எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 18 (எபிலாக்)

NNK-29

Moderator
💖உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💖 அத்தியாயம் 18 (எபிலாக்)
 

NNK-29

Moderator

அத்தியாயம் 18 (எபிலாக்)​

ஏழு வருடங்கள் கழித்து,​

காலை நேரம் பரபரப்பாக சமையல் வேலையை செய்துகொண்டிருந்தாள் அந்த வீட்டின் தலைவி சாருமதி. செல்வராணி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார்.​

“மம்மி! நான் ஹண்ட்ரட் டைம்ஸ் ஸ்கிப்பிங் போட்டுட்டேன்…” என வேர்க்க விறுவிறுக்க வந்து சொன்னாள் பத்து வயதான வான்மதி.​

“சூப்பர் டா வானு!” என்று மகளின் கன்னத்தை தட்டியவள், “இந்த கஞ்சியை குடிச்சிட்டு குளிக்க போ” என்று அவளின் கையில் கஞ்சியை கொடுத்தாள். முகத்தை சுருக்கினாலும் அதனை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் வான்மதி.​

ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று எதுவும் கொடுக்கமாட்டாள் சாருமதி. ஆனால் அவர்களின் அத்தை வந்தனாவின் வீட்டிற்கு சென்றால் கேட்காமலே அனைத்தும் கிடைக்கும். அதற்கு தனியாக சாருமதியிடம் வாங்கி கட்டிக்கொள்வார்கள் அரவிந்தனும், வந்தனாவும்.​

“மகி இன்னும் எழுந்திரிக்கலையா?” என்று மணியை பார்த்தவள், எட்டு வயது மகனையும் எழுப்ப சென்றாள்.​

“மகி! எழுந்திரு… ஸ்கிப்பிங் போடணும். ஸ்கூல் கிளம்பனும். இன்னைக்கு ஸ்கூல் போனா அடுத்து மூணு நாள் லீவ் தான்” என அவனை பேசி எழுப்பி பல் துலக்கவைத்து ஸ்கிப்பிங்கை கொடுத்தவள், “ஏமாத்தாம ஹண்ட்ரட் வரைக்கும் எண்ணனும்” என சொல்லிவிட்டு சென்றாள்.​

“ஒருநாள் ஸ்கிப்பிங் போடலனா தான் என்ன சாரு?” என செல்வராணி வழக்கம் போல் பேரனுக்காக பரிந்துக்கொண்டு வந்தார்.​

“ஸ்கூலுக்கு போக பஸ், வெளிய எங்க போனாலும் கார்னு அவங்களுக்கு உடல் உழைப்பு கம்மியா இருக்கு அத்தை. அதான் இது ஒரு எக்சர்சைஸ் மாதிரி இருக்கட்டும்” என்றவளும் தினமும் மாமியாரிடம் இதனை சொல்லிவிடுகிறாள்.​

பின் இருவரையும் கிளப்பி காலை உணவை முடித்துவிட்டு, பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட தேவாவிடமிருந்து அழைப்பு வந்தது.​

“இன்னைக்கு நைட் வந்துடுவேன் மதி. பசங்க ஸ்கூல் கிளம்பிட்டாங்களா…” என்று மும்பையில் இருந்தவன் சாருவிடம் விசாரித்தான்.​

இந்த ஏழு வருடங்களில் தேவாவிற்கு குடும்ப பொறுப்புடன், அலுவலகத்திலும் பொறுப்புகள் கூடிவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வெளிமாநிலம், வெளிநாடு என்று சுற்றிக்கொண்டிருக்கிறான்.​

தேவாவிடம் பேசிவிட்டு ஃபோனை செல்வராணியிடம் கொடுத்த சாருமதி, மேலே அவள் எடுக்கும் ஏரோபிக் நடன வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.​

தேவா இல்லாததால் தினமும் அரவிந்த் வந்து அனைவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டே செல்வான். வார இறுதியில் வந்தனாவும் அவளின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இவர்களுக்கு துணையாக இங்கு வந்துவிடுவாள்.​

