எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-19

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-19

கொடைக்கானலுக்கு வந்து இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று,
தானாகக் கை வேலை செய்தாலும், இனியின் மனமோ அன்று நடந்ததையே நினைத்து அலைப்புற்றது.

ரோஹித்தின் வீட்டில், அவன் ஒரு ஆணோடும் பெண்ணோடும் நெருக்கமாக இருந்தை கண்டவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விட, அவனிடமிருந்து தன் வாழ்க்கையை காப்பாற்றும் வழி தெரியாத கவலை தான் அதிகமாக இருந்தது.

இந்த நரகத்தில் தன்னை தள்ளிவிட நினைக்கும் தந்தையின் மீது அவ்வளவு வெறுப்பு உண்டானது. தன் மன்னவன் தனது அருகில் இருந்தால் அனைத்தையும் எளிதாகச் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது.

‘இதய் எங்க இருக்கீங்க?, ப்ளீஸ் என் முன்னாடி சீக்கிரம் வாங்க’ என்று நொடிக்கொரு முறை அவனை நினைத்து வாடினாள்.

கடைசி நாளான அன்று, கொடைக்கானலிலிருந்து சிறிது தொலைவில் உள்ள மலை கிராமம் ஒன்றிற்க்கு முகாமிட, இனியும் அவளின் குழுவினரும் சென்றிருந்தனர். அன்றோடு முகாம் பணி முடித்து, அடுத்தநாள் காலை வீடு திரும்பவதாகத் திட்டமிட்டிருந்தனர்.

காலை முதல் மாலைவரை ஓயாது பணி செய்தவர்கள், பின்மாலை பொழுதுகளில் அங்காங்கே உள்ள இயற்கை அழகினை சுற்றிப் பார்ப்பதற்காகச் சிறு சிறு குழுவாகப் பிரிந்து சென்றனர்.

பனிச் சூழ்ந்த அந்த அழகிய மலை முகடுகளைப் பார்க்கையில் இனியின் மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது.

ஏனோ ஓயாது இதய்யை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள், கால்போன போக்கில் நடக்கலானாள். அப்படியே ஒரு அடர்ந்த மரத்தின் ஓரமாக நடந்தவள், யாரும் எதிர்பாரா வண்ணம் கால் இடறி கீழே இருந்த பெரும் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தாள்.

உடனிருந்த அனைவரும் பதறிப் போய், என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். இனியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தேட, எந்த முயற்சியும் கைக்கூடவில்லை. இரண்டு தினங்களுக்குப் பிறகு, உள்ளுர்வாசிகள் சிலரைக் கொண்டுத் தேடினர்.

முழுதாக நான்கு நாட்களுக்குப் பிறகே இனியை மீட்க முடிந்தது. கீழே விழுந்தவள் அதிர்ஷ்டவசமாக இரு மரங்களுக்கு இடையே சிக்கியதால் உயிருடன் மீட்கப்பட்டாள், ஆனாலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது.

தலையில் பலமாக அடிப்பட்டிருந்ததால் சுயநினைவின்றி கோமா நிலைக்குச் சென்றிருந்தாள் இனி. ஒரு வாரம் மேற்கொண்ட எந்தச் சிகிச்சையும் பலனளிக்காததால், சென்னையில் உள்ள ஒரு உயர்தர மருத்துவமனைக்கு அவளை இடமாற்றினர்.

அங்குப்போயும் அதே நிலை நீடிக்க, புறக்காயங்கள் ஆறத் துவங்கினாலும், அகம் அப்படியே தான் இருந்தது.

ரத்தினவேலுவும் மேகலாவும் துடிதுடித்துப் போயினர். தான் பிடிவாதமாக மறுத்து, அவளைச் செல்லாமல் தடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து வருத்தினார் ரத்தினம்.

