எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 05

admin

Administrator
Staff member

அத்தியாயம் 5​

மகரந்தம் தாங்கும் மலர்போலே​

தனி ஒரு வாசம் அவள்மேலே​

புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்​

தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்​

அவள் கடந்திடும்போது​

தலை அணிச்சையாய் திரும்பும்​

அவள் கடந்திடும்போது நிச்சயமாய்​

தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்​

என்ன சொல்ல என்ன சொல்ல​

இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே​

"என்ன ஜோதிகா பாட்டை ஓட விடறானுங்க..." முணுமுணுத்துக் கொண்டே எக்கி அந்த வரண்டாவை பார்த்தான். அவனது பார்வையை தொடர்ந்தது ஆடவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவனின் பார்வையும்.. முதலாமானவனின் பார்வை ரசனையாக விரிந்தது என்றால் மற்றவனின் பார்வை? நிச்சியமாக ரசனையாக விரியவில்லை.​

அப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப தான் பெண்ணவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளது புடவை மடிப்பு தொடங்கி மற்றவை அனைத்தும் பாடல் வரிகளுக்கு ஏற்ப இருந்ததா? இல்லை இவனுக்கு தான் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க கலையாக தெரிந்தாள் அப்பெண்.​

புடவையின் மடிப்பிலிருந்து வெட்கத்தோடு எட்டிப் பார்க்கும் கால் விரல்களில் தொடங்கி அவள் இதழ்களில் தேங்கி நிற்கும் சிறு புன்னகையில் நிலைத்தது முதலாமானவனின் பார்வை...​

அந்த புன்னகை மறவோனின் இதழ்களிலும் புன்னகையை கொடுக்க, தங்களை நோக்கி வருபவளைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான்.​

மறவோனின் அந்த பார்வையும், புன்னகையும் ஒரு ரசிகனின் ரசிப்பு மட்டுமே என்பது எதிரில் வந்து கொண்டிருந்தவளுக்கும் புரிந்ததோ என்னவோ அவனைப் பார்த்து புன்னகை மாறாது "வாங்க..." என்பது போல இமை மூடித் திறந்தவள் அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள்.​

"வாவ் கேர்ள்..." என்றான் அவன்.​

"பார்த்தது போதும், கொஞ்சம் வாயை மூடு..." அத்தனைக் கர்ஜனையாக வந்தது அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அகரனின் குரல்.​

"ஷ்... சாரி டா அண்ணா, நீ இருந்ததை துளியும் கவனிக்கல, நைஸ் கேர்ள்ல..." காளையின் கர்ஜனை குரலைத் துளியும் கண்டுகொள்ளாமல் கேட்டான் அகரனின் சித்தி மகனான அரவிந்த்.​

அவனது கேள்வியில் பல்லைக் கடித்தவன் "ஒழுங்கா... வந்த வேலையை பாரு, வேற ஏதாவது அதிக பிரசங்கி தனம் பண்ணா அடுத்த தடவைக் கூட்டிட்டு வர மாட்டேன்..." கண்டிப்போடு கூறினான்.​

"பொறாமை பிடிச்சவன். இவனும் ரசிக்க மாட்டான், ரசிக்கிற என்னையும் விட மாட்டான்..." மெல்லிய குரலில் முனகிக் கொண்டே மடவோளின் அறையை பார்த்தான்.​

"சும்மா சொல்லக் கூடாது ஜோதிகா லெவலுக்கு இல்லைன்னாலும் மாளவிகா மனோஜ் அளவுக்கு பார்க்க அழகா தான் இருக்காங்க..." என்றதும் சட்டென திரும்பி முறைத்தான் அகரன். அவனது அந்த பார்வையே த்து என்று துப்பியது.​

"சரி சரி.. மாளவிகா மனோஜ் அழகு இல்லை கீர்த்தி பாண்டியன் அழகு போதுமா..." என்றவன் ஆழ்ந்த குரலில்​

"ஆனா அவங்களையெல்லாம் விட இவங்க தனி அழகு தான்ல, தமிழ் நாட்டு அழகு,..." என்றான் ரசித்து. ஏனோ அகரனுக்கு பத்திக் கொண்டு வந்தது. அதனை வெளிக்காட்டி கொள்ளாமல்​

"யாரு இவளா?..." அத்தனை ஏளனமாக கேட்டான்.​

அவனது முக பாவனையை பார்க்காது கண்களை மூடி, தங்களை கடந்து சென்றவளை மீண்டுமொரு முறை நினைவு கூர்ந்தான் அரவிந்த். இப்பொழுதும் தையலின் இதழ்களில் தவழ்ந்த சிறு புன்னகை நினைவு வர, இவனது இதழ்களிலும் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.​