கணவர் போன பொழுது, ‘இனி பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோமோ? வளர்ந்து, அவர்கள் திருமணத்திற்கு பின்னும் ஒற்றுமையாக இருப்பார்களா?’ என்று ஒரு தாயாய் செல்வராணி கவலை கொண்டிருக்கிறார்.​

வந்தனாவின் இரண்டாவது பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தனர். அச்சமயம் வந்தனாவையும் அவளின் குழந்தையையும் பார்த்துக்கொண்ட சாருமதியை பார்த்தும், தேவா ஊரில் இல்லாத சமயத்தில் பொறுப்பாக இருக்கும் அரவிந்தை பார்த்தும் அந்த கவலையெல்லாம் காற்றோடு கரைந்த கற்பூரமாக காணாமல் போனது.​

என்னதான் வந்தனாவுடன் சில மனகசப்புகள் ஏற்பட்டாலும் சில பல பூசல்களைக்கொண்டு அதனை சரிசெய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவாள் சாருமதி.​

மாலை விரைவிலேயே ஏரோபிக் வகுப்பை முடித்துவிட்டு வந்த சாருமதி குளித்துவிட்டு வந்து குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டே இரவுணவை தயார் செய்தாள்.​

இரவு எட்டுமணி போல் மும்பையில் இருந்து தேவா வந்தான். நாற்பது வயதை நெருங்கி கொண்டிருந்தாலும் முகத்திலும் உடலிலும் அந்த வயத்திற்கான குறியீடு ஒன்று கூட அவனுக்கு தென்படவில்லை.​

உணவிலும், அவனுக்கான உடல் பயிற்சியிலும் மனைவியின் கட்டுப்பாடே அதற்கு காரணம் என்றால் மிகையாகாது.​

அவனை கண்டதும், “அப்பா…” என்று குழந்தைகள் இருவரும் கத்திகொண்டே அவனிடம் ஓடினர். அப்படி ஓட முடியாமல் கண்களால் அவனை நிறைத்து சிரிப்புடன் அவனை நோக்கி மெதுவாக நகர்ந்தாள், சாருமதி.​

பிள்ளைகளிடம் பேசிக்கொண்டே சாருவிடம் கண்களால் நலம் விசாரித்தான் தேவா. பின் அன்னையிடமும் பேசிவிட்டு அறைக்குள் சென்று குளித்துவிட்டு வர, குழந்தைகள் அவனை விட்டு நகரவில்லை.​

இருவருக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டே அவனும் சாப்பிட்டான். அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு சாருமதி அறைக்குள் வந்தாள்.​

அங்கே கட்டிலில் மூவரும் படுத்துக்கொண்டு மூன்றுவார கதையை பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை சிரிப்புடன் பார்த்தவள், ‘இப்பொழுது அவர்களுக்கான தனிமை கிடைக்காது!’ என்றுணர்ந்த கீழே படுத்துவிட்டாள்.​

இப்பொழுது குழந்தைகள் செல்வராணியுடன் தான் உறங்குகின்றனர். எப்பொழுதாவது அன்னையுடனும், தந்தையுடனும் வந்து படுத்துக்கொள்வர்.​

மறுநாள் தீபாவளியை முன்னிட்டு சாருவின் அம்மா, அப்பா என குடும்பமாக அனைவரும் வந்திருந்தனர்.​

“அத்தை மகி அது கொடுக்க மாட்டுறான்…” என்று நான்கு வயது நிரம்பிய வந்தனாவின் மகள் மதுமதி சாருவிடம் வந்து கண்ணை கசக்கினாள்.​

நான்கு வருடங்கள் முன் ஒருநாள் இரவில் தூக்கத்திலே கோமதி இறைவனடி சென்றிருந்தார். அதில் ஒருவாரம் எதையும் கருத்தில் கொள்ளாமல் ஏனோ தானோவென்று சாருமதி அலைந்து கொண்டிருந்தாள்.​

அந்நேரம் வந்தனாவிற்கும் அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தை பிறந்தது. “அம்மா நம்ம கோம்ஸ் மாதிரியே பாப்பா இருக்கால?” என்று ஜெயந்தியிடம் சொல்லிய சாருமதி தான் குழந்தையை முதலில் வாங்கியது.​