தற்காலிகமாக அவள் நினைவுகள் இல்லாமல் இருந்தாலும், அவளின் ஆழ்மனம் முழுவதும் இதய்யின் வசமே இருந்தது. நினைவுகளின்றி ஒரு உயிர் இங்குப் போராடிக் கொண்டிருக்க, அவளின் உயிருக்குயிரானனோ அங்கு அனுதினமும் பித்தனைப் போலச் சித்தம் மறந்து சித்ரவதைக்குள்ளாகி கொண்டிருந்தான்.

ஆம்! இனியை அன்று இக்கட்டிலிருந்து மீட்டவனுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்தது. ஆனால் அதுவே அவனைப் பெரும் சிக்கலில் தள்ளும் என்பதை அப்போது அவனே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று மருத்துவமனையில் இனியிடம் பேசாமல் தவிர்த்துவிட்டு வந்ததை எண்ணி வருந்தியவன், அடுத்த நாள் இனியை சந்தித்து, அவள்மீது தான் கொண்ட காதலில் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்.

அதற்குள் அவனுக்கு ஒரு முக்கியமான பணி ஒதுக்கப்படவே உடனே டெல்லி விரைந்தான்.

அது ரகசிய பணியாதலால், வெளியில் யாருக்கும் எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டமென்று கமிஷினர் ரவி பிரசாத் அறிவுறுதியிருக்க, அதன்படி தன் அலைப்பேசி மற்றும் சில முக்கிய ஆவணங்களைத் துறந்து, எந்தவொரு அடையாளமுமின்றி டெல்லி நோக்கிப் பயணமானான் இதய்.

“வாங்க மிஸ்டர் இதயசந்திரவர்மன்!. உங்கள பத்தி நிறைய கேள்விபட்டுருக்கேன், இந்தக் கேஸ எப்படிடா ஹேண்டில் பண்ண போறேன்னு நினைச்சி மண்ட காய்ஞ்சப்ப தான், நீங்கத் தமிழ்நாட்டுல அந்த ஹாஸ்பிட்டல்ல நடந்த டெத்த, இருபத்திநாலு மணி நேரத்துல கண்டுப்பிடிச்சத பார்த்து நான் ரொம்ப இம்பிரஸ் ஆகிட்டேன். சோ, இந்தக் கேஸ நீங்க ஈசியா முடிச்சிருவீங்கன்னு நம்பி தான் உங்களை வரச் சொன்னேன்”
என்றார் அஜய் சிங்.

அஜய் சிங், மத்திய சுகாதார துறை அமைச்சரின் காரியதரசி. அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நபரும் கூட. அவர் தன்னை என்ன காரணத்திற்காக அழைத்தாரெனப் புரியாமல் இருந்தவன், நேரடியாக அவரிடமே கேட்டான்.

“சார்! என்ன விஷயம்னு சொன்னா, உடனே என் வேலைய ஆரம்பிச்சிடுவேன்” என்றான்.

“யா மிஸ்டர் சந்திரன், சொல்லுறேன் பட் திஸ் இஸ் ஹைலி கான்பிடன்ஷியல், அதனால தான் உங்கள யார்கிட்டயும் எதுவும் சொல்லாம வரச் சொன்னேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“கொஞ்ச நாள் முன்னாடி போதைப் பொருள் கடத்தியதாகச் சில ஆட்களை, நேவி ஆபிசர்ஸ் அரெஸ்ட் பண்ணாங்க, அதைத் தொடர்ந்து நடந்த ரைடுல, ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘கோகைன்’ எனப்பட்டும் போதைப் பொருள் கைப்பற்றபட்டது.

இந்தப் போதை பொருட்கள் எல்லாம் இங்க நடமாட காரணம், உத்ரஜ் காஷீப் என்கிற போதை பொருள் கடத்தல் குழுத் தலைவன் தான்.

எவ்வளவோ தனிப்படை அமைத்தும் அவனை நெருங்க முடியல, இங்கிருந்து தப்பிச்சு வெளிநாடு போயிட்டான்.

