எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-20

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-20

பெரும் சிரமத்திற்கு இடையே கண்களைத் திறக்க முயன்றவனுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டது. உடம்பெங்கும் ஊசியால் குத்தியதைப் போல ரணமாக இருந்தது சந்திரனுக்கு.

இதோ இன்றோடு அவனை அந்தக் கடத்தல்காரர்கள் சிறைப்பிடித்து வைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆயின.

அன்று விக்கியை விட்டுவிட்டுச் சென்றிருந்தால், சந்திரன் தப்பித்திருப்பான். ஆனால் அடிப்பட்டவனை சுமந்து கொண்டு சென்றதால் நூலிழையில் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டான். பலத்த காயம்பட்ட விக்கி இறந்திருந்தான்.

அமைச்சரின் மகளை வைத்துத் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற எண்ணியிருந்தவர்களுக்கு, அவள் காப்பாற்றப்பட்டது பெருத்த ஏமாற்றமாகிப் போக, அவர்களின் மொத்த கோபமும் சந்திரனின் மீது திரும்பியது.

அனுதினமும் அவனுக்குப் போதை ஊசிப் போட்டு நிதானத்தை இழக்க செய்திருந்தனர். போதை தரும் மயக்கத்திலிருந்து தன் சுயநினைவை இழந்திருந்தவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

விக்கியின் சடலத்தை ஊருக்கு மத்தியில் ஒரு பொது இடத்தில் கடத்தல்காரர்கள் போட்டுவிட, அதைக் கைப்பற்றிய காவல் துறையினரும் அந்த வழக்கை அப்படியே மூடி மறைத்துவிட்டனர். எதிர்கட்சிகள் மற்றும் ஊடகத்தினருக்கு பயந்து, எந்த உதவியும் செய்ய முடியாமல் அஜய்சிங்கும் அமைதியாகி போனார்.

இப்படியே நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகக் கடந்து சென்றன. போதையின் பிடியில் இருந்தவனின் உடலில் கணக்கில்லா காயங்களை ஏற்படுத்தி, தங்களின் வெறியைத் தீர்த்தனர் அந்தக் கொடூரர்கள்.

சிந்தை இழந்தாலும், கொண்ட காதலை அவன் இழக்கவில்லை. அவனின் ரத்தத்திலும் சித்தத்தில்லும் இதயனின் இனியே உறைந்துப் போயிருந்தாள். அன்று ஏனோ அவளைக் காணும் பேராவல் எழுந்தது அவனுக்கு. ‘இதய்’ என அவள் அழைக்கும் ஒற்றை அழைப்புக்காக ஏங்கி தவித்தான். நேரம் செல்லச் செல்ல, அந்த ஏக்கம் வெறியாக மாறியது.போதை மயக்கத்திலிருந்து, மிகுந்த கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்ய முயற்சித்தான்.

ஒரு வழியாகச் சற்றே நிதானத்திற்கு வந்தவன், தனக்கு போதை ஊசிப்போடுவதை தவிர்க்க எண்ணி, அதீத போதையில் இருந்ததுப் போல நடிக்கத் தொடங்கினான்.

“டேய் நேத்துப் போட்ட ஊசியில இருந்தே அவனுக்குப் போதை தெளியல, மறுபடியும் ஊசிப் போட்டு ஏன் மருந்த வேஸ்ட் பண்ணுற?, விடு கொஞ்சம் தெளிஞ்சோன போட்டுக்கலாம்” என்று ஒருவன் கூற, அன்று அவனுக்கு ஊசி செலுத்தப்படவில்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க நினைத்தான் சந்திரன். அதன்படி மெல்ல மெல்ல தியானம் செய்து தன் மனதினை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.

அதோ அன்று ஹோலி பண்டிகையை அங்கிருந்த அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், தனக்கு ஊசிப் போட வந்தவனை கத்தியில் குத்தி வீழ்த்தியிருந்தான் சந்திரன்.

அவனிடமிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி, மேலும் அங்கிருந்த இருவரை சுட்டு வீழ்த்தியிருந்தான்.

