எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 12

NNK-54

Moderator
வர்ணங்கள் 12

சாயாவின் மனதில் தான் விட்டு வந்த குடும்பத்தை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளையும் அறியாமல் அவளை தூண்டிக் கொண்டிருந்தது. இவையெல்லாம் எளிதில் சீர் செய்யக் கூடியவை அல்ல.

சமீப காலமாக இரவில் கூட சரியாக உறங்க முடியாமல் இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்து கொள்கிறாள். எதையும் இழந்த உணர்வை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

திருமண வாழ்வின் போது ஏற்படாத காதல், அந்த திருமணத்தை முறித்துவிட்டு வந்து வெகு நாட்களுக்கு பிறகு உதயமாகி இருப்பது அவளுக்கே ஆச்சரியம் தான்.

மனவிலக்கு கேட்கும் பொழுது அவன் ஆயிரம் முறை சொன்னான் " அவசரப்பட்டு இந்த வெட்டிங்க நாம டிவோர்ஸ்ல முடிக்கிறது அபத்தம்.
கொஞ்சம் நீ ஸ்பேஸ் எடுத்து யோசி. கொஞ்ச நாள் தனியா இருந்து பாக்கலாம்.
உன் மனசு மாறலைன்னா அப்புறம் திரும்ப யோசிக்கலாம் " என்று.

அன்று அவன் சொன்ன பொழுது, அது காது கொடுத்து கேட்கும் பொறுமை இல்லை. நடைமுறைப்படுத்துவது?
இன்று, எப்படி சீர் செய்வது என்று விழி பிதுங்கி உட்கார்ந்து இருக்கிறேன் என்று அவள் மனமே அவளை தாக்கியது.

இப்பொழுதும் பொறுமை இல்லாதவளாக, இந்திய நேர கணக்குப்படி காலை ஏழுக்கு அழைத்து விட்டாள். நல்லவேளையாக அவள் கணவன் சைலன்ட் மோடில் மொபைல் போனை வைத்து இருந்தான்.

அழைத்தவளுக்கோ, அவளது அழைப்பு ஏற்கப் படாமல் விடுக்கபட ஏமாற்றம் தொண்டையை அடைத்தது. லேசாக கண்கள் கலங்க பிறகுதான் நேரத்தை பார்த்தாள்.ஆனாலும் படர்ந்து விட்ட ஏமாற்ற உணர்வு அதன் தாக்கத்தை உணர்தாமல் இல்லை. காலை உணவை சாப்பிட பிடிக்காமலே அலுவலகம் கிளம்பிவிட்ட மகளை அப்படியே விட மனது வரவில்லை சாயாவை பெற்றவருக்கு.

அந்த ஒரு வாரத்தின் தாக்கம் மகளிடம் இன்னமும் இருப்பதை அவரும் உணர்ந்து கொண்டார். ஆனால் அவருக்கு அது உவப்பாக இல்லை.

ஏற்கனவே தனது திருமணம் பற்றி சாயா தனது பெற்றவருக்கு தகவலாகத்தான் சொல்லி இருந்தாள். அவரது ஆசி வேணுமென்றோ, அவர் திருமண நிகழ்வுவுக்கு வரவேணும் என்றோ அவள் கேட்கவில்லை. பிறகு திருமண முறிவு பற்றியும் வெறும் தகவல்தான்.

பேரன் பிறந்த சமயம் ஒரு வியாபார ஒப்பந்தம் காரணமாக யூ கே சென்றவர், அப்படியே மகளையும் காணவென்று சென்ற பொழுது குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்திருந்தது.சாயாவின் குணம் அப்படியே அவளது அப்பா போன்றது. 'தான் ' என்பதை மீறித்தான் மற்றவை (வர்கள் ).

சமீபகாலமாக பெண்ணிடம் நிறைய மாற்றங்கள். காரணம் காதல்... உண்மை காதல். பெற்றவருடன் பேசவும் பிடிக்காதவளாக சாயா அவ்விடம் விட்டு நகரப் பார்க்க அவளது அப்பா அவளிடம், " சாப்பிட உக்காரு சாயா. உன்கிட்ட பேசணும் " என்றார் கடுமையான குரலில்.

