எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 18

NNK-41

Moderator

அத்தியாயம் 18​

டைரி​

பிறந்த வீட்டில் கிடைக்காத நிம்மதி என் அன்பு தோழியின் வீட்டில் கிடைத்தது. மாமியாரின் அன்பு ததும்பும் பார்வை ஒன்றே போதும் எத்தனை கஷ்டங்களையும் கடந்து விடலாம். மாமியாரை கொண்டாடும் மாமனார். எப்பொழுதாவது வந்து என் இடுப்பை கட்டிக்கொண்டு நிற்கும் இலக்கியா. மலர் மலர் என்று என்னை கிண்டல் செய்யும் வாசு. இது போதும் இறைவா!!​

இன்னும் ஒருத்தன் இருக்கிறான். ஆதித்யா… மூன்று முடிச்சுகள் போட்டு கணவன் என்று சொல்லிக்கொண்டு என் உடலை சொந்தம் கொண்டாடுபவன். இரவு ஏன் வருகிறது என்று நினைக்க வைப்பவன். என்னை ஆட்கொள்ளும் இரவெல்லாம் விடியா இரவு வேண்டும் என்று என் காதோரம் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கு தொலையா பகல் வேண்டும் என்று கதற தோனும்.​

முதல் தொடுகை எனக்கு இன்பத்தை கொடுக்கவில்லை. வலிகள் மட்டுமே. மனமும் சரி உடலும் சரி சமபங்கு வலிகள் கொண்டன. பிடிக்கவில்லை என்று சொல்லக்கூட விடவில்லை. சொல்லவும் முடியவில்லை. அவன் என்னை ஆட்கொள்ளும் நேரமெல்லாம் மனம் சங்கமத்தை ஏற்க மறுக்கிறது. பல நேரங்களில் சுதீஷின் செயல் என் நினைவில் வந்து அருவருக்க செய்தது. ஆனால் மனம் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவன் தொடுகைக்கு என் உடல் ஒத்துழைத்தது. முரனான வாழ்வுக்கு பழக்கப்பட்டு விட்டேன்.​

போன தடவை இலக்கியா வீட்டுக்கு வந்த பொழுது கொடுத்துவிட்டு சென்றதை எடுத்து பார்த்தேன். இரு கோடுகள் பளிச்சென தெரிந்தன. மூன்று மாத திருமண வாழ்வில் ஒன்றரை மாத கரு என் மணிவயிற்றில் பூத்திருந்தது.​

மகிழ்வதா இல்லையா என்று தெரியவில்லை. இத்துடன் என் படிப்புக்கு முழுக்கு போடப்படும் என்று தோன்றுகிறது. இங்கேயும் என் படிப்புக்காக மறுபடியும் போராட வேண்டுமா?? தெரியவில்லையே? இப்பொழுது நான் என்ன செய்ய?​

என்ன நடந்தாலும் சரி என்ற முடிவுடன் ஆதித்யாவிடம் சென்றேன். அவனோ காலை நேரம் என்றும் பாராமல் என்னை இறுக அணைத்து முத்தமிட்டான். இன்று ஏனோ அந்த அணைப்பு எனக்கு தேவைப்பட்டது. அவன் சிசு என் வயிற்றில் குடியிருந்ததாலோ என்னவோ அவனை சொந்தம் கொண்டாடியது மனம். கண்மூடி அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டேன்.​

“என்னடி காலையிலேயே என்னை மயக்குற” என்றான் கரகரத்த குரலில். அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவன் அணைப்பு இறுகியது. ஏன் என்று அவனை நிமிர்ந்து பார்க்க…​

“உனக்கு தெரியுமா என்று எனக்கு தெரியல… ஆனா கல்யாணத்துக்கு பிறகு இன்னைக்குதான் முதன் முதலாக நீயாக வந்து என்னை தொட்டு பேசுற..” என்றான்.​

அப்படியா என்று நான் யோசித்து கொண்டிருக்கையில் ‘இவன் என்று உன்னை பேச விட்டான்?’ என்று மனசாட்சி இடித்துரைத்தது. எப்பொழுதும் அறைக்குள் வந்ததுமே விளக்கை அணைப்பதையே வேலையாக கொண்டிருந்தானே. பலனாக இப்பொழுது அவன் குழந்தை என் வயிற்றில். குழந்தையை நினைக்கும்போதே இனிமையாக இருந்தது. கன்னம் சூடானது.​

