எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 07

admin

Administrator
Staff member

அத்தியாயம் 7​

மாலை நான்கு மணியாகியும் கொளுத்திக் கொண்டிருந்தது வெயில்... ஈரோட்டலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அகரனின் வாகனம்.​

"அப்பப்பா என்ன வெயிலு வெயிலு கார்ல வர நமக்கே இப்படி இருக்கே. காட்டுல வேலை செய்றவங்களுக்கு எப்படி இருக்கும்..." வாகனத்தின் ஏசியை அதிகரித்துக் கொண்டே கூறியவன் கண்களில் சில மீட்டர் தூரத்தில் திண்டல் முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பில் நின்ற பெண் விழுந்தாள்.​

காரிகையைக் கண்டதும் முகம் மலர "வாவ் கேர்ள்..." என முணுமுணுத்தான்.​

ஆம் அக்னிதா தான் நின்றிருந்தாள். அரக்கு வண்ணப் புடவையில் பார்க்கவே அத்தனை அழகாய் தெரிந்தாள். ஒரு வாரத்திற்கு முன்பு கல்லூரியில் பார்த்தது மீண்டும் இப்போது தான் காண்கிறான்.​

அந்த உள்ளூர் அழகியை கண்டும் காணாதது போல் கடந்து விட மனமில்லை அரவுந்த்திற்கு. அண்ணனிடம் கேட்டால் மீட்டிங்க்கிற்கு நேரமாகும் என்ற மொக்கை காரணத்தைக் கூறி வாகனத்தை நிறுத்த மாட்டான். "என்ன செய்வது' கன்னக் கதுப்புகளை கடித்தபடி யோசித்தவன் "ஸ்டாப் த கார்... ஸ்டாப் ஸ்டாப், அட வண்டியை நிறுத்து டா..." அவசரமாகக் கூறினான்.​

"என்னடா? என்னாச்சு?..." இளையவனின் அவசரத்தில் பெரியதாக பதறவில்லை என்றாலும் மெல்லிய பதட்டம் அவனுள்ளும்.​

அவனது அன்வான்டடட் கேள்வியை ஸ்கிப் செய்துவிட்டு "அப்படி ஓரமா வண்டியை நிறுத்து டா..." பதட்டக் குரலில் சாலையின் ஓரத்தை கைக் காட்டினான்.​

"என்னாச்சு டா? வாமிட் வருதா?..." எனக் கேட்டுக் கொண்டே அவன் கைகாட்டிய இடத்தில் வாகனத்தை நிறுத்தினான்.​

அக்கணம் சிலடி தூரத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவளைக் கண்டான். ' இவளா?...' அலட்சியமாக பார்த்த மனம்...​

அடுத்த நொடி"இவ, என் கண்ணுக்கு தெரியவே இல்லை ஏன்?...' என்ற கேள்வியை கேட்கவும் செய்தது.​

'ஆழாக்கு சைஸ்ல இருந்தா எப்படி கண்ணுக்கு தெரியும்...' மற்றொரு மனம் கேலியாய் கூறியது. மனதின் கேலியில் ஆடவனது இதழ்களில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.​

அதே புன்னகையுடன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனை பார்த்தான். அவன் அங்கிருந்தால் தானே, எப்போதோ வாகனத்தில் இருந்து இறங்கியிருந்தான்.​

"இவனை..." என்று தலையில் அடித்துக் கொண்டவன் சிலடி தூரத்தில் நின்ற பெண்ணை பார்த்தான்.​

அவனையும் அறியாமல் பாவையை ரசித்து பார்த்தது காளையின் கண்கள். மடவோளுக்கு அருகில் நின்றிருந்த கல்லூரி பெண்கள் இவனது பார்வையில் விழவேயில்லை என்பது குறிப்பிடத் தக்கது.​

அக்கணம் ஆடவனது ரசிப்பை பொறுக்க முடியாமல் அவனுள் உறங்கிக் கொண்டிருந்த அகம்பாவி சட்டென விழித்தான்.​

"உனக்கு ஆயிரம் வேலை இருக்கு. போயும் போயும் இவளை பார்த்திட்டு இருக்க, கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு?ச்சீ ச்சீன்னு நினைச்சுட்டு கடந்து போக வேண்டிய ஆளை ரசிச்சு பார்த்திட்டு இருக்க இடியட் முதல்ல இங்கிருந்து போ...' என்று கட்டளையிட்டது.​

