எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 20

NNK-34

Moderator
ஆதவன் 20
"இழுத்தடிக்கும்ன்னு நினைச்சேன் ஆனா இவ்வளவு சீக்கிரம் வேலை முடியும்ன்னு நான் நினைக்கவே இல்லை" ஹோட்டல் அறையில் பார்ட்டிக்கு செல்வதற்காக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்த ஆதித்தை பார்த்து கூறினான் ஆகாஷ்.
"ஆமா டா நானும் எக்ஸ்பெக்ட் பண்ணல, இன்னும் ஒன்னு ரெண்டு வேலை தான் பெண்டிங் அதுவும் முடிச்சிட்டா சீக்கிரம் வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்" என்ற ஆதித்திடம், "அதெல்லாம் ஈஸி தான் முடிச்சிடலாம்" என்ற ஆகாஷ், சாம்பல் நிற கோட்டை தன் மேல் அணிந்துவிட்டு கண்ணாடியில் தன்னை வெவ்வேறு கோணத்தில் பார்த்து கொண்டிருந்த ஆதித்தை பார்த்து மெலிதாக சிரித்தவன் ஆதித்தை சீண்டும் நோக்கில்,
"அப்புறம் மச்சான் உன் பழிவாங்குற படலம் எல்லாம் எப்படி போகுது?" சிரிப்பை அடக்கிக்கொண்டு இயல்பாக கேட்டான்.
ஆகாஷ் அவ்வாறு கேட்கவும் அவனை திரும்பி பார்த்த ஆதித், அவனது முகம் மிக இயல்பாக இருப்பதை கண்டு, அவன் விஷமம் புரியாமல், "அதுக்கென்ன நல்லா போயிட்டு இருக்கு" என்று மிக இயல்பாக பதில் அளித்துவிட்டு தன் மேல் தனது பாடி ஸ்பிரேவை பறக்க விடவும், தனது குரலை செருமிய ஆகாஷ்,
"ஆமா ஆமா ரொம்ப பயங்கரமா தான் சார் பழி வாங்கிட்டு இருக்கீங்க" ஆதித்தை ஓரக் கண்ணால் பார்த்தபடி கூறினான்.
ஆகாஷின் பேச்சில் இருந்த கேலியை இப்பொழுது புரிந்து கொண்ட அதித், "டேய்" என்றபடி தனது கரத்தில் இருந்த பாடி ஸ்பிரேவை தூக்கி அவனை நோக்கி எறிய, அதை லாவகமாக பிடித்துக் கொண்ட ஆகாஷ் இந்த முறை ஆதித்தை பார்த்து சத்தமாக சிரித்து விட, அவனை முறைக்க முயன்று தோற்றுப் போன ஆதித்திற்கும் சிரிப்பு வந்துவிட இருவருமே ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டனர்.
"உன்னால வர்ஷா செஞ்சதை எல்லாம் மன்னிச்சு, மனசுல சிறு அளவு கோபம் கூட இல்லாம அவளை மொத்தமா ஏத்துக்க முடியுமா" சிரித்துகொண்டிருந்த ஆதித்தை பார்த்து வினவினான் ஆகாஷ்.
அதற்கு பெருமூச்சை வெளியிட்டப்படி ஆகாஷை பார்த்த ஆதித்,
"வர்ஷா பண்ணினது பெரிய தப்பு தான், அவ செஞ்சதையெல்லாம் நினைக்கும் பொழுது ரொம்ப கோபம் வருது ஆனா என்னால அவளை வெறுக்கவோ விலக்கவோ முடியல, சொல்ல போனா எனக்கு அவளை அவ்வளவு புடிக்குது. எந்தளவுக்குன்னா என் கோபத்தை கூட அவ மேல காட்ட தோணல, நானே என்னடா இது? நமக்குள்ள என்ன தான் நடக்குதுன்னு ரொம்பவே குழம்பி போய் இருந்தேன் ஆகாஷ், அப்போ தான் ஒரு முடிவுக்கு வந்தேன், எனக்குள்ள நடக்குற மாற்றத்தை பத்தி ஆராயாம அதை அக்செப்ட் பண்ணிக்கணும்ன்னு முடிவு பண்ணினேன் ஸோ வர்ஷாவோட சேர்த்து அவளுடைய நிறை குறை இரண்டையுமே அக்சப்ட் பண்ணிக்கணும் முடிவு பண்ணிட்டேன். என் வாழ்க்கை எதை நோக்கி போகுது எவ்வளவு தூரம் போகும்ன்னு தெரியல ஆனா இனி என்னுடைய மொத்த பயணமும் அவ கூடாதான் என்கிறதுல ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கேன்" என்றான் ஆதித் தெளிவாக.
