எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 19

NNK-34

Moderator
ஆதவன் 19

"சம்பந்தி வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்கள்ல" என்ற தன் கணவர் கேசவனை நிமிர்ந்து பார்த்த வேணி,

"என்ன உங்களுக்கு உங்க பொண்ணை பார்க்கணுமா?" துணிகளை மடித்தப்படியே வினவினர்.

அதை கேட்ட கேசவன்,

"ஏன் உனக்கு பார்க்கணும்ன்னு ஆசை இல்லையா?" மனைவி தனக்கு வீசிய அம்பை மீண்டு மனைவியை நோக்கி அவர் வீச, கணவனை ஒரு பார்வை பார்த்தவர், "உங்களுக்கு வேணும்ன்னா போய் பார்த்துட்டு வாங்க என்னை எதுலயும் இழுக்காதீங்க" என்க,

"என்ன வேணி இப்படி சொல்ற? அதான் இப்போ உன் கோபம் போய்டுச்சே அடுத்தடுத்து நாம செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாமே" என்றார் கேசவன்.

அதை கேட்ட வேணி, "வரதட்சணைய பத்தியா பேசுறீங்க, அவங்க வசதிக்கு நாம என்ன செஞ்சிட முடியும்" என்று தன் கணவரிடம் கேட்க,

"நம்ம பொண்ணுக்கு நாம செய்றோம், இதுல அவங்க வசதிய பத்தி ஏன் பேசுற?"

"பிரஜன் வீட்டுக்கு குடுக்க வாங்குன கடனுக்கே நமக்கு இன்னும் விடை தெரியல" என்ற வேணியிடம்,

"அதை பத்தி இப்போ ஏன் யோசிக்கிற" என்றார் கேசவன்.

"அடுத்த மாசம் வட்டி கட்டணும்ங்க, நேரத்துக்கு கட்டளைன்னா லிங்கம் அண்ணாச்சி வீட்க்கு ஆள விடுவாரு, புரியாம ஏதாவது பேசாதீங்க. செய்யணும்ன்னு எனக்கும் ஆசை தான், ஆனா அதே நேரம் செய்யிரோம்ன்னு சொல்லி நாம ஒரு பிரச்சனைய இழுத்து வச்சா வர்ஷாவுக்கு தானே அவமானம்" என்று கூறினார் வேணி.

அதை கேட்ட கேசவன், "நீ சொல்றதும் சரி தான், ஆனா அதே நேரம் செய்யாமலும் இருக்க முடியாது" என்றவர் சில மணித்துளிகள் யோசனைக்கு பிறகு, "அப்போ மறுவீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்கலாமா, மாப்பிள்ளைக்கு மட்டும் செயின் பிரேஸ்லெட் போடுவோம். நம்ம பொண்ணுக்கு கொஞ்சம் நாள் கழிச்சு பண்ணிக்கலாம்" என்று சொல்ல,

"அதுக்குமே பணம் வேணும்" என்றார் வேணி.

"அதை நான் பார்த்துகிறேன், நீ உன் சம்மதம் மட்டும் சொல்லு" விடாப்பிடியாக கேட்ட கணவரிடம், "இதுக்கு மேல நான் என்ன மறுத்து சொல்லிட போறேன் நாளைக்கு நல்லா நாள் தான் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்." என்றார் வேணி.

@@@@@@@@@

ஸ்பீகர் வழியாக, "கொக்கோ கோலா து.., ஷோலா ஷோலா து.." என்னும் வடமொழி பாடல் அங்கிருந்த அனைவரின் காதையும் நிரப்ப, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் வர்ஷாவை பின்பற்றி மகிழ்ச்சியுடன் நடமாடி கொண்டிருந்தனர். அப்பொழுது,

