எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-23

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK7O

அத்தியாயம்-23

மணமேடையில், பட்டுவேட்டி சகிதமாக, கம்பீரமே உருவமாய் அமர்ந்திருந்தவனையே பார்த்திருந்தார் ரத்தினவேல்.

நினைவுகள் பின்நோக்கிச் சென்றன, மகளின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் உடனே திருமணம் வைக்கச் சொன்ன ரோஹித்தின் மீது அதிருப்தி இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு வித நெருடலுடனே திருமண ஏற்பாட்டைச் செய்தார். ஏதோ தவறு நடக்க போவதாக உள்மனம் உரைத்தது. மிகுந்த குழப்பத்துக்கு உள்ளானார் ரத்தினம்.

அவரின் உள் மனம் சொன்னது போலவே, அவரின் அலைப்பேசிக்கு வந்து சேர்ந்திருந்தது அந்தக் காணொளி. அதிலிருந்தவை, ரோஹித்தின் இருண்ட பக்கங்களை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நிலைகுலைந்து போனார் ரத்தினம்.

எப்பேற்பட்ட அயோக்கியனை தன் மகளுக்குத் திருமணம் செய்யவிருந்தோம் என்பதை நினைத்துப் பதறிப் போனார்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தவர், உதவிக்காகத் தன் நண்பரும் கமிஷனருமாகிய ரவி பிரசாத்தை பார்க்கச் சென்றார்.

கையில் எதையோ வைத்துப் புரட்டிக் கொண்டிருந்த ரவி பிரசாத், அதிசியத்திலும் அதிசியமாகத் தன்னை பார்க்க வந்திருக்கும் ரத்தினத்தை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்.

“ வாட் எ சர்பிரைஸ் டா, இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சிச்சா” என்றார்.

“ உன்ன பார்க்கனும்னு தோணுச்சு அதான் வந்திட்டேன்” என்றவரின் குரல், ஏதோ போல் இருப்பதை கண்டு, மேலும் பேச வந்த ரவியின் அலைப்பேசி அலறியது.

“ ஒரு நிமிஷம் டா, வந்திடறேன்” என்று எழுந்துச் சென்றார் ரவி.

காபியினை பருகியபடி, ரத்தினம் அறையில் பார்வையை சுழல விட, சற்று அருகிலிருந்த சோபாவில், தன் மார்பில், அனுவின் குழந்தை சனாவை போட்டபடி உறங்கிக்கொண்டிருந்தான் சந்திரன்.

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், மெல்ல திரும்பி யோசனையோடு காபியை பருகலானார்.

எதிரே இருந்த புகைப்பட ஆல்பம் அவரின் கண்ணில் படவே, அதை எடுத்துப் புரட்டினார்.

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரவி வந்திட, ஆல்பத்தை மூடி வைக்கப் போன ரத்தினத்தை தடுத்த ரவி, “நம்ம சனாவோட பர்த்டே ஆல்பம் டா ரத்து. இப்போ தான் நானே பார்த்தேன், நீயும் பாரு” என்றபடி எதிரே அமர்ந்தார் ரவி.

ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கண்களில் பட்டது அந்தப் புகைப்படம்.

சந்திரனையும், இனியையும், தம் இரு பிஞ்சு கைகளில் பிடித்தபடி இருந்த சனாவின் புகைப்படம் அது. முகம் கொள்ளாப் புன்னகையுடன் இருவரும் குழந்தையின் அருகே நின்றதை அற்புதமாகக் காட்டியது அந்தப் புகைப்படம். மனதில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார் ரத்தினம்.

“ இது நம்ம சந்திரன் தானே” என்று தெரியாமல் கேட்பதைப் போல் கேட்டார் ரத்தினம்.

அதற்கு ரவி பதிலிளிக்கும் முன், “ஆமா அங்கிள், அவரே தான். இதோ இவ்ளோ நேரம் சனாவோட விளையாடிட்டு இப்பதான் ரெண்டு பேரும் தூங்குறாங்க” என்றாள் அனு.

அதைக் கேட்டவாரே ஏதோ யோசனையிலிருந்த ரத்தினத்திடம்,
“என்ன ரத்து, உன் முகமே சரியில்ல ஏதோ மாதிரி இருக்கு, இன்னும் ஒரு வாரத்துல பொண்ணுக்கு கல்யாணம் வச்சிட்டு இவ்ளோ டல்லா இருக்க” என்றார் ரவி.