ஆதித்தின் தெளிவான பதிலை கேட்டு அவனை வியப்புடன் பார்த்த ஆகாஷ்,
"உன் பேச்சிலே தெரியுது வர்ஷாவை நீ எவ்வளவு நேசிக்கிறன்னு, ஐ அம் சோ ஹப்பி ஃபார் யூ டா, எங்க நீ இப்படியே இருந்துடுவியோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன். இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. உன் நல்லா மனசுக்கு எல்லாமே நல்லதாவே தான் நடக்கும்,
ஏதோ சூழ்நிலைல தான் வர்ஷா அப்படி பண்ணிருப்பா மத்தபடி வர்ஷா நல்ல பொண்ணு போல தான் எனக்கும் தோணுது. இனிமே நீ எப்பவும் சந்தோஷமா தான் இருப்ப நல்லதே நடக்கும்" என்று ஆதித்தை பார்த்து மனதார கூறினான். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஆதித் புன்னகையுடன் தன் நண்பனுக்கு நன்றி கூறினான்.
@@@@@@@@@
தனியாக கார் பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த ஆதித்தின் அருகே வந்த அவனது நண்பர்களுள் ஒருவன், "உள்ள வராம இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?" என்றுக் கேட்டான்.
"வர்ஷாக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் டா, அவ வந்ததும் அவக்கூட சேர்ந்து வரேன்" என்று ஆதித் சொல்லவும் "சரிடா" என்றபடி அவன் அங்கிருந்து சென்றுவிட, தன் மணிக்கட்டை திருப்பி தான் அணிந்திருந்த கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்த ஆதித், 'நேரம் ஆகிட்டே இருக்கு ஏன் இன்னும் வரல' என்னும் சிந்தனையுடன் நின்றியிருக்க, அப்பொழுது ஆதித்தின் முகத்திற்கு நேராக சுடக்கிட்டு அவன் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து,
"ஹாய் பார்க்க நான் எப்படி இருக்கேன்?" குதூகலத்துடன் வினவினாள் வருணிக்கா.
அத்தனை வேலை பளுவுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வர்ஷாவுக்கு என்று அவன் ஆசையுடன் வாங்கியிருந்த பிங்க் நிற பட்டுப்புடவையில் வருணிக்காவை பார்த்ததும் ஆதித் நிஜமாகவே அதிர்ந்து விட்டான்.
ஆதித்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, தான் இருக்கும் இடத்தை உணர்ந்து தன் கோபத்தை அடக்கி கொண்டவன், தனது சிகையே அழுத்தமாக கோதி,
"இது என்ன சீப்பான வேலை வருணிக்கா?" பல்லை கடிதப்படி வினவினான்.
"நான் என்னப்பா பண்றது, நீ எனக்கு கொடுக்கல அதான் நானே எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு புடவை! நாளைக்கு நீ!" என கண் சிமிட்டி கூறிய வருணிக்காவை அனல் தெறிக்க பார்த்த ஆதித்,
"பைத்தியம் மாதிரி ஏதாவது உளராம இங்கிருந்து கிளம்பு" அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாக கூறினான்.
