நீக்கமற நிறைந்தாய் உயிரே 6
அந்த அறையின் வெளியே நின்றிருந்த நன்விழியின் பார்வையில் ஏதோ ஒரு பரிதவிப்பு கூட சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள்.. அவளின் கால்கள் அவளையும் அறியாமல் எங்கோ நடந்தது.. அவளின் மூளை தடுத்தும் மனம் அவளை ஒரு பாதையில் நடக்க வைத்தது.. கால் போன போக்கில் நடந்தவள் ஒரு அறையின் வாசலில் அப்படியே நின்று விட மனமெங்கும் வலி பரவ அந்த அறையின் வாசலையே பார்த்திருந்தாள்.
அவளின் நிலை அவளுக்கே புதிதாய் இருந்தது.. இதுபோல் எப்போதும் இருந்ததில்லை.. இந்த உணர்வு புதிது.. இந்த தேடல் புதிது.. இந்த பதட்டம் புதிது.. இந்த பரிதவிப்பு புதிது.. அவளின் விழிகள் நாலாபுறமும் எதையோ தேடி அலைந்தது.
தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரிந்தது போல் இருந்தது அந்த தவிப்பு.. அவளின் கால்கள் அந்த அறையை நோக்கி நடந்தது அவளறியாமல்.
மெதுவாய் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் உள்ளம் படபடவென துடிக்க அங்கே கட்டிலில் படுத்திருந்த உருவத்தை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் துளிகள் விழுந்து அங்கே படுத்திருந்த உருவத்தின் முகமும் சரியாக தெரியவில்லை மங்கையவளுக்கு.
முகத்தில் பொருத்தப்பட்ட மாஸ்குடன் சீராக மூச்சு விட்டு கொண்டிருந்தது அந்த உருவம். மெதுவாய் அதன் அருகில் அவள் செல்ல செல்ல அத்தனை நேரமும் உணர்வில்லாமல் கிடந்த அந்த உருவத்தின் கை விரல்கள் மெல்ல அசைந்தது.
உடல் நடுங்க அந்த உருவத்திடம் சென்றவள் மனமெங்கும் பதட்டம் சூழ கைகள் நடுங்க மெதுவாய் அந்த உருவத்தின் தலையில் கை வைத்தவுடன் பெண்ணவளின் உடல் சிலிர்த்தது என்றால் கட்டிலில் படுத்திருந்த ஆடவனின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.
அங்கே வார்த்தையில்லாத மௌன பரிமாணங்கள் தான் நடந்தேறியது.
அவளறியாமல் அவளின் உதடுகள் "வசீ.." என்று முனுமுனுத்தது.
அந்த வார்த்தையின் வீரியமா இல்லை அந்த மென்மையான வார்த்தை ஆடவனின் உயிர் ஊடுருவி சென்றதா என புரியவில்லை.. அடுத்த நொடி படுத்திருந்தவனின் கண்கள் படக்கென திறந்து கொண்டது.
கலங்கியிருந்த கண்களில் அவனை பார்த்தவளின் மனம் ரணமாய் வலித்தது.
உயிரை ஊடுருவும் அவனின் பார்வை பாவையிவளை பேசாமடந்தையாய் ஆக்கியது.
" ஹனி.." என்றபடியே தன் முகத்திலிருந்த மாஸ்க்கை அகற்றியவன் வேகமாய் எழுந்து அமர்ந்தவன் லேசாக சாயும் பொழுது ஓடி வந்து ஆடவனை தன் கரங்களில் தாங்கி கொண்டாள்.
அவனை கட்டிலில் சரியாய் அமர்ந்தவளின் பார்வையில் இருந்த அந்நிய தன்மையில் ஆடவனின் உள்ளம் தான் நொந்து போனது.
அதிலேயே அவனுக்கு முழுவதுமாய் தெரிந்தது தன்னவளுக்கு எதுவும் முழுதாய் தெரியவில்லை என்று.. மனம் மீண்டும் மீளா துயரில் ஆழ்ந்து போனது.. ஆனாலும் மனதின் ஓரத்தில் சற்று நிம்மதி தான்.. தன்னை யார் என்று தான் புரியவில்லையே ஒழிய தன் நினைவு அவளின் ஆழ் மனதில் உள்ளது.. அதுவே போதும் இந்த ஜென்மத்திற்கு என்று நினைத்தான்.. அவனின் சிந்தனையை கலைப்பது போல் அடுத்ததாய் மங்கையின் கேள்வியில் மனம் திகைத்து போனான் ஆடவன்.
