எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீக்கமற நிறைந்தாய் உயிரே 5

NNK 75

Moderator
நீக்கமற நிறைந்தாய் உயிரே 5

அந்த உயர்தர மருத்துவமனையின் வெளியே ராபின் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தான்.. உள்ளே ஆழ்ந்த மயக்கத்திலிருந்த வசீகரனின் நிலை தெரியும் வரை இவனின் சிந்தனையில் தெளிவு இல்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.. உள்ளே இருப்பவன் கண் விழிக்கும் நொடிக்காக காத்திருக்கிறான்.

அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஆவலாய் உள்ளிருந்து வந்த மருத்துவர் புருஷோத்தமனை பார்த்தான்.

" டாக்டர் பாஸ் எப்படி இருக்காரு.." என்று வேகமாய் அவரை நெருங்கினான்.

" என்னாச்சி ராபின் எதுக்காக அவரை இப்படி யோசிக்க விட்ட.. அவரு ரொம்ப டென்சன் ஆனா இப்படி நடக்கும்னு நான் தான் ஏற்கனவே சொல்லிருக்கனே.. அதுக்காக தான உன்னை நான் அவரு கூட இருக்க சொன்னேன்.. இப்போ என்ன நடந்துச்சி.." என்றார் பதட்டமாய்.

"டாக்டர் கருணா கிடைச்சிட்டான்.. " என்றான் ஒற்றை வார்த்தையாய்.

அதை கேட்டதுமே அவரின் பதட்டம் குறைந்து முகத்தில் சற்று ஆசுவாசம் வந்தது.

"ஏதாவது தெரிஞ்சுதா ராபின் வீடியோ பத்தி.. அதை அழிச்சா தான் இவரை நாம பழையபடி மீட்க முடியும் ராபின்.. அந்த நிகழ்வு அவரோட மனசுல ஆழமா பதிஞ்சி போச்சி.. ஏதாவது குளூ கிடைச்சதா வீடியோ இல்லை மேடம் பத்தி.. இது ரெண்டுல எது கிடைச்சாலும் சந்தோஷம் தான்.." என்றார் கவலையாய் தன் நோயாளியை பற்றி அனைத்தும் தெரிந்தவராய்.

" ம்ம் இன்னைக்குள்ள தெரிஞ்சிடும் டாக்டர்.. அப்புறம் மேடம் இருக்க இடம் பாஸ்க்கு தெரியும்..ஆனா நம்மகிட்ட சொல்ல மாட்டேங்குறாரு.. அவரு அடிக்கடி மேடம் பார்க்க போறாரு டாக்டர்.. ஆனா தனியாத்தான் போறாரு.. எனக்கு ஒன்னுமே புரியலை டாக்டர்.. இருபத்தி நாலுமணி நேரமும் அவரு கூடவே இருக்கேன் ஆனா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த விஷயத்தை மட்டும் பாஸ் இன்னும் யாருக்கும் தெரியாத வச்சிருக்காரு.. ஏன் அதை பத்தி தெரிஞ்ச யாரும் சொல்லமாட்டேன்றீங்க...

ஆனா மேடம் எங்க போனாங்கன்னு கூட தெரியலை.. என்னால நம்ம பாஸை இது போல பாக்க முடியலை டாக்டர்.. எவ்வளவு மென்மையானவரு இப்போ எவ்வளவு அரக்கனா நடந்துக்கறாரு.." என்று வருத்தத்துடன் பேசியவனின் தோளை தட்டிய மருத்துவர்,

"இதெல்லாம் மாறும் ராபின்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. நம்ம மேடம் கிடைச்சா எல்லாமே மாறும்.. அந்த ஒரு நாள் வராமலே இருந்திருக்கலாம் ராபின்.. பாஸ் அனுமதி இல்லாம நானும் அதை சொல்ல முடியாது ராபின்.. ஆனா கூடிய சீக்கிரம் எல்லாமே மாறும்.. சரி பாஸ் இப்போ ஓகே தான் நீ போய் பாரு.. நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து பாக்குறேன்.." அவனுக்கு ஆறுதல் தந்து விட்டு சென்றார்.