வந்தனாவிற்கு ஆபரேஷன் என்பதால் மிகவும் சிரமப்பட சாருமதி தான் அவளின் அண்ணன் மகளை மடியில் போட்டு வளர்த்தாள். மதுமதியும் ‘அத்தை மடி மெத்தையடி!’ என்று சாருவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.​

“மதுக்குட்டி நீங்க அத்தை கிட்ட வாங்க…” என மகேந்திரனை முறைத்தவள் தன் அண்ணன் மகள் மதுமதியை அழைத்து மடியில் வைத்துக்கொண்டாள்.​

“மகி. அப்பா அந்த ரிமோட் கார் வாங்கிக் கொடுக்குறப்பவே எல்லாருக்கும் கொடுக்கணும்னு சொன்னேன் தான?” என்ற தேவாவின் அதட்டல் இல்லாத கேள்வியில் மதுவிடம் அதை கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.​

சாருவிற்கு இப்பொழுதே கண்ணை கட்டியது. அனைத்திலும் சரியாக இருக்கும் மகேந்திரன் மதுமதி விஷயத்தில் மட்டும் பிடிக்கொடுக்க மாட்டான்.​

விளையாட்டிலும் அனைவரும் விளையாடினால் மட்டுமே அவளுடன் விளையாடுவான். இல்லையென்றால் அவளிடம் பேசக்கூட மாட்டான். அனைவரும் சொல்லி பார்த்தும் கேட்கவில்லை.​

யஷ்வந்த்தும், வான்மதியும் மதுமதியை சிறுகுழந்தையாக பார்த்துக்கொள்ள, அவளுக்கு நிகராக சண்டைபிடிக்கும் மகேந்திரனை தான் அவளும் தேடுவாள்.​

ஒருமுறை ஜெயந்தி, “அவன் இவகிட்டயே வர மாட்டேன்றான். இவ அவன் பின்னாடியே தான் போறா… நாளைக்கு என்னாகுமோ…?” என்று வருங்காலத்தை நினைத்து பொடிவைத்து பேசினார்.​

“அம்மா!” என்று அதட்டிய சாருமதி, “அவங்க குழந்தைங்க ம்மா! தேவையில்லாததை பேசாதீங்க…” என்று அவரின் கற்பனை குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்டாள், சாருமதி.​

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துக் கொண்டிருந்தவளை உலுக்கி நிகழ்விற்கு கொண்டு வந்தாள் வந்தனா.​

“எவ்வளவு நேரம் கூப்பிடுறேன் அண்ணி? வானு போட்டோ நல்லாருக்கு!” என்றாள் ஒருமாதம் முன்பு பரதத்தில் சலங்கை பூஜை முடித்த வான்மதியின் புகைப்படத்தை காண்பித்து. சாருமதி சிரிப்புடன் தலையசைத்தாள்.​

“உங்க ஃபிரென்ட் கிட்ட தான வானு கிளாஸ் போறா? மதுவையும் அங்க சேர்த்துவிடுறீங்களா?” என்றாள்.​

சாரு மதுமதியை பார்க்க, “எனக்கு மகி கூட தான் கிளாஸ் போகணும்” என்றாள்.​

“அவன் போறது கராத்தே கிளாஸ் மது. நீ பரதநாட்டியம் போ…” என்ற வந்தனாவை இடைமறித்த சாருமதி,​

“கராத்தே, தற்காப்பு கலை தான் அண்ணி. இப்ப இருக்க நிலைமைல அதை தான் முதல்ல கத்துக்கணும். வானு கூட அந்த கிளாஸ் போய்ட்டிருக்காளே” என்றவள் குழந்தையிடம்,​

“ரெண்டு கிளாசும் போகலாம் குட்டி” என்று கன்னத்தை கிள்ளினாள்.​

“அப்பா நைட் ஹோட்டல் போகலாமா?” என்று மகேந்திரன் தேவாவின் காதை கடித்தான். “அம்மா ஓகே சொன்னா போகலாம்” என்ற தேவா சாருவை பார்த்தான்.​