மனதின் கட்டளைக்கு இணங்க காரை ஸ்டார்ட் செய்தவன் அங்கிருந்து கிளம்பும் நேரம் தான் அது நடந்தது.​

இங்கு வாகனத்திலிருந்து இறங்கி அக்னியின் அருகில் சென்ற அரவிந்தோ இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் "ஹாய் வாவ் கேர்ள். எப்படி இருக்கீங்க?..." எனக் கேட்டான்.​

தீடிரெனக் கேட்ட அரவிந்த் குரலில் திரும்பியவள் அவனைப் பார்த்து புன்னகத்தப்படி "நல்லா இருக்கேன் அரவிந்த். நீங்க எப்படி இருக்கீங்க?..." எனக் கேட்டாள்.​

"பாருங்க எப்படி இருக்கேன் நான்..." கைகள் இரண்டையும் விரித்து காட்டியவனுக்கு சிரிப்பைப் பதிலாக கொடுத்தாள் அக்னி.​

"ஆமா? எப்பவும் காலேஜ் பஸ்ல தான் போவீங்க, இன்னைக்கு என்ன வெளிய நின்னுட்டு இருக்கீங்க? அவுட் பஸ்க்கு வெயிட்டிங்கா? இல்லை உங்க ஆளுக்கு வெயிட்டிங்கா..." கண்ணடித்து கேட்டான்.​

அவனை மெல்லிய புன்னகையோடு பார்த்தவள் "செகண்ட் ஒன்..." என்றாள்.​

"பார்ரா, ஆள் இருக்குன்னு சொல்லவே இல்லை... யார் அவரோ..." என அரவிந்த் கேட்கவும் அன்று அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை மோகன் வரவும் சரியாக இருந்தது.​

வந்தவனைப் பார்த்து வாங்க என்பது போல் இமை மூடித் திறந்தவள் அரவிந்திடம் திரும்பி இவர் தான் என்பது போல கண் காட்டினாள்.​

"வாவ் ரியலி..." ஆச்சரியமாக கேட்டவன் மோகனை பார்த்து "ஹாய் ஹீரோ..." என்று கையசைத்தான்.​

பதிலுக்கு அவனும் கையசைத்து "ஹாய்.." என்றவன் ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங்கில் வைத்துவிட்டு அக்னியிடம் யார் இவர் என்பது போல் கண்களால் கேட்டான்.​

"ஷ்..." என்று தலையில் தட்டிக் கொண்டவள் "இவர் அரவிந்த். என்னோட..." அடுத்து அவள் பேசும் முன் அகரன் வாகனத்தின் ஹாரனை வேகமாக அடித்தான்.​

மூவரின் பார்வையும் சிலடி தூரத்தில் நின்ற காரின் மீது விழுந்தது. "ஷ் என் அண்ணா தான், இம்போட்டன்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னான். லேட் ஆயிடுச்சுன்னு கூப்படறான் போல. சாரி காய்ஸ் அண்ட் ஒன் டே பார்ப்போம்..."கைக் கடிகாரத்தை பார்த்தபடி கூறியவன் இருவருக்கும் தலையசைத்து விட்டு காரை நோக்கி நடந்தான்.​

"செமல இரண்டு பேரும். சோ கியூட்..." காரில் ஏறியமர்ந்தவன் சிலடி தூரத்தில் நின்ற இருவரையும் பார்த்தப்படி கூறினான். அதற்கு பதில் பேசாமல் அரவிந்தை முறைத்தவன் அடுத்த நிமிடம் வாகனத்தை கிளப்பி இருந்தான் வேகமாக.​

அகரனின் இறுகிய முகத்தையும், வாகனத்தின் வேகத்தையும் மாறி மாறி பார்த்தவன் "ஈரோடு திண்டல் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் விபத்திற்கு உள்ளாகி அப்பாவி அரவிந்தனும், அடப்பாவி அகரனும் பரிதாபமாக உயிர் இழந்தனர்..." செய்தி வாசிப்பது போல் வாசித்தான்.​

