எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாற்கரனில் உருகும் பார்தவியே

zeenath

Member
#நறுமுகைநிலாக்காலம்_02
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
#NNK67
பாற்கரனில் உருகும் பார்த்தவியே
ராகவ்... ஏழு வயதில் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு பெங்களூர் வரும் இவன் தன் சொந்த காலில் முன்னேறி சொந்தமாக கம்பெனி வைத்து தொழிலில் வெற்றியாளனாக இருக்கிறான்.. இவனின் உற்ற நண்பன் நந்தா.. ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள்.. ராகவ்வின் வாழ்வில் வருகிறாள் மிதிலா.. தாய் தந்தை இவள் மீது பாசமாக இருந்தாலும் தேள் போல இவளை கொட்டிக் கொண்டே இருக்கிறார் பாட்டி அவருக்கு சின்ன பேத்தியின் மீது மட்டுமே அளவு கடந்த பாசமும் அன்பும்.. பாட்டி தன்னை திட்டுவது ஏன் என்று தெரியாமல் இருந்தவளுக்கு உண்மை தெரிய வருகிறது ஒரு நாள்.. இந்நிலையில் இவளை திருமணம் செய்து கொள்ள வருகிறான் கயவன் ஒருவன்.. ராகவ் மற்றும் மிதிலா தங்களுக்குள் இருக்கும் காதலை மற்றவர்களுக்காக மறைத்து துயரத்தில் மருகி நிற்கும்போது எப்படியோ இருவருக்கும் திருமணம் நடக்கிறது இன்புற்று இருக்கும் சிறிது காலத்திலேயே மற்றும் ஒரு சோதனையாக கடத்தப்படுகிறாள் மிதிலா.. இவளைக் காப்பாற்றி அழைத்து வரும் கணவனோடு வாழ விரும்பாமல் அவனை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள்,.. மனைவியின் முடிவு அறிந்து அதிர்ந்து நிற்கும் ராகவ்.. என்ன செய்தான் பிரிந்தவர்கள் செய்தார்களா என்பதும் வில்லன் யார் என்பதும் கதையில்..
பாட்டி வேதவல்லி... நாக்கா தேள் கொடுக்கா இவருக்கு 😡
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck 🥰🌹💐
 
Top