"ஸ்டுடென்ட்ஸ் இந்த லிரிக்ஸ் வரும் பொழுது அஞ்சி தடவை லெப்ட் ஹண்ட் அண்ட் ரைட் ஹண்ட ஒன்னு மாத்தி ஒன்னு இன் அண்ட் அவுட் பண்ணி முன்னாடி வருவீங்க, அப்புறம் நெக்ஸ்ட் ஸ்டான்சாக்கு அப்படியே எல்லாரும் அதே ஸ்டெப்ஸ் அஞ்சி தடவை ரிவெர்ஸ்ல போட்டு உங்களுடைய ஒரிஜினல் பொஷிஷனுக்கு வரீங்க ஓகே வா" என்ற வர்ஷாவிடம் "ஓகே மாஸ்டர்" என்று அனைத்து குழந்தைகளும் உற்சாகமாக குரல் கொடுக்கவும் புன்னகைத்து கொண்டவள், இரண்டு மூன்று முறை அவர்களுக்கு பயிற்ச கொடுத்த பின்பு அவர்களை ஓய்வெடுக்க கூறிவிட்டு வெளியே வந்தபொழுது, "ஹாய் டி" என்று புன்னகையுடன் வர்ஷாவை நோக்கி வந்தாள் அவளது தோழி சௌமியா.

@@@@@@@@

"இன்னைக்கு ஈவினிங் பவியோட வெட்டிங் அனிவெர்சரி பார்ட்டிக்கு வருவியா?" என்ற தன் தோழி ஆர்த்தியிடம், "ஆமா இப்போ அவ அனிவெர்சரி அட்டென்ட் பண்றது தான் இப்போ முக்கியம் பாரு." சலிப்புடன் கூறினாள் வருணிக்கா.

"பவித்ரா நம்ம ஃப்ரண்டு டி, வீடு தேடி வந்து கூப்பிட்டிருக்கா போகாம எப்படி?" என்றாள் ஆர்த்தி.

"அவ புருஷன் பிரபு ஆதிக்கு ஃப்ரண்டு, ஆதி என்னை வெறுப்பேத்தவே வர்ஷாவை கூட்டிட்டு வருவான் போதாத குறைக்கு என் ஃப்ரண்ட்ஸ் ஆத்தி ஃப்ரண்ட்ஸ்ன்னு எல்லாரும் வருவாங்க. எல்லாம் வேணும்ன்னே கேள்வி கேட்டு வெறுப்பேத்துங்க நான் வரல" என்றவள் ஒருவித கோபத்துடன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க,

"நீ சொல்றதும் சரி தான்." என்ற ஆர்த்தி திடிரென்று நினைவு வந்தவளாய், "அப்புறம் என்னாச்சு? அந்த வர்ஷா ஏதும் சொன்னாளா?" என்று வருணிக்காவை பார்த்து வினவினாள்.

அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த வருணிக்கா, "அவ தான நல்லா சொன்னா, என்னை ஏமாத்திட்டா டி அவ" என்று பல்லை கடிக்கவும், ஆர்த்தி அவளிடம், "அப்போ எதுவும் இருக்காதா இருக்கும் டி" என்று கூறவும், அவளை இறுக்கமாக முறைத்த வருணிக்கா, "ஒன்னும் இல்லைன்னா நான் சூசைட் பண்ணின நைட் என் ரூம்க்கு வந்து, ஏன் தன்னையும் ஆதித்தையும் பத்தி முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல போறதா சொல்லணும். ஏதோ கண்டிப்பா இருக்கு ஆனா மறைக்கிறா ஃப்ராடு" என்றாள் வருணிக்கா.

அதை கேட்ட ஆர்த்தி, "நைட் சொல்லவந்தவ காலையில மறைக்க என்ன காரணமா இருக்கும்" என யோசனையுடன் வினவ, "என்ன பெரிய காரணம் இருக்க போகுது ஆதி ஏதாவது சொல்லிருப்பான். அந்த பொண்ணை துரத்துறது ஈஸி தான் கொஞ்சம் அழுத்தி பேசுனா ஓடிருவா ஆனா இந்த ஆதி தான் என்னை காயப்படுத்தணும்ன்னு, ஏதோ அவ மேல லவ் இருக்கிற மாதிரி ஓவரா பண்ணிட்டு இருக்கான்." என வருணிக்கா கடுப்புடன் கூறினாள்.