அதைக் கேட்ட வருணிக்காவோ,
"நான் பைத்தியமா? இல்ல நீ பைத்தியமா? கொஞ்சம் கூட யோசிக்காம அவ பின்னாடி சுத்திட்டு இருக்க, உன் பக்கத்துல நிக்க கூட தகுதி இல்லாதவளுக்காக இவ்வளவு உருகிட்டு இருக்க. ஆனா உன்னையே நினைச்சுட்டு இருக்கிற என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற. என்னை ஏன் ஆதி புரிஞ்சுக்க மாட்டேங்குற? அந்த சதிகாரி உனக்கு வேண்டாம், அவ உனக்கு சரியே கிடையாது, மறுபடியும் என்கிட்டே வந்துரு ஆதி" என்று வருணிக்கா சொல்லி முடிப்பதற்குள், கண்கள் சிவக்க ஆதி அவளை ஒரு பார்வை தான் பார்த்தான், அதற்கே வருணிகாவுக்கு ஒரு மாதிரியாகிவிட அவளது அதிர்ந்த விழிகளை பார்த்து , "சாவடிச்சிடுவேன், இதுக்கு மேல ஒருவார்த்தை பேசின நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஒழுங்கா இங்க இருந்து கிளம்பு" ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க, அவமானத்தால் முகம் கன்றி சிவந்து போயிருந்த வருணிக்காவோ பல்லை கடிதப்படி விரு விருவென அங்கிருந்து சென்றாள்.
@@@@
சில நொடிகள் ஆழமாக மூச்சை இழுத்து வெளியிட்டு தனது உள்ளக் கொதிப்பை அடக்கியவன் உடனே வர்ஷாவை தொடர்பு கொள்வதற்காக அலைபேசியை எடுக்கவும், அவன் வீட்டின் கார் பார்க்கிங் வளாகத்துக்குள் நுழையவும் சரியாக இருக்க அவசரமாக காரின் அருகே சென்றான் ஆதித்.
ஆதித்தை அங்கே பார்த்ததுமே ஒரு தலையசைப்புடன் முத்து காரில் இருந்து இறங்கிக் கொள்ளவும் கண்ணாடி வழியாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவை பார்த்து வெளியே வருமாறு ஆதித் செய்கை செய்தான்.
ஆனால் அவளோ மறுப்பாக தலையசைத்துவிட்டு தலையை தாழ்த்தி கொள்ளவும், யோசனையுடன் கதவை திறந்து காரினுள் ஏறி அவள் அருகே அமர்ந்த ஆதித்,
"ஏன் வெளிய வர மாட்டிக்கிற" என்று கேட்டான்.
"இந்த ட்ரெசோட என்னால வெளில வர முடியாது" மெல்லிய குரலில் சங்கடத்துடன் கூறினாள் வர்ஷா.
"ஏன் நீட்டா டீசெண்டா தானே இருக்கு வா போகலாம்" என்ற ஆதித்திடம், "எது இதுவா டீசண்டா இருக்கு" என்றவள் சட்டென்று தன் மேல் இருந்த ஷாலை அகற்றி, "பாருங்க இதை போட்டுட்டு நான் எப்படி வர்றது?" என்று கேட்க ஆதித் அவள் அணிந்திருக்கும் ஸ்ட்ரப்லஸ் ஆடையை கண்டு அதிர்ந்து விட்டான்.
