எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -3

3


மாலை அலுவலகத்தை விட்டு சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்த கதிர் வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் கண்முடி தலை சாய்த்து அமர்ந்தான்.


அம்மா ஸ்ட்ராங்கா ஒரு கப் ஃகாபி எனக்கு குரல் கொடுத்தான்.


சற்றுநேரத்தில் தடதடவென ஏதோ சத்தம் கேட்கவும் கண்விழித்தான்.


எதிரில் அவள் காலையில் பார்த்த பாவாடை சட்டை பெண் பயத்தில் கையில் இருந்த டிரே ஆட மருண்ட விழிகளுடன் இவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

காலையில் அரைகுறையாக பார்த்தது இப்பொழுது நிதானமாக அவளை ஆராய்ந்தான்.


கிராமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ முகம் மஞ்சள் நிறத்தில் இருந்தது..சருமம் சற்று மினுமினுப்புடன் இருந்தது.. காலையில் பாவாடை சட்டை அணிந்து இருந்தால் இப்பொழுது அதன் மேலே புடவை மாதிரி ஏதோ ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக கௌரியின் வேலையாக இருக்கும் இல்லையென்றால் தலைமை பணியாளர் அன்னமாவின் வேலையாக இருக்கும் என்பதை நொடியில் உணர்த்துக் கொண்டான்.


தன் முன்பு பயந்து நடுங்குபவளை பார்த்ததுமே இவனுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதேசமயம் அவளின் பயந்த தோற்றம் அவனுக்கு எரிச்சலையும் கொடுத்தது.


இவளை என்ன நான் கடிச்சா சாப்பிட போறேன் எதுக்கு இப்படி நடுங்கறா என நினைத்தவன் அதே தோணியை வார்த்தைகளிலும் கொண்டு வந்தான்.


எதுக்கு இப்படி முன்னாடி டான்ஸ் ஆடிட்டு இருக்குற ஒழுங்கா பிடிக்க முடியாது என ஒரு அதட்டல் போட்டதுதான் தாமதம் அப்படியே கையில் இருந்தை கீழே போட்டுவிட்டு வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.


சத்தம் கேட்டு ஓடி வந்த அன்னம்மா அதிர்ச்சி அடைந்தார்.கௌரியோ கோபத்தில் நிதானத்தை இழந்தார்.

அன்னம் உன்கிட்ட காலைலேயே என்ன சொல்லியிருந்தேன்..அவ எதுக்காகவும் சமையல் கட்டை விட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனா இல்லையா.எதுக்காக அவ கிட்ட காஃபி குடுத்து விட்ட..உன்னால குடுக்க முடியலன்னா என்னை கூப்பிட வேண்டியது தானே.. இனியொரு முறை இது நடந்தது நீ இங்க இருக்க மாட்ட நியாபகம் வச்சிக்க.


இல்லம்மா அது வந்து..


காரணம் சொல்லாத இடத்தை சுத்தம் பண்ணு..இரு கதிர் உனக்கு நான் காஃபி கலந்து கொண்டு வரேன் என உள்ளே சென்றார்.


இல்லம்மா வேணாம் என்றவன் தாயாரை பார்த்து அந்த பொண்ணை ஊருக்கு அனுப்பிடுங்க என கூறிவிட்டு கோபமாக சென்றான்.


இதுக்கு தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. ..திருப்பி அனுப்புங்க வேணாம்னு..என் பேச்சை கேட்காமல் அவளை வீட்ல இருக்க அனுமதிச்சிங்க இப்போ பாருங்க என்பையன் என்கிட்ட கோவிச்சிட்டு போறான் உடனே ஊருக்கு அனுப்ப சொல்லிட்டான் என்ன பண்ண போறீங்க என கணவரிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தார் கௌரி.


தலையில் கை வைத்த படி மௌனமாக அமர்ந்திருந்தவர் பரிதாபமாக மனைவியைப் பார்த்து அவ நிலைமை என்ன என்பது உனக்கே தெரியும் அப்படி இருந்தும் கூட எப்படி உன்னால பேச முடியுது என இயலாமையுடன் கேட்டார்.


அவ அம்மா பண்ணின பாவத்தை பொண்ணு தொலைச்சிட்டு இருக்கா இதுக்கு நான் என்ன செய்ய முடியும்.