“என்னடி இப்படி சிவக்கிற? சூரியனை கண்டு மலரும் தாமரைபோல இருக்கடி! என் பெயரும் சூரியனின் பெயர்தான் நீயும் தாமரை மலர்தான். கடல் போல உன் விழிகளால என்ன உள்ளே இழுக்கிறடி” என்றான். அவன் இப்படியெல்லாம் பேசியது இல்லை. இன்று அவனின் வாய்மொழிகள் எனக்கு பிடித்திருந்தது.​

மனம் இறகாய் மிதந்தது. மனதில் குறுகுறுப்பு. மொட்டு ஒன்றும் மலரும் உணர்வு. கேட்டுவிடலாமா. சரி கேட்டுவிடவேண்டியதுதான் என்ற முடிவுடன் “என்னை காதலிக்கிறீங்களா?” என்று கேட்டுவிட்டேன்.​

“முன்ன எல்லாம் உன்னை பிடிச்சிருக்கானு என்று கேட்ப… இப்போ என்ன புதுசா காதலிக்கிறேனா என்று கேட்கிற?” பதில் கேள்வி கேட்டவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த முத்து உன் காதலினால் உருவானதா இல்லை என்மேல் உள்ள மோகத்தினால் விதைத்ததா என்று எனக்கு தெரிய வேண்டியிருந்தது.​

கலக்கத்துடன் அவன் முகம் பார்த்தேன். என்ன நினைத்தானோ அவன் உதடுகளை என் விழிகள் மேல் ஒத்தி எடுத்தான். பன்னீரால் ஒத்தடம் கொடுத்ததுபோல் குளிர்ந்தது என் விழிகள். குளுமையின் இனிமையில் என் இதழ்கள் விரிந்தன… வழி விட்டன அவனுக்கு. ஆவேசத்துடன் தேன் பருகினான் அவன். அவன் பருக இனித்தது என்னவோ எனக்கு. விந்தையாக இருந்தது. என் விரல்கள் அவன் பிடரி முடியை தேடி இறுகப்பற்றிக்கொண்டன.​

இன்னும் ஆழமாக முற்றுகையிட்டான். சில நிமிடங்கள் கழித்து என்னை விடுவித்தான். மூச்சிறைத்தது இருவருக்கும். அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டேன். என் நாசி அவனுடைய ஆண்மை நிறைந்த தேக மணத்தை சுவாசித்துக்கொண்டது.​

‘நான் உங்க..” கருவை சுமக்கிறேன் என்று சொல்வதற்குள் இண்டர்காம் சத்தம் போட்டது.​

என் பிறந்த வீட்டினர் வந்திருப்பதாக அவன் சொல்ல.. சட்டென விலகி அவன் முகம் பார்த்தேன். நகரவிடாமல் என்னை இழுத்து இடையில் அவன் கொடுத்த அழுத்தம் அவன் வேட்கையை உணர்த்தியது. என் மேனி எங்கும் இன்பவதை பொங்கியது. முதன் முறையாக அவன் தொடுகை என்னை எங்கோ இழுத்து சென்றது.​

“இன்னைக்கு புதுசா தெரியுறடி… மயக்குறடி..” என்று பிதற்றிக்கொண்டு என் கழுத்து வளைவில் முகம் புதைந்தவன் காயம் ஏற்படுத்திவிட்டே நிமிர்ந்தான். செங்கொழுந்தாகி நின்றிருந்த என்னிடம் புடவை கசங்கியிருப்பதாக சொன்னான். அப்பொழுதுதான் நானும் அதை கவணித்தேன். புடவை மாற்ற சொன்னவன். தானுமே சட்டையை மாற்றினான். ஏனென்று நான் பார்க்க… சட்டையில் இருக்கும் குங்குமத்தை சுட்டி காட்டி கண்சிமிட்டி சென்றுவிட்டான்.​

வெட்கமாக இருந்தது. சட்டென புடவை ஒன்றை கட்டிவிட்டு கண்ணாடிமுன் நின்று முகத்தை திருத்தினேன். கட்டிலில் அவன் கழட்டிப்போட்ட சட்டை என் கண்ணில் விழுந்தது. என் கைகள் வயிற்றை மென்மையாக தடவி கொடுத்தன.​

