எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 10

NNK-54

Moderator

வர்ணங்கள் 10

ஜெயந்தனது மார்பில் அவளது இமைகள் உரச, அவனது உணர்வுகள் எல்லையை கடந்தது. அவன் அவளை இருக அணைக்க, அவளுக்கு லேசாக மூச்சு வாங்கியது.ஆனாலும்,அவனை விட்டு அவளால் நகர முடியவில்லை..இல்லை..இல்லை,நகர அவள் பிரியப்படவில்லை.இமைகளை திறந்து பார்க்கவும் அவளுக்கு கூச்சம்.

பக்கத்தில் இருக்கும் தியா,கனவில் எதையோ கண்டு பெரியதாக கத்த ,குழந்தையின் சப்தத்தில் திடுக்கிட்டு எழுந்த பெண்ணுக்கு உறைத்தது இத்தனை நேரமாய் தான் கண்டது வெறும் கனவென்று.சுயத்தை மீட்டுக்கொள்ள இயலாவதாக அவள் தவித்தவாறே தியாவை எழுப்பி ,சிறுநீர் கழிக்க கூட்டிக்கொண்டு சென்றாள் .தியாவுக்கு கொஞ்சம் குடிக்க நீரை கொடுத்தவள் தானும் அந்த வாட்டர் பாட்டிலை வாய்க்குள் சிரித்துக்கொண்டாள். தியா மீண்டும் படுத்தவள் சுலபமாய் தூங்கிவிட, இப்போது தூக்கத்தை தொலைத்துவிட்டு அமர்ந்திருப்பது சுபாவாயிற்று.


கண்ட கனவை அவளால் தள்ள முடியவில்லை. தனது கணவன் மீதான அளவுகடந்த காதலும்,அவனிடம் தனக்குள்ள மோகமும்,எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் இப்படிப்பட்ட கனவு. ஜெயந்தனிடம் சென்றுவிட அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்பதை இல்லை என்று சொல்லி அத்துணை சுலபமாய் ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?


கணவன் தனது கனவில் அனைத்ததே இவ்வளவு வெட்கத்தையும் கூச்சத்தையும் கொடுக்கிறதே.,எனில் இன்னும் கூட அவனுடன் வாழ்ந்த நாட்களை ஆழ் மனம் திரும்ப கொண்டு வர ஆசைப் படுகிறது என்று தானே அர்த்தம்?


தன்னளவில் கணவனுடன் சேர்ந்து வாழ்வது என்பது வெறும் ஆசையன்று.பேராசை.அது என்றுமே நடக்கப் போவது கிடையாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள் தலையணையில் தலை சாய்த்தாள். ஏமாற்றம் நெஞ்சை அடைக்க சிறு விசும்பலுடன் தூங்கியும் போனாள் .


அடுத்தநாள் காலை,தலைவலி அவளால் தாங்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் அலுவலகம் கிளம்பிச்சென்றாள் . மஹாபலிபுரம் ரோடு வரை செல்லவேண்டும்.அவளது வீட்டிலிருந்து ஏறத்தாழ முக்கால் மணிநேர பிரயாணம். இருக்கும் கடுப்பில் பேருந்தில் செல்ல முடியாது என்று உணர்ந்தவளாக உபேர் ஆக்டோவில் கிளம்பிவிட்டாள்.


அலுவலகத்தில் சதிஷ் இவளுக்காக காத்திருந்தார். இருவரும் அண்ணாசாலை சென்று வந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மாலை சீக்கிரம் கிளம்பவேண்டும் என்று தீர்மானம் செய்தாள் சுபா. அன்று மதியத்திற்கு மேல் எந்த முன்னறிவிப்பும் இன்றி ராஜவர்மன், ஜெயந்தனது அப்பா அங்கே வந்து சேர்ந்தார்.அலுவலகம் சற்று பரபரப்பாக செயல்பட்டது. சதிஷ் அவரை சந்திக்கவென சென்றுவிட்டான்.சுபாவிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. வேலையின் திட்டமிடல்களைப் பற்றி உள்ளே இருக்கும் கான்பிரென்ஸ் ஹாலில் அமர்ந்துகொண்டு தீவிரமாக மடிக்கணினியில் படித்துக்கொண்டிருந்த சுபாவும் சதீஷ் அங்கிருந்து வெளியே சென்றதை கவனித்திருக்கவில்லை.


அவற்றை படிக்கும்பொழுதே அவளுக்கு புரிந்து விட்டது. எவ்வளவு பிரம்மாண்டமான திட்டமிடல்கள் என்று.அவளுக்கு வியப்பாக இருந்தது. அவர்கள் நிறுவணம் அமைக்கப்பபோவது வெறும் கட்டிடங்கள் அல்ல. கனவுலகம் அங்கே கிடைக்காத விஷயங்களே இல்லை எனும் அளவிற்கு தனி உலகம். அதுவும் சுவர்க்க உலகம். இங்கே வீடு வாங்கிக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெளிநாடுகளுக்கு செல்ல கூட விரும்பப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.


