எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம் -21

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-21

இருவருக்குமே அது பேரதிர்ச்சியாகதான் இருந்தது. என்ன நடந்தது, எப்படி நடந்தது எனத் தெரியாமல், தன் நிலையை எண்ணி கதறி அழுது தீர்த்தாள் இனி.

தலையே வெடித்துவிடும் போல இருந்தது. அழுதழுது ஓய்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.ஸ்வேதாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் இனி. உறங்கும் அவளையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள் ஸ்வேதா. ‘பட்ட காலிலே படும்’ என்பதைப் போல, ஏற்கனவே தன் எதிர்காலத்தை எண்ணி கவலைக் கொண்டிருந்தவளுக்கு, இது இன்னும் பேரிடியாக அமைந்தது. அழும் திறனை முற்றிலுமாக இழந்திருந்தாள் இனி.

அடிப்பட்ட மழலைபோல் உறங்கும் இனியை கண்டு கலங்கினாள் ஸ்வேதா. சுயநினைவின்றி இருந்தவளுக்கு, இந்தக் கர்ப்பம் எப்படி சாத்தியமானது என்று யோசித்துப் பார்க்க, ஒன்றுமே புரியவில்லை.

கள்ளம் கபடம் ஏதுமறியாத தன் தோழிக்கு ஏன் இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறான் இறைவன், எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள் ஸ்வேதா.

அந்நேரம் கண்விழித்த இனி,
ஸ்வேதாவின் முகத்திலிருந்த தீவிர யோசனையைக் கண்டபடி,
“ஸ்வே … நா… எந்த… த …தப்பும் பண்ணல” எனத் திக்கித் திணறிக் கூறியவாரே, மீண்டும் அழத் துவங்கினாள்.

“ஹே வாய மூடுடி! என்ன பேசுற நீ, உன்ன பத்தி எனக்குத் தெரியாதாடி, என் யோசனையெல்லாம், இப்போ இது யாரோட வேலைன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, இந்தச் சிக்கல்ல இருந்து யாருக்கும் தெரியாம எப்படி தப்பிக்கிறதுங்கிறது தான். விஷயம் வெளியில் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும், இன்னும் இருபது நாள்ல கல்யாணம் வேற, அதுக்குள்ள எதாவது செய்யனும்” என்றுக் கூறியவாரே தன் தோழியின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள் ஸ்வேதா.

ஸ்வேதாவின் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்ட இனியிற்கு, சட்டென இதய்யின் முகம் மின்னி மறைந்தது.

“இ… இதய்… இதய்” என அரற்றத் தொடங்கினாள். தோழியின் இந்தத் திடீர் அரற்றலில் ஸ்வேதா பயந்தே போனாள்.

“இனி காம் டவுன்! எமோஷனல் ஆகாத, உனக்கும் பேபிக்கும் சேப் இல்ல, ப்ளீஸ்டி அமைதியா இரு” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றாள் ஸ்வேதா.

“ ஸ்வே… ஸ்வே… எனக்கு இதய் வேணும், அவன் வந்தா எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிடுவான். ஐ நீட் ஹிம் ரைட் நவ். இந்த நரகத்துல இருந்து என்ன காப்பாத்த அவனால மட்டும் தான் முடியும்.” என்று துடிப்பவளை, என்ன சொல்லிச் சமாளிக்க என்று அவளுக்கும் விளங்கவில்லை.

“இனி! இந்த ஒரு நிலைமைல, உன் இதய்யால என்ன செஞ்சிட முடியும்?. மிஞ்சி மிஞ்சிப் போனா இந்தக் கேவலமான விஷயத்தை யாரு பண்ணாங்கன்னு வேணா கண்டுப்பிடிக்கலாம், பட் அது தெரிஞ்சா மட்டும் உன் வாழ்க்கை சரியாகிடுமா என்ன. அவரு இதை எப்படி எடுத்துப்பாருன்னே தெரியலை. கொஞ்சமாவது நடக்கிறத யோசி.சொல்லப்போனா நீங்க ப்ராப்பர் லவ்வர்ஸ் கூடக் கிடையாது” என்றாள் ஸ்வேதா வெளிப்படையாக.