“இன்னைக்கு அப்பாகிட்ட சொல்லிடுவேன் பாப்பா… ஆனாலும் ஓரு பக்கம் எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கு. உனக்கும் என்னை போல ஆட்டிசம் வந்துட்டா? இன்று இரவு அப்பாட்ட சொல்லிட்டு அவரோட ரியாக்ஷன் எப்படி இருக்குனு வந்து எழுதுறேன். சரியா என் செல்லம்..”​

டைரி இத்துடன் முடிந்தது.​

**************​

என்னால என் கோபத்தை அடக்க முடியல. அவளுடன் என்னால் அந்த அறையில இருக்க முடியல. கார் சாவியை எடுத்துட்டு காருக்கு போனா என்னை தொடர்ந்து இவளும் வரா. ச்சே!! என்ன பெண்ணிவள்!!​

“நான் அப்படிப்பட்டவள் இல்ல..” என்று கைகளை பிடித்து சொன்னாள். வெளியே தோட்டக்காரன் காவலாளி உலாவுவார்களே என்ற எண்ணம் இல்லாமல் சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கா!! சட்டென அவளை காருக்குள் தள்ளிவிட்டு காரை எடுத்தேன். அருகிலிருக்கு பூந்தோட்டம் அருகே காரை பார்க் செய்து அவளை பார்த்தேன்.​

அழுதழுது முகம் சிவந்திருந்தது. என் மனதுக்குள் எதுவோ பிசைந்தது. கூடாது.. இந்த முகத்தை பார்த்து நான் மயங்கினது போதும்!!​

எத்தனை அழகா இன்றைய காலை விடிஞ்சது. நான் தொட்டா அப்படி நடுங்குவா. அவ மலர் போல் மென்மையானவள் என்று நினைச்சேனே!! ஆனா அது ஆட்டிசத்தால் என்று எனக்கு தெரியாம போச்சி.​

ப்ச்!! அந்த ராஸ்கல் சுதீஷ்.. அவன் சாவு என் கையிலதான்!! ஆனா இவ அவனோட நிச்சயம் வரைக்கும் வந்து நிப்பாட்டியிருக்கா!! யாரையோ காதலிச்சதால. ம்ம்… ஆமாம் வாசுனு ஒருத்தன் லவ் லெட்டர் வேற கொடுத்திருக்கான். இவளும் காதலிச்சிருப்பாளோ? ஆமாம் அதனாலதான் நிச்சயம் தடைபட்டிருக்கனும்.​

ஏன் என்கிட்ட சொல்லல? மூன்று மாதமா என்னுடன் ஈருடல் ஓருயிரா வாழ்ந்திருக்கா… என்கிட்ட மறைக்கலாமா? தப்பு செய்யலனா என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன? அப்போ தப்பு பண்ணிருக்கா என்று அர்த்தம்தானே!! அவளை பார்த்தேன்​

“எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு தெரியல. என் ஸ்டேட்டசுக்கு உன்னைப்போல உள்ள ஒரு குறையுள்ள பொண்ணை கட்டிக்கிட்டது எத்தனை பெரிய இழுக்கு தெரியுமா? அம்மாவோட விருப்பம் என்ற ஒன்றுக்கு மட்டும்தான் நான் உன்னை கல்யாணம் செய்தது. காதலிக்கலையானு கேட்டீயே… இப்போ தெரிஞ்சிக்கோ நான் உன்ன காதலிச்சதில்ல… உன் மேல எனக்கு இருந்ததெல்லாம் ஜஸ்ட் இந்த உடல் தேவை மட்டும்தான்!!”​

அதிர்வுடன் மலங்க மலங்க விழித்தவள் என் வார்த்தைகளை உணர்வதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாள். கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் புடவை மாராப்பை நனைத்தது. என் கண்கள் அவ்விடத்தில் பதிந்து மீண்டன. இதை காட்டித்தானே என்னை மயக்கினாள்!! கோபம் தலைக்கேறியது.​

“இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே வீட்டில் ஒரே அறையில் இருப்போம்… ஆனால் என் விரல் நகம்கூட உன் மேல் படாது!! ஊராரை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனா என் குடும்ப கௌரவம் எனக்கு முக்கியம்!! அவர்கள் மனம் நோகக்கூடாது. எப்போ என்கிட்ட இத்தனை பெரிய விஷயத்தை மறைச்சியோ அப்பவே நீ எனக்கு யாருமில்லை என்றாகிட்ட!!” என்றுவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தினேன்.​

“யாரும் கேட்டா அவசரமா கொடைக்கானல் கெஸ்ட் ஹவுஸுக்கு போவதா சொல்லிடு!!” என்றேன்.​

வாசலில் காவலாளி இல்லை என்பதை உறுதிபடுத்திவிட்டு காரிலிருந்து அவளை இழுத்து வெளியே நிற்க வைத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு சென்றுவிட்டேன். அதுதான் அவளை கடைசியாக பார்த்தது.​

இரவோடு இரவாக பைத்தியக்காரன் போல் காரை ஓட்டிச்சென்றேன். பன்னிரண்டு மணி நேர பயணத்தை பத்தாக சுருக்கிக்கொண்டேன். என் மனம் செல்லும் வேகத்துக்கு இணையாக என் காரும் சென்றது.​

கொடைக்கானலின் அடிவாரத்தில் காரை நிறுத்தினேன். காருக்கு ஓய்வு தேவை பட்டது. பெருமூச்சு ஒன்றைவிட்டு இயற்கையை ரசிக்க முனைந்தேன். மலையரிசியை போர்த்திக்கொண்டிருந்தன ஈரமுகில்கள்.​

ஒற்றை போர்வைக்குள் அவளுடன் கழித்த நிமிடங்கள் கண்முன் வந்து இம்சித்தது. இனி அவளை தொடமாட்டேன் என்று போட்ட சபதங்கள் எல்லாம் கூரியனை கண்டதும் கரைந்து போகும் பனியாய் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தன. ‘ரொம்பவே அடிக்ட் ஆகிட்டேன் போல’ மனம் இடித்துரைத்தது.​

அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. மணியை பார்த்தேன் காலை எட்டு என்று காட்ட… சொல்லியிருப்பாளோ என்ற எண்ணத்துடன் அழைப்பை எடுத்தேன்.​

“ஆதி எத்தனை மணிக்கு வெளிய போன?. செகுரிட்டிகிட்ட கேட்டா தெரியாதுனு சொல்றான். எங்கிருக்க? மலரும் இன்னும் கீழே வரல?” கேள்விகளை அவர் அடுக்கியதும்​

“ப்பா.. நான் நம்ம ஹோட்டல் விஷயமா கொடைக்கானலுக்கு வந்திருக்கேன். இனியாழ்ட்ட சொல்லிட்டுதான் வந்தேன். அவ டயர்ட்டா இருப்பா போல… எழுப்ப வேணாம்” என்று முடித்துக்கொண்டேன்.​

எப்பொழுதும் காலை ஆறு மணிக்கே எழுந்திடுவாளே? ஆத்திரத்தில் அவளை என்னென்னவோ சொல்லி திட்டிட்டேன். அதுக்காக இப்படி காலையில் எழாம அழுச்சாட்டியம் பண்ணுவாளா!! ரொம்ப பயந்துட்டாளோ? அப்படி என்ன சொல்லி திட்டினேன்? அவளுக்கு ஆட்டிசம் இருக்கே… ஏதாவது தப்பா….​

மறுபடியும் அழைப்பு வந்தது இப்பொழுது அம்மா பேசினார்.​

“அப்பா என்னவோ சொன்னார். அதைவிடு மலரை உன்னோடு அழைச்சிட்டு போயிருக்கீயா என்ன?” என்று கேட்க… பயப்பந்து தொண்டையை அடைக்க இல்லையென்றேன்.​

“என்ன சொல்லுற ஆதி? மலர் ரூம்ல இல்லயே பா!! உடம்புக்கு முடியாம படுத்திருக்காளோனு போய் பார்த்தா ரூம்ல யாரும் இல்ல. வீடு முழுக்க தேடிட்டேன். எங்கேயும் இல்ல. நேத்து அவ வீட்டு ஆளுங்க வந்ததிலிருந்து உன் முகமும் சரியில்ல. சொல்லு ஆதி சண்டை போட்டீயா? அவகிட்ட சொல்லிட்டு போயிருக்கனு சொன்னீயே… ஒருவேளை அவ உன்னை தேடி அங்கே வந்திருக்காளா?” அடுக்கடுக்கான கேள்விகள் எதுவும் என் மனதில் பதியவில்லை.​