இந்த ப்ரொஜெக்க்ட்டில் வேலை பார்க்கவென்று நிறுவனம் தன்னை தெரிவு செய்ததை பெருமையுடன் நினைத்துக்கொண்டவளுக்கு இன்னொன்றும் புரிந்தது, இந்த வேலைமுடிய வெறும் இரண்டு வருஷங்கள் போதாது.அதற்க்கு மேலும் தேவை இதை புரிந்துகொண்டவளுக்கு திடீரென மனம் சஞ்சலம் கொண்டது.எனில் இரண்டு வருஷங்கள் முடிந்தபிறகு என்னை திரும்ப அனுப்பிவிடுவார்களா..அல்லது ப்ராஜெக்ட் முடியும் வரை இங்கேயே இருப்பேனா என்று.


அவள் மனமோ,இந்த வேலை முடிந்து பொசேஷனுக்கு போகுற வரைக்கும் இதுல வேலை செய்ய அனுமதி கொடு கடவுளே!!கொஞ்சம் கருணை வைய்யேன்!என்று அவசர கதியில் கடவுளிடம் கருணை மனு போட்டுவைத்தாள் .


மீட்டிங் முடிந்து திரும்ப கான்பிரன்ஸ் ஹாலுக்கு வந்த சதீஷுக்கு ,அவள் தலையை கூட நிமிர்த்தாமல் இன்னமும் அந்த ப்ராஜெக்ட் பற்றிய திட்டமிடலில் ஆழ்ந்திருப்பதை பார்த்து மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. முதலில் படிக்கும் பொழுது அவனுக்கும் கூட இப்படித்தானே இருந்தது.


இவற்றை மெய்யாகிவிட துடிக்கும் ஜெயந்தனை இன்னமும் சதீஷ் நேரில் சந்தித்தது இல்லை. ஆனாலும்,ஆவணி மீது சதீசுக்கு மரியாதையும்,ஈர்ப்பும் வந்தது. இந்த ப்ராஜெக்ட் நிஜமானால்,வெற்றிபெற்றால் இது ஒரு முன்மாதிரி ஆகிவிடும். அடுத்து வருபவர்களும் கூட இதை முன்னுதாரணமாக வைத்து கட்டிடங்கள் எழுப்பக்கூடும். ரியல் எஸ்டேட் துறையில் அடுத்த ஜெனெரேஷன் வளர்ச்சி என்று கூட சொல்லலாம்.


"என்ன சுபா, இன்னும் அதுலேந்து நீ வெளியே வரலியா" சதீஷின் குரலை கேட்டவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் . அவள் கண்களில் பிரமிப்பும் ஆச்சர்யமும் அப்பட்டமாய் தெரிந்தது. இவ்வளவு நேரமாய் தெரியாத பின்கழுத்து வலி இப்போது தெரிய நிதானமாக தடவிவிட்டுக்கொண்டு,"என்னால இதுலேந்து வெளியே வரவே முடியல சதீஷ் சார். இதுல நானும் வேலை செய்யப்போறேன்னு யோசிக்கும்பொழுதே என்னோட சட்டைகாலர் தானா தூக்கிக்குது என்ன செய்ய..சீக்கிரம் ஆரம்பிக்கலாம் சார்" என்று லேசாக சிரித்தாள்.


"ம்ஹும்..ஆரம்பிக்கணும். இதுக்கான அப்ரூவல் ,ஷாப்பிங் மாலுக்கான ஷொப்ஸ் டீலிங்னு நிறைய வேலைகள் முடிஞ்சிடுச்சி. பட் ஆரம்பிக்க தேவையான அடிப்படை விஷயங்கள் முடிஞ்சாலும்,இப்போ அவங்களோட இன்னொரு ப்ராஜெக்ட் முடியுற கட்டத்துல இருக்கு. அதை ஹாண்ட் ஓவர் பண்ணிட்டுதான் இதை ஆரம்பிக்க முடியும்நங்கற சிட்டுவேஷன். "என்று பெண்ணுக்கு விளக்கினான்.


"ஹாங் ..எப்படியும் இன்னும் மினிமம் த்ரீ மந்த்ஸ் ஆகும்மில்ல.அதுவரைக்கும் நான் பெங்களூரு போய் வேலை பாக்கணும்" என்றவள்,"சார்,எனக்கு நாளைக்கு லீவு குடுங்க.பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்ணாதான் ஞாயிற்று கிழமை கிளம்ப விடுவா" என்று லாவகமாக தனது லீவு அப்ப்ளிகேஷனையும் போட்டு வைத்தாள் .