அவர் கேட்டதுதான் தாமதம், சட்டெனக் கண்கள் கலங்கியவர், நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.

“ எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல ரவி, ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை வீணா போன மாதிரி இனியோட வாழ்க்கையும் வீணா போயிடக் கூடாது டா, சொன்ன தேதில இந்தக் கல்யாணம் நடக்கனும்டா, ப்ளீஸ் எதாவது ஹெல்ப் பண்ணுடா” என்று சிறுபிள்ளை போல் கண் கலங்கியவரை, ஆறுதல் படுத்திய ரவி, “உனக்கு வேற யாருக்கும் குடுத்திடலாம்ன்னு தோணினா சொல்லு. பேசி முடிச்சிடலாம், அந்தப் பய ரோஹித்த, சந்திரன் பார்த்துக்குவான் என்றார்.

சிறிது நேரம் யோசித்தவர், “ந… நம்ம … ச… சந்திரன் எப்படி?” என்றார் ரத்தினம்.

அதில் ரவிக்கு புன்னகை தோன்ற, “அவனுக்கென்ன குறைச்சல்! ராஜா வீட்டு கன்னுக்குட்டி, எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன், சுருக்கமா சொன்னா ரொம்ப நல்லவன், கட்டினவளை கண்கலங்காம வச்சிகுவான். அவன கட்டிக்க போறவ புண்ணியம் பண்ணிருக்கனும்” என்றார் அமர்த்தலாக.

சட்டென நிமர்ந்த ரத்தினம் “சந்திரனுக்கு சம்மதம்னா, நம்ம இனியை அவருக்கே குடுத்திடலாம்” என்றார்.

அதில் அனுவும் ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய் சிரித்திட,“ சந்திரன் ஒத்துக்குவாரா?” என்றார் ரத்தினம் கேள்வியாக.

“ அங்கிள் இனியை சந்திரன் அண்ணாக்கு நல்லா தெரியும், கிட்டதட்ட ப்ரெண்ஸ் மாதிரி தான். நானும் அப்பாவும் பேசுறோம். அவரு கட்டாயம் ஒத்துக்குவாறு” என்ற அனு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்திரனை தட்டி எழுப்பினாள்.

“ ஹே அனு! ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் தூங்க விடு” என்றுவிட்டு மீண்டும் உறங்கச் செல்ல,
‘நாசமா போச்சு’ என்று தலையில் அடித்தபடி, ‘ அடேய் இங்க எவ்வளவு பெரிய விஷயம் ஓடிட்டு இருக்கு இவன் என்னன்னா கும்பகர்ணன் மாதிரி தூங்குறானே’ என்றபடி ‘நறுக்’ என அவன் கையைக் கிள்ள, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.

எழுந்தவன் ஏதோ பேச முயல, அதற்குள் அவனை அழைத்திருந்தார் ரவி.

அருகில் இருந்த இனியின் தந்தையை கண்டு யோசனையோடு வந்தவனிடம், நடந்த அனைத்தையும் கூறி இனியை திருமணம் செய்யுமாறு கேட்டிருந்தார்.

அதில் இன்பமாய் அதிர்ந்தவன், அதை வெளிக்காட்டாமல், சிறிது நேரம் யோசனை செய்வது போலப் பாவலா செய்து பின் சம்மதம் தெரிவித்தான்.

“ரொம்ப ரொம்ப நன்றி தம்பி. என்னோட பெரிய கவலை தீர்ந்துச்சு. எப்போலாம் என் பொண்ணுக்கு பிரச்சனை வருதோ, அப்போ நீங்கத் தான் ஆபத்பாந்தவனா வந்து காப்பாத்துறீங்க” என்று அவன் கரங்களைப் பற்றி நன்றித் தெரிவதித்தார் ரத்தினம்.

வழக்கம்போல் தனது மயக்கும் புன்னகையை சிந்தியவன், “அங்கிள் இப்போ இனிகிட்ட இது பத்தி எதுவும் டிஸ்கஸ் பண்ணி குழப்ப வேண்டாம், நிச்சயதார்த்தம் முடிஞ்சோன நானே பொறுமையா எடுத்துச் சொல்லிக்கிறேன்” என்றான் அர்த்தமாக.

“ பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் வார்த்தைகளில் நிகழ்விற்கு வந்தார் ரத்தினம்.

அரக்கு வண்ண பட்டில், அளவாய் ஆபரணம் சூடி, தேவதையாக நடந்து வந்தவளை விழிகள் அகற்றாது பார்த்திருந்தான் இதய்.

அருகில் அவள் வந்தமர, அவளை நெருங்கியவன், “அநியாயத்துக்கு இவ்ளோ அழகா இருக்காத மிரு, உன் மாமன் பாவம், இப்போ பாரு எனக்கு உன்ன தவிர வேற எதுவும் தெரிய மாட்டேன்ங்கிது” என்றவனின் கிறங்கிய குரலில், பெண்ணவளின் மேனியாவும் சிவந்தது.

வேத மந்திரங்கள் ஒலிக்க, தாலியை கையில் வாங்கியவன் அவளருகில் எடுத்துச் செல்ல, “ஆல்ரெடி நான் கொடுத்த தாலி உன் கழுத்துல தான் இருக்கே, மறுபடியும் ஒரு தாலி வேணுமா என்ன?” என்று, தான் அவளுக்கு வாங்கி கொடுத்த தங்க சங்கிலியைச் சுட்டிக்காட்ட, அதில் அவள் அவனை நோக்க, அவளை நேர்கொண்டு பார்த்தபடியே பொன் தாலிச்சரடினை அவள் கழுத்தில் அணிவித்திருந்தான் இதயசந்திரன்.

அவர்களின் அருகே நின்ற கதிருக்கும் ஸ்வேதாவுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

அதன் பிறகு நடந்த வைபவங்கள் சிறப்பாக நடந்தேற, ரத்தினவேலுவிற்கு பரமதிருப்தி.

மணமக்களுக்குப் பரிசளிக்க வந்திருந்த ஸ்வேதாவின் தந்தை ராம்குமாரோ, சந்திரனை கட்டித் தழுவித் தன் வாழ்த்தினைச் சொன்னார்.

அப்போது சந்திரனின் அருகில் நின்றிருந்த கதிரைக் கண்டவரோ, “ஹே மேன்! உங்கிட்ட ஒரு ஆங்கிரி யங் மேன் லுக் இருக்கு, ஏதோ ஒரு பழைய படத்துல வர ஸ்டார் மாதிரி இருக்கீங்க” என்றவர் புன்னகை முகமாக மேலும் அவனிடம் சில மணிதுளிகள் பேசிவிட்டு சென்றார்.

கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்திடவே, இரவும் வந்தது.

தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த ஸ்வேதாவிடம், “உனக்கு எல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ கூட என்கிட்ட இதய் வரத பத்தி சொல்வேயில்லல” என்றாள்.

அதற்கு மென்னகை ஒன்றை உதிர்த்த ஸ்வேதாவோ, “இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம், நானே நேர்ல பாத்து பேசிக்கிறேன்னு சொன்னாரு, அதான்” என்றாள் கண்ணைச் சிமிட்டி.

“கூட்டு களவானிகளா” என்றவளை அணைத்த ஸ்வேதா, “ரொம்ப சந்தோஷமா இருக்குடி, இதய் மாதிரி ஆளுங்கலாம் 'ஒன் டைம் ஒன்டர்’ (one time wonder). நீ ரொம்ப லக்கி, சோ ஸ்டே ஹாப்பி ஃபார் எவெர்” என்றுச் சொல்ல இருவருக்கும் ஒரு வித நிம்மதி.

மிதமான ஒப்பனையில் இதய்யின் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு வித பதட்டம் எழுந்தது. அவனை எப்படி எதிர்கொள்ள எனத் தெரியாமல் விழித்தவளை, தன் கைவளைவுக்குள் நிறுத்தியிருந்தான் இதய்.

மயில் வண்ண சில்க் காட்டன் புடவையில், அணிகலன்கள் ஏதுமின்றி, அவன் தந்த தங்க சங்கிலி மற்றும் காலையில் அணிவித்திருந்த தாலியுடன் நின்றிருந்தவளின் நெற்றி வகுட்டில் இருந்த குங்குமம் வியர்வையில் மெல்ல வழிய, அவளைப் பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு உணர்வுகள் தன் வசம் இல்லை.