"ஒருவேள நிஜமாவே அவ மேல ஆதிக்கு லவ்.." என்ற ஆர்த்தி முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் வருணிக்கா பார்த்த பார்வையில் மீதமுள்ள வார்த்தைகளை தொண்டைக்குள்ளே நிறுத்தி கொண்டவள், வாயை மூடிக்கொள்ள,

"அவளை அவன் லவ் பண்ணுவானா?" பற்களை நரநரதப்படி வருணிக்கா வினவவும் இல்லை என்பது போல ஆர்த்தி வேகமாக தன் தலையை குறுக்காக அசைக்கவும், "ஆதித்தால அவளை லவ் பண்ணவும் முடியாது என்னை மறக்கவும் முடியாது" என உறுதியாக கூறினாள்.

@@@@@@@@@@

"வருணிக்காவை நினைச்சா தான் டி வருத்தமா இருக்கு" என்ற வர்ஷாவின் பார்வை இலக்கில்லாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்தது.

அப்பொழுது அவளது தோள் மீது கரம் வைத்த சௌம்யா, "உன் நிலைமையை நினைச்சா உனக்கு வருத்தமா இல்லையா? என்ன காரியம் பண்ணிருக்க நீ? நிரோஷாக்காக உன் வாழ்க்கையவே பணயம் வச்சிருக்க அது உனக்கு புரியுதா டி. குழந்தை பெத்து கொடுத்துட்டு போயிடுன்னு அவர் கண்டிஷன் போட்டிருக்காரு, என்ன தைரியத்துல நீ அவரை கல்யாணம் பண்ணிருக்க" ஆதங்கத்துடன் வினவினாள் சௌமியா.

"அது கோபத்துல அவர் சொன்னது, அவர் அப்படி குழந்தைய பெத்து கொடுத்ததும் என்னை அனுப்புற ஆளா இருந்தா இப்போ வரைக்கும் நான் நானா இருப்பேனா என்ன? என் மேல அவ்வளவு கோபம் இருந்தாலும் என்னை எப்படியெல்லாம் பார்த்துகிறாரு தெரியுமா? என்னை நானே எடுத்துக்க சொல்லியும் என் பயம் அறிஞ்சி தள்ளி நின்னவரு டி அவரு, நிச்சயம் என் விருப்பம் இல்லாமல் அவரோட மூச்சு காத்து கூட என் மேல படாது. அதே நேரம் நிச்சயம் என்னை அவர் விடவும் மாட்டாரு.

ஆதித் ரொம்ப நல்லவர் சௌமி, அவருக்கு போய் நிரோ இப்படி துரோகம் பண்ணிட்டாளே என் மனசு ஆறவே மாட்டேங்குது.

வருணிக்காவும் அவரும் நல்லாவே லவ் பண்ணிருக்காங்க, சந்தோஷமா வாழ வேண்டியவங்க இப்படி பிரிஞ்சிருக்குறதை பார்க்க ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு." என்று தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி கூறினாள் வர்ஷா.

உடனே, "அதுக்காக நீ பெரிய தியாகி போல பிரிஞ்சிடலாம்ன்னு மட்டும் நினைச்சிடாத" என்றாள் சௌமியா.

அதை கேட்டு தன் தோழியை நிமிர்ந்து பார்த்த வர்ஷா, "அன்னைக்கு நைட் வருணிக்காவை இரத்தத்தோட பார்த்த நேரம் போய்டலாம்ன்னு முடிவு பண்ணி வருணிக்காகிட்ட எங்களுக்குள்ள எதுவும் இல்லை நான் போயிடுறேன்னு சொல்றதுக்காக அவங்கள பார்க்க அவங்க ரூம்க்கு போனேன், ஆனா வருணிக்கா அம்மா என்னை அவங்க கிட்ட பேச விடல, அப்புறம் அடுத்த நாள் காலையில வருணிக்கா என்னை பார்க்க வந்தாங்க" என்றதுமே, "போறேன்னு சொல்லிட்டியா என்ன?" என்று பதற்றதுடன் வினவிய சௌமியாவிடம் இல்லை என மறுப்பாக தலையசைத்த வர்ஷா,

