வரம் 11
தன் மேசைக்கு அருகில் நின்ற யதுநந்தனைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள் வர்ஷனா.
எப்போது இவன் வந்தான். நான் மஞ்சுவிடம் பேசியதைக் கேட்டிருப்பானோ… என்று நெஞ்சம் படபடக்க எழுந்து நின்று “யது…” என்று அவனை விழித்து ஏதோ சொல்ல முயன்றாள். அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் நின்றான். அடச்சீ நான் சத்தமா கூப்பிடலையா.. வெறும் காத்துத்தான் வந்திச்சா… என்று மைன்ட் வாய்ஸில் தன்னையே திட்டினாள்.
“ய.. சார்… வந்து… என்ன…” என்று பேச்சு வராமல் தடுமாறினாள். கண்கள் இடுங்க அவளையே பார்த்து நின்றவன்
'ஐயையோ இவன் என்ன என் மைன்ட் வாய்ஸை கட்ச் பண்ணுறான். ரொம்ப டேஞ்சர் பார்ட்டி' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே “சிவா சார் பெர்சனல் வேலையா புல்மூன் மாலுக்கு போறதா சொல்லிட்டுப் போனார்.”
“ஓகே.. அவன் வந்ததும் இந்த லெட்டரை அவனிடம் கொடுத்து விடு. ரொம்ப சீக்ரெட். சோ, அவன் கையில கொடுக்கணும்.”
என்று ஒரு கவரை அவளிடம் கொடுத்துவிட்டு விடு விடுவென வெளியே சென்று விட்டான்.
சீராக மூச்சை விட்டபடி தனது இருக்கையில் அமர்ந்தவள் “அப்பாடா…” என்று வாய்விட்டே சொன்னாள். அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது இவ்வளவு நேரம் தான் பயத்தில் மூச்சு விடவும் மறந்து நின்றேன் என்று. நல்ல வேளை மஞ்சுவிடம் நான் பேசியது எதுவும் அவன் காதில் விழவில்லை என்றும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
அவனைப் பற்றிச் சிந்தித்தபடி அன்று தன் வேலைகளை முடித்தாள்.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பியவள் “மாலு.. மாலு..” என்று பெரும் சத்தமிட்டபடி நுழைந்தாள்.
“என்னடி வீட்டுக்குள் வரும்போதே என்னை ஏலம் விட்டுக்கொண்டு வாராய்”
“ஸ்ட்ரோங்கா எனக்கொரு டீ ஒன்று போட்டுத் தாறியா?” சமையலறைக்குள் செல்லத் திரும்பிய தாயிடம், "ஆமா.. எங்க குட்டிச் சாத்தான்? இன்னும் காலேஜிலிருந்து வரலையா..?”
“ஏண்டி.. வந்ததும் வராததுமா என் பிள்ளைய வம்புக்கு இழுக்கிற.. பிள்ளை இன்னும் வரல.. இன்று கிளாஸ் லேட்டா முடியும் என்று ஃபோன் பண்ணியிருந்தான். இப்போ வந்திடுவான்”
“வரட்டும்.. வரட்டும்.. காலையில் நான் எழும்புறதுக்குள்ள எஸ்ஸாயிட்டான். இப்போ வரட்டும் முட்டை போண்டாவுக்கு இருக்குது..”
அலுவலகத்திலிருந்து ஏற்கனவே வீடு திரும்பியிருந்த கலையரசன் உடைமாற்றிவிட்டு வரவேற்பறைக்கு வந்தார்.
“வர்ஷாம்மா.. ஏன் ரொம்பக் கோபமாய் இருக்க”
“அப்பா.. நீங்க டெல்லி போயிருந்தப்ப எனக்காக ஆசையாய் வாங்கிக் கொண்டு வந்து தந்திங்களே பெர்ஃப்யூம்... என் ஃபேவரிட் பெர்ஃப்யூம்... அத ஆட்டையப் போட்டுட்டான்பா.”
வர்ஷனாவுக்கு அதிகமாக அலங்காரம் செய்வது பிடிக்காதுதான். ஆனால், பெர்ஃப்யூம் இல்லாமல் அவளால் இருக்க முடியாது. அதிலும் மனதுக்கு இதம் தரக்கூடிய வாசனையுள்ள பெர்ஃப்யூமை மட்டுமே தேடி வாங்கி உபயோகிப்பாள்.
