எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 08

admin

Administrator
Staff member

அத்தியாயம் 8​

காதில் கேட்ட பாடலை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் கண்கள் அகலமாய் விரிந்தது.​

"இவளா? இவ எங்க இங்க?..." என நினைத்த நொடி "அப்படியா நாங்க கூட ஈரோடு வேளாளர் காலேஜ்ல இருந்து தான் வரோம்ங்க..."என்று அந்த கல்லூரி பேராசிரியர் கூறியது நினைவு வந்தது. அப்போது கூட அக்னி வந்திருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் இல்லை.​

ஏனோ மெல்லியதாக மனம் ஆர்ப்பரித்தது. அந்த ஆர்ப்பரிப்போடு பெண்ணைப் பார்த்தான். மங்கை அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. எங்கே சென்றிருப்பாள்? என நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டான். அந்த ரெஸார்ட்டில் இருந்து வெளியில் சென்று கொண்டிருந்தாள். "இந்த நேரத்துல வெளிய ஏன் போறா..." என நினைத்தவன் கால்கள் அவனையும் அறியாமல் அக்னியின் பின்னால் நடந்தது.​

அந்த ரெஸார்ட்டிலிருந்து வெளியில் வந்தவன் இருபுறமும் பார்வையை சுழல விட்டான். தூரத்தில் அவள் சென்றுக் கொண்டிருப்பது தெரிந்தது​

"அந்த பக்கம் ஒன்னுமில்லை சார். யானை ஊருக்குள்ள வராம இருக்கிறதுக்கு பெரிய பெரிய குழி தான் தோண்டி வைச்சு இருக்காங்க... பெருசா பார்க்க ஒன்னு இருக்காது..." இங்கு வந்த புதியதில் டூரிஸ்ட் கைட் கூறியது நினைவில் வந்தது.​

" ஐயோ..." என்று பதறியவனாய் அவளை நோக்கி வேகமாக நடந்தான்.​

"ஏய் நில்லு... புவி நில்லுமா..." அகரன் கத்தியது துளியும் பாவையின் காதில் விழவில்லை போல அவள் பாட்டிற்கு நடந்துக் கொண்டிருந்தாள்.​

இது வேலைக்காவது என நினைத்தவன் அக்னியை நோக்கி ஓடினான். அடுத்த சில நிமிடங்களில் பாவையின் கையை பற்றி தன் பக்கமாக இழுத்திருந்தான் அகரன்.​

தீடிரென இழுத்த இழுப்பில் அவன் மீதே மோதி நின்றவள் நிமிர்ந்து ஆடவனை முறைத்தாள்.​

மங்கையின் பார்வையில் அவளது தலையிலேயே தட்ட வேண்டும் என்று தோன்றியது. அவ்வெண்ணத்தை கை விட்டவனாய்​

"காது என்ன பொடனிலியா இருக்கு கூப்பட கூப்பிட போயிட்டே இருக்க..." சீற்றக் குரலில் கேட்டவனை புருவங்கள் சுருங்க பார்த்தவள் தன் காதிலிருந்து ஏர்பார்ட்ஸ் கழட்டி "என்ன..." எனக் கோபமாக கேட்டாள்.​

"என்ன நொன்ன இன்னும் நாலடி எடுத்து வைச்சிருந்தா பரலோகம் போயிருப்படி இடியட். அகழி இருக்குன்னு அவ்வளவு பெரிய ஃபோர்ட் வைச்சிருக்கான் கண்ணுத் தெரியாதவ மாதிரி வர... " எனக் கத்தினான். அகரனது கோபத்தை ஆழ்ந்து பார்த்தவள் பதில் பேசாது அவனைத் தாண்டி முன்னால் நடக்க​

"ஏய் ஆழாக்கு... நில்லுடி..." எப்போதும் போல பின்னாலிருந்து அவளது கையைப் பிடித்து இழுத்திருந்தால் குழியின் விழாமல் இருந்திருப்பானோ என்னவோ காரிகையின் முன் வந்து நின்று அவளது கையை பிடிக்க, சற்றும் எதிர்பாராத விதமாக சறுக்கி சென்று இருவரமே அகழியில் விழுந்தனர்.​