"நீங்க யாரு.. உங்களுக்கு எப்படி அடிபட்டுச்சு.. நான் எப்படி இங்கே என்னையறியாம வந்தேன்.. ஏன் வந்தேன் எதுக்காக இப்படி துடிக்கிறேன்.. எனக்கு ஒன்னும் புரியலை.. ஆனா உங்களை இப்படி பாக்க மனசு ரொம்ப வலிக்குது.." என்றாள் அழுதபடி.
அவளின் அழுகை அவனுக்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது.
கண்களை மூடி தன்னை அடக்கியவன் மெல்ல அவளின் கரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன்,
"நீங்க கிளம்புங்க.. எனக்கு எதுவும் இல்லை.. என்னை நான் பாத்துக்குறேன்.. ராபின்.." என்று வெளியே பார்த்து கத்தி அழைத்தான் அழுத்தமான குரலில்.
அந்த குரலில் இருந்த அழுத்தம் அவளை பின்வாங்க செய்தது.. அந்த குரல் அவளை எட்டி தள்ளி நிறுத்தியது.
அவள் தள்ளி நின்றது ஆடவனுக்கு வலித்தது என்றாலும் வேறு வழி இல்லை இப்போது.. அவளுக்கு முழுமையாய் புரியும் வரை எதையும் அவளிடம் வெளிப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் தான் தள்ளி நிறுத்தினான்.
ஆனால் அதுவே பின்னாளில் அவனுக்கே திரும்பும் என்று அறியாமல் போனான் பாவம்.
அதற்குள்ளாகவே வசீகரனின் குரல் கேட்டு ராபின் உள்ளே வந்தவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
அவன் வந்ததை கவனித்த வசீகரன்,
"ராபின் இவங்க ரூம் தெரியாம இங்கே வந்துட்டாங்க.. வெளியே கூட்டிட்டு போ..." என்றான் வெறுமையான குரலில்.
அவனோ இருவரையும் மாறி மாறி பார்த்தபடி, "பாஸ் மேடம்.." என்று இழுத்தவனை,
"ராபின் நான் சொன்னதை செய்.. சும்மா பேசிட்டு நிற்காத.." என்றபடி முறைத்தான் அவனை.
வசீகரனின் வார்த்தையை தட்டமுடியாமல் , "மேடம் வாங்க போலாம்.." என்று அவளை அழைக்க ஆனால் பெண்ணவளோ ஆடவனை விட்டு விழி அகலாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
அவளின் நேர்பார்வையை தாங்க முடியாமல் தன் பார்வையை திசை திருப்பிக் கொண்டவனின் மனதில் உள்ள வலியை பெண்ணவள் அறிவாளோ..? இல்லை இன்னும் இன்னும் ஆடவனை வதைப்பாளோ..? காலத்தின் கையில் காயத்தை ஆற்றும் மருந்தாய் அமையப் போவது எதுவோ..?
அவனை பார்த்துக் கொண்டே வெளியே சென்றவளின் இதயத்தில் யாரோ ஊசியை ஆழமாய் இறக்கியது போல் தோன்றியது.. ஏனே அவனை விட்டு பிரிவதை பெண்ணவளின் மனதால் ஏற்றக் கொள்ள முடியவில்லை.
ராபின் மெதுவாய் அவளை கொண்டு வெளியே செல்ல முயல ஆடவனின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.
போகும் அவளை பார்க்காமல் சுவற்றின் பக்கம் பார்வையை திருப்பியவனின் முகத்தில் நீர் பரவி படர்ந்தது.
இன்னும் எத்துனை நாளைக்கு இந்த மௌனம்.. எத்துனை நாள் இந்த மறைவு வாழ்க்கை.. கூடிய சீக்கிரமே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியவனின் நினைவில் கடந்த காலம் நிழலாய் பரவி படர்ந்தது.
தென்றலும் மயங்கி போகும் அந்த மாலை வேலையில் அந்த பள்ளியை விட்டு பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் மாணவச் செல்வங்களின் தரிப்பாலயம் அந்த தனியார் பள்ளி.. பள்ளி முடிந்ததற்கு அடையாளமாய் மணி ஒலித்ததும் சிறகடிக்கும் சில்வண்டுகள் பறவையாய் பறந்து வெளியே வந்தன.
அந்த பறவைகளின் இடையே சிறகொடிந்த பறவையாய் பறந்து தன் தாய் தந்தையை தேடி சென்ற பிள்ளைகளை ஏக்கம் சுமந்த விழிகளுடன் பார்த்தபடி அங்கே நின்றது அந்த சிறுமொட்டு.
