எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 06

admin

Administrator
Staff member

அத்தியாயம் 6​

'எங்க காலேஜ்ல தொடர்ந்து ஒரு நாலு, ஐஞ்சு ஈவெண்ட் வைக்கிறதா முடிவு பண்ணிருக்கோம் சார். எப்பவும் ஸ்டூடண்ட் வைச்சே ஈவென்ட் எல்லாம் ஆர்கனிஸ் பண்ணிடுவோம், இந்த தடவை பர்செண்டேஜ் காமிக்க வேணும்னு யூனிவர்சிட்டில இருந்து பிரசர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.​

அதே சமயம் காலேஜ் மேனேஜ்மெண்ட்ல இருந்தும் ஈவென்ட்டும் பண்ண வேணும்னு சொல்லிட்டாங்க. சோ ஸ்டூடண்ட் வைச்சு ஈவ்வென்ட் பண்ணி அவங்களோட ஸ்டடியை கெடுக்க வேண்டான்னு எங்க டிப்பார்ட்மென்ட் ஹெட்டும் சொல்லிட்டாங்க, அதான் உங்களுக்கு கூப்பிட்டேன்..." தங்களது நிலையை விரிவாக கூறினார் அந்த கல்லூரி பேராசிரியர்.​

"ஓகே சார், என்னென்ன ஈவென்ட் எப்படி வேணும்னு ஒரு மெயில் பண்ணிடுங்க, தென் உங்களை என் மேனேஜர் கண்டெக்ட் பண்ணுவார்..." என்றவன் அழைப்பைத் துண்டிக்கும் நேரம் அவனது காதில் "ஈவென்ட் ஆர்கனிஸர் கிட்ட நேத்தே பேச சொன்னேனே என்னாச்சு வேலு சார்..." என்ற பெண்ணின் குரல் கேட்டது.​

அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்பதை அறிய நிமிடங்கள் தேவைப்படவில்லை அகரனுக்கு.​

'இவளது குரலையெல்லாம் கேட்டு நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாய் அகரா... அழைப்பைத் துண்டித்து விட்டு வேறு வேலையை பார்...' அகங்கரமாய் கத்தினான் அவனுள் இருந்த அகம்பாவி.​

கேசத்தைக் கோதிக் கொண்டே அழைப்பைத் துண்டிக்கப் போகும் நேரம் "நான் டேரக்ட்டா அகரன் சாருக்கு கால் பண்ணி பேசினேன் மேம். ஈவென்ட் டீடெயில்ஸ் எல்லாத்தையும் மெயில் பண்ண சொன்னார்..டீடெயில்ஸ் எல்லாம் பார்த்துட்டு அவரோட மேனேஜர் கால் பண்ணுவாராம்..." என்றார் அவசரக் குரலில்​

தனது பெயரைக் கேட்டதும் குறைந்தபட்சம் அதிர்ச்சியாவது அவளது குரலில் வெளிப்படும் என்று நினைத்தான். ஆனால் அவளோ அலட்டல் இல்லாமல் "ம்ம் குட், காலேஜ் மெயில் ஐடில இருந்தே மெயில் பண்ணிடுங்க. அமௌண்ட் டீடெயில்ஸ், மத்த டீடெயில்ஸ் எல்லாத்தையும் நேர்ல வந்து பேசிட சொல்லுங்க..." கட்டளையாக கூறிவிட்டு அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள்.​

அவளது அலட்டல் இல்லாதப் பேச்சும், கட்டளைக் குரலும் இவனுக்கு அத்தனை எரிச்சலைக் கொடுத்தது. அதே சமயம் " யூ ஆர் ரிஜெக்டட் மிஸ்டர் அகரன் ஆதித்தன்..." என்ற வார்த்தைகளும் ரீங்காரம் போல் காதில் ஒலித்தது.​

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவள் பேசியதற்கு பதில் மொழி பேசாமல் அடக்கப்பட்டக் கோபத்துடன் வந்ததால் என்னவோ இன்றுவரை அவனது மனதில் அக்கோபம் கனன்று கொண்டே இருக்கிறது. உண்மையில் அவள் பேசிய பேச்சிற்கு கோபப்படுகிறானா இல்லை அவளது நிராகரிப்பிற்கு கோபப்படுகிறானா? என்பது அவனுக்கே வெளிச்சம்.​

அதேகணம் அவனது கோபம் மொத்தமாய் வெளிப்படும் நேரம் அவனது அகரன் என்ற அகம்பாவி மொத்தமாய் அழிந்து போவான் என்பது சாத்தியமே...​

"உள்ள வாங்க சார், ஏன் வெளியவே நின்னுட்டு இருக்கீங்க..." என்றவளதுக் குரலில் தன்னிலைக்கு வந்தவன் அவளை நோக்கி நடந்தான்.​