அதே புன்னகையோடு இமைகளை திறந்தவன் தமையனை பார்த்து "நீயும் அந்த கேர்ள்ளை பார்த்த தானே, அவங்க ஃபேஸ்ஸை யோசிச்சு பாரேன், அழகா தான் இருக்கும்..." அத்தனை ரசனையாக கூறினான் அரவிந்த்.​

அவனது ரசனையான முகத்தை அலட்சிய புன்னகையோடு பார்த்தவன் "அவள் கேர்ள் இல்லை, லேடி..." என்றான்.​

"கேர்ள் போல தான் இருக்காங்க..." என்றான் அரவிந்த்.​

"ஆழாக்கு சைஸ்ல இருந்தா லேடி கூட கேர்ள் மாதிரி தான் இருப்பாங்க..." ஏளன குரலில் கூறியவன் மேலும் பேசாமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். அக்கணம் கண்களுக்குள் மின்னி மறைந்தது சற்று முன் இவர்களை கடந்து சென்றவளது வதனம்.​

வெள்ளை நிறமும் இல்லாமல் கருமை நிறமும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட மாநிறத்தில் இருந்தாள் பெண். இருபத்தி ஆறு வயதிற்கு உரிய பக்குவமான முகம்,​

நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை,கூர்மையான நாசி. இளம் சிவப்பு நிறத்திலிருந்த கீழ் இதழ்கள், அதில் படிந்திருந்த மெல்லிய புன்னகையும், தெத்து பல்லின் அழகும் இவனையும் ரசிக்க வைத்தது.​

பன்பட்டர் போன்ற கன்னங்களும், முகம் புதையுமளவிற்கு இருக்கும் கழுத்து வளைவுகளும், அதற்கு கிழ் பிரம்மனின் படைப்புகள் ஷ்ஸ்ஸ்... மெளனமாய் தலையில் அடித்துக் கொண்டது அவனது மனம். அதற்கு கிழ் இடையின் வளைவுகளில் நானும் இருக்கிறேன் என்று எட்டிப் பார்த்த நீண்ட நெடிய கருங்கூந்தல் ஆடவனது ரசனைக்கு ரசனை வார்த்தது. அரவிந்த் கூறுவது போல் 'தனி அழகு தான்ல..' அகரனுள் இருந்த வெள்ளை மனம் கூறிய​

அதே கணம் "இவளை விட பெரிய பெரிய அழகிகளை பார்த்தவன் நீ, போயும் போயும் இவளை ரசிக்கின்றாய். அதுவும் உன்னை வேண்டாமென கூறி இருப்பேன் எனக் கூறியவளை ரசித்து கொண்டிருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது..." கர்ஜித்தான் அகரன் என்ற அகம்பாவி.​

இத்தனை நேரம் அவனை சூழ்ந்த மாயவளை சட்டென அறுந்தது. பக்கவாட்டில் அமர்ந்திருந்த தம்பியை பார்த்தான். இவனால் தான் இவளையெல்லாம் ரசிக்கிறது இந்த கேடுகெட்ட மனம். என்று தன் மனதையும், தன் தம்பியையும் திட்டியப்படி கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டவன் கண்களுக்குள் மின்னி மறைந்தது அன்றைய நாளின் மிச்சம்.​

கிட்டதட்ட இரண்டு வருடங்களாகிருந்தும் இன்றும் அவளின் வார்த்தைகளை மறக்க முடியவில்லை அவனால்... சொல்லப்போனால் மறக்க விடவில்லை அவனது அகம்.​

"யூ ஆர் ரிஜெக்ட்டெட் மிஸ்டர் அகரன் ஆதித்தன், இந்த அக்னிதாவுக்கு நீங்க வேண்டாம்.." என்ற வார்த்தையில் அவன் முன் விஷ்வ ரூபமாய் தெரிந்தாள் அக்னி.​

எத்தனை எத்தனை அழகிகள் இவனது பார்வைக்கு ஏங்கி கிடக்க, சாதாரண பெண் தன்னை தூசியென எண்ணி வேண்டாமென்றதில் அகரன் என்ற அகம்பாவி பெரியதாக அடி வாங்கினான். அவனது தன்மானம் சீண்டப்பட்ட இடமது.​