“மே பி நாங்க ப்ராப்பர் லவ்ர்ஸா இல்லாம இருக்கலாம், பட் எனக்கொரு கஷ்டம்னா அவன் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டான் ஸ்வே. நான் எப்படி இருந்தாலும் அவன் என்னை ஏத்துக்குவான் ஸ்வே” என்றாள் இனி உறுதியாக.

“ சொல்லப்போனா, எனக்கு வாழவே விருப்பம் இல்ல ஸ்வே, பட் நான் இப்ப செத்தாக் கூட எனக்கும் எங்கப்பாக்கும் கெட்ட பேருதான் வரும். அந்த அவமானத்த நான் அவருக்குக் கொடுக்க விரும்பல. அதுக்காக வயித்துல வளர்ற ஒன்னும் அறியாத பிஞ்ச என்னால எதுவும் செய்ய முடியாது. நடந்தது என் தலைவிதியா இருக்கலாம் ஆனா, இப்படியொரு சூழ்நிலையிலிருந்து என்னை மீட்க இதய்யால மட்டும் தான் முடியும்” என்றாள் இனி, கண்களில் வழிந்த விழிநீரை துடைத்தவாரே.

தற்கொலை, கருகலைப்பு என எதிர்மறையாகச் சிந்திக்காமல், தீர்வை நோக்கிச் சிந்திக்கும் தன் தோழியை நினைத்துச் சற்று ஆறுதலாக இருந்தது ஸ்வேதாவிற்கு.

தன் தோழியின் வாழ்க்கையை சரி செய்வது தன்னுடைய கடமை என்று நினைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினாள்.

இதய்யின் அலைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததால் அவனைப் பற்றி எப்படி தெரிந்து கொள்ள என எண்ணியவளுக்கு சட்டெனக் கதிரின் ஞாபகம் வந்தது. அனுவின் மூலம் கதிரின் அலைப்பேசி எண்ணை வாங்கியிருந்தாள் ஸ்வேதா.

‘ஒ காட்! போயும் போயும் அந்தப் போஸ்ட் மேனுக்கு தான் கால் பண்ணணுமா’ என்றுத் தயங்கியவள், பின் ஒருவாறு சமாளித்து, அவனுக்கு அழைக்கத் துவங்கினாள்.

முதல் முறை அழைப்பு ஏற்கப்படாததால், மீண்டும் மீண்டும் முயற்சித்தாள்.நான்காவது முறை அழைப்பை ஏற்றவனின் குரல் கடுமையாக இருந்தது.

“ஹலோ கதிர் ஸ்பீகிங்!” என்றவனின் கடுமையான குரலே அவனின் கோபத்தை சொல்லாமல் சொல்லியது.

தயங்கியவாரே அவனிடம் பேச ஆரம்பித்தாள் ஸ்வேதா.

“ ந… நா… நான் ஸ்வேதா பேசுறேன்”.

“எந்த ஸ்வேதா, யார் வேணும் உங்களுக்கு, ஃபோன எடுக்கலனா, ஏதோ வேளையில் இருப்பாங்கன்னு புரிஞ்சிகிட்டு வெயிட் பண்ணனும், அத விட்டுச் சும்மா சும்மா கால் பண்ணிட்டே இருக்கீங்க” என்றான் கதிர் காரமாக.

அவனின் இந்தப் பேச்சில், ஸ்வேதாவிற்கும் கோபம் ஏறியது.

“ஹலோ மிஸ்டர்! விடாம ஒருத்தவங்க கால் பண்ணா, எதாவது எமெர்ஜென்சின்னு புரிஞ்சிக்கனும். அத விட்டுட்டு இப்படி காட்டு கத்தல் கத்த கூடாது. நான் மிருணாளினி ஃபரெண்ட் ஸ்வேதா பேசுறேன்” என்றவளின் பேச்சில் சிறிது கடுப்பானலும், அவளின் குரலே ஏதோ அவசரம் என்பதை உணர்த்தியது.