என்ன!! அவள் வீட்டில் இல்லையா?? எங்கே போனாள்? அவ வீட்டுக்கு போயிருப்பாளோ?? அதுவும் இல்லை என்று அம்மா சொன்னார்கள்.​

“அவங்கப்பாக்கு கால் பண்ணா தீபாவளிக்கு முதல்நாள் வரதா சொல்றார். என்னடா நடந்துச்சு? சின்ன பொண்ணுடா அவ…” அம்மாவின் கதறல் மனதை பிசைய… உடனடியாக அப்பாவிடம் பேசினேன்.​

அப்பா போலீஸுக்கு போகலாம் என்று சொல்ல. வேண்டாம் என்று மறுத்துவிட்டு நான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன், நெஞ்சம் வேகமாக துடித்தது. உடனடியாக கார்த்திக்கை அழைத்தேன்.​

விவரங்களை லேசுபாசாக சொல்லிவிட்டு ரகசியமாக விசாரிக்க சொன்னேன். அதற்குமேல் என்னால் அங்கிருக்க முடியவில்லை. உடனே கிளம்பிவிட்டேன்.​

மனதில் அடங்கமுடியா கொந்தளிப்பு. நான் என்ன சொல்லிட்டு வந்தேன் இவ என்ன பண்ணி வச்சிருக்கா!! ஒரு சொல் பொறுக்க முடியலையா இவளுக்கு!! இத்தனை நாட்களா என்னிடம் அவ குறையை மறைச்சிதுக்கு நான் கோபப்படக்கூடாதா!! யாரையோ காதலிச்சிருக்கா. அதையும் சொல்லல… அந்த ராஸ்கல் கூட நிச்சயம் வரைக்கும் போயிருக்கா… அதையும் மறைச்சிட்டா… தப்பு செஞ்சதெல்லாம் அவ!! நான் தட்டி கேட்டா வீட்டை விட்டு ஓடிடுவாளா?​

இருடி உன்னை முதல்ல கண்டுபிடிக்கட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு!!​

தேடல்கள் தொடர்ந்தன. நிமிடங்கள் நாட்களாக மாற… நாட்கள் மாதமாக மாற… மாதங்கள் வருடங்களாகின. அவள் வரவே இல்லை. நான் இறுகிப்போனேன்.​

******************​

மஞ்சரி கண்களை மூடி அமர்ந்திருந்தாள். முகமோ செந்தனலை பூசிக்கொண்டிருப்பது போல் இருந்தது.​

“மஞ்சரிமா..” என்று கைபிடிக்க வந்தவனை தீயாய் முறைத்தாள்.​

“உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என ஒன்று இருக்கா என்ன? கூடப்பிறந்தவ காணாமல் போயிட்டா என்ற கவலை கொஞ்சம்கூட இல்லாம என்னோட டூயட் பாடிகிட்டு கல்யாணமும் பண்ணி இருந்திருக்கீங்க. உங்க வீட்டு ஆளுங்களோட மூணு வேலை நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டு சுகமா வாழ்ந்திருக்கீங்க!!”​

நீதி தேவதையாய் நின்றிருந்த மனைவியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தலை கவிழ்ந்தான் நிலவன்.​

“தெரிஞ்சே கொலை செஞ்சப்பிறகு மன்னிப்பு கேட்கிறவனை நீங்க மன்னிப்பீங்களா??” மஞ்சரியின் கேள்வியில் ஆடிப்போனான் நிலவன்.​

“மஞ்சரிமா…” தீனமான குரலில் அவன் அழைக்க…​

“ப்ச்!! இப்போ எதுவும் என்னிடம் சொல்லாதீங்க. நான் கேட்கிற மூட்ல இல்ல!! போங்க!! போய் அந்த படுபாவி பயலுக்கும் பூமிக்கும் நடக்கிற கல்யாணத்தை எப்படி தடுக்கிறதுனு யோசிங்க…” என்றவள் விருவிருவென அறையை விட்டு வெளியேற… சிலையாய் அமர்ந்திருந்தான் நிலவன்.​