அதே நேரம் அதே மருத்துவமனையில் தன் காலடி தடத்தை பதித்தாள் நன்விழி தன் கையில் ஒரு குழந்தையுடன்.. அவளின் பின்னே ஒரு பெண்ணும் பதட்டமாக அவளின் பின்னே வந்தாள்.


" டாக்டர் டாக்டர் ப்ளீஸ் இந்த குழந்தையை கொஞ்சம் பாருங்க.. மூச்சு விடவே தினறுது டாக்டர்.." என்று பதட்டமாய் அந்த மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்து அந்த இளவயது பெண் மருத்துவரும் அந்த குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து பரிசோதனையை துவங்கினார்.

வெளியே அந்த குழந்தையின் தாய்க்கு ஆறுதல் சொல்லியபடி அங்கே நின்றாள் நன்விழி.

கல்லூரி விட்டு வரும் வழியில் ரோட்டோரமாய் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணின் குழந்தை நடுரோட்டிலே மூச்சி விட முடியாமல் தவித்து கொண்டிருக்க அதை பார்த்தவள் உடனடியாய் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்தாள் என்ன செய்வது என்று புரியாமல் குழந்தையை மடியில் வைத்து அழுது கொண்டிருந்த தாயுடன்.

ஏனோ மதியத்திலிருந்து மனம் எதிலும் லயிக்காமல் இருந்தவளுக்கு ஒரு நிலையில் கல்லூரியில் இருக்க பிடிக்காமல் வெளியே வந்தவளின் கண்களில் விழுந்தது அந்த குழந்தையின் நிலை.

அதை நேரம் அந்த இடத்திற்கு தனது வழக்கமான பார்வை நேரமாய் ரவுண்ட்ஸ் வந்தார் புருஷோத்தமன்.

உள்ளிருந்த வந்த அழுகுரலில் அங்கே வந்தவர் ஒரு குழந்தை உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதை கண்டவருக்கு ஒரு மருத்தவராய் தன் சேவையை செய்ய அந்த அறைக்குள் புகுந்தவரை கண்டு அங்கிருந்தவர்கள் விலகி நின்றனர்.

அந்த மருத்துவமனையின் டீன் தான் புருஷோத்தமன்.. கிட்டதிட்ட இருபத்தைந்து வருட மருத்துவ சேவையில் சிறந்த மருத்துவருக்கான மத்திய அரசின் விருதை பெற்றவர்.

அந்த மருத்துவமனைக்கு சொந்தகாரரை இன்னும் யாரும் அறிந்ததில்லை.. அந்த மருத்துமனையில் எல்லாமே புருஷோத்தமனின் முடிவு தான்.

ஒரு மணி நேரத்தில் அந்ந குழந்தையை காப்பாற்றி விட்டு வெளியே வந்தவரிடம் சென்ற நன்விழி,

"டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்.. தேங்க்யூ சோ மச் சார்.. அம்மா வாங்க பாப்பாவை பாக்கலாம்.." என்று அவரிடம் நன்றி கூறியவள் அருகிலிருந்த குழந்தையின் தாயை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

போகும் அவளை அதிர்ச்சி தாங்கிய விழிகளுடன் பார்த்து நின்றார் புருஷோத்தமன்.


அறையின் உள்ளே ஓடியவளை கண்டவருக்கு எதுவோ விளங்க வேகமாய் வசீகரன் இருந்த அறைக்கு சென்றார் பதட்டமாக.

அங்கே அதுவரை உணர்வில்லாமல் இருந்தவனின் விரல்கள் ஆங்காங்கே அசைய அதை கண்டவருக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

மெதுவாக வசீகரனின் அருகே சென்றவர்,

"வசீகரன் ஜெயிச்சி வந்துட்ட போல.. இல்லை உன்னை ஜெயிக்க வச்சவ வந்துட்டா.. நீ அவளை உணர்ந்துட்ட இல்லை.. போதும் வசீ இந்த முறை கண்டிப்பா நீங்க தான் ஜெயிப்பீங்க.. கூடிய சீக்கிரமே உன்னோட ஹனி உன்கிட்ட வரப்போறா வசீகரன்.. எல்லாமே மாறும் வசீகரன்.. சீக்கரமே மாறும்.." என்றபடி அவனின் தலையை மென்மையாய் வருடி விட்டவர் வேகமாய் வெளியே வந்தார்.