இவர்களது நல்ல நேரமோ என்னவோ குழியில் பாறைகள் இருக்கவில்லை​

"ஆ..ஆ..." என்றப்படி எழ முயற்சித்தவனால் அது முடியாமல் தான் போனது. அதற்கு காரணம் என்னவென்று அறிவான் அல்லவா...​

"கன்னுக்குட்டி சைஸ்ல இருந்துட்டு என்னமா கனக்கிறாள்...' என நினைத்தவன் அவளை எழுப்ப முயன்றான்.​

"புவி... புவி..."​

"ஹிஹிம்ம் அவளிடம் துளியும் பதிலில்லை... என்னடா இது..." வெளிப்படையாக நொந்து கொண்டவனுக்கு அப்போது தான் ஏதாவது அடிப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. தன்னிலிருந்து அவளை வலுக்கட்டாயமாக பிரித்தவன் பாவையை ஆராய்ந்தான். பெரியதாக அடியில்ல என்றதும் தான் மூச்சே வந்தது.​

' எப்படி? அடி விழும் அதுதான் உன்மேல கிடந்தாள்ல...' கேலி செய்தது மனம். மெல்லிய புன்னகை கூட வந்தது அகரனின் இதழ்களில்.​

"புவி... புவி..." அவளது பன்பட்டர் கன்னத்தில் மெதுவாக தட்டினான்.​

கெட்டியான தயிரில் விரல்களை வைத்தால் எப்படி இருக்குமோ அந்தளவிற்கு இருந்தது அவளது கன்னத்து மென்மை. இன்னும் கொஞ்சம் அதிகம் தட்டினாலும் இவனது விரல்கள் அவளது கன்னத்தில் பதிந்து போவது நிச்சியம் என நினைத்தவன் அவளது கன்னத்தை அழுத்தி பிடிப்பதை நிறுத்தினான்.​

அக்கணம் மங்கையின் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து இளைய வேண்டுமென்று பேராவல் கொண்டது அவனது பொல்லாத மனம். கன்னங்களில் புதையும் விரல்களுக்கு பதில் தன் இதழ்களை புதைத்து வைத்திருக்க ஆசைக் கொண்டவனாய் தன் மீசை சூழ்ந்த அதரங்களை மங்கையின் கன்னத்தில் புதைத்தான்.​

அவனது ஈர உதடுகள் அக்கன்னத்தில் ஆழ்ந்து புதைய புதைய அகரனின் கண்கள் தானாக மூடிக் கொண்டது..அக்கணம் பட்டென விழித்தாள் பெண். நெருக்கத்தில் அகரனின் முகத்தைக் கண்டதும் ஆவென்று அலறினாள்...​

அவளது கத்தலில் விழிகளை த்திறந்தவன் நிதானமாக அவளைவிட்டு விலகினான்.​

"எ...ன்ன என்ன பண்ண நீ..." அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை அக்னிக்கு. அவளது கன்னத்தில் இருந்த ஈரம் அவன் செய்தது என்னவென்று சொல்லாமல் சொல்லியது.​

" நீ மயக்கமா இருந்த சோ ட்ரீட்மென்ட் பண்ணேன்..." எனக் குறும்பு புன்னகையோடு கூறினான்.​

"எது? மயக்கத்தில இருக்கிற பொண்ணுக்கு கிஸ் தரது தான் ட்ரீட்மென்ட்டா மிஸ்டர் அகரன்..."​

அவளது கன்னத்தில் அழுந்த பதிந்த மீசையின் குறுகுறுப்பும், இதழின் ஈரமும், அக்னி பெண்ணின் கோபத்தை தணிக்க முயற்சித்தது போல அக்கணம் ஆடவனை கோபமாக அதட்டக் கூட வரவில்லை சாதரணமாக தான் கேட்டு வைத்தாள்...​