அவனது பார்வை ஆராய்ச்சியாக படிந்தது என்றால் இவளது பார்வையோ இதற்கு முன் உன்னை நான் பார்த்ததே இல்லை என்ற பாவனையை காட்டியது. அந்த பாவனை இவனுக்கு இன்னும் இன்னும் கோபத்தை கொடுத்தது.​

தன் முன் வந்து நின்ற நெடியவனை பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தவள் "சிட் ..." என்று கண்களால் நாற்காலியை காட்டினாள்.​

பதிலுக்கு எதுவும் பேசாமல் நாற்காலியில் ராஜ தோரணையில் அமர்ந்தவன் எதிரில் அமர்ந்திருந்தவளைத் தீர்க்கமாக பார்த்தான்.​

அவனது தீர்க்கமான பார்வை தன்னை துளியும் பாதிக்கவில்லை என்பது போல "எங்களுக்கு என்ன தேவையோ அதெல்லாம் உங்களுக்கு ஆல்ரெடி மெயில் பண்ணிட்டோம் சார். நீங்க ஏதாவது காலேஜ் ஈவன்ட் பண்ணிருந்தா அதோட டீடெயில்ஸ எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா?..." இதழில் சிறு புன்னகை தவழ கேட்டாள்.​

அவளது புன்னகையை புதைக்க வேண்டும் என வெறியே வந்தது அவனுக்கு. மனதின் எண்ணத்தைத் துளியும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பக்கவாட்டில் அமர்ந்திருந்த அரவிந்தை பார்த்தான்.​

தமையனின் பார்வை புரிந்தது போல அரவிந்த் தனது லேப்டாப்பை ஆன் செய்து அவள் முன் வைத்தான். அதற்கு பின் அவர்கள் இருவரது நேரம் இறக்கை இல்லாமல் வேகமாய் நகர்ந்தது.இங்கு அகரனோ முன்பு எப்படி அமர்ந்திருந்தானே அப்படி தான் அமர்ந்திருந்தான். அவனது பார்வை ஏனோ தானோவென பாவையிடத்தில் விழுந்தது.​

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்​

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ​

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ​

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்​

அகரானின் மனம் பாரதியின் வரிகளை அத்தனை மென்மையாய் வாசித்தது. அதன் வாசிப்பில் சுற்றம் மறந்து திடுக்கிட்டு எழுந்தான். தற்பொழுது இருவரின் கவனமும் இவனிடத்தில்.​

"சாரி,..." என்றவன் அரவிந்தனை நீ பார்த்துக் கொள் என்பதை போல் கண் காட்டிவிட்டு எழுந்து நடந்தான். அவனது மனம் உலைக்கனலாய் கொதித்தது.​

முதலில் இகழ்ச்சியாய், ஏளனமாய் அவள் மீது விழுந்த பார்வை எப்போது ரசனையாய் மாறியது என்று அவனே அறியவில்லை. "போயும் போயும் இவளையா ரசிக்கிறாய்..." மனம் ஏளனமாய் கேட்டது. அதற்கு பதில் சொல்லாமல் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்தவன் காரை எடுத்தான். அதற்குள் அரவிந்தனும் வந்துவிட்டான்.​

"டே அண்ணே... நில்லு டா போயிடாதா வந்துட்டேன்..." சத்தமாக கூறியப்படி வந்தவன் அவன் காரை லாவகமாக திருப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் வாகனத்தில் ஏறி விட்டான்.​

"ஐயாவோட எக்ஸ்பிளைன் பார்த்து ஒன் இயர் காண்ட்ராக்ட் போட்டுக்கலாம் சொல்லிட்டாங்க தெர்மா... " கெத்தாக கூறியவன் பின் "ஜஸ்ட் ஒன் வீக்ல நானும் பிஸ்னஸ் கத்துகிட்டேன் டா அண்ணனே..." ஆர்ப்பாட்டமாக கூறினான்.​

அவனது ஆர்ப்பாட்டமான பேச்சில் அனலாக கொதித்த மனம் சற்றே பின் செல்ல, தம்பியை பார்த்து மெல்ல சிரித்தவன் அவனது கேசத்தை கோதிக் கொடுத்தான். அகரனது இந்த செய்கையே பூஸ்ட் குடித்தது போல் இருந்தது அரவிந்த்திற்கு.​

இதழில் மலர்ந்த சிறு புன்னகையுடன் "தட் கேர்ள் வாவ்ல, நான் பேசனதுக்கு கொஞ்சம் கூட முகம் காட்டல, அதே மாதிரி என் பேச்சுக்கு வழியவும் இல்லை சோ ஸ்வீட்.." எனக் கூறினான் ரசித்து. அவனை நிதானமாக திரும்பி பார்த்தான் அகரன். அந்த பார்வையில் கடுப்பா,கோபமா, எரிச்சலா, ஏதோ ஒன்று இருந்தது.. அண்ணனின் முகத்தில் மாறி மாறி தாண்டவமாடிய உணர்வுகளை கண்டுகொண்டவன்​