"சும்மா தான் பார்க்க வந்தேன்னு சமாளிச்சிட்டேன். வருணிக்கா சூசைட் அட்டென்ட் பண்ணினதும் அவரை விட்டு பிரிஞ்சிடலாம்ன்னு முடிவு பண்ணினேன் தான், ஆனா என்னால சத்தியமா முடியல டி அவரை விட்டு பிரியனும்ன்னு நினைச்சாலே மனசெல்லாம் பாரமா இருக்கு சௌமியா, அழுகையா வருதுடி" எனக் கண்ணீருடன் கூறினாள் வர்ஷா.

"ஆதித் சாரை லவ் பண்றியா என்ன?" நீதானமாக வர்ஷாவின் முகம் பார்த்து வினவினாள் சௌமியா.

அதற்கு, "தெரியல" என்ற வர்ஷா கண்ணீருடன், "காதலையெல்லாம் தாண்டி போத் மெண்டல்லி அண்ட் ஃபிசிகலி அவர் கூட ரொம்ப நெருங்கிட்டேன்னு தோணுது. ஆனா ரொம்ப பயமா இருக்கு" என்றாள்.

"அவர் எப்படி? எதுக்கும் உன்னை ஃபோர்ஸ் பண்றாரா" என்று கேட்ட சௌமியாவிடம், "ச்ச அவர் அப்படியெல்லாம் கிடையாது. ஆனா என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்றாரு. என்னால தான் முழுசா நெருங்க முடியல, குற்ற உணர்ச்சியா இருக்கு. நிரோ பத்தின உண்மைய மறைச்சது அப்புறம் வருணிக்கா பத்தின எண்ணங்கள்ன்னு எல்லாம் சேர்ந்து என்னை படுத்துது." என்ற வர்ஷா தன் தலையை பற்றிக்கொண்டு அப்படியே அருகில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துவிட அப்பொழுது பார்த்து அவளது அலைபேசி சிணுங்கவும் எடுத்து பார்த்தாள்.

ஆத்தின் பெயரைத் தாங்கி அலைபேசி சிணுங்கி கொண்டிருக்க கண்களை துடைத்துவிட்டு வர்ஷா அட்டென்ட் செய்தாள்.

"ஹாய்" படு துள்ளலாக ஒலித்த அவனது குரல் கேட்டு, கண்கள் கலங்கி இருந்தாலும் குட்டி புன்னகை ஒன்று வர்ஷாவின் இதழோரம் வந்து ஒட்டிக்கொள்ள, பதிலுக்கு "ஹாய்" என்றாள் மெல்லிய குரலில்.

"என்னாச்சு வாய்ஸ் டல்லா இருக்கு" அணிந்திருந்த காலணியை வாசலில் கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபடி ஆதித் வினாவினான்.

"இவ்வளவு நேரம் கிளாஸ்ல இருந்தேன் இப்போ தான் ஃப்ரீயானேன் கொஞ்சம் டயர்ட், அவ்வளவு தான் மத்தபடி நல்லா இருக்கேன்" என்றாள்.

"அப்போ ரெஸ்ட் எடு ரொம்ப ஸ்ட்றேன் பண்ணிக்காத" அக்கறையுடன் கூறினான்.

"ஓகே" என்றாள்.

"அப்புறம் ஈவினிங் என் ஃபரண்ட் பிரபு வீட்ல அனிவெர்சரி பார்ட்டி இருக்கு போகணும்ன்னு சொல்லிருந்தேன்ல"

"ஆமா"

"அதுல ஒரு சின்ன சேஞ், நாம சேர்ந்து போக முடியாது. காஞ்சிபுரம் வர போறேன் கொஞ்சம் முக்கியமான வேலை நான் தான் போயாகனும், ஸோ லோகேஷன் அனுப்புறேன் ஈவினிங் நீ கிளம்பி பார்ட்டி நடக்குற இடத்துக்கு வந்து பார்க்கிங்ல வெய்ட் பண்ணு, நான் வேலை முடிச்சிட்டு காஞ்சிபுரம்ல இருந்து நேரடியாக அங்க வந்திடுவேன் நான் சீக்கிரம் வந்தா நான் வெயிட் பண்றேன், அங்க இருந்து சேர்ந்து போகலாம். உனக்கு ஓகேவா" என்று கேட்ட ஆதித்திடம், "எனக்கு ஓகே" என்றாள் வர்ஷா.