கோபத்தில் இருந்தவனுக்கு இவனது காமெடி பேச்சு இன்னுமின்னும் எரிச்சலை கொடுத்தது. பல்லைக் கடித்தபடி "வாயை மூடிட்டு வரயா? இல்லை கார்ல இருந்து தள்ளி விடவா..." கத்தினான்.​

சுண்டு விரலால் காதைக் குடைந்து கொண்டே "இப்ப என்னாச்சுன்னு இந்தளவுக்கு கத்ற நீ?..." பொறுமையாகவே கேட்டான்.​

"எதுக்குன்னு தெரியாத உனக்கு, இப்ப அவள்ட போயி பேசலன்னு யார் அழுதா..." எனக் கேட்டவன் பல்லைக் கடித்துக்கொண்டு​

"அவனைப் பார்க்கவே கடுப்பா இருக்கு, இதுல கியூட்டாம் கியூட், வாந்தி வருது இரண்டு பேரையும் பார்க்க..." என்றான் கடுப்பாக.​

அண்ணனை விசித்திரமாக பார்த்தவன்" உன் வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன். ஹாஸ்பிடல் விடு..." என்றான் சீரியசான குரலில்.​

அவனைக் கொலைவெறியுடன் பார்த்தான் அகரன். காளையின் பார்வையை கண்டுகொள்ளாமல் "தட் கேர்ள்ளை பார்த்து ஒன் வீக் ஆச்சேன்னு போயி பேசினேன். அண்ட் ஷார்ட் கேர்ள் அண்ட் டால் பாய் காம்போ கியூட் தான். நெடுமர ரேஞ்சுக்கு பொண்ணு தேடற உனக்கு என்ன தெரிய போகுது இந்த காம்போ பத்தியெல்லாம் பே..." என்றுவிட்டு திரும்பிக் கொண்டான்.​

இவனது பேச்சில் எரிச்சலின் உச்சிக்கே சென்றான் அகரன். அதுவும் அவர்களின் பார்வைப் பரிமாற்றம் கண்முன்னே தாண்டவமாடியது. அவனுக்கு பதில் சொல்லாமல் இன்னுமின்னும் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க செய்தான்.​

நிமிடங்கள் மெளனமாக கழிய சட்டென நினைவு வந்தவனாய்​

"இதெல்லாம் சரி, நீயேன் இவ்வளவு கோபப்படற?.." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.​

சகோதரனின் முகத்தைக் கூட பார்க்காமல் "எனக்கு அவங்க மேல என்ன கோபம்? யார் யார்கிட்ட இறங்கி போயி பேசணும்னு இங்கிதம் தெரியாத உன்னை மேல தான் கோபம் ..." என்றான் அதீத கோபத்தில்.​

அவனது கோபத்தை இமைக்காமல் பார்த்தவன் அதற்கு மேல் பேசவில்லை மெளனமானன். அந்த மெளனம் இரவு ஊட்டிக் கிளம்புகிறேன் என்று அகரன் கூறும்வரை நீடித்தது...​

******​

ஊட்டியின் குளிர் அவனது மேனியை மெல்ல தழுவிக் கொண்டிருந்தது. அதனை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தான் அகரன்.​

மனம் எப்பொழுதெல்லாம் நிலைக் கொள்ளாமல் தவிர்கிறதோ அப்போதெல்லாம் அகரன் இங்கு வந்துவிடுவான். கடந்த இரண்டு வருடத்தில் எத்தனையோ முறை இவனது தனிமையை இந்த ஊட்டி பார்த்திருக்கிறது.​

இன்று அவனது தனிமையை கெடுக்கவே அரவிந்த்தும் அவனுடன் வந்திருக்கிறான்.​

ஆம் ஊட்டிக் கிளம்புகிறேன் என கூறியது தான் தமாதம் கோபமாவது, மெளனமாவது அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு "அண்ணா டேய், நானும் வரேன் டா.. பிளீஸ்..." என்று ஓராயிரம் பிளீஸ்களை அள்ளித் தெளித்து விட்டு அண்ணனுடன் உதகை வந்துவிட்டான் அரவிந்த்.​

"ஏண்டா குளிரவே இல்லையா உனக்கு..." ஜர்கினுக்குள் ஒழிந்து கொண்டு கேட்ட தம்பியை நிமிர்ந்து பார்த்தவன் "எனக்கு குளிர் பிடிக்கும். அதை ஆழ்ந்து உணரது ரொம்ப பிடிக்கும்..." ரசித்துக் கூறினான்.​