பழசு எதையுமே மறக்க மாட்டியா கௌரி பாவம் அந்த பொண்ணு.. நம்ம வீட்டுல எத்தனையோ பேர் இருக்காங்க..வேளாவேளைக்கு சாப்பிடுறாங்க அப்படி இந்த பொண்ணும் ஒரு மூலையில கிடந்து சாப்பிட்டுட்டு போகட்டும் கொஞ்சம் இரக்கம் காட்டு எனக் கெஞ்சினார்.


இப்படி பேசிபேசியே என் வாயை அடைச்சிடுங்க ஆனா ஒன்னு மட்டும் தெளிவா சொல்லிட்டேன் கேட்டுக்கோங்க அடுத்த முறை கதிர் என்கிட்ட கோபப்படுற மாதிரி அவ நடந்துகிட்டா யோசிக்காம நானே கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவேன் அப்புறம் ஏன் இப்படி கல் மனசு மாறி நடந்துக்கறேன்னு என்கிட்ட கேட்டுட்டு இருக்க கூடாது.. உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்களும் கூட அவளோடவே வெளியே போங்கன்னு சேர்த்து அனுப்பிடுவேன் என்று கராராக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.


கடைசியாக தாய் பேசியதை மட்டும் கேட்டபடியே வந்தவன் தந்தையின் அருகே வந்து என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டபடி அமர்ந்தான்.


பெருசா எதுவும் இல்ல கதிர் உமையாளை ஊருக்கு அனுப்ப சொன்னியா என கேட்கவும்.


யார் உமையாள்..?ஒஓ இன்னைக்கு காலைல நம்ம வீட்டுக்கு வந்ததே அந்த பொண்ணா? கேள்வியாக தந்தையை பார்த்தவன் ஆமாப்பா அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு செட் ஆக மாட்டா திரும்பி அனுப்பிடுங்க என்றான்.


வேதனையுடன் பார்த்தவர் கதிர் புது இடம் என்கிறதால கொஞ்சம் அவ பயந்துட்டா அதுக்காக திருப்பி ஊருக்கு அனுப்புறதெல்லாம் தப்பு பா இன்னொரு பத்து நாள் இருந்தா நம்ம வீட்டோட பொருந்திபோகப் போறா கொஞ்சம் அவ விஷயத்துல கருணை காட்டேன் கெஞ்சினார்.


அப்பா அவ டிரேவை கீழ போட்டதால மட்டும் சொல்லல.. உங்களுக்கு நான் சொல்லி தெரியணும்ங்கற அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்,இந்த வீட்ல நீங்களும் நானும் மட்டும் ஆண்கள் கிடையாது, சமையல்காரர், டிரைவர்,தோட்டக்காரன்,உதவி ஆள்னு நிறைய பேர் இருக்காங்க எல்லாரோட பார்வையும் நேர்மையா இருக்குன்னு சொல்ல முடியாது.


அது சின்ன பொண்ணு விவரம் இல்லாதது.. ஒரு டிரஸ்ஸை கூட எப்படி போடணும்னு தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது நம்ம வீட்டில வச்சு எதுக்கு ரிஸ்க் எடுக்கனும் நமக்கு இருக்கிற வேலையே சரியா இருக்கு இதுல அந்த பொண்ணுக்கும் தனியா ஒரு காவல் போட்டு பாதுகாக்க கொடுக்க முடியுமா என்ன..?


இங்க பார் கதிர் இதை என்னால ஏத்துக்க முடியாது. நம்ம கிட்ட வேலை செய்றவங்க எல்லாம் அவ்வளவு மோசமானவங்களா..? அதுவும் இல்லாம நம்ம கிட்ட ஒரு பொண்ணு வேலைக்கு வந்த பிறகு அவளோட பாதுகாப்பு நம்மை சார்ந்தது.


நீயும் நானும் இருக்கும் போழுது அந்த பொண்ணுக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்தா அதன்பிறகு நாம இந்த வீட்டில் ஆண்களா இருக்குறதுக்கு அருகதை அற்றவர்கள்.. அதனால இது மாதிரி சிறுபிள்ளைதனமான காரணம் சொல்லாம சரியான காரணம் சொல்லு அந்த பொண்ணை அனுப்பிடலாம் என்றார்.


அம்மாக்கு அவளை பிடிக்கல..சோ எனக்கும்…என்றவன் கேள்வியாக ஏன் அந்த பொண்ணை அனுப்புறதுக்கு நீங்க இந்த அளவு யோசிக்கிறீங்க எனக்கு காரணம் தெரியலப்பா என்றான்.