உன்னை வேண்டாமென்று ஒருவள் சொல்ல முடியுமா? அப்படி சொன்னவளை சும்மா விட முடியுமா? அடிக்க வேண்டும். அவளது பெண்மையில் அடிக்க வேண்டும் அவளது நிமிர்வை நிலைக் குழைய செய்ய வேண்டும். அவளது புன்னகையை புதைக்க வேண்டும். அகரன் என்ற அகம்பாவி கத்தினான். செல்லும் பெண்ணை கோணல் சிரிப்போடு பார்த்தவன் அவளின் பெண்மையை அசிங்கப் படுத்த நினைத்து அவளை அழைக்க நினைத்த நொடி​

"அகரா..." என்ற ராஜியின் குரல் கேட்டது. சட்டென அவனுள் எழுந்த அகம்பாவி மறைந்து கொண்டான்.​

அவனது கோணல் சிரிப்பும், அசையாத பார்வையும் இராஜிக்கு அவன் வேறு ஏதாவது பேசி விடுவானோ என்றிருந்தது. அதனாலேயே "அகரா..." என்று அழைத்தார் ராஜி. அவரை என்னவென்பது போல் பார்த்தான்.​

"போலாம்..." என்பது போல் தலையாட்டிட, அதற்கு பதில் கூறாது கோபத்தை தனது நடையில் காட்டியப்படி அங்கிருந்து நகர்ந்தான். அவனது காதில் தாயின் பேச்சும், தந்தையின் பேச்சும் விழுந்தது.​

" எனக்கும் அக்னி சொல்றது தான் சரின்னு தோணுதுங்க..." யோசனையோடு நின்ற கணவரிடம் கூறினார் ராஜி.​

"என்ன சரின்னு தோணுது..." அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது ஆதியின் குரலில்.​

"பிடிக்காத ஒன்னை ஏத்துக்கிட்டு வாழறது ரொம்ப கஷ்டம்ங்க... இப்ப இரண்டு பேருக்கும் முறையா கல்யாணத்தை பண்ணி வைச்சுடலாம். ஆனா அவங்க சந்தோசமா இருக்க வேண்டாமா?... நம்ம வளர்த்த பசங்க நம்மனால கஷ்டப்படறது நல்லா இருக்குமா சொல்லுங்க... அப்ப, தப்பு பண்ணிட்டோம்ன்னு கவலைப்பட்டுட்டு இருக்கிறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல, அக்னியோட முடிவுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல..." என்றார் அழுத்தமாக..​

மனைவியின் பேச்சில் ஆதியின் முகம் யோசனையில் சுருங்கியது. கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, கலங்கிய கண்களுடன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டே நின்ற கங்காவின் அருகில் சென்றவர்​

"இன்னைக்கு நாங்க வந்தது கூட இவங்க கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிடலாம் சொல்லத்தான் வந்தோம். ஆனா அக்னி தெளிவா சொல்லிட்டா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. அவ சொல்றது போல இன்னொருத்தற்காக வாழ்க்கையை ஆரம்பிக்கிறது நல்லா இருக்காது. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு முடிவெடுக்கற விஷயமும் இல்லை இது.​

அவ தெளிவா இருக்கா, தெளிவா யோசிச்சு தான் இதை முடிவு பண்ணிருக்கா அண்ணி. இதனால எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்க இதையே நினைச்சுட்டு மனசை போட்டு குழப்பிக்காதீங்க...நாங்க போயிட்டு வரோம்..." எனக் கூறியவர் க்கங்காவின் கையை அழுத்தி விடுவித்து விட்டு கணவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.​

***​

"அண்ணே, இத்தோட இரண்டு முறை கூப்பிட்டாங்க... நீங்க வரீங்களா? இல்லை நான் மட்டும் மேடமை போயி பார்த்திட்டு வரவா..." அகரனது தோளை சுரண்டி கொண்டே மெல்லிய சிரிப்போடு கேட்டான் அரவிந்த். அவனது குரலில் தன்னிலைக்கு வந்தவன் நிமிர்ந்து அமர்ந்து, பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனை க்கடுப்போடு பார்த்தான்.​

அண்ணனின் கடுக்கடு முகத்தைப் பார்த்து சிரித்து வைத்தப்படி "இல்லை, நீ ஏதோ தீவிரமான யோசனையில இருந்த மாதிரி தோணுச்சு.அதான் நானே போயிட்டு வரவான்னு கேட்டேன்..." என்றவனை மேலிருந்து கீழாக பார்த்தவன்​

"நீ இங்கேயே இரு, நான் போயிட்டு வரேன்..." என்று எழுந்து நிற்க, அவனை முந்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் அரவிந்தன்.​