"அப்புறம் வர்ஷா கப்போர்ட்ல ஒரு ரெட் கவர் இருக்கும் அதுல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வீட்டுக்கு போய்ட்டு பார்த்துட்டு சொல்லு" என்றான் ஆதித்.

"ஓகே" என்ன சர்ப்ரைஸ்? கவர்ல என்ன இருக்கு? இப்படி பல ஆர்வமான கேள்விகளை அவன் அவளிடம் எதிர்பார்திருக்க, ஆனால் அவளோ 'ஓகே' என்ற ஒரே வார்த்தையில் உரையாடலை முடித்ததில் ஏமாற்றம் அடைந்தவன், "தென் ஓகே" அழைப்பை அணைக்க மனமே இல்லாமல் பேச்சை வளர்த்தான்.

காலையில் அவன் நடத்திய முத்த தாக்குதல் ஒரு பக்கம், மனதை அழுத்தி கொண்டிருக்கும் குழப்பங்கள் ஒரு பக்கம் என கலவையான உணர்வு போராட்டத்திற்குள் சிக்கிகொண்ட பெண்ணவளோ என்ன பேசுவதென்று தெரியாமல் தயக்கத்தில், "ஓகே" என்றுவிட,

"ஓகே, சாரி, பயமா இருக்கு, ப்ளீஸ் இதை தவிர வேற எதுவுமே உனக்கு என்கிட்ட பேச தோணலையா" பொறுமை பரிபோகவும் நேரடியாகவே அவன் கேட்டுவிட, "எதை பத்தி பேசுறது?" மெல்லிய குரலில் அவனிடமே கேட்டாள், 'என்ன குரல் இது' என்று எண்ணியவனின் உடலெங்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட, அவனுக்குள் பொல்லாத ஆசைகள் எல்லாம் முளைக்கவும் தன் குரலை செருமிக்கொண்டவன்,

"எதை பத்தினாலும் பேசலாமே, உன்னை பத்தி பேசலாம், என்னை பத்தி பேசலாம், நம்மள பத்தி பேசலாம். அப்புறம் இன்னைக்கு நான் உனக்கு கொடுத்ததை பத்தி பேசலாம், அப்புறம் நீ எனக்கு குடுக்க வேண்டியதை பத்தி பேசலாம்" முதலில் அவளுக்கு புரியவில்லை ஆனால் புரிந்தபொழுது அவளால் சீராக சுவாசிக்க கூட முடியவில்லை, சட்டென்று கன்னங்கள் இரண்டும் சிவப்பேரி விட, உடலெங்கும் பரவிய அதிர்வலையால் தடுமாறிய பெண்ணவளோ உட்புற கன்னத்தை கடிதப்படி அமைதியாகிவிட, அலைபேசி வழியாக அவனது காதை நிரப்பிகொண்டிருந்த அவளது வேக மூச்சிகளின் சப்தம் அவள் இருக்கும் நிலையை அவனுக்கு உணர்த்தவும் புன்னகைத்து கொண்டவன்,

"சரி எப்போ என் கடனை திருப்பி கொடுக்க போற? வட்டி வேற நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிட்டே போகுது அப்புறம் உனக்கு தான் கஷ்டம்" அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினான்.

"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல" சன்னமான குரலில் எதுவும் புரியாதது போல சொன்னாள்.

"ஆஹான்! பிரச்சனை இல்லை, மொத்தமா இன்னைக்கு நைட் புரியாத அத்தனையும் புரிய வச்சிடுறேன்" பேசி பேசியே பெண்ணவளை சிவக்க வைத்தான்.

"முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்களே" பேச்சை மடை மாற்ற பார்த்தாள்.

"ஆமா ஆமா நைட் முக்கியமான வேலை இருக்குது தான்" அழுத்தம் திருத்தமாய் கூறினான். இவளுக்கு ஐயோ என்றானது.

"நான் நீங்க காஞ்சிபுரம் போறதை பத்தி சொன்னேன்ங்க" இதழை கடித்து புன்னகையை அடக்கிகொண்டாள்.

"ஆமா ஆமா நீ சரியா தான் சொல்லிருக்க, இப்போ கிளம்புனா தானே சீக்கிரமா போயிட்டு வர முடியும், நைட் வேற முக்கியமான வேலை இருக்கே" புன்னகையுடன் சொன்னான் ஆதித். வர்ஷாவுக்கோ எங்கையாவது சென்று ஒளிந்து கொள்ளலாம் போல தோன்ற, "ப்ளீஸ்" என்றதுடன் அமைதியாகிவிட்டவளுக்கு அதற்கு மேல் எதுவுமே பேச முடியாமல் போக, அவள் நிலைமையை உணர்ந்து சத்தமாக சிரித்துவிட்ட ஆதித் புன்னகைதப்படியே, "பார்ட்டியில மீட் பண்ணலாம்" என்று சொல்ல, சரி என வர்ஷா கூறியதும் அழைப்பை அணைத்தவன், பார்ட்டிக்கு தேவையான உடையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

ஆதித்தின் தலை மறையும் வரை காத்திருந்த வருணிக்கா, அவன் சென்றதை உறுதிப்படுத்திவிட்டு தூணிற்கு பின்னால் இருந்து வெளியே வந்த பொழுது அவளது கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தது.

@@@@@

அலைபேசியின் திரையை சில நொடிகள் புன்னகையுடன் பார்த்துவிட்டு திரும்பிய பொழுது தன் கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தன்னை முறைத்து கொண்டிருந்த தன் தோழியை பார்த்ததும் அவள் முறைப்பிற்கான காரணத்தை புரிந்து கொண்ட வர்ஷா, 'அச்சோ பேசிட்டு இருந்ததுல இவளை மறந்துட்டோமே' என்று மனதிற்குள் எண்ணிகொண்டு சௌம்யாவை கெஞ்சிதலாக பார்த்து,

"சாரி" என்று சொல்ல, "நீயெல்லாம் பிரிஞ்சி போறதை பத்தி யோசிச்சு கூட பார்த்திடாத சரியா, உனக்கும் அவரை புடிச்சிருக்கு அவருக்கும் உன்னை புடிச்சிருக்கு. இனிமே கண்டதை பத்தி யோசிக்காத டி, நிம்மதியா உன் லைஃபை நீ வாழு" என்றாள் சௌமியா.

"சரி தான் ஆனா வருணிக்கா அவங்கள நினைச்சா ஒரு மாதிரி இருக்கு"

"அவங்களை ஏன் நீ நினைக்கிற? அந்தப் பொண்ணு தானே வேண்டாம்ன்னு விட்டுட்டு போச்சு, இப்போ வந்து வேணும்னா என்ன பண்றது. அந்தப் பொண்ணு மட்டும் ஒழுங்கா ஆதித் சாரை கல்யாணம் பண்ணி இருந்தா, இந்தப் பிரச்சனையே நடந்திருக்காது. எல்லா தப்பையும் அந்த பொண்ணு பண்ணிட்டு இப்போ வந்து ட்ராமா பண்ணினா நீ என்ன பண்ணுவ" என்றாள் சௌம்யா.

"எல்லா தப்பும் அந்த பொண்ணு மேலன்னு சொல்லிட முடியாது சௌமியா, நிரோ அப்படி ஒரு காரியத்தை பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கவே மாட்டாங்க" வருத்தத்துடன் கூறினாள் வர்ஷா.