அங்கே ராபின் எதுவும் புரியாமல் அப்படியே நிற்க அவனிடம் வந்தவர்,

"ராபின் வசீகரன் கண்ணை முழிச்சிட்டாரு.. எல்லாமே சீக்கிரமே சரி ஆகப் போகுது ராபின்.. மேடம் வந்துட்டாங்க.." என்றவர் சந்தோஷமாய் அவனை அணைத்துக் கொண்டார்.

ஆனால் அவர் சொன்ன எதுவுமே அவனுக்கு புரியவில்லை என்றாலும் வசீகரனை மீட்டு கொண்டு வருபவள் வந்துவிட்டாள் என்ற செய்தியே ஆடவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.. தானும் புருஷோத்தமனை சந்தோஷமாய் அணைத்துக் கொண்டான்.

அந்த பங்களா முழுவதும் இருட்டில் மூழ்கியிருக்க அந்த அறை மட்டும் வெளிச்சம் தெரிந்தது.. அங்கே ஒரு உருவம் ஒரு கையில் சிகரெட்டை ஊதியபடி மற்றொரு கையில் மது டம்ளருடன் எதிரே இருந்த சுவற்றின் மேல் பார்வையை பதித்திருந்தான்.

அங்கே அழகு ஓவியமாய் மென்மையான புன்னகையுடன் மென்பட்டுடுத்தி சிலையாய் நின்றிருந்தாள்.

"இந்த சிரிப்பை சிதைக்க தாண்டி நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன்.. அதையும் வெற்றிகரமா செஞ்சிட்டேன்.. ஆனாலும் முழுசா என்னால அழிக்க முடியலையே.. அதிலேயே எனக்கு நிம்மதி கிடைக்கலையே.. இன்னும் உன்னை அழ வச்சி பாக்கனும் டி.. அவன் முழுசா உன்னோட கைக்கு கிடைக்க கூடாது..இல்லை இல்லை நீ அவனோட கைக்கு முழுசா கிடைக்க கூடாது டி.. அடியே நன்விழி உன் சொத்து புடுங்கி உன்னை நடுத்தெருவுல நிறுத்துன மாறி இன்னும் உன்னை கலங்கடிப்பேன் டி.. ஆனா அவன் தடையா நிக்குறானே.. அவனை என்னால நெருங்கவே முடியலையே.. உன்கிட்டேயும் நெருங்க விடமாட்டறானே.. உன்னோட விழி எப்படி மயக்குதோ அதே போல நீயும் அவன்கிட்ட மயங்கி போய் கிடக்கறவ தானே.. அவனும் உன்னோட அடிமையா தானே இருக்கான்.. எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்க கூடாது டி.. சீக்கிரமே வரேன் உன் முன்னாடி வந்து நிற்பேன் டி உனக்கு எமனா..." என்று கர்ஜித்து கொண்டிருந்தான் அரக்கனவன்.

அவன் யுகேந்திரன்.. ஒரு பெண்ணால் இப்பூமிக்கு வந்தவன் பெண்ணை வெறும் போகப்பொருளாய் மட்டும் பார்ப்பவன்.. பணம் தந்த போதையும் மது , மாது தந்த போதையும் மட்டும் வாழ்க்கையை வாழ போதுமானது என்று நினைப்பவன் நன்விழியை மட்டும் அழிக்க நினைப்பவன் என்று சொல்வதை விட அவளின் கண்ணீரில் குளிர் காய்பவன் இவன்.. நன்விழியை மட்டுமல்ல அவளுக்கு பாதுகாவலாய் இருப்பவனையும் அழிக்க கங்கனம் கட்டி கொண்டு அழைகிறான்.


இவனின் இத்தனை கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் காரணத்தை கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம் மக்களே.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க மக்களே.
 
Top