எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் மொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே விமர்சனம்

நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK 51ன் உன்விழிமொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே எனது பார்வையில். கயல்விழி தன் மகன் கவின் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் இளமாறன் என்று தனக்கு உதவும் சுந்தரி பாட்டியின் வீட்டில் எளிமையாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறாள்.
காதலுக்காக தன் வீட்டினர் ஏற்பாடு செய்த திருமணத்தை தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறிய அவள் சுந்தரி பாட்டிக்காக மருத்துவமனைக்கு செல்லும் பொழுது தன் அப்பாவை சந்திக்கிறாள். சிகிச்சை முடிந்து மகளைத் தேடி வரும் அப்பாவை கவனித்துக் கொள்ள சித்தியின் தம்பி தேடி வந்து கயலை தொந்தரவு செய்யும் நேரத்தில் இளமாறன் அவளை பாதுகாக்க வந்துவிடுகிறான்.

தன்னை காதலித்து விட்டு தன் தோழியான மஞ்சுவை திருமணம் செய்து தனக்கு துரோகம் செய்த இளமாறனை வெறுத்தாலும் தன் அப்பாவின் முன் உண்மையை மறைத்து நடக்கிறாள். தன் நிறுவனத்தில் தரும் வெளியூர் மாறுதலை ஏற்றுக் கொண்டு ஊரை விட்டு செல்ல எடுத்த முடிவு இளமாறனால் சிக்கலாகிறது.

குழந்தை கவினுக்கு இளமாறன் ஊரைச் சேர்ந்த ராயப்பன் என்பவனால் ஆபத்து இருக்கிறது. இத்தகைய சூழலில் இருவரின் வாழ்க்கை என்னவானது, குழந்தை கவினை காப்பாற்ற முடிந்ததா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துகள்.
 
Last edited:
Top