எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 03

admin

Administrator
Staff member

அத்தியாயம் 3​

சூரியனின் உதயம் ஆரம்பிக்கும் முன்பே மாதேஷிற்கு பிடித்த அனைத்து வகை உணவுகளும் தயாராகி இருந்தது அவர்களது வீட்டில். ஆம் அவர் இறந்து இன்றோடு பதினாறு நாட்களாகிறது. பதினாறாம் நாள் சாமி கும்பிட மாதேஷின் சொந்த ஊரான வட்டக்காட்டிற்கு வந்திருந்தனர் மாதேஷின் குடும்பமும், ஆதியின் குடும்பமும்.​

தலைவாழை இலையில் மாதேசிற்கு பிடித்த உணவு வகைகள் அடுக்கப்பட்டிருக்க, அதில் அவருக்கு பிடிக்கும் பக்குவத்தில் சாப்பாட்டை உருண்டை பிடித்து கூரையின் மேல் போட்டு, அருகில் நின்ற மகளிடம் தண்ணீரை வாங்கி கூரைமேல் தெளித்து விட்டார் மாதேஸின் மனைவி கங்கா. கங்காவை தொடர்ந்து அவரது மகளும் கூரை மீது சாப்பாட்டை போட்டுவிட்டு நிமிர்ந்தாள்.​

அக்கணம் "ஆயா,உன் புருஷனையும் கூப்பிட்டு கூரை மேல சாப்பாடு போட சொல்லாயா..." பெரிய கிழவியின் குரலில் கையில் வைத்திருந்த சொம்பைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசலில் நின்றிருந்த ஆதியையும், ராஜியையும் பார்த்தாள்.​

அவளது பார்வைப் புரிந்தது போல​

"வீட்டுக்கு பின்னாடி போனான் மா..." என்றார் ராஜி.​

சரியென்று தலையாட்டிவிட்டு​

வீட்டிற்கு பின் சென்றாள். அங்கு வேப்பமரத்தின் நிழலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டலில்​

இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான் அகரன்.​

அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிய தினத்தில் அகரனைப் பார்த்தது மீண்டும் இன்று தான் காண்கிறாள். நேராக அவன் முன் சென்று நின்றாள். வந்தது யாரென்று தெரியும் என்பதாலோ என்னவோ அசையாமல் அமர்ந்திருந்தான்.​

நீண்ட நெடிய பெருமூச்சுடன் "கூரைக்கு சாப்பாடு போடணும் வாங்க..." எனக் கூறிவிட்டு அவனது பதிலைத் கூடக் கேட்காது திரும்பியவள் என்ன நினைத்தாளோ மீண்டும் அவனது அருகில் சென்று நின்றாள். அவனிடம் பேச வேண்டுமென்ற எண்ணம் துளியுமில்லை என்றாலும் அன்று அவன் செய்த உதவி மிகப்பெரியது அல்லவா...​

கண்களை இறுக மூடித் திறந்தவள்​

"ரொ..ம்ப... ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் அகரன். நீங்க மட்டும் அன்னைக்கு..." அடுத்து அவள் பேசும் முன் சட்டென நிமிர்ந்து​

"வாயை மூடிட்டு போயிடு... ஏதாவது பேசிட போறேன்..." அழுத்தமான குரலில் கூறினான். அவனது பேச்சில் திட்டுக்கிட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அகரனை நிதானமாக பார்த்தாள்.​

தனது பேச்சிற்கு குறைந்த பட்சம் அதிர்ச்சியாவது அடைவாள் என்று நினைத்தான் ஆனால் அவளோ துளிக் கூட அதிர்ச்சியாகாது தன்னை என்ன என்பதை போல் பார்த்த​

பாவனை இவனை எரிச்சலுட்டியது.​

அதை அப்படியே குரலில் காட்டியப்படி "கொஞ்சமாச்சும் என்னை யோசிச்சு பார்த்தியா நீ? எத்தனை கனவோட இருந்தேன் தெரியுமா? அதை மொத்தமா நீயும், உன் அப்பனும் குழி தோண்டி புதைச்சுட்டு தேங்க்ஸாம் தேங்க்ஸ். தெரியாம தான் கேட்கிறேன் உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்து இருக்கியா? மனுசன் காலையில எழுந்ததும் மங்களகரமான பொண்ணு முகத்துல முழிக்க நினைப்பானா? இல்லை உன்ன மாதிரி ஒரு குட்டி சாத்தன் மூஞ்சில முழிக்க நினைப்பானா?..." எனக் கேட்டவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி​

