எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 11

NNK-54

Moderator

வர்ணங்கள் 11


அவர்கள் மீண்டும் லண்டனுக்கு சென்ற பிறகு உலகமே இருள் சூழ்ந்தது போல உணர்ந்தாள் சாயா .இதெல்லாம் அவளது இயல்புக்கு ஒத்து வராததே!
அவளால் தன்னை மீட்டுக்கொண்டு வர இயலாது தத்தளிப்பாக உணர்ந்தாள். இந்த ஒருவாரத்தில் அவளுக்குள் பெரிய மாற்றம் உண்டு என்றால்,ஜெயந்தனை பற்றிய எண்ணங்கள் அவளுக்கு ஒருமுறை கூட வரவில்லை. மீண்டும் அலுவலகம் வந்தபிறகும் கூட ஜெயந்தன் அவளை கொஞ்சமும் ஈர்க்கவில்லை. முழுமையாக தனது குழந்தையின் அம்மாவாக மட்டுமே உணர்ந்த தருணங்கள். எதனால் என்னை எனக்காகவே காதலித்து மனம் புரிந்துகொண்ட கணவனை பிரிந்து வந்தேன்?என் குழந்தையை விட்டு வருமளவிற்கு கல் நெஞ்சமா எனக்கு?என்று தன்னையே கேட்டுக்கொண்டவளுக்கு தனக்குள்ளே அருவறுத்துப்போனது.

மொத்தத்தில் அவளது தாய்மை வெகுகாலம் கழித்து விழித்துக்கொண்டது. அவளது மனம் அவளால் தொலைக்கப்பட்ட குடும்பத்துடன் செல்ல ,உடல்மட்டும் இயந்திரத்தனமாக இங்கே உலாவிக்கொண்டிருந்தது.தான் எடுத்த முடிவு சரியா என்ற கேள்விக்கு பதிலாக"தான் செய்தது பெரிய தவறு என்று மட்டும் புரிந்துகொண்டவளுக்கு திரும்ப சென்றால் சரியாக இருக்குமா எனும் ஐயம். தான் செய்த தவறு ,அதை கணவன் மறந்துவிட்டு மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கினாலும்,முன்பிருந்த காதல் அவனிடம் இப்போதும் இருக்குமா..என்று பயம் கொண்டாள் .

அவளை இருகரம் நீட்டி அவர்கள் இருவரும் வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவளால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை.தனக்குள்ளேயே மருகுவதும் , சரி-தவறு பற்றி ஆராய்வதுமாக இருந்தவளுக்கு சுற்றுப்புறம் அந்நியமானதில் வியப்பில்லை.அலுவலகம் வந்தவளுக்கு கையில் இருக்கும் இலையை செய்வதே பெரிய விஷயமாகியது. இன்னும் சொல்லவேண்டுமென்றால்',பொழுதெல்லாம் முழுதாய் யோசி,வேலைக்கு வரவேண்டாம்' என்று யாரேனும் சொன்னால் போதும். அதையே பின்பற்றுமளவுக்கு யோசனைகள் அவளை இறுக்கியது.


இவளது மாற்றங்களை ஜெயந்த்தனும் கவனிக்காமல் இல்லை.அந்நியப்பெண்ணின் விஷயம் பற்றி தான் எப்படி கேட்கமுடியும் என்று அவனும் பொறுமையாக இருந்துதான் பார்த்தான். அவள் செய்யவேண்டிய எல்லாவேலைகளும் இழுவையில் நிற்பதும், இவனது வேலைகளை தவறுமாக செய்து வைப்பதிலுமாக சாயா ஜெயந்தனின் பொறுமையை வெகுவாக சோதித்துப் பார்த்தாள் .

ஒருகட்டத்தில் ,இதற்குமேல் முடியாதென முடிவு செய்தவன்,"ஈவினிங் நீ பிரீயா இருக்கியா சாயா ..நாம டின்னெர் போகலாம்"என்று அழைப்பு விடுத்தான்.


சாயா,அதற்குமேல் யோசிக்கவில்லை.அவளுக்கும் ஏதாவது மாற்றம் தேவைப்பட்டதோ என்னவோ .."ம்ம், போகலாம்.வரேன்" என்று முடித்துக் கொண்டாள் .மாலை இருவரும் பார்க் ஹோட்டல்லில் சந்தித்துக்கொண்டார்கள். தனக்காகவும் சேர்த்து ஆர்டர் செய்யும்படிக்கு சாயா , ஜெயந்தனை கேட்கவே ஜெயந்தனின் முகம் யோசனையானது. அதை கவனிக்கும் அளவுக்கு கூட சாயா இல்லை.