இந்த நிலையில, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை, சில காவலதிகாரிகள் உதவியோட திரும்பக் கைப்பற்ற நினைச்சான் உத்ரஜ். ஆனா உளவுத்துறை மூலமா அந்த விஷயம் தெரிஞ்சு அவங்க முயற்சி முறியடிக்கப்பட்டது.

அவனோட தம்பி ரஜத் காஷிப் என்பவனை கைதும் பண்ணியாச்சு.

தன் தம்பிய மீட்க உத்ரஜ் எவ்வளவோ முயற்சி செஞ்சும், நம்ம சுகாதார துறை அமைச்சர் அனைத்தையும் தடுத்து நிறுத்த, அந்தக் கோபத்தில் அமைச்சரோட பொண்ண அவனோட ஆளுங்க கடத்திட்டாங்க.

எலக்ஷன் டைம் வேற, விஷயம் வெளியில் தெரிஞ்சா எதிர்கட்சிகாரவங்க பிரச்சனை பண்ணுவாங்கன்னு, ரகசியமா ஹேண்டில் பண்ணி பார்த்தோம் ஒரு முடிவும் கிடைக்கல.

அதனால தான் உங்கள வரச் சொன்னேன். நீங்கத் தான் எந்தப் பாதிப்பும் ஆகாம பொண்ண மீட்கனும். அமைச்சர் நினைச்சிருந்தா போதை பொருட்களைத் திருப்பிக் கொடுத்துப் பொண்ண காப்பாத்தியிருக்கலாம் ஆனா அவரு நேர்மையான ஆளு கண்டிப்பா அப்படி பண்ணமாட்டாம தான், பொண்ண காப்பாத்தி கொடுக்க உங்கள கூப்பிட்டிருக்காங்க, நீங்கத் தான் சீக்கிரமா எங்க பொண்ண தேடிக் கண்டுப்பிடிச்சி காப்பாத்தனும்” என்றிட, அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலானான் இதய்.

இதய்யுடன் சேர்த்து ஐந்து சிறப்பு காவல் அதிகாரிகளை இந்த மீட்பு பணிக்காக ரகசியமாக நியமித்திருந்தனர்.

சூரஜ், ஆரோன், ஜேம்ஸ், விக்கி, இதயசந்திரன் இந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு வாரக் காலமாகக் கலந்து ஆலோசித்து, தேவையான தகவல்களைத் திரட்டியதன் விளைவாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ‘ஜெய் சல்மர்’ நகரில், பயன்பாடற்று கிடந்த ஒரு பழைய கோட்டையில் அப்பெண்னை அடைத்து வைத்திருப்பதாகத் தகவல்கள் வந்தது.

அன்றிரவே மீட்பு பணிக்காக அந்த ஐவரும் ஆயத்தமாயினர். கிளம்பும்முன், அவர்கள் ஐவரிடமும் வந்த அஜய் சிங், “டியர் ஆபிசர்ஸ், உங்க மேல நம்பிக்கை வச்சு இந்த வேலைய ஒப்படைச்சிருக்கேன், நம்பிக்கைய காப்பாத்துவீங்கன்னு என் மனசு சொல்லுது. இந்த மிஷன் ரொம்ப ரகசியமானது அதனால இதை நீங்கக் கவனமா கையாளனும், தப்பித் தவறி இதுல யாருக்காவது எதாவது ஆச்சின்னா, என்னால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது” என்றவரின் வார்த்தைகளில் ஒருவருக்கொருவர் தங்களை பார்த்துக் கொண்டாலும், தங்களின் கடமையிலிருந்து பின்வாங்கவில்லை.

அந்த மையிருட்டு வேளையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐவரும் கோட்டையின் பின்வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.

எங்கும் இருள் சூழ்ந்திருக்க, ஐவரும் ஆளக்கொரு திசையில் சென்றனர்.