"நிரோ பண்ணினது தப்பாவே இருக்கட்டும், அதுக்காக லவ் பண்ணினவங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது அவங்களை நம்பாம, வேண்டாம்ன்னு விட்டுட்டு போறது சரியா? என்ன ஆனாலும் அந்த பொண்ணு ஆதித் சார் கூட இருந்திருக்கனுமா இல்லையா?"

"விட்டுட்டு போயிருக்க கூடாது, கூடவே இருந்திருக்கணும்" என்றாள் வர்ஷா.

"புரியுதுல்ல சோ, வருணிக்காவை பத்தியும், நடந்து முடிஞ்சத பத்தியும் யோசிக்காம நடக்க போறத மட்டும் யோசி. எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்ற சௌமியாவுக்கு பதில் ஏதும் கூறாது வர்ஷா அமைதியாக இருக்கவும்,

"இன்னுமே நீ குழப்பத்துல தான் இருக்கன்னு எனக்கு புரியுது. ரொம்ப போட்டு யோசிக்காம சீக்கிரம் தெளிவான ஒரு முடிவு எடு. அதுதான் உனக்கும் நல்லது எல்லாருக்கும் நல்லது" என்ற தன் தோழியிடம் சரி என்பதாய் தலையசைத்தாள் வர்ஷா.

@@@@@@"இவ்வளவு காஸ்ட்ளியான புடவை இதுவரை ஆதித் எனக்கு கூட வாங்கி தந்தது இல்லை ஆர்த்தி. ஆனா இப்போ போயும் போய் ஒரு அன்னக்காவடிக்கு வாங்கி கொடுத்திருக்கான். என்னால தாங்கிக்கவே முடியல" ஆத்திரத்துடன் கூறினாள் வருணிக்கா.

"நீயும் அவனும் லவ் பண்ணின காலத்துல உனக்கும் ஆதித் வாங்கி தந்திருக்காரு, ஆனா உனக்கு புடவை புடிக்காதுன்னு நீ கட்டி கூட பார்க்க மாட்ட" என்ற தன் தோழியை கொலைவெறியுடன் பார்த்த வருணிக்கா, "இப்போ என்ன சொல்ல வர?" என்று எகிரவும் தன் நெற்றியை நீவிய ஆர்த்தி, "என்னை மன்னிச்சிடு நான் ஒன்னும் சொல்லல, டிரெஸ்ஸ முதல்ல எடுத்த இடத்துல வச்சுட்டு வந்துடலாம் யாரும் பார்த்தா உனக்கு தான் வரு பிரச்சனை"

"எனக்கு அதை பத்தியெல்லாம் கவலை இல்லை, ஆனா இதை அவளுக்கு குடுக்க மாட்டேன். சோத்துக்கே வழியில்லாதவளுக்கு காஸ்ட்லியான புடவை கேக்குதா. என்னையும் ஆதியையும் பிரிச்சாள்ல அதுக்கு இன்னைக்கு கண்டிப்பா அனுபவிப்பா" என்று வன்மத்துடன் கூறினாள் வருணிக்கா.
 
Mathykarthy

Well-known member
ஆதி வர்ஷா...🥰💞
ர்ஷா ஆதியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..... 🤗🤗🤗🤗🤗 இனி அவனை விட்டுக் கொடுக்குறது சுலபம் இல்லை... 🙃
வருணி எவ்வளவு வாங்குனாலும் அடங்க மாட்டேங்குறா... 😤😤😤😤😤 ஆதி இன்னும் உன்னை தான் லவ் பண்ணுறான்னு கனவு கண்டுட்டே இரு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இப்போ புடவையை வச்சு என்ன பிளான் பண்ணுறா... 🤔
 
அப்டி சொல்ல முடியாது டியர் வர்ஷாவ நம்பாதீங்க.
அவ சீக்கிரம் அடங்கிருவா டியர்.
என்ன பிளான் போட்டாலும் மொக்கை தான் வாங்கும் டியர் 💕
Thank u so much dear💕
 
இவ்வளவு வன்மம் ஆகாது இவளுக்கு!!... என்ன செஞ்சு வைக்க போறாளோ!!??..
 
Top