உன் அம்மா உமையாளை வெறுக்க வலுவான காரணம் இருக்கு ஆனா அவளை பத்தி எதுவுமே தெரியாம நீ பிடிக்கலன்னு சொல்றதுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.


கதிர் ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோ எப்போவுமே யாரையும் பிடிக்கலைன்னு ஒதுக்கி மட்டும் வைக்காத ஏன்னா நம்மளை பிடிக்கலைன்னு ஒதுக்கி வைக்கவும் சில பேர் இருப்பாங்க என்றவர்.உமையாள் என் அக்கா மகள் என்றார்…உணர்ச்சி துடைக்கப்பட்ட குரலில்.


வாட் என அதிர்ந்து எழுந்து விட்டான் கதிர்…யூ..மீன்.


யெஸ் உன் அத்தை மக தான் அவ.


நம்பவே முடியலை அப்பா …நாம இவ்ளோ வசதியா இருக்கும் போது அவங்க எப்படி இந்த அளவிற்கு நொடிந்து இருக்க முடியும்.


அதுதான் பா விதி என்பது ..சில விஷயங்களை நான் உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன் அதுக்கு காரணம் என்னோட குற்ற உணர்ச்சின்னு கூட சொல்லலாம்.


என் அக்கா வள்ளி எனக்கு எப்பவுமே நல்ல அக்காவா தான் இருந்தா.. ஆனா நான் தான் அவளுக்கு நல்ல தம்பியா இருக்கல என்றவர் என் அக்காவுக்கு எனக்கு பெருசாலாம் வயசு வித்தியாசம் கிடையாது வெறும் ரெண்டு வயசு தான் வித்தியாசம்.. ஆனால் அவள் எனக்கு இன்னொரு அம்மா தான்.


நம்மளோட கிராமத்துல எங்க குடும்பம் ரொம்ப பெருசு பரம்பரை பணக்காரங்க.. சொத்து பத்துக்கு குறைவே கிடையாது.

எங்க அப்பாக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்ல..அதனாலயே குறைந்தது மூணு குழந்தையாவது வேணும்னு ஆசைபட்டாரு.


நானும் அக்காவும் அடுத்தடுத்து பிறந்துட்டோம் மூணாவது குழந்தை என் அம்மா வேணாம்னு நினைச்சு இருக்காங்க ஆனா அப்பா பிடிவாதமா பெத்துக்கிட்டே ஆகணும்னு அம்மா கிட்ட அடிக்கடி சண்டை போட்டு இருப்பார் போல .அம்மாக்கு வயதும் தாண்டிடுச்சி..அப்பாக்காக அவங்க மனசை மாத்திகிட்டாங்க.. கருவுற்றாங்க.. அந்த காலகட்ட சமயத்துல அதிகமா யாரும் மருத்துவமனை போய் பிரசவம் பாத்துக்க மாட்டாங்க வீடுகள்ல தான் பாப்பாங்க அப்படி தான் அம்மாவுக்கும் பாத்திருக்காங்க..வயது காரணமா பிரசவம் சிக்கல் ஆகிடுச்சு..கடைசியில உள்ளூர் மருத்துவச்சி கைவிரிச்சிட்டாங்க

அம்மாவை டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற வழியிலேயே வலி அதிகமா வந்து அம்மாவும் அந்த குழந்தையும் இறந்துட்டாங்க சொல்லும்பொழுது அவரது கண்ணீரை நாசுக்காக துடைத்துக்கொண்டார்.


அப்போ எனக்கு பத்து வயசு தான்.

அப்போதான் என் அக்கா பெரிய மனுஷியா ஆகியிருந்தா.. ஒரு பொண்ணுக்கு எந்த வயசுல அம்மாவோட ஆதரவு தேவையோ அந்த வயசுல ஆதரவு இல்லாம போயிடுச்சு.


நமக்கு தான் அம்மா இல்லாம போயிட்டாங்க அதனால் என்ன தம்பிக்கு நாமளே அம்மாவா மாறிடுவோம்னு அன்றைக்கு இருந்து எனக்கு அம்மாவா மாறிட்டா.


ஆரம்பத்துல ரெண்டு பேரும்தான் ஒன்னா தான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தோம்.