"கடவுளே. பேரழகியை பார்க்க போற மாதிரி ரொம்ப பில்டப் பண்றானே..." முனகிக் கொண்டே அரவிந்த்தின் பின்னே சென்றவன் மனமோ 'இவளிடம் நீ சென்று பேசுவதா? இதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை அகரா? அரவிந்த் பார்த்து கொள்ளட்டும் நீ செல்லாதே..." கத்தியது...​

மனதின் ஆர்ப்பாட்டத்தை அடக்க ஆழ்ந்த மூச்சை வெளியிட்டான். சாதாரண ஆர்ட்ஸ் காலேஜ் ஈவென்ட், அவனது இருப்பிடத்தில் இருந்தபடியே செய்து முடிக்க அவனுக்கு தெரியாதா என்ன? இருந்தும் இவனே தேடி வந்து பேசும் காரணம்? அவனைத் தவிர யாருக்கு தெரியும்...​

அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அவனது கேசத்தை மெல்லியதாக தீண்டியது குளிர்க் காற்று. காற்றின் அசைவிற்கு ஏற்ப ஆடும் கேசத்தை கோதிக் கொண்டே நிமிர்ந்தவனது பார்வை அவனுக்கு நேர் எதிரில் நின்றிருந்த அரவிந்த்தின் மேல் விழுந்தது. ஆம் நாற்காலியில் அமர்ந்திருந்தவளை முழுவதும் மறைத்தபடி நின்றிருந்தான் அரவிந்த்.​

"ஹாய் வாவ்... நான் அரவிந்த்.. நான் இதை சொல்லியே ஆகணும், நீங்க அவ்வளவு அழகு, எங்க இருந்து கடன் வாங்கிட்டு வந்தீங்க இந்த மொத்த அழகையும்..." வெளிப்படையாக வழிந்து கொண்டே கேட்டவனை அலட்டல் இல்லாத புன்னகையோடு பார்த்தாள் அக்னிதா...​

மலரட்டும் சிறு புன்னகை...​

**​

எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்... (அதீத கவனம் செலுத்தி எழுத்து பிழைகள் திருத்தப்படவில்லை என்பது மற்றொரு காரணம்)​

ஈஸ் அக்காவே நன்றி🥳🥳🥳 உங்களது விமர்சனம்😂 அகரா பாவம் தெர்மா😂😂

 

Priyakutty

Active member
அரவிந்த் கியூட்... 🤭😍😍

அகரன் மனசு முழுக்க அழுக்கு... 😡😡

நீ அவ்ளோ கேவலமா அவங்கள பேசுவ ஆனா உன்னை வேணாம்னு அவங்க சொல்ல கூடாதா..... ஹீரோவை மரியாதை இல்லாம பேச மாட்டேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன்...
ஆனாலும் சொல்லுறேன்

போடா வெண்ணெ... 😡😡

கல்யாணம் பிரச்சனை முடிஞ்சுது இல்ல... உன் வழிய பாத்துட்டு போக வேண்டியது தான
 
Yethey; body shaming pannraan avan paavamaa 😡😡😡pannaadai 🤬🤬🤬🤬
Arvind so sweet 😘😘😘
Entha agaran payalukku stomach burn aaghuthu....aagattum 😏😏😏
😅😅😅 ஆத்தி ரொம்ப கோபம்...
அரவிந்த் 🙈🙈🙈

அக்ரா; அதெல்லாம் இல்லையே. நல்லா இல்லன்னு சொன்னோம்
 
அரவிந்த் கியூட்... 🤭😍😍

அகரன் மனசு முழுக்க அழுக்கு... 😡😡

நீ அவ்ளோ கேவலமா அவங்கள பேசுவ ஆனா உன்னை வேணாம்னு அவங்க சொல்ல கூடாதா..... ஹீரோவை மரியாதை இல்லாம பேச மாட்டேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன்...
ஆனாலும் சொல்லுறேன்

போடா வெண்ணெ... 😡😡

கல்யாணம் பிரச்சனை முடிஞ்சுது இல்ல... உன் வழிய பாத்துட்டு போக வேண்டியது தான
அரவிந்த்க் வெட்கம் வருதாம் 🙈🙈🙈

அக்ரா; அவள்ட இருக்கிறத சொன்னா கோபம் வருது..
...

அடேய் சத்தமா சிரிச்சிட்டே🤣🤣🤣🤣🤣🤣பாவம் my பாய்...
 
Top