அவளின் கோபம் புரிந்த கலையரசன் அவளுக்கு பதில் சொல்ல முயன்றபோது இருவருக்கும் டீயை எடுத்து வந்தாள் மாலதி. அதை இருவருக்கும் கொடுத்தபடி
“ஏண்டி ஒரு பெர்ஃப்யூமுக்கா இந்தக் குதி குதிக்குற. படிக்குற பிள்ளை. ஆசையில எடுத்திற்றான். விட்டுத் தள்ளுவியா…”
“மாலு.. நான் எதையும் விட்டுக் கொடுப்பேன். என் பெர்ஃப்யூமில் கை வைக்கக் கூடாதுன்னு அவன்கிட்ட சொல்லியிருக்கன்.. வரட்டும் இருக்கு..”என்றாள்
சரியாக அந்த நேரம் வீட்டிற்குள்ளே வந்த வருணியன் 'ஐயையோ.. இன்று எனக்கு அபிஷேகம் தான்' என்று மனதுக்குள் நினைத்தபடி முகத்தில் கலவரத்துடன் தன் பாதுகாப்புக் கருதி மாலதியின் பின்னே ஓடிப் போய் நின்றான்.
“வாடா வா.. உன்னைத் தான் பார்த்துகிட்டு இருந்தன்.” என்று அவனுக்கு அடிப்பதற்குச் சென்றாள் வர்ஷனா. “அம்மா.. காப்பாத்தும்மா…”
“பாவம்டி பிள்ளை.. அவனே காலேஜ் போய் களைச்சு இப்போதான் வாரான். விடுடி… தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளையை அடிக்க வாராய்.. போடி போ… உனக்கு பெர்ஃப்யூம் தானே வேணும். நான் வாங்கித் தாரேன்”
“ எனக்கு அதே பிராண்ட் தான் வேணும்…” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
இவர்களின் சண்டையை ஒரு சிரிப்புடன் பார்த்திருந்த கலையரசனுக்கு தன் மகள் வளர்ந்த ஒரு குழந்தையாகவே தோன்றினாள். இவளுக்கு ஏற்ற ஒருத்தன் மாப்பிள்ளையாய்க் கிடைக்கணுமே என்ற ஏக்கமே அவருக்குள் ஏற்பட்டது. தன் அக்கா ராதா விட்டுச் சென்ற சாபமும் அவர் மனதின் ஓரத்தில் பயமாகத்தான் துளிர் விட்டிருந்தது.
தன் மேசைக்கு அருகில் நின்ற யதுநந்தனைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள் வர்ஷனா.
எப்போது இவன் வந்தான். நான் மஞ்சுவிடம் பேசியதைக் கேட்டிருப்பானோ… என்று நெஞ்சம் படபடக்க எழுந்து நின்று “யது…” என்று அவனை விழித்து ஏதோ சொல்ல முயன்றாள். அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் நின்றான். அடச்சீ நான் சத்தமா கூப்பிடலையா.. வெறும் காத்துத்தான் வந்திச்சா… என்று மைன்ட் வாய்ஸில் தன்னையே திட்டினாள்.
“ய.. சார்… வந்து… என்ன…” என்று பேச்சு வராமல் தடுமாறினாள். கண்கள் இடுங்க அவளையே பார்த்து நின்றவன்
"நான் சிவாக்கு ஹோல் பண்ணன். பட், அவன் ஆன்ஸர் பண்ணல. அதான் அவன் எங்கே போயிருக்கான் என்று உன்னிடம் கேட்க வந்தேன்.”என்றான். வர்ஷனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவனா பேசியது.. அதுவும் என்னிடம்.. கனவு காண்கிறேனோ என்று மீண்டும் மைன்ட் வாய்ஸில் பேசினாள். “உன்னிடம் தான் நான் கேட்டேன். பதில் சொல்லத் தெரியலையா..?” என்றான்.'ஐயையோ இவன் என்ன என் மைன்ட் வாய்ஸை கட்ச் பண்ணுறான். ரொம்ப டேஞ்சர் பார்ட்டி' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே “சிவா சார் பெர்சனல் வேலையா புல்மூன் மாலுக்கு போறதா சொல்லிட்டுப் போனார்.”