அவளது சாமர்த்தியத்தில் சிரித்தவன், அவள் நிலைமைக்கு மனதுக்குள் இறங்கியவனாக,"முதல்லே லீவு வேணும்னு மெயில் பண்ணு சுபா.அப்போ தானே சாங்ஷன் பண்ண முடியும் “என்றுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

சதீஷ் தன்னை கண்டுகொண்டதில் லேசாக சிரித்துக்கொண்டவள்,மெயில் அனுப்பத் தவறவில்லை. மறுநாள் முழுவதும் பெண்ணுடனும் அம்மாவுடனும் நேரத்தைக் கழித்தவள் வார இறுதியில் பெங்களூரு கிளம்பினாள். வாசல் வரை வந்அவள் ஏறிய வாகனம் வேகமெடுத்தது.அவள் மனமோ மகளிடம் சிக்கிக்கொண்டது. ஒருவாரம் கழித்து மீண்டும் பெங்களூரு. குடும்பத்தை விட்டு இவ்வளவு தூரம்.பெங்களூரு அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதுதான்.ஆனால்,அங்கே அம்மாவும்,அவளது மகளும் இல்லையே!


இவள் ரயிலில் பெங்களூரு செல்ல ஜெயந்தன் தனது காரில் பெங்களூரு நோக்கி பிரயாணம் செய்தான். தளத்தின் கீழ்வரை வழியனுப்பிய தியா,அம்மாவுக்காக அழுது தீர்த்தாள். சுபாவுக்கும் கண்கள் கலங்கியது. துடைத்துக்கொண்டேதான் விடைபெற்றாள் .அவளது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் நோக்கி வேகமெடுத்தது. மாலை சதாப்திக்கு கிளம்பினாள்.

அவள் ஏறிய வாகனம் வேகமெடுத்தது.அவள் மனமோ மகளிடம் சிக்கிக்கொண்டது. ஒருவாரம் கழித்து மீண்டும் பெங்களூரு. குடும்பத்தை விட்டு இவ்வளவு தூரம்.

பெங்களூரு அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதுதான்.ஆனால்,அங்கே அம்மாவும்,அவளது மகளும் இல்லையே!இவள் ரயிலில் பெங்களூரு செல்ல ஜெயந்தன் தனது காரில் பெங்களூரு நோக்கி பிரயாணம் செய்தான்.

பிரயாணம் நீண்டு செல்வதுபோல் அவனுக்குள் பிரமை.அடுத்தநாள் காலை ஒரு மீட்டிங்.மாலை நெருங்கிய நண்பனின் வீட்டு திருமண ரிசப்ஷன்,லீலா பாலசில் . இரண்டையும் முடித்துவிட்டு செவ்வாய் கிழமை மீண்டும் சென்னை பிரயாணம். இதிலெல்லாம் தனக்கு என்ன கிடைக்கிறது என்று யோசித்துப்பார்த்தான் . உதடுகள் விரக்தியில் புன்னகை கொண்டது.

சமீப காலமாக இப்படித்தான் .அவனுக்குள் தனக்காக வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது என்ற யோசனை. அவன் விரும்பிய மனைவி கன்யா மூலமாக ஒரு குழந்தையாவது இருந்திருந்தால் வாழ்க்கை இப்படி போரடிக்காதோ என்றும் தோன்றியதுண்டு. மனக்கண்ணில் சாயா வந்து நின்றாள். அவள் நிச்சயம் நல்லபென் தான்.ஆனால்,எனக்கானவள் அல்ல என்றே அவனுக்குத் தோன்றியது. சமீப காலமாக அவளது பார்வை மாற்றத்தை அவனும் உணர்கிறான்.

தேவை இல்லாமல் அவள் மனதில் சஞ்சலத்தை உண்டுபண்ண அவனுக்கு இஷ்டமில்லை. அப்பாவிடம் இது பற்றி நிச்சயம் பேசியாக வேண்டும். அதேபோல் எனது கனவுப்பெண் கனவு அல்ல.நிஜத்தில் சென்னையில் இருக்கிறாள்.அவளையும் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தவனாக அவள் உருவத்தை மனதில் கற்பனை செய்து பார்த்தான்.