‘பாங்’கினையும் மதுவையும் ஒரு சேர அருந்தி, அனைவரும் போதையில் திளைத்திருந்த அவ்வேளையில் உடல் முழுவதிலும் காயங்களோடு, அங்கிருந்து தப்பித்தான் சந்திரன்.

உடம்பில் துளிக் கூடத் தெம்பில்லை. மருந்தின் தாக்கம் மற்றும் சரியான உணவு இல்லாததால் மெலிந்து போயிருந்தான் அவன். நடக்கக் கூடப் பெரும் சிரமமாக இருந்தது. ஆனாலும், தன் உயிரானவளைக் கண்களால் கண்டுவிடும் ஆவலில், தன்னுடனே போராடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான்.

வெகுதூரம் ஓடியும் நடந்தும் வந்தவனால், அதன் பின் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் விழுந்திருந்தான்.

இங்கே …

மூன்று மாதங்கள் கோமாவில் இருந்த இனியிற்கு, மெல்ல நினைவு திரும்பி, சிகிச்சை முடிந்து வீடு வந்துச் சேர்ந்து அன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்தது. பெருத்த போராட்டத்துக்கிடையே அவளை மீட்டிருந்தனர். ஓரளவுக்கு உடல் தேறியிருந்தாலும், உள்ளத்தின் காயம் அப்படியே தான் இருந்தது.

சதா இதய்யை பற்றிச் சிந்தித்திருந்தவளுக்கு, அவனைக் காணும் மார்க்கம் தான் தெரியவில்லை. ‘முப்பது நாட்களுக்கு அப்புறம் நீயே நினைச்சாலும் என்ன பார்க்க முடியாது’ என்று அவன் கூறிய வார்த்தைகளை எண்ணியவளோ, அவன் வேண்டுமென்றே தன்னை திரும்ப வந்துப் பார்க்காமல் இருப்பதாக, அவன்மேல் கோபம் கொண்டாள்.

ஏனோ வீடு திரும்பியதிலிருந்து, இனியிற்கு உடலும் மனமும் அவ்வளவு சோர்வாக இருந்தது. நடந்த விபத்தில் தாம் இறந்து போயிருக்கலாம் என்றுக்கூட தோன்றியது. நித்தம் நித்தம் வேதனையின் அளவு கூடிக்கொண்டே போனது.

அவளின் மனக்காயத்திற்கு மருந்திடும் விதமாக, ஸ்வேதா தாயகம் வந்து சேர்ந்திருந்தாள்.

அடுத்த நாளே தன் ஆருயிர் தோழியான இனியை காணவும் வந்திருந்தாள்.

எப்போதும் அழகாவும் பொலிவாகவும் இருக்கும் தன் உயிர் தோழி, இன்று தன் உயிர்ப்பை தொலைத்திருப்பதை கண்டுப் பதறியவள், “ஹே இனி! என்னடி இப்படி ஆகிட்ட?” என்றாள் ஸ்வேதா ஆற்றாமையாக.

அவளின் குரல் கேட்டவுடன், தாயை கண்ட மழலைப் போலத் தாவிச் சென்று ஸ்வேதாவை அணைத்திருந்தாள் இனி. அடக்கி வைத்திருந்த அழுகை அனைத்தும் பொங்கி வழிந்தது.

“ ஸ்வே… ஸ்வே” என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“இனி ரிலாக்ஸ்டி, ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற, ஆல்ரெடி நீ ரொம்ப வீக்கா இருக்க, இப்படி அழுதா, இன்னும் உடம்பு முடியாம போயிடும், ரிலாக்ஸ்” என்றாள் ஸ்வேதா தன் தோழியை அணைத்தவாரே.

ஸ்வேதா உடன்இருந்தது இனியிற்கு அவ்வளவு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் அதுவும் வெகுநேரம் நீடிக்கவில்லை.

அறை கதவு தட்டப்பட, ஸ்வேதா அதனைத் திறந்தாள்.