"ஆளையும் மூஞ்சியையும் பாரு, உனக்கெல்லாம் கல்யாணம் ஒன்னு தான் கேடு, உன் மூஞ்சியை பார்க்கவே ஏதோ போல இருக்கு. தயவு செஞ்சு இங்கிருந்து போ..." அத்தனை அருவருப்பாக கூறினான்.​

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்​

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...​

என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு கொண்டு வந்தவள் தன் கைகளை இறுக மூடி பெருவிரலால் நிலத்தை அழுந்த ஊன்றி கொண்டு, கண்களை இறுக மூடி திறந்து அதில் ஓர் அலட்சிய பாவத்தை கொண்டு வந்து அவனைப் பார்த்தாள். அந்த​

பார்வையே 'இப்படியான பேச்சை உன்னிடம் எப்போதோ எதிர்பார்த்தேன்...' என்று கூறியது.​

அவளது பார்வை கூறிய செய்தி சரியாக புரிந்தது அகரனுக்கு. அவளது இந்த நிமிர்வு இவனுக்கு திமிராக தெரிந்தது 'மூஞ்சி இந்த லட்சணத்தில இருக்கும் போதே இத்தனை திமிரு இவளுக்கு, இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா அவ்ளோதான்...' என நினைத்தப்படி மீண்டும் அவளை மேலிருந்து கீழாக கண்களால் அளந்தான்.​

சாதாரண உயரத்தை விட சற்றே குறைந்த உயரம், ஒல்லியும் இல்லாது குண்டாகவும் இல்லாது சாதாரண உடல்வாகு, கொம்புத்தேனீன் நிறம், இடை தாண்டிய கேசம் அதற்கு மேல் அவளைப் பார்க்கத் துளியும் விருப்பமில்லை அவனுக்கு.​

மறுபக்கம் திரும்பி கொண்டான்.​

இப்போது வரை தனக்கு நடந்த திருமணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை அவனால். எத்தனை எத்தனை திருமண கனவுகள். தனக்கு வரப் போகிறவள் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஒரு பட்டியலே வைத்திருந்தான். ஆனால் அவனுக்கு வாய்த்த மனைவி இவனது ஆசைக்கு அப்படியே எதிரானவள்.​

"ப்ச்ச்...' என்று கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனின் மனமும், மதியும் இவனை பார்த்து கேலியாக சிரிப்பது போல் தோன்றியது.​

அன்றும் அப்படி தான் தன் ஆசை நிராசையாகி விட்டதை நினைத்து ஒரு மனம் கலங்கியது. அதே சமயம் இவனது அகரன் என்ற அகம்பாவி விழித்து கொண்டான் 'தீ கிரேட் அகரன் ஆதியத்தினுக்கு இப்படியொரு மனைவியா...' என்று ஒரு பக்கம் குதித்தது.​

மனதின் குமுறலை அடக்க எழவு விழுந்த வீடென்றும் பாராது முக்கியமான வேலை இருக்கிறது என கூறிவிட்டு ஊட்டி கிளம்பி விட்டான். இதோ இன்று தான் ஊட்டியிலிருந்து ஈரோடு வந்தான், வந்தவனை நேராக வட்டக்காடு வரக் கூறிவிட்டார் அவனின் தந்தை ஆதி. அவரின் பேச்சை மறுக்க முடியாமல், மறுக்க தோன்றாமல் இங்கே வந்துவிட்டான்.​

இங்கு வந்த நிமிடத்திலிருந்து ஏண்டா வந்தோமென்று ஆயிரம் முறையாவது நினைத்திருப்பான். ஆம் அப்படி தான் நடந்து கொண்டனர். ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல் அகரனை பார்த்துவிட்டு சென்றனர் அந்த ஊர்க்காரார்கள்.​

அதிலும்"நம்ம மாதேஷ் மருமவனா, எலிசப்பட்டு (எலிசபெத்) ராசவாட்ட இருக்காரு, பார்க்க​

வாட்ட சாட்டாம நல்லா தான் இருக்காரு. இரண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்லாவே இருக்கு..." என சிலர் சிலாகித்து சென்றனர் என்றால்​

ஒரு சிலர் "கட்டிக்கற முறையில இத்தனை பேர் இருக்க, யாருமில்லாத மாதிரி யாரோ ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டீங்க. சரி பையன் நல்லா இருந்தா கூட பரவாயில்லை, அவனுக்கு மூஞ்சியே சரியில்ல உர்ன்னு இருக்கான். நம்ம புள்ளைக்கு இருக்கிறதுக்கு இந்த பையன் சுமாரு தான்..." வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர்.​