கையில் வைத்திருந்த சிறிய டார்ச்சின் உதவியோடு ஒவ்வொரு இடமாகச் சோதனை செய்த போதும் எங்கும் அப்பெண்ணை காணவில்லை.

கடத்தக்காரர்களின் நடமாட்டத்தை மீறித் தேடுவது அத்தனை எளிதாக இல்லை. இருப்பினும் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

ஜெய்சல்மரில் உள்ள கோட்டைகளைப் பற்றி நிறைய புத்தகங்களைச் சந்திரன் படித்திருந்தான். ஆதலால் அதன் வடிவமைப்பு அவனுக்கு அத்துப்படி. மேலும் அதைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை கூட நிறைய எழுதியிருக்கிறான், அதனாலேயே அஜய் சிங் அவனை இந்த மீட்பு பணிக்குழுவில் இணைக்க ஒரு காரணமாக அமைந்தது.

கோட்டையின் கிழக்கில் பாதாள அறை இருக்கும் என்பதை யூகித்தவன், அந்தத் திசையில் சென்றான். அவன் யூகம் சரி எனும் வகையில் தரையில் ஒரு கல் சற்று நகர்ந்திருந்தது.

அதைத் திறக்கையில் உள்ளே படிகள் இருந்தன, அதில் இறங்கியவனுக்கு முனகல் சப்தம் ஒன்று கேட்க, அங்குப் பார்த்தபோது அரை மயக்க நிலையில் இளம் பெண்ணொருத்தி தரையில் கிடந்தாள். அமைச்சரின் மகள் அவள்தான் என்பதை சரிபார்த்துக் கொண்டவன், அவளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மேலே வந்தான். தங்களின் ரகசிய சமிக்ஞையை அவன் எழுப்ப, விக்கியைத் தவிர மீதி மூவரும் அந்த ஒலி கேட்டு, அவ்விடம் வந்தனர்.

விக்கியைத் தேட எண்ணி, மற்ற மூவரிடமும் அப்பெண்ணை ஒப்படைத்த சந்திரன், அவர்களைக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டு, உடன் வந்தவனை தேடிச் சென்றான்.

அப்போது துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் ஒன்று கேட்க, அந்தத் திசை நோக்கிச் சென்றான் சந்திரன்.

மார்பில் குண்டடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்கியைத் தூக்க முயன்றபோது, சந்திரனை நோக்கி இருவர் சுட ஆரம்பித்தனர்.

லாவகமாக அவர்களை நோக்கித் திருப்பிச் சுட்டவன், அதில் ஒருவனை வீழ்த்தியிமிருந்தான்.

விக்கியைத் தோளில் போட்டுக் கொண்டு வேகமாகக் கோட்டையின் பின்புறம் சென்றவன், அங்கிருந்த பக்கவாட்டுச் சுவரில் ஏற முயற்சித்தபோது, ஏதோ ஒன்று அவனின் தலையைப் பலமாகத் தாக்க, விக்கியுடன் அப்படியே கீழே சரிந்திருந்தான் இதய்.
 
Last edited:

santhinagaraj

Well-known member
அச்சோ என்ன இப்படி பண்ணிட்டீங்க இதை இனி இரண்டு பேருக்குமே இப்படி ஒரு பிரச்சினையை வர வெச்சிட்டீங்க சீக்கிரமா ரெண்டு பேரயும் அதிலிருந்து மீட்டு சேர்த்து வைங்க
 

NNK-70

Moderator
அச்சோ என்ன இப்படி பண்ணிட்டீங்க இதை இனி இரண்டு பேருக்குமே இப்படி ஒரு பிரச்சினையை வர வெச்சிட்டீங்க சீக்கிரமா ரெண்டு பேரயும் அதிலிருந்து மீட்டு சேர்த்து வைங்க
எல்லாம் நன்மைக்கே🙏 சிஸ்
 
Top