“ சொல்லு என்ன விஷயம்” என்று அவளை ஒருமையில் அழைத்தான்.

அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், “இதய் பத்தி எதுவும் தெரியுமா, நாங்க ரொம்ப நாளா பேச ட்ரை பண்ணிட்டிருக்கோம், பட் கான்டாக்ட் பண்ண முடியல” என்றாள்.

“ எனக்கு எதுவும் தெரியாது” என்றான் அலட்சியமாக.

“ப்ளீஸ் சார்! ரொம்ப ரொம்ப அவசரம், இன்னும் இருபது நாள்ல இனிக்கு மேரேஜ் வச்சிருக்காங்க. நாங்க உடனே அவர்கிட்ட பேசியாகனும். ப்ளீஸ்! இனிக்கு உங்க ஹெல்ப் தேவை. எப்படியாவது அவர கான்டாக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க, அவர் இல்லனா இனி செத்துருவா” என்றாள் கெஞ்சும் குரலில்.

அவளின் குரலில் இருந்த அழுத்தத்தை உணர்ந்தவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “அவன் என் வீட்ல தான் இருக்கான், ஒரு அரை மணி கழிச்சு நானே அவன்கிட்ட பேசிட்டு கால் பண்ணுறேன்” என்றுவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.

இதய்யை பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும் என நினைத்திருந்தவளுக்கு, அவன் கதிருடன் இருப்பது அத்தனை நம்பிக்கையைத் தந்தது.

இனி இதய்யுடன் பேசினாலே போதும், எல்லா இன்னல்களும் தீரும் என்று நினைத்தவளுக்கு, அவனாலேயே மீண்டும் தன் தோழி துன்பப்பட போகிறாள் என்பது அப்போது தெரியவில்லை.

விஷயத்தை அவளிடம் கூற, இனியெல்லாம் சரியாகிவிடும் என்று நம்பத் தொடங்கினாள்.

சரியாக அரை மணி நேரத்தில் கதிரிடமிருந்து ஸ்வேதாவிற்கு அழைப்பு வந்தது.

ஆவலாக அலைப்பேசியை வாங்கிய இனி, அவனிடம் பேசத் துவங்கினாள்.

“இ… இதய்… எப்படி இருக்கீங்க இதய்?”

“ம்ம் பைன்” என்றான் மெல்லிய குரலில்.

ஏதேதோ பேச எண்ணியவள், வெகுநாட்களுக்கு பிறகு கேட்ட அவனது குரலில் கலங்கிப் போனாள்.

“ இதய்” எனப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தவள், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்து அவனின் பதிலுக்காகக் காத்துத்திருந்தாள்.

“....”

அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போக, “இதய் எதாவது சொல்லுங்க இதய். ப்ளீஸ் இப்படி அமைதியா இருக்காதீங்க” என்றாள் பொறுக்கமாட்டாமல்.

நீண்ட மௌனத்திற்கு பிறகு, தன் தொண்டையை செருமியபடி பேச ஆரம்பித்தான் இதயசந்திரன்.

“ கங்கிராட்ஸ் மிருணாளினி! உன் கல்யாணத்த பத்தி நான் பேச என்ன இருக்கு. உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு” என்றான் தெளிவான குரலில்.

அவ்வளவு நேரம் நம்பிக்கையாக இருந்த இனி, அவனின் பதிலில் மேலும் உடைந்து போனாள்.

“ இ… இதய். ந… நம்ம லவ்… நீ…. நீங்க என்ன…லவ்” என என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாறினாள் மிருணாளினி.

“என்னைக்காவது நீ என்ன லவ் பண்ணுறேன்னு சொல்லிருக்கிறா?” என்றான் இதய் கோவமாக.

கலங்கிய விழிகளுடன் “இல்லை” என்றாள் இனி.