"அடிக்கடி உனக்குள்ள சந்திரமுகன் வந்து வந்து போகுது டா..." உதட்டை கீழாக வளைத்து பாவமாக கூறினான். அதற்கு பதில் கூறாமல் சாலையில் கவனம் செலுத்தினான்.​

அதற்கு பின்னான நிமிடங்கள் மெளனமாக செல்ல, அந்த மெளனத்தை வெறுத்தவனாய் "டே அண்ணா...உனக்கு ஒன்னு தெர்மா..." என மெல்ல கேட்டான். என்ன என்பது போல் பார்த்தான் அகரன்.​

"அவங்க இருக்காங்கல்ல, எனக்கு ஹாய்ன்னு டெக்ஸ்ட் அனுப்பி இருக்காங்க..." என்றதும் புருவத்தை ஏற்றியிறக்கி 'அதுக்கு என்ன?..' என்பதை போல் பார்த்தான். புஸ்சென்றானது அரவிந்திற்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் கண்மூடி அமர்ந்துக் கொள்ள, ஓரக்கண்ணால் சகோதரனை பார்த்தவன் இதழ்களில் சிறு புன்னகை மலர்ந்தது...​

******​

சூரியன் தன்னை மலை முகடுகளுக்குள் மறைத்து கொள்ளும் அந்தி மாலை நேரமது. கல்லூரிப் பேருந்தில் இறங்கியவள் டக் வாக் என்ற நடையோடு தன் வீட்டை நோக்கி நடந்தாள். டக் வாக்கில் நடந்தும் பத்து நிமிடங்களில் இல்லத்தை அடைந்தவளின் பார்வை முற்றத்தில் அமர்ந்திருந்த தாயின் மீது விழுந்தது.​

"தெய்வ தாய்... என்ன பண்றீங்க..." அவரது அருகில் அமர்ந்தபடி கேட்டாள்.​

தனது ஸ்பெக்ஸ்ஸை சரி செய்து கொண்டே "மாப்பிள்ளை பார்க்கிறேன்..." என்றார்.​

"வாவ் கேர்ள். எத்தனை தடவை சொல்லி இருப்பேன். இப்ப தான் புத்தி வந்துதா உங்களுக்கு. குட், எங்க என்னோட நியூ டாடி ஃபோட்டோ காட்டுங்க..." ஆர்ப்பாட்டமாய் கேட்ட பெண்ணை நிதானமாக நிமிர்ந்து பார்த்தார் கங்கா..​

"உங்கப்பனை கட்டியே நான் படுற ப்பாடு போதாதா? இதுல இன்னும் ஒன்னு வேணுமா?. என்னோட வயசில எல்லாரும் ஊரு ஊரா போயி சுத்தி பார்த்து என்ஜாய் பண்றாங்க... ஆனா நான் உங்கப்பன் தெருத் தெருவா ஓபன் பண்ணி வைச்சிருக்கற ரெட்டிக் கடையை சுத்திப் பார்த்திட்டு இருக்கேன். இதுல இன்னொருத்தனுக்கு வாக்கபட்டு அவனோட காடு, கரையெல்லாம் சுத்தி பார்க்க சொல்றயா..." என்று கேட்க அவரை சந்தேகமாக பார்த்தாள்.​

அவளது பார்வையில் கடுப்பானவர்​

"என்னடி..." எனக் கேட்டார்.​

"எல்லாம் சரி அதென்ன காடு கரையை பார்க்கிறதா? ஏதோ இடிக்குதே... என்னம்மா ஏதாவது புரோபோஸ் வந்துச்சா...யார் அவர்? எங்க இருக்கிறார்?.." கண்ணடித்து கேட்டாள்.​

'அடிங்க...'என்று எழுந்தே விட்டார் கங்கா.​

"சரி மா சரி... கோபப்படாத சொல்லு அப்படியென்ன போன்ல பார்த்திட்டு இருக்க..." விளையாட்டை விட்டுவிட்டு கேட்டாள்.​

"அதான் அப்பவே சொன்னேனே உனக்கு தான் மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன்னு. பையன் பேரு; மோகன், ஊரு: சேலம், வேலை; பேங்க் மேனேஜர், வயசு: இருபத்தி ஒன்பது வயசு தான் ஆகுது. பையன் பார்க்க நல்லா இருக்கார், நல்ல உயரம், கருப்பா இருந்தாலும் பார்க்க கலையா தான் இருக்காரு. உனக்கு ஓகேன்னா அடுத்த வாரமே பொண்ணு பார்க்க வர சொல்லிடலாம்...ஓகே வா பாரு..." வரிசையாக அடுக்கினார் கங்கா. பின் அலைபேசியில் மோகனின் புகைப்படத்தை காட்டினார்.​