*****************​

“ஸார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” தயங்கினாள் இனியாழ்​

“கொஞ்சி பேசனுமா..” என்று மாறன் கேட்க.. இனியாழின் விழிகள் பெரிதாக விரிந்தன. “இல்ல அப்படித்தான் என் காதில் விழுந்துச்சு..” கள்ளப்புன்னகையுடன் அவன் சொல்ல…​

“இப்படி பேசினா எப்படி?” கண்களாலும் பேச்சாலும் நேசத்தை வைத்து திக்குமுக்காட வைப்பவனை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறு நின்றிருந்தாள். அதைக்கண்ட மாறனுக்கு சுருக்கென வலி வந்தது.​

“ஏன் என்னை பார்க்க பிடிக்கலையா இனியாழ்? என்னை பார்க்க வில்லன் போல தெரிகிறதா?” உடல் இறுக கேட்டவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.​

இவனையா எனக்கு பார்க்க பிடிக்காது. இவன் கன்னக்குழியை பார்த்தா எங்கே நான் தடுக்கிவிழுந்திடுவேனோ நினைச்சா இந்த நெடுமரம் மனசுல என்னென்னவோ நினைச்சி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கான்.​

“இப்போ என்ன உங்களுக்கு வந்தது? ஏன் எனக்கு வெட்கம் எல்லாம் வரக்கூடாதா என்ன? நானும் ஒரு பொண்ணுதானே? இப்போ நான் என்ன சொல்லனும்? இல்ல நீங்க செம்மையா இருக்கீங்க… பார்த்தா பசக்குனு அந்த கன்னக்குழில ஒன்னு கொடுக்கனும் போல இருக்கே அதை சொல்லனுமா? நெடுமாறன்னு பெயரை வச்சிக்கிட்டு நெடுமரம் போல வளர்ந்தா மட்டும் போதாது… ஒரு பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கனும்” படபடவென பொறிந்தவளை கண் இமைக்காது பார்த்தான் மாறன்.​

தவறவிட்ட வைரம் ஒன்று மறுபடியும் கண்முன் நின்று கதைப்பதை ரசித்துக்கொண்டிருந்தான். அவள் பேச பேச அவன் மன காயம் ஆறியதை அவள் அறிவாளா.​

வானத்தில் பறக்கும் பட்டமாய் மனம் கும்மாளமிட… எனை பிடித்திழுக்கும் நூல்கண்டாய் அவள். என் விதியை நானே எழுதினேன்… என் உயிர் நீ என்பதை அறியாமல்.​

 
Last edited:

santhinagaraj

Well-known member
ஒரு பொண்ணுக்கு ஒரு குறையும் இருந்தா அதை புரிஞ்சுது அவளுக்கு ஆறுதலா இல்லாம இப்படி ஆளாளுக்கு பேசிய அவள டார்ச்சர் பண்ணி இருக்கீங்க.

மலர் ஆதி வீட்ல இருந்து எங்க போன அவளோட குழந்தைக்கு என்ன ஆச்சு???
 

NNK-41

Moderator
ஒரு பொண்ணுக்கு ஒரு குறையும் இருந்தா அதை புரிஞ்சுது அவளுக்கு ஆறுதலா இல்லாம இப்படி ஆளாளுக்கு பேசிய அவள டார்ச்சர் பண்ணி இருக்கீங்க.

மலர் ஆதி வீட்ல இருந்து எங்க போன அவளோட குழந்தைக்கு என்ன ஆச்சு???
அவகிட்ட குறை இருக்கிறதே இவனால கண்டுபிடிக்க முடியல... அப்படினா அது ஒன்னும் பெரிய குறை இல்லனு அர்த்தம் தானே... இது த்ரியாம அவளை பந்தாடிக்கிட்டு இருக்காங்க

அடுத்த எபில வரும் டியர்
 

Saranyakumar

Active member
மலர் எங்க போனா அவளோட குழந்தைக்கு என்ன ஆச்சு ஞாபக மறதி எப்படி ஆச்சு🤔🤔🤔
 

NNK-41

Moderator
மலர் எங்க போனா அவளோட குழந்தைக்கு என்ன ஆச்சு ஞாபக மறதி எப்படி ஆச்சு🤔🤔🤔
அடுத்தடுத்த யூடிகளில் தெரிய வரும் டியர்
 
Top