"பின்ன இல்லையா?மருத்துவ முத்தம் கேள்விப்பட்டிருக்கியா அதுல இதுவும் ஒருவகை. அண்ட் நான் அப்படி பண்ணதுனால தான் உனக்கு மயக்கம் தெளிஞ்சுருக்குன்னு ஞாபகத்துல வைச்சிட்டு என்கிட்ட கோபப்படு..." என்றவனது மனம் த்து என்று துப்புவது அவளுக்கே கேட்டிருக்கும்.​

அவனது பேச்சில் பல்லைக் கடித்தவள் "மிஸ்டர் அகரன்..." ஏதோ கூற வந்தவளை மேலும் பேச விடாமல் "உன் ஃபோன் எங்கடி..." எனக் கேட்டு நொடியும் தாமதிக்காமல் அவளது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு தேட விக்கித்து போனாள் பெண்.​

அந்த அதிர்ச்சி கூட நொடி நேரம் மட்டுமே "ஏய் ஏய் என்ன பண்ற..." என்று அகரனின் கையில் பட்டென ஒன்று வைத்தவள் விலகி அமர்ந்தாள். அதற்குள் அவனது கைகளில் அக்னியின் அலைபேசி இருந்தது.​

"என்மேல தானே விழுந்து கிடந்த... எப்படி ஃபோனுக்கு அடிபட்டிச்சு? ஃபோன் ஆன் ஆகவே இல்ல..." அலைபேசியை உயிர்ப்பிக்க போராடிக் கொண்டே வினாவினான். அவனது பேச்சில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவள்​

"என்ன..." எனக் கேட்டாள்.​

"என்ன என்ன?..."என்று அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளது அதிர்ச்சி முகம் இவனுக்கு சிரிப்பை கொடுத்தது.​

"ஒன்ஸ் டிராயல் பார்த்தா உன் ஃபோன் எப்படி ஓடஞ்சுதுன்னு கண்டு பிடிச்சிடலாம்..." குறும்பு கூத்தாடும் குரலில் கூறிட, பல்லைக் கடித்தவள்​

பதில் பேசாது மறுபுறம் திரும்பி கொண்டாள்.​

அவனது கோபத்தை லெஃப்ட் ஹேன்ட்டில் டீல் செய்தவள் அவனது குறும்பான பேச்சை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறாள். அதற்கு அவனது முத்தம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சி இன்னும் போகவில்லை... உடல் முழுவதும் வலிப்பது போல் இருந்தது. அவன் மீது விழுந்த தனக்கே இப்படியென்றால் அவனுக்கு? மனம் கேள்வி எழுப்பிய நொடி சட்டென திரும்பி அகரனை பார்த்தாள். பெரியதாக அடியில்ல என்பது போல் தான் தோன்றியது...​

அவளது பார்வையில் "என்னவாம்..." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் மறுபுறம் திரும்பி கொள்ள "போடி..." என்பது போல் கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.​

நேரம் செல்ல செல்ல அதிகாலை பனி சற்றே அதிகமானது. அகரன் என்னவோ கல் போல் அமர்ந்திருந்தான். இவளுக்கு தான் அணிந்திருந்த ஜர்கினைத் தாண்டியும் குளிர் ஊடுருவியது.​

பற்களும், மற்ற அவயங்களும் குளிரில் கடகடவென ஆடத் தொடங்கியது...​

ஏதோ ஓர் உள்ளுணர்வில் இமைகளை திறந்தவன் கண்டது என்னவோ குளிரில் நடுங்கியபடி அமர்ந்து இருந்தவளை தான்...​

"புவி...என்னாச்சு மா..." பதட்டமாக அவளை நெருங்கினான்.​

"குளிருதுன்னு சொல்ல வேண்டியது தானே டி..." எனக் கேட்டவன் கைகள் அவளது உள்ளங்கையை சூடு பறக்க தேய்த்தது... கையையும், காலையும் மாறி மாறி கால் பாதத்தை சூடுப் பறக்க தேய்த்து விட்டான். அவன் செய்த அனைத்தும் வீண் என்பது போல மீண்டும் அவளை குளிர் ஆட்க் கொண்டது.​