வர்ஷா ஷால் போட்டிருந்ததால் அவள் அணிந்திருந்த நீளமான ஆடையை அதுவரை மக்சி என்று எண்ணிருந்தவனுக்கு, அவள் தன் மேனியில் இருந்து ஷாளை அகற்றவும் அது என்ன மாதிரியான ஆடை என்பதும், இந்த ஆடை கபோர்டில் எப்படி வந்தது என்பதும் புரிந்து விட,
இப்பொழுது ஆதித்திற்கு வருணிக்காவின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது 'ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணிற்கு எப்படி அவளால் இது போன்ற ஒரு இழிவான செயலை செய்ய முடிந்தது?' ஆதித்தால் வருணிக்காவின் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நவநாகரிக ஆடைகளை அணிவதில் ஆதித்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஏன் வருணிக்கா கூட இதுபோன்ற ஆடைகளை அணிபவள் தானே அவன் ஒரு நாளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே கிடையாது. ஆனால் அதே நேரம் இது போன்ற ஆடைகளை அணியவேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கும் பொழுது, அதைப் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் அந்த உடையை அணிந்தால் ஆடை நழுவி மானம் போகும் ஆபாயம் இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே வருணிக்கா இவ்வாறு ஆடையை மாற்றி வைத்ததை ஆதித்தால் சாதாரணமாக கடந்துவிட முடியவில்லை, தான் வர்ஷாவுக்காக வாங்கிய புடவையை
வருணிக்கா அணிந்திருந்த பொழுது வந்த கோபத்தை விட இப்பொழுது அவள் மீது அவனுக்கு பன்மடங்கு கோபமும் வெறுப்பும் பெறுகியிருக்க, இப்பொழுதே அவளை கன்னம் கன்னமாக அறையும் அளவிற்கு தனுக்குள் எழுந்த ஆத்திரத்தை, வர்ஷாவை கருத்தில் கொண்டு கண்களை மூடி திறந்து அடக்கிக்கொண்டவன், வர்ஷாவின் ஒரு பக்க தோள்பட்டையிலிருந்து விலகியிருந்த ஷாலை எடுத்து வர்ஷா மீது போர்த்தி விட்டு, அவளிடம் பேச எண்ணி, குனிந்திருந்த அவளது வதனத்தை பற்றி நிமிர்த்திய பொழுது,
"இந்த ட்ரெஸ் ஏன் வாங்கி கொடுத்தீங்க?" என்று கலங்கிய குரலில் ஆதித்தின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து கோபத்துடன் வினவியவள், அவன் பதில் சொல்வதற்குள் மீண்டும் அவனிடம், "இதெல்லாம் போட்டு பழக்கமே இல்லை தெரியுமா. போடக்கூடாதுன்னு தான் நினைச்சேன், அப்புறம் வருணிக்கா தான் நீங்க போடலைன்னா வருத்தபடுவீங்கன்னு சொல்லி போட வச்சாங்க, நல்ல வேளை வீட்ல வேற யாரும் இல்லை எல்லாரும் வெளியே சாப்பிட போய்ட்டாங்க, ஒருவேளை இருந்திருந்தாங்கன்னா என்னை இந்த ட்ரெஸ்ல பார்த்து என்ன நினைச்சிருப்பாங்க? உங்களுக்காக தான் இதை போட்டுட்டு வந்தேன். எங்க கலண்டு விழுந்திருமோன்னு பயந்து போய் உட்கார்ந்து இருக்கேன். தயவு செஞ்சி இந்த ட்ரெசோட பார்ட்டிக்கு என்னை கூப்பிடாதீங்க. இதெல்லாம் எனக்கு நல்லாவா இருக்கு" என்று தன்னை சுற்றி போட்டிருந்த ஷாலை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டு முதல் முறை உரிமையுடன் சண்டையிட்ட மனைவியின் செல்ல கோபத்தை ரசித்தாலும், வருணிக்காவின் கீழ்த்தரமான செயலை எண்ணி உள்ளுக்குள் கொந்தளித்தவன், இப்பொழுது உண்மையைக் கூறி வர்ஷாவை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது,
"இந்த டிரஸ் உனக்கு நல்லாதான்டா இருக்கு, ஆனா நான் உனக்கு இதை வாங்கல, ஷாப்ல தான் தெரியாம மாத்தி கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.
அதைக் கேட்டு சங்கடத்துடன் ஆதித்தை பார்த்த வர்ஷா,
"சாரி இது தெரியாம நான் டென்ஷன்ல உங்ககிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன்" வருத்தத்துடன் கண்களை சுருக்கி கெஞ்சிதலாக கூற, வழமை போல ரசனையுடன் அவளை பார்த்தவன், புன்னகையுடன் அவளது மூக்கை பிடித்து ஆட்ட, அவளோ "இப்போ என்ன பண்றது?" என்று கேட்டாள்.