உணவுக்கு ஆர்டர் கொடுத்தவன்,"சோ..சொல்லு சாயா , நாம கல்யாணம் பத்தி நேத்து அப்பா பேசினார். நா யோசிக்கும் முன்னாடி உன்னோட விருப்பம், அதை தெரிஞ்சுக்க விரும்பறேன்" அவனது வார்த்தைகள் கேட்க சாயாவுக்குள் கசப்பு வழிந்தது.


அவனை வெறித்து பார்த்தவள்," ம்ஹும்..இன்பாக்ட் நா உங்க ஆஃபீஸ்ல ஜோஇன் பண்ணதும் இந்த ப்ரோபோசலை முன்வச்சுதானே!. ஓகேய்..லெட் வி டிஸ்கஸ். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். லவ் மேரேஜ். ஏதோ பிடிக்கலன்னு அங்கேந்து வந்துட்டேன். உங்களுக்கு இதெல்லாம் தெரியும்தானே?


ஜெயந்தன் வெறுமனே தலையசைத்தான். அவள் தொடர்ந்தாள் . இந்த ஒரு வாரம் அவங்க கூடத்தான் இருந்தேன். இதை சொல்லும்பொழுது அவளது குரல் தழுதழுத்தது. அதை ஜெயன் கண்டுகொண்டான்.ஆனாலும் எதுவும் சொல்லவில்லை.


"அந்த லவ்,அது அவர்கிட்டே அப்படியேதான் இருக்கு.அண்ட் என்னோட பையன் அவன் கண்ணுல அம்மாவுக்கான(எனக்கான)தேடல் அதை இப்போவும் நா என் கண் முன்னே பாக்குறேன்."

அவளது உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டான் ஜெயன். அவனுக்கு இந்த நிலையில் பேசவும் வேறு வார்த்தைகள் இருக்கவில்லை.


"இப்போ, இன்னொரு மேரேஜ் பற்றி ஏதும் முடிவு எடுக்கும் நிலைல நா இல்லேன்னு நினைக்குறேன். அண்ட் ஏற்கனவே என்கிட்ட இருக்குற விஷயங்களை இன்னொருமுறை இன்னொரு இடத்துல தேடி என்ன பண்ணப்போறேன்? நா நினைக்கிறது அப்படியே கிடைக்குமானும் கியாரண்டி இல்லையே!" வறண்டு போன தொண்டையை சரிசெய்து கொள்ள டேபிள் மீதிருந்த நீரை பருகினாள் .


சாயாவின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு மனதுக்குள் சந்தோஷம் சாரல் வீசியது. கன்யாவிடம் முழுமையாக காதலை உணர்ந்திருக்கிறான் . நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு காதல்,அதன் வலி,மனதின் சுமை இவையெல்லாம் வார்த்தைகளால் வடிக்காமலேயே புரியும்.


ஏதோ ஒருவகையில் சாயா சொன்னவை தனக்கும் கூட பொருந்தும் என்றும் அவனுக்குத் தோன்றியது.அதுபற்றியெல்லாம் இப்போது தொடர்ந்து யோசிக்க பிடிக்காமல்,"தென்,வாட் ஸ்டோப்ஸ் யூ " என்றுமட்டும் கேட்டான்.


மேசை மீது கோர்த்திருந்த தனது நீண்ட விரல்களை சற்றுநேரம் பார்த்தவள், "ம்ஹும்..நோத்திங் .பட் எனக்குதான் திரும்ப போகவும், அவர்கிட்ட நா அவரை மிஸ் பன்றேன்னு சொல்லவும் தயக்கமாகவும்,குற்ற உணர்ச்சியாகவும் இருக்கு. டிவோர்ஸ் வேணான்னு அவர் ரொம்பவே சொல்லிப் பார்த்தாரு.நாந்தான் பிடிவாதமா புஷ் பண்ணேன். சோ..நௌ இட்ஸ் மை டேர்ம் டு ஸபர் ."


அவளது கூற்றில் தெரிந்த நேர்மை ஜெயந்தனை நிச்சயம் ஈர்த்தது. குற்றம் செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளவும் தைரியம் வேண்டுமே.அது சாயாவிடம் இருந்தது. "ஓகேய்.. சொ ,ரெண்டுபேரு பேரண்ட்ஸ்கிட்டேயும் நாம அட்ராக்ட் ஆகலேன்னு சொல்லிடலாமா.."என்று நேரடியாகவே ஜெயன் கேட்க ,"எஸ், பட் ஐ நீட் சம் டைம் . இப் யூ டோன்ட் மைண்ட் "என்றவளை புரிந்து கொண்டான்.


இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்டார்கள் .ஜெயன் சாயாவை தனது காரிலேயே வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு தனது கடற்க்கரை பங்களா நோக்கி சென்றான். மனதில் இருந்த இறுக்கம்,இப்போது தளர்ந்திருந்தது. அவன் செல்லும்பொழுது,ஒருவேளை சாயா தன்னை திருமணம் முடிக்க சம்மதம் சொன்னால் எப்படி விளக்கம் சொல்லி புரியவைப்பது?தன் மனதில் வேறொன்று இருக்கிறதே..என யோசனை மீற சென்றவனை சாயா தனது வார்த்தைகளால் அமைதிகொள்ளச் செய்துவிட்டாள் .


இப்போது அவன் மனம் சாயா பற்றி முழுமையாக யோசித்தது.அவள் கணவன் மீதான காதல் மீண்டும் துளிர்க்கையில் அதை செழிக்க செய்வதுதானே சரி! என்று தோன்றியவனாக,சாயாவின் லண்டன் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள விழைந்தான். தன் காதல் கைசேருமா என்று தெரியாதுஆனாலும் அவள் காதலாவது கரை சேரட்டும் எனும் நல் எண்ணம் தான் .

தலையில் அடிபட்ட சுபாவுக்கு தனியே சமாளிக்க முடியவில்லை. வேலைக்கும் செல்லமுடியவில்லை. ஹோ ..என்று அடைத்துக்கொண்டு வந்தது. மீண்டும் சென்னை செல்ல அவள் மனம் துடித்தது.அதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு.ஜெயன் லீலா பேலஸ் செல்லும் பொழுது அவனை சுபா பார்த்துவிட்டாள் .

முன்பைவிட அவனது கம்பீரம்,அழகு, நேர்த்தி என்று எல்லாமே கூடியிருந்தது. கணவனை இப்போதே கட்டிக்கொள்ள வேண்டும் என்று தவித்தது அவள் மனம்.


சூடான அவனது முத்தங்களுக்காக ஏங்கியது அவளது தேகம். எல்லாவற்றையும் விட இத்தனை வருஷங்களாக தனியாக சுமக்கும் மன பாரம்,அதை இறக்கிவைக்க கணவன் தனதருகே இருக்கவேண்டும் என்று துடித்தது அவள் இதயம். நடப்பவை எதுவுமே அவளுக்கு சாதகமாக இல்லை தான். தான் அவன் முன்னே சென்று நின்றால்கூட அவனால் நிச்சயம் அவளை கண்டுகொள்ள முடியாதுதான்.ஆனாலும்...


ஆனாலும் என்ன? என்னவென்று சொல்லி அவளை அவளால் புரியவைக்க முடியும்?அவர்களது திருமணம் முடிந்ததற்கு சாட்சி? தியா...டி என் ஏ எடுத்தாலே போதும்.எல்லாம் தெரிந்துவிடும்.ஆனால் கோடீஸ்வர மாமியார்-மாமனார் குழந்தையை பறித்துக்கொண்டு அவளை ஒதுக்கினால்,குழந்தையை விட்டு எப்படி உயிர் தரிக்க முடியும்?என்று குழம்பியவள் கண்களில் நீருடன் தனது அறையில் படுத்துவிட்டாள். வீட்டுக்கு அடிபட்ட விவரங்கள் எதையும் சொன்னாளில்லை.


சுபாவை தொலைவிலிருந்து பார்த்திருந்த ஜெயந்தனுக்கோ,"காதல் முற்றி போனதன் விளைவு,எங்கே பார்த்தாலும் என் கனவு கன்னி முகம்தான் என்று தோன்றியது.


சுபா அழுதுகொண்டிருக்க அவளது மகள் தியா அலைபேசியில் அழைத்துவிட்டாள் ."ம்ம்மா , என்னவோ எனக்கு அழுகையா வருது. உன்னை இப்போவே பாக்கணும்"என்று அழுது தீர்த்தாள். சுபாவின் அம்மாவால் குழந்தையை சமாளிக்கவே முடியவில்லை.வேறு வழி இல்லாமல் அமைதியாக இருக்கிறாள். "என்ன வேலையோ .இந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் செஞ்சிருந்தா எவ்வ்ளவு நல்லா இருக்கும்/' என்று இப்போதெல்லாம் அவருக்கும் ஆயாசம் எட்டிப்பார்க்கிறது.


