எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 6

NNK-54

Moderator
சாயாவின் நடவெடிக்கைகள் ஜெயந்தனுக்கு சிரிப்பாக இருந்தது. பின் முப்பதுகளில் இருப்பவனுக்கு சாயா தன்னை ஏதோ டீன் ஏஜ்ஜில் இருக்கும் பையனை பார்ப்பது போல் பார்த்து வைக்கிறாள். கொஞ்சமும் ஒட்டாத இந்த விஷயத்தை என்னவென்று சொல்வது? அவள் வேலையில் சேர்ந்து இந்த ஒருவாரத்தில் என்ன கற்றுக்கொண்டாளோ ..அலுவலக விஷயமாக கேட்கவென்று அவனது கேபினுக்குள் ஒரு நாளைக்கு பத்துமுறையாவது வந்துவிடுகிறாள். அவனது மற்ற காரியதரிசிகள் பின்னால் வைத்துப் பேசும் அளவுக்கு நிலைமை அளவு கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

வேலைகளை நிஜத்தில் முடித்து வைப்பவள் ஸ்ரீஜாதான். உணவு இடைவேளையின் பொழுதும் கூட அந்த பெண்ணால் நேரத்திற்கு சென்று சாப்பிட முடிவது இல்லை.எல்லாவற்றையும் தனது அறையில் அமர்ந்தவாறே தெரிந்துதான் வைத்திருக்கிறான் ஜெயந்தன். வேலை செய்யவென வந்துவிட்டால் அதற்கு உண்டானவற்றை மட்டும் செய்யவேண்டும்.இதென்ன எனது ரெப்புட்டேஷனையும் சேர்த்து கெடுக்கிறாள் இந்த சாயா ' என்று கோவம் கொண்டவன்,அன்று இரவு தனது அப்பாவுடன் பேசும்பொழுது கூர்மையாகவே சொல்லிவிட்டான்."அப்பா..நீங்க என்ன உத்தேசத்தில் அந்த பெண்ணை என்னோட ஆஃபீஸ் அனுப்பி வச்சிருக்கீங்கன்னு தெரியாத,புரியாத அளவுக்கு நா கிட் இல்லே.மோரோவ்ர் என்னோட ஒர்கிங் ஸ்டைல் என்னனு போலோ பண்ண முடியாதவங்கள என்னால வேலைல வச்சிக்க முடியாது. இந்த ஒரு வாரத்துல உங்க ரெகமண்டஷன் இன்னும் எதையுமே கத்துக்கல .

ஸ்ரீஜா எல்லா வேலையும் செய்யுறாங்க,அண்ட் சாயாவுக்கு சொல்லித்தர ட்ரை பன்றாங்க . பட் சாயாவுக்கு எண்ணமெல்லாம் வேறே எங்கேயோ இருக்கு.ஒன் மந்த் ட்ரைனிங் போதும்னு நினைச்சேன். பட் இ வாஸ் ராங். ஒரு வருஷம் ஆனாலும் சாயாவால எதையும் கத்துக்க முடியாது.இந்த லக்ஷணத்துல ஹயிலி குவாலிபைட் அண்ட் எக்ஸ்பீரியன்ட்னு வேறே பந்தா.

ஐ காண்ட் டோலேரெட் எனிமோர்.ஒண்ணு ஒழுங்கா வேலை பண்ற ஐடியா இருந்தா வர சொல்லுங்க.இல்லேன்னா வேற யாரை அப்பொய்ண்ட் பண்ணன்னு யோசிப்பேன்"

மகனது வார்த்தைகளைக் கேட்டவர் விக்கித்துப் போனார். மகனது எண்ணங்களும் பிடிவாதமும் ஏற்கனவே தெரிந்தது தான். அனுபவ ரீதியாக அவனது முடிவுகளை எப்போதும் யாராலும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர் தனது நண்பர் தனேஸ்வரனுக்கு அழைத்து பேசினார்.

இவர்களது அந்தஸ்து என்ன என்று முழுதாக தெரிந்ததுனாலே தான் மகளை எப்படியாவது ஜெயந்தனுக்கு திருமணம் செய்வித்துவிட துடிக்கிறார்.மகளின் குணத்துக்கு அங்கே காலம் தள்ள முடியாமல் விவாகரத்து பெற்றாலும் கூட பல கோடி ரூபாய்கள் வருமே!என்று குறுக்காக யோசித்தது தனேஸ்வரனின் புத்தி.