“ஓய் இஞ்சி மரப்பா, என்ன ரொம்ப டெம்ட் பண்ணுறடி” என்றபடி இறுக்கி அவளை அணைத்திருந்தான்.

அவனின் அணைப்பில் மெல்ல அவள் துவள ஆரம்பித்தாள்.

“இ… இதய்”

“ம்ம்” என்றான் மயங்கிய குரலில்.

“கொ… கொஞ்சம் பேசனும்” என்றவளின் குரலில் மெல்ல நிதானத்திற்கு வந்தவன், படுக்கையில் சாய்ந்தமர்ந்து தன் மார்பில் அவளைச் சாய்த்தபடி “என் மிரு குட்டிக்கு என்கிட்ட என்ன தெரிஞ்சிக்கனும்” என்றான் கனிவாக.

அவனின் கனிவில் கரைந்தவளோ,
“ எ… என்ன பிடிச்சு தான் ஏத்துக்கிட்டிங்களா இதய், நான் தனி ஆள் கூட இல்ல, இ… இந்தக் குழந்தை… யாருது… எப்படி |என்னன்னு எனக்குத் தெரியலயல, என்ன நடந்ததுன்னு தெரியாம இத என்னால ஏத்துக்க முடியல” என்று அழுகையோடு பேச முடியாமல் தழுதழுத்தவளை, இடையோடு இறுக்கி அணைத்தவன், “மிரு ப்ளீஸ்! பழச எதையும் யோசிக்காத, என்ன பொறுத்தவர அது ஒரு விபத்து, அதுல ஏதோ ஒருவகையில

இந்தக் குழந்தை கிடைச்சிருக்கு, கடவுள் குடுத்த பரிசா அதை ஏத்துக்கலாம், தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணி நம்ம நிம்மதியை கெடுத்துக்க வேணாம். எல்லாத்தையும் நான் சரி பண்ணுறேன். என் கூட இருக்கப்போ, நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அதுதான் எனக்கு வேணும்” என்றான்.

“ இருந்தாலும் உங்களுக்குன்னு நிறையவே எதிர்பார்ப்பு இருந்திருக்கும், இந்தப் பேபிய என்னாலயே என்னுடையதா யோசிக்க முடியாதப்போ, நீங்க எப்படி, எ… எந்தவித தயக்கமும் இல்லாம..., இனிமே எப்படி நாம சேர்ந்து…? எனத் தடுமாறி கேட்டவளை பார்த்துப் புன்னகைத்தவன், “இந்த உலகத்துல காமம் மட்டுமே பிரதானம்னா, எல்லாரும் வெறி பிடிச்ச மிருகமா சுத்தியிட்டிருப்போம், பசி தாகம் மாதிரி காமமும் ஒரு உணர்வு அவ்வளவுதான், எல்லாமே அந்தந்த நேரத்து உணர்வுகள் தான். ஆனா காதல், தாய்மை, கனிவு, இரக்கம், புரிதல் இதுலாம் எப்பவும் இருக்க கூடிய உணர்வுகள், இதனால தான் நாம இன்னும் மிருகமாக மாறாம மனுசங்களா இருக்கோம். சோ, தற்காலிக உணர்வுகளுக்காக நிரந்தர சந்தோஷத்த நான் என்னைக்கும் இழக்க விரும்பல, உன்ன உனக்காகத் தான் காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டேன், உன் தலைமுடியில் தொடங்கி கால் நகம் வர எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதுபோலத் தான் உன் வயித்துல இருக்க குழந்தையும். என்னால அத வேறயா நினைக்க முடியல, உன்னோட சேர்த்து அதுவும் என்னோட சொத்து தான்” என்றவனை காதலோடு பார்த்தாள் இனி. இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் யாவும் நொடியில் தீர்ந்ததை போன்று உணர்ந்தவள், தன் மன்னவனின் பரந்த மார்பிலேயே அசந்து உறங்கிப் போனாள்.
 
Last edited:

santhinagaraj

Well-known member
இதய் சூப்பர்👌👌👌
இனியோட வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அப்பா யாரு??
 

NNK-70

Moderator
இதய் சூப்பர்👌👌👌
இனியோட வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அப்பா யாரு??
நாளைக்கு ud போடுறேன் சிஸ் ... தெரிஞ்சிடும்
 
Top