“அப்புறம் எப்படி அது நம்ம லவ்வுன்னு செல்லுற?, நான்… நான் மட்டுமே தான் லவ் பண்ணுனேன், அதுவும் அப்போ. இப்ப அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல. லுக் ஹியர் இனி! அந்தத் தேர்ட்டி டேஸ் வெறும் டீல் தான், உண்மை கிடையாது. நான் தான் முன்னாடியே தெளிவா சொல்லிட்டேனே, அந்த டீல்க்கு அப்புறம் நமக்குள்ள எதுவும் கிடையாது. நான் உன்ன தேடி வரமாட்டேன், முப்பது நாளுக்குப் பிறகு நாம லவ்வரஸ் கிடையாதுன்னு. அப்புறம் எதுக்கு இந்த மாதிரி பேசுற, நமக்குள்ள எதுவும் இல்ல. உன் கூட இந்த ரிலேஷன்ஷிப்ப இப்படியே கன்டினியூ பண்ணுறதுல எனக்குச் சுத்தமா விருப்பமில்ல. சோ ஸ்டாப் ஸ்பீகிங் சில்லி! கோ அண்ட் கெட் ரெடி பார் யூவர் மேரேஜ்” என்றான் கடுமையான குரலில்.

பேசியது அவன்தானா என நம்ப மாட்டாமல் நின்றுக் கொண்டிருந்தாள் இனி.
மளமளவெனக் கண்ணீர் கொட்டியது.

ஸ்வேதாவுமே அதற்கு இணையான அதிர்ச்சியில் தான் இருந்தாள்.

எப்போதும் தன்னிடம் சக்கரையாய் இனிக்க பேசுபவன், இன்றுக் காட்டிய கடுமையில் துடித்துப் போனாள் இனி.

அவ்வளவு தானா அவன்? தன் மீது கொண்ட காதல் அவ்வளவுதானா? என்று கூடத் தோன்றியது. தான் ஒரு கருவைச் சுமப்பதினால் தன்னை ஏற்றுக் கொள்ள தயங்குகிறானென நினைத்தவளுக்கு இன்னும் இன்னும் அழுகை உடைப்பெடுத்தது.

தோழியின் இந்த நிலையைக் கண்ட ஸ்வேதாவிற்கு அளவுக்கதிகமாகக் கோபம் வந்தது.

“ ஹே இனி! அழுகாதடி. அவருக்கு உன் மேல இருந்தது வெறும் ஈர்ப்பு தான். நீ தான தப்பா புரிஞ்சிகிட்ட. விட்டுத்தள்ளு” என்று தன் தோளோடு அவளைச் சேர்த்து அணைத்திருந்தாள் ஸ்வேதா.

“ எ…எனக்கு நம்பிக்கை இருக்கு ஸ்வே, கண்டிப்பா இதய் எனக்காக வருவான், என்னோட எல்லா பிரச்சனையையும் தீர்ப்பான்” என்ற இனியின் வார்த்தைகளில் திகைத்துப் போன ஸ்வேதாவோ, “முட்டாள் மாதிரி பேசாதடி” என்றவள் தொடர்ந்து, “சரி, கடைசி சான்ஸ், உனக்காக நான் இதய்யை போய் மீட் பண்ணுறேன், பட் அவருக்கு நீ வேண்டாம்னா அதோடு அவர மறந்திட்டு நீ கல்யாணத்துக்கு ரெடி ஆகனும்” என்றாள் ஸ்வேதா.
என்ன சொல்வதென்று தெரியாமல், ‘சரி’ எனத் தலையாட்டினாள் இனி.
 
Last edited:

santhinagaraj

Well-known member
இதய்க்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இவன் திடீர்னு கோவமா பேசிட்டு இருக்கான்?

இனிய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம்
 

NNK-70

Moderator
இதய்க்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இவன் திடீர்னு கோவமா பேசிட்டு இருக்கான்?

இனிய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம்
அவனுக்கு அவள பிடிக்கல போல
 
Top