பல வருஷங்களாக தொழில்,அதன் வெற்றி ,வியாபாரம் என்று சுற்றியதன் விளைவு மகளின் திருமணமும் கூட முதலீடாகவும் ,வரும் லாபத்தை கணக்கிடவும் சொன்னது. சாயா வெறும் பணம் பின்னால் சுற்றுபவள் இல்லை.அதனாலேயே தனது தந்தை செய்யும் தொழில்களில் அவள் ஈடுபட விரும்பவில்லை.அவள் மனது சுதந்திரமானது.எந்த தளைகளையும் அவள் அனுமதிக்க விரும்புவதில்லை.

அவள் குணம் மோசம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.கொஞ்சம் வித்தியாசமான போக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்று வரை அவள் உண்மை காதலை உணரவில்லை.முதல் திருமணத்தில் கூட காதலை சொன்னவன் அவளது க்ஸ் தான் . பார்க்கவும் பழகவும் பிடித்திருந்த காரணத்தால் திருமணம் செய்துகொண்டாள் .

அவளது முதல் கணவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன்.அவர்கள் குடும்பம் லண்டனில் குடியேறி அறுபது வருஷங்களுக்கு மேலாகிவிட்டது.ஆனாலும் அவனது மனம் சுத்தமான இந்தியத்தன்மை கொண்டது.காதல்,கல்யாணம், குடும்பம் எல்லாவற்றையும் அவன் மிகவும் விரும்பினான். இப்போது தனியாக குழந்தையை அம்மா இன்றி வளர்க்கிறானே தவிர வேறொரு பெண்ணை அவன் மனம் தேடவில்லை. அப்படி அவனது சாய்ஸ் தவறு என சொல்லலாம்.

தானேஸ்வரன் தனது நண்பரின் உரையாடலை அசைபோட்டவாறே தனது அறையில் அமர்ந்திருந்தார். மகளை கூப்பிட்டு என்னவென்று தொடங்குவது என பலத்த சிந்தனை அவரை இறுக்கிப் பிடித்தது. சாயாவை பொறுத்தவரை மனதுக்கு சரி என்று தோன்றாத ஒன்றை நிர்பந்தத்தின் பெயரில் செய்யமாட்டாள் .

ஜெயந்தகனை பிடித்தது. அதனால்தான் அங்கே செல்லவே ஒத்துக்கொண்டாள் . இப்போது அவனை பார்த்து லிட்டர் கணக்கில் வழியாதே!என்று சொன்னால் என்னவாகும்? திடீரென வக்கரித்துக்கொண்டு அங்கே செல்லவே மாட்டேன் என்று சொன்னாலும் ஆச்சர்யம் கொள்வதற்கு இல்லை.

அவள் எண்ணங்களை அறியாதவளாக சாயா தந்தையை பார்க்க அவரது அறைக்கே வந்தாள் . அவள் தனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்க செல்வது வழக்கம்தான். அவள் பேச்சில் பெரும்பாலும் ஜெயந்தன் பற்றிய விஷயங்கள்தான் நிறைந்திருந்தது. அதில் ஜெயந்தன் மீதான அவளது பிடித்தம் முழுமையாக தெரிய ,அதையே வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்து விட்டார் பெரியவர்.

"உனக்கு ஜெயந்தனை பிடிச்சிருக்கா சாயா? "அவரது கேள்வியில் ஆச்சர்யம் கொண்ட சாயா,"என்னப்பா ,நா தான் ஏற்கனவே சொல்லிட்டேனே..ரொம்பவே பிடிச்சிருக்கு. அவர் எஸ் னு சொன்னா சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்க நா ரெடி .பட் ,என்னோட ப்ரீவியஸ் வெட்டிங் லைப் பத்தி கண்டிப்பா அவரோட ஷேர் பண்ணிக்கணும்.அப்புறம் அவருக்கு ஓகேய் ன்னா அம் ஹாப்பி" என்று முடித்துவிட்டாள் .

லேசாக முகம் சுருக்கியவர்,"ஜெயந்தன் அவ்வளவு சீக்கிரம் இதை பத்தி யோசிக்கிறவன் இல்லே. அவனுக்கு இப்போதைக்கு உன் மேல எந்த அபிப்பிராயமும் இல்லேன்னு நா நிச்சயம் சொல்லமாட்டேன்.இப்போதான் அவனோட அப்பா பேசினார். உனக்கு வேலை செய்ய இஷ்டமில்லேன்னா யாரோட நேரத்தையும் வீணாக்காம வேலைய விட சொல்றானாம். நீ பிட் இல்லேன்னு யோசிக்கிறான்.