நிமிடம் அலைபேசியை ஆழ்ந்து பார்த்தவள் கண்களை இறுக மூடி திறந்து "சரி அடுத்த வாரம் வர சொல்லுங்க..." என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.​

அதேகணம் இங்கு அகரன் வீட்டில்...​

மகனின் தட்டில் கார சட்னியை ஊற்றிக் கொண்டே "இந்த தடவையும் உனக்கு பிடிச்ச மாதிரி தான் ப்பா பொண்ணு பார்த்து இருக்கேன். நல்ல நிறம், நல்ல உயரம், விளம்பர மாடல் மாதிரி அழகா தான் இருக்கா. ஜோடி பொருத்தமும் பக்கவா இருக்கும். முக்கியமாக அந்த பொண்ணுக்கு பரதம் தெரியுமாம். நீ சரின்னு சொன்னா அடுத்த வாரம் போயி பார்த்திட்டு வந்துடலாம்..." என்றவர் அலைபேசியில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை அகரனிடம் காட்டினார். அதற்கு அகரன் பதில் சொல்லும் முன்பே வாய் நிறைய தோசையை அடக்கிக் கொண்டே​

"மீ, இவங்க எல்லாம் மீ என்ன அழகு, இன்னைக்கு காலையில காலேஜ் போனேன்ல அங்க ஒரு பொண்ணை பார்த்தேன் மீ, தமிழ் நாட்டு அழகு, ஜஸ்ட் வாவ்..."என்று கண்களை மூடி ரசித்து கூறினான்.. கார சட்னியை ரசித்தானா? இல்லை அந்த பெண்ணின் முகத்தை ரசித்தானா? அவனுக்கே வெளிச்சம்.​

"நீங்க எனக்கு பொண்ணு பார்த்தா அவங்களை போல பாருங்க மீ..." என்றான் வெட்க புன்னகையை உதிர்த்து.​

"அவங்களை போல என்ன அந்த பொண்ணையே பார்க்கிறேன்..." ராஜி கூறிய அடுத்த நிமிடம் புறையேறியது அரவந்தின் அருகில் அமர்ந்திருந்த அகரனுக்கு. அவனது தலையை தட்டிக் கொண்டே நீரை புகட்டியவர் அரவிந்தனிடம் திரும்பி​

"பேர் என்னன்னு சொல்லு, விசாரிச்சு பார்க்கிறேன்..." என்றதும் அகரனின் கண்கள் இரண்டும் அரவிந்த்தை எரித்தது...​

"வேண்டாம் விடுங்க மீ, அவங்க எனக்கு பெரியவங்கன்னு நினைக்கிறேன். எனக்கு வயசல்லாம் பிரச்சனை இல்லை. அவங்களுக்கு ஒகேவான்னு தெரியலையே..." தீவிரமாக யோசித்தபடி கூறியவனை தீப் பார்வை பார்த்துவிட்டு பாதி சாப்பிட்டிலேயே எழுந்து சென்று விட்டான்.​

"டேய் மை டியர் சன், நீ சாப்ட தோசையை நம்ம வீட்டு நாய்க்கு போடவா இல்லை தெரு நாய்க்கு போடவா..." சத்தமாக கேட்டவரைப் பார்த்து வாயில் கைவைத்து சிரித்தான் அரவிந்த். இளைய மகனின் கேசத்தை கோதிவிட்டப்படி கண்ணடித்து சிரித்தார் ராஜி.​

மலரட்டும் சிறு புன்னகை...​

***​

என்ன இந்த பைய போற போக்கே சரியில்லையே யோசிக்க தோணும்... அதுக்கெல்லாம் விடை அவனே சொல்லுவான் நினைக்கிறேன் வெயிட் பண்ணுவோம்😂

Comments_reply​

ஈஸ் அக்கா... அவன் எங்க பாடி சேமிங் பண்ணா😉😉 எனக்கு இப்படியான பொண்ணு பிடிக்கும் தானே சொன்னான்.🫣​

 
Avan avala paakkura neramellaam appdi thaan think pannraan...athanaalathaan appdi thonuthu.....yenakku therinji yellaarum senthu plan pannraangalonnu thonuthu....
🤩🤩🤕🤩🤩ஹாஹாஹா ... இவனுக்கு பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறது தா. குறைச்சல்
 
அகரனை கடுப்பேத்துறது ஜாலியா இருக்கு!!... இன்னும் நிறையா எதிர்பார்க்கிறேன்!!..
😂😂😂😂என்னவொரு குஷி... தங்களுக்கு... வெறுபெத்த try பண்ணேன்... அவன் என்னை வகடுப்பாகிட்டு போயாச்சு
 
Top