ஸ்கூல் முடித்து வரும் பொழுது நான் பசி தாங்க மாட்டேன் ஆனால் வீட்ல வேலைக்காரங்க எதுவும் செஞ்சு வைக்க மாட்டாங்க.. அப்பாவும் அம்மா போன தூக்கத்துல குடியே கதின்னு சாராய கடையிலேயே படுத்திட்டாங்க.. அப்பா கிட்ட பொய் சொல்லியும் அவர் பெருசா எதையும் கண்டுக்கல.. அவருக்குள்ள நிறையவே குற்ற உணர்ச்சி.


வயது வந்த பெண்ணிருக்கும் போது குழந்தை வேண்டான்னு எங்க அம்மா எவ்வளவோ கெஞ்சி இருக்காங்க ஆனா அவரு தான் கேட்கல..கடைசியில அம்மா தவறவும் என் பொண்டாட்டியை நானே கொன்னுட்டேன் நானே கொன்னுட்டேன்னு பித்து பிடிச்ச மாதிரி சுத்த ஆரம்பிச்சிட்டாரு.


அப்பா இப்படி இருக்கும் போது வீட்ல‌ வேலை செய்யறவங்க எப்படி ஒழுங்கா இருப்பாங்க.. அவங்களும் பொய் சொல்லி எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவையும் சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்க கடைசில நானும் என் அக்காவும் பட்டினில வாடினது தான் மிச்சம்.


அப்போ தான் என் அக்கா தீர்க்கமா ஒரு முடிவை எடுத்தா வீட்டில் இருந்து குடும்பத்தை பார்த்துக்கொள்வதுன்னு.


தண்ணி அடிச்சிட்டு கண்ட நேரத்தில் வருகிற என் அப்பாவையும் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற என்னையும் பட்டினியோட தூங்க விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு படிப்பை நிறுத்திட்டு பொறுப்புகள் எல்லாத்தையும் எடுத்துகிட்டா.


நானும் ஸ்கூலை ஊர்ல முடிச்சுட்டு காலேஜ் சென்னையில் படிக்கணும்னு ஆசைப்பட்டேன் சந்தோஷமா அனுப்பி வச்சா ஆசைப்பட்ட ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிக்க வச்சா அதுக்கப்புறம் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ என் அப்பா அவ கல்யாணத்துக்காக விட்டு வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் வித்து எனக்கு பிசினஸ் ஆரம்பிச்சு கொடுத்தா.


ஆனா நான் ரொம்ப சுயநலம் என் அக்காவை பத்தி யோசிக்கவே இல்ல படிப்பு முடிச்சது பிசினஸ் ஆரம்பிச்சதும் என் பிரண்டோட தங்கச்சியான உங்க அம்மாவை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று சொல்லவும் அதிர்ச்சியில் தந்தையை பார்த்தவன்..அப்போ உங்க அக்கா கல்யாணம் என்று கேட்கவும் .


நான் செஞ்ச பெரிய தப்பே அது தான் என் அக்காவுக்கு பொறுப்பா கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும் அதை நான் பண்ணல சுயநலமாக என் கல்யாணம் என் பிசினஸ்ன்னு என் வாழ்க்கை என் குடும்பம்னு இருந்துட்டேன்..


ஊர்ல அப்பா அக்கா சொந்த பந்தம் இருக்குன்னு யோசிக்கல என்று சொல்லவும் கதிர் என்ன உணர்ந்தான் என்று சொல்லவே முடியவில்லை .


தன் தந்தையின் மற்றொரு முகம் மிகவும் கோரமானதாக இருக்கிறதே..என அவரின் செயலை ஜீரணிக்க முயற்சி செய்தான்.


திருமணம் முடிந்த பிறகு தான் உங்க அம்மாவை அழைச்சுக்கிட்டு கிராமத்துக்கு போனேன் அங்கே என் அக்காக்கு ரொம்பவே வேதனை.. கோபத்துல கௌரியை பார்த்து ஒரு சில வார்த்தைகள் விட்டுட்டா .


என் தம்பியை எதை காமிச்சு

மயக்கின.. அப்படி என்னடா இவ கிட்ட இருக்குன்னு பெத்த தகப்பன் கிட்டயும் கூட பிறந்த அக்கா கிட்டயும் சொல்லிக்காம கல்யாணம் பண்ணி இருக்கன்னு அக்கா கேட்கவும் அந்த வார்த்தை கௌரியை ரொம்பவே கோவப்படுத்திவிட்டது அதோட இல்லாம.

