எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#மலடியின்_மகளே….

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#மலடியின்_மகளே….

தலைப்பை போலவே கனமான கதை …..

மதி இல்லத்தில் வளர்ந்த பெண்….

சூர்யா, மதி மேல காதல் கொண்டு மணக்க கேட்க….

முதலில் விலகும் மதி, அவனின் காதல் புரிய கல்யாணமும் நடக்குது….

மாமியார், ஓரக்கத்தியின் கொடைச்சல் இருந்தாலும்….

சந்தோசமா போற வாழ்க்கையில் , குழந்தை இல்லா கவலை வாட்டுது மதியை…..

அதுக்கு முக்கிய காரணம் மாமியாரின் குடைச்சல் தான்…..

குழந்தை வேண்டுமே வேண்டும்னு “CARA” வில் பதிவு பண்ணி காத்திருக்கும் நேரத்தில் சில பல அனர்த்தங்கள் நிகழுது…..

அதையும் தாண்டி, செயற்கை முறையில் குழந்தை பெற, பெயர் பெற்ற நிறுவனத்தை அணுக…..

இப்ப நடந்தது எல்லாம் சும்மா, இனி தான் பெரிய பிரச்சனையே அப்படினு சாவின் விழும்பு வரை மதி கூட்டி கொண்டு விடுது…..

இதில் இருந்து எப்படி மீண்டு, குழந்தை வந்ததா என்பது எல்லாம் கதையில்…..

சூர்யா, ரொம்ப நல்லவன், அதை விட அளவில்லா காதல் மதி மேல…..

மதி, முதலில் இவளை நாலு கொட்டு கொட்ட தான் தோணுது…..

குடும்பம் உடைய கூடாதுனு நினைக்கரது சரி தான்….

அதுவும் தன்னோட தன்மானம் காய படாம இருக்கற வரை தான்….

வீட்டில் அவளோ கொடுமைகள் நடக்குது, ஒன்னையும் அவன் கிட்ட சொல்றது இல்லனா என்ன செய்யறது??????

இது தியாகம் இல்ல, சுத்த பைத்தியக்கார தனம்…..

சுந்தர், நல்ல அண்ணன் சூர்யாக்கு…..

பாரு & கவி, திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்??????

CARA பத்தி, குழந்தை இல்லா அம்மாக்களின் கண்ணீர் தான் இந்த மாறி நிறுவனங்களுக்கு லாபம் அப்படினு நச்சி சொன்ன விதம்👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top