அதற்கு காட்டுப்பட்டவளாக டைனிங் டேபிள் அருகில் வந்தவள் எரிச்சல் மிக "இப்போ எதுக்கு கூப்பிடுறீங்க. எனக்கு ஆபீஸ் போகணும். லேட்டா போக இஷ்டம் இல்லை. முக்கிய விஷயம் ஏதாவது இருந்தா இப்படியே சொல்லிடுங்க " என்றாள்.

அதற்கு அசராமல் அவளையே பார்த்தார் அவள் அப்பா. வேறு வழி இல்லாமல் உட்கார்ந்து அவர் முகத்தை ஆராய்ச்சி செய்ய தொடங்கினாள் சாயா.
பார்வையால் அங்கிருந்த பணியாட்களை அகற்றிய பெரியவர், " உனக்கும் ஜெயனுக்கும் எப்படி போகுது சாயா.. மேற்கொண்டு அவங்க வீட்டுல பேச ஆசை படறாங்க. உங்க ரெண்டு பேருக்கும் இது செகண்ட் மேரேஜ். ஒத்து போகும்னு நினைக்கிறோம் " என்றுவிட்டு அவள் முகத்தை பார்த்தார்.

அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவள் முகம் அவளது பிடித்தமின்மையை அப்பட்டமாக காட்டிவிட, கொதித்து போனார் அவள் அப்பா.

“இங்கே பாரு சாயா, உன்னோட மனசுல என்ன போகுதுன்னு தெரியாத முட்டாள் நா இல்லை. பட் இந்த முறை நா விட்டுத்தர தயாராக இல்லே. உன்னோட பஸ்ட் மேரேஜ், டிவோர்ஸ் ரெண்டும் உன் இஷ்டம் போல செஞ்சுகிட்ட. நா போகுதுன்னு விட்டுட்டேன்.

நம்ம தொழிலை பாக்க இஷ்டம் இல்லேன்னு சொல்லிட்ட. அப்பவும் பொண்ணு தானே. தொழிலை பாக்கலைன்னா பரவாயில்லை. டென்சன் இல்லாம இருக்கட்டும். குடும்பத்தை பாக்கணும். தொழிலை வெற்றிகரமா நடத்துற மாப்பிள்ளையை தேடுவோம்னு ஜெயனை பிடிச்சேன். இதுக்கு மேல என்னால உன்னிஷ்டம் போல ஆட முடியாது.

அண்ட் உனக்கு ஆப்சன் இல்லை. உனக்கும் ஜெயனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகுதுன்னு உன்னோட எக்சுக்கு தகவல் கசிய விட்டாச்சு. இனி, அவன் உன்னை திரும்பி கூட பாக்க மாட்டான்.அதன்னால வீணா குழப்பம் செய்யாம கல்யாணம் செஞ்சுக்க தயாராகு " என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்.மதியம் வரை ஜெயன் அலுவலகம் வரவே இல்லை.

மாலையில் மீண்டும் தனது கணவனுக்கு அழைத்து பார்த்தாள். இப்போதும் அவன் எடுக்கவில்லை. மனம் துவண்டு போனாள் பெண். நாட்கள் தன் போக்கில் சென்றது. சாயா தினமும் கணவனுக்கு அழைப்பு விடுப்பது வழமை ஆனது. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

ஜெயந்தனிடம் பேசலாம் என்றால் அவனோ வேலை மும்முரத்தில் அதிகம் இவளை கண்டுக்கொள்ளவே இல்லை. ஜெயனது வேலை பாரம் அறிந்தவள் தான்.மனம் புழுங்கினாள் பெண். இதுவரை பெரியதாக தோழமை என்று ஏதும் இருக்கவில்லை. யாரிடமும் உணர்வுகளை சாயாவால் பகிரவும் முடியவில்லை.
அடிக்கடி எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது சாயாவுக்கு வழக்கம் ஆனது.