அதற்கு தூபம் போடுவதுபோல இவர்கள் இந்தியா வந்த பிறகு பழைய சொந்தங்களோடு உறவும் புதுபிக்கப் பட,'கிளி போல் அழகான பெண்.நல்ல படிப்பு,வேலை .பார்த்தால் திருமணம் முடித்தவள் ,குழந்தையின் அம்மா என்றெல்லாம் சொல்ல முடியாத தோற்றம்,நல்ல உயரம் 'என நிறைவாக இருக்கும் சுபாவை பெண்கேட்டும் சிலர் வந்தார்கள்.


"சுபாவை எங்க மருமகளா எடுக்க எங்களுக்கு விருப்பம்.எங்க பையனுக்கும் முதல் சம்சாரம் இப்போ இல்லே.ஒரு குழந்தை மட்டும் இருக்கு. குழந்தைக்கு அம்மா வேணும்.உங்க பொண்ணுக்கு மகள் இருக்கறது ஒன்னும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லே.கல்யாணத்துக்கு பிறகு உங்கள நாங்க பாக்கறோம்.குழந்தை உங்ககிட்டே வளரட்டும்.உங்களால முடியல்லேன்னா,ஏதாவது ஹோஸ்டேல் பாக்கலாம்"என்று சொல்லிக்கொண்டு கூட வரன்கள் வந்தது.


பையன் வீட்டார் சொல்வவதில் என்ன தவறு என்று கூட சுபாவின் அம்மாவுக்கு இப்போதெல்லாம் தோன்றாமல் இல்லை. தன் மக்களுக்கென்று கல்யாண வாழ்க்கை,கணவன்,குழந்தை,குடும்பம் இதெல்லாம் அமையவேண்டும் என்று மட்டும் தான் அவருக்கு தோன்றியது. இதற்காக தான் உயிரோடு இருக்கும் வரை தியாவை தானே வளர்க்கவும் அவர் தயாராக இருக்கிறார், சுபாதான் சரி என்று சொல்லாமல் படுத்துகிறாள்.

குழந்தையோடு பேசி முடித்த சுபாவுக்கு கண்ணீர் நின்றபாடாக இல்லை.தனக்கு ஒன்றென்றால் குழந்தை துடிக்கிறாள் 'என்பதே அவளுக்கு கலவையான உணர்வலைகளை கொடுத்தது. சதீஷ் மூலமாக யாரிடமெல்லாமோ பேசி,ஒருவழியாக சென்னை அலுவலகம் வருவதற்கு அனுமதி பெற்றாள் சுபா.ஆனால் , அடுத்துவரும் இருபது நாட்களுக்கு நோ லீவ் என்ற கண்டிஷனோடு.


சுபா தனது மகளுக்கு புரியவைத்துவிட்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். இதில் உள் அரசியல் உண்டு என்று அவளுக்குத் தெரியும்.ஆனாலும்,வேறு ஆப்ஷன் நிச்சயம் கிடையாது. வேலையை விட்டுவிடலாமா என்றும் கூட நடுவில் அவளுக்குத் தோன்றியது. ஆனால்,பிடிமானம் என்று இதுவரை சரியாக எதுவும் இதுவரை இல்லை.

அதனால் பொறுத்துக்கொள்வோம் என்ற முடிவில் இருந்தாள் .


சாயாவை வழக்கம்போல் அலுவலகத்தில் பார்த்த ஜெயந்தனுக்கு ஆஸ்வாசமாய் இருந்தது. ஆனால் அவள் விரைவில் வேலையை விட்டு செல்லக்கூடும் என்று நினைத்துக்கொண்டான். அவள் தனது குடும்பத்துடன் சேர வேண்டும் என்று அவளை விடவும் ஜெயன் ஆர்வமாய் காத்திருக்கிறான்.

சாயாவிடம் நட்பு புன்னகையை வீசியவன் ,"தென்,ஆர் யு ஓகேய் நௌ ?ஷால் வீ கண்டின்யு "என்று கேட்க அவளிடமிருந்தது புன்னகை பதிலாக வந்தது. அன்று காலையில்தான் அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்டிருந்த புகைப்படங்கள் சிலவற்றை அவளது அப்பாவின் மெயில் ஐடியிலிருந்து அவள் மகன் அனுப்பித்தந்திருந்தான்.


இவளால் சந்தோசம் தாங்க முடியவில்லை. எல்லாவற்றையும் சீக்கிரம் சரி செய்தாக வேணும் என்று மட்டும் நினைத்துக்கொண்டாள்.

 
Last edited:
Top