சிறுமலரின் விழிகளில் ஏக்கமும் கண்ணீரும் போட்டி போட அங்கே இருந்ததை வேடிக்கை பார்த்தபடி அங்கிருந்த படியில் அமர்ந்தாள் சிறுமியவள்.
சரியாக ஒரு மணி நேரங்கழித்து வெண்மை நிறத்தில் படகு போன்ற கார் வந்து அவளின் முன்னே நின்றது.
அதிலிருந்து இறங்கிய டிரைவர் அவளின் முன்னே வந்து பவ்யமாய் நின்றவன் சிறுமியின் புத்தக பையை வாங்கி கொண்டவன் முன்னே நடக்க விழிகளில் கண்ணீருடன் அந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள் சின்னஞ்சிறு தாரகை.
அவள் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் இருபது வயது நிரம்பிய ஆடவன் அருகிலிருந்த தூணிலிருந்து வெளியே வந்தான்.. போகும் அந்த படகு போன்ற காரையே அது மறையும் வரை பார்த்து நின்றவன் மனதில் பாரம் குடியேறியது.. அவனது மனமோ,
"மன்னிச்சிரு டா ஹனி.. உன்னை இப்படி தவிப்போட பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குடி.. ஆனா இப்போ என்னால எதுவும் செய்ய முடியலை.. ஆனா நிச்சயம் உன்னை நான் சந்தோஷமா வச்சிப்பேன் டா.. நீ கவலைபடாத ஹனி உனக்காக எப்பவும் நான் இருப்பேன்.. என் உயிர் இருக்கும் வரைக்கும்.." என்றவனின் தோளில் அழுத்தமான ஒரு கரம் விழ திரும்பியவனின் முன்னே அவனின் வயது கொண்ட ஒருவன் நின்றிருந்தான்.
"ஏய் வசீ ஏன்டா இன்னமும் இங்கே நிக்குற.. ப்ராஜெக்ட் மெட்டீரியல் வாங்க போகனும்.. அதுமட்டும் இல்லாம அந்த மினி ப்ராஜெக்ட் முடிஞ்சி அதோட உரிமையை கேட்டு அந்த மேதா குரூப் உன்னை பாக்க வர்றேன்னு சொன்னாங்க டா.. நீ போய் அதை பாரு.. நான் போய் அடுத்த ப்ராஜெக்டோடே எம்பளம் ரெடி பண்ணிட்டு வர்றேன்.." என்றான் பவித்ரன்.
பவித்ரனும் வசீகரனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.. பள்ளி படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள்.. படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இருவரும் சம்பாதிக்க வழி தேடினார்கள்.
அவர்கள் தொழிலுக்காக தேடி கொண்டிருந்த நேரத்தில் தான் ஏன் சுயமாய் சம்பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் உதித்தது தான் இயற்கை முறையில் கிராமத்தில் விளையும் காய் கறிகளை பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் கடைகளுக்கும் விற்பனை செய்யும் எண்ணம்.
அப்படி உருவானது தான் ஹனி வெஜிடபிள் மார்ட்.
இருவரும் பார்ட்னராக இருந்தாலும் முதல் போட்டது என்னவோ வசீகரன் தான்.. அதனால் அந்த கம்பெனியின் பெயர் அவனின் ஹனியின் பெயரால் உருவானது.
பகலில் கல்லூரி சென்று படித்தால் மாலையில் சொந்த தொழிலை கவனிக்க வந்துவிடுவார்கள்.. இடைப்பட்ட நேரத்தில் தன் ஹனியை காண வந்துவிடுவான் வசீகரன்.
பளிங்கு போல் நிமிர்ந்து நின்ற அந்த பெரிய மாளிகையில் வெள்ளை நிற கார் உள்ளே நுழைந்தது.
அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் விசுவநாதன்.. அவர் உள்ளே நுழையும் பொழுதே,
"நன்னும்மா.." என்ற பெயரை அழைத்தபடி உள்ளே நுழைந்தார்.
அடுத்த நொடியே பட்டு பாவாடையில் ரெட்டை ஜடையில் உள்ளிருந்து கொலுசு சத்தம் சிணுங்க "அப்பா.." என்ற அழைப்புடன் உள்ளிருந்து வந்தால் அந்த பதினான்கு வயது பெண்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை உங்களுக்கு படித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க மக்களே.