அவளது உருவம் அச்சுபிசகாமல் வந்தபொழுதும் ,முகம் மட்டும் தெளிவில்லாமல் அவனை படுத்தியது.
ஆனாலும் அவனது கற்பனைகூட சுகமளிக்க அப்படி தூங்கிப்போனான். சதாப்தியில் அமர்ந்திருந்த சுபாவுக்கு ரயிலில் உணவு கொடுக்கப்பட்டது. மகளின் ஞாபகத்தில் அதை பிரித்து சாப்பிடக்கூட தோன்றாமல் அப்படியே வைத்துவிட்டாள் . கெம்பகௌடா ரயில் நிலையத்தில் ஒரு பேருந்தை பிடித்து மாரத்தஹள்ளி செல்லலாம்.அங்கிருந்து ஆட்டோவில் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிடலாம் என்று அவசரகதியில் யோசித்தவள் லேசாக கண்மூடினாள் .அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

மறுநாள் காலையில் அலுவலகம் சென்றவன் வேலையை முடித்துவிட்டு அப்படியே தனது அறைக்கு வந்துவிட்டான். மாலை பங்க்ஷனுக்கு கிளம்ப இன்னும் மூன்றுமணி நேரங்கள் முழுதாக இருக்கிறதே!என்று எண்ணியவன் எங்காவது வெளியே செல்லலாம் என்று யோசித்து மதிய உணவுக்காக தனது நண்பர்களை அழைத்தான். எல்லோருமாக ஜைநகரில் இருக்கும் அந்த பெரிய ஹோட்டலில் சந்தித்துக்கொண்டார்கள். கொஞ்சநேரம் அவர்களுடன் இருந்துவிட்டு கிளம்பியவன் நேரே லீலா பேலஸ் நோக்கி காரை செலுத்த சொன்னான். அவன் எதிர்பார்க்காத நிகழ்வு.

தலையில் கட்டுடன் அவனது கனவு ஆட்டோவில் ஏற , திடுக்கிட்டவன் "ச்சை ,யார பார்த்தாலும் அவள் போலவே இருக்கு.அவளிங்கே எப்படி வந்திருப்பா, சென்னைல தானே பார்த்தேன் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.ஆனாலும் அவ்வன் மனம் அந்த பெண் அவள்தான் என்று அடித்துக்கூறியது.

சிக்னல்லில் இருவரது வாகனமும் அருகருகே நிற்க, எங்கேயோ பார்த்துக்கொண்டு வந்தவன் மீண்டும் அவளை கவனிக்கத் தவறினான் . லீலா பேலஸ் வரை இருவரது வாகனங்களும் ஒன்றசாகத் தான் சென்றது. அங்கேதான் ஒரு பெரிய வணிக வளாக வேலை நடந்து கொண்டிருக்க அங்கே உள் நுழைந்தாள் சுபா. அவளைத்தாண்டி சென்றவன் அவளது பின்புறத்தை மட்டும் பார்த்தான்.ஆனால் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இரண்டு மாதங்கள் நிமிஷங்கள் போல் கடந்து சென்றது. இன்னமும் சென்னையில் வேலை தொடங்க ஒரு மாதம் இருக்கிறது. சுபாவின் சென்னை-பெங்களூரு பிரயாணத்திலும் ,அவளது வாழ்விலும் எந்த மாற்றங்களும் இல்லை. சாயாவை நிச்சயம் மணம் முடிக்க முடியாது என்பதை தெளிவாக ஜெயந்தன் அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டான்.


அவளது பார்வை இதிலெல்லாம் மாறவே இல்லை. வேலையை விட்டுச் செல்லும் எண்ணமும் அவளுக்கு இல்லை. வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மையல் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.ஜெயந்தன் கண்டுகொள்ளவில்லை. அதை சாயா பெரியதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.


அவளது மகனும் முன்னாள் கணவனும் இந்தியா வர ,அவர்களுடன் நேரம் செல்வழிக்கவென்று ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றவளுக்கு, அங்கே அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் தவிப்பாகவே இருந்தது.முன்னாள் கணவனின் காதல் பார்வை சற்றும் மாறவே இல்லை. குழந்தையின் அம்மா மீதான பாசம் அதுவும் அவளுக்கு திகட்டும் அளவுக்கு கிடைத்தது.


அவள் மனம் மிகவும் தவித்துதான் போனது. மீண்டும் அவர்கள் இருவரும் கிளம்பும் முன்னர் அவர்களுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்து தள்ளினாள் சாயா . கிளம்பும் நாளும் வர, அவர்களிடம் வருஷா வருஷம் என்னை பார்க்க வேவுவீங்க தானே..என்று அபத்தமான கேள்வியை கேட்டு வைத்தாள் . அவளது மகன் புரியாத பார்வை பார்க்க,"அவள் கணவனோ இன்னும் உனக்கான வாழ்க்கை உனக்காக வெயிட் பண்ணுது.உனக்கு எப்போ வேணும்னாலும் நீ அங்கே வரலாம். " என்றுவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். சாயாவின் கண்களில் எதையோ இழந்த தவிப்புடன் கண்ணீர் வழிந்தது. அவள் வாழ்க்கை எங்கே என்று புரிந்துகொள்வாளா..இல்லை நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமா என்றுதான் தெரியவில்லை.

 
Top