இதற்கு மேல் விட்டால் வலிப்பு வந்துவிடும் என நினைத்தவன் கைகள் அனிச்சையாக நீண்டு அவளது தலையை தன்னோடு சேர்த்து அழுத்தியது.​

"ஒன்னுமில்லை... ஒன்னுமில்லை சரியாகிடும்..." என்றவனது கழுத்தில் அவள் முகம் புதைத்துக் கொள்ள அப்போதும் தான் அவனுக்குமே பொறி தட்டியது.​

"எனக்கு வேற வழி தெரியலடி, தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல..." என்றவன் வேகமாக அவளது உடைகளை களைந்தான். "என்ன பண்ற..." தட்டுத் தடுமாறி கேட்டவள் நடுங்கிய விரல்களோடு அவனை தடுக்க முயன்று தோற்றாள்.​

அவள் அணிந்திருந்த ஜர்கினைக் களைந்தவன் அவளது மேல் சட்டையும் களைய,அவனது விழிகள் இரண்டும் விரிந்து கொண்டது. மனதில் எழுந்த கேள்விகளை புறம் தள்ளியவன், தன் சட்டையை கழட்டி எறிந்து விட்டு வெற்று மார்பில் மங்கையை இழுத்து அணைத்துக் கொண்டான் உரிமையாக.​

"கொஞ்சம் நேரம்டி சரியாகிடும். அதுவரைக்கும் அமைதியா இரு..." என்றவன் இருவருக்கும் சேர்த்து ஜர்கினை மாட்டிக் கொண்டான்.​

அவளது விலகல் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியை தழுவ அவளது கை,கால்களும்,மனமும் ஆடவனது உஷ்ணத்தை பெற நாடி அவனோடு பின்னி பிணைந்து கொண்டன...​

அவனது கழுத்து வளைவு தொடங்கி மார்ப்பில் முகம் புதைத்தாள். இங்கு அவன் கைகளோ அவளது முதுகை அழுத்தி தன்னுள் இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டது.​

அகரனது உடலின் உஷ்ணத்தையெல்லாம் தனக்குள் உள் வாங்கி கொண்டிருந்தவளுக்கு நடுக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.​

அக்கணம் அவளது பெண்மையும் விழித்துக் கொள்ள ஆடவனின் அணைப்பும், இறுக்கமும், இன்னும் ஏன் அவனது மூச்சுக் காற்று கூட அவளுக்கு ஒரு அவஸ்தையை கொடுத்தது மெல்ல நெளிய ஆரம்பித்தாள்.​

"ம்ப்ச்... நெளியாத டி...அதுக்கு அப்பறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இப்பவே நீ வேணும் வேணும்னு மனசு கிடந்து அடிச்சிக்குது.அதை அதட்டி அடக்கி வைச்சு இருக்கேன்..." என்றவனை விழி தெறிக்க பார்த்தாள்.​

"முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி பார்க்காம கண்ணை மூடித் தூங்கு... அண்ட் என்கிட்ட இருந்து விலகி போனா குளிர்ல மறுபடியும் நடுங்குவன்னு தான் உன்னை விடாம பிடிச்சு இருக்கேன். இல்லைன்னா மனசுல தப்பு தப்பா பண்ண தோணும் போதே உன்னை விட்டு விலகி இருப்பேன்..." என்றவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு அவனது மார்ப்பிலயே முகம் புதைத்துக் கொள்ள அவனது இதழ்களை ஆட்கொண்டது சிறு புன்னகை.​

மலரட்டும் சிறு புன்னகை..​

*****​

படிச்சுட்டு மட்டும் போகாம கமெண்ட் பண்ணிட்டு போங்க ப்பா... எனக்கும் எழுத நல்லா இருக்கும்ல...​

ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி...​

 
Top