“இன்னும் இருபது நாள்ல கல்யாணம், இப்பதான் மாப்பிள்ளை தேதி சொன்னாரு, நாங்க எவ்வளவு சொல்லியும் அவரு கேட்கல, வெளிநாடு போகனும் உடனே கல்யாணத்த முடிங்கன்னு சொல்லிட்டாரு, அதனால நீ கொஞ்சம் உன்ன சரி பண்ணிகிட்டு ரெடியாகப் பாரு” என்றார் ரத்தினவேலு தன் மகளிடம் அறிவிப்பாக.

அவரின் இந்தக் கூற்றில் ஸ்வேதாவும் இனியும் அதிர்ந்து போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

தன் தந்தை வெளியேறியவுடன் மீண்டும் அழத் தொடங்கினாள் இனி.

ஏற்கனவே உடலாலும் மனதாலும் நலிந்து போனவளுக்கு, இது இன்னமும் வேதனையைத் தந்தது.

இனியின் திருமண ஏற்பாட்டையும் அதைத் தொடர்ந்து நடந்த விபத்தையும் மட்டுமே மேலோட்டமாக அறிந்திருந்தாள் ஸ்வேதா. வேலை சுமையினால் சிறிது காலம் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாததால் அங்கு நடந்ததை பற்றி ஸ்வேதா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“ எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் ஸ்வே, எனக்கு என்னோட இதய் தான் வேணும், ஐ நீட் ஹிம் பேட்லி, ப்ளீஸ் ஹெல்ப் மீ அவுட்” என்று அழுதவளைக் கண்டு கவலைக் கொண்டாள் ஸ்வேதா.

“இனி! இன்னும் நீ இதய்ய நினைச்சிட்டு இருக்கியா?” என்றாள்.

அதற்கு, ஆமாம் எனும் விதமாகத் தலையசைத்தவளோ, இதய்யுடனான அந்த முப்பது நாள் காதலையும், ரோஹித் உடனான திருமண ஏற்பாட்டையும்., ரோஹித்தின் குரூர புத்தியையும் ஒன்றுவிடாது கூறி முடித்தாள் இனி.

அனைத்தையும் கேட்டு முடித்த ஸ்வேதாவுக்கு, ரோஹித்துடனான தன் தோழியின் திருமணம், பெரும் நரகம் என்று நன்கு புரிந்தது. மேலும் இதய் ஒருவனால் மட்டுமே அவளுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தர முடியும் என்று தெள்ள தெளிவாகப் புரிந்தது.

ரோஹித்தை பற்றி என்ன கூறினாலும் ரத்தினம் அதனை நம்பமாட்டார் என்பதால், நடக்க போகும் திருமணத்தை எப்படி நிறுத்த, என்று யோசிக்கலானாள் ஸ்வேதா.

சரியாக அந்தச் சமயம், அழுது கொண்டிருந்த இனியிற்க்கு வயிறு பிரட்ட, வேகமாகக் குளியலறை நோக்கி ஓடியவள், வாந்தி எடுக்கத் துவங்கினாள்.

உடன் சென்ற ஸ்வேதா, அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு இனியின் முகத்தைத் தண்ணீரால் துடைத்துவிட்டு, கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.

“ஹே இனி! ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆச்சுனா இப்படி தான் உடம்பு வீணா போகும்” என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் குளியலறை நோக்கி ஓடினாள் இனி.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் ஏழெட்டு முறை வாந்தி எடுத்து விட்டு வந்து துவண்டு படுத்திருந்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் ஸ்வேதா.

தலை முதல் கால்வரை அவளைக் கூர்ந்து பார்த்தவளோ, ஏதோ ஒன்றை உணர்ந்தவளாக, சட்டென்று அவளின் நாடித்துடிப்பை சரிப் பார்த்தாள்.

இனியின் நாடியினை தொட்டவுடனே அதிர்ந்த ஸ்வேதா, தன் கைப்பையில் ஏதோ ஒன்றைத் தேடத துவங்கினாள். தோழியின் இந்தப் பதற்றம் ஏன் என அறியாமல், அதீத சோர்வில் படுத்திருந்தாள் இனி.

