chitrasaraswathi
Member
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK38ன் மரம் தூவும் மழை எனது பார்வையில். கார்த்திக் தன் வீட்டில் அம்மா அப்பா இல்லாததால் தன் அம்மா வளர்த்த மாமா பெண் சொர்ணலதாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் லதாவின் அண்ணனுடன் நடக்க இருந்த அவனின் தங்கை அமுதாவின் திருமணமும் சேர்ந்து நின்றுவிடுகிறது.
திருமணம் தடைபடுவதால் தங்கை அமுதாவை தன்னுடன் கூட்டிச் சென்று மேலே படிக்க வைப்பதுடன் தன்னுடன் வேலை செய்யும் நண்பனுடன் திருமணமும் செய்து வைக்கிறான். கார்த்திக் அப்பாவின் நண்பரின் மகள் கீர்த்தனா காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்ய அதனால் அவள் அப்பாவிற்கு மாரடைப்பு வருகிறது. அவரையும், கீர்த்தனாவையும் மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்ளும் அவனை கீர்த்தனாவின் அப்பாவிற்கு பிடித்தம் ஏற்படுவதால் கீர்த்தனாவிற்கு கார்த்திக்கை திருமணம் செய்து வைக்க கேட்டு திருமணம் நடக்கிறது.
காதல் தோல்வி மற்றும் தன்னால் தன் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது என்ற குற்ற உணர்வால் கீர்த்தனாவிற்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவளிடம் கார்த்திக் தன் அண்ணன் மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இரண்டு பெண்களின் வாழ்க்கையை அழித்துவிட்டான் என்று கார்த்திக்கின் அம்மா சொல்வதை கேட்டு மனச்சிதைவு ஏற்படுகிறது.
கார்த்திக் தனது பொறுமையான நடவடிக்கைகளால் எப்படி கீர்த்தனாவின் மனதை அமைதிப்படுத்துகிறான் என்பதையும் அவனால்தான் இரு பெண்களின் வாழ்க்கையும் சீராகிறது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். கார்த்திக்கின் அப்பா பெருமாள் அருமையான கதாபாத்திரம். சாந்தியை போல ஒரு அம்மா நடந்துகொள்வார் என்பதும் அவரின் அண்ணன் குழந்தைகள் மீது மட்டும் நிபந்தனைகள் இல்லாத அன்போடு இருப்பதும் சாந்தியை எதிர்மறையான கதாபாத்திரமாகவே எண்ணத் தோன்றுகிறது. மன அழுத்தத்தில் உள்ள மனைவியை சமாளிக்கும் கார்த்திக் நன்று. வாழ்த்துகள்.