ" என்றவளுக்கு சில நொடிகள் கழித்தே அவன் சொன்னதற்கான அர்த்தமும், அவனது குரலில் இருந்த நக்கலும் பிடிபட, சட்டென்று தன் இதழை காரங்களைக்கொண்டு மூடியவள், அவனை பீதியுடன் பார்க்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து, "இதை பத்தி நீ என்ன நினைக்கிற?" என்று கேட்க,

உடனே, "நான் பயத்தோடவே இருந்துக்கறேன்" என்றாள் வர்ஷா.

அவளது பதிலில் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், "ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்" என்று அப்பாவியாக கூறினான்.

அதற்கு அவள், "நீங்க தானே!? ஆள விடுங்க" என்றவள் புன்னகையுடன் அவனைத் தாண்டி செல்ல, அவனும் அதே புன்னகையுடன் அவளுடன் வெளியே வர, அவர்களை எதிர்கொண்ட மகாலட்சுமி, "கிளம்பலாமா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் முன்னே அழுது வீங்கிய முகத்துடன் வந்த வருணிக்கா ஆதித்தை பார்த்து,

"கெஞ்சிப் பார்த்தேன், மிஞ்சிப் பார்த்தேன் உனக்கு என் காதல் புரியல ஆதி அட்லீஸ்ட் இனிமேலாவது உனக்கு புரியுதான்னு பார்க்கலாம்" என்றவள் கண் இமைக்கும் நொடியில் தன் மணிக்கட்டு பகுதியை தனது முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துக்கொள்ள சுற்றியிருந்த அனைவரும் வருணிக்காவின் செயலில் அதிர்ந்து விட்டனர்.
 

Shamugasree

Well-known member
Vqrsha amma ivlo pesinathe.pwrusutha. avalukaga.evlo yyosikuran namma loverboy. Loosu varunika. Iva yen ipdi iruka. Apdi enna pidivatham. Ithuku mela avan epdi sonna iva vendam nu puriyum. Varsha kooda 2min santhoshama iruntha ungaluku purikatha writeru. Udane oru aapu eduthutu vanthutenga. Avan kandukama ponalum. Varsha ithayum manasula ninaichu kulapuvale.
 

NNK-34

Moderator
Vqrsha amma ivlo pesinathe.pwrusutha. avalukaga.evlo yyosikuran namma loverboy. Loosu varunika. Iva yen ipdi iruka. Apdi enna pidivatham. Ithuku mela avan epdi sonna iva vendam nu puriyum. Varsha kooda 2min santhoshama iruntha ungaluku purikatha writeru. Udane oru aapu eduthutu vanthutenga. Avan kandukama ponalum. Varsha ithayum manasula ninaichu kulapuvale.
Aama dear 💕.
Aama dear😎🌹😍
Avaluku thimiru da avalai pola silar irukaanga dear.
Avalukaa seekiram puriyum dear
🙊🙊🙊 aenda ipdi solliteenga, chill chill scene ellam ungalukaaga thaane vachen.
Iight ah kulapika vaaipu iruku dear❤️.
Thank u so much.
 

Mathykarthy

Well-known member
வருணி 🤬🤬🤬🤬🤬🤬🤬
நினைச்சதை அடையனும் ன்னு பிடிவாதம்... வர்ஷாவுக்கு விட்டு கொடுக்க கூடாதுனு ஈகோ என்னவெல்லாம் செய்ய தூண்டுது... எப்படி எல்லாம் பிளாக் மெயில் பண்றா
... நல்லா cut பண்ணிட்டு போய் சேருன்னு விட்டுடனும்... 😤😤😤😤😤😤😤😤
 

NNK-34

Moderator
வருணி 🤬🤬🤬🤬🤬🤬🤬
நினைச்சதை அடையனும் ன்னு பிடிவாதம்... வர்ஷாவுக்கு விட்டு கொடுக்க கூடாதுனு ஈகோ என்னவெல்லாம் செய்ய தூண்டுது... எப்படி எல்லாம் பிளாக் மெயில் பண்றா
... நல்லா cut பண்ணிட்டு போய் சேருன்னு விட்டுடனும்... 😤😤😤😤😤😤😤😤
Yes dear avan enna aanalum iva pinnadi varuvanu ninaicha avan vendam sollitu move on panninatha thaangika mudiyala
Thank u so much dear❤️
 
Top