மழையை ரசிப்பவர்கள் ஆயிரம் பேர் இருப்பார்கள் ஆனால் இந்த குளிரை ரசிப்பவர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரில் அகரனும் ஒருவன்.​

"நீயே உணர்ந்துக்க சாமி...எனக்கு நடுங்குது. நான் சித்த நேரம் ஃபயர் கேம்ப்ல உட்கார்ந்துட்டு வரேன்..." என்றவனை மேலிருந்து கீழாக பார்த்தவன்​

"குளிர்ன்னா போர்த்தி படுக்கிற ஆள் நீ, ஃபயர் கேம்ப்க்கு வாடான்னு சொன்னாலும் அதுல இருந்துட்டு வந்தா இன்னும் குளிரெடுக்கும் நான் வர மாட்டேன்னு சொல்லுவ, இப்ப என்ன நீயா போறேன்னு சொல்ற, என்னடா என்ன திருட்டுத்தனம் பண்ற..." சந்தேகமாக பார்த்தபடி கேட்டான்.​

சகோதரனின் சந்தேகப் பார்வையில் சிரித்து வைத்தவன் "அங்க பாரு..." ஃபெயிர் கேம்ப்பில் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரிப் மாணவர்களைக் காட்டினான்.​

திரும்பி கல்லூரி மாணவர்களை பார்த்தவன் கண்களுக்குள் அவர்களுக்கும்,தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல தனிமையில் அமர்ந்திருந்த அனிச்சம் பூவின் மீது விழுந்தது.​

புருவங்கள் சுருங்க அப்பெண்ணை பார்த்தவன் "சரி வா..." என எழுந்தான்.​

அகரனை விசித்திரமாக பார்த்தவன்​

"நீயா... உனக்கு தான் இதெல்லாம் பிடிக்காதே டா..." எனக் கேட்டான்.​

"பிடிக்காது தான். ஆனாலும் உன்னை தனியா அனுப்ப முடியாதுல, நான் அந்த காலேஜ் ஸ்டாப்ஸ் கிட்ட பேசி அவங்களோட உன்னை விடறேன். ஸ்டூடண்ட் விட ஸ்டாப்ஸ் ஜாலியா இருப்பாங்க, கொஞ்ச நேரம் அவங்களோட இரு, ஏதாவது குடிக்க சொன்னா கொஞ்சமா குடி, அதிகமா போனா உனக்கு சேராது..." எழுந்து பேன்டை தட்டிக் கொண்டே கூறினான்.​

அவன் தன்னை தனியாக விடுவதே அதிகம் இதில் கொஞ்சமாக குடி என்றது முகத்தில் தௌசெண்ட் வாட்ஸ் பல்ப்பே எரிந்தது. நல்ல பிள்ளையாக அண்ணனின் பின்னாலேயே சென்றான் இளையவன்.​

அவன் கூறியது போலவே அந்த கல்லூரி ஆசிரியரிடம் கேட்டு அவர்களுடன் அரவிந்தை விட்டவன், அவனை பார்த்துக் கொள் என்பது போல தலையாட்டிவிட்டு தனிமையில் அமர்ந்திருந்த அனிச்சம் பூவை நோக்கி நடந்தான்.​

அப்பெண்ணின் அருகில் செல்ல செல்லவே மெல்லியதாய் கேட்டது அவள் குரல் வழியே வந்த பாடல்.​

தொலைவிலே வெளிச்சம்​

தனிமையில் உருகும் அனிச்சம்​

கனவுதான் இதுவும்​

கலைந்திடும் என​

நெஞ்சில் நெஞ்சில்​

தினம் வருதே அச்சம்​

******​

எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்... (இன்னும் சரி பார்க்கப்படவில்லை...)​

 
Aravind so sweet boy 😍😍😍😍
Adei antha agambaaviya vizhippodaye vachchiru...velangirum un vazhkai 😏😏😏
அவன் அவணைவிட்டு போகவே மாட்டான் கா... மனுசனுக்கு இரண்டு புத்தி எப்பவும் இருக்குமே
அரவிந்த் ❤️
 
Top