சாருமதி வெளியே சாப்பிடுவதற்கு அவ்வளவு சீக்கிரத்தில் சம்மதிக்க மாட்டாள். எனவே தேவாவுடன் சேர்ந்து குழந்தைகள் அனைவரும் அவளின் முகத்தை தான் ஆவலாக பார்த்தனர்.​

“குழந்தைகளை ரொம்பவும் இறுக்கி பிடிக்காத மதி! அப்புறம் நாம தடை போடுறதை மறைத்து செய்ய பழகுவாங்க” என்று தனிமையில் தேவா சொன்னது நினைவில் வர, “ஓகே. இன்னைக்கு போகலாம். ஆனா அடுத்து மூணு மாசத்துக்கு அவுட்சைட் ஃபுட் யாருக்கும் கிடையாது!” என்ற அன்பு கட்டளையுடன் ஒப்புக்கொண்டாள்.​

ஹோட்டல் சென்று வந்ததும் அனைவருக்கும் ஒரு கிளாஸ் நிறைய சூடாக சீராகதண்ணியை குடிக்க வைத்தே படுக்கைக்கு அனுப்பினாள். அரவிந்தனின் குடும்பமும் இங்கிருப்பதால் குழந்தைகள் அனைவரும் வீட்டின் கூடத்திலே செல்வராணியுடன் படுத்துவிட்டனர்.​

அனைவருக்கும் படுக்கையை சரிபார்த்துவிட்டு அறைக்குள் வந்த சாருமதியிடம், “சந்தூர் மம்மி என்னை கண்டுக்கவே இல்லை” என்றான் சிரிப்புடன்.​

“தேவ்! அப்படி கூப்பிடாதீங்க…” என்று சிணுங்கிவிட்டு இரவுடை மாற்ற சென்றுவிட்டாள்.​

ஒருநாள் சாருமதி அவளின் ஏரோபிக் கிளாஸை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அவளை பார்த்த வான்மதி, “மம்மி!” என்று கத்துக்கொண்டே ஓடினாள்.​

அதை பார்த்த தேவாவிற்கு சந்தூர் விளம்பரம் தான் ஞாபகம் வந்தது. அன்றிலிருந்து, “சாருமதி - சந்தூர்மம்மி” என்று அவளை கிண்டலாக அழைக்க தொடங்கினான்.​

இரவுடை மாற்றிவிட்டு வந்தவள் தேவாவின் மார்பில் சாய்ந்து படுத்துக்கொண்டு மூன்று வாரம் நடந்ததை அவனிடம் ஒப்பிக்க தொடங்கினாள். அனைத்தையும் பொறுமையாக கேட்டவன், “இன்னைக்கு தீபாவளி தான? என்ன ஸ்பெஷல்?” என்றான் அவனின் கைவிரலை அவளின் விரலுடன் கோர்த்துக்கொண்டே.​

‘ஒன்னுமில்லை!’ என்றால் ஏடாகூடமாக கேட்பான் என்றுணர்ந்தவள், “அதெல்லாம் தலை தீபாவளிக்கு நேரத்துக்கு அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனவங்க தான் கேட்கணும்…” என்று சிலிர்த்துக்கொண்டாள்.​

“அடிப்பாவி. பத்து வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னுமா அதை சொல்லிகாட்டுவ?”​

“நூறு வருஷம் ஆனா கூட சொல்லிக்காட்டுவேன் தேவ்” என சிரிப்புடன் கண்களால் மிரட்டினாள்.​

உண்மையில் சாருமதி எவ்வளவு யோசிக்கிறாளோ அதே அளவு அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வாள். ஒருவேளை அனைத்தும் நினைவில் இருப்பதால் தான் அதிகம் யோசிக்கிறாளோ என்னவோ?​

அவளின் நினைவில் இருக்கும் அவர்களின் ஊடல், கூடல் என அனைத்தையும் சமயம் கிடைக்கும் பொழுது தேவாவிடமும் சொல்லிகாட்டுவாள்.​