கையில் அவள் தேடிய பொருள் மட்டுப்பட, அதை எடுத்தவள் நேராக இனியிடம் சென்று, “இனி! ஒரு நிமிஷம் என் கூட வா” என்று அவளை எழுப்பிக் கொண்டு கழிவறை நோக்கிச் சென்றாள்.

எதற்கென்று புரியாத இனியும், சிரமப்பட்டு எழுந்து கழிவறை நோக்கிச் செல்ல, அவள் உள்ளே சென்றவுடன் தன் கையிலிருந்ததை அவளிடம் கொடுத்த ஸ்வேதா, அவளைப் பார்த்துக் கண்ணசைத்தாள்.

தோழியின் கண்ணசைவையும், தன் கையிலிருந்த பொருளையும் பார்த்தவளுக்கு உட்சபட்ச அதிர்ச்சியானது. முதலில் குழம்பியவளுக்கு, பின் மெல்ல மெல்ல ஏதோ ஒன்று புரிவது போல் இருந்தது.

உள்ளே சென்று, சிறித நேரம் கழித்து வெளியே வந்த இனி, தன் கையிலிருந்த பொருளை ஸ்வேதாவிடம் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாது அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தாள்.

தன் கையிலிருந்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதா, அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்றாள்.

ஸ்வேதாவின் கையிலிருந்தது, கர்ப்பத்தை உறுதி செய்யப் பயன்படுத்தும் ‘ப்ரெக்னென்சி கிட்’ எனப்படும், ஒருவகை சாதனமாகும்.

இரு கோடுகள் அதில் பளீரெனத் தெரிய, தன் வயிற்றில் தானே அறியாமல் இன்னொரு உயிரைச் சுமந்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.
 
Last edited:

santhinagaraj

Well-known member
எதே இனி கர்ப்பமா இருக்காளா? அதும் அவளுக்கே தெரியாம எப்டி ஒரு உயிர சுமந்துட்டு இருக்கா???🙄🙄

மூனு மாசம் கோமாவுல இருந்தவ எப்டி கர்ப்பம் ஆனா???

அந்த ரத்தினத்த ஹார்ட் அட்டாக் வரவச்சு போட்டு தள்ளிடுங்க
 

NNK-70

Moderator
போட்டுத் தள்ளிடலாம் தான் ஆனா அவரு இல்லாம இனி கல்யாணம் நடக்காதே. அதான் விட்டு வச்சிருக்கேன் சிஸ்.
எதே இனி கர்ப்பமா இருக்காளா? அதும் அவளுக்கே தெரியாம எப்டி ஒரு உயிர சுமந்துட்டு இருக்கா???🙄🙄

மூனு மாசம் கோமாவுல இருந்தவ எப்டி கர்ப்பம் ஆனா???

அந்த ரத்தினத்த ஹார்ட் அட்டாக் வரவச்சு போட்டு தள்ளிடுங்க
 

Advi

Well-known member
அட போங்க பா, இது எப்படி சாத்தியம்????

பாவம் இதய் 🤧🤧🤧🤧

இவளை பார்த்தா எனக்கு இரக்கமே வரல, அவன் உண்மை நேசத்தை எப்படி சந்தேக படறா?????

பண்றது எல்லாம் இவளும் இவ அப்பனும், ஆன பழி மட்டும் மேல
....

என்ன ரைட்டர் எங்க இதையை போட்டு இப்படி வதைக்கரிங்க😤😤😤😤😤😤
 

NNK-70

Moderator
அட போங்க பா, இது எப்படி சாத்தியம்????

பாவம் இதய் 🤧🤧🤧🤧

இவளை பார்த்தா எனக்கு இரக்கமே வரல, அவன் உண்மை நேசத்தை எப்படி சந்தேக படறா?????

பண்றது எல்லாம் இவளும் இவ அப்பனும், ஆன பழி மட்டும் மேல
....

என்ன ரைட்டர் எங்க இதையை போட்டு இப்படி வதைக்கரிங்க😤😤😤😤😤😤
சீக்கிரம் சரி பண்ணிடுவோம் சிஸ்...
 
Top