அவர்கள் பேச பேச பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தான் அகரன். அவள் பெரிய ரதிதேவி போலவும், இவன் ஏதோ சுமார் மூஞ்சி குமார் போலவும் பேசியது கோபத்தை கொடுத்தது என்றால் அவளை மணக்கவில்லையென்று கவலைப்பட்டது பத்திக் கொண்டு வந்தது இவனுக்கு.​

இன்னும் சிறிது நேரமிருந்தால் நிச்சியம் ஏதாவது பேசி விடுவோம் என நினைத்தவன் அன்னையிடம் தலையாட்டிவிட்டு வீட்டுக்கு பின்னால் போடப் பட்டிருந்த கயிற்று கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் வந்தமர்ந்த இருபதாவது நிமிடத்தில் அவன் மனைவி என்பவள் வந்து நின்றாள்.​

இப்போது எது பேசினாலும் சரியாக இருக்காது என்ற எண்ணத்தில் தான் அமைதியாக அமர்ந்திருந்தான். ஆனால் அவளோ அன்றைய நிகழ்வை மீண்டும் பேசி எரிந்து கொண்டிருப்பதில் மேலும் எண்ணெய் ஊற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்க, கடுப்பில் நன்றாகவே கத்திவிட்டு அவளது முகத்தை பார்க்காது திரும்பி நின்று கொண்டான்.​

அக்கணம் 'அவளைப் பத்தி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு அகா, உனக்கு பிடிக்காலன்னா விலகி இருக்க வேண்டியது தானே, ரொம்ப தப்பா பேசிட்ட, நீ பேசனது ரொம்ப தப்பு...' என்றது அவனது வெள்ளை மனம்.​

' என்ன தப்பு, சொன்னது எல்லாமே உண்மை தானே, தப்பா சொல்லலையே. அவட்ட இருக்கிறத தானே சொன்னேன். என் கால் தூசிக்கு சமமாவாளா அவ.." அகங்காரமாய் கத்தியது அவனது கருப்பு மனம்.​

' இத்தனை அகங்காரம் இருக்கிறது நல்லது இல்லை அகா..." வெள்ளை மனம் எச்சரிக்கை விடுத்தது.​

"அகரன்னாவே அகங்காரம் தான்..." உள்ளிருந்து குரல் கொடுத்தான் அகம்பாவி அகரன்.​

"தப்பு, இப்படியான எண்ணமே தப்பு, ஒரு நாள் இதை நீ உணரும் போது கண்டிப்பா வார்த்தை வாராது கண்ணீர் தான் வரும்..." எனக் கூறிவிட்டு மறந்தது வெள்ளை மனம்.​

"இந்த அகரன் ஆதித்யனுக்கு கண்ணீரா ஹாஹா..." கர்வமாய் கூறியது உள்ளிருக்கும் அகம்பாவி.​

இரு மனங்களின் போராட்டத்தில் கடைசியில் அகம் பிடித்த அகம்பாவியே ஜெய்த்தது அதன் விளைவு தன் முன் நிமிர்வோடு நிற்கும் பெண்ணை வார்த்தையால் குத்தி குதறி, அவளது சிரிப்பை சிதைக்க நினைத்தான். சட்டென பின்னால் திரும்பி அப்பெண்ணை பார்த்தான். முன்பு எப்படி நின்றிருந்தாளோ அப்படியே தான் நின்றிருந்தாள்.​

முதலில் இந்த நிமிர்வை சிதைக்க வேண்டுமென நினைத்தான் போல​

"ஒன்னு கேள்விப்பட்டு இருக்கியா இந்த வாத்து இருக்குல்ல வாத்து அது தன்னைத் தானே மயிலுன்னு நினைச்சுட்டு இல்லாத தோகையை விரிச்சிட்டு ஆடுமாம். பாவம் அதுக்கு தெரியாது தன்னை எல்லாரும் ரசிக்கறதுக்காக பார்க்கல, சிரிக்கறதுக்காக பார்க்கறாங்கன்னு.. அதே மாதிரி நான் கெத்தா, திமிரா, நிமிர்வா இருக்கேன் என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஒரு பிச் தன்னை தானே ராணியா நினைச்சுட்டு இருக்கிறத பார்க்கும் போது சிரிப்பா இருக்கு... நாய் நாய்தான்.. ராணி ராணி தான்..." எதிரியை நிலைக்குழைய செய்யும் பேச்சும் அவனிடத்தில்.​

வல்லமை தாராயோ... பாரதியின் வரிகள் தந்தையின் குரலில் காதில் ஒலித்தது. அகரனை அடிக்க துடித்த கைகளை அடக்க இறுக மூடிக் கொண்டாள். மங்கையின் கரங்களில் பிறை நிலவாய் தன் தடத்தை பதித்தது அவளது கூர் நகங்கள்.​