கல்யாணம் பத்தி அப்புறம் யோசிக்கலாம்.முதல்ல அந்த கம்பனில உன்னோட திறமையை நிரூபி. அவனுக்கு உன்மேல மரியாதையும்,நல்ல ஒப்பீனியன்நும் வந்தா ஒருவேளை அவனே உங்க கல்யாணம் பத்தி யோசிக்க வாய்ப்பு இருக்கு.

உங்க அம்மாவையே நா லவ் பண்ணிதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். என்னோட பிஏ வா ஜோஇன் பண்ணவ ,அவளோட வேலை செய்யுற வேகத்துல முதல்ல உத்து கவனிக்க ஆரம்பிச்சேன். தென் அது எப்போ காதலாச்சுனு தெரியாது. முதல்ல நோ தான் சொன்னா. அப்புறம் அவங்க வீட்டுல சொல்லி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். முதல்லே உன்னோட வேலை செய்யுற திறமைல அவனை இம்ப்ரெஸ் பண்ணு . நல்ல பேர் வாங்கு,பிறகு எல்லாம் தானாக நடக்கும்" என்றுவிட்டு தனது யோசனைகளுக்குள் சென்று விட்டார்.

அம்மா பற்றிய பழைய ஞாபகங்களாக இருக்கும் என்று ஊகித்தவள் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள் . தனது அறையில் பெட்டில் அமர்ந்தவளுக்கு 'ரொம்ப ஓவரா கவனிக்கிற அளவுல அவனையே பாக்குறேன் தான் . அழகை ரசிச்சா என்ன தப்பு? எதுக்கு இவ்ளோ பில்டப்.என்கிட்ட நேரே சொல்லியிருக்கலாம். 'என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இது தவறாகப் படவில்லை.சுபாவுக்கு ஒரு மாதம் போனதே தெரியாமல் ஓடியது.அவளது அம்மாவும் மகளும் வேண்டிய அளவுக்கு மலேசியாவை சுற்றிவிட்டு சிங்கப்பூர் கிளம்பிவிட்டார்கள்.அவ்வளவு பெரிய அறை அவளுக்கு அதிகமாக தெரிய,வேறு சிறு அறைக்கு மாற்றிக்கொண்டாள் . அவர்கள் கிளம்பிய பிறகு வெறுமை மட்டும் மிச்சமாக இருந்தது. இருவரையும் பிரிந்து இருப்பது வெகு கடினமான டாஸ்க் தான் .

அவளுடன் வந்தவர்கள் எல்லாம் கொரியன் சீரியல் ஹீரோ பற்றியும்,பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் பேசிக்கொண்டிருக்க இவளோ எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாக இருந்தாள் . இருபத்தாறு வயது பெண்ணுக்குரிய எந்த விருப்பங்களும் அவளுக்கு இல்லை. தொலைக்காட்சி,திரைப்படங்கள் பார்ப்பது எல்லாம் பதினேழு வயதுடன் முடிந்து விட்டது. தியா பிறந்த பிறகு தவ வாழ்க்கைதான்.

அம்மா சிங்கப்பூருக்கு கிளம்பும் முன்னர்,'பயிற்சிக்காலம் முடிந்து இந்தியாவிற்கு இரண்டு வருஷங்களுக்கு செல்ல வேண்டி வரலாம் ' என்பதையும் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்றும் சொல்லித்தான் அனுப்பினாள் .அவள் அம்மாவின் முகம் ஒரு கணம் இருண்டது .பிறகு சமாளித்துக்கொண்டு "அப்போ,பிரணவ் உனக்காக வெயிட் பன்றானே. உன்னையும் தியவையும் அவன் ரொம்ப நல்லா பார்த்துப்பான் சுபா.அவனுக்கு என்ன பதில் சொல்ல போறே"என்று கேட்டுவைத்தார்.அவருக்கும் அவளது பதில் ஏற்கனவே தெரியுமே!

கைகளைக் கட்டிக்கொண்டு தன் அம்மா கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எங்கேயோ பார்வையை செலுத்தும் மகளின் போக்கு அவருக்கு மனதில் வலியை அதிகப்படுத்தியது. கண்கள் கலங்க,"அப்பாவும் நானும் சேர்ந்து உன்னோட வாழ்க்கையை,இளமையை கொன்னுட்டோம் சுபா .இன்னிக்கு நீ இப்படி நிக்க நாங்கதான் காரணம்.நானெல்லாம் அம்மாவே கிடையாது.சுயநல கிருமி.இன்னமும் உன்னை உறிஞ்சு வாழறேன்.முடிஞ்சா என்னையும் அப்பாவையும் மன்னிச்சுடு" என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.