அப்பொழுது சில நொடிகள் யோசனைக்கு பிறகு முத்துவை காரை எடுத்துக்கொண்டு கிளம்ப சொன்ன ஆதித், வர்ஷாவை ஏற்றிக்கொண்டு தன் காரை வழமையை விட வேகமாக ஒட்டினான்.
@@@@@@@@@
வேகமாக காரை ஒட்டினாலும், செல்லும் வழியில் ஏதும் துணி கடை இருக்கிறதா என்று வெளியே பார்வை பதித்தப்படியே வந்த ஆதித்தின் கண்களில் ஒரு சிறிய கடை தென்படவும் காரை கடையின் ஓரம் நிறுத்தியவன் மணியை பார்த்தான், பெரிய கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சிட்டிக்குள் தான் போக வேண்டும், சாலை நெரிசலில் சிக்கிகொண்டால் நிச்சயம் குறித்த நேரத்திற்குள் வர முடியாது என்பதை கருத்தில் கொண்டு, வர்ஷாவை காரிலே காத்திருக்க கூறிவிட்டு வழமை போலாம் முகக்கவசத்தை அணிந்து கொண்டு கடைக்குள் சென்றவன் பத்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்குள் கையில் பையுடன் வெளியே வந்து அதை வர்ஷாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் காரை வேகமாக ஒட்டினான்.
தன் கையில் இருந்த கவரை ஆர்வத்துடன் வர்ஷா பிரித்து பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த ஆதித், "சாரி அந்த கடையில இது தான் நல்லா இருந்துச்சு நெஸ்ட் டைம் உன்னை கூட்டிட்டு போய் பெட்டெரா.." என்று அவன் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள், "எதுக்கு சாரி எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு, ப்ளூ எனக்கு ரொம்ப புடிச்ச கலர் தேங்க் யூ" என்று கண்களை சிமிட்டி அழகாக புன்னகைத்தவளின் அழகு முகத்தை வழமை போல ரசித்தவன், அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் தனது கெஸ்ட் ஹவுசை அடைந்திருந்தான்.
"இங்க ஏன் வந்திருக்கோம்?" கதவை திறந்து கொண்டிருந்த ஆதித்திடம் வினாவினாள் வர்ஷா.
"வீட்டுக்கு போய்ட்டு, நீ டிரஸ் சேஞ் பண்ணி அதுக்கப்புறம் பார்ட்டிக்கு போகணும்ன்னா ரொம்பவே டைம் ஆகும், அதான் இங்க கூட்டிட்டு வந்தேன், இங்க இருந்து பார்ட்டி வென்யு ரொம்பவே பக்கம்"என்றவன், "உனக்கு டென் மினிட்ஸ் தான் டைம் சீக்கிரம் ரெடியாகி வா" என்று சொல்ல, "இவ்வளவு அவசரப்பட்டு கிளம்பி கண்டிப்பா போய் தான் ஆகணுமா?" இத்தனை நேரம் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்ததை கேட்டுவிட, அவளை ஒரு கணம் பார்த்தவன்,
"போகணும்னு அவசியம் இல்ல தான், ஆனா சில பேருக்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியிருக்கு வர்ஷா, ஸோ ப்ளீஸ் சீக்கிரம் ரெடியாகு குயிக்" என்று அவளை துரிதப்படுத்த, அவளும் அவனது முக மாற்றத்தையும், அவன் குரலில் இருந்த தீவிரத்தையும் கருத்தில் கொண்டு அதன் பிறகு எதுவும் கேட்காமல் உடைமாற்ற சென்றாள்.
@@@@@@@@
நொடிகள் கடக்க கடக்க அடிக்கடி தன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்துக்கு, அவன் சொன்ன பத்து நிமிடம் இப்பொழுது 20 நிமிடம் ஆகியதில் நெற்றியை நீவியவன்,
"வர்ஷா டைம் ஆச்சு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க" என்று கூறி கதவை தட்டினான்.