ஜெயந்தன் இவளை பெரியதாக கவனிக்கவிட்டாலும் வேலைகளில் இவளது தவறுகள் அவனது கவனத்தை ஈர்க்காமல் இல்லை.

ஜெயனது இரண்டு மீட்டிங்குகளை கவனிக்காமல் விட்டு, ஜெயனுக்கு பிரச்சனை ஆனது. முதல்முறை கூப்பிட்டு கண்டித்தவன் அடுத்த முறை சாயாவை கூப்பிட்டு, " மிஸ். சாயா, உங்களுக்கு வேலை செய்ய இஷ்டமில்லன்னா ப்ளீஸ் ரிசைன் பண்ணிடுங்க. உங்க விருப்பம் இன்மையால என்னோட பிசினஸ் லாஸ்ல போகுறதை என்னால அனுமதிக்க முடியாது " என்று வார்னிங் கொடுத்தும் விட்டான்.

சாயாவால் அதற்கு பிறகு ஜெயத்தனை பார்க்ககூட முடியவில்லை. அதற்கு அவன் அனுமதிக்கவும் இல்லை. அவனது இன்னொரு காரியதரிசி அவனது வேலைகளை கவனித்துக் கொள்ள சாயாவிடமிருந்து பொறுப்புகள் குறைக்கப்பட்டது.

வேலையை விடவும் தோன்றாமல், தனது பணியில் இறக்கம் செய்யப்பட்டதை உணரவும் இல்லாமல் தனக்குள் ஆழ்ந்திருந்தாள்

வீட்டிலும் தனது அறைக்குள் அடைந்து கொண்டு கணவன் -மனைவி - குழந்தை என்று மூவருமாக இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் நேரத்தை செலவிட்டாள்.

ஜெயந்தன் தனது வீட்டில் இப்போதைக்கு திருமண உறவுக்குள் நுழைந்தால், தொழில் பொறுப்புகளை விட்டு மனைவியுடன் நேரத்தை செலவழிக்க முடியாது. பிறகு, மீண்டும் செய்துகொண்ட திருமணமும் தோல்வியில் முடியும். இதை எப்படியாவது சாயா வீட்டில் சொல்லிவிடுங்கள் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.

ஜெயந்தன் வீட்டில் அவன் பெற்றோருக்கு ஏமாற்றம். அதோடு எப்படி சாயாவின் அப்பாவிடம் சொல்லுவது என்ற யோசனை வேறு.

ஒருவழியாக அவரிடம் சொல்லவும் செய்தார்கள். கேட்டவருக்கு ரத்தம் கொதித்தது. மகள் மீது அத்தனை கோவமும் திரும்ப அவரது பூர்விக சொத்துக்கள் தவிர மற்றவற்றை தனது தங்கை மகனுக்கு எழுதி விட்டார்

சாயாவையும் வீட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார். சாயா எதற்கும் தயங்கி நிற்கவும் இல்லை. அவரிடம் எதுவும் பேசவும் இல்லை.
ஒரு உயர் ரக மகளிர் விடுதியில் அலுவலக வேலையை பயன்படுத்தி அறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

நடந்தவற்றை சற்று தாமதமாக தெரிந்து கொண்ட ஜெயந்தன் வெகுவாக வருத்தப் பட்டான். பெண்ணின் நிலைமைக்கு ஏதோ வகையில் தானும் காரணம் என்று நினைத்தவன் இதை பற்றியெல்லாம் சாயாவிடம் எதுவும் பேசவில்லை. அவளும் கூட இவனிடம் பேச முற்படவில்லை
எதை பற்றியும் கவலை கொள்ளும் நிலையில் சாயா இல்லை.

அவளது இப்போதைய பெரிய கவலை கணவனிடம் எப்படி பேசி சமாதானம் செய்வது என்பது மட்டும் தான்.

நடுவில் நடந்த திருமண ரத்து பற்றிய கவலை ஏதும் அவளுக்கு இல்லை. அவன் ஒருவனை தவிர வேறு யாரையும் கணவனாக நினைத்து பார்க்க கூட இந்த நொடியில் அவளால் முடியாது.