அகரனை அசரடிக்கும் பார்வையில் "வெல் கதை நல்லா இருக்கு அண்ட் உங்களுக்கு நல்ல கற்பனைவளம் மிஸ்டர் அகரன்..." நல்ல என்பதில் அழுத்தத்தை கூட்டி கூறியவள் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.​

"டைம் ஆச்சு, போலாமா?..." எனக் கேட்டவளின் முகத்தில் தெரிந்த அதீத நிமிர்வு இவனது கர்வத்தை அசைத்து பார்த்தது.​

'நீ பார்த்த பெண்களைப் போல அல்ல இவள்..' என்று அந்த அகம்பாவிக்கு உரக்க கூறியது அவனது வெள்ளை மனம். அதற்கு பதில் கூறும் முன்பே அவனது கண்களில் விழுந்தார் ராஜி.​

அவரது இறுகிய முகமும், கலங்கிய கண்களுமே கூறியது நீ பேசியதை முழுவதுமாக கேட்டு விட்டேன் என்று...​

"ம்மா, நான்..." அடுத்து அவன் பேசும் முன்பே கைநீட்டி தடுத்தவர் அருகில் நின்ற மருமகளை பார்த்தார். அவரது கலங்கிய கண்கள் அவளிடம் மன்னிப்பை கேட்டு யாசித்தது.​

அவரைப் புன்சிரிப்போடு பார்த்தவள் கண்களை மூடி திறந்து ஒன்னுமில்லை என்பதை போல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர, மகனை அழுத்தமாக பார்த்துவிட்டு மருமகளுடன் நடந்தார் ராஜி.​

"க்சை..." நிலத்தில் காலை உதைத்தவனுக்கு நன்றாகவே புரிந்தது இனி தாயை பேச வைப்பது கடினம் என்று...​

அவனைப் பொறுத்தவரை வீடும், வேலையும் வேறு வேறு. அங்கு அகரன் காட்டும் முகங்களும் வேறு வேறு தான்.வீட்டில் சொல் பேச்சுக் கேட்கும் அப்பாவி என்றால் தொழிலில் அவன் பேச்சை மட்டுமே கேட்க வைக்கும் அகம்பாவி...​

மலரட்டும் சிறு புன்னகை...​

மூனு பேர்ல, இரண்டு பேர் மிஸ்ஸிங்...​

கௌசி உங்களது கமெண்ட்டிற்கு நன்றி, ஈஸ் அக்கா, இன்னொரு அக்கா இரண்டு பேருக்கும் ரொம்ப நன்றி.. நீங்க தான் என்னோட முதல் அத்தியாத்திற்கு ஊக்கம் கொடுத்தவர்கள்..​

தொடர்ந்து கமெண்ட் அண்ட் பூஸ்ட் தர ரீடர்ஸ்க்கு என் தரப்பில் சர்ப்ரைஸ் இருக்கு😁😁😁

 

Priyakutty

Active member
இவ்ளோ நடக்கும்போதும் அவங்க நிமிர்வு spr🤩

அகரா ஓவரா பேசுற... 😡😡

அவங்கள கேவலப்படுத்த உனக்கு உரிமை இல்ல. புடிக்கல கட்டிக்க மாட்டேன்னு ஹாஸ்பிடல் அஹ் சொல்ல வேண்டியது... 🙄

ஒரு நாள் இதுக்குலாம் அனுபவிப்பாரு
 
நானும் நன்றி!!!... இவன் வாய்க்கு இவனை கதற கதற வச்சு செய்யனும்!!!
இப்போதைக்கு வேர்ட் கவுண்ட்க்குகு கொஞ்சமா தான் செய்ய முடிந்தது . போட்டி முடிஞ்சதும்😁😁😁 வெச்சு செய்யவே இன்னும் நாலு அத்தியாயம் எழுதிடலாம்
 
இவ்ளோ நடக்கும்போதும் அவங்க நிமிர்வு spr🤩

அகரா ஓவரா பேசுற... 😡😡

அவங்கள கேவலப்படுத்த உனக்கு உரிமை இல்ல. புடிக்கல கட்டிக்க மாட்டேன்னு ஹாஸ்பிடல் அஹ் சொல்ல வேண்டியது... 🙄

ஒரு நாள் இதுக்குலாம் அனுபவிப்பாரு
Aww 🤩🤩

இருக்கிறது தானே சொல்றோம்🫣🫣🫣 நீங்க அவனோட பார்வையில இருந்து பாருங்க டோலி
 
Top