காலத்தின் வேகத்தில் கடமையின் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தேவாவிற்கு சாருமதியின் இந்த சிறுசிறு நினைவூட்டல்கள் எல்லாம் அவர்களின் காதல் காலத்தை மீட்டி கொடுக்கும்.​

இப்பொழுதும் மனைவி கூறுவதை கேட்டு அந்த நாளிற்கே சென்றுவந்ததை போல் உணர்ந்தவன் அவளின் தலையை மென்மையாக கோதிவிட்டு நெற்றியில் இதழ் பதித்து அவளை அணைத்தபடியே கண்மூடினான்.​

“அவ்வளவு தான…?” என கண்களை விரித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

“மூணு வாரமா நீங்க வீட்ல எப்படி இருக்கீங்கன்னு தெரியாம சரியான தூக்கம் கூட இல்ல மதி. இப்ப எல்லாரும் என் பக்கத்துலையே இருக்கீங்கன்னு எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். இன்னைக்கு இது போதும்!” என்று கண்ணை திறக்காமலே அவளை இறுக்கிக்கொண்டான்.​

அவனில்லாமல் அனைத்தையும் சமாளித்த சாருமதிக்கு உறக்கம் என்பது சரியாக இருந்திருக்காது என்று அவனுக்கு தெரியும். சாருவும் அவனின் மார்பில் தலைவைத்து அவனின் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே உறங்கிப்போனாள்.​

அவர்களின் பக்கவாட்டு சுவரை நிறைந்திருந்த சாருமதியின் கோல்டன் பிலே பட்டன் அந்த இரவின் இருட்டில் ஜொலித்தது. ஆம்! சாருமதியின் சேனல் இப்பொழுது பத்து லட்ச சப்ஸ்க்ரைபர்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.​

நாள்கள் செல்ல செல்ல தான் ஒயினின் சுவை கூடும் என்பது போல், திருமண வாழ்க்கையிலும் நாள்கள் செல்ல செல்ல தேவாவிடமும், சாருவிடமும் அன்பும், புரிதலும் அதிகரித்து ஒருவரையொருவர்,​

ஊனாக​

உயிராக​

உணர்வாக​

உயிர்ப்பாக​

இறுதியில், உயிர் காற்றாகவும் ஏற்றனர்!​

***சுபம்***​

நேரமேடுத்து கதை படித்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள். கதையை பற்றிய உங்களின் கருத்துக்களை தவறாமல் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

எங்க(தேவா-சாரு) கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க(ஹார்ட் கூட போடலாம்) கமெண்ட் பண்ணுங்க, உங்க ஃபிரன்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க, அண்ட் மறக்காம நம்ம கதைக்கு வோட் பண்ணுங்க!!!

அன்புடன்,

NNK 29

 
Last edited:

Mathykarthy

Well-known member
Lovely epilogue 💝💝💝💝💝💝💝

மதுமதி மஹேந்திரன் அடுத்த ஜோடி ரெடி.... 🤪

💜💜💜💜💜💜💜 போட்டாச்சு சப்ஸ்கிரைப்ம் பண்ணியாச்சு... 🤣🤣🤣🤣🤣🤣

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis... 💐💕
 

NNK-29

Moderator
Lovely epilogue 💝💝💝💝💝💝💝

மதுமதி மஹேந்திரன் அடுத்த ஜோடி ரெடி.... 🤪

💜💜💜💜💜💜💜 போட்டாச்சு சப்ஸ்கிரைப்ம் பண்ணியாச்சு... 🤣🤣🤣🤣🤣🤣

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis... 💐💕

அவங்களுக்கு கதை இன்னும் யோசிக்கலை😜😜😜

மிக்க நன்றி dear❤️❤️❤️😍😍😍💖💖💖
 

NNK-29

Moderator
தேவா, சாரு சூப்பர்!!... அவங்களுக்கான புரிதல் அழகு!!... அருமையான குடும்பம்!!... will miss deva and charu!!... வாழ்த்துகள்!!..
நன்றி dear❤️❤️❤️

கதையின் ஆரம்பத்தில் இருந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்ததற்கு மனம் கனிந்த நன்றிகள்❤️❤️❤️
 
Top