எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாற்கரனில் உருகும் பார்தவியே

santhinagaraj

Well-known member
பார்க்கரனில் உருகும் பார்தவியே

விமர்சனம்

வலி நிறைந்த ஒரு காதல் கதை.

சொந்த தந்தையாலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் உறவுகளை வெறுத்து தானாக சுயமாக வளரும் ராகவ்.

உறவுகள் தான் எல்லாமே உறவு குடும்ப பந்தமே பெரிதானது என்று நினைத்து வளரும் மிதிலா.

எதிர்பாராத ஒரு சூழலில் இருவருக்கும் ஏற்படும் மோதல் காதலாக மாறுகிறது.

உறவுகள் இல்லாத ரெண்டு பேரும் அவங்களோட வாழ்க்கையை நினைத்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதாக இவர்கள் இருவரும் செய்யும் செயல்கள் என்னடா இவங்க இப்படி இருக்காங்கன்னு நினைக்க வைக்குது.

நந்தா இவனோட நட்பு ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது இவனோட நட்பு ராகவுக்கு கிடைத்தது எல்லாம் மிகப்பெரிய வரம் 😍😍

சங்கரன் வசந்தி இவங்களோட பாசம் கடைசி வரைக்கும் ரொம்ப நல்லா இருந்தது ஆனா இவங்க மேல ஒரு கோபம் இருக்கத்தான் செஞ்சது.

அந்த வேதவள்ளி தாய்க்கிழவி பேசின பேச்சை படிக்கும்போது அவ்வளவு கோவமா வந்துச்சு.🤬🤬
நிஜமா அந்த பேச்சை கேட்கும் போது மிதிலாவை நினச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு 😔

அந்தக் கிழவி அவ்வளவு பேசும்போது யாருமே வாய் திறக்காமல் இருந்தது சுத்தமா பிடிக்கல 😡😡

கடைசியில் கடமைக்காக அந்த கிழவியை திட்டினத சுத்தமா ஏத்துக்க முடியல

மிதிலா ஓட நடத்தையை தவறாக பேசும் அந்த கிழவியை ராகவ் கூட எதுவுமே கேட்காம விட்டது ஏத்துக்க முடியல.

தலைப்புக்கு பொருத்த விளக்கம் ரொம்ப நல்லா இருந்தது.
ஆனா அந்த தலைப்புக்காக கொடுத்த விளக்கத்துக்காக மிதிலாவை கஷ்டப்படுத்தியது புடிக்கல.

மிதிலா ராகவ் ரெண்டு பேருக்கும் இன்னும் கொஞ்சம் புரிதலையும் உணர்வுகளையும் கொடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Top