காதல் அப்போது ஏற்படவில்லை தான். அதற்காக எப்போதும் ஏற்படாது என்றும் ஏற்படக் கூடாது என்றும் அல்லது விவாகரத்து ஆன பிறகு யக்ஸ் கணவனுடன் காதல் வயப் படக்கூடாது என்றும் சட்டம் எதும் உள்ளதா.. என்ன?

அவள் தேவைபட்டால் மீண்டும் அவனை திருமணம் முடிக்கவும் தயார்தான். ஆனால், இனி அவனை பிரிய தயார் இல்லை.தன் மனம் சொல்லும் உணர்வுகளை அவனுக்கு எப்படி கடத்துவது என்று ஓயாத மன உளைச்சல் சாயவுக்குள்.

அவள் கணவனோ, எப்படியாவது அவளை மீண்டும் தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்து தான் பிள்ளையுடன் ஒரு வாரம் இந்தியா சென்று அவளுடன் நேரத்தை கழித்தான். அவனால் மனைவி என்ற நிலையில் வேறு ஒருத்தியை பொருத்தி பார்க்க முடியவில்லை.

அதோடு, சாயாவை முற்றும் முழுவதுமாக காதலித்து, காதலை அடைவதற்காகவே திருமணமும் செய்துகொண்டு ,தனது மொத்த உயிர்ப்பையும் அவளுக்குள் செலுத்தி உருவானது அவனது குழந்தை.அவள் அதை,அவனது உணர்வுகளை ஒருமுறை கூட உள்வாங்கி உணரவில்லை என்பது அப்போது பெரியதாக தெரியவில்லை. அவளது மோகம் இவன் காதலிக்கப் போதுமானதாக இருந்தது.

இப்போது நினைக்கும்பொழுது தனது ஆண்மைக்கான இழுக்கு என்று உணர்கிறான். அவளுக்குள் தன்மீது எப்போதுமே காதல் வரப்போவது இல்லை.அதனால் தானே இன்னொருவனை திருமணம் செய்துகொள்ள அவன் மனைவி(?)தயாராகிவிட்டாள் .

அவனால் அப்படியெல்லாம் செய்யமுடியாது.காதல் மனைவி அவனுடன் இல்லை என்றால் என்ன கெட்டுப்போகிறது?அவனது காதல்,அது தரும் வலி அதோடு அதை உறுதி படுத்த கண்ணெதிரே அவர்களது மகன். தனக்கு மனைவியாக வருபவள்,தனது மகனுக்கும் அம்மாவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.அதோடு,அவனது அம்மாவே குழந்தையை விடுத்து செல்லும்பொழுது வேறொரு பெண்ணிடம் தாய்மையை எதிர்ப்பார்க்க அவனால் முடியாது.

தனக்கு மனைவி என்று வருபவள், குழந்தையிடம் "உன் அம்மா உன்னே விட்டுட்டு போய்ட்டா.இப்போ எனக்கு நீ சுமை" என்றுவிட்டால் , குழந்தையின் மனோநிலை என்னவாகும்? மருத்துவனாக அவனுக்கு நிறைய விஷயங்கள் மனோரீதியாகவும் யோசிக்க முடியுமே.. இன்றைய நிலையில் எதையும் புறம் தள்ளிவிட முடியாது.

அவள் பலமுறை அழைப்புவிடுத்தும் மீண்டும் அவளுக்கு அழைத்து பேச அவனுக்கு இஷ்டம் இல்லை. பேசுவதற்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. எனும் பொழுது அழைப்பை ஏற்று என்ன செய்யவேண்டும்?அல்லது மீண்டும் அழைத்துதான் என்ன செய்ய வேண்டும்..

இருவரும் இப்போது இருக்கும் நிலையில் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தாலும் பேசிக்கொள்ள வார்த்தைகளும் இல்லை.மனமும் இல்லை. தொலைவு அதிகம் இருந்தாலும் நெருங்கிய மனதோடு இருப்பவர்களுக்கு அவை பெரியதாக தோன்றாது. இங்கு இருக்கும் நிலையே வேறு.
 
Top