அம்மாவின் வார்த்தைகள் அவளுக்கு மனதில் மிகுந்த வலியை கொடுத்தது. ஆனாலும், ஜெயந்தன் தீண்டிய இந்த தேகத்தைக்கூட அவள் வேறு யாரையும் தீண்ட அனுமதிக்க முடியாது.அப்படி இருக்கும் பொழுது அவனுக்கான மனதில் இன்னொருவர் எப்படி சாத்தியம்.இந்த விஷயத்தில் யாருக்காகவும் அவளால் மாறவே முடியாது.

கண்ணீருடன் அவர்களை அனுப்பிவைத்துவிட்டு வந்தவள்தான்.அதற்குப்பிறகு மனதை மடைமாற்றும் வழியாக அதிகமாக வேலைகளை இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதும், வேலை தளத்தில் நின்று புது யுக்திகளை கற்பதிலும் அவளது நேரம் பறந்தது. ஒவ்வொரு முறை எழுத்து தேர்விலும், கள தேர்விலும் அவளால் சுலபமாக தேற முடிந்தது.

பயிற்சி வகுப்புகள் இன்னமும் முடியவில்லை. பத்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் அவளை அழைத்து மூத்த அதிகாரி இந்தியா செல்வதற்கான உத்திரவை கொடுத்துவிட்டார். இங்கே பயிற்சி முடித்து சிங்கப்பூருக்கு சென்று ஒரே மாதத்தில் இந்தியா கிளம்ப வேண்டும்.

இன்னமும் தியாவுக்கு பள்ளி ஆரம்பித்திருக்கவில்லை அவளது பள்ளி நிர்வாகத்திற்கு மலேசியாவிலிருந்தே ஈ மெயில் அனுப்பினாள் . இனி,இந்தியா செல்வதற்கு அலுவலகத்தில் மாற்றல் வந்திருப்பதால் வரும் கல்வியாண்டில் தொடர முடியாது.அதனால், விடுவிப்பு ஆவணங்களை தயார் செய்து கொடுத்து உதவுங்கள் என்ற கோரிக்கையுடன்.

அடுத்து தியாவையும் சமாளிக்க வேண்டும்.இதோ என்ன சொன்னாலும் தியா இந்த நாட்டு குடிமகள்தான். அவளது இஷ்டங்கள் ஆசைகள் எல்லாம் இந்த மண்ணை சேர்ந்தது.சிறு குழந்தை எப்படி தனது நண்பர்களை,ஊரை விட்டு வருவாள்?இந்த காலத்து பிள்ளைகளை சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே!

தன்னையும் அறியாமல் சுபாவிடமிருந்து பெருமூச்சு வெளியேறியது. அம்மாவிடம் சொல்லும்பொழுது,அவர்களையும் அறியாமல் அவர்களது கண்களில் சந்தோஷம் எட்டிப்பார்த்தது.அதை சுப கவனித்திருந்தாள் .அம்மாவின் உறவுகள் அனைத்தும் தமிழகத்தில் இருக்கும்பொழுது தன் மகளுக்காக இங்கே அந்நிய தேசத்தில் இருப்பவர்கள்.இத்தனை வருஷங்களில் எந்த உறவினரையும் பார்க்க சென்றது இல்லை.திருமணம் என்று எத்தனை அழைப்புகள் வந்திருக்கும்?எதற்கும் சென்றது இல்லை. இனி,தன் மகளோடு இங்கே தான் என்று இருந்தும் விட்டார்கள்.இனியாவது அவர்களாவது சிறிது சந்தோஷம் அடையட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

எல்லா உறவுகளைவிடவும் அவள் அம்மாவுக்கு அவள்தான் முக்கியம். அதையும் அவள் அறிவால் .தியா பிறந்த பிறகு தன் அம்மாவின் உணர்வுகள் இன்னும் அதிகமாகவே புரிகிறது. உற்சாக மன நிலையில்தான் சுபா இந்தியா செல்ல ஒப்புக்கொண்டாள் .அவள் ஆழ்மனதில் ஜெயந்தனுடன் வேலை செய்ய வாய்க்குமா என்ற எண்ணம் கள்ளத் தனமாய் எட்டிப்பார்க்கிறது.அவன் அருகில் வேண்டாம்.அவன் சம்மந்தம் கொண்ட ப்ரஜெக்ட்டில் தொலைவில் இருந்து அவனை பார்த்துக் கொண்டே வேலை செய்தால் கொடை போதும் என்றது காதல் மனம்.

அவள் இன்னமும் மலேசியாவில்தான் இருக்கிறாள்.அவளின் மனம் ஜெயந்தனிடம். அவனும் இதை உணர்கிறான்.புரியாத உணர்வுகளாய் .
 
Top