வெளியே ஆதித்தின் குரல் கேட்டு,
"ஒரு ஃபை மினிட்ஸ் ப்ளீஸ்" என்று அவனுக்கு வர்ஷா குரல் கொடுக்க,
அவள் கூறியத்தில் பொறுமையை இழந்த ஆதித், "அஞ்சு நிமிஷம் அஞ்சி நிமிஷம்ன்னு நீ சொல்லி சொல்லி இப்போ அரைமணிநேரம் ஆக போகுது வர்ஷா, என்ன தான் பண்ற" என்றபடி சற்றும் யோசிக்காமல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்துவிட,
பாதி அணிந்திருந்த புடவையில், தான் வாங்கி கொடுத்திருந்த ரெடிமேட் ப்ளௌசின் ஹூக்கை மாட்ட முடியாது சிரமப்பட்டுக்கொண்டிருந்தவளின் கோலம் கண்டு மூச்சு விட மறந்தவன் தன்னவளிடம் மொத்தமாக வீழ்ந்திருந்தான்.
ஏற்கனவே பதற்றத்தில் இருந்ததால் அவன் உள்ளே வந்ததை பெரிதாக எடுத்திராத வர்ஷா,
"ஹூக் சரி இல்லை, டென்ஷனல ப்ளீட்ஸ் எடுக்க வர மாட்டிக்குது, நான் கண்டிப்பா வரணுமா?" என்று இயலாமையுடன் கேட்க, ஆதித்தோ பேச மறந்தவன் போல தலையை மட்டும் நாலு பக்கமும் ஆட்டினான்.
ஆதித்திடம் இருந்து பதில் வராததால் நிமிர்ந்து அவனை பார்த்த வர்ஷாவுக்கு அவன் பார்வையில் இருந்த மாற்றமும், அது செல்லும் இடமும் எதையோ உணர்த்தவும் தன்னை ஆராய்ந்தவள் தான் இருக்கும் நிலை கண்டு திகைப்புடன் நெஞ்சம் படபடக்க திரும்பி நிற்க,
அதில் சுயம் பெற்ற ஆதித் வேகமாக திரும்பி நின்று,
"நான் வெளிய நிக்கிறேன். நீ சீக்கிரம் கிளம்பு" என்றவன் வேகமாக வாசல் வரை சென்றிருந்த நேரம் அவன் காதில் கேட்ட,
"ப்ச் ம்ம்" மெல்லிய சலிப்பு கலந்த முனங்களுடன் கூடிய அவளது குரலில் தன் வேகம் தடைப்பட அப்படியே நின்றுவிட்ட ஆதித் ஏற்கனவே வேகமாக குதித்து கொண்டிருக்கும் தன் இடது பக்க மார்பின் மீது கரம் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன், மெதுவாக திரும்பி வர்ஷா மீது பார்வை பதித்தபடி, தனது அழுத்தமான காலடிகள் தரையில் பதிய அவளை நோக்கி அடிமேல் அடிவைத்து நெருங்கினான்.
தனது முதுகிற்கு பின்னால் இரு
கரங்களையும் கொண்டு சென்றபடி மேல்சட்டையின் ஹூக்குகளை மாட்ட முயற்சி செய்து கொண்டிருந்த வர்ஷாவுக்கு திடீரென்று உள்ளுக்குள் ஏதேதோ செய்யவும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்பொழுது தான் தன்னை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் தன்னவனின் பிம்பம் கண்ணாடியில் தெரியவும் அவளின் கரங்கள் அப்படியே வேலை நிறுத்தம் செய்திருக்க, இப்பொழுது அவள் விட்ட பணியை அவன் கரங்கள் எடுத்துக்கொண்டது.
 
Last edited:

Mathykarthy

Well-known member
வருணிகா 😡😡😡😡 எப்படி சொன்னாலும் இவளுக்கு புரிய மாட்டேங்குது... இவளை என்ன தான் பண்றது...🥶🥶🥶🥶
 

NNK-34

Moderator
வருணிகா 😡😡😡😡 எப்படி சொன்னாலும் இவளுக்கு புரிய மாட்டேங்குது... இவளை என்ன தான் பண்றது...🥶🥶🥶🥶
இனிமே புரிஞ்சிடும் டியர் ❤️
Thank u dear💕
 
Top