நீ இப்படி ஒரு பொண்ணை ஆசைப்பட்டேன்னு தெரிஞ்சிருந்தா அப்பா கிட்ட சம்மதம் வாங்கி முறைப்படியா ஜாம் ஜாம்னு நானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே இப்படி யாருமே இல்லாத அனாதை மாதிரி நீ ஏன் தனியா கல்யாணம் பண்ணனும்.


உனக்கு தான் அறிவில்லை இவளை பெத்தவங்களுக்காக கூடவா அறிவில்ல.


நல்ல குடும்பம்னா நீ ஆசைப்பட்ட விஷயம் தெரிஞ்சதுமே முதல்ல உன் அப்பா அம்மாவை வந்து பெண் கேட்க சொல்லுன்னு என்கிட்ட

தகவல் சொல்ல வச்சிருப்பாங்க இப்படி பையன் கெடச்சா போதுன்னு பிடிச்சு வச்சு திருட்டு கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க என்று கோபமாக கத்தினார்.

இது எதுவுமே கௌரிக்கு பிடிக்கல.. அவ பிறந்த வீட்டைப் பற்றி அக்கா பேசியது அவளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்த அவ முன்னாடி எதுவும் பேசாம என்கிட்ட சண்டை போட்டா அப்புறமா..ரெண்டு நாள் கூட என்னை கிராமத்துல தங்க விடல உடனே சென்னை கூட்டிட்டு வந்துட்டா அக்காவும் அழுதுகிட்டே என்னை வழிய அனுப்பி வச்சுட்டா.


எங்களோட காதலுக்கு அடையாளமா அடுத்த வருஷமே நீ பிறந்த.. அந்த விஷயத்தை நான் ஊர்ல போய் சொல்லும்போது என் அப்பா என்கிட்ட பயங்கரமா சண்டை போட்டாரு.. அப்பன் செத்துட்டான்னு முடிவு பண்ணிட்டியா சரிடா எனக்கும் இனிமே புள்ளை இல்லன்னு முடிவு பண்ணிக்கிறேன் என்று அங்கிருந்து சென்று விட்டார்


ஆனால் வள்ளி அப்படி விடவில்லை..ஏன்டா உன் பொண்டாட்டி மாசமா இருக்கறதை தான் என்கிட்ட சொல்ல கூச்சம்.. சீமந்தம் வச்சிருப்பல்ல ..அப்போ கூட அக்காவை கூப்பிடனும் உனக்கு தோணலையா அப்படின்னு என்கிட்ட சண்டை போட்டா அப்புறம் என் கூடவே கிளம்பி உன்னை பார்க்கிறதுக்காக சென்னை வந்தா.வந்த இடத்திலும் கௌரியை புடிச்சு திட்டிட்டா அவனுக்கு தான் அறிவு இல்ல உனக்கு கூடவா அறிவில்லை குடும்பம் இப்படியே வெட்டிட்டு போகணும்னு நினைக்கிறியா? ஒரு பொம்பளை குடும்பத்துக்குள்ள வந்தா அந்த குடும்பத்தை சேர்த்து வைக்கணும்னு நினைக்கணும் இப்படி ஒட்ட நறுக்கிட்டு போகணும்னு நினைக்க கூடாது.


அப்படி என்ன பண்ணிட்டோம் நாங்க உனக்கு..புருஷன் மட்டும் போதும்னு நினைக்கிற .. பெத்தவங்க இல்லாம அவன் வந்துட்டானா..


பெத்த தகப்பன் கூட பொறந்த அக்கா மத்த சொந்த பந்தம் யாருமே உனக்கு வேண்டாமா? என கோபமாக மருத்துவமனையில் வைத்து கத்தி விட்டார்.கௌரிரி மனது தாங்காமல் கதறி அழ ஆரம்பித்து விட்டார். செவிலிய பெண் தான் வந்து வள்ளியை வெளியேற்றியது அதன் பிறகு கௌரியும் கிராமத்திற்கு செல்லவே இல்லை ரத்தினத்தையும் விடவில்லை.


இது உனக்கு மட்டும் வயசு ஆகல ஊர்ல என் அக்காவுக்கும் வயசானது எனக்கு தோணாம போயிடுச்சி.


அந்த சமயத்துல பணத்து பின்னாடியும் உங்க அம்மா பின்னாடியும் நான் சுத்திட்டு இருந்ததால என் அக்காவை பத்தி யோசிக்கவே இல்ல.


அதான் அப்பா இருக்காரே அவர் பார்த்துப்பாருன்னு விட்டுட்டேன் ஆனா என் அப்பா குழந்தையா இருக்கும்போதே எங்களை கவனிச்சது இல்ல வளந்த பிறகா கவனிப்பாரு.


ஆனால் அப்பப்போ கிராமத்தில் இருக்கிறவர்களுக்கு விசாரிப்பேன் அக்காக்கு ஏதாவது மாப்பிள்ளை பார்க்குறாங்களா என்ன ஏதுன்னு அவங்களும் பாக்குறாங்க இந்த வாரம் அந்த மாப்பிள்ளை வந்துச்சு.

அந்த ஊர்ல இருந்து மாப்பிள்ளை வந்துச்சுன்னு சொல்லுவாங்க அப்போ எல்லாம் அக்காக்கு எதனால கல்யாணம் தள்ளி போகுதுங்கறதை பற்றி நான் சிந்திக்கலை.


தவிர மாப்பிள்ளை பார்க்கிறாங்க..ஜாதகத்துல ஏதோ தோசம் அதனால அமைய மாட்டேங்குதுன்னு நினைச்சேன்.


உண்மையான காரணம் என்னன்னா அப்பா சொத்துக்கள் பாதியை குடிச்சே அழிச்சுட்டாரு மீதியை அக்கா என் படிப்புக்காகவும் பிசினஸ்க்காகவும் வித்து கொடுத்திருக்கா..அவளுக்குன்னு தனிப்பட்ட முறையில் நகையோ பணமோ எதுவுமே இல்ல.


அதை தம்பியான என்கிட்டேயும் சொல்ல தயங்கியிருக்கா தம்பியே இப்போ தானே பிசினஸ் ஆரம்பிச்சு நல்ல நிலையைக்கு வந்திட்டு இருக்கான் அவன் கிட்ட போய் எப்படி எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு கேட்கறது..?ஒரு அக்காவா அவ பக்கம் ரொம்ப சரி..


ஆனா தம்பி எனக்கும் அது புரியல.. எப்பவும் ஊர்ல செல்வ செழிப்போட இருந்ததால பணம் காசுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதை பற்றி நான் யோசிக்கவே இல்ல.


வீட்ல என்ன இருக்கு இல்லைங்கறதை எப்பவுமே அக்கா என்கிட்ட சொன்னது இல்ல அவளே தான் எல்லாத்தையும் சமாளிச்சுப்பா அதனால தானோ என்னவோ நான் மேம்போக்கா இருந்து பழகிட்டேன்.


இங்க கௌரிக்கும் அம்மாவை பிடிக்கலையா அதனால ஆகாத சனி இடம் போனால் என்ன..? வலம் போனா என்ன..? நம்ம வீட்டுக்கு வராமல் இருந்தா போதும்னு கண்டுக்காம இருந்துட்டா.


ஊருக்குள்ள அக்காவுக்கு வயசு ஆகுறதால அப்பாவை எல்லாரும் கேட்கவும் அப்பாக்கு உடனே கோவம் வந்து அவர் குடிக்கிற சாராயக்கடையிலேயே ஒருத்தரை பிடித்து கட்டி வச்சுட்டாங்க.. அக்காவுக்கு தம்பி தான் அப்பா பேச்சைக் கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டான் நாமளும் அப்பா பேச்சைக் கேட்காம இருக்கக்கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த குடிகார மாப்பிள்ளையே கல்யாணம் பண்ணிக்கிட்டா.கல்யாணத்துக்கு நான் போனேன் அப்போ கூட மாப்பிள்ளை என்ன பண்ணறான் ஏது பண்ணுறான்னு விசாரிக்க தோணல.


எப்படியோ அக்காக்கு கல்யாணம் ஆயாச்சி ..கடமை முடிஞ்சதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.


இருந்து கொஞ்ச நஞ்ச சொத்தையும் அக்கா நீயே வச்சுக்கோன்னு விட்டுக் கொடுத்துட்டேன் ஒரு தம்பியா என் பொறுப்பு முடிஞ்சுதா நினைச்சுட்டேன் ஆனா அது தப்புங்கிறதை பின்னாடி என்னோட அக்கா எனக்கு வலிக்